காந்தமடி நான் உனக்கு!!-26
அத்தியாயம்-26
“அதற்கு பிறகு நடந்தது எல்லாம் உனக்குத்தான் தெரியுமே சது...
நான் என்னை மறைத்துக் கொண்டது...என்
டாட் க்கு நான் கொடுத்த வாக்குக்காக. அவர் உதவி இல்லாமல் என்னாலும் ஜெயித்து
காட்டவேண்டும்.
சாதாரண மக்களின் வாழ்க்கையை பற்றியும்
நான் தெரிந்திருக்க வேண்டும். அப்பொழுது தான் ஒரு சக்ஸஸ்புல் பிசினஸ்மேன் ஆக
உருவாக முடியும் என்ற அவரின் போதனையை பின்பற்றத்தான்.
என் டாட் தொழிலை மட்டும் கத்துக்க
சொல்லி என்னை வெளியில் அனுப்பி வைத்தார். ஆனால் நான் கூடுதலாக அன்பு, பாசம், காதல் அனைத்தையும் உன்னிடமும், உன் குடும்பத்தாரிடமும்
தான் கற்றுக்கொண்டேன் சது மா.
பிரதிபலன் எதிர்பாராமல் நீயும், ஆன்ட்டியும்,
உன் தங்கைகளும் எனக்கு செய்த உதவி....
சான்சே இல்லை...வாழ்க்கையில் பணத்தை தாண்டியும் அன்பான,
பாசமான வாழ்க்கை இருப்பது, நான் உன் வீட்டில் தங்கி இருந்த நாட்களில் தான்
தெரிந்து கொண்டேன்.
அதோடு காதலிக்கவும் உன்கிட்ட தான்
கத்துக்கிட்டேன்.
இதுவரை எத்தனையோ பெண்களை
பார்த்திருக்கிறேன். பழகியிருக்கிறேன். அமெரிக்காவில் இருந்து, மும்பை வரை எத்தனையோ
அழகிகள் என்னிடம் பழகி இருக்கின்றனர்.
எத்தனையோ பேர் என்னிடம் ப்ரபோஸ் பண்ணி
இருக்கிறார்கள். அமெரிக்காவில் இருந்த பொழுது, பல
முறை டேட்டிங் கூட சென்றிருக்கிறேன். அதெல்லாம் ஜஸ்ட் டைம் பாஸ். ஆனால் யார்
மீதும் என் மனம் படரவில்லை.
யாரிடமும் என் மனம் பொங்கியதில்லை.
யாரிடமும் எல்லை மீறியும் பழகியதில்லை. அனைவரையும் ஒரு பார்வையில் தள்ளி வைத்திருந்தேன்.
ஆனால் ஏனோ உன்னை பார்த்ததும் என் மனம்
தடுமாறி விட்டது. உன்னை பார்க்க கூட இல்லை. அன்று நான் மயங்கி கிடந்த அன்று, உன் குரலை கேட்ட அந்த கணமே என்னையும் அறியாமல் நீ எனக்குள்ளே வந்து
விட்டாய்...
யு ஆர் மை ஏஞ்சல். யு ஆர் மை ஒன் அன்ட்
ஒன்லி லவ் பேபி. ஐம் மேட் வித் யூ...” என்று இன்னும் அவன் காதலில் ஏதேதோ பிதற்ற, சத்யாவுக்கோ எப்படி உணர்வது என்று தெரியவில்லை.
அவன் சொல்லியது எல்லாம் அவளும்
அனுபவித்ததே. அவனை பார்த்த அந்த நொடியெ தன்னுள் வந்துவிட்டான் தான்.
தன் குடும்பத்துக்காக என்று தன்னை
இறுக்கி கொண்டு வாழ்ந்தவள் மனதை நொடியில் இலக்கி,
காந்தமாய் அவளை அவன் பக்கம் கவர்ந்து இழுத்து கொண்டான் தான்.
