காந்தமடி நான் உனக்கு!!-35
அத்தியாயம்-35
சத்யாவின் சம்மதம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் இருந்த அமுதனுக்கு
அடுத்து இடியாக வந்து இறங்கியது அவன் பக்கமாய் அவனுடைய அன்னையின் மறுப்பு.
ஆரவ் சாப்ட்வேர்ஸ் ன் துவக்க விழா மிக
கோலாகலமாக கொண்டாடபட்டது. தென் இந்தியாவின் பல முக்கிய பிரமுகர்கள் அந்த விழாவில்
கலந்து கொண்டனர்.
தென் இந்தியா மட்டும் அல்லாமல்
மும்பையில் இருந்தும், மற்றும் தொழில் துறையில் நெருங்கிய நண்பர்கள் என
பலரும் தவறாமல் வந்திருக்க, அந்த விழா களை கட்டியது.
நொடியும் நிக்க நேரம் இல்லாமல் இங்கும்
அங்கும் ஓடிக் கொண்டிருந்தான் ஆரவமுதன். ஏற்கனவே ஈவன்ட் மேனேஜ்மென்ட் இடம்
விழாவின் பொறுப்பை ஒப்படைத்து இருந்தாலும் தன் தந்தையின் உதவி இல்லாமல் அவனாகவே
முதன் முதலாக தொடங்கி இருக்கும் தொழில் இது.
அதன் தொடக்க விழா மிக சிறப்பாக இருக்க
வேண்டும் என்று ஒவ்வொன்றிலும் பார்த்து பார்த்து அவனே முன்னின்று செய்து
கொண்டிருந்தான்.
விழாவிற்கு வழக்கம் போல அவனுடைய பேவரைட்
கருப்பு கலரில் அவனுடைய ஆடையை தேர்வு
செய்திருக்க, சத்யாதான் அவனை முறைத்து அவனுக்கான
உடையை தேர்ந்தெடுத்து இருந்தாள்.
டார்க் ப்ளூ கலரில் பார்மல் பேன்ட்ம், டக் இன் செய்யப்பட்ட வெள்ளை நிற ஷர்ட்,
அதன் மேல ஆகாய நீல வண்ண கலரில் ப்ளேசர், அழகாய் தொங்கிய
நீண்ட டை, ஜெல் வைத்து ஸ்டைலாக வாரிய ஹேர் ஸ்டைல், கண்களில் வீற்றிருந்த கூலர் என ஆணழகனாய் அந்த விழாவில் வலம் வந்தான்
அமுதன்.
அத்தனை டென்ஷனிலும் அவனுக்கு மனதுக்கு
இதமாய், அவன் டென்ஷனை எல்லாம் போக்கிடும் எனர்ஜி
பூஸ்ட்டராய் தன்னவளை அவ்வபொழுது சைட் அடித்து கொண்டிருந்தான்.
சத்யா மற்றும் அவள் குடும்பத்தை இந்த
விழாவிற்கு வரவேண்டும் என்று சொல்லி கட்டாயபடுத்தி வரவழைத்திருந்தான் அமுதன்.
வளர்மதி இந்த மாதிரி நல்ல
காரியங்களுக்கு தான் செல்வதில்லை என்று கண்டிப்பாக மறுத்துவிட, சத்யா மற்றும் அவள் தங்கைகள் மட்டும் அந்த விழாவிற்கு
வந்திருந்தனர்.
அவனுடைய ஆடைக்கு பொருத்தமாக அதே ஆகாய
நீல வண்ண ஜார்ஜெட் புடவையை தலைய தலைய கட்டி,
இடை தாண்டி நீண்ட ஜடை பின்னல் இட்டு, ஜடையில்
நெருக்கமாக தொடுத்த குண்டு மல்லியை தன் தோள் வழியாக சரிந்து முன்னால் வந்து
விழுமாறு வைத்திருந்தாள்
அவளின் ஆடைக்கு பொருத்தமான மிக எளிதான
ஆபரணங்களையும் அணிந்து கொண்டு, புடவைக்கு மேட்சாக கல் வைத்த ஒரு
ஸ்டிக்கர் பொட்டையும், கைகளில் கண்ணாடி வளையல்களையும் அணிந்து, வானத்து தேவதையாய் வந்திருந்த
தன்னவளை பார்க்க பார்க்க திகட்டவில்லை அமுதனுக்கு.
