காந்தமடி நான் உனக்கு!!-29

 


அத்தியாயம்-29

 

ன்ன மிஸ்டர் ஆரவமுதன்? இதெல்லாம் பார்த்ததும் இங்கே எப்படி ஒரு வருடமாக தங்கினோம் என்று அதிர்ச்சியாக இருக்கிறதா? என்றாள் சத்யா நக்கலாக சிரித்தவாறு.

அவளின் அந்த ஆரவமுதன் என்ற விளிப்பு அவன் உயிர்வரை சென்று வலித்தது. அவள் ஆசையாக, காதலுடன் அழைக்கும் அமுதன்... அம்மு... என்ற அழைப்புக்காக ஏங்கி கொண்டிருந்தன அவன் செவிகள்.

“ப்ளீஸ் சது... நான் ஆரவமுதன் இல்லை... அமுதன்... உன் அமுதன். எனக்கு உன் அமுதனாக  வாழத்தான் பிடிக்கிறது . ப்ளீஸ்...கால் மீ அமுதன்...”  என்றான் வேதனையோடு.

“ஹா ஹா ஹா நீங்கள் சொல்றபடி, உங்களுக்கு பிடித்தபடி  எல்லாம் கூப்பிடத்தான் உங்களைச் சுற்றி நிறைய அழகிகள் இருக்காங்களே மிஸ்டர் ஆரவமுதன். அவர்களிடம் சொன்னால்,  அமுதன் என்ன, ஹனி, டார்லிங், பேபி  என்று  விதவிதமாய் கொஞ்சி விட்டு போகிறார்கள்...” என்றாள் குத்தலாக.

அவள் அன்று பார்த்த அந்த நிகழ்ச்சியில், அமுதன் அந்த மாடல் அழகியிடம் சிரித்து பேசியதும், நெருக்கமாக அமர்ந்து கொண்டு கொஞ்சியதும் இன்னுமே அவள் உள்ளே கனன்று கொண்டிருந்தது.

எவ்வளவு முயன்று மறைத்தாலும் அந்த பொறாமை, அவளையும் மீறி அவள் பேச்சில் வந்து இருந்தது. அவளின் அந்த பொறாமையை சரியாக கண்டு கொண்டவன்,  உள்ளுக்குள் ஆனந்தமாய் விசில் அடித்தவன்

“ஹா ஹா ஹா அவர்கள் எல்லாம் என் சதுவாகிட  மாட்டார்கள்...ஹனி...” என்று குறும்பாக கண் சிமிட்டினான் மந்தகாச புன்னகையோடு.  

“அப்படி என்ன இருக்கிறதாம்  இந்த சதுவிடம்.?  நான் ஒன்றும் அழகி இல்லை. உங்கள் அந்தஸ்துக்கு பொருத்தமானவள்  இல்லை. பிறகு ஏன் என்னை தொந்தரவு செய்கிறீர்கள்...? என்றாள் கண்களில் நீர் மல்க.

அவனிடம் பேசிக்கொண்டே அவள் அறைக்குள்ளே வந்திருக்க,  அவனும் அவளை நோக்கி மெல்ல அடி எடுத்து வைத்தவாறு

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை..!
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை..!

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை..!
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை..!

 

என்று மெல்லமாய் அவளைப் பார்த்து பாடியவாறே மெதுமெதுவாய் அடி எடுத்து வைத்து அவளை நோக்கி வர, அவளும் கொஞ்சம் கொஞ்சமாய் பின்னால் நகர்ந்தாள்.

ஒரு கட்டத்தில், அதற்கு மேல் நகர முடியாமல் சுவற்றின் மேல் இடித்துக் கொண்டு நிற்க,  அவனும் அவளை நெருங்கி இருந்தவன், அவள் சாய்ந்திருந்த சுவற்றில்,  அவளின் இருபக்கமும் கையை ஊன்றி அவள் அசையாதவாறு லாக் செய்தவன்,  அவள் கண்களுக்குள் தன் கண்களை கலக்க விட்டான்.

அவள் கருவிழிக்குள் ஊடுருவி ஆழ்ந்து  பார்க்க, அந்த பார்வையில் கொட்டி கிடந்தது அத்தனை அத்தனையாய் காதல், ஏக்கம், தவிப்பு எல்லாம்.

அவன் விழிகளை சந்திக்க முடியாமல் அவள் தலை தானாக தரையை பார்த்தது. அவள் முகத்தில் வந்து விழுந்திருந்த சிறு முடியை ஒதுக்கி, அவள் காதுக்கு பின்னால் சொருகியவன் அவளையே தாபத்துடன் பார்த்து  

“நான் ஏன் உன்னை தொந்தரவு செய்கிறேன் என்றுதானே கேட்டாய் கண்மணி... ஏனென்றால்  

பாயுமொளி நீ எனக்கு... பார்க்கும் விழி நான் உனக்கு...

