காந்தமடி நான் உனக்கு!!-37
அத்தியாயம்-37
இருவரும் தங்களை மறந்து வேற ஒரு உலகத்தில் சஞ்சரித்து கொண்டிருக்க, அந்த நேரம் பூஜை வேளை கரடியாய் யாரோ அந்த அறையை நோக்கி வருவது தெரிய, முதலில் சுதாரித்து கொண்டாள் சத்யா.
அப்பொழுதுதான் அவர்கள் இருவரும்
இருக்கும் கோலம் புரிய, உடனே அவன் மடியில் இருந்து துள்ளி குதித்து எழுந்து,
தள்ளி நின்றவள் அவசரமாய் தன்
ஆடையை சரி செய்து கொண்டாள்..
அதே நேரம் கதவை லேசாக தட்டிவிட்டு
உள்ளே வந்தான் ராகேஷ். அமுதன் மட்டும் இருப்பான் என்று வந்தவன் உள்ளே சத்யாவும்
இருக்க கண்டு ஒரு நொடி ஆச்சர்யத்தில் அவன் புருவம் ஏறி இறங்கியது.
அதோடு சத்யா அவசரமாய் தன் புடவையை நீவி
விட்டு கொள்ள, அமுதனும் எழுந்து நின்று கொண்டு தன்
ப்ளேஸரை நீவி விட்டு கொண்டிருந்தான்.
இருவர் முகத்திலுமே பிஞ்ச் நிற வெட்கம்
படர்ந்து இருக்க, அதை புரிந்து கொண்ட ராகேஷ்
“என்ன பாஸ்.. சூப்பரா ரெப்ரெஸ்
ஆகிட்டிங்க போல. சற்று முன்னால் உங்கள் முகத்தில் தெரிந்த களைப்பு கொஞ்சம் கூட
இல்லையே....” என்று விஷமமாக சிரித்தான்.
“யெஸ்...யெஸ் ராக்கி. ஐம் பெர்பெக்ட்லி
ஆல்ரைட் நௌ. சது ஒரு ஜூஸ் கொடுத்தா... ப்ப்ப்பா என்ன ஒரு எனர்ஜி...” என்று சத்யாவை
பார்த்து குறும்பாக கண் சிமிட்ட, அவளோ கன்னம் சிவந்து தன் ஒற்றை விரலை நீட்டி
பத்திரம் காட்டி செல்லமாக முறைத்தாள்.
“அப்படியா சிஸ்டர்..! என்ன ஜூஸ் அது? நானும் அதை வாங்கி ஸ்டாக் வச்சுக்கறேன். இந்த பாஸ் வேகத்துக்கு
என்னால ஈடு கொடுக்க முடியலை...” என்றான் வேண்டும் என்றே அடக்கப்பட்ட
சிரிப்புடன்...
அதைக்கேட்டதும் அமுதனுக்கு புரை
ஏறியது. அவசரமாக தன் தலையை தட்டி கொண்டவன் .
“டேய்... அதெல்லாம் கடையில் கிடைக்காது
ராக்கி. என் பொண்டாட்டி எனக்கே எனக்கு என்று ஸ்பெஷலா தரும் ஜூஸ்...லிமிட்டெட்
எடிசன்... ஒன் அன்ட் ஒன்லி டு மி...“
என்று மீண்டும் தன்னவளின் இதழை தாபத்துடன் பார்க்க,
அவளோ வெட்கபட்டு சிரித்தபடி அந்த அறையை விட்டு வெளியில் ஓடி விட்டாள்.
அமுதன், சத்யா விஷயம் ராகேஷ்க்கும் தெரியும் என்பதால் ராகேஷ்
இடம் இயல்பாக பேசுவான் அமுதன். ராகேஷ்க்கும் சத்யா அமுதனுக்கு சரியான ஜோடி என
தோன்ற, அவனும் அவர்களின் காதலை தெரிந்து, மகிழ்ந்து போய், சத்யாவை உரிமையாக சிஸ்டர் என்றுதான்
அழைப்பான்..
“டேய் கரடி. அது சரி.. இப்ப எதுக்கு
இந்த நேரத்துல வந்த? அதை சொல்லாம என்னை சைட் அடிச்சுகிட்டிருக்க? “ என்று அவன் முன்னே சொடக்கு இட்டான் அமுதன்.