அது எப்படி என்று இன்று வரைக்குமே அவளுக்கு புலப்படவில்லை. தன்
மீது அவன் கொண்ட காதலை, நேசத்தை எண்ணி அவளுக்கு பெருமையாக
இருந்தது.
கூடவே கர்வமாகவும் இருந்தது. ஆனால்
எல்லாம் சில நொடிகள்தான்.
அந்த நேரம், சத்யா அவனை பிரிந்து அடைந்த வேதனை, அவனை காணாமல் அவள் பட்ட துயரங்கள்,
அவனை அடையாளம் கண்டு கொண்டு, அலைபேசியில் அழைத்து பேச முயன்றபொழுது
அவன் கண்டு கொள்ளாமல் அவளை தவிர்த்தது, சமீபத்தில்
அந்த மும்பை அழகியுடன் அவன் நெருக்கமாக கொஞ்சியது எல்லாம் கண் முன்னே வர, அடுத்த நொடி அவள் உடல் விறைத்து போனது.
“எல்லாம் நாடகம். இப்பொழுது பிதற்றுவது
கூட நாடகம்...” என்று தன்னுள்ளே
எண்ணிகொண்டவள் அவன் பேச்சுக்கும் மயங்காமல் பல்லை கடித்துக் கொண்டு மார்புக்கு
குறுக்காய் தன் கைகளை இறுக்கிக் கொண்டு அப்படியே அமர்ந்து இருந்தாள் சத்யா.
சற்று நேரத்தில் தன் மனதில் இருந்ததை எல்லாம் அமுதன் கொட்டி முடித்திருக்க, உடனே தன் இருக்கையிலிருந்து
மெதுவாக எழுந்தாள் சத்யா.
ஒரு நீண்ட பெருமூச்சை எடுத்து விட்டவள்,
“ரைட் மிஸ்டர் ஆராவமுதன்... தேங்க்ஸ்
ஃபார் யுவர் இன்ட்ரெஸ்டிங் ஸ்டோரி. பட் யு நோ ஒன் திங். தொழிலை நன்றாக கற்றுக்
கொண்ட நீங்கள், காதலை முழுவதுமாக கற்றுக் கொள்ளவில்லை.
ஏன் அதற்கான தகுதியை கூட நீங்கள்
தெரிந்திருக்கவில்லை. அதனால் நான் காதலிக்கிறேன் என்று மட்டும் தயவு செய்து
சொல்லிடாதீங்க....” என்றாள் அவனைப் பார்த்து கசப்பான புன்னகையோடு அவனை முறைத்தவாறு.
அதைக் கேட்டு திடுக்கிட்ட அமுதன் “வாட்
யு மீன்? “ என்றான் கண்கள் இடுங்க
“ப்ச்... காதலின் அடிப்படையே நம்பிக்கை.
ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கை. எத்தனை கஷ்டம் வந்தாலும், சந்தோஷம் வந்தாலும் உனக்கு நான், எனக்கு நீ என்று ஒருவர் மீது ஒருவர் வைக்கும் அசைக்க முடியாத, ஆழமான நம்பிக்கைதான் காதலின்
அஸ்திவாரம். .
ஆனால் உங்களுக்கு என் மீது நம்பிக்கை
இல்லை. அதனால் தான் உங்களை பற்றி எந்த ஒரு டீடெய்ல்ஸ் ஐயும் என்கிட்ட சொல்லவே
இல்லை.” என்றாள் வெறித்த பார்வையுடன்.
“ஐம் சாரி சது...அப்பாவுடைய கண்டிஷன் அந்த
மாதிரி...” என்று விளக்க முயல,
“என்ன மிஸ்டர் ஆரவமுதன்... உங்க
அப்பாவுடைய கண்டிஷனில் காதலிக்கலாம் என்று மட்டும் சொல்லியிருந்தாரா? அது எப்படி உங்கள்
அப்பாவின் விதிகளை மீறி உங்களால் காதல் செய்ய முடிந்தது?.
