காந்தமடி நான் உனக்கு!!-34
அத்தியாயம்-34
நான் கெட்டுப்போனவள் என்று சொல்லி, தன்னவள்
சொல்லி குலுங்கி அழுவதை கண்டு பெரிதும் அதிர்ந்து போனான் அமுதன். அவனால் அவன் செவியில் விழுந்ததை நம்ப முடியவில்லை.
“ச...சது.... நீ என்ன டா சொல்ற? எனக்கு ஒன்னும் புரியல...” என்றான் புரியாமல் விழித்தபடி.
“ஆமா.... அமுதன்.... நான் உண்மையைத்தான்
சொல்றேன். ஐ வாஸ் ரேப்ப்ட். நான் உங்களோடு
குடும்பம் நடத்த தகுதியில்லாதவள். நான் ஒரு அசிங்கம்...” என்று இன்னுமே குலுங்கி அழ, அமுதனுக்கு அவள் சொல்வதை
நம்பவே முடியவில்லை.
இதுவரை அவருடன் பழகியதில் அப்படி
எதையும் அவள் வெளிக்காட்டிக் கொள்ள வில்லை. இயல்பாகத்தான் எல்லோருடனும் பழகினாள்.
அந்த கள்ளம் கபடமற்ற முகம், ஏற்கனவே கலங்கப்பட்ட முகம் என்று
அவனால் இன்னுமே நம்ப முடியவில்லை.
ஒரு நிமிடம் தன் கண்களை இறுக்க மூடி
அவள் சொல்லியதை ஜீரணித்து கொண்டவன், அடுத்த நொடி தன்னை சமாளித்துக் கொண்டவன், இன்னுமே அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன்,
“எப்படி டா? என்ன நடந்தது? எப்படி ஆச்சு? “ என்றான் முழு
மொத்த அக்கறை மற்றும் கனிவுடன். அவள் சொன்ன விஷயத்தை கேட்டு அவன் குரலில் எந்த ஒரு
மாற்றமும் இல்லை. அவளை வெறுத்து ஒதுக்கவில்லை..
மாறாக முன்னைக்கு இப்பொழுது இன்னுமே அவளை தன் தோள் மீது சாய்த்து
கொண்டவன் அவள் தலையை ஆதரவாக வருடி கொடுத்தான்.
“லுக் கண்ணம்மா... உனக்கு என்ன
நடந்திருந்தாலும், எப்படி நடந்திருந்தாலும் எனக்கு உன்னுடைய
ஃபாஸ்ட் பத்தி கவலையில்லை நீ ஒன்றும் கலங்கப்பட்டவள்
இல்லை.
உன்னை மீறி உன் மீது திணிக்கப்பட்ட
எதுவும் உனக்கு சொந்தம் ஆகாது. அதே போலத்தான் இதுவும். நீ மட்டும் தான் எனக்கு
முக்கியம். உன்னுடைய நிகழ்காலமும் எதிர்காலமும் தான் எனக்கு முக்கியம்.
அதனால் உனக்கு நடந்தை எல்லாம் மறந்து
விடு. நம் எதிர்காலத்தை மட்டும் பார் கண்மணி...” என்று இன்னுமே முழு மொத்த
கரிசனத்துடன் அவளை அணைத்துக் கொள்ள, பெண்ணவளுக்கோ இன்னுமே பொங்கி வந்தது அழுகை.
அவன் தோளில் முகத்தை புதைத்து கொண்டு
இன்னுமே தேம்பி அழுதாள்...
“உங்க நல்ல மனசுக்கு இந்த காரை பட்டவள்
வேண்டாம் அமுதன். நீங்கள் உங்கள் மனசுக்கு, உங்கள் அம்மாவுடைய மனசுக்கு
பிடித்தமான ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க.
எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்தி
விடுங்கள்...” என்று மீண்டும் குலுங்கி அழ
ஆரம்பித்தாள் சத்யா.
அவனும் என்னென்னவோ சொல்லி அவளை
சமாதானப்படுத்த முயன்றான். ஆனால் அவளோ எதற்கும் சம்மதிக்கவில்லை. அழுகையும்
நிக்கவில்லை. அடுத்ததாய் தன் குரலை உயர்த்தி அவளை மிரட்டினான்.
“ஸ்டாப் இட் சத்யா... முதலில் இந்த அழுகையை
நிறுத்து. அழுவதால் எதுவும் ஆகப் போவதில்லை. என் சது எத்தனை பெரிய கஷ்டம்
வந்தாலும் அழுவாமல், உடைந்து போகாமல் தாங்கி நிற்பவள்.
அந்த சத்யா எங்கே போனாள்? இப்படி கோழை மாதிரி அழுவாமல் முதலில் நடந்ததை சொல். என்ன ஆச்சு? எப்படி ஆச்சு?
சொல்லுமா? அப்பத்தான் உன் மனதை எப்படி சரி பண்ணுவது என்று
புரியும்...” என்று மீண்டும் அக்கறையாக விசாரித்தான்.
நீண்ட நேர வற்புறுத்தலுக்கு பிறகு அவளும்
தன் மனதைத் திறந்தாள். இத்தனை நாட்களாக தன்
மனதில் போட்டு பூட்டி வைத்துக் கொண்டிருந்த ரகசியம்.
அவள் தோழி சுகன்யாவிடம் கூட அதை பற்றி
சொல்லவில்லை. அவ்வளவு ஏன் அவள் அன்னை வளர்மதிக்கு கூட தெரியாத ரகசியம்.