அப்பொழுதுதான் அவன் வந்த வேலை நியாபகம்
வந்தவனாய்
“பாஸ்... பெரிய பாஸ் ம் மேடமும் உங்களை
பார்க்கணும்னாங்க.. அதான் உங்களை அழைத்து செல்ல வந்தேன். வாங்க...கூடவே அந்த இம்சை
அரசி மேகியும் இருக்காங்க....“ என்று அழைக்க,
அமுதனுக்கோ ஏதோ சரியில்லை என தோன்றியது.
தன் அன்னையே அவனை பார்க்கவேண்டும்
என்று சொல்லி இருக்கிறார்...அதுவும் அந்த தொல்லை மேக்னாவும் அங்கு இருக்கிறாள்
என்றால் கண்டிப்பாக அதில் ஏதோ இருக்கிறது என்று அவசரமாக கணக்கிட்டான்.
அவனுடைய பிசினஸ் மூளை அவசரமாய் அந்த
மேக்னாவின் நடவடிக்கையும், அவள் தன் அன்னையிடம் வழிந்து கொஞ்சி
குழாவி பேசியதையும் வைத்து யோசித்து பார்க்க நொடியில் விஷயம் புரிந்து விட்டது.
உடனே இதழில் ஒரு புன்னகையை தவழ
விட்டவன்,
“தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி
பதினாறு அடி பாயும் என்பதை என் மாம்க்கு காட்டுகிறேன்...” என்று உள்ளுக்குள்
சிரித்து கொண்டவன்
“ஒகே லெட்ஸ் கோ...ராக்கி... “ என்றவன்
அறையை விட்டு வெளியில் வர, அதே நேரம் சத்யா தன் தங்கைகளுடன்
அங்கு வந்தாள் அவனிடம் சொல்லி விட்டு விடை பெற்று செல்ல.
உடனே அமுதனுக்கு ஏதோ எண்ணம் தோன்ற, அவளின் கையை பற்றியவன்
“சது.. என் கூட ஒரு நிமிஷம் வா...
பாப்புஸ்.. நீங்க கொஞ்சம் நேரம் இங்க வெய்ட் பண்ணுங்க. ராக்கி... அவங்களுக்கு
இன்னொரு கப் ஐஸ்க்ரீம் எடுத்து கொடு..” என்க அவர்கள் இருவரின் முகமும் பூவாக
மலர்ந்தது.
தன் அக்காவை மறந்து விட்டு ராகேஷ்
பின்னால் சென்றனர் இருவரும். ராகேஷ் அவர்களை அழைத்து கொண்டு செல்ல, அமுதன் சத்யாவை அழைத்து கொண்டு அவன் பெற்றோர்கள் தங்கி இருந்த அறையை
நோக்கி சென்றான்.
சத்யா வும் அவனுடன் இணைந்து
நடந்தவாறு
“என்னாச்சு அம்மு.. கையை
விடுங்க..” என்று விடுவிக்க முயல, அவனோ விடாமல், சத்யாவின் கையைப் பிடித்து இழுத்தவாறு
தன் பெற்றோர்கள் இருந்த அறையை நோக்கி நடத்திச் சென்றான்.
தன் மகன் ஒரு பெண்ணின் கையை பிடித்து அழைத்து வருவதைக் கண்டதும், ரூபாவதிக்கு உள்ளே
கொதித்தது.
ஏற்கனவே தன் மகனுடைய காதல் விவகாரம்
தன் கணவன் மூலமாக அவர் காதை எட்டிவிட்டது. அதனாலேயே தன் மகன் சத்யாவை அழைத்து
வருவதை கண்டு ஒரு நொடி யோசித்தவர், அதற்கான காரணத்தை கண்டு பிடித்து விட, அமுதன் வாயைத் திறக்கும்
முன்னே முந்தி கொண்டவர்
“ஹாய் ஆரவ் பேபி. கம்...கம்...உனக்காகத்தான்
வெய்ட் பண்ணிகிட்டிருக்கோம். பை தி வே, நீ இந்த நிறுவனத்தை ஆரம்பித்ததற்காக எங்களுடைய ஸ்பெஷல் கிப்ட்...”
என்று மேக்னாவை கை பிடித்து முன்னால் இழுத்தவர்
“உனக்கு இவளை தெரிந்திருக்குமே...! இவதான்
மேக்னா...உனக்காக நாங்க பார்த்து
வச்சிருக்கிற பொண்ணு. மும்பையிலேயே நமக்கு அடுத்து தொழிலில் ரொம்ப பிரபலமாக
இருப்பவர் சிவகுப்தா. அவரின் ஒரே வாரிசு இவள்.
