புத்தகம் மூடிய மயிலிறகே...!
அன்பான வாசக
தோழமைகளே!,
அனைவருக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
இந்த வருடம் அனைவருக்கும் சிறப்பாய்
அமைய எனது வாழ்த்துக்கள்!!
என்னுடைய புதிய நாவல் புத்தகம் மூடிய மயிலிறகே...! Amazon ல் தற்பொழுது வெளியாகி உள்ளது. நேரம் இருந்தால் என்னுடைய இந்த புதிய நாவலை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.
காதல் என்றால் எட்டிக்காயாக முகத்தை சுளிக்கும் நாயகியையும், காதலை ஆராதித்து, இனிக்க இனிக்க திகட்ட திகட்ட காதலிக்கும் நம் நாயகனையும் சேர்த்து வைத்து மதிப்பிற்குரிய திருவாளர் விதியார் ஆடும் ஆட்டம் தான் புத்தகம் மூடிய மயிலிறகே...!
கதை சுருக்கம்:
நாயகி
மிருணாளினி: காதல் மீது நம்பிக்கை இல்லாதவள். காதலை வெறுப்பவளும் கூட.
சந்தர்ப்பவசத்தால் எழுத்தாளர் மானசீகன் நாவல்களை படிக்க நேரிடுகிறது. மானசீகன்
நாவல்கள் அனைத்தும் காதலை ஆராதித்து, இறந்து போன தன் காதலிக்காக எழுதியவை.
அவனுடைய
சுயசரிதையை படித்தவள், தன்னை மறந்து அவனுடைய எழுத்தில் மயங்கி போகிறாள். அவன் நாவல்களை படித்த
பிறகு, அவன் காதலி மீது கொண்ட வெறித்தனமான காதலை கண்ட பொழுது, அவளுக்கும் காதல் மீது ஒரு
ஆர்வம் வந்துவிடுகிறது.
தானும்
காதலித்து பார்க்க வேண்டும் என்ற குறுகுறுப்பு அவள் உள்ளே.
விதிவசத்தால், தன்னை கவர்ந்த அந்த எழுத்தாளனையே காதலிக்க
ஆரம்பித்து விடுகிறாள். ஆனால் விதியார் போட்டு வைத்த திட்டம் வேறாயிற்றே...!
வெறும்
புத்தகங்களின் மூலமாக அறிமுகமானவனை நேரில் சந்திக்க முயல்கிறாள் மிருணா. ஆனால்
தன்னை பற்றி எந்த ஒரு தகவல்களையும் பகிர்ந்து இருக்கவில்லை மானசீகன். அதனால்
அவளால் அவனை சந்திக்க முடியாமல் மனதுக்குள்ளேயே தன் காதலை வளர்த்து வருகிறாள் அந்த
பேதைப்பெண்.
விதியார்
அத்தோடு விட்டுவிடாமல் அவளை இன்னும்
கொஞ்சம் சீண்டி பார்க்கிறார். அவள் வாழ்வை பவித்ரனோடு இணைத்து விடுகிறார். சூழ்நிலை கைதியாகி, தன் பெற்றோருக்காக பவித்ரனை
மணந்து கொள்கிறாள் மிருணா.
ஆனாலும் அவள்
மனம் பவித்ரனிடம் ஒட்ட வில்லை. தன் காதலனை தொடர்ந்து தேடி கொண்டிருக்கிறாள்.
தன் மனம்
கவர்ந்தவனை கண்டு பிடித்து அவனோடு இணைந்தாளா? இல்லை... மஞ்சல் கயிறு மேஜிக் என்பதுபோல தன் கணவனை ஏற்று கொண்டு அவனோடு
இணைந்தாளா என தெரிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்.
காதலனா,
கணவனா என்று தடுமாறும் ஒரு பேதை பெண்ணின் கதை. இந்த கதையும் உங்கள் மனதுக்குப்
பிடித்த இனிமையான குடும்பம்+ காதல் கலந்த ஜனரஞ்சக கதைதான்...
எனது இந்த கதைக்கும் உங்களுடைய ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து என்னை உற்சாகப் படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.. தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.. Happy Reading!!! -அன்புடன் பத்மினி செல்வராஜ்...
இந்த கதையை Amazon ல் படிக்க, கீழ உள்ள லிங் ஐ கிளிக் பண்ணுங்கள்...
https://www.amazon.in/dp/B092HMNLS1
********
Mam entha story unga bloggerla varatha
ReplyDeleteHi pa, will upload later. It will take some time
Delete