தன்னோடே அது அழிந்து போகட்டும் என்று
மறைத்து கொண்டவள், இப்பொழுது அவளின் திருமணம் என்று
வந்து நிற்கும் பொழுது தான் அதெல்லாம் பூதாகரமாய் தெரிந்தது.
அவளுக்கு வேறு வழியில்லாமல் நடந்ததை
சொல்ல ஆரம்பித்தாள் சத்யா.
அப்பொழுது சத்யாவிற்கு ஐந்து வயது இருக்கும். சத்யா, வளர்மதிக்கு முதல் குழந்தை என்பதால், சத்யாவிற்கு
நன்றாகவே போஷாக்கான உணவை கொடுத்து நன்றாக கவனித்து கொண்டார் வளர்மதி.
அதனால் சிறுவயதிலேயே நன்றாக
கொழுகொழுவென்று இருப்பாள் சத்யா.
அப்பொழுதுதான் அவள் தந்தை சொந்தமாக வீட்டை
கட்டி, கீழ ஒருதளமும் மேல ஒரு தளமும் வைத்து கட்டி
மேல் தளத்தை மூன்று போர்ஷன்களாக பிரித்து வாடகைக்கு விட்டிருந்தார்.
அந்த நாட்களில் பிள்ளைகள் நேரம் கிடைக்கும்
பொழுதெல்லாம் தெருவில் தான் முக்கால் வாசி நேரம் விளையாடுவார்கள். அதோடு அக்கம்
பக்கத்து வீடுகளுக்கும் தாராளமாக சென்று
விளையாடுவார்கள்.
சத்யாவோ எல்லாரிடமும் இயல்பாக வாயடித்துப்
கதை பேசுபவள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாருமே அவளை கொஞ்சுவதும்
கட்டிப்பிடித்து அவளுக்கு முத்தம் கொடுப்பது என இயல்பாக பழகினர்.
அந்த வயதில் செக்ஸ்வல் ஹரஸ்மெண்ட்
பத்தின விழிப்புணர்வு அவ்வளவாக இல்லை. குட் டச்,
பேட் டச் பற்றி முக்கால்வாசி தாய்மார்களுக்கே தெரியாது.
அதனால் வளர்மதி அப்படியெல்லாம் எதுவும்
தன் மகளுக்கு சொல்லிக் கொடுக்கவில்லை. அந்த புரியாத வயதில் எல்லோரும் தன்னை ஆசையாக
அன்பாக முத்தமிடுகிறார்கள் என்றுதான் எண்ணிக் கொண்டாள் சத்யா.
அதில் சில காமுகர்கள் வேற விதமாக அவளை
அணைத்ததையும், தொட்டு தடவியதையும் அந்த மழலை அப்பொழுது
உணர்ந்திருக்கவில்லை.
ஒரு நாள் வளர்மதி, தன் இளைய மகள் திவ்யா வை அழைத்துக்கொண்டு
பக்கத்துத் தெருவில் ஒரு விசேஷத்திற்கு சென்றிருந்தார். நித்யா பிறந்திருக்கவில்லை
அப்பொழுது.
சத்யா அருகில் இருந்த அரசு ஆரம்ப பள்ளிக்கூடத்திற்கு
சென்றிருந்தாள். பள்ளிக்கூடம் முடியும் முன் வந்து விடலாம் என்று வளர்மதி, திவ்யா வை மட்டும் அழைத்து
கொண்டு சென்றிருந்தார்.
அன்று பள்ளிக்கூடம் ஏதோ ஒரு தலைவர்
இறந்து விட்டார் என்றதால் பாதியிலேயே அனைவரையும் வீட்டுக்கு அனுப்பி வைத்து
விட்டனர். சத்யாவின் ஆர்வமாக வீட்டுக்கு ஓடி வந்தாள்.
வீட்டில் தன் அன்னை இல்லாமல் வீடு
பூட்டி இருக்க, என்ன செய்வது என்று தெரியாமல் திருதிருவென்று விழித்துக் கொண்டிருக்க, அப்பொழுதுதான் மேல்
தளத்தில் ஒரு போர்ஷனில் வாடகைக்கு குடி இருந்த பூபதி வெளியில் வந்தான்.
அங்கே இருக்கும் கார்ன்மென்ட் ஒன்றில்
நைட் வாட்ச்மேனாக வேலை செய்பவன். அவனுக்கு வேலை இரவு நேரத்தில் மட்டுமே. பகல்
நேரத்தில் வீட்டில் தான் இருப்பான்.
அவனுடைய மனைவி பிரசவத்திற்காக தாய்
வீட்டிற்கு சென்று இருக்க, அவன் மட்டும் தனியாக இருந்தாந்-.
சத்யா தனியாக அவள் வீட்டின் முன் நின்று
கொண்டிருப்பதை கண்டதும் உடனே அவன் உணர்வுகள் விழித்துக் கொண்டன. அந்த காமுகனுக்கு கொழுகொழுவென்று இருக்கும் சத்யாவின்
மீது எப்பவும் ஒரு கண்.
அடிக்கடி அவளை அழைத்து ஆசையாக
பேசுவதும், அவள் கன்னத்தை நிமிண்டுவதும், தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்துக்
கொள்வதுமாய் சிறுசிறு இன்பங்களை அனுபவித்து வந்தான்.
அந்த வயதில் சத்யாவிற்கு அதெல்லாம்
தவறு என்று தெரியவில்லை. அந்த மாமா ஆசையாகத்தான் தன்னை கட்டிக் கொள்கிறார் என்று எண்ணியிருந்தாள்.