இவளுக்கும் உனக்கும்தான் மேரேஜ் பண்ண
ஏற்பாடு செய்திருக்கிறோம். போன வாரம் தான் பேசி முடிச்சுட்டோம். அடுத்த மாதம்
கல்யாணம்...” என்று அவர் பாட்டுக்கு அடுக்கி
கொண்டே செல்ல, சத்யாவிற்கோ தலையில் மின்னாமல், முழங்காமல் இடி விழுந்தது.
மனதில் எரிமலை வெடித்து, சுனாமி பொங்கி எழுந்தது. .
அவள் எண்ணியது சரிதான். அவளுக்கு , அந்த மேக்னாவுக்கு அதனால்தான் அவ்வளவு துணிச்சல் வந்து அமுதனிடம்
அதிக நெருக்கமாய் உரிமை எடுத்துக் கொண்டிருக்கிறாள் என்று இப்பொழுது புரிந்தது.
ஆனால் திருமணம் நிச்சயம் ஆகிற
வரைக்கும் போயிருக்கு. அமுதன் தன்னிடம் எதுவும் சொல்லவில்லையே.
இவனை கேட்காமலயா அவ்வளவு தூரம் போயிருப்பார்கள்
என்று அவள் மூளை அவசரமாய் யோசிக்க, ஒன்றை உணர மறந்து போனாள் .அவனுக்கும் அது இப்பொழுதுதான் தெரியும் செய்தி என்று.
ஆனால் ஏற்கனவே தன் மீது தாழ்வு
மனப்பார்வையில் இருந்தவள், தான் அமுதனுக்கு பொருத்தமில்லாதவள்
என்று உள்ளுக்குள் மருகி கொண்டிருந்தவள், அந்த செய்தியை கேட்டதும் திடுக்கிட்டவள் அடுத்த
நொடி அமுதன் பற்றி இருந்த கையை வெடுக்கென்று அவனிடம் இருந்து உருவிக் கொண்டாள்.
அவனை ஒரு எரிக்கும் பார்வை பார்த்து விட்டு, வாயில் கையை வைத்து தன் அழுகையை அடக்கி கொண்டு, வேகமாக அந்த அறையை விட்டு ஓடி
விட்டாள் சத்யா.
அமுதனோ என்ன நடக்கிறது என்று புரியாமல்
கையறு நிலையில் கொஞ்சம் தடுமாறி திருதிருவென்று முழித்து கொண்டிருந்தான். தன்
மகனின் அந்த தவிப்பை கண்டு மனம் பொறுக்காத அவன் தந்தை அமுதனை பாவமாக பார்த்து
வைத்தார்.
தன் மகனின் காதல் விஷயம் தெரிந்தும், தன் மனைவி அவனுக்கு வேற ஒரு பெண்ணை பார்த்து வைத்திருப்பதில்
அவருக்கும் உடன்பாடில்லை. ஆனால் அவரின் பேச்சை எப்பொழுது ரூபாவதி கேட்டிருக்கிறார்.
ஆனாலும் இது தன் மகனின் வாழ்க்கை என்று
உணர்ந்தவர், அமுதன் அறைக்கு வருவதற்கு முன்னே தன்
மனைவியை சமாதானபடுத்த முயன்றார் தான்...
“ரூபி டார்லிங்... கொஞ்சம் வெயிட் பண்ணு.. மெதுவாக அமுதன்கிட்ட
விஷயத்தை சொல்லலாம்...” என்று கேட்டு
கொண்டும் தன் கணவனை கண்டு கொள்ளாமல், அமுதன் உள்ளே வந்ததும் விஷயத்தை போட்டு உடைத்து இருந்தார் ரூபாவதி.
அவருக்கும் அதுதானே வேண்டும். சத்யா முன்னால்
அமுதன் திருமண விஷயத்தை சொல்ல வேண்டும் என்றுதான் எதிர்பார்த்திருந்தார். அதே போல
அமுதன் சத்யாவை அழைத்துக்கொண்டு வர, அவருக்கு பழம் நழுவி பாலில் விழுந்து
அது நழுவி வாயில் விழுந்ததை போல இருந்தது.
உடனே அமுதன் தன் காதல் விஷயத்தை
சொல்வதற்கு முன்னால் அவர் முந்தி கொண்டார்.