தோயும் மது நீ எனக்கு... தும்பியடி நான் உனக்கு...

வாயுரைக்க வருகுவதில்லை வாழிநின்றன் மேன்மை எல்லாம்

தூய சுடர் வானொலியே... சூரையமுதே கண்ணம்மா...!

 

வீணையடி நீ எனக்கு... மேவும் விரல் நானுனக்கு...

பூணும் வடம் நீ எனக்கு... புது வைரம் நான் உனக்கு...

காணுமிடந்தோறும் நின்றான் கண்ணினொளி வீசுதடி...

மானுடைய பேரரசே வாழ்வு நிலையே கண்ணம்மா...

 

மீண்டுமாய் பாரதியின் காதல் வரிகளை அனுபவித்து, ரசனையுடன் அவளை ரசித்தபடி பாடினான்.

அப்பொழுது வந்திருந்தது அந்த வரி...

“காதலடி நீயெனக்கு...” என்று அவள் முக வடிவை தன் ஒற்றை விரலால் அளந்தவாறு வேண்டும் என்றே அந்த இடத்தில் நிறுத்தினான் தன் காதலை எல்லாம் குரலில் தேக்கி, அவளை தாபத்தோடு பார்த்தவாறு.  

எத்தனை முறை பாடி இருக்கிறான் இந்த பாடலை. ஒவ்வொரு முறை பாடும்பொழுதும் அவன் உள்ளே புதுவெள்ளம் ஊற்றெடுத்து பொங்கி பெருகும்.

ப்பா... என்ன வரிகள்...எத்தனை எத்தனையாய் அர்த்தங்கள். எந்த அளவுக்கு தன் கண்ணம்மாவை ரசித்து எழுதியிருப்பான் அந்த முண்டாசு கவி...” என்று பலமுறை வியந்து போய் இருக்கிறான் அமுதன்.

இருவருக்கும் இடையில் காதல் கசிந்துருகும் வேளையில் தன்னை மறந்து இந்த பாடலை பாடுவான் அமுதன். பெண்ணவளுக்குமே அவனின் வசீகர காந்த குரலில், இந்த பாடலை பாடச்சொல்லி கேட்க ரொம்பவும் பிடிக்கும்.

அடிக்கடி அவனை கட்டாயபடுத்தி பாடச்சொல்வாள். அவனும் சிரித்து கொண்டே சலைக்காமல் அவளுக்காய் பாடி இருக்கிறான்.

இன்று அவளாக கேட்கவில்லை. ஆனால் அவனாக ஆரம்பித்து இருந்தான். தன் ஆறுமாத கால பிரிவை, தவிப்பை, அவளை காணாத ஏக்கத்தை எல்லாம் அவளிடம் கொட்டிவிடும் வேகத்தில் ரசித்து, ருசித்து பாடினான் அந்த வரிகளை... .

அவளும் தலை குனிந்தபடியே, தன்னையும் மறந்து அவன் பாடுவதையே மையலுடன் பார்த்து கொண்டிருந்தாள் ஒற்றை கண்ணால்.  

“காதலடி நீயெனக்கு...” என்று நிறுத்தியவன், அவள் வழக்கமாக சொல்லும் அவளுடைய வரியை சொல்லுவாள் என்று ஆர்வத்தோடு எதிர்பார்க்க, அவன் பாரதியின் வரிகளை பாட ஆரம்பித்ததுமே தன் வசம் இழந்து கொண்டிருந்தாள்.

அவளின் இதழ்களும் அவன் எதிர்பார்த்ததை போல “காந்தமடா நீயெனக்கு...”  என்று சொல்லத்தான் தவித்தது. ஆனால் அதை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள்.

தன் கீழ் உதட்டை பற்களால் அழுந்த கடித்தபடி., தலையை இன்னுமாய் தாழ்த்திக் கொண்டாள். அவனோ சிறு ஏமாற்றம் தலை தூக்கி, ஆனாலும் அதை பின்னுக்கு தள்ளி, அந்த பாடலை தொடர்ந்து பாடினான்.  

காதலடி நீயெனக்கு...காந்தமடி நானுனக்கு...”  என்றவன், தாழ்ந்திருந்த அவள் தலையை,  அவளின் மோவாயை, தன் ஒற்றை விரலால் பற்றி நிமிர்த்தியவன்,  பற்களால் அழுந்தக் கடித்து இருந்த அவளின் செவ்விதழ்களை மெதுவாய் பிரித்தான்.