இப்பொழுது சத்யா தனியாக நிக்கவும் அவன்
மூளை அவசரமாக வேலை செய்தது. வளர்மதி திரும்பி வர நேரம் ஆகும் என்பதை அறிந்து
இருந்ததால் அதற்குள் தன் ஆசையை நிறைவேற்றி கொள்ள வேண்டும் என்று சபலபட்டவன் மேலே
நின்றவாறு சத்யாவை மேல அழைத்தான்.
யாரும் இல்லையே.. எங்கே போவது என்று
கலக்கத்தோடு முழித்து கொண்டிருந்தவளுக்கு பூபதி மாமா அழைக்கவும்,
முகம் மலர உடனே குஷியோடு அவன் வீட்டிற்கு
ஓடிச் சென்றாள்.
அவனும் வழக்கம் போல அவளிடம் அன்பாக
பேசி, வீட்டிற்கு உள்ளே அழைத்துச் சென்றவன் அவன் வாங்கி
வைத்திருந்த ஒரு சாக்லேட்டை எடுத்து அவளிடம் கொடுத்தான்.
அவள் ஆசையாக அதை வாங்கி சாப்பிட, அவன் அவளிடம் அன்பொழுக பேச்சுக் கொடுத்துக்
கொண்டிருந்தான்.
“சத்யா குட்டி... இந்த மாமா தினமும் இதே மாதிரி சாக்லேட் வாங்கித்
தருவேன். நான் சொல்றபடி எல்லாம் செய்வியா? “ என்று அன்பொழுக கேட்க, அவளும் சாக்லேட் கிடைக்கின்ற சந்தோஷத்தில்
“கண்டிப்பா பூபதி மாமா... நான் இப்ப
என்ன செய்யணும்? “ என்றாள் கண்களை சிமிட்டி. மழலையில் சிரித்தபடி.
“எங்கே எனக்கு ஒரு முத்தம் கொடு...” என்க அவளும் விளையாட்டுப் பிள்ளையாய் அவன்
கன்னத்தில் முத்தமிட்டாள்.
“இல்லை... இல்லை... இங்கே கொடுக்கணும்...”
என்று அவனுடைய உதட்டை காட்ட,
“சீ... போங்க மாமா... அங்கெல்லாம்
முத்தம் கொடுக்க மாட்டாங்க. அது தப்பு...” என்று அவள் மறுக்க
“அதெல்லாம் ஒன்னும் தப்பு இல்ல குட்டி.
மாமா ஆசையா தானே கேட்கிறேன். ஒன்னே ஒன்னு கொடு பார்க்கலாம்...” என்க
“ம்ஹூம்...நான் மாட்டேன். அங்கெல்லாம்
தரமாட்டேன்...” என்று மறுத்தாள்
இதுதான் பிள்ளைகளின் கட்டுப்பாட்டை ஆழம்பார்க்கும் கயவர்களின் முதல்
படியாகும். சில குழந்தைகள் எதார்த்தமாக முத்தம் கொடுத்து விட்டால் அதையே சாக்காக
வைத்துக் கொண்டு இன்னும் முன்னேறி தங்களுக்கு வேண்டியதை நிறை வேற்றிக் கொள்கிறார்கள்.
சில குழந்தைகள் ஆரம்பத்திலேயே மறுத்து
விட்டால் அவர்களை மடக்குவதற்கு என்று வேற
வழி வைத்திருப்பார்கள் போல. இந்த பூபதியும் அப்படித்தான் சத்யாவை முதலில்
ஆழம் பார்த்தான்.
அவள் பிடிவாதத்தில் இருந்தே அவள் தன்
இச்சைக்கு எளிதாக ஒத்துவர மாட்டாள் என்று புரிந்து கொண்டவன் அடுத்த வழியை
கையாண்டான்.
“சரி...சரி... நீ கொடுக்க வேண்டாம். இந்தா இன்னொரு சாக்லேட்
வாங்கிக்கோ...” என்று தன் அறைக்கு உள்ளே
சென்று இன்னொரு சாக்லெட்டை எடுத்தவன்
அதனுள்ளே அவன் இரவு விழித்து
இருப்பதற்காக பயன்படுத்தும் போதை மருந்து துளியையும் வைத்து அவளிடம் கொடுக்க, அதை அறியாத சத்யாவும்
ஆசையாக வாங்கி அதையும் உடனே சாப்பிட்டாள்.
அடுத்த சில நிமிடங்களில் கண்ணை
இருட்டிக் கொண்டு வர அவ்வளவு தான் ஞாபகம் இருந்தது சத்யாவிற்கு.
மீண்டும் கண் விழித்து பார்க்க அந்தக் குழந்தை
திடுக்கிட்டு போனாள்.
அங்கிருந்த படுக்கை அறையில், கட்டிலில் தன் உடலில் எந்த ஆடையும் இல்லாமல் கிடந்தாள் சத்யா. அவளருகே அந்த பூபதியும் அவளைக் கட்டிப் அணைத்தவாறு
படுத்திருக்க, அதைக்கண்டு திடுக்கிட்டு போனாள்.
