உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-30

 


அத்தியாயம்-30

 

மாப்பிள்ளை..  பவித்ரா கோவிலுக்கு போகணும் னு  சொன்னா..  .. நீங்களும் கூட போய்ட்டு வர்ரீங்கள??  “என்றார் பார்வதி அவர்களின் நாடகத்தை பார்த்து சிரித்து கொண்டே.

“அவர் எதுக்கு மா??  என்று அவசரமாக மறுத்தவளிடம்

“பவித்ரா.. கல்யாணத்துக்கப்புறம் இரண்டு பேரும் ஒன்னாதான் கோவிலுக்கு போகனும்.... “ என்று முடித்தார்..

“ஆகா.. இப்ப இவன எப்படி கோவிலுக்கு இழுத்துட்டு போறது??  என்று யோசித்தாள் பவித்ரா ..

“சரி மாப்பிள்ளை..  நீங்க போய் குளிச்சுட்டு ரெப்ரெஸ் ஆகிட்டு வாங்க.. “ என்றார் பார்வதி..

“அத்தை.. நான் வேற ட்ரெஸ் எதுவும் எடுத்துட்டு வரலை.. “ என்று சமாளிக்க முயன்றான்

“அம்மா கொடுத்ததுல ஜீன்ஸ் ம் டீ ஷர்ட்ம் இருக்கு..அதை போட்டுக்கங்க.. “என்று  முனகினாள் பவித்ரா  அடுத்து தனக்கு வரப்போகும்  ஆப்பை அறியாமல்...

“சரி பவித்ரா.. நீ போய் மாப்பிள்ளைக்கு குளிக்க  உதவி செய்.. “  என்றார்.. அதை கேட்டதும் ஆதியின் மூளையில் மின்னல் வெட்டியது...

“ஹே.. பூனக்குட்டி... என்கிட்டயா நீ சவால் விடுற??  இப்ப இருக்குடி உனக்கு.. “ என்று மனதுக்குள் ஒரு இன்ஸ்டன்ட் திட்டத்தை உருவாக்கினான்

பவித்ராவோ தன் அம்மா சொன்னதை கேட்டு அதிர்ந்து

“நான் எதுக்குமா?? அவரே  குளிச்சுக்குவார்.. “என்று  சொல்ல வந்த பவித்ராவை, பார்வதி முறைக்க , அதன் பின் எதுவும் பேசாமல் அவன் முன்னே  நடந்தாள்...

“சே!!  இந்த அம்மா ரொம்ப தான் மாப்பிள்ளைக்காகனு என்னை படுத்தறாங்க... இவ்வளவு நாளா அவனே தான குளிச்சான்.. இப்ப என்ன நான் போய் உதவி செய்யறது??  இந்த மாப்பிள்ளைங்கனா மட்டும்  என்னதான் இருக்கோ?? .. இந்த மாமியார்ங்க அலப்பறை தாங்க முடியல.... எப்படி எல்லாம் விழுந்து விழுந்து கவனிக்கிறாங்க..

எங்க அம்மாவது பரவாலை.. பக்கத்து வீட்டு மாமி அவர் மாப்பிள்ளை வந்திட்டா அவரை தரையில கூட நடக்க விட மாட்டாங்க.. அப்படி தாங்குவாங்க... அப்படி என்னதான் இருக்கோ இந்த மாப்பிள்ளைங்க கிட்ட...

இதுவே நாங்க மாமியார் வீட்டுக்கு போனா, மாமியாருங்க எங்களை இப்படியா கவனிச்சுக்கிறாங்க?? ஏதோ வேண்டாதவ வந்திட்ட மாதிரி இல்லை பண்ணுவாங்க... எல்லாம் நேரம்.. இது எப்பதான் மாறுமோ??  எப்படியோ எனக்கு அந்த தொல்லை இல்ல“ என்று மனதுக்குள் புலம்பியவாறு நடந்தாள்

தன் அறைக்கு சென்றவள் , குளியலறைக்கு சென்று  அவனுக்கு நீரை பிடித்து வைத்து

“போய் குளிச்சுட்டு வாங்க.. “என்று முறைத்தாள்..

அவனும் விசில் அடித்தபடியே அவளை பார்த்து மர்மமாக சிரித்தபடியே குளிக்க சென்ற ஐந்தாவது நிமிடம்  பவித்ராவை அழைத்தான்..

ஹாலில் தன் அம்மாவுடன் கதை பேசிக்கொண்டிருந்த பவித்ராவும் எழுந்து குளியல் அறைக்கு அருகில் வந்து என்ன வேணும் என்றாள் சிடுசிடுப்புடன்..

“சோப் ஐ காணோம் பேபி.. _” என்றான் சிரிப்பை அடக்கியவாறு

“உள்ள தான் இருக்கு.. நல்லா தேடுங்க.. “ என்றாள்

“ம்ஹும் காணோம்.. நீயே வந்து எடுத்து கொடு.. “  என்றான்..

அவளும் திட்டிகொண்டே உள்ளே  செல்ல அவன்  வெறும் உள்ளாடையோடு நின்று கொண்டிருந்தான்.. அதை  கண்டதும்

“சீ .. கருமம் கருமம் .. என்று  திரும்பிக் கொண்டாள்..ஆனால் அவள் கன்னங்கள் தானாக சிவந்தன அவளையும் மீறி

“ஏய் என்னடி இது என்னவோ அப்படி  திருப்பிக்கற?? ..” என்று அவளிடம் வம்பு இழுத்தான் சிரித்துகொண்டே...அவன் ஏதோ திட்டத்துடன் தான் தன்னை வம்பு இழுக்கிறான் என்று புரிந்து கொண்டவள் அவனிடம் எதுவும் பேசாமல் சோப்பை தேட கடைசி வரைக்கும் அவள் கைக்கு கிடைக்கவே இல்லை...

“நான் குளிக்கிறப்ப இங்க தான இருந்தது.. அதுக்குள்ள எங்க மிஸ் ஆயிருக்கும்?? “ என்று யோசித்தவாறு வெளியில் வந்து  வேறு ஒரு புது சோப்பை எடுத்து வந்தாள்.. அவள் வெளியில் இருந்தவாறே கை நீட்டி கொடுக்கவும்  அவன் அதை  வாங்காமல் நீ உள்ளே வந்து கொடு...” என்று வம்பு பண்ணினான்..

“கடவுளே..  இது என்ன  சோதனை?? இப்படி படுத்தறானே.. “  என்று புலம்பி கொண்டே கண்ணை மூடிக்கொண்டு உள்ளே சென்றவள் அவன் கையில் கொடுக்க அவன் அவள் கையை தொட்டு தடவி அதை வாங்காமல்

“பேபி.. அப்படியே என் முதுகுக்கு கொஞ்சம் சோப் போடேன்.. “ என்றான் உதட்டுக்குள் அடக்கிய சிரிப்புடன்.

“ஆங்.. நாலு முதுகுல போடறேன்.. திரும்புங்க  .. “  என்று முறைத்தாள்..

“ஏய்.. பொண்டாட்டி எல்லாம் புருஷனுக்கு சோப் போட்டு விடுவாங்களாம்..” என்றான் உல்லாசமாய் சிரித்தவாறு

“ஹ்ம்ம்ம் அப்படீனு யார் சொன்னா??” 

“உன்  ப்ரதர்... ப்ரேம் தான் சொன்னான்.. நிறைய தமிழ் படத்துல பார்த்திருக்கானாம்.. எங்க அதே மாதிரி நீயும் எனக்கு போட்டு விடு பார்க்கலாம்.. “ என்றான் அதே குறும்பு சிரிப்புடன்

“உங்க ஃப்ரெண்ட்க்கு வேற  நல்ல படம் எதுவும் கிடைக்கலையா பார்க்க??  அதெல்லாம் படத்துல மட்டும் தான் பாஸ் .. நிஜத்துல யாரும் சோப் எல்லாம் போடறதில்லை.. “ என்று முறைத்தாள்..

“சரி அவங்க போடாட்டி விடு.. நீ போடு..” என்றான் அதே மந்தகாச புன்னகையுடன்..

“அதெல்லாம் முடியாது..” என்று அவள் முறைக்க

“அப்ப இரு என் மாமியார் கிட்டயே  நியாயம் கேட்கலாம்..அவங்கதான் சொல்லியிருக்காங்க நீ  எனக்கு ஹெல்ப் பண்ணனும் னு..”.என்றவன் அத்தை.. என்று மெதுவாக கத்த ஆரம்பிக்க உடனே அவன் வாயை தன்  கையால் பொத்தினாள் ..

“ஹ்ம்ம் அது..  அந்த பயம் இருக்கட்டும் .. “ என்று மனதில்  சிரித்து கொண்டான்

அந்த சோப்பை எடுத்தவள் “குனிஞ்சு தொலைங்க “என்று திட்டியவாறு

அவன் முதுகுக்கு சோப் போட்டு தேய்த்தவாறே, பரந்திருந்த அவனின் முதுகை கண்டு ஏதேதோ கற்பனைகள் வர,  அவள் கன்னம் சிவந்தது...  அவன் திடீரென்று கொஞ்சம் நகரவும் கனவுலகில் இருந்தவள் வழுக்கி அவன் மேலயே   விழுந்தாள்..

“ஹே பாத்துடி.. “என்று சிரித்தவாறு இதுதான் சான்ஸ் என்று  அவன் திரும்பி எட்டி அவளை பிடிக்கும் முன்னே சுதாரித்து கொண்டவள், குனிந்து அவன் கைக்கு எட்டாமல் வெளியில் ஓடி விட்டாள்..

வெளியில் சென்று நின்று கொண்டவள் தன் கட்டை விரலை ஆட்டி அவனுக்கு பழிப்பு காட்டி,

“அவ்வளவு தான் பாஸ்.. குளிச்சது போதும்.. சீக்கிரம் வாங்க.. “என்று வெளியில் இருந்து கத்தி விட்டு ஹாலுக்கு வந்து தன்  அம்மாவிடம் முன்பு விட்டு சென்ற கதையை தொடர, அடுத்த  5 வது நிமிடத்தில் மீண்டும் அழைத்தான்..

அதை கண்ட பார்வதி

“பவி.. மாப்பிள்ளை குளிக்கிற வரைக்கும் நீ அங்கயே இருந்து எல்லா ஹெல்ப் ம் பண்ணிட்டு வா.. சும்மா சும்மா கூப்பிட்டுகிட்டு இருக்கார் பார்.. “ என்று நமட்டு சிரிப்பை சிரித்தார்...

அதை  கேட்டு அசடு வழிந்தாள் பவித்ரா.. அவன் மீண்டும் அழைக்கவும்

“இவன் தொல்ல தாங்க முடியலையே இன்னைக்கு... ஒரு வேளை இந்த அம்மா செஞ்சு போட்ட ஆடு, கோழி , மீன், நண்டு எல்லாம் அவன் உள்ள இருந்து நெண்டுதோ..ரொம்ப படுத்தறானே  “ என்று திட்டி கொண்டே, குளியல் அறைக்கு அருகில் சென்றவள்

“இப்ப என்ன வேணும்?? .. “ என்றாள் எரிச்சலுடன்..

“ஹ்ம்ம் டவல் டார்லிங்...  டவல் எடுத்து கொடுக்கலையே.. “ என்றான் மீண்டும் சிரித்தவாறு ...

“சே!! இத எப்படி மறந்தேன்?? “ என்று புலம்பியவள் தன் அம்மா வாங்கி வைத்திருந்த  புது டவலை எடுத்து கதவின் வழியே கொடுக்க, அதை வாங்காமல்  அவள்  கையை பிடித்து வேகமாக இழுத்தான்...

இதை  எதிர்பாராதவள் உள்ளே சென்று  அவன் மேல சரிய , அவள் சாய்ந்த வேகத்தில் அவனும் பின்னால் சாய,  அது  சிறிய  குளியல் அறை என்பதால் அருகில் இருந்த சுவற்றில் இடித்து நேராக நின்றான்..

பவித்ரா தான் அவன் மார்பில் சாய்ந்திருந்தாள்.. அவன் பின்னால் சாயும்பொழுது அவன் கை பட்டு  ஷவர் திறந்து கொள்ள , குளிர்ந்த நீர் அருவியாக கொட்டியது இருவர் மீதும்..

அவன் மீது விழுந்த அதிர்ச்சியில் இருந்து மீளாதவள் சுதாரிக்கு முன்னே ஷவரில் இருந்து நீர்  கொட்டி அவள் கன்னம் வழிந்தோடி அவள் இதழ்களில் பட்டு தெரித்து கொண்டிருந்தது...

மழையில் நனைந்த ரோஜாவாக அவள் கன்னம் மிளிர அவள் இதழ்களோ அவனை சுண்டி இழுக்க அவளை  மார்போடு சேர்த்து இறுக்கி அணைத்தவாறு மெல்ல அவளின் இதழ்களை தன்  விரல்களால் வருடினான்..

அவன் மேல் விழுந்ததில் அவனின்  வெற்றுடலின் உணர்ந்த உறுதியான  ஆண்மையும், பார்வதி அவனை பற்றி பெருமையாக பேசியதும் மற்றும் அவன் அந்த சிறுவர்களை அழைத்து சென்றதை கண்டதில் இருந்தே அவள் மனம் அவன் பக்கம் சாய்ந்திருந்தது அவளை அறியாமல்... என் கணவன் என்ற பெருமை பூரித்திருந்தது அவள் உள்ளே...

அதே மயக்கத்தில்  இருந்தவளுக்கு அவனின் இந்த கணவனான மெய் தீண்டலில் இன்னும் சிலிர்த்து அவன் மார்பில் தன் முகத்தை புதைத்து தஞ்சம் புகுந்தாள் மையலுடன்..  

அவனின் கை அவளின் இதழ்கள், கன்னம் , இமைகள் என்று தீண்டி அதற்கு மேலும் முன்னேறி அவளின் கழுத்துக்கு வந்திருந்தது...

அவனின் அந்த ஆளுமையில் பெண்ணவள் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டிருந்தாள்..அவளின் சவால் எல்லாம் மறந்து கொஞ்சம் கொஞ்சமாக அவன் பக்கம் சாய ஆரம்பித்து இருந்தாள்...அவனும் அவளின் அந்த மையலில் இன்னும் கிறங்கி, அவளை மெல்ல மெல்ல தன் வசப்படுத்தி கொண்டிருந்தான் ஆதித்யா...!






Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!