அப்படி என்றால் காதலிக்கும் பெண்ணிடம்
உங்களை பற்றி சொல்லியிருக்க வேண்டாமா? நான் எத்தனை
முறை உங்களைப் பற்றி கேட்டிருப்பேன். ஆனால் ஒரு முறை கூட நீங்கள் வாயை திறந்து
சொல்லவில்லையே.
அப்படி என்றால் உங்களை பற்றிய ரகசியத்தை
என்னை நம்பி சொல்ல நீங்கள் தயாராக இல்லை. அந்த அளவுக்கு என் மீது உங்களுக்கு நம்பிக்கை.
நீங்கள் என்னை விட்டு பிரியும் பொழுது சொன்னது ஞாபகம் இருக்கா? அதையே தான் நானும் இப்பொழுது திருப்பி
சொல்கிறேன். நம்பிக்கை இல்லாத காதல் இனி நமக்கு வேண்டாம்...” என்றாள் இறுகிய முகத்துடன்.
“ப்ளீஸ் சது. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா
கேட்டு தனிமையில் யோசித்து பார். என் பக்கம் இருந்தும் கொஞ்சம் யோசித்து பார்...” என்று
மன்றாடினான் அமுதன்.
அவனின் அந்த பாவமான முகத்தை கண்டவளுக்கு
மனம் அவளையும் மீறி உருகி விட, கொஞ்சமாய் இறங்கி வந்தவள்
“சரி...அப்பொழுதுதான் உங்கள் தந்தைக்கு
பயந்து கொண்டு இருந்தீர்கள். தந்தைக்கு கொடுத்த வாக்குறுதிக்காக எல்லாவற்றையும் மறைத்து
விட்டீர்கள்.
நீங்கள் மும்பை சென்றதும் ஏன் என்னை அழைத்து
ஒரு வார்த்தை கூட பேசவில்லை. சரி.. உங்களுக்குத்தான் என் கூட பேச நேரமில்லை. ஆனால்
மாறாக நான் உங்களை கண்டுபிடித்து அழைத்தேனே. அப்பொழுது என்னுடைய அழைப்பை
நிராகரித்தது ஏன்?
ஒரு முறை கூட என்னிடம் பேச முயலாதது
ஏன்?” என்றாள் கோபத்துடன் ஆரம்பித்து கண்ணில் வலியுடன்
நீர் சூழ்ந்து கொள்ள.
ஆனாலும் அவன் முன்னால் அழக்கூடாது என்று
உருபோட்டவள் வெளி வர துடித்த விழிநீரை உள்ளிழுத்து கொண்டாள் சத்யா.
“உனக்கு தெரியுமா அமுத...” அமுதன் என்று
சொல்ல வந்தவள் உள்ளிழுத்து கொண்டு
“மிஸ்டர் ஆரவமுதன்... உன்னை...உங்களை...
காணாமல் நாங்கெல்லாம் ஒவ்வொரு நொடியும் அணுஅணுவா துடித்து போனோம். .
உனக்கு என்ன ஆனது? பத்திரமாக இருக்கிறாயா என்ற
தகவலாவது தெரிந்து விடாதா என்று தினம் தினம் ஏங்கி தவித்தோம்
அட்லீஸ்ட் ஒரு வார்த்தை...நான் அவசரமாக
மும்பை செல்கிறேன் என்று சொல்லி விட்டு சென்றிருக்கலாம். நான் என்ன உங்களைத்
தேடிக் கொண்டு மும்பைக்கா வந்து விடப்
போகிறேன்?
ஏன் அப்படி செய்தீர்கள்? “ என்று தழுதழுத்தவாறு அமுதன்
சட்டையை பிடித்து உலுக்கினாள் சத்யா.
கண்கள் அவளையும் மீறி கண்ணீரை சுரந்து கொண்டிருந்தது.