உடனே விலுக் என்று எழுந்து அமர்ந்தவள் அவசரமாக
தன் ஆடையை தேட, அவளின் அரவம் கேட்டு பூபதியும் விழித்து கொண்டவன், மிக இயல்பாக அவளை பார்த்து
“சத்யா குட்டி என்ன தேடுற? “ என்று கேட்க அவளோ தட்டுத் தடுமாறி “நா...நான்...நான்
எப்படி இங்கே வந்தேன்? “ என்று குழறலுடன் கேட்க
“அதுவாடா...குட்டி நீ சாக்லேட்
சாப்பிட்டதும் தூக்கம் வருதினியா. அதுதான் உன்னை இங்கே கொண்டு வந்து தூங்க
வைத்தேன். இந்த ரூம்ல பேன் வேலை செய்யலையா, அதுதான் உன் ட்ரெஸ்ஸை
கழட்டிட்டேன்...” என்று இயல்பாக கூற, அந்த
குழந்தைக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை
பின்னர் அவனாகவே அவள் ஆடையை எடுத்து
போட்டுவிட்டவன், அவள் தலையையும் ஒதுக்கி, லேசாக பவுடர் போட்டு, மீண்டும் கன்னத்தில் முத்தமிட்டவன்
“வெளியில யார்கிட்டயும் நான் சாக்லேட்
கொடுத்ததை சொல்லாதடா குட்டி. அப்புறம் எல்லாரும் இந்த மாமாவை தேடி வந்துடுவாங்க.
அப்புறம் உனக்கு சாக்லேட் இருக்காது...” என்க அவளும் சரி என்று தலையை ஆட்டினாள்
பின் கட்டிலிலிருந்து இறங்கி நடக்க, அவளால் காலை எடுத்து வைக்க முடியவில்லை. அப்படி ஒரு வலி
“மாமா.. கால் வலிக்குது...” என்றாள் பாவமாக. அவன்தான் அந்த வலிக்கு காரணம்
என்று அறியாத அந்த பேதைப்பெண்.
“இது பாரின் சாக்லேட் குட்டி. அதை
சாப்பிட்டதால கொஞ்ச நேரம் அப்படித்தான் இருக்கும். அப்புறம் சரியாயிடும். வீட்டுல
அம்மா அயோடெக்ஸ் வச்சிருந்தா எடுத்து கீழே தடவிக்கோ. சரியா போயிடும்...” என்று விஷமமாக சிரித்தான்.
அவளும் தலையை வேகமாக ஆட்டி சரி என்றவள்
, தன் பையை எடுத்துக் கொண்டு வெளியில் வர, அவளை பிடித்து நிறுத்தியவன்
“சத்யா குட்டி...திரும்பவும் நாளைக்கு
வர்றியா? இதைவிட இன்னும் பெரிய சாக்லேட் வாங்கித் தரேன்...”
என்று விஷமமாக சிரிக்க, ஏனோ அந்த நொடியில் இருந்து
அவளுக்கு சாக்லேட் என்றாலே பிடிக்காமல் போனது.
தனக்கு ஏதோ நடந்து விட்டது என்பதை
மட்டும் புரிய, ஆனால் என்ன நடந்தது என்று அந்த நிலையில் அவளால் உணர்ந்து
கொள்ள முடியவில்லை.
காலை சாய்த்து சாய்த்து நடந்து வந்தவளை
அப்பொழுதுதான் வீட்டிற்கு வந்த வளர்மதி விசாரிக்க, அவளும் திருதிருவென்று விழித்தாள்.
பூபதி மாமா விட்டுக்கு போனேன். அவர்
கொடுத்த சாக்லெட் சாப்பிட்டேன் என்றால், அவள் அன்னை கடிந்து கொள்வாள் என பயந்தவள், உடனே பூபதி சொல்லிக்
கொடுத்ததெல்லாம் நினைவில் இருக்க அவசரமாய் யோசித்து
“கீழ விழுந்துட்டேன் மா...” என்று ஏதோ சொல்லி சமாளித்தாள்.
அவள் இந்த மாதிரி கீழ விழுந்துட்டு
வருவது சகஜம் என்பதால் வளர்மதியும் அதற்கு மேல் பெரிதாக விசாரிக்கவில்லை.
அதற்கு அடுத்த இரண்டு நாட்களும் அந்த வலி
அவளை உயிர்வரை தீண்டியதே இன்னும் அவளால் மறக்க முடியவில்லை.
அன்று நடந்ததை சொல்லி முடித்தவள்,
தன் முகத்தை மூடிக்கொண்டு கதறினாள்.
“எனக்கு அப்பொழுது என்ன நடந்தது என்றே
தெரியவில்லை அமுதன். ஆனால் அந்த காட்சி, அன்று நடந்தது அப்படியே என் மனதில் பதிந்து
விட்டது.
இப்பொழுது விவரம் தெரிந்த பிறகு, அதுவும் குட் டச், பேட் டச் என்று படிக்கும் பொழுதுதான் நான் எப்படிப்பட்ட நரகத்தை என்
சிறுவயதில் அனுபவித்து இருக்கிறேன் என்று புரிந்தது.
எத்தனையோ பேர் என்னிடம் பேட் டச் தான் செய்திருந்தார்கள்.
ஆனால் அதெல்லாம் அப்பொழுது எனக்கு புரியவில்லை. மற்றவர்களாவது பரவாயில்லை. என்னை
வெறும் சிற்றின்பத்திற்காகத்தான் பயன்படுத்தி கொண்டார்கள்.
ஆனால் அந்த பூபதி ? அவன் செய்ததை என்னால் மறக்கவே முடியவில்லை.
இப்பொழுது #MeToo கேம்பைனில்
ஒவ்வொருவரும் தங்களுடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் பொழுதுதான் எனக்கு இதெல்லாம்
மீண்டும் ஞாபகம் வந்தது.
அப்படி என்றால் நானும் என் சிறுவயதில் செக்சுவல்
அப்யூஸ் ஆக பயன்படுத்த பட்டிருக்கிறேன் என்று நினைக்க, எனக்கு அருவருப்பாக இருக்கிறது.