அப்படியே கடல்கன்னிதான் கால் முளைத்து
அங்கு வந்துவிட்டதை போல அவ்வளவு அம்சமாய் இருந்தாள் அவன் கண்ணுக்கு.
அவ்வளவு பிசியிலும் சந்தர்ப்பம்
கிடைக்கும் பொழுதெல்லாம் அவன் பார்வை ஆர்வமாய் அவளிடம் ஓடி வந்து அவளின் கன்னம்
வருடி இதழ் தடவி கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டு செல்வதாக தோன்றும்
பெண்ணவளுக்கு.
அவன் பார்வை தன்னிடம்
வரும்பொழுதெல்லாம் முகம் சிவந்து போனாள் சத்யா. பின்னே... அவள் அந்த விழாவிற்கு
வந்ததும், அவளை அமுதன் வரவேற்ற விதம் அவள் மனதில்
அடிக்கடி வந்து போனது.
குளோபல் வில்லேஜ் ல் இருந்த ஆரவ்
சாப்ட்வேர்ஸ் முன்னால் கேப்ல் வந்து இறங்கினாள் சத்யா...ஐந்து தளங்களை கொண்ட அந்த
பில்டிங் முழுவதுமே ஆரவ் சாப்ட்வேர்ஸ்க்காக வாங்கி இருந்தான்.
கீழ் தளத்திலயே பூஜைக்கான ஏற்பாடு
செய்திருக்க, விழாவுக்கு வருபவர்களை, வரவேற்கும் விதமாய் அங்கு நின்றிருந்த அமுதன்,
காரிலி இருந்து இறங்கிய தன்னவளை கண்டதும் அப்படியே ப்ரீஸ் ஆகி போனான்.
பின் சமாளித்து கொண்டு, புன்னகையுடன் அங்கே வந்த அவர்கள் மூவரையும் பிரத்யேகமாக அவனே உள்ளே
அழைத்து வந்தவன் சத்யாவிடம் நேரடியாக
“சது.. ஒன் செகண்ட் உள்ளே வாயேன்...”
என்று அவள் சம்மதத்தை கூட கேட்காமல், அவள் கைபிடித்து அருகில் இருந்த அறைக்குள்
இழுத்து சென்றவன், கதவை தன் காலால் உதைத்து மூடிவிட்டு அடுத்த நொடி
அவளை இழுத்து அணைத்து கொண்டான்...
சத்யாவோ அவனின் அந்த திடீர் அதிரடி ஆக்சனில்
திணறிப் போனாள்...
ஆனாலும் உள்ளுக்குள் ரகசியமாய் அவனின்
அந்த அணைப்பை ரசித்தவாறு அவனுக்கு இசைந்து கொடுக்க,
அடுத்த கணம் அவள் முகத்தை கையில் ஏந்தி, மிதமாய் ஒப்பனை செய்திருந்த அவளின் இதழில்
அழுந்த முத்தமிட்டான்.
தன் காதலை, தாபத்தை அவள் மீதான மோகத்தை எல்லாம் அந்த நொடியே
அவளிடம் கொட்டிவிடவேண்டும் என்ற வேகத்தில், ஆழமாக, அழுத்தமாக, வன்மையாக முத்தமிட்டான். சத்யாவோ அவனின்
வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறி போனாள்..
ஆனாலும் தன்னவனை விலக்க மனம்
வரவில்லை... அவளுமே அந்த முத்த யுத்தத்தின் தித்திப்பில் முத்து குளித்து
கொண்டிருந்தாள்.
நீண்ட ஒரு நிமிடத்திற்கு பிறகு அவளை
விட்டவன்
“சாரி பேபி... உன்னை இந்த கெட்டப்பில்
பார்த்ததும் என்னால முடியல... செமயா இருக்க டி பொண்டாட்டி.. பேசாம இந்த பங்சன் லயே
கல்யாணம் பண்ணிக்கலாமா? இன்னைக்கு நைட் ஏ பர்ஸ்ட் நைட்...பண்ணிக்கலாமா?” என்று ஹஸ்கி வாய்சில் அவள் காதோரம் மீசை குறுகுறுக்க
கிசுகிசுத்தான்.