அவள் விடும் ஒவ்வொரு சொட்டு கண்ணீரிலும்
அவள் தன்னை காணாமல் எப்படி தவித்து போயிருப்பாள் என்று இப்பொழுது புரிந்தது அமுதனுக்கு,
அவள் இவ்வளவு தூரம் எமோசனல் ஆவாள் என்பதை
உணர்ந்திருக்கவில்லை அமுதன்.
பொதுவாக நடுத்தர வர்க்க மக்களின் அன்பு, பாசம், ஏக்கம் போன்ற உணர்வுகளை அவன் முழுமையாக அறிந்ததில்லை. அவன் வளர்ந்த குடும்ப
சூழ்நிலை வேறாக இருந்ததால், இந்த மாதிரி பாச பிணைப்பு பற்றி
சரியாகத் தெரியவில்லை அவனுக்கு.
அவன் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்ததும், மேல்படிப்புக்காக வெளிநாடு
சென்றபோது அவன் அன்னை ரூபாவதி பெரிதாக
கண்டு கொள்ளவில்லை
அவனுக்குமே அப்படித்தான்... தன் பெற்றோர்களை
பிரிந்து செல்கிறோம் என்று கொஞ்சமும் வருத்தமில்லை. அடிக்கடி அலைபேசியிலும் , வீடியோ காலிலும் பேசிக் கொள்ள போகிறோம். இதுக்கு எதுக்கு பீலிங் என்றதாய்
எண்ணம் அவன் உள்ளே.
அதே மாதிரியான எண்ணத்தில், மனநிலையில் தான் அவனும் அன்று சத்யாவை விட்டு கிளம்பி விட்டான். ஆனால்
தன்னை காணாமல் அவளும், அவள் குடும்பவும் ரொம்பவும் தவித்து போவார்கள்
ஏன்று எண்ணியிருக்கவில்லை.
அந்த அளவுக்கு தன் மீது அவர்கள் பாசமாக
இருந்ததை எண்ணும்பொழுது அவன் உடல் சிலிர்த்தது. இந்த மாதிரி ஒரு உரிமையை, ஒரு அன்பை அவனுடைய மும்பை வீடு கொடுத்ததில்லை.
அந்த வாழ்க்கையும் இப்படி ஒரு சிலிர்ப்பை
தந்ததில்லை அவனுக்கு. அந்த நொடி கர்வமாக இருந்தது அமுதனுக்கு. கூடவே தன்னவளை எப்படியாவது
சமாளித்து விடவேண்டும் என்ற தீவிரம் மனதில் எழ, அவளை
சமாதானம் படுத்த முயன்றான் அமுதன்.
“நான் சொல்வதைக் கேள் சது. அன்று நடந்ததை
நானும் சொல்கிறேன். அன்று உன்னிடம் சண்டை போட்டு விட்டு வந்த பிறகு என் அப்பாவின் பி.ஏ
என்னை பார்க்க வந்து விட்டார்.
அப்பாவிற்கு உடல்நிலை மோசமாக இருப்பதாக
சொல்லி என்னை உடனே மும்பைக்கு வர வேண்டும் என்றனர்
அப்பாவிற்கு சீரியஸ் என்றதும் உடனே என்னால் வேறு எதிலும் கவனம் செலுத்த
முடியவில்லை. என் மூளை வேலை நிறுத்தம் செய்ததை போல ஆகி போனது.
உடனேயே என்னை தனி விமானத்தின் மூலமாக மும்பை
அழைத்து வந்து விட்டனர். அப்பாவுக்கு மைல்ட் ஹார்ட் அட்டாக். ஓய்வாக இருக்கவேண்டும் என்று சொல்லி விட்டார்கள்
அப்பொழுதுதான் தொழில்களில் நிறைய
ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தையோடு பாதியிலேயே நின்றிருந்தன.