என்னை அறியாமலேயே ஒருவன் என்னை கெடுத்திருக்கிறான்
அந்த வயதில். நான் கெட்டுப் போனவள். திருமணத்திற்கு தகுதி இல்லாதவள். இப்பொழுதும் என் உடலில் ஆடை இல்லை என்றால் ஒரு
வித நடுக்கம் வரும்.
அன்று நான் கண்ட காட்சிதான் நினைவு
வந்து, எனக்கு குமட்டிக்கொண்டு வரும். எவ்வளவு
முயன்றும் அதை என்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லை
உங்களை பார்த்த பொழுது, காதல் கொண்ட பொழுது எல்லாம்
அந்த சம்பவம் நினைவில் வரவில்லை. ஆனால் திருமணம் என்று ஆரம்பித்த பிறகுதான்
இதெல்லாம் என் கண் முன்னே வந்தது.
கண்டிப்பாக என்னால் உங்களுக்கு நல்ல
மனைவியாக இருக்க முடியாது. அதனால் தான் இந்த திருமணம் வேண்டாம் என்கிறேன்.
தயவுசெய்து என் மனநிலையை புரிஞ்சுக்கோங்க அமுதன்.
என்னால் ஒருவனுக்கு மனைவியாகும் தகுதியை இழந்து விட்டேன். நான்
பாவி...உங்கள் காதலை ஏற்று கொள்ள, அனுபவிக்க முடியாத பாவி நான்... “ என்று மீண்டும் தன் முகத்தில் அடித்துக்கொண்டு கதறினாள்
சத்யா.
அதை கேட்ட அமுதனுக்கு பேரதிர்ச்சியாக
இருந்தது. சைல்ட் செக்சுவல் அப்யூஸ் பற்றி அவனும் நிறைய கட்டுரைகள் படித்திருக்கிறான்.
குழந்தைகள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளவது
பெரியதாக வெளியில் தெரியாமலேயே போய்விடுகிறது. அவர்களுடைய அறியாமையை பூபதி போன்ற
காமுகர்கள் தங்கள் சுகத்துக்காக பயன்படுத்தி கொண்டுதான் இருக்கிறார்கள்.
சில குழந்தைகளுக்கு அதெல்லாம் என்ன
என்று கூட புரியாது. சில குழந்தைகளுக்கு புரிந்தாலும் அதை வெளிப்படையாக
பெற்றோர்களிடம் கூறாமல் எத்தனை பேர் மனதில் வைத்து புழுங்குகின்றனர்.
அந்த மாதிரி உள்ளுக்குள் வைத்து
புழுங்கும் குழந்தைகள் மனதளவில் பின்னால் பாதிக்க படுகின்றனர். ஒரு சிறு
சம்பவம்தான். அந்த தளிரின் மனதில் பசுமரத்தாணி போல பதிந்து போய்விடும்.
பிறகு அவர்கள் வளர்ந்ததும், அந்த மாதிரி ஒரு சூழ்நிலையை
எதிர்கொள்ளும்பொழுது அவர்களை அறியாமலயே மிரண்டு போய் விடுகின்றனர். எத்தனை பேர்
மணவாழ்க்கை இதனால் பாதிக்கபடுகிறது.
அட்லீஸ்ட் இப்பொழுதாவது எல்லா
குழந்தைகளுக்கும் செக்சுவல் ஹரஸ்மென்ட் பற்றிய விழிப்புணர்வை கொண்டுவந்து
ஓரளவுக்கு தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள பயிற்று விக்கின்றனர்.
ஆனால் இருபது வருடம் முன்பு இதற்கான
விழிப்புணர்வு கம்மிதான். சத்யா போன்ற எத்தனை குழந்தைகள் அதில் பாதிக்கப்பட்டனரோ? வெளியில் தெரியாமல் உள்ளுக்குள்ளேயே வைத்து மருகுபவர்களும்
நிறைய பேர் தான் இருப்பார்கள்.
அந்த மாதிரி கயவர்களை தயவு தாட்சண்யம்
பார்க்காமல் உடனே நடுரோட்டில் வைத்து சுட்டுத்தள்ள வேண்டும் என்ற வெறி எழுந்தது
அமுதன் உள்ளே.
ஆனால் இப்பொழுது கவனிக்க வேண்டியது தன்னவளை
என்பதை கருத்தில் கொண்டு, தன் கோபத்தை கட்டுபடுத்தியவன் அவளை இன்னுமே
தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டவன்
“சது மா...உனக்கு நடந்தது ஒரு விபத்து.
நீயே அறியாமல் அதுவும் அந்த வயதில் நடந்தது. அதையெல்லாம் மறந்துவிட வேண்டும்.
ஒரு விபத்து நடந்தால் எப்படி நாளடைவில்
அதன் காயம் ஆறி அதை மறந்து விடுகிறோமோ, அதே மாதிரி இதையும் உன் மனதில் இருந்து தூக்கிப் போட்டு விட்டு நம்
வாழ்க்கையின் அடுத்த படியை பார்த்து செல்ல
வேண்டும்.
அப்படித்தானே நீ வந்திருக்கிறாய். உன்
தந்தை இறந்த பொழுது கூட எவ்வளவு தைர்யமாக மேல வந்தாய். இப்பொழுது மட்டும் என்ன? உனக்கு ஒன்னும் ஆகலை.
அதுவும் ஐந்து வயதில் நடந்தது எல்லாம்
ஒரு இதே இல்ல. நீ ஒரு குழந்தை டா அப்ப.
அதை எல்லாம் உன் கற்பு கூட சம்பந்தபடுத்த கூடாது. நீ சுத்தமானவள் தான்.