தன் மகன் ஒரு பெண்ணை விரும்புகிறான்
என்று தெரிந்ததும் உடனேயே சத்யாவைப் பற்றி விசாரித்து விட்டார் ரூபாவதி.
சத்யா அந்தஷ்தில் கொஞ்சமும் தங்களுக்கு
பொருத்தமில்லாதவள்...மிடில் கிளாஸ்.. மாதச்சம்பளம் வாங்குபவள் என்று தெரிந்ததும்
உடனே முகத்தை சுழித்தார்.
அழகிலும் அப்படி ஒன்றும் பேரழகி இல்லை.
மாநிறமும்... பூசினாற் போன்ற உடலும் என தெரிய உடனேயே ஏனோ சத்யாவை பிடிக்காமல் போனது.
அவர் மனக்கண்ணில் மேக்னாவையும் சத்யாவையும் தராசில் வைத்து அளந்து பார்த்தவருக்கு
தராசு வேகமாக மேக்னா பக்கமாய் சாய்ந்தது புரிந்தது.
சத்யா வின் பக்கம் கொஞ்சமும் எடை இல்லாமல்
மேலே சென்றுவிட்டாள். அப்பயே முடிவு செய்து விட்டார். தன் மகனின் காதலை ஆதரிக்க கூடாது.
அவனுக்கு எப்படியாவது மேக்னாவை ஜோடி சேர்த்துவிடவேண்டும் என்று.
அந்தஷ்திலும்,
அழகிலும் அவள்தான் தன் மகனுக்கு பொருத்தமாக இருப்பாள் என்று முடிவு செய்தவர், சத்யாவை எப்படி இதில் இருந்து விலக்குவது என்று
ஆராய்ந்தார்.
அப்பொழுதுதான் அவருக்கு சத்யாவை பற்றி சாதகமான
பாயிண்ட் ஒன்று கிடைத்தது. அது சத்யாவின் குணம்.. காசு பணத்துக்கு ஆசைப்படாதவள்...நேர்மை
நியாயம் நம்பிக்கை... தும்பிக்கை என நேர்மை
பக்கத்தில் நிற்பவள்.
கண்டிப்பாக அவளுடைய ஈகோவை கொஞ்சம்
தூண்டி விட்டால் போதும் அவளாகவே பிரிந்து சென்று சென்று விடுவாள் என்று திட்டமிட்டுத்தான் மேக்னாவை இந்த
விழாவிற்கு அழைத்து வந்தது
கூடவே அவளை தன் மகனோடு ஒட்டி உரசி பழகும் படியும் சில பல
அறிவுரைகளை வழங்கினார். அவளும் அதைக்
கேட்டுக்கொண்டு அவன் பின்னையே சுத்தி
கொண்டிருந்தாள்.
ரூபாவதி எதிர்பார்த்த மாதிரி சத்யாவின்
கண்களில் ஒருவித வெறுப்பும் கூடவே தன்னை பற்றிய தாழ்வு மனப்பான்மையும்
வந்திருந்தது அவள் முகத்தில் இருந்தே தெரிந்தது.. .
இப்பொழுது ஆரவ் க்கு மேக்னா என்று பேசி
முடித்து விட்டதாக அவள் முன்னேயே சொல்லி விடவும், அவர்
போட்ட திட்டப்படி சத்யாவும் அதைக்கேட்டு தன்மானம் சுட,
உடனே கோபத்துடன் சென்று விட்டாள்.
இனி எப்படியும் அவள் ஆரவ் ஐ மணக்க
சம்மதிக்க மாட்டாள் என்று பெரும் நிம்மதியாக இருந்தது. அவர் நினைத்தபடி மேக்னாவை சீக்கிரம் தன் மருமகளாக்கி
கொள்ள வேண்டும் என்று அவசரமாய்
திட்டமிட்டார்.