சத்யாவுக்கோ இந்த உலகமே மறந்து போனது. எப்பொழுதும்
அவன் அவளிடம் கொஞ்சம் தள்ளியே இருப்பான். அவள்தான் அவனை சீண்டி, கட்டி அணைத்து, அவனுக்கு முத்தமிடுவாள்.
ஆனால் இன்று அவனாகவே அதுவும்
அதிரடியாய் கட்டி அணைத்ததும், முத்தமிட்டதும் அவளால் நம்பவே
முடியவில்லை...ஜிவ் என்று உடல் எல்லாம் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. றெக்கை
இல்லாமலே வானில் பறந்தாள்.
சற்று முன்னர்,
தன்னவனை கண்டதும், அவனைப் போலவே அவளும் அவனின்
கெட்டப்பில் முழுவதுமாய் கவிழ்ந்து தான் போனாள். ஆனால் அவனைப் போல அவளால் அதை
வெளிக்காட்டி கொள்ள முடியவில்லை.
தன்னவனை ரசிகயமாய் ரசித்து தன்
மனதிற்குள் பத்திரபடுத்தி கொண்டுதான் அவனை நோக்கி வந்திருந்தாள். அப்பொழுதே அவனை
கட்டி அணைத்து முத்தமிட தவித்தது அவள் உள்ளே. ஆனால் தன் உணர்ச்சிகளை கட்டுபடுத்தி
கொண்டுதான் அவனை சந்தித்தது.
ஆனால் அமுதன் அதிரடியாக அவளை
இழுத்துகொண்டு வந்து இப்படி அதிரடியாய் முத்தமிட,
அதில் இன்னும் கிறங்கி போனாள்.
அவனின் ஹஸ்கி குரல் அவளுக்குள்
படபடப்பை கூட்ட, கன்னம் சிவந்து போனாள். ஆனாலும்
சமாளித்துக் கொண்டவள், அவன் மஞ்சத்தில் கை வைத்து பின்னுக்கு
தள்ளியவள்,
“ஆக்க பொறுத்த சாமிக்கு ஆற பொறுக்கலையாம்..”
என்றாள் கிளுக்கி சிரித்தவாறு
“அப்படீனா? “
என்றான் புரியாமல்
“ஐயோ.. நீங்க வேற மும்பை வாலா இல்லை...தமிழ்
பழமொழி எல்லாம் எப்படி தெரியும்..
அதாவது நாமதான் கல்யாணம் பண்ணிக்க போறோமே...அதுக்குள்ள்
என்ன அவசரம்? இப்ப என் கூட ரொமாண்ஸ் பண்றதை
விட்டுட்டு போய் இருக்கிற வேலையை பாருங்க பாஸ்... எல்லாரும் உங்களை காணாமல்
தேடிகிட்டிருப்பாங்க..” என்று அவனை சமாளிக்க முயன்றாள். .
“ஹ்ம்ம்ம் என்னால இனிமேல் முடியாது
சது. இன்னைக்கே அப்பா அம்மாகிட்ட பேசி அடுத்த முகூர்த்தத்திலயே கல்யாணத்தை வச்சுக்க
சொல்ல போறேன்..” என்றவன்
“சரி டார்லிங்... வேலை நிறைய இருக்கு. கிளம்பனும்.
ஆனாலும் அடிக்கடி இப்படி ஒரு ஓரமா வந்து இந்த மாமனை நான் கவனிச்ச மாதிரி கொஞ்சம்
கவனிச்சுக்கோயேன்...” என்றான் மந்தகாச புன்னகையுடன்...
“ஆஹான்.. கவனிச்சுக்கறது தான.. நல்லாவே
கவனிச்சுக்கலாமே...” என்று தன் கை முஷ்டியை மடக்க,
அவனும் மலர்ந்து சிரித்தான்.
“ராட்சசி... நீ கை முஷ்டியை மடக்கற
ஸ்டைல பார்த்தால் ஒரே அடியில என்னை பெட்ல அட்மிட் பண்ணிருவ போல... வேண்டாம்
தாயே...இனிமேல் உன்கிட்ட வர கூட பார்த்து வருகிறேன்...” என்று பயந்தவனாய் நடிக்க,
“அது... அந்த பயம் இருக்கட்டும்...”