அதுவும் உன் விருப்பம் இல்லாம் உன் மீது
திணிக்கப்பட்ட எதுவும் உன் கற்பை பாதிக்காது. நீ என்றுமே நேர்மையானவள். சுத்தமானவள் இப்பொழுது தான் உன்னை எனக்கு இன்னுமே
ரொம்ப ரொம்ப பிடிக்குது.
“ஐ லவ் யு செல்லம்மா...உன்னை என் கண்ணுக்குள்
வைத்து பார்த்துக்கிறேன். இனி எந்த கஷ்டமும்
உன்னை தீண்டாமல் ராணி மாதிரி
பார்த்துக்குவேன். நீ என்னிடம் வந்துவிடு கண்மணி...” “
என்று அவளை தன் மார்பில் சாய்த்து
கொண்டு, மெல்ல
அணைத்துக் கொண்டு அவள் தலையை வாஞ்சையுடன் வருட
அவளுக்கோ இன்னும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
“இல்லை...அமுதன்...என்னால் உங்களுடன்
குடும்ப வாழ்க்கையில் ஈடுபட முடியும் என்று தோன்றவில்லை. வீணாக உங்கள்
வாழ்க்கையும் என்னால் பாதிக்க வேண்டாம்.
அவ்வளவு ரிஸ்க் எதுக்கு. என்னை விட்டு விடுங்கள்.
நான் இப்படியே இருந்து விடுகிறேன்...” என்று மீண்டும் அவன் மார்பில் முகம் புதைத்து கதறினாள்
சத்யா.
“அறைஞ்சனா உன் முப்பத்திரண்டு பல்லும் உன்
கையில் வந்து விடும். அப்புறம் பல்லு இல்லாத கிழவிக்கு தாலி கட்டணுமேனு
பார்க்கிறேன்.
இத்தனை நாள் இதுக்காகத்தான் திருமணத்தை
வேண்டாம் என்று சொல்கிறாய் என்று தெரிந்திருந்தால், உன்னை கையை காலை கட்டியாவது மணமேடைக்கு
தூக்கிட்டு போய் தாலி கட்டி இருப்பேன்.
இந்நேரம் நீ திருமதி அமுதன்
ஆகியிருப்ப. உன் மனதில் என்ன இருக்கு என்று தெரியாமல் உன்னை காயபடுத்திவிடக்கூடாதுனு
தான் இவ்வளவு நாட்களாக பொறுமையாக
இருந்தேன்.
இனிமேல் என்னோட ரொமாண்டிக்
ஹீரோ கெட்டப் எல்லாம் உனக்கு ஒத்து வராது. இனி ஆக்சன் ஹீரோதான். வேணும்னா ஆக்சன்
வில்லனாக கூட மாற தயங்க மாட்டேன். நீ கதற கதற தூக்கிட்டு போய் தாலி
கட்டுவேணாக்கும்.
நான் பிறந்து வளர்ந்தது வேணா மும்பையாக
இருக்கலாம். ஆனால் என் உடம்புல ஓடறது இந்த தமிழ் மண்ணோட ரத்தம் டி. புடிச்ச பொண்ண
தூக்கிட்டு போய் தாலி கட்டுவதுதான் நம்ம கலாச்சாரமாக்கும். எப்புடி வசதி?
என்ன?
உன் வெய்ட்டுக்கு கொஞ்சம் தூக்கறது தான் கஷ்டம். ஆனாலும் இது ஜிம் பாடி.
சமாளிச்சிடலாம்..எப்படி வசதி? “ என்று அவன் தன் கை புஜத்தை மடக்கி
காட்டி அவன் தேக வலிமையை காட்ட, மற்ற நேரமாக இருந்திருந்தால் அவனுக்கு
கவுண்டர் கொடுத்திருப்பாள் சத்யா.
ஆனால் இப்பொழுதோ இன்னுமே தன்
பிரச்சனைக்குள் உழன்று கொண்டிருப்பவளால், அவன் செய்த ஆக்சனுக்கு
சிரிக்க முடியவில்லை.
“ப்ச்... இதெல்லாம் வாயில சொல்ல நல்லா
இருக்கும் அமுதன். வாழ்க்கை னு வந்திட்டா தான் அதோட எதார்த்தம் தெரியும். உங்க
மனசு ஒரு காதல் கணவனாய், மனைவியை தேடும். அப்பொழுது என்னால்
அதை பூர்த்தி செய்ய முடியாது. அப்புறம் வீண் பிரச்சனைகள் தான் வரும்...
இன்று பல தம்பதியர்களுக்கு நடுவில்
பிரச்சனையாக இருப்பது தாம்பத்தியமும் ஒரு காரணம். கணவன் தேவையை மனைவியால் பூர்த்தி
செய்ய முடியாவிட்டாலோ, இல்லை மனைவியின் தேவையை கணவன்
திருப்தி செய்யாவிட்டாலோ அந்த இல்லறமே கொஞ்சம் கொஞ்சமாக கசந்து போகும்.
அதனால்தான் சொல்கிறேன். அப்படிபட்ட
இல்லறம் நமக்கு வேண்டாம். நாம் எப்பொழுதும் ப்ரெண்ட்ஸ் ஆ வே இருக்கலாம். ப்ளீஸ்
அமுதன் புரிஞ்சுக்கோங்க... “ என்றாள் தன்னை,
தன் மனதை எப்படியாவது புரிய வைத்துவிட வேண்டும் என்ற வேகத்தில்.
“ப்ச். சும்மா அதையே சொல்லிட்டு
இருக்காத டி. இப்ப என்னடி பிரச்சனை உனக்கு நாம் ரெண்டு பேரும் கணவன் மனைவியா
உடலளவில் இணைய முடியாது அவ்வளவு தானே.
