உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-29



அத்தியாயம்-29


(மற்ற அத்தியாயங்களை படிக்க, இங்கே கிளிக் செய்யுங்கள்...) 

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே- அத்தியாயங்கள்

வித்ராவிடம் கத்திவிட்டு வேகமாக வெளியில் வந்தவன் வாசல் தாண்டி வர,

“ஹே.!! மாமா வந்தாச்சு.. “ என்று அந்த கேங் ஓடி வந்து அவனை சூழ்ந்து கொண்டனர்...

அதிலும் அந்த குட்டிபெண் அவன் முன்னே வந்து

“வாவ்... சூப்பரா இருக்கீங்க மாமா... எங்க பவித்ராவுக்கு பெர்பெக்ட் மேட்ச்...என்னை தூக்கறீங்களா?? என்று அவன் கையை பிடித்து ஆட்டினாள்.. இவள்தான் முன்பு பவித்ரா கொஞ்சி கொண்டிருந்தவள் என புரிந்தது...அவளின் அந்த மழலையை கேட்டு அவனிடம் இருந்த கோபம் எல்லாம் பறந்து போனது...

உடனே குனிந்து அந்த குட்டியை தூக்கி கொண்டான்... அவன் தூக்கியவுடன் அவன் கன்னத்தில் முத்த மிட்டாள்... அவளின் அந்த மென்மையான முத்தம் அவனுள் கொதித்து கொண்டிருந்த மிச்சமிருந்த கோபத்தையும் அணைத்தது...

அந்த பிஞ்சு கையால் அவன் முகத்தை பிடித்து அந்த குட்டி முத்தமிட, அப்படியே உருகி போனான்.. அவனும் திருப்பி அவளின் பட்டு கன்னத்தில் முத்தமிட்டான்... பின் உன் பெயர் என்ன?? என்றான்

“என் பேர்.. அபி... அபிநயா... “

“நைஸ்  நேம்.. “ என்றான்

“ தாங்க்ஸ் மாமா.. ஆமா உங்க பேர் என்ன??”  என்றாள் மிடுக்காக

“ஆதித்யா... ஆதித்யா நிஷாந்த்... “என்று சிரித்தான்..

“வாவ்.. நைஸ் நேம்.. “என்று அவளும் திருப்பி சொன்னாள்..

பின் அவனை பார்த்து

எங்க பவித்ரா ரொம்பவும் நல்லவ.. அவளை நல்லா பார்த்துக்குவீங்களா?? “என்றாள் பெரிய மனுசியாக...

“கண்டிப்பா.. உங்க பவித்ரா வை நான் நல்லா பர்த்துக்கறேன்.. “ என்று அவளை தூக்கி சுற்றினான்... அத கண்டு கிளுக்கி சிரித்தாள் அந்த அபி குட்டி...

பின் அவளை கீழ விட்டவன்

“ஹாய் ஃப்ரெண்ட்ஸ்.. என்ன எல்லாரும் ஒன்னா நின்னுகிட்டு இருக்கீங்க.. என்ன வேணும்.. “ என்றான் மற்ற பசங்களை பார்த்து..

அதை கேட்டு அனைவரும் தலையை சொரிய, அந்த அபிகுட்டி மட்டும் தைரியமாக முன்னே வந்து

“மாமா... ஒரு சின்ன ஹெல்ப்.. எங்களை எல்லாம் உங்க கார்ல கூட்டி கிட்டு போறீங்களா??.. அத கேட்கத்தான் தயங்கி நிக்கறாங்க.. “ என்று சிரித்தாள்..

அவளின் அந்த  பயம் இல்லாத தைரியத்தை  கண்டவன் அப்படியே குட்டி பவித்ராவை ப் பார்ப்பதை போல இருந்தது அவனுக்கு....எல்லாம் அந்த குட்டச்சியோட ட்ரெயினிங் ஆ தான் இருக்கும் .. “ என்று சிரித்தவன் அந்த அபி குட்டியின் தோரணயை  ரசித்தவாறே

“ஹ்ம்ம்ம் ஸ்யூர்.. வாங்க போகலாம்.. ஆனா இந்த ரோட்ல ஓட்டறது தான் கஷ்டமா இருக்கே.. “என்றான் யோசித்தவாறு...

“ மாமா எனக்கு வேற ஒரு வழி தெரியும்... அதில போனா உங்க கார் ஈசியா போய்டும்.. என்று குதித்தான் பவித்ராவை கல்யாணம் பண்ணிக்கறேனு சொன்ன அந்த பொடியன்.. ..

“சரி...வாங்க..”  என்று சிரித்தவாறு  கிளம்பவும் பார்வதி பக்கத்து வீட்டில் இருந்து வந்தார்...

 தன் மாப்பிள்ளையை இந்த கேங் உடன் காண, சிரித்துகொண்டே வந்தவர்,

“டேய் வாலுங்களா.. அதுக்குள்ள வந்திட்டீங்களா?? .. மாமா வை டிஸ்டர்ப் பண்ணக் கூடாது னு  சொல்லி இருந்தேன் இல்ல.... எல்லாரும் போங்க.. “என்று விரட்டினார்..

எங்க தன் மாப்பிள்ளை இந்த பசங்க கேட்டதுக்கு தப்பா எடுத்துக்குவாரோ  அவங்களை எல்லாம் மிரட்டி விடுவாரோ என்று பயந்தே அவர்களை விரட்டினார்.. ,

“இருக்கட்டும் அத்தை.. சின்ன பசங்க கேட்கறாங்க.. நான் ஒரு ரவுண்ட் இவங்களை கூட்டிகிட்டு போய்ட்டு வர்ரேன். “என்று சிரித்தவாறு ஆதி கார் கதவை திறக்க, அடுத்த நொடி

“ஹே...”  என்று கத்திகொண்டே எல்லா வாண்டுகளும் காருக்குள் பாய்ந்தனர்... அவனும் பொறுமையாக அனைவரையும் இருக்கையில் அமர வைத்து, பின் காரை கிளப்பினான்...

அந்த சிறுவர்கள் வெளியில் கையை நீட்டி பார்வதிக்கு டாட்டா காட்ட அவருக்கு இன்னும்  மனம் நிறைந்து இருந்தது.. இப்படி எல்லாருடன் இயல்பா இருக்கிறாரே தன் மப்பிள்ளை.. என்று..

அதே பூரிப்புடன் வீட்டிற்கு உள்ளே சென்றார்... அங்கு பவித்ரா தயாராகி ஹாலில் அமர்ந்து இருந்தாள்...

அவளிடம்  சென்றவர் அவள் அருகில் அமர்ந்து கொண்டு தன் மாப்பிள்ளையை பற்றி புகழ்ந்து தள்ளினார்...

“எவ்வளவு பெரிய ஆள்.. இந்த சின்ன பசங்க கேட்டாங்கனு கூட்டிகிட்டு போய்ட்டாரே..!!  உனக்கு தெரியுமா பவி.. அந்த பக்கத்து வீட்டு மாப்பிள்ளை போன வாரம் புதுசா கார் வாங்கியிருந்தாரம்.. இங்க கொண்டு வந்து நிறுத்த ஒரு பொடியன் போய் தொட்டு பார்த்திருக்கான்.. அதுக்கே அவர் அவனை திட்டி மிரட்டி அனுப்பிட்டாராம்...

ஆனா பாரு உன் புருஷன் கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் அந்த பசங்களுக்கு சரியா பேசறார்... நீ ரொம்ப கொடுத்து வச்சவ பவி.. “ என்று புகழ்ந்து தள்ள, அதை கேட்டு பவித்ராவுக்கு முதலில் கடுப்பானாலும் அவர் சொல்வதில் இருந்த உண்மை புரிந்தது...

இதுவரை எல்லாம் நல்லாதான் அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு இருந்தான்.. ஏன் இந்த பவர்கட் ல கூட முதலில் கொஞ்சம் முறைத்தாலும் அப்புறம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு தூங்கினானே..

அவங்க வீட்ல எல்லா இடத்துலயும் ஏசி லயே அதுவும் பாத்ரூம் ல கூட ஏசி ல இருந்தவன் இங்க எப்படி அட்ஜஸ்ட் பண்ணினான்..??  ஹ்ம்ம்ம் எல்லாம் நல்லாதான் போய்கிட்டு இருந்துச்சு... கடைசியா நடந்தது தவிர...

அவன் ஏன் அப்படிபண்ணினான்?? என்று யோசித்தவளுக்கு விளங்கியது..

“நான் அரைகுறையா அவன் முன்னாடி நிக்கவும் தான் அப்படி நடந்துகிட்டான்.. நானே அவனை தூண்டி விட்ட மாதிரி...

“சே!! எல்லாம் என் தப்பு.. நான் பாட்டுக்கு அம்மா ரூம்க்கு வந்து இந்த புடவையை கட்டியிருந்தால் இந்த தொல்லையே வந்திருகாது... “ என்று எல்லாம் தன் தப்பே அவன் மேல் தப்பு இல்லை என்று அவள் மனசாட்சி அவனுக்காக வாதாடியது... கடைசியில் அவள் மனசாட்சி ஜெயிக்க, அவன் மேல் இருந்த கோபம் குறைய ஆரம்பித்தது...

வெளியில் சென்றவன், சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த காரில் இருந்த அந்த பசங்க சந்தோஷமாக குதித்து இறங்கி வந்தனர்... ஒவ்வொருத்தர் கையிலும்  லார்ஜ் சைஸ் பீட்சாவும் ஐஸ்கிரீமும் இருந்தது.. அனைவர் முகத்திலும் அவ்வளவு சந்தோஷம்...எல்லாரும்

“தேங்க்ஷ் மாமா...” என்று கத்திவிட்டு அவரவர் வீட்டிற்கு ஓடினர்..

ஆதி அவர்கள் வீட்டிற்கும் தரட்டும் என்றே பெரிய பீட்சா வாங்கி கொடுத்திருந்தான்.. எல்லாரும் அவர்கள் வீட்டிற்கு சென்று விட, அபி குட்டி மட்டும் அவன் கை விரலை பிடித்து கொண்டு பவித்ரா வின் வீட்டிற்குள்ளே வந்தாள்...

கோபமாக வெளியில் சென்றவன் எப்படி வரப் போகிறானோ?? எப்படி தன் அம்மா முன்னாடி நடந்துகொள்ளப் போகிறானோ??  என்று பயந்து கொண்டிருந்தவளுக்கு அவன் அபி குட்டியின் கையை பிடித்து கொண்டு சிரித்த முகமாக வரவும் கொஞ்சமாக அவன் மீது இருந்த மீதி கோபமும் பறந்து போனது...

அதுவும் அவனின் பெரிய வளர்ந்த உயரத்துக்கு இந்த குட்டி அபி  இன்னும் குட்டியாக தெரிந்தாள்.. அதை பார்க்கையில் யானையும் சுண்டெலியும் கை கோர்த்து வருவதை போல இருந்தது.. அதை கண்டவளுக்கு சிரிப்பு வர ,வேகமாக சிரித்தாள் அடக்க முடியாமல்..

பார்வதிக்கும் அதுவே தோண , அவரும்  சிரிப்பை அடக்க முடியாமல்  சிரித்து விட்டார்...

பவித்ராவிடம் கத்திவிட்டு சென்றவன்  அவள் என்ன பண்ணிகிட்டிருப்பாளோ என்று பயந்து வந்தவனுக்கு அவளின் அந்த மலர்ந்த  சிரித்த முகத்தை கண்டதும் நிம்மதியானான்...அவளின் அந்த சிரிப்பையே ரசித்தான் ஓரக்கண்ணால்....

உள்ளே வந்த அபி பவித்ராவை கண்டதும் ஆதியின் விரலை விட்டு பவித்ராவிடம் ஓடினாள் .. பின் பவித்ராவை பார்த்து

“பவித்ரா... உன் மாமா சூப்பர் மாமா தெரியுமா.. எல்லாரையும் கார் ல கூட்டிகிட்டு போய்ட்டு, எல்லாருக்கு ஐஸ்கிரீம், பீட்சாவும் வாங்கி கொடுத்தார்..அதில்லாமல் எவ்வளவு உயரமா இருக்கார் தெரியுமா... ஹீரோ மாதிரி.... எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... இவர எனக்கு கொடுத்திடறியா..   “என்று சிரித்தாள் குறும்பாக  ...

“வாடி.. எனக்கு இருக்கிறதே ஒரே ஒரு புருஷன்.. அவரையும் உன்கிட்ட கொடுத்துட்டு நான் யார் கூட சண்டை போடறதாம்.. அதெல்லாம் முடியாது.. “ என்று சிரித்தாள் பவித்ரா ஓரக்கண்ணால் அவனை பார்த்தவாறு...

“ஹ்ம்ம்ம் அப்பனா நீயும் நானும் 50 50 வச்சுக்கலாம்... என்ன டீலா நோ டீலா?? “ என்றாள் மார்பின் குறுக்கே கை யை கட்டி கொண்டு தன் புருவத்தை உயர்த்தினாள் அபி ...

அவளின் அந்த நடிப்பு அப்படியே பவித்ராவை ஞாபகம் படுத்த  அந்த குட்டியின் நடிப்பை வியந்து பார்த்துகொண்டே அவர்கள் அருகில் வந்தான் ஆதி

ஏன் டீ... முளச்சு மூனு இலை கூட விடலை.. அதுக்குள்ள என் புருஷனை பங்கு போடறியா.. அதெல்லாம் கொடுக்க முடியாது போடி... “ என்று அபியை மிரட்டினாள் செல்லமாக..

அதற்குள் ஆதி அருகில் வந்து ஷோபாவில் அமர்ந்து கொண்டு அபியை தூக்கி மடியில் வைத்து கொண்டு,

“அபி குட்டி.. அந்த பவித்ரா நான் சொன்ன பேச்சை கேட்க மாட்டேங்கறா..   நான் எது கேட்டாலும் கொடுக்க மாட்டேங்குறா.. நீ தான் சமத்து .. நான் கேட்கறதுக்கு முன்னாடியே கொடுக்கிற.. அதனால அந்த பவித்ரா வேண்டாம்... உன்னை மட்டும் நான் கட்டிக்கிறேன்.. “ என்றான் அவளை ஓரக்கண்ணால் பார்த்தவாறே..

அதை கேட்ட அபி

“அப்படியா மாமா?? .. இல்லையே!!  பவித்ரா நல்லவளாச்சே.. யார் என்ன கேட்டாலும் கொடுத்துடுவாளே.. அப்படி என்ன நான் கொடுத்தது அவ கொடுக்கல?? ... “என்று தாடையில் ஒரு விரலை வைத்து அழகாக யோசித்தாள்.. பின் நினைவு வந்தவளாக,

“ஆ கண்டுபிடிச்சுட்டேன்... நான் வாசல்ல நீங்க கேட்காமலே முத்தம் கொடுத்தேன்... அப்பனா பவித்ரா உங்களுக்கு நீங்க கேட்டும் கிஸ் பண்ணலையா??  என்றாள் சந்தேகமாக

அதை கேட்டு கன்னம் சிவந்தது பவித்ராவுக்கு... அவளின் அந்த சிவந்த முகத்தையே இமைக்காமல் பார்த்தான் அவள் அறியாமல்

“இந்த வாலை இன்னும் கொஞ்ச நேரம் பேச விட்டா என் வீட்டு கதை எல்லாம் தெருவுக்கு இழுத்திருவா போல இருக்கே.. “என்று புலம்பினாள் பவித்ரா.. அதற்குள் ஆதியும் சிரித்துகொண்டே

“ஆமா..  அபி குட்டி...  எல்லாரும் வீட்டுக்கு போய்ட்டாங்களே.. நீ ஏன்  போகலை?? “ என்று பேச்சை மாற்றினான்

“அதுவா மாமா... பவித்ரா  எப்பவும் எங்களுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தா அவளோடத சீக்கிரம் சாப்டிட்டு  என்கிட்ட இருந்து பிடுங்கி சாப்பிடுவா... அவள் சாப்பிட்டு கொடுக்கிற ஐஸ்கிரீம் பயங்கர டேஸ்ட் ஆ இருக்கும் மாமா... அதான் பவித்ராவுக்கு கொடுக்க வந்தேன்.. “என்று சிரித்தாள்..

“ஐயோ.. இந்த குட்டி சாத்தான் இன்னைக்கு ஒரு முடிவோடதான் வந்திருக்கா போல இருக்கே... இப்படி என் மானத்தை வாங்குதே...” என்று மனதுக்குள்    புலம்பினாள் பவித்ரா..

அந்த அபி பவித்ராவிடம் சென்று

“நீ எடுத்துக்கோ பவித்ரா... ஆனால் கொஞ்சமா கடிச்சுக்கோ... “ என்றாள் ஐஸ்கிரீமை பவித்ராவின் முன்னே நீட்டி..

பவித்ரா அசடு வழிந்து அவனை பார்க்க,

“மாமா ஒன்னும் சொல்ல மாட்டர்.. அவர் என் ப்ரெண்ட். நீ எடுத்துக்கோ!! “ என்று நீட்டினாள் அதற்கு மேல் மறுக்க முடியாமல், ஒரு வாய் எடுத்து கொண்டாள்...

பின் “மாமா நீங்களும் எடுத்துக்கஙக.. “ என்று ஆதியிடம் நீட்ட

அதை கேட்டு ஆதி முழித்தான்... பின் தயங்காமல் பவித்ரா கடித்த இடத்திலயே அவனும்  கடித்தான்.. பின் அபியை பார்த்து

“அபி குட்டி... நீ சொன்ன மாதிரி இப்பதான் இந்த ஐஸ்கிரீம் செம டேஸ்ட் ஆ இருக்கு... சோ ஸ்வீட்...  “ என்று பவித்ராவை பார்த்து கண்ணடித்தான்.. அதை கண்டு அவள் தலையை குனிந்து கொண்டாள் தன் கன்ன சிவப்பை மறைக்க..

அதற்குள் அபியின் அம்மா அழைக்க,

“ஓகே... மாமா... நான் போய்ட்டு அப்புறம் வர்ரேன்.. பை மாமா... பை பவித்ரா... “ என்று சிரித்துகொண்டே வாசலுக்கு ஓடினாள் அபிநயா...





Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!