உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-33

 


அத்தியாயம்-33

காரை ஓட்டி கொண்டிருந்தவனுக்கு அந்த மாமி சொன்ன சில விசயங்கள் திரும்ப திரும்ப ஒலித்து கொண்டிருந்தன..அதோடு அன்றைய  நாளை திரும்ப நினைத்து பார்க்க, இன்று மட்டும் எத்தனை புதுவிதமான அனுபவங்கள் என்று மீண்டும் அசை போட்டான்...

அந்த குட்டி பசங்களின் சந்தோஷத்தில் இருந்து, அந்த அபி குட்டியின் கொஞ்சும் மழலை பேச்சு, தன் மாமியாரின் உபசரிப்பு மற்றும் முதல் முதலாக கோவிலுக்கு சென்றது என்று எல்லாமே வித்தியாசமாக இருந்தது....

அதுவும் அந்த குளியலறை சம்பவம் இன்னும் தித்தித்தது அவன் உள்ளே... மெல்ல சிரித்துக் கொண்டே பவித்ராவை பார்க்க, அவளோ  அந்த மாமியின் பேச்சுக்கு அவன் தன்னை கலாய்க்க போறான் என்று தன் வாயை திறக்காமல் அமைதியாக மறுபுறம் திரும்பி வேடிக்கை பார்த்து வந்தாள்...  

கார் நேராக சென்று  ஒரு ரெஸ்டாரண்டில் நின்றது... திரும்பி பார்த்தவள் அவன் இறங்கவும்

“இங்க எதுக்கு நிறுத்தறான்?? ” என்று நினைத்து கொண்டே அவளும் இறங்கினாள்...

அவன் அவளின் கையை பிடித்து உள்ளே அழைத்து சென்றான்... அவனை கண்டதும் ரிசப்ஷனில் இருந்தவர்கள் மற்றும் வழியில் தென்பட்டவர்கள் அனைவரும் அவனுக்கு  விஷ் பண்ணினார்கள்.. பவித்ரா ஆச்சர்யமாக பார்த்து கொண்டே அவனுடன் நடந்தாள்...

“எப்படி எல்லாருக்கும் இவனை தெரிந்திருக்கிறது?? ஒரு வேளை மற்ற பொண்ணுங்க கூட இங்க வந்திருப்பானோ??  “ என்று தோன்றவும் அவளுக்கு அருவருப்பு மற்றும் எரிச்சலாக வர தன் கையை அவன் பிடியிலிருந்து இழுத்துக் கொண்டாள்..

இருவரும் காலியாக இருந்த ஒரு டேபிளில் சென்று அமர்ந்தனர்.. அது ஒரு ப்ரைவசியான இடம்.. விளக்குகளை அனைத்து வெறும் கேண்டில் மட்டும் இருந்தது ஒவ்வொரு டேபிலிலும்... எல்லா டேபிலிலும் ஜோடி ஜோடியாக நெருக்கமாக அமர்ந்து இருந்தனர்...

“இங்க எதுக்கு வந்திருக்கான்?? இப்பத்தான வயிறு முட்ட சாப்பிட்டான்.. அதுக்குள்ள பசிக்க ஆரம்பிச்சிருச்சா?? சரியான சாப்பாட்டு ராமனா இருப்பான் போல  “  என்று முனகியவாறெ அவனுக்கு எதிர் பக்கமாக அமர்ந்தாள்..

இருக்கையில் அமர்ந்தவன் இன்னும் அமைதியாகவே எதையோ யோசித்து கொண்டு இருந்தான்.. அவனின் மௌனத்தை கண்டவள்

“என்னாச்சு பாஸ்?? ” என்றாள் மெதுவாக...மெல்ல நிமிர்ந்தவன்

“தாங்க்ஸ் பேபி..  “ என்று அவள் கையை பிடித்துகொண்டான்...

அவள் ஒன்றும் புரியாமல் முழிக்க

“It was a nice experience for me and I enjoyed a lot today… I really loved it. It’s all because of you” என்று அவள் கையை எடுத்து முத்தமிட்டான்....

அவளுக்கு கூச்சமாக இருந்தது.. அவளுக்கு புதிதாக இருந்தது அவனை பார்க்க...  அவன் உணர்ச்சி வசப்பட்டு பார்த்ததில்லை இதுவரை...

பவித்ராவும் அவன் முத்தத்திற்கு வெறுப்பை காட்டாமல் அழகாக புன்னகைத்தாள்..

அந்த கேண்டில் வெளிச்சத்தில்  அவளின் அந்த பளீர் புன்னைகை பல மடங்கு போதை ஏற்றியது அவனுக்கு..ஆனாலும் தன்  தலையை சிலுப்பி சமாளித்தவன்

மெதுவாக தன் கைகளுக்குள் அவள் கையை அலைந்து கொண்டே பேசினான்..

“எனக்குள் ஒரு ட்ரீம்.. இல்லை ஆம்பிஷன்.. ஒரு பெரிய இன்டஸ்ட்ரியல் டவுன்ஷிப் (Industrial Township) உருவாக்கனும்னு.. அங்கு நம்ம எம்லாய்ஸ்க்கு எல்லா வசதியும் இருக்கனும்.. வேலை இல்லைனு வெளில யாரும் போக கூடாது..அதே மாதிரி அவங்க குடும்பத்திற்கு தேவையான அனைத்து வசதிகளும் அங்கயே இருக்கணும்...  

அதனாலயே பொதுவா நான் நிறைய மூழ்கும் கம்பெனிகளை வாங்கி அந்த எம்லாய்ஸ் ன்   திறமைகளை வேறுவிதமாக  பயன்படுத்தி கொள்வேன் வேலை இல்லாமல் அவங்க குடும்பம் கஷ்டப் படக்கூடாது என்று... இன்று அந்த ஆன்ட்டி பேச கேட்கவும் என்னுடைய கனவை சீக்கிரம் நிறைவேற்றனும்னு இருக்கு...

இந்த மாதிரி பீப்புல் நடுவுல தான் ஒரு உண்மையான வாழ்க்கை இருக்கும் போல... நான் இதுவரை பார்த்ததெல்லாம் என்னவோ ஒரு செயற்கையான உலகம் போல இருக்கு இப்பொழுது...

Thanks for showing such  a nice people and different environment…“ என்று அவள் கையை அழுத்தினான்...

அவனுக்குள் இப்படி ஒரு எண்ணம் இருக்கும் என்று அவள் இதுவரை நினைத்து பார்த்ததில்லை... அவன் எப்பவும் தன்னுடன் விளையாடுவதை வைத்து அவனை ஒரு ப்ளேபாய் (Playboy) என்று குறைவாக எடை போட்டேனோ?? என்னதான் தன்னுடன் சீண்டி விளையாண்டாலும் தொழிலில் அவனை அடித்துகொள்ள ஆள் கிடையாது என்பது நினைவு வந்தது... பின் அவனை பார்த்து

“சூப்பர் ப்ளான் பாஸ்.. சீக்கிரம் ஆரம்பிங்க.. கலக்கிடலாம்.. வாழ்த்துக்கள்.. சிவாஜி படத்துல நம்ம தலைவர் பண்ணின மாதிரி..” என்று சிரித்தாள்

“வாட்???  இது மாதிரி எல்லாம் படம் வந்திருக்கா??  “என்று ஆச்சர்யமாக கேட்டான்

“ஹி ஹி ஹி. எங்க தமிழ் சினிமா னா என்னனு நினைச்சீங்க... இது மாதிரி எவ்வளவோ இருக்கு...”என்று இல்லாத காலரை தூக்கி விட்டு கொண்டாள்..

அவளின் அந்த செயலை ரசித்தவன்

“ஒகே  பேபி... இப்ப என்ன சாப்பிடற?? ..”. என்று மெனு கார்டை எடுத்து அவள் அருகில் வைத்தான்.. “

“ஐயோ!! எங்கம்மா வயித்தில திணிச்சதே நிறைய இருக்கு பாஸ்.. இதுக்கு மேல உள்ள தள்ளினா அவ்வளவுதான்... இப்படி நீங்க கூட்டிட்டு வுருவீங்கனு தெரிஞ்சிருந்தால்   நான் அங்க கொஞ்சமா சாப்டிட்டு வந்திருப்பேன்...  “ என்று குறைபட்டாள்...

“அதனால் என்ன.. இன்னொரு நாள் வரலாம்.. முதல் முதலா நீ  என்னுடன் வெளியில் வந்திருக்க... அதான் ஒரு சின்ன ட்ரீட்...இப்ப லைட்டா ஏதாவது சாப்பிடு... “ என்றான்.

அவள் கண்கள் தானாக ஐஸ்கிரீம் பகுதிக்கு தாவியது...

ஒரு வெண்ணிலா போதும் என்றாள்..

அவளை வித்தியாசமாக  பார்த்து விட்டு சர்வரை அழைப்பதற்கான பட்டனை அழுத்தினான்...

சர்வர் வரவும் தங்களுடைய ஆர்டரை கொடுத்துவிட்டு அவளிடம் திரும்பினான்..

அதற்குள் அதில் இருந்த விலையை  பார்த்து விட்டு

“ஐயோ.. ஒரு ஐஸ்கிரீம் இவ்வளவு விலையா?? ... இதயே வெளியில வாங்கினால் இதுல பாதி கூட வராது.... நல்லா கொள்ளை அடிக்கிறாங்க பாஸ்...  “ என்று திட்டினாள்...

அவன் சிரித்து கொண்டே

“இந்த விலை ஐஸ்கிரீம்க்கு மட்டும் இல்லை பேபி.. இந்த என்விரான்ட்மென்ட்க்கு... இந்த மாதிரி ஒரு சிட்சுவேசன் கொண்டு வர எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா?? ...

இந்த ரெஸ்டாரன்ட் பெயர் It’s Our Time..  இதோட ஸ்பெஷல், ஒவ்வொருத்தரும்   எல்லா கவலையையும் மறந்து தங்கள் நேரத்தை இந்த மாதிரி தனிமையில் அனுபவிக்க..

எல்லா டேபிளையும் பார்த்தியா... அவங்க சாப்பிட வர்றவங்க இல்லை... தங்கள் நேரத்தை மனதுக்கு பிடித்தவங்க கூட செலவு பண்ண... முன்னாடி இதுமாதிரி இடங்களுக்கு லவ்வர்ஸ் தான் அதிகம் வருவாங்க..

இப்ப கணவன் மனைவி கூட வார விடுமுறைகளில் இந்த மாதிரி. ஒரு தனிமையை விரும்பி நிறைய பேர் வர்ராங்க..அவங்களுக்கும் இந்த மாதிரி தனிமையில் மனம் விட்டு பேசி அவங்க காதலை ரெப்ரெஸ் பண்ணிக்க வேண்டி இருக்கு...

இது ஒரு ரொமாண்டிக் இடம் தெரியுமா??.. “  என்று அவளிடம் குனிந்து மெதுவாக கிசுகிசுத்தான்...

“ஓ! “  என்று உதட்டை குவித்தவள்,

“ஹ்ம்ம்ம் ஏன் இதே தனிமை அவங்க வீட்டு மொட்ட மாடிலயே கிடைக்குமே..!!! மொட்டை மாடிக்கு போய் அங்க ஒரு கேண்டிலை வச்சுகிட்டு அதுவும் நிலா வெளிச்சத்தில உட்கார்ந்தா இதை விட ரொமாண்டிக் ஆ இருக்கும் பாஸ்... 

என்னவோ போங்க... சம்பாதிக்கிற காசை இங்க வந்து கொட்டறாங்க.. இந்த ஓனருக்குதான் லாபம்... ” என்று பேசிக்கொண்டே இருக்க, அந்த விளக்கின் மெல்லிய வெளிச்சத்தில்  ஓ என்ற பொழுது குவிந்த அவளின் உதட்டின் மேலயே நிலைத்து நின்றது ஆதித்யாவின் பார்வை...

அதற்குள் அவர்கள் ஆர்டர் பண்ணியது வரவும், அவள் தன் ஐஸ்கிரீமை சுவைக்க ஆரம்பித்தாள்....எதேச்சையாக திரும்பியவள் அருகில் இருந்த ஜோடி தங்களை மறந்து முத்தம் கொடுத்து கொண்டிருந்தனர்...

அதை  கண்டதும் அவள் கன்னங்கள் சிவந்தது உடனே தலையை திருப்பி கொண்டாள்..

“கருமம்.. கருமம்... இதை  எல்லாம் தனியா ரூம்ல  பண்ணி தொலைக்கலாம் இல்லை.. இப்படி பொது இடத்துல வந்துதானா இப்படி கொஞ்சனும்?? “ என்று பொரிந்தாள்..அதை கண்ட ஆதி சிரித்து கொண்டே

“அவங்க நேரத்தை அனுபவிக்கிறாங்க பேபி...உனக்கு ஏன் பொறாமை??  உனக்கும் வேணும்னா சொல்.. நான் ரெடி...” என்று அவள் உதட்டை பார்த்துகொண்டே கண்ணடித்தான்..

“சீ.... இனிமேல் இப்படி எதுனா செஞ்சீங்க செருப்பு பிஞ்சிடும்  “ என்று கையை நீட்டி மிரட்டினாள்...

“அடிபாவி.. கட்டின புருஷன் கிஸ் பண்ணினா செருப்பால அடிப்பேனு சொன்ன முதல் பொண்டாட்டி நீயாதான் இருப்ப  “என்றான் அப்பாவியாக...

அவனின் அந்த முகபாவத்தை கண்டு உள்ளுக்குள் சிரித்தவள் எதேச்சையாக மறுபக்கம் பார்க்க, அங்கு ஒரு கபுல் தங்களை மறந்து ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருந்தனர் சில விநாடிகள்...

கணவன் மனைவி போலும்.. பழைய நினைவுகள் வந்திருக்கும் போல.. அந்த கணவனின் கண்களில் அத்தனை காதல்.. அதே அந்த மனைவியிடமும் பிரதிபலித்தாலும் ஏதோ  ஒன்று அந்த பெண்ணின் முகத்தில் தெரிந்தது... தன்  கணவன் அறியாமல் தன் வாட்சை அடிக்கடி பார்த்துக் கொண்டாள்...

பின் மெதுவாக “போகலாம் சிவா... நேரம் ஆகுது.. பசங்க காத்துகிட்டு இருப்பாங்