காந்தமடி நான் உனக்கு!!-23

 


அத்தியாயம்-23

த்யாவின் நிமிர்வும், நேர் பார்வையும் கண்டவன், தன்னை மறந்து அவளை ரசனையோடு பார்த்து ரசித்தவன்,  பின் தன் தலையை உலுக்கி கொண்டு   அவள் அருகில் நெருங்கி வந்தான் ஆரவமுதன்.

அவள் அமர்ந்திருந்த இருக்கையின் கைப்பிடியின் இரண்டு பக்கமும் தன் கையை ஊன்றி,  அவள் முகத்துக்கு நேராக தன் முகத்தை மிக அருகில் கொண்டு வந்தவன், அவளை மையலுடன் பார்த்து

“நீ மாறவே இல்லை சது... அப்படியேதான் இருக்கிறாய்...”  என்றான் குழைவான குரலில்.

“ஆனால் நீங்க மாறிட்டிங்களே அம்...”  அம்மு என்று சொல்ல வந்தவள் அதை உடனே ஆரவமுதன் என்று  மாற்றிக் கொண்டாள்.

“நீங்க மாறிட்டிங்களே ஆராவமுதன்.. எப்படி இப்படி மாறினீங்க? எதுக்காக என்னை ஏமாற்றினிங்க? எதுக்காக காதல் சொல்லி என்று நாடகம் ஆடி என் மனதை திருடிச்சென்றிங்க?” என்று மிடுக்குடன் பேச ஆரம்பித்தவள் இறுதியில் தன் கட்டுபாட்டை இழந்து தழுதழுக்க ஆரம்பித்தாள்.

அவள் கண்களில் கண்ணீர் திரண்டு வந்தது. அதைக் கண்டவன் மனம் சுட்டது. உடனே அவள் கண்ணீரை துடைக்க அவன் கரம் நீண்டிருக்க, அவளோ பட்டென்று அவன் கையை தட்டி விட்டாள்

“ப்ளீஸ்...டோன்ட் டச் மீ. நான் கேட்ட கேள்விக்கு முதலில் பதில் சொல்லுங்கள்...” என்றாள் மீண்டுமாய் அவனை முறைத்தவாறு.  

அவனோ அவள் கண்களுக்குள் ஊடுருவிப் பார்த்து,  

“ஐ லவ் யூ கண்ணம்மா...ஐ லவ் யூ சோ மச்...” என்று குரல் தழுதழுத்தவாறு அவளையே காதலுடன் பார்த்திருந்தான்.

அவனின் அந்த வசீகரிக்கும் காந்த பார்வையும், காதல் தோய்ந்த அவன் குரலும் அமுதனுடையது. அவள் பார்த்து, கேட்டு ரசித்த அமுதன் குரல்தான். அதை கேட்டதும், காதலை யாசிக்கும் அவன் கண்களை கண்டதும் அவளின் உறுதி கொஞ்சம் கொஞ்சமாக தளர ஆரம்பித்தது.

ஆனாலும் வலுக்கட்டாயமாக அதை முயன்று தடுத்தவள்,  தன் உடலை இறுக்கிக் கொண்டு

“இந்த மாதிரி பிதற்றல் எல்லாம் இனி வேண்டாம் மிஸ்டர் ஆரவமுதன். இன்னும் நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்டு நம்புவதற்கு நான் ஒன்றும் முட்டாளில்லை. எனக்கு ஒன்னே ஒன்னு தான் உங்களிடம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்

அது,  எதற்காக இந்த நாடகம் என்பதுதான். மற்றபடி இனி எனக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...”  என்றாள் வெறித்த பார்வையுடன்.

அதை கேட்டு அவன் முகம் ஒரு நொடி வாடி போனது.

ஆனாலும் அடுத்த நொடி சமாளித்துக் கொண்டவன்

“சொல்கிறேன் பேபி. அதற்கு முன்னால் முதன்முதலாய் நம் வீட்டில்ற்கு வந்திருக்கிறாய். ஏதாவது இனிப்பாக சாப்பிடு...”  என்றவன் ஏதோ பட்டனை அழுத்தி அங்கிருந்து திரையில் ஐஸ்கிரீம்...வெண்ணிலா என்றான் அவளை ஓரக் கண்ணால் பார்த்தவாறே.

அவளோ எனக்கு எதுவும் வேண்டாம் நான் வீட்டுக்கு போகனும் என்று முறைத்தபடி சொல்ல,  

போகலாம் பேபி...ஜஸ்ட் அரை மணி நேரம்...” என்றவன் தன் கையிலிருந்து வாட்சில் ஏதோ பட்டனை அழுத்த, அடுத்த நொடி அந்த கதவு திறந்து கொண்டது.

அதே நேரம் ஒரு சிப்பந்தி பெரிய ஸ்கூப்பில் ஐஸ்கிரீமை கொண்டு வந்து வைத்து விட்டு பவ்யமாக நகர்ந்து சென்றான்.  

“சாப்பிடு சது. உனக்கு பிடித்தது தான்...”  என்றான் அவளை குறுகுறுவென்று பார்த்தவாறு.  

“இல்லை...நான் இப்பொழுது ஐஸ்கிரீம் சாப்பிடுவது இல்லை..”  என்றாள் கழுத்தை நொடித்து மறுபக்கம் திரும்பியவாறு.

“ஹா ஹா ஹா குட் ஜோக். நேற்று கூட நீ உன் தங்கைகளுடன் சென்று சாப்பிட்டுவிட்டு வந்தாயே.!  அது எந்த கணக்கில் சேர்ப்பது? “  என்றான் புருவத்தை உயர்த்தி குறும்பாக சிரித்தவாறு.