என் தந்தையின் இடத்திலிருந்து நான் ஒவ்வொன்றையும்
ஹேண்டில் பண்ண வேண்டிய நிலை
அனைத்து ப்ராஜெக்ட் பற்றிய டீடெய்ல்ஸ் எல்லாம்
அப்பாவிடம் மட்டுமே இருந்ததால், அவரால் எனக்கு விளக்கி சொல்லவும் முடியாமல்
அவர் உடல் நிலை படுத்திவிட, நான் மீண்டும் அதை எல்லாம் ஆரம்பத்திலிருந்து
புரிந்து கொண்டு, அதற்கான அடுத்த முயற்சிகளை மேற்கொள்ள எனக்கு இருபத்து
நான்கு மணி நேரம் போதவில்லை சது.
தினமும் இரண்டு மணிநேரம் தூங்குவதே பெரிதாக
இருந்தது. என் டாட் ன் நிலை தெரிந்த உடன் நம் நிறுவனங்களின் மார்க்கெட் வேகமாக சரிய ஆரம்பித்தன.
அப்படி சரிய இருந்த தொழில்களை எல்லாம் நேராக்க, எனக்கு மூன்று மாத கால அவகாசம் ஆனது.
ஆனால் அதற்குப் பின்னர் என்னையே தொழிலை முழுவதுமாக பொறுப்பேற்றுக்க சொல்லிவிட்டார்
அப்பா. முதலில் எனக்கு விருப்பம் இல்லை என்று மறுத்து விட்டேன்.
எனக்கு, நான் பெங்களூரில் உன்னோடு வாழ்ந்த அந்த வாழ்க்கை
தான் பிடித்து இருந்தது. எந்த ஒரு டென்சனும்
இல்லாமல். கிடைக்கும் சம்பளத்தில் தேவைகளை
சுருக்கி கொண்டு ஆனால் அன்பை, பாசத்தை ,
காதலை சுருக்காமல் தாராளமாக அள்ளி கொடுத்து மகிழ்ச்சியாய் வாழும் அந்த வாழ்க்கைதான் எனக்கு பிடித்து
இருந்தது,
மீண்டும் அந்த மாதிரி ஒரு வாழ்வுக்கு
வந்துவிடணெடும் என்றுதான் என் எண்ணம்.
ஆனால் எனக்காக இல்லை என்றாலும் அந்த நிறுவனங்களை
நம்பி இருக்கும் பல்லாயிரக்கணக்கான நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்களின் வாழ்க்கை என்னாகும்
என்று எனக்கு செக் வைத்தார் அப்பா.
அப்பொழுதுதான் எனக்கு மண்டையில் உறைத்தது.
ஏற்கனவே அவர்கள் படும் கஷ்டங்களை நேரில்
பார்த்திருந்ததால், அந்த வாழ்வை நானும் அனுபவித்து இருந்ததால், நிதர்சனம் எனக்கு புரிந்தது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொற்ப சம்பளமே
என்றாலும் சில ஆயிரங்கள் எவ்வளவு பெரிய தொகை என்று அனுபவத்தால் உணர்ந்து இருந்ததால்
இப்பொழுது என்னால் தெளிவாக சிந்திக்க முடிந்தது.
என் பக்கமாக இல்லாமல் அவர்களின் பக்கமாக
நின்று பார்த்தேன். அப்பொழுதுதான் என் ஒருவனுடைய சந்தோஷத்துக்காக அத்தனை குடும்பங்கள்
கஷ்டபடணுமா? யோசித்தேன்.
அதோடு எனக்கு மூச்சுவிட கூட நேரமில்லாமல், எனக்கு வாய்ப்பே கொடுக்காமல் அப்பா படிப்படியாக எல்லா
ஆயத்தங்களையும் செய்து விட என்னால் அதற்கு மறுப்பு சொல்ல முடியவில்லை.
உடனே இந்த பதவியை ஏற்றுக் கொள்ள
வேண்டியதாகி விட்டது
பிறகுதான் ஆரவ் க்ரூப் ஆப் கம்பெனிஸ் நிறுவனங்களின்
தலைமை பொறுப்பை ஏற்று கொண்டேன். அதன் பிறகு இன்னுமே வேலை ஜாஸ்தியானது.
அதற்கடுத்து மேலும் தலைக்கு மேலே வேலை.
நின்று மூச்சு விடக்கூட நேறமில்லாமல் ஓடினேன். என்னுடைய இத்தனை வேலைப்பளுவையும்
என்னால் தாங்கி நிற்க முடிந்தது என்றால் அதற்கு காரணம் நீ... “ என்றான் அவளை
காதலுடன் பார்த்தவாறு.
“நானா? “
என்று திடுக்கிட்டவள் கேள்வியாக அவனை பார்க்க
“யெஸ்.. பேபி.. நீதான்.. நீ மட்டும்தான்...
அந்த சிவனின் இடப்புறமாய் இருந்து அந்த சிவனையே ஆட்சி செய்த சக்தியை போல, இந்த அமுதன் கூடவே இருந்து அவனை சியர் அப் பண்ணியது, மோட்டிவேட் பண்ணியது எல்லாமே சாத் சாத் என் சது... நீயேதான்.
நான் ஓய்ந்து, தளர்ந்து
போகும்பொழுதெல்லாம் உன்னை பற்றி எண்ணிக் கொள்வேன். உன்னை முதல் முதலில் பார்த்த
அந்த தருணம்... உன் முதல் ஸ்பரிசம். உன் முதல் முத்தம்.. இப்படி உன்னை பற்றி
எண்ணினாலே உள்ளுக்குள் ஒரு புத்துணர்ச்சி வந்து விடும்.
அதோடு நான் உறங்கும் அந்த இரண்டு மணி நேரம்
கூட உன் புகைப்படங்களை பார்த்துகொண்டு
உன்னை கட்டி கொண்டு உறங்குவது போல கற்பனை செய்து கொள்வேன்.
என்ன மாயமோ?
அடுத்த நிமிடம் அப்படி ஒரு நிம்மதியான உறக்கம் வந்துவிடும். அவ்வளவு ஏன்? என் பிசினஸ் ல் கூட ஏதாவது முடிவு எடுக்க தடுமாறும் பொழுது மானசீகமாக
உன்னை நினைத்து கொண்டால் போதும்.
அடுத்த நொடி எனக்கு ஒரு தெளிவான விடை, முடிவு கிடைத்துவிடும்..
என் உடல்தான் உன்னை விட்டு பிரிந்து இருந்ததே தவிர,
என் உயிரும் மனமும் உன்னை சுத்தியேதான் வந்ததடி செல்லம்மா..
.நீ என்னை அடையாளம் கண்டு கொண்டு என்னை
அழைத்த பொழுது எவ்வளவு சந்தோஷமாக இருந்தது தெரியுமா?
அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
அப்படியே உன்னை இறுக்க கட்டி கொண்டு உன் முகம் எல்லாம் முத்தம் மழை பொழிய வேண்டும்
போல துள்ளி குதித்தது என் மனம்.
உன்னிடம் பேச வேண்டும் என்ற ஆவல்
எனக்கும் தான். அதேநேரம் அப்பா அருகில் இருந்து கொண்டு என்னை குறுகுறுவென்று
பார்த்து கொண்டிருந்தார்
நம்முடைய காதல் விஷயம் அவருக்கு
தெரியாது. ஒருவேளை அவருடைய ஆட்கள் மூலம் தெரிந்திருக்குமோ? என்னிடம் அவர் எதுவும் கேட்கவில்லை
நான் அலுவலகத்தின் எல்லா பொருளாதார நிலையையும்
ஒரளவுக்கு சரி செய்துவிட்டு, டாட் இடம் நம்மைப் பற்றி
எடுத்துக் கூறி நேரடியாக உன் வீட்டிற்கு வரலாம் என்று இருந்தேன்.
அதற்கு நாட்கள் தள்ளிப் போய்க் கொண்டே
இருந்தது. அப்பதான் நீ என் மீது கோபமாக இருக்கிறாய் என்று தெரிய வந்தது. அதில்
கொஞ்சம் அதிர்ந்து தான் போனேன்
சரி நேரில் சந்தித்து சமாதானம் செய்து
கொள்ளலாம் என்றுதான் இத்தனை நாட்களாக பொறுத்துக் கொண்டேன். அவசர அவசரமாக முழு மூச்சுடன்
தீயா வேலை செய்து ஓரளவுக்கு எல்லாம் சரி பண்ணிட்டேன்.
இப்பொழுதுதான் என்னால் சரியாக மூச்சுவிட முடிந்தது. அதுதான் அடுத்த கணம்
, உன்னை காண ஓடோடி வந்து விட்டேன் செல்லம்மா...”
என்றான் இலகிய முகத்துடன்
தன் கண்களில் காதலை தேக்கி...
“உன்னை பிரிந்து இருந்த இத்தனை நாட்கள்
எனக்கு நரகமடி. இனிமேல் உன்னை ஒரு கணமும் பிரிந்திருக்க மாட்டேன். அதனால்தான் மும்பை
தொழிலை எல்லாம் பொறுப்பானவர்களிடம் ஒப்படைத்துவிட்டு நான் மேற்பார்வை பார்ப்பதோடு நிறுத்தி
கொள்ள போகிறேன்.
இங்கே பெங்களூரில் சாஃப்ட்வேர்
நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கிறேன். அதற்கான
ஏற்பாடுகளை பார்க்கத்தான் வந்திருக்கிறேன். அடுத்த மூன்று மாதங்கள் இங்கே தான்
இருக்க போகிறேன்.
நம் திருமணத்திற்கு பிறகு, உனக்கு மும்பை வர பிடிக்கவில்லை என்றால் இங்கேயே தங்கிவிடலாம். என்னுடைய
சாஃப்ட்வேர் நிறுவனத்தை பார்த்து கொண்டு நாம் பெங்களூரிலயே செட்டில் ஆகிடலாம்... நீ
என்ன சொல்கிறாய்?“
என்று அவன் பாட்டுக்கு தன்னுடைய
எதிர்கால திட்டங்களை பட்டியலிட சத்யாவோ தன் முகத்தை இன்னுமாய் கடுகடுவென்று
ஆக்கிக் கொண்டாள்.
“மிஸ்டர் ஆராவமுதன்... ப்ளீஸ் ஸ்டாப் திஸ்
நான்சென்ஸ் டாக். நான் முன்பு சொன்னது போல, இப்பொழுது
நம்மிடையே காதல் என்ற ஒன்று இல்லை. முன்பு அப்படி ஒன்று இருந்திருந்தாலும் இப்பொழுது அது அடியோடு அழிந்துவிட்டது.
இனிமேல் நீங்கள் யாரோ... நான் யாரோ...
உங்களுக்கு பிடித்தமான, உங்களுடைய அந்தஸ்துக்கு பொருத்தமான ஒருத்தியை
மணந்து கொள்ளுங்கள்.
இந்த சது உங்களுக்கு இல்லை. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
குட் பை...” என்றவள் அடுத்த நொடி அவன் கையை
இழுத்து, அதில்
இருந்த அந்த பட்டணை தட்ட, உடனே கதவு திறந்து கொண்டது.
அடுத்த நொடி தன் கைப்பையை எடுத்து கொண்டு, விடுவிடுவென்று அந்த அறையை விட்டு வெளியேறி இருந்தாள் சத்யா.
அவளின் வார்த்தைகளில் திடுக்கிட்டு அதிர்ந்து
போனவன், அவள்
செல்வதையே பாவமாக, வேதனையுடன், வெறித்து
பார்த்துக் கொண்டு சிலையென நின்றிருந்தான் ஆரவமுதன்..!
Mam what is this. Sathya kovapadaranga
ReplyDelete