ரைட்டு. மத்த கபுல்ஸ் எப்படியோ? எனக்கு அது தேவையில்லை. நீ என் மனைவியா என் பக்கத்திலே இரு. அது
போதும் ஐ டோன்ட்
நீட் எனி பிசிகல் ரிலேசன்ஷிப். ஐ நீட் யுவர் லவ்... லவ்... ஒன்லி
லவ்...ப்ளீஸ் அன்டர்ஸ்டான்ட் மி...” என்று அடிக்குரலில் சீறினான் அமுதன்.
அதைக் கேட்டு ஒரு நொடி திகைத்துப்
போனாள் சத்யா. இப்படி கூட ஒருவனால் இருக்க முடியுமா?
திருமணத்திற்கு முன்பே கூட எத்தனையோ பேர் உணர்ச்சி வேகத்தில் தங்களை இழக்கும்
காலத்தில்,
இவன் திருமணம் ஆகியும் பிரம்மச்சாரியாகவே இருப்பேன் என்கிறானே...
அந்த அளவுக்கு என்னை காதலிக்கிறானா? இப்படி ஒருவனை கணவனாக அடைய எனக்கு கொடுத்து வைக்கலையே என்று
மீண்டும் உள்ளுக்குள் அரற்றிகொண்டாள்.
ஆனாலும் அவள் மனம் என்னவோ அவன் சொல்வதை
ஒத்துக் கொள்ளாமல் முரண்டியது.
“அது எப்படி ? திருமணம்
என்பது இரு மனங்கள் இணைவது மட்டும் அல்லவே. கணவன்,
மனைவி இருவரும் ஒருவருக்குள் ஒருவராய் ஒன்றர கலந்து களிப்பதும் தானே திருமணம்.
தம்பதியர் இருவரும் இத்தனை நாட்களாய்
கட்டி காத்த பிரம்மச்சர்யத்தை விடுத்து, காமத்தையும் மோகத்தையும் தீர்த்துக்கொள்வது
அல்லவா திருமணம். கலவி இல்லாத திருமணம் எப்படி முழுமையடையும். அதற்கு வெறும்
நண்பர்களாகவே இருந்துவிட்டு போகலாமே...” என்று பல கேள்விகள் அவள் உள்ளே.
அதை அப்படியே அமுதன் இடம் கேட்டு
வைத்தாள் சத்யா.
“புல்ஷிட்...ஷட் அப் சது. யார் சொன்னா தாம்பத்தியம்
மட்டுமே ஒரு மேரேஜ் லைப்க்கு தேவை என்று.
“ என்று எகிறி விழுந்தவன் பின் அடுத்த நொடி தன்னை கட்டுபடுத்தி கொண்டவன் தாழ்ந்து
வந்து
“அப்படி இல்லை சது. தாம்பத்தியம் என்பதும் ஒரு பார்ட் ஆஃப் லைப். ஒத்துக்கறேன். ஆனால் அதை மட்டுமே முதன்மையாக கொண்டு திருமணத்தை பார்க்க கூடாது. அது மட்டுமே வாழ்க்கையாகாது.
நமக்கு இருவருக்கும் இடையில் தடையாக
இருப்பது அது தான் என்றால் அப்படிபட்ட சுகம் எனக்கு தேவை இல்லை டி. என்னால் அந்த சுகம் இல்லாமல் இருந்து
விட முடியும். ஆனால் நீ இல்லாமல் வாழ்க்கையே இல்லை. நீ இல்லாத ஒரு வாழ்க்கையை
என்னால் நினைச்சுக்கூட பார்க்க முடியலை... ஐ நீட் யூ சோ பேட்லி.
லுக் சத்யா. உனக்கு உன் மனதில்
இருக்கும் இந்த பயம்தான் காரணம் என்றால், தாராளமாக நாம்
கல்யாணம் பண்ணிக்கலாம். உன்னை எந்த விதத்திலும் நான் தொந்தரவு பண்ண மாட்டேன்.
நீயாக மனம் மாறி என்னை ஏற்றுக்
கொள்ளும் வரைக்கும் நண்பர்களாகவே இருக்கலாம். ஆனால் நீ என் அருகில் இருக்க
வேண்டும். அதற்கு நீ என் மனைவியாக இருக்க வேண்டும் அவ்வளவுதான்...” என்றான் உறுதியாக
அவளோ அதிர்ந்து போய்
“இல்லை... அமுதன். அதெல்லாம் பேசுவதற்கு
சரியாக இருக்கும் அமுதன் ஆனால் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வராது. நாளைக்கே உங்களுக்கு என்று ஒரு வாரிசு வேண்டாமா?
என்னால் அப்படி ஒரு வாரிசை சுமக்க
முடியாமல், உங்கள் மனைவி என்று எதுக்கு இருக்க வேண்டும்?. அது நான் உங்களுக்கு கொடுக்கும் தண்டனை. அந்த குற்ற உணர்வே என்னை கொன்று விடும். அதனால்
வேண்டாம்... “ என்று அடுத்த பாலை அவனை நோக்கி எறிந்தாள்.
“ரைட்டு .. இப்ப அடுத்து வாரிசு பிரச்சனையா? அதுவும் பாத்துக்கலாம்.
அப்படி வாரிசு வேணும் என்ற நிலை வந்தால் அதுக்கும் வழி இருக்கு டி. இப்பொழுதெல்லாம் கணவன் மனைவி உடலுறவில் சேராமலே
குழந்தை பெத்துக்கலாம் பேபி. நம்ம மருத்துவம் அந்த அளவுக்கு முன்னேறி இருக்கு.