திரண்ட ஆரஞ்சு சுளையாய் பளபளத்துகொண்டிருந்த அவளின் கொவ்வை இதழை,  தாபத்துடன் தன் கட்டை விரலால் வருட, பெண்ணவளோ  கொஞ்சம் கொஞ்சமாய் தன் வசம் இழந்து கொண்டிருந்தாள்.

அவனின் காந்தமாய் கட்டி இழுக்கும் வசீகர குரலைக் கேட்டதுமே மெழுகாய் உருக ஆரம்பித்திருந்தாள்.

இப்பொழுது அவனின் இந்த நெருக்கமும்,  தாபத்துடனான அவனுடைய சூடான மூச்சுக் காற்றும், அவனிடமிருந்து  வந்த அவன் வாசமும்,  அவளை மொத்தமாய் வீழ்த்திக் கொண்டிருக்க, பெரும்பாடு பட்டு தன்னை முயன்று கட்டுப்படுத்தி கொண்டிருந்தாள் சத்யா.

மீண்டும் மீண்டுமாய் அந்த பாரதியின்  கவிதையை பாட,  

“வீணையடி நீ எனக்கு...  மேவும் விரல் நானுனக்கு...”  என்று இப்பொழுது அவள் இடையில் கை வைத்து, மெல்லமாய், ஒரு வீணையாய் அவளை விரலால் தீண்ட, அதில் கொஞ்சம் இருந்த கட்டுப்பாடும் தளர்ந்து போக,  அவள் இதழ்கள் வெளிப்படையாகவே அவனுக்காக தவிக்க ஆரம்பித்தன.

தன் அணைப்புக்காக தவித்த அவளின் செவ்விதழ்களை கண்டு,  அதில் இன்னுமே பித்தாகி போனவன், மேலும் மேலும் அவளை மென்மையாய் தீண்டியவாறு,  அந்த கவிதையை ரசித்து பாட, ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் போனவள்

“அம்மு....” என்று கதறியவள்,  தன்னை மறந்து , அவன் டீஷர்ட் ன் காலரை பிடித்து அவள் பக்கமாய் இழுத்தவள்,  அடுத்த நொடி அவனை இறுக்கி கட்டிக் கொண்டாள் சத்யா.

அவ்வளவுதான்...அவ்வளவே தான்...இதற்காகத்தானே  காத்துக் கொண்டிருந்தான் அவளவன். அவளாகவே தன்னை வந்து அணைத்துக் கொள்ள வேண்டும் என்று தானே  ஆவலுடன் எதிர்பார்த்திருந்தான்.  

அவளின் இந்த அணைப்புக்காகத்தானே அவன் ஆறுமாதமாய் தவம் இருக்கிறான். அத்தனை வேலை பளுவிலும் அவளின் இந்த அணைப்பை எண்ணித்தானே நாட்களை கடத்தி கொண்டிருந்தான்.

தன்னவளின் இந்த கரை காணாத, காதலுடனான அணைப்பு, அவன் உயிர்வரை சென்று ஊடுருவி பரவ, அடுத்த நொடி காட்டாற்று வெள்ளமாய் அவன் உள்ளே கரைபுரண்டு பொங்கி பெருகி வந்தது அவன் காதல்.

சற்றும் தாமதிக்காமல், அவள் முகத்தை நிமிர்த்தி,  முகமெங்கும் முத்த மழை பொழிந்தான்.  

கடந்த ஆறு மாத கால ஏக்கத்தை எல்லாம் அந்த நொடியில் தீர்த்து கொள்பவனாய்,  ஒரு இடம் பாக்கி இல்லாமல்,  அவளை முத்தத்தில் குளிப்பாட்ட,  அவளும் அவனின் அதிரடி வேகத்தில் இன்னுமே கரைந்து போனாள்.

அவள் கரங்கள் தானாக உயர்ந்து,  அவனின் பரந்த முதுகில் தவழ்ந்த படி அவனை இறுக்கி தன்னோடு சேர்த்து கட்டிக் கொள்ள,  அதில் இன்னும் மோகம் கொண்டவன்,  அடுத்த நொடி தனக்காக தவித்துக் கொண்டிருந்த அவளின்  மாதுளை இதழ்களை தன் வசப்படுத்திக் கொண்டான்.  

அந்த இதழ் அணைப்பு இருவருக்குமே தேவையாக இருந்தது.

எத்தனை நாட்கள் அவனுக்காக ஏங்கி தவித்திருக்கிறாள்? அவனுக்கு என்ன ஆனதோ  என்று வேதனைப்பட்டு எத்தனை இரவுகள், உறக்கமில்லாமல் தவித்திருக்கிறாள்.  