என்று விரல் நீட்டி பத்திரம் காட்டி சிரித்தாள். அமுதனும் அவளுடன் இணைந்து
சிரித்தவன்,
பின் இருவரும் வெளியில் வர, அவர்களுக்காகவே காத்து கொண்டிருந்த
திவ்யாவும் நித்யாவும் இருவரையும் நிமிர்ந்து பார்த்ததும் களுக் என்று கிளுக்கி
சிரித்தனர்..
“எதுக்குடி இப்படி சிரிக்கறிங்க? “ என்று முறைத்தாள்
சத்யா...
“அக்கா.. எப்ப இருந்து மாமாவும்
லிப்ஸ்டிக் போட ஆரம்பிச்சார். அதுவும் நீ போடற அதே ப்ராண்ட்.. “ என்று கண்
சிமிட்டி சிரிக்க, அப்பொழுதுதான் அவன் உதடுகளை
பார்த்தாள் சத்யா.
அவன் இதழ்களில் மென்மையாய் ஒட்டியிருந்தது
அவள் உதட்டு சாயம். உடனே முகம் கன்ற
“சீ ..போங்கடி...” என்றவள் வேகமாக அமுதன் அருகில் வந்து, அவன் உயரத்துக்கு எம்பி, நுனிக்காலில்
நின்று கொண்டு, அவன் தாடையை பிடித்து நிமிர்த்தி, தன் கைகுட்டையால் அவன் இதழ்களை
மென்மையாய் துடைத்து விட்டாள்.
தன்னவளின் அந்த நெருக்கமும், அவள் விரல்கள் அவன் இதழை
வருடும் தீண்டலும் அவனுக்குள் கிறக்கத்தை மூட்டியது. அதுவும் அவன் கை அருகில்
இருந்த அவளின் வெற்றிடை, அவளை இறுக்கி அணைக்க சொல்லி அழைப்பு
விடுத்தது.
ஆனாலும் கடமை அவனை கட்டி இழுக்க, முயன்று தன்னை கட்டுபடுத்தியவன்
“தேங்க்ஸ் டா செல்லம்மா...ஐ ஹேவ் டு கோ
நௌ....டாக் டு யு லேட்டர்...” என்று கண் சிமிட்டி,
அவள் எதிர்பாராத விதமாக அவள் கன்னத்தில்
இதழ் பதித்து அவள் தங்கைகளை பார்த்து குறும்பாக கண் சிமிட்டி, வேக நடையில் அங்கிருந்து சென்று
மறைந்தான்.
சத்யாவோ பேயறைந்தவளை போல அப்படியே
அதிர்ந்து நின்றாள்.. அதுவும் தன் தங்கைகள் முன்னால் அவன் அப்படி நடந்து கொண்டது அவளுக்கு
சங்கோஜமாக இருந்தது...
அவள் தங்கைகளை பார்த்து அசட்டு
சிரிப்பை சிரிக்க
“ஹீ ஹீ ஹீ நோ டென்ஷன் செல்லம்மா..
நாங்க எதையுமேஏஏஏஏஏ பார்க்கலை... “ என்று
இருவரும் கோரசாக சொல்லி கண் சிமிட்ட, தன் தங்கைகளை செல்லமாக
முறைத்து விரட்டினாள் சத்யா.
அதில் இருந்தே அமுதன் பார்வை அடிக்கடி அவளிடமே
வந்து செல்கிறது தான். மற்றவர்கள் கவனத்தை கவராமல் தன்னவளுக்கு மட்டும் புரியும்
வகையில் அடிக்கடி சில்மிஷமாய் அவளை பார்த்து வைத்தான்.
சத்யாவும் அங்கு விருந்தினர்களுக்காக
போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு தன்னவனையே ரசித்து கொண்டிருந்தாள்.
அவள் மனம் எல்லாம் சொல்ல முடியாத பரவசம். ஒரு இதம் பரவி இருந்தது.
ஆனால் அந்த இதத்தின் ஆயுட்காலம் சில நொடிகள்தான் என்று அறிய மறந்து இருந்தாள் சத்யா. அவள் உள்ளே இருந்த பரவசம், இதம் எல்லாம் அந்த மும்பை அழகி மேக்னாவை காணும் வரை தான்..என்று அறிந்திருக்கவில்லை அந்த பேதைப் பெண் சத்யா..
Comments
Post a Comment