தன் அன்னையின் இந்த சாணக்கியத்தனத்தை
அறியாத அமுதனுக்கு அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை. தன் அன்னையை பார்த்து முறைத்தவன்
“மாம்... இதென்ன திடீரென்று இப்படி ஒரு
ஷாக் நியூஸ் சொல்றிங்க. அதுவும் என்னை கேட்காமல் என் திருமணத்தை எப்படி முடிவு
செய்யலாம்?. அதெல்லாம் முடியாது
நான் சத்யாவைத்தான் மணந்து
கொள்வேன் வீணாக இந்த நன்னாளில் என்
சந்தோஷத்தை கெடுக்காதிங்க...” என்று தன் பெற்றோர்கள் இருவரையும் பார்த்து முறைத்து
விட்டு திரும்பி வாயிலை நோக்கி விறுவிறுவென்று நடக்க
“ஆரவ்
டியர்...ஒன் செகண்ட்... நான் சொல்வதை கேளுங்க....” என்றவாறு மேக்னா அவன்
அருகில் ஓடி வந்தவள்
“ஐ லவ் யூ ஆரவ்...என்னை ஒரு நிமிஷம்
பாருங்க...இந்த அழகு ராணி உங்களுக்காக ஏங்கி தவிக்கிறாள். எத்தனை பேர் என் கண்
பார்வை படாதா என்று ஏங்கி தவிக்கிறார்கள் தெரியுமா?
ஆனால் எனக்கு என்னவோ அவர்களை எல்லாம்
பிடிக்கவில்லை. உங்களைத்தான் பிடித்திருக்கிறது....ரொம்பவும் பிடித்திருக்கிறது...
அதனால்தான் ஆன்ட்டி நம்ம திருமணத்தை உறுதி செய்தார்கள்.
நாம் இரண்டுபேரும் மேரேஜ் பண்ணிகிட்டா
மேட் பார் ஈச் அதர் னு சூப்பரா இருக்கும். இன்னைக்கே எத்தனை பேர் நம்ம ஜோடி
பொருத்தத்தை பார்த்து புகழ்ந்தாங்க தெரியுமா?
அதோடு என் அப்பா பிசினஸ் ம் உங்களுக்கு
வந்திடும். இரண்டு நிறுவனமும் இணைந்தால் நீங்கள் தான் நம்பர் ஒன் ரிச்சஸ்ட் மேன்
இன் இன்டியா.
இப்படி ஒரு பொன்னான வாய்ப்பு
உங்களுக்கு வந்திருக்க, அவசரத்தில் அதை உதறிவிட
வேண்டாம்...நல்லா யோசிங்க...ப்ளீஸ்....ஐ லவ் யூ சோ மச் டார்லிங்....”
என்று கூறியவாறு அவன் அருகில் நெருங்கி
வந்தவள், தலை சரித்து மையலுடன் பார்த்து அவனை கட்டி அணைக்க
முயல அமுதனோ தீச்சுட்டாற் போல அவசரமாய் பின்னால் தள்ளி நின்றவன், அவளை தொடாமலே
தள்ளி நிறுத்தியவன்
“டோன்ட் டச் மி... ஸ்டே அவே...” என்று உறுமியவன்
“லுக் மேக்னா...உன் காதலை என்னால்
ஏற்று கொள்ள முடியாது. நான் ஏற்கனவே என் சதுவை லவ் பண்றேன். அவளைத்தவிர வேற
யாரையும் என்னால் மணக்க முடியாது.
என் மாம் பேச்சை கேட்டு நீ வீணாக உன்
மனதில் ஆசையை வளர்த்துக்காத. நீ சொன்ன மாதிரி உன் அழகுக்கும், அந்தஷ்த்துக்கும் நிறைய பேர் உன்னை மணக்க போட்டி போடலாம்.
அவர்களில் உனக்கு பிடித்தவரை நீ மணந்து
கொள். வீணாக எனக்காக முயற்சி செய்யாதே. இந்த அமுதன் ஒரு முடிவு எடுத்துவிட்டால்
எப்பொழுதும் பின் வாங்க மாட்டான்.
அதுவும் என் பெர்சனல் லைப்...அது நான்
திட்டமிட்டபடிதான் இருக்கும். அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை...” என்று தன்
பெற்றோர்களை பார்த்து முறைத்தவன்
“அதனால் என்னை நெருங்க முயல்கிற வீணான
வேலையை விட்டுவிட்டு உருப்படியா உன் எதிர்காலத்தை திட்டமிடு. இந்த ஜென்மம் இல்லை..
எத்தனை ஜென்மம்னாலும் சத்யாதான் மை வைப். நோ சேன்ஜ்...குட் பை....”
என்று கை முஷ்டியை இறுக்கியவன் படபடவென்று
பொரிந்து தள்ளி விட்டு விடுவிடுவென்று
அந்த அறையில் இருந்து வேகமாக வெளியேறிச் சென்றான்.