அதைக் கேட்டு ஒரு நொடி திகைத்து அதிர்ந்து போனாள் சத்யா.  நேற்று நாங்கள் ஐஸ்கிரீம் கடைக்கு சென்றது இவனுக்கு எப்படி தெரிந்தது?  என்று சந்தேகமாக புருவத்தை உயர்த்திப் அவனை கேள்வியாக பார்க்க,  அவளின் மனதை படித்தவனாய்,  

“நீ ஐஸ்கிரீம் சாப்பிட்டது மட்டுமல்ல. உன்னுடைய ஒவ்வொரு அசைவும் எனக்கு தெரியும் பேபி...” என்றான் தன் இமைகளை அழுத்தமாய் மூடித் திறந்து.

அப்பொழுதுதான் சத்யாவிற்கு உறைத்தது. கொஞ்ச நாட்களாகவே யாரோ தன்னை கண்காணித்துக் கொண்டிருப்பதைப் போன்ற ஒரு உணர்வு அவள் உள்ளே. அது தன்னுடைய மனபிரம்மை என்று தவிர்த்துவிட்டாள்.  

“அப்படி என்றால் என்னை கண்காணித்துக் கொண்டிருக்கிறானா? எதற்காகவாம்? “  என்ற கேள்வியுடன் மீண்டும் அவனை பார்க்க

“ஏனென்றால் ஆரவ் குரூப் ஆப் கம்பெனிஸ் உடைய ஒரே இளவரசன்... அவனுக்கு துணைவியாக ஆக போகிறவள் நீ. உன்னுடைய பாதுகாப்பு முக்கியம் இல்லையா?  அதனால் தான்...”  என்றான் மந்தகாசப் புன்னகையோடு.

“ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் மிஸ்டர் ஆரவமுதன். இனி ஒருதரம் அந்த மாதிரி சொல்லாதீங்க. நான் தான் முன்னைய சொல்லிவிட்டேனே. எனக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று. இனிமேலும் அந்தப் பேச்சை தொடர வேண்டாம்...”  என்றாள் அதே வெறித்த வெற்றுப் பார்வையுடன்.

“ஓகே... ஓகே டன். சரி முதலில் அந்த ஐஸ்கிரீமை சாப்பிடு. என்னைப் போலவே,  உன்னுடைய கோபத்தில் அதுவும் பயந்து உருகுகிறது பார்...”  என்றான் மெல்லிய புன்னகையுடன்.

“யாரு... இவன் என்னிடம் பயந்து நடுங்கறானா? குட் ஜோக்...” என்று உதட்டோரம் ஏளனாமக் வளைத்து அவனை நக்கலாக பார்த்தவள்,  அவன் பார்வையில் இருந்த பிடிவாதத்தை கண்டு,

“நான் சாப்பிடாமல் அவன் விடமாட்டான்...”  என்று கண்டு கொண்டவள் கைகள் தானாக அந்த ஐஸ்கிரீமை எடுத்து சுவைக்க ஆரம்பித்தாள்.  

அவனுமே அவனுக்காக வைக்கப்பட்டிருந்த பழச்சாற்றை வாயில் வைத்து உறிஞ்சினான்.  அவன் பார்வையோ அவள் இதழ்களில் தொக்கி நின்றது.

அந்த ஐஸ்க்ரீம் அவள் இதழ்களில் பட்டு,  அவளின் தொண்டைக்குள் வழுக்கி செல்வதையே ஏக்கத்துடன் பார்த்திருந்தான்.

முதன் முதலாக அவளை வெளியில் அழைத்து சென்று ஐஸ்க்ரீம் வாங்கி கொடுத்த அதே நினைவு மீண்டும் கண் முன்னே வந்தது.

அவளுக்கும் அதே எண்ணம் தான். அவள் எண்ணமும் அந்த புள்ளியை தொட்டு நிற்க,  ஒரு கண்ணால் அவனை பார்க்க,  அவன் பார்வையோ  தன் இதழ்கள் மீது தாபத்துடன் படிந்திருப்பதை கண்டவளுக்கு முகம் தானாக சிவந்து போனது.

அவன் பார்வை வீச்சினால், உடலுக்குள் புது வெள்ளம் பாய்ந்து ஓடுவதைப் போல இருக்க, முகம் தானாக சிவந்து போக, இருக்கையில் அமர்ந்தவாறே தன் கால் கட்டை விரலை தரையில் அழுத்தி தன்னுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முயன்றாள் சத்யா.

அதோடு அவள் பார்வையையும் அவனிடமிருந்து விலக்கிக் கொண்டவள்,  எதிரிலிருந்த சுவற்றை வெறித்துப் பார்த்தாள்.  எப்படியோ வேகவேகமாக அந்த ஐஸ்கிரீமை முழுவதும் சாப்பிட்டு முடித்தவள்

“ஹ்ம்ம் சொல்லுங்க மிஸ்டர் ஆரவமுதன்.  என்ன கதை சொல்லப் போறீங்க?  சீக்கிரம் சொல்லுங்க...”  என்று தன் காரியத்திலேயே குறியாக நின்றாள்

அவனும் ஒரு பெருமூச்சை எடுத்துவிட்டு,  அவள் இருக்கையின் அருகில் இருந்த மற்றொரு இருக்கையில் அமர்ந்து கொண்டு தன்னுடைய கதையை சொல்ல ஆரம்பித்தான் ஆரவமுதன்..!

Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!