அதற்கெல்லாம் மருந்தாக, தன்னவனை காணாமல் அவளை ஆட்கொண்டு இருந்த பசலை நோய்க்கு மருந்தாக,  தன்னவனின் அந்த இதழ் அணைப்பு அவளுக்குமே  தேவையாக இருந்தது.

அவளுடைய தவிப்பை எல்லாம் அவனிடம் கொட்டி விடும் வேகத்தில்,  அவளும் அவனின் அழுத்தமான இதழ்களை கவ்விக் கொள்ள,  இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டியாய்,  இதழ் யுத்தத்தில் தீவிரமாகி, ஒருவர் இதழுக்குள் ஒருவர் கலந்து, கரைந்து,  களித்தனர்.

நீண்ட நேரம் நீடித்தது அவர்களின்  அதரங்களின் போராட்டம்.  முடிவே இல்லாமல், இருவரின் இதழ்களுக்கு இடையேயான போட்டி, நீண்டு கொண்டிருக்க, சற்று நேரத்தில் மூச்சுக் காற்றுக்காக திணற ஆரம்பித்தாள் பெண்ணவள்.

அவளின் நிலையை கண்டவனும் மனமே இல்லாமல் மெதுவாக அவளை விட்டவன்,  ஒரு நொடி அவள் ஆசுவாசப் படுத்திக் கொண்டதும் மீண்டும் அவளின் இடையில் அழுத்தத்தைக் கொடுத்து முன்னே இழுத்து மீண்டுமாய் அவளை இறுக்கி அணைத்து கொண்டவன், அவளின் செவ்விதழை மீண்டும் சிறை பிடித்துக் கொண்டான்.  

அவனின் வேகம் கண்டு பெண்ணவளும் திணறிப் போனாள். அவள் பார்த்து பழகி இருந்த அமுதன் ரொம்பவும் மென்மையானவன். அவள் இறுக்கி கட்டி கொண்ட பொழுதும் கூட, அவன் மைமையாகத்தான் அணைத்துக் கொள்வான்.

ஆனால் இப்பொழுதோ முரட்டுதனமாய் அவளை இறுக்கி அணைத்து கொண்டவள், அவள் இதழிலும் அவனுடைய வன்மையைத்தான் காட்டி இருந்தான்.

அவ்வள்வு ஏக்கம், தவிப்பு... அதுதான் தன்னை மறந்து, அவளின் மென்மையை மறந்து, தன் வன்மையை அங்கே வெளிக்கொணர்ந்து இருந்தான்.  

ரு வழியாக,  நீண்ட நேரம் கழித்து,  இதுவரை அவளுக்காய் தவித்த அவன் மனம் அமைதியடைய, அவன் தாபமும், மோகமும் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து இருக்க,  அவளை தன் பிடியிலிருந்து மெல்ல விடுவித்தவன், மீண்டுமாய் அவள் முகத்தை கையில் ஏந்தி  

“ஐ லவ் யூ கண்மணி... லவ் யூ சோ மச்...லவ் யூ செல்லம்மா....”  என்று மீண்டும் முத்த மழை பொழிந்து அவளை மீண்டுமாய் இறுக்கி அணைத்துக் கொள்ள,  அப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவுக்கு வந்திருந்தாள்  சத்யா.

அடுத்த கணம், அப்பொழுதுதான் அவள் செய்து வைத்த செயல் நினைவு வந்தது. அவள் எண்ணியிருந்தது என்ன? இப்பொழுது நடந்து கொண்டது என்ன ? என்று அவளுக்கே ஆத்திரமாக வந்தது.

தன்னைத்தானே திட்டிக் கொண்டவள், அடுத்த நொடி தன் உடலை இறுக்கிக் கொண்டு,  முகத்தை கடினமாக்கியவள்,  தன் பலம் கொண்ட மட்டும் திரட்டி அவனை பிடித்து பின்னுக்கு தள்ளினாள்.

அவனிடம் இருந்து துள்ளி குதித்து விடுபட்டு,  மீண்டும் அவனை  ஒரு கோபப் பார்வை பார்த்து விட்டு,  கடகடவென்று மாடி இறங்கி கீழே ஓடி விட்டாள்...

அமுதனோ  அதிர்ச்சியில் உறைந்து போய் நின்று இருந்தான்.  

“இவ்வளவு நேரம் நல்லா தானே இருந்தா...திடீர்னு என்ன ஆனது?”   என்று குழம்பிப் போக,  அதே குழப்பத்திலேயே தன் பின்னந்தலையை விரல்களால் கோதியவாறு, யோசனையுடன் கீழே இறங்கி வந்தான் அமுதன்..!


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!