அதைக்கண்ட மதியழகனுக்கு கவலையாக
இருந்தது. ஆனால் தன் மனைவியை எதிர்த்து
எதுவும் சொல்ல முடியாமல் கையை பிசைந்து கொண்டிருந்தார்.
அவ்வளவு பெரிய தொழில் சாம்ராஜ்யத்தின்
சக்கரவர்த்தி, மற்றவர்களை தன் பார்வையால் அடக்கி நிறுத்துபவர், அடங்கிப் போவது தன்
மனைவியிடம் மட்டுமே..
அதனால் ரூபாவை மீறி எதுவும் செய்ய முடியாமல்
கையை பிசைந்து கொண்டிருந்தார்.
தன் வீடு திரும்பிய சத்யா தன் அலங்காரத்தை கூட கலைக்காமல் தன் அறைக்கு
சென்று கட்டிலில் குப்புற படுத்து ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்.
“இதை... இதை... இதைத்தான் முன்பே
யோசித்து வேண்டாம் என்று சொன்னேன்... இந்த அம்மாதான் பிடிவாதம் பிடித்து என்னை
சம்மதிக்க வைத்தார்கள்
இப்பொழுது பணம் பணத்தோடு சேரும்
என்பதுபோல அவனுடைய அன்னை பெரிய இடமாக அல்லவா பேசி முடித்து விட்டார்...” என்று
தனக்குள்ளே மருகினாள் சத்யா.
அன்றைய நாள் முழுவதும் பிஸியாக
இருந்தான் அமுதன். புது நிறுவனத்தின் ஆரம்ப நாள் என்பதால்,
தலைக்கு மேல் வேலை இருந்தது.
புது ப்ராஜெக்ட் நிறைய கொண்டு
வரவேண்டும். புது கஸ்டமர்களை பிடிக்க வேண்டும். .ஏற்கனவே பழைய நிறுவனத்தில்
இருந்து வெளியேறிய பழைய கஸ்டமர்களை சந்தித்து மீண்டும் அவர்களுடனான ஒப்பந்தத்தை
புதுப்பிக்க வேண்டும் என்று பல வேலைகள்..
அதனால் தன்னுடைய சொந்த பிரச்சனையை
பின்னுக்கு தள்ளி, தொழிலில் தன் தலையை நுழைத்துக்
கொண்டான்...இரவு 12 மணிக்குமேல் தன் இருப்பிடத்திற்கு திரும்பியவன் இரவு உணவை கூட
தவிர்த்து, உடம்பு கழுவி,
இரவு உடைக்கு மாறியவன்,
அசந்து போய் படுக்கையில் தொப்பென்று விழுந்தான்...
அடுத்த நொடி சத்யாவின் அழுது கொண்டே
சென்ற முகம் கண் முன்னே வந்தது. வேலை நெட்டி முறித்ததால் அவனால் அதற்கு மேல்
சத்யாவை தொடர்பு கொள்ள முடியவில்லை.
சரி இப்பொழுது அழைக்கலாம் என்று
எண்ணியவன் மணியை பார்க்க, மணி 12 க்கு மேல் ஆகி இருந்தது.
இந்த நேரத்தில் அழைக்கலாமா என்று
யோசித்தவன் மனம் கேட்காமல் தன் அலைபேசியை எடுத்து சத்யாவிற்கு அழைக்க, அவளும் அமுதன் எண்ணை பார்த்ததுமே
அழைப்பை துண்டித்தாள்...
அப்படி என்றால் அவளும் இன்னும்
தூங்காமல் தான் இருக்கிறாள் என்று புரிய, அவன் மனதுக்கு கஷ்டமாக இருந்தது. திரும்ப அழைக்க, திரும்ப கட் பண்ணினாள்.
ஒரு கட்டத்திற்கு மேல் தன் அலைபேசியை
ஸ்விட்ச் ஆப் பண்ணி விட்டாள் சத்யா. எவ்வளவு முயன்றும் அவளை தொடர்பு கொள்ள
முடியாமல் போனது அமுதனுக்கு. தன் பக்க விளக்கத்தை கேட்காமலயே இப்படி முரண்டு
பண்ணுகிறாளே என்று வேதனையாக இருந்தது.
அதே வேதனையோடு கண்ணை மூடி உறக்கத்தை கொண்டு வர முயன்றான் அமுதன்..!
Sathya va kandipa ammukuda sethu vainga mam
ReplyDeletesure pa. keep watching!
Delete