ஐ.வி.எஃப் (IVF) ட்ரீட்மென்ட் கேள்வி பட்டிருக்கியா? அதன்படி ப்யூச்சர்ல நமக்கு ஒரு வாரிசு வேணும்னாலும் உருவாக்கிக்கலாம்.
அந்த அளவுக்கு எல்லாம் இப்பவே யோசிக்க வேண்டாம்.
காலம் எல்லாத்தையும் மாத்தும்.
கண்டிப்பாக உன் மனமும் மாறிவிடும். உன் மனதில் இருக்கும் இந்த ஆறாத ரணம் கூட
மாறலாம். நீ என்னை ஏத்துக்கலாம்.
லுக் சது... பிரச்சனை என்று ஒன்று இருந்தால்
கண்டிப்பாக அதற்கு தீர்வு என்று ஒன்றும் இருக்கும். தீர்வு இல்லாத பிரச்சனையே கிடையாது
அதனால் எதையும் மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாதே. என்னை நம்பி என்னுடன் வா.
உன்னை கண்டிப்பாக நான் கண்ணுக்குள்
வைத்து பார்த்துக்கொள்வேன். ஆனால் நீ இல்லாத
வாழ்க்கை எனக்கு வாழ்க்கை இல்லை செல்லம்மா. ஐ லவ் யூ. லவ் யூ சோ மச். என்னிடம்
வந்துவிடு செல்லம்மா..
எத்தனை பிரச்சனை வந்தாலும் நாம ரெண்டு பேரும் சேர்ந்தே சமாளிக்கலாம். ஆனால் நீ
இல்லாத வாழ்க்கை எனக்கு வாழ்க்கையே இல்லை. அவ்வளவுதான் சொல்லிட்டேன்.
நீ ஆன்ட்டிக்கு வாக்குக் கொடுத்தபடியே
நம்ம திருமணம் நடக்கும். இந்த ப்ராஜெக்ட் வேலை முடியட்டும். அதற்குப் பிறகு நான்
திருமண ஏற்பாட்டை ஆரம்பித்துவிடுவேன்.
அதுவரை இந்த மண்டைக்குள் எதையும்
போட்டு குழப்பிக்காத. எல்லாம் சரியாகிடும். சரியா...” என்று அவள் தலையை பிடித்து செல்லமாக ஆட்டினான்.
ஆனால் சத்யாவோ அவ்வளவு சீக்கிரம் அவன்
சொன்னதை எல்லாம் ஏற்று கொள்ளவில்லை. அவள் மீண்டும் மறுத்து ஏதேதோ காரணங்களைச் சொல்லி
பந்தை வீச, அவனும் அனைத்தையும் சிக்ஸராக விலாசி தள்ளி
கொண்டிருந்தான்.
தன் பேச்சு திறமையால் அவளின் அனைத்து
வாதங்களையும் ஒன்று மில்லாமல் ஆக்கி விட்டான். கடைசியில் அவளின் வாயிலாகவே திருமணத்திற்கு
சம்மதத்தை வாங்கி விட்டான்.
“இப்ப உன் மண்டையில் நன்றாக உறைத்ததா? இப்பொழுது என்னை மணந்து கொள்ள, உனக்கு எந்த தயக்கமும் இல்லையே...” என்க அவளும் அரை மனதோடு இல்லை என்று தலை
ஆட்டினாள்.
“இல்லை இல்லை இது செல்லாது. பிப்டி
பெர்சென்ட் மட்டும் தான் வந்து இருக்கு மீதி 50% சேர்த்து முழுமையாக நீ சம்மதம் சொல்ல வேண்டும்...” என்று சீண்ட
அவளோ
“சீ போடா...” என்று எழுந்தவள் அந்த அறையிலிருந்து ஓடிவிட்டாள்.
அமுதனுக்கு மனம் நிறைந்து போனது எப்படியோ
பெரிய தடையாக இருந்த சத்யா சம்மதித்து விட
அவன் மனம் வானில் றெக்கை கட்டி பறந்தது.
கூடவே அதோடு விட்டு விடாமல் சத்யாவை
ஒரு மனநல ஆலோசகரிடம் அழைத்து சென்று அவளுக்கு கவுன்சிலிங் கொடுக்க வைத்தான்.
சத்யாவை மனம் விட்டு பேச வைத்து அந்த கவுன்சிலரும் அவளுடன் பேசினார்.
அவளுக்கு நடந்த நிகழ்வில் இருந்து
எப்படி வெளிக்கொண்டு வரவேண்டும் என்று போராடி கொஞ்சம் கொஞ்சமாக அவளை வெளி கொண்டு வந்தான்.
ஓரளவுக்கு அதில் வெற்றியும்
பெற்றிருக்க, இப்பொழுது சத்யா அமுதனுடன் இயல்பாக
பேச ஆரம்பித்தாள்.
அதுவும் திருமணம் நிச்சயம் ஆன
ஜோடிகளுக்கே உரித்தான் ஸ்வீட் பட் நத்திங்ஸ் டாக்ஸ் ஆக நாட்கள் நகர்ந்து சென்றது.
அப்படி சந்தோஷமாக இருந்த அமுதனை மேலும்
சோதிப்பதற்காகவே அடுத்த காயை நகர்த்தினார் மதிப்பிற்குரிய விதியார். அவன் திருமணத்திற்கு அடுத்த
முட்டுக்கட்டையை கொண்டு வந்தார் இவன் எப்படி சமாளிப்பான் பார்க்கலாம் என்ற ஏளனச் சிரிப்போடு.
அப்படி என்ன வந்ததாம் அடுத்த தடை? அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்...
Comments
Post a Comment