உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-31

 


அத்தியாயம்-31

தியின் அணைப்பில் மயங்கி அவன் மெய் தீண்டலில் கிறங்கி அவன் மஞ்சத்தில் தஞ்சம் புகுந்திருந்தவளை மெல்ல மெல்ல தன் வசப்படுத்தி கொண்டிருந்தான் ஆதி...

சரியாக அந்த நேரம்

“பவித்ரா... “என்று அழைத்துக்கொண்டே வீட்டிற்கு உள்ளே வந்தாள் அந்த அபி குட்டி..

அது சிறிய வீடு என்பதால் வெளியில் இருந்து பேசினால் பவித்ராவின் அறைக்கு கேட்கும்...

அபியின் முதல் அழைப்பிற்கு பவித்ராவிடம் இருந்து பதில் வராததால் மீண்டும் உரக்க அழைத்தாள் அபி...

அந்த குரல் குளியல் அறையில் இருந்தவளின் செவியை எட்ட, அதுவரை வேலை நிறுத்தம் செய்திருந்த அவளின் அறிவு விளித்துக்கொண்டது..

மெல்ல மெல்ல தன் நிலைக்கு வந்தவள் தான் அவன் மார்பில் சாய்ந்திருப்பதை உணர்ந்து மெல்ல நிமிர்ந்து அவன் முகம் நோக்க, அவனோ கண்களில் போதை ஏறி கணவன் பார்வையுடன் அவளின் செவ்விதழை நோக்கி குனிந்தான்...   

அவ்வளவுதான்... தன்னிலை அடைந்தவள் அவனின் மார்பில் கை வைத்து பின்னுக்கு தள்ளி, அவனிடமிருந்து துள்ளி குதித்தாள் வலையில் இருந்து தப்பித்த மீனாக...

“ஹே...”  என்று அவள் கையை எட்டி பிடிக்கு முன்பே, அவனிடம் இருந்து விடுபட்டு சிட்டாக வெளியில் விரைந்து இருந்தாள் பவித்ரா..

ஆதிக்கோ பெரும் ஏமாற்றமாக இருந்தது...அதுவரை தன்  அணைப்பில் மயங்கி இருந்தவள் திடீரென்று தன்னை பிடித்து தள்ளிவிட்டு பாதியில் சென்றது அவன் கோபத்தை தூண்ட அவன் கண்கள் சிவந்தன... அவன் உடல் விரைத்தது ஆத்திரத்தால்...  

“சே!! இவளிடம் மட்டும் ஏன் நான் இப்படி தடுமாறுகிறேன்?? ... இப்படி என்னை ஆட்டி வைக்கிறாளே இந்த ராட்சசி...நானும் எத்தனையோ பெண்களை பார்த்திருக்கிறேன்.. உல்லாசமாக இருந்திருக்கிறேன்...

ஆனால் யாரும் இதுவரை இந்த மாதிரி என்னை நிலை தடுமாற வைத்தில்லை... எல்லாமே ஒரு எல்லையோடு முடிந்துவிடும்.. அப்படி என்ன இருக்கிறது இவளிடம்??  “என்று யோசித்தான்...

அவன் நினைவுகள் தானாக அவன் இந்த பழிவாங்கும் கேமை ஆரம்பித்த நோக்கத்தை தழுவியது....

பவித்ரா அத்தனை பேர் முன்னிலையிலும் அவனை அவமான படுத்தியதில் கொதித்தவன் அவளை பழி வாங்கனும் என்ற வெறியில் என்ன செய்யலாம் என்று யோசித்த பொழுது, அவனுக்கு தான் இதுவரை பழகிய பெண்களின் நினைவு வந்தது...

எல்லாருமே இவனுக்காக ஏங்குபவர்கள்.. இவன் கடைக்கண் பார்வை தங்கள் மேல படாதா என்று தவம் இருப்பவர்கள்... அப்படி பட்ட பெண்களை பார்த்து பழகியவனுக்கு, பவித்ராவையும் அந்த மாதிரி தனக்காக ஏங்க வைக்கணும்...

அவன் தீண்டல் வேண்டி அவன் காலடியில் விழ வைக்க வேண்டும்.. அதுதான் அவளை பழி வாங்க அவளுக்கு கொடுக்கும் சரியான தண்டனை என்று என்னினான்...

அதற்காக திட்டமிட்டு  அவளை திருமணம் முடித்து அவளை தன் அருகில் வைத்து கொண்டே அவளுக்கு கணவனின் சுகத்தை கொடுக்காமல் ஏங்க வைக்க வேண்டும் .. “என்று கணக்கு போட்டு இந்த கேமை ஆரம்பித்தான்...

ஆனால் அவன் எதிர்பார்த்த மாதிரி எதுவும் நகர வில்லை...

பவித்ரா அவனுடைய சவாலை எதிர்த்து நின்றாள்... அதுவும் இல்லாமல் அவளும் இவனுக்கு எதிராக சேலன்ச் பண்ணி இன்று வரை அவள் அதையே பின் பற்றுகிறாள்.... இதுக்கெல்லாம் அவளின் மன உறுதியே காரணம் என்று புரிந்தது...

நெருங்குவது தன் கணவனே என்றாலும் அவளுக்குள் இருக்கும் கோட்பாடு என்ற கவசம் அவளை எல்லை தாண்ட விட வில்லை..இனிமேலும் அந்த கவசத்தை உடைத்து அவளை வெளியில் கொண்டு வரமுடியும் என்று தோன்றவில்லை அவனுக்கு

ஆதியின் வாழ்க்கையில் இதுவரை அவன் தோல்வியே தழுவியதில்லை... ஏன் தன் பெற்றோர்களை சிறுவயதில் இழந்த பொழுது கூட கலங்காமல் தன் வாழ்க்கையை தானாகவே நிர்ணயித்தவன்.. எப்பொழுதும் யாருக்காகவும் ஏங்காமல் பார்த்து கொண்டான்...

ஆனால் முதல் முறையாக இந்த குட்டச்சியிடம் இப்படி தடுமாறி நிக்கறேனே..  என்று அவனுக்கு அவமானமாக இருந்தது.....

அவளை பழி வாங்க என்று ஆரம்பித்த இந்த ஆட்டம் கடைசியில் அவனுக்கு எதிராக திரும்பியதை போல இருந்தது.... அவள் எனக்காக ஏங்குவதற்கு பதிலாக என்னை அவளுக்காக ஏங்க வைத்து விட்டாளே இந்த ராட்சசி...

ஒவ்வொரு முறையும் அவளால் தூண்டப்படும் அவன் உணர்வுகளை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வருவதற்குள் படாத பாடு பட வேண்டி இருக்கிறது.... என்னை அறியாமலயே நானே என்னை தண்டித்து கொண்டிருக்கிறேனோ?? என்ற ஐயம் முதல் முறையாக தோன்றியது அவனுக்கு...

எப்படி இதெல்லாம் என்னால் தாங்க முடிகிறது..?? . தொழிலில் ஒரு போட்டி என்றால் எதிரியை உடனே வீழ்த்தி விட்டு தான் மறுவேலை... ஆனால் இவள் என் எதிரி என்று தெரிந்தும் நான் ஏன் இவளை திருமணம் என்ற பெயரில் என்  அருகில் கொண்டு வந்தேன்?? ஏன்  இவ்வளவு பொறுமை காக்கிறேன் இவளிடம் மட்டும்?? என்று ஆராய்ந்தான்....

அப்பொழுது தான் அவனுக்கு புரிந்தது அவன் ஆழ்மனதில் இருப்பதை....

“Yes…. I’m in love with her..She is my love..She is my better half”

“என்னை மொத்தமாக அவள் பக்கம் சாய்த்து விட்டாள்.. நான் அவளிடம் தோற்று விட்டேன்... முதல் முறையாக வாழ்வில் நான் சந்தித்த தோல்வி.... “என்று பெருமூச்சு விட்டான்..பின் சிறிது யோசித்தவன்

“இருக்கட்டும்...  அதுவும் என்னுடைய ஸ்வீட் ராட்சசி கிட்டதான தோற்றேன்...

வாழ்வில் தோல்வியும் சுகமே என்று உணர வைத்தவள்... “ என்று உணர்ந்தவனின் கோபம் மறைந்து உதடுகளில் புன்னகை அரும்பியது...

அவன் உடலின் இறுக்கம் மறைந்து புதுசுகம் பரவியது.. அதுவும் சற்று முன் வரை  அவன் மார்பில் ஒன்றியிருந்தவளின் மென்மை நினைவு வர, இன்னும் அவன் மனம் பரவசமடைந்தது....

ஷவரில் இருந்து நீர் இன்னும் கொட்டி கொண்டிருக்க, அவன் தன் கையை உயர்த்தி தன் கேசத்தை இரண்டு கையாலும் கோதினான் மெல்ல சிரித்து கொண்டே....

அவன் மனமோ அடுத்து என்ன ??  என்று கேள்வி கேட்டது...

தலையில் சிறிது நேரம் கை வத்து தன் மேல் கொட்டி கொண்டிருக்கும் அந்த குளிர்ந்த நீரும் அது தந்த சுகத்தையும் அனுபவித்தவாறு கண் முடி யோசித்தான்....

“எப்படியோ.. இனிமேல் என் வாழ்வில் அவள் மட்டுமே.. அவளுடன் தான் சேர்ந்து வாழப் போகிறேன்... என் சவாலில் நான் தோற்று விட்டேன்..ஆனாலும் இந்த ராட்சசி எப்படி என்னை  அவள் சவாலில் ஜெயிக்க போகிறாள் என்று பார்க்கலாம்...

Let’s continue this game…எதுவரைக்கும் போகும்னு பார்க்கலாம்.. “ என்று சிரித்து கொண்டே ஷவரை அனைத்து தன் குளியலை முடித்து உல்லாசமாக விசில் அடித்த படியே வெளியில் வந்தான்..   

 தியிடம் தப்பித்து வெளியில் ஓடி வந்த பவித்ராவோ முழுவதும் நனைந்திருக்க, மீண்டும் ஒரு புடவையை எடுத்துகொண்டு தன் அம்மாவின் அறைக்கு சென்று அங்கு இருந்த குளியலறையில் மீண்டும் ஷவரை திறந்துவிட்டு அதன் அடியில் நின்றாள்...

அந்த ஷவரின் நீர் அவள் உடலில் படும்பொழுது அவன் தொட்ட ஞாபகம் வர  சிலிர்த்தது அவள் உள்ளே... தன்னை இறுக்கி அணைத்து தன்  இதழை அவன் வருடியது நினைவு வர, அந்த சுகம் இப்பொழுதும் அச்சு பிசகாமல் அவள் உள்ளே பரவியது மீண்டும்...  அவள் உடல் மெல்ல எடை அற்று விண்ணில் பறப்பதை போல இருந்தது...

மெல்ல அவள் இதழ்களை தன் கையால் அவளே வருடி கொண்டாள்.. ஆனால் அது அவன் வருடியதை போல இல்லை....பின் தன் கன்னத்தை அவளே தீண்ட அதுவும் இதுவல்ல அது என்று சிணுங்க, அவள் மனம் அவளை அறியாமல் அவனுக்காக, அவன் அணைப்பிற்காக ஏங்க ஆரம்பித்தது...

தன் நிலையை, தன்  மனம் போகும் போக்கை எண்ணி திடுக்கிட்டாள் பவித்ரா..

சீ!! என் புத்தி ஏன் இப்படிபோகுது?? ஒரு நிமிடம் என்றாலும் அவனுக்காக நான் ஏங்கி நின்றேனா??  ... அப்படி என்றால் நான் தோற்று விட்டேனா?? ...  அவனுக்காக நான் ஏங்கி நிப்பதா??..”

அப்பொழுது அவன் முதலிரவு அன்று சொன்ன உன்னை எனக்காக ஏங்க வைப்பேன்.. உன்னை என் காலடியில் விழ வைப்பேன் என்றது நினைவு வர, அப்படீனா அவன் சொன்ன மாதிரியே செஞ்சுட்டானோ?? .. ஒரு வேளை என்னை அவன் காலடியில் விழ வைக்கத்தான் என்னை உடலால் நெருங்க முயன்றானா.?? ..நானும் வெக்கம் கெட்டு அவனுடன்  குழைந்து நின்றேனே..

ஏன் இப்ப கூட அவன் செய்ததுக்கு அவன் மேல் கோபம் வராமல் அவனுக்காக இப்படி ஏங்கி நிக்கிறேனே... அப்ப நான் தோற்று விட்டேன்..இந்த பவித்ரா முதல் முதலாக தோற்றுவிட்டாள்... “ என்றவளின் கண்களில் இருந்து நீர் வழிந்தது...

தன் தலையில் கை வைத்து சிறிது நேரம் அப்படியே அந்த கொட்டும் நீரின் அடியில் நின்றாள்...பின் சிறிது நேரம் யோசித்தவள்

“ஹ்ம்ம்ம் எது  அப்படியோ... என்  தோல்வி எனக்குள் மட்டுமே இருக்கட்டும்... அவனுக்கு தெரியக் கூடாது... பார்க்கலாம் அவன் என்னை எப்படி ஜெயித்து காட்டப் போறான் என்று... அதுவரைக்கும் என்னை வெளிபடுத்தக் கூடாது...

இனிமேல் அவன் பக்கமே போகக் கூடாது..ஜாக்கிரதையா இருக்கனும்.” என்று முடிவு செய்தவள் முகத்தை நன்றாக அழுந்த நீரால் கழுவினாள்.. மனம் ஓரளவுக்கு தெளிவானதும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது..

 பின் தன் மீதி குளியலை முடித்து மீண்டும் புடவையை கட்டி கொண்டு தலையில் டவலை சுற்றி கொண்டு வெளியில் வந்தாள் பவித்ரா...

பவித்ராவின் அறையில் இருந்த தன் மகள் தன் அறையில் இருந்து வருவதையும் அவள் வேற ஒரு புடவையை கட்டி கொண்டிருப்பதையும் கண்டவர் என்ன நடந்திருக்கும் என்று புரிந்ததால், மனதுக்குள் மிகவும் மகிழ்ந்து போனார் பார்வதி..

பவித்ராவுக்கோ தன் அன்னையின் முகத்தை பார்க்க வெக்கமாக இருந்தது.... அவரின் முகத்தை பார்க்காமல் வேறு பக்கம் திரும்பி கொண்டாள்...அதை கண்ட பார்வதி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே

“பவி, இங்க வா... நான் தலைய துவட்டி விடறேன்..” என்றார் தன் முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டு

அதன் பின் பவித்ரா சகஜமாக பேச ஆரம்பித்தாள் தன் அன்னையிடம்...

பவித்ரா நின்று கொண்டிருக்க அவள் தலையில் சுத்தியிருந்த டவலை எடுத்து அவள் கூந்தலை அழுந்த துடைத்து கொண்டிருந்தார் பார்வதி..

அதற்குள் குளித்து முடித்து பவித்ரா வாங்கி வந்திருந்த ஜீன்ஸ் ம் டீ ஷர்ட் ஐயும் அணிந்து ஹாலுக்கு வந்தான் ஆதி.. அவன் வருகையை அறிந்து அவள் பார்வை தானாக அங்கு தாவியது.. அதை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து வைத்து கொண்டாள் ...

ஆனால் பார்வதி அவனை பார்த்து,

“வாவ்.. சூப்பரா இருக்கு மாப்பிள்ளை.. இந்த ட்ரெஸ் உங்களுக்கு.. “ என்றார்..

இதற்கும் மேல் அவனை பார்க்காமல் இருக்க முடியாது என தோன்ற மெல்ல நிமிர்ந்து அவளும் அவனை பார்த்தாள்...

அவனுக்கு அவ்வளவு பொருத்தமாக இருந்தது அவள் வாங்கி வந்திருந்த ஜீன்ஸ் ம்  டீ சர்ட் ம்.... தன்னையும் மறந்து அவனையே இமைக்க மறந்து ஓரக்கண்ணால் பார்த்திருந்தாள் பவித்ரா...அதற்குள் அருகில் வந்த  ஆதி 

“தாங்க்ஸ் அத்தை .. “ என்றவன் பவித்ராவை பார்த்து கண் சிமிட்டினான்...  

அதை கண்டு பவித்ராவின்  கன்னம் சிவந்தது... தன்னை கட்டுபடுத்திகொண்டு  அவனை பார்த்து முறைத்தாள்.. தன் விரலை நீட்டி கொன்னுடுவேன் என்று  ஆக்சன் பண்ண, அவனோ தன் உதட்டை குவித்து காற்றில் முத்தமிட்டான்  அவள் இதழ்களை பார்த்தவாறே...

அதில் மேலும் சிவந்தவள் கீழ குனிந்து கொண்டாள்

அதற்குள் பார்வதி அவள் தலையை துவட்டி முடித்து தலையை வாரி கொண்டிருந்தார்... அவளின் அந்த மயில் தோகை போல  விரிந்திருந்த கூந்தலை கண்டவன் அதை ரசித்தவாறெ

“எப்பதான் இந்த பட்டு கூந்தலை தொட்டு பார்க்க பாக்கியம் கிடைக்குமோ?? இந்த ராட்சசி ரொம்ப படுத்தறாளே.. பேசாமல் ஆட்டத்தை நிறுத்திடலாமா?? “ என்று யோசிக்க ஆரம்பித்தான்...

அவன் மனசாட்சியோ

“டேய் ஆதி... இந்த குட்டச்சி முன் வச்ச காலை பின் வைக்க மாட்டேனு சவால் விடறா... அவளுடைய அந்த இரண்டு அடி காலை வச்சுகிட்டே அப்படி குதிக்கிறா... நீ பனைமரம் மாதிரி இவ்வளவு பெரிய காலை வச்சுகிட்டு நீ  மட்டும் முன் வச்ச காலை பின்னாடி வைக்கலாமா.??.. இது  அடுக்குமா?? ...

அதெல்லாம் முடியாது... நீயும் பின் வாங்க கூடாது.. பார்க்கலாம் அவள் எவ்வளவு தூரம் முறுக்கி கிட்டு போறானு..  “என்று முறுக்கிவிட்டது அவனுக்கு...  

அதற்குள் பார்வதி பவித்ராவுக்கு தலை பின்னி முடித்து பிரிட்ஜில் இருந்த பூவை எடுத்து வந்து அவள் தலையில் அழகாக வைத்து விட்டார்..

மாப்பிள்ளை அவளையே இமைக்காமல் பார்த்து கொண்டிருப்பதை கண்டு நமுட்டு சிரிப்பை சிரித்தவாறே சமையல் அறைக்கு சென்று டீ எடுத்து வந்து கொடுத்தார் அவனுக்கு...

குடித்து முடித்ததும் இருவரும்  கிளம்ப தயாராக, மீண்டும் அந்த அபி வர, பவித்ரா ஓடி சென்று அவளை அள்ளி கொண்டாள்...

“நீ தான்டா செல்லம் சரியான நேரத்துல வந்து என்னை காப்பாத்தின.. “என்று மெல்ல முனகி அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்... அந்த அபி குட்டி புரியாமல் முழிக்க,

ஆதியும் எழுந்து அருகில் வந்து அபியின் கன்னத்தில் முத்தமிட்டு அதே சாக்கில் பவித்ராவின் கன்னத்திலும் முத்தமிட்டான்...

“ஐயோ!! என்று பதறி இப்படி நடு ஹாலில் நின்று அவன் முத்தமிடுவான் என்று எதிர்பார்க்காதவள் சுற்றிலும் பார்த்தாள் யாராவது பார்த்து விடுவாங்களோ என்று..

அதை  கண்டு மீண்டும் குறும்பாக சிரித்துக் கொண்டான்..

சமையல் அறையில் இருந்து வந்த பார்வதி அவர்கள் இருவரையும் ஒன்றாக அமர வைத்து “என் கண்ணே பட்டுடும் உங்க ரெண்டு பேருக்கும்... “ என்று சிரித்துகொண்டே அவர்களுக்கு திருஷ்டி சுத்தி போட்டார்..

பின் தன்  மாப்பிள்ளையிடம் திரும்பி

“ரொம்ப  தாங்க்ஸ் மாப்பிள்ளை.. இந்த சின்ன வீட்டில் இவ்வளவு நேரம் அட்ஜஸ்ட் பண்ணி இருந்ததுக்கு...பவித்ரா கொஞ்சம் விளையாட்டு தனமா இருப்பா... நீங்க கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க... “ என்று தழுதழுத்தார்...

அதை கேட்ட பவித்ராவுக்கோ

“இந்த அம்மா எதுக்கு இவன் கிட்ட போய் இப்படி கெஞ்சி கிட்டு இருக்கு??  இவன் என்ன என்னை அட்ஜஸ்ட் பண்றது.. “ என்று மனதுக்குள் பொரிந்தவள் ஆதியை பார்த்து முறைத்தாள்...

ஆதியும் “அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் அத்தை... நீங்க அவள பத்தி இனிமேல் கவலைப்படாதிங்க... ப்ரீயா இருங்க.. எங்க வீட்டுக்கு அடிக்கடி வாங்க.. “ என்று சொல்லி சிரிக்கவும் பார்வதிக்கு மனம் நிறைந்து இருந்தது....

திருமணம் ஆகி புருஷன் வீட்டுக்கு தன் மகளை அனுப்பி வைக்கும் ஒவ்வொரு தாயின் கவலை, தன் மகள் போற இடத்தில் எப்படி வாழப் போகிறாளோ?? ஒவ்வொருவரையும் அனுசரித்து அங்கு உள்ள நடைமுறைக்கு எப்படி தன்னை மாற்றி கொள்ளப் போகிறாளோ?? என்ற கவலையே முன்னே நிக்கும்...

அதனால் தன் மகள் மறுவீடு வரும் சமயம் தாயின் கண்கள் தன் மகளின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்கும்.. என்னதான் மகள் தான் நல்லா இருப்பதாக வாயால் சொன்னாலும் கண்ணால் நேரில் அவள் நடவடிக்கையை கண்டு எங்காவது அவள் மனம் வாடி இrருக்கிறாளா என்று தெரிந்த பிறகே நிம்மதி வரும் அந்த தாய்க்கு....

அதே மாதிரி பார்வதியும் தன்  மகளை அவள் வந்ததில் இருந்தே கூர்ந்து கவனித்தார் அவள் அறியாமல்... மகளும் மருமகனும் அடிக்கடி வம்பு இழுத்து சண்டை போட்டாலும் அவர்கள் கண்ணில் தெரிந்தது ஒருவர் மீது ஒருவர் காட்டும் அனபு.. ஆனாலும் அவர்கள் நடுவே ஏதோ  ஒன்று கண்ணமுச்சி ஆடுவதை போல  தோன்றியது...

ஒருவேளை தன் மருமகனை நெருங்கும் பொழுது ஒவ்வொரு முறையும் பவித்ரா தயங்கியதாலா இல்லை தாய்க்கே உரித்தான தன் மகளின் முகத்தை கண்டே அவளுக்குள் என்ன இருக்கிறது என்பதை கண்டு அறியும் சக்தியாலா... ஏதோ ஒன்று அவருக்கு முரண்டியது...

அதனாலயே ஆதியிடம் பவித்ராவை அட்ஜஸ்ட் பண்ணிக்க சொன்னது.. அதற்கு தன் மாப்பிள்ளையின் பதில் அவருக்கு திருப்தியாகவும் நிம்மதியாகவும் இருந்தது.. எதுவானாலும் மாப்பிள்ளை பவித்ராவை பார்த்துகொள்வார்  என்ற நிம்மதி வந்தது ...

அதே அவர் முகத்தில் எதிரொலிக்க,  பவித்ராவை கட்டி கொண்டார்... பவித்ராவும் அவரை கட்டி கொண்டு கண் கலங்க, அதற்குள் பார்வதி சுதாரித்து கொண்டு சிரித்து கொண்டே அவர்களை வழி அனுப்பி வைத்தார்... பவித்ராவும் பிரிய மனம் இல்லாமல் தன் தாயை  திரும்பி திரும்பி பார்த்து கொண்டே சென்றாள் ஆதியுடன்...! 





Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!