காந்தமடி நான் உனக்கு!!-21


 


அத்தியாயம்-21

டுத்த நொடி நம்ப முடியாதவளாய் தன் கண்களை பலமுறை சிமிட்டி அவனை ஆழ்ந்து பார்க்க, அவன் பிம்பம் கலைந்து போய்விடாமல் அதே மந்தகாச புன்னகையுடன் அவள் அருகிலயே இருந்தான்.

அப்படி என்றால் இது கனவல்ல, கானல் நீர் அல்ல என்று சிலாகித்தவள் விவரிக்க முடியாத உணர்வுகள் அவள் உள்ளே பொங்கி பெருக, வாய் பேச முடியாத ஊமையாகிப் போனவள் அதிர்ச்சியில் சிலை போல உறைந்து அமர்ந்து விட்டாள் சத்யா..!

எத்தனை நாட்கள் காத்திருந்தாள் அவனை காண வேண்டும் என்று... அவன் முகத்தை தரிசிக்க வேண்டும் என்று எத்தனை நாள் தவம் இருந்தாள்.  

இப்போது தான் அவளின் தவம் பலித்து விட்டதை போல,  வந்து விட்டான் அவளவன்.

“வந்து விட்டான் என்னவன்... என்னைத் தேடி வந்து விட்டான்... அதுவும் ஜம்மென்று ஹீரோ மாதிரி எனக்காக,  என்னை பார்க்க ஓடோடி வந்து விட்டான் என்னவன்...” என்று நெஞ்சாங்கூடு  மகிழ்ச்சியில் பூரித்து விரிந்து நிக்க, முகமோ சந்தோஷத்தில் விகாசித்தது.

அவனை அவசரமாய் உச்சி முதல் பாதம் வரை ஒரு நொடி ஆராய்ந்தவள் அவனின் நலனை உறுதி செய்து கொண்டு அவனை பார்க்க, அவனின் அதே மந்தகாச,  காந்த பார்வை அவளை கட்டி இழுக்க, அப்படியே அவனை இறுக்கி அணைத்துக்கொண்டு அவன் மார்பில் தஞ்சம் புகுந்து கொள்ள தவித்தது அவள் உடலில் ஒவ்வொரு அணுக்களும்.

அவனின் கொலுகொலு கன்னத்தில் அழுந்த முத்தமிட தவித்தது அவள் இதழ்கள்...  

அடுத்த நொடி தன்னை மறந்து அமுதன் என்று அழைத்தவாறு பாய்ந்து சென்று அவனை கட்டிக்கொள்ள வேண்டும் என்று உந்த,  அவனை ஆசையோடு,  காதலோடு பார்த்தவள் அவனை நோக்கி முன்னேற, திடீரென்று யாரோ சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது சத்யாவுக்கு.  

கடந்த ஆறுமாத கால,  வலியும் வேதனையும் அந்த நொடி கண் முன்னே வர, அடுத்த கணம் அவள் செய்திருந்த  உறுதிமொழி நினைவுக்கு வந்தது.

அதுவரை அவனை கண்ட உற்சாகத்தில் வேலை நிறுத்தம் செய்திருந்த மூளை இப்பொழுது விழித்துக் கொள்ள, மடமடவென்று கடந்த ஆறுமாத காலமும் மனதில் வந்து போனது.

அப்பொழுதுதான் நிதர்சனம் புரிந்தது.  

“இ.. இவ.. இவன்  அமுதன் இல்லை...ஆரவ்... ஆரவமுதன்... “ என மண்டையில் உறைக்க, உடனே அதிர்ந்து போனவள்,  தன் உடலை இறுக்கி கொண்டு , முகம் இறுக,  அப்படியே சிலை போல அமர்ந்து விட்டாள்.  

அவனை  நோக்கி நீண்டு இருந்த கரத்தையும் உடனே இழுத்துக்கொண்டு கற்சிலைபோல இறுகி அமர்ந்து விட்டாள் சத்யா.

தன்னைக் கண்டதும் அவள் முகத்தில் வந்த பரவசத்தையும், இதழில் பூத்திருந்த சந்தோஷ புன்னகையும், மேலும் தன்னை கட்டிக் கொள்ள நீண்டிருந்த அவளின் மென்கரங்களும் கண்டவனுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது

“என் சது கொஞ்சமும் மாறவில்ல. என்னை மறக்கவில்லை... “  என்று உள்ளுக்குள்  சொல்லிக் கொண்டான். ஆனால் அதை முகத்தில் காட்டாமல் மாற்றிக் கொண்டவன்  

“என்ன டார்லிங்?  என்னை பார்த்ததும் ஓடி வந்து இறுக்க கட்டிபிடித்து ஒரு உம்மா கொடுப்ப னு  எதிர்பார்த்தேன்.  ஆனால் அப்படி எதுவும் காணவில்லையே. யு டிட்ன்ட் மிஸ் மி? “ என்று குறும்பாக கண்சிமிட்டி மந்தகாசமாய் புன்னகைத்தான் ஆரவமுதன்.  

அவனின் காந்த  புன்னகையை கண்டதும் பெண்ணவளின் மனமோ தானாக அவனை ரசிக்கத்தான் செய்தது. ஆனால் அடுத்த நொடி அதன் தலையில் ஓங்கி குட்டு வைத்து அடக்கியவள், தன் பார்வையை அவன் பக்கமாய் செல்லாதவாறு அடக்கிக் கொண்டாள் சத்யா.  

கூடவே அவனை எரிக்கும் பார்வை பார்த்தவள் அவனுக்கு சூடாக  பதில்  அளித்தாள்.  

“ஹலோ  மிஸ்டர் அமுதன்...இல்லை...மிஸ்டர் ஆரவ்  இல்லை இல்லை மிஸ்டர் ஆராவமுதன்...” என்று அவள் கொஞ்சமாய் தடுமாற,

“ஹா ஹா ஹா நான் அமுதனா?  ஆராவமுதனா என்ற குழப்பம் வேண்டாம் பேபி. உன்னை பொறுத்தவரை நான் உன்  அமுதன் தான். உன்னை காந்தமாய் கட்டி இழுக்கும் சாத் சாத் அதே காந்தமவன் தான்...”  என்று கன்னம் குழிய சிரித்தான் அமுதன்.  

“ஹலோ மிஸ்டர்...நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போங்கள். ஐ டோன்ட் கேர்...”

“பட்... ஐ கேர் பேபி...ஐ கேர் மை சது டார்லிங். அப்புறம் நான் கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லலையே...” என்று குறும்பாக அவளை பார்க்க,

“ஏன்ன? “ என்று ஒற்றை ப்உருவத்தைஉயர்த்தி அவனிடம் பார்வையால் வினவ

“அதான்... இறுக்க அணைச்சு  ஒரு உம்மா...” என்று உதடு குவித்து முத்தம் இடுபவனை போல பாவனை செய்தவன்,  குறும்பாக கண் சிமிட்டி கண்களால் சிரித்தான்.  

அவனை ஒரு எரிக்கும் பார்வை பார்த்தவள்

“ஹலோ மிஸ்டர்...உங்களை கட்டி அணைச்சு முத்தமிட்டு கொஞ்ச நான் ஒன்றும் உங்கள் மாடல் அழகி இல்லை...”  என்று உதட்டை வளைத்து  ஏளனமாக சொன்னாள்.  

இன்னுமே அவன் அந்த மும்பை அழகியுடன் கொஞ்சி குழாவியது அவள் மனதில் எரிந்து கொண்டிருந்தது. அவளுடன் அப்படி குழைந்தவன் எப்படி இப்ப என்கிட்ட இப்படி வழியறான் என்று மனதுக்குள பொரிந்தாள் சத்யா...

ஆனால் அவனோ வெகு இலகுவாய் , உல்லாசமாய் சிரித்தான்.

“யார் அந்த மாடல் அழகி பேபி?..அது யாராக இருந்தாலும் ஐ டோன்ட் கேர்... .நீதான் என் அழகி... கருப்பு நெறத்தழகி...” என்று கண் சிமிட்டியவன் அழகாய் பாடினான்....

அடி கருப்பு நெறத்தழகி... ஒதட்டு செவப்பழகி

சில்லறையா செதறிட்டேன் டீ...

உன் சிரிப்பில் சில்லறையா செதறிட்டேன் டீ

 

உன் குங்கும ஒதட்ட வச்சி,  குலுங்க சிரிக்கையில

இதழ் ரெண்டும் துடிக்குதடி

அத பாத்து என் மனசு தவிக்குதடி

 

கட்டுக் கோப்பில் வாழ்ந்தவன் டீ

கட்டுப்பாட்டில் இருந்தவன் டீ

கலஞ்சது என் தவம்டி

உன்ன பாத்து கலஞ்சது என் தவம்டி...

 

என்று உல்லாசமாய் அவளை பார்த்து ரசனையோடு பாட, அதைக்கேட்டு ஒரு நொடி இன்பமாய் அதிர்ந்து போனாள் சத்யா.

இவன் இன்னும் மாறவில்லை. பழைய அமுதன் இப்படித்தான் அடிக்கடி ஏதாவது பாட்டை பாடுவான். ஆனால் இப்ப என்ன ஆச்சர்யம். அன்று இருந்த அமுதனுக்கு அது பொருந்தியது.

ஆனால் இன்று இருக்கிற இந்த மல்ட்டி மில்லினர், ஆரவமுதன் இப்படி உல்லாசமாய் பாடுவதுதான் ஆச்சர்யமாக இருந்தது.

அதுவும் நுனிநாக்கு ஆங்கிலத்தில் ஸ்டைலாக பல மேடைகளில் பேசியவன், இப்படி தமிழ் பாட்டை பாடுவது ஆச்சர்யமாக இருந்தது.

தன்னை மறந்து ஒரு நொடி அவனை பார்த்து ரசனையோடு ரசித்தவள் அடுத்த நொடி தன் தலையை உலுக்கி கொண்டு

“ஹலோ மிஸ்டர்...இப்ப எதுக்கு என்னை கிட்நாப் பண்றீங்க?  உடனே காரை நிறுத்துங்க? என்று சத்தமிட்டாள்.

அது விலை உயர்ந்த லக்சுரி  கார் என்பதால் உள்ளே பேசுவது, நடப்பது எதுவும் வெளியில் கேட்காது. அதே போல வெளியில் இருக்கும் சத்தம் எதுவும் உள்ளேயும்  கேட்காது.

தொடர்ந்து அவள் காரை நிறுத்த சொல்லி கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய,  

“ஹே ஹனி...எதுக்கு இவ்வளவு டென்ஷன்? உன் அமுதன் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா?  உன்னையவா  நான் கிட்நாப் செய்வேன்? என்று மந்தகாசமாய் புன்னகைக்க,  அதில் பெண்ணவளின் மனம் இன்னுமே தடுமாற ஆரம்பித்தது.

அவன் பக்கம் சாயாமல் இருக்க, தன்னையே தன்னிடம் இருந்து காத்துக்கொள்ள பெரும்பாடு பட்டாள்.

அப்படி என்னதான் செய்திடுவான் பார்க்கலாம் என்று நிமிர்ந்தவள், தன் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டு,  தன் உடலை விறைத்துக் கொண்டு, நேராக நிமிர்ந்து அந்த இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்தாள் சத்யா.

அதே நேரம் நகரத்தை விட்டு வெளியில் வந்த அவனுடைய கார் பெங்களூர் ஏர்போர்ட் ரோடில் பறந்து கொண்டிருந்தது.  அதைக்கண்டு திடுக்கிட்டவள்

“என்னை எங்க கூட்டிட்டு போறீங்க?”  என்று கலவரத்துடன் கேட்க,  அவனும்

“என்னுடைய...சாரி...நம்முடைய வசந்த மாளிகைக்கு டார்லிங்...”  என்று   குறும்பாக கண் சிமிட்டி சிரித்தான் ஆரவமுதன்...!.


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!