காதலடி நீயெனக்கு!!-புதிய நாவல்!
காதலடி நீயெனக்கு!!
அன்பான வாசகர் தோழமைகளே!!!
எனது புதிய நாவல் காதலடி நீயெனக்கு Amazon ல் வெளியாகி உள்ளது.
எனது முந்தைய கதைகளான உன்னை
விடமாட்டேன்...என்னுயிரே, அழகான ராட்சசியே வரிசையில் அடுத்ததாய்
ஒரு கலகலப்பான, ஜாலியான காதல் கலந்த கலாட்டா கதை இது.
கதையை பற்றி:
கோபம்!!!
மானிடர்களிடையே இருக்க வேண்டிய தலை
சிறந்த பண்புகளில் ஒன்று கோபம் கொள்ளாமை. எத்தகைய சூழ்நிலையிலும் மற்றவர்கள் மீது
கோபம் கொள்ளாமல்,
தன் கட்டுப்பாட்டை இழந்து விடாமல் ஒருவன் தன்னை கட்டுபடுத்தி கட்டுக்குள்
வைத்திருக்கிறான் என்றால் அவனே மிகப்பெரிய மகான் ஆவான்.
அதே போல ஒருவன் சினம் கொண்டு வெகுண்டு
எழுந்துவிட்டால், அந்த சினம் சுனாமியை போல, மற்றவர்களை தாக்குவதோடு
தன்னையும் அது தாக்கி அழித்து விடும்.
அதோடு அந்த சுனாமியை போல அது விட்டு
செல்லும் சேதாரம் ரொம்பவும் அதிகமாக இருக்கும்.
பொறுமையின் சிகரமாக தன் கணவன் செய்யும்
தவறுகளை எல்லாம் பொறுத்து கொண்ட கண்ணகியால், பாண்டியன் மன்னன் இழைத்த அநீதியை பொறுக்காமல்
பொங்கி எழுந்த கண்ணகியின் கோபம் அந்த மதுரை மாநகரையே தீக்கரையாக்கியது...
மாபெரும் சபை நடுவில் தன் துயில்
உரிக்க முயன்றதால் கோபம் கொண்டு வெகுண்ட எழுந்த த்ரௌபதியின் சினமே மகாபாரத போர்
உருவாக காரணமாக இருந்தது.
இது போன்ற எத்தனையோ உதாரணங்கள் கோபத்தை
பற்றியும் அதன் விளைவுகளை பற்றியும் நம் மக்களுக்கு போதிக்கத்தான் செய்கின்றன.
அதனால்தான் திருவள்ளுவரும் வெகுளாமை
என்று ஒரு அதிகாரத்தையே படைத்து இருக்கிறார்... ,
தன்னைத்தான்
காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே
கொல்லுஞ் சினம்.
ஒருவன் தன்னை தானே காத்துக் கொள்ள வேண்டுமானால் முதலில் கோபம் கொள்ளாமல்
அவனை காத்துக் கொள்ள வேண்டும். அப்படி காக்கா விட்டால் அவன் கோபம் அவனையே அழித்து
விடுமாம்.
அப்படி பட்ட கோபம்தான் நம் நாயகனின் மிகப்பெரிய
மைனஸ்.
கோபம் வந்துவிட்டால் தன்னையே மறந்து
விடுவான். சுற்றுப்புறம், சூழ்நிலை எல்லாமே அவனுக்கு
மறந்துவிடும். அதனாலேயே திறமை இருந்தும், அவனுடைய
லட்சியத்தை அடைய முடியாமல் பலமுறை தோல்விகளை தழுவியிருக்கிறான்.
அப்படிப்பட்ட கோபக்காரனை, அவனுடைய கோபத்தை தணிக்கும்
பனிச்சாரலாய், கோடையின் வெப்பத்தை தணிக்க பெய்யும்
கோடை மழையாய், தடாலடியாய் அவன் வாழ்வில் நுழையப் போகிறாள் நம்
கதையின் நாயகி.
யாராலும் மாற்ற முடியாத, தணிக்க முடியாத, நம் நாயகன் கோபத்தை அவளால் தணிக்க முடிந்ததா? இல்லை அவளுடைய அட்டகாசத்தால் இன்னும் எரிமலையாக மாறப்போகிறானா ? அவனுடைய லட்சியத்தை அடைந்தானா? இல்லை அது கனவாகவே கடைசிவரை நின்று போனதா? தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த கதையை படியுங்கள்...
இதுவும் உங்கள் மனதுக்கு பிடித்த இனிமையான காதல் கதைதான். முடிந்தால் Amazon ல் படித்து மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். Happy Reading!!!- அன்புடன் பத்மினி செல்வராஜ்!
https://www.amazon.in/dp/B094Y9VZTX
Hii mam ithula intha story post panna matingala
ReplyDeletehi pa, it will take some time to publish in this site. you can read preview few pages in Amazon
Delete