காந்தமடி நான் உனக்கு!!-22
அத்தியாயம்-22
அடுத்த சில நிமிடங்களில் ஒரு பங்களாவின் முன்னால் தன் காரை நிறுத்தி
யிருந்தான் அமுதன்.
அவள் இருந்த பதட்டத்தில் அந்தக் கார் இரும்புக்கோட்டை
போன்ற மதில் சுவரை தாண்டி, கோட்டை போன்ற அந்த பங்களாவின்
முன்னால் வந்து நின்றதை எல்லாம் கவனிக்கவில்லை.
அவள் மனமோ ஏன் அவன் தன்னை கடத்தி
கொண்டு வந்திருக்கிறான் என்பதிலயே உழன்று கொண்டிருந்தது.
காரை நிறுத்தியவன் இன்னுமே அவள் இடையை
தழுவி இருந்த அவன் கையை எடுக்காமல், அவள் பக்கமாய் பார்த்தவன்
“உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் சது. வேற எந்த நோக்கத்திற்காகவும் உன்னை இங்கே
அழைத்து வரவில்லை. கொஞ்ச நேரம்தான் போய்விடலாம். இங்கே வரமாட்டேன் என்று
ஆர்ப்பாட்டம் செய்து சீன் கிரியேட் பண்ணாத.
எதுவாக இருந்தாலும் உள்ளே வந்து பேசு. நான்
உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்...” என்று ஹஸ்கி குரலில் முடிந்தவன், அவள் இடையை மெல்ல அழுத்தி கொடுத்து தன் கையை
எடுத்துக் கொண்டான்.
அவளுக்குமே அப்பொழுதுதான் அவன் கை தன்
இடையில் பதிந்து இருந்தது உறைத்தது. ஆனால் அதுகூட அவளுக்கு புரியாமல்
மிருதுவாகத்தான் பற்றி இருந்தான்.
இப்பொழுது அவன் குரலில் என்ன இருந்ததோ? அப்படியே மந்திரத்திற்கு கட்டுண்டவளை
போல அமர்ந்து இருந்தாள்.
அமுதன் அவன் பக்கமாய் இருந்த கதவை
திறந்து கொண்டு கீழே இறங்கியவன், அவள் பக்கமாய் வந்து கதவை திறந்து, ஆங்கிலேயர் பாணியில் இடைவரை
குனிந்து அவள் இறங்குவதற்காக அவன் கையை பவ்யத்துடன் நீட்டி இருக்க, அனிச்சையாய் அவன் கை மீது தன் கையை வைத்து இறங்கி அவனோடு இணைந்து நின்று
கொண்டாள் சத்யா.
அதை கண்டதும் மெல்லிய புன்முறுவல் அவன்
இதழ்களில்...
அவள் தோள் மீது கை போட்டு. லேசாக தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன்
“என் இதய ராணிக்காக நான்
கட்டியிருக்கும் வசந்த மாளிகையை பார் டார்லிங்...” என்று அவள் காதில் கிசுகிசுத்தான் அமுதன்.
அப்பொழுது தான் அவளின் அறிவு
விழித்துக்கொள்ள, பக்கவாட்டில் திரும்பி அவனை பார்த்து
முறைத்தவள், அவன் அணைப்பிலிருந்து விலகி கொள்ள
முயல, அவனோ அவள் அசையாத மாதிரி அழுத்தமாக பிடித்துக்
கொண்டான்.
பார்ப்பதற்கு மிக மிருதுவாய் அவள் தோளை
பற்றி இருக்கிறான் என்று தோன்றினாலும், அவனின் வலிய
கரத்தின் அழுத்தமான பிடி, அவள் தோள்பட்டையை வாட்டியது போல வலித்தது.
அதே அணைப்போடு அவளை வழி நடத்தி, அந்த பங்களாவின் உள்ளே நுழைய,
அங்கிருந்த சிப்பந்திகள் எல்லாம் சல்யூட் அடித்து அவனுக்கு மரியாதை
செலுத்தினார்கள்.
வாயிலை அடைந்ததும்
“முதன்முறையாக நீ வாழப்போகும் புகுந்த வீட்டிற்கு
வந்திருக்கிறாய் டார்லிங். நம்ம
வழக்கப்படி வலது காலை எடுத்து வைத்து வா பார்க்கலாம்...” என்று அவள் காதில்
ரகசியமாய் கிசுகிசுக்க, அவளோ அவனை பார்த்து ஒரு கார பார்வை
பார்த்தாள்.
வேண்டும் என்றே தன் இடது காலை எடுத்து
வைக்க முயல, அவனோ அவசரமாய் அவளை பின்னுக்கு இழுக்க, அதில் தடுமாறியவள் பேலன்ஸ்க்காக தன் வலது காலை எடுத்து உள்ளே வைத்திருந்தாள்.
“அது....” என்று வெற்றி புன்னகையை
சிந்தியவன் அவளோடு இணைந்து அவனுமே தன் வலது காலை எடுத்து வைத்து உள்ளே சென்றான்.
அந்த நொடி சிலிர்த்து போனது அமுதனுக்கு.
இந்த ஆறுமாதம் அவளை பிரிந்து இருந்த
தவிப்பு மனதில் வந்து போக, இந்த தருணம் எப்படியோ அவள் தன்னிடம்
வந்துவிட்டாள் என்று நிம்மதியாக இருந்தது.
ஆனால் அந்த நிம்மதி கூடிய சீக்கிரமே குலைய
போகிறது. அவனவள் அவன் கைக்கு எட்டாத தூரம் செல்ல போகிறாள் என்று அந்த கணம் அறிந்திருக்கவில்லை
ஆரவமுதன்...
உள்ளே வந்தும் இன்னுமே அவளை அணைத்திருந்த கையை விலக்கி
கொள்ளவில்லை அவன். விலக்கி கொள்ள மனம் வரவில்லை அவனுக்கு.
வேலையாட்கள் முன்னே அவன் தன் தோளில் கை
போட்டு அணைத்தவாறு செல்வது அவளுக்கு சங்கோஜமாக இருந்தது.
மெதுவாய் நெளிந்து, அவன் பிடியிலிருந்து நழுவ முயன்றாள். அவனோ விடாமல் இன்னுமாய் அவள் தோளை அழுந்த பற்றியவாறு
அவனோடு சேர்த்து அணைத்தபடியே நடந்து, நடத்தி
சென்றான்.
உள்ளே சென்றதும் அடுத்த கணம் தன் பலத்தை
கொண்டு அவன் கையை தட்டி விட்டாள். அதோடு அவன் அழுந்த பற்றியதில் தோள்பட்டை
நன்றாகவே கன்றி போயிருந்தது. அந்த அளவுக்கு அழுத்தமாய் பற்றி இருந்திருக்கிறான்
அவனையும் அறியாமல்.
அது இப்பொழுது வலியை கொடுக்க, ஸ்ஸ்ஸ்ஸ் என்று வலியில் முனகியபடி தன் தோள்பட்டையை தேய்த்து விட்டு
கொண்டாள் சத்யா.
அப்பொழுதுதான் அவள் வலி அவனுக்கு புரிந்திருக்க, பார்வை அனிச்சையாய் அவள் தோளுக்கு சென்றது.
“ஓ...சாரி மா... ரொம்ப அழுத்தி
பிடிச்சிட்டேனா?...” என்று அவள் தோளை வருட வர,
அவளோ பட்டென்று அவன் கையை தட்டி விட்டவள்
“டோன்ட் டச் மி ஆரவ்... “ என்று கர்ஜித்து
அவனை எரிக்கும் பார்வை பார்த்தாள்.
“ஆரவ் நஹி ஹனி... அமுதன்...துமாரா
அமுதன்... “ என்று புன்னகைக்க
“இல்லை...நீ என்னுடைய அமுதன் இல்லை...
என் அமுதன் மென்மையானவன். என் அமுதனுக்கு யாரையும் இப்படியெல்லாம் வலிக்க வைக்கத்
தெரியாது...” என்று ஒரு விரக்தி சிரிப்புடன் இன்னுமாய் தன் தோள்பட்டையை தடவிக் கொண்டாள்.
அப்பொழுதுதான் அவளின் தோள் பட்டை வாட்டி இருந்ததை கண்டு அவனுக்குமே சுருக் என்று
வலித்தது.
“சே.. இப்படியா அவளிடம் முரட்டுதனமாக நடந்து
கொள்வது..? “ என்று தன்னைத்தானே கடிந்து கொண்டவன்,
“ஓ...ரியலி சாரி பேபி...இப்படி ஆகும்னு
நான் எதிர்பார்க்கவில்லை. இனிமேல் இப்படி
நடக்காது. சரி வா. மருந்து போட்டுக்கலாம்...” என்று கனிவுடன் அழைக்க,
“அதெல்லாம் ஒரு மண்ணும் வேண்டாம்...
நான் இப்பவே வீட்டுக்கு போகணும்.. சீக்கிரம் மேட்டரை சொல்லுங்க... “ என்று
முறைத்தாள்.
அவனும் ஒரு பெருமூச்சை எடுத்து
விட்டவன்
“சரி வா.. அந்த ரூம்க்கு போய் பேசலாம்...”
என்று அருகில் இருந்த அறையை கண்காட்ட அவளுக்கோ திக்கென்றது.
கோட்டை போன்ற இந்த இடத்தில், யாரும் இல்லாமல் தனியாக வந்து மாட்டி கொண்டோமே
என்று ஒரு நொடி மிரண்டு போனாள்.
ஆனாலும் அழைத்து வந்தவன் அமுதன் என்று
அவளுடைய ஆழ்மனம் எடுத்து சொல்ல, அதலால் கொஞ்சம் பயம் இல்லாமல்
இருந்தது. ஆனாலும் பெண்மைக்கே உரித்தான அந்த பாதுகாப்பு உணர்வு தலை தூக்க, அவன் அழைப்பை மறுத்தவள்
“இல்லை...எதுவாக இருந்தாலும் இங்கயே சொல்லுங்க.
சீக்கிரம்... நான் வீட்டுக்கு போகணும்...”
என்று பிடிவாதமாய் அங்கேயே நின்று
கொண்டாள். அவளின் மண ஓட்டத்தை கண்டு கொண்டவன்
“ஹா ஹா ஹா அறைக்கு கூட்டி போய் உன்
மீது பாய்ந்து விடுவேன் என்று பயமா டார்லிங். நான் உன் அமுதன். அப்படியெல்லாம் முறை தவறி உன்னிடம்
நடந்து கொள்ள மாட்டான். ட்ரஸ்ட் மீ.
இங்கு வேலை ஆட்கள் இருக்கிறார்கள். பப்ளிக்கா எதுவும் பேச முடியாது. அதுதான். ஹோப்
யு அன்டர்ஸ்டான்ட்...லெட்ஸ் கோ...”
என்று தன் ஆளுமையான குரலில்
கட்டளையிட்டவாறு முன்னே நடக்க, அந்த குரலுக்கு கட்டுபட்டவளாய், அவளும் வேறு வழியில்லாமல்
அவனை பின் தொடர்ந்து சென்றாள்.
செல்லும் பொழுது கண்களால் அந்த இடத்தை
அளவிட்டாள்.
கிட்டத்தட்ட ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சிற்கு
இருந்தது அந்த பங்களா...கண்ணைக் கவரும் அஸ்தர் விளக்குகள், அலங்கார ஓவியங்கள் விலைமதிப்பற்ற
கலைப்பொருட்களும் ஆங்காங்கே வீற்றிருந்தன. வரவேற்பறையில் விலையுயர்ந்த நீண்ட சோபாக்கள்
போட்டிருக்க, தரையில் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு, கிட்டத்தட்ட அரண்மனை
போலத்தான் இருந்தது அந்த பங்களா.
அதைக் கண்டதும் அடுத்த நொடி அவன் தங்கி
இருந்த அவள் வீட்டு மொட்டை மாடி அறை கண் முன்னே வந்தது.
“அந்த அறை இந்த அரண்மனையில் 0.0000001
பெர்சென்ட் கூட இல்லையே. அந்த குறுகிய இடத்தில் எந்த வசதியும் இல்லாமல் ஒரு
வருடமாக அங்கே எப்படி தங்கினான்?
அதுவும் அவன் காலை நன்றாக கூட நீட்ட
முடியாமல், கொசுக்கடியில்,
ஏஸி இல்லாத வெட்கை வாட்டும் அந்த புலுக்கத்திலும் எப்படி சமாளித்து தங்கியிருந்தான்?
ஏன் அவ்வ்ளவு கச்தத்தையும் தாங்கி
கொண்டு அமுதனாய் அங்கே வந்தான்? நாடகமாடினான்? ஏனாம்? எதுக்காகவாம் ? எதற்காக இந்த நாடகம் “ என்று பல
கேள்விகள் முந்தியடித்து கொண்டிருந்தது அவள் உள்ளே.
அவளுக்கும் அவனிடம் அதற்கான விடையை
கேட்டு தெரிந்துகொள்ள வேண்டாம் என்று இருந்தது.
அதனாலேயே அவன் அழைத்ததும் அவனை பின்பற்றி அவன் கட்டளைக்கு உடன்பட்டு அவன் பின்னால்
சென்றாள்.
அந்த அறைக்குள் நுழைந்ததும், அந்தக் கதவு தானாக மூடிக்கொண்டது.
அதைக்கண்டு திடுக்கிட்டு உடனே
பதற்றத்துடன் வாயிலை பார்த்தாள் சத்யா. மீண்டும் திரும்பி அவனை சிறு மிரட்சியுடன்
பார்த்து வைக்க,
அவள் பார்வையின் அர்த்தத்தை புரிந்து
கொண்டவன்
“சாரி பேபி. இது ஆட்டோமேட்டிக் டோர். தானாகவே மூடிக்கொள்ளும். அதை
திறப்பதற்கு என்னுடைய அனுமதி வேண்டும்...” என்று அவளை ஒரு மார்க்கமாக பார்த்தான்
அமுதன்.
அவனின் அந்த பார்வை கண்டு அவள் உள்ளே கிலி
பரவியது. உடனே சமாளித்துக் கொண்டவள் தன் பயத்தை வெளிக்காட்டாமல், அங்கிருந்த இருக்கையில் சென்று நிமிர்வுடன் அமர்ந்து கொண்டாள்.
தன் கால் மீது கால் போட்டு அமர்ந்து கொண்டு, கைகளை மார்புக்கு குறுக்காக
கட்டிக்கொண்டு, அங்கு நின்றிருந்தவனை எதிர்நோக்கியவள்
“ம்ம்ம்ம் சொல்லுங்க மிஸ்டர் ஆரவமுதன்? எதற்காக இந்த நாடகம்? “ என்றாள் மிடுக்குடன் அதிகாரமாக.
அவளின் அந்த மிடுக்கும், அதிகாரமான தோரணையும் கண்டவனுக்கு உதட்டில் புன்னகை அரும்பியது.
இதுவரை அவன் பார்த்து, பழகிய பெண்கள் யாருமே அவனிடம் இந்த மாதிரி மிடுக்குடன் நடந்து
கொண்டதில்லை.
அவனை கண் பார்வைக்காக ஏங்கிக்கொண்டிப்பர்.
அவனை அறியாமலேயே அவன் மீது வந்துவிழும் பெண்கள் ஏராளம்.
ஸ்டான்ட்போர்ட் யுனிவர்சிட்டியில் படிக்கும்போதே
அவனுக்கு பல நாட்டு பெண்களின் ரசிகை பட்டாளம் என்றானது. டேட்டிங் வாய்ப்புகள்
தானாக வந்து குவிந்தன.
தற்பொழுது ஆரவ் குரூப் ஆப் கம்பெனிஸ்
ன் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பிறகு, அவனுடைய தேஜஸ் இன்னுமே கூடிப் போயிருந்தது
அவனுடைய ஆண்மையோடு இப்பொழுது ஆளுமையும்
சேர்ந்துகொள்ள மகாபாரத அர்ஜுனனாய் அனைத்து கன்னி பெண்களுக்கும் காட்சியளித்தான்
ஆரவமுதன்.
அதனாலேயே,
அந்த அர்ஜுனன் செல்லும் இடங்களிலெல்லாம் பெண்கள் அவன் பக்கம் வந்து விழுந்ததைப்
போல, இந்த ஆரவமுதன்
செல்லும் இடங்களில் எல்லாம் பெண்களுக்கு குறைவில்லை.
தானாகவே மேலே வந்து விழுந்து வைத்தனர்.
அதுவும் அலுவலக வேலையாக செல்லும்
இடத்திலும் கூட பெண் காரியதரிசிகளும் இல்லை பெண் நிறுவனர்களும் இவனை வளைத்துப் போட
முயல்வதை தடுக்கத்தான் முடியவில்லை.
சமீப காலத்தில் அந்த மாதிரி பார்த்து
பழகியவன், இப்பொழுது இந்த பெண் அவனை ஏறெடுத்தும்
பார்க்காமல், அலட்சியமாய் பேசுவதோடு அவனை நிற்க வைத்து கேள்வி
கேட்பதும் அவனுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.
கூடவே அது பிடித்தும் இருந்தது.
“இது...இது... இதுதான் என் சது... இவள்தான்
என் செல்லம்மா...மற்ற பெண்களிடம் இருந்து மாறுபட்டவள். மற்ற பெண்களுக்கு விதிவிலக்கானவள்...என்னவள்..
எனக்கு மட்டுமே சொந்தமானவள்...”
என்று தனக்குள்ளே குதூகலித்துக் கொண்டான்
அந்த நிகல்கால அர்ஜுனன்...ஆரவமுதன்...! .
Super varnanai mam
ReplyDeleteThanks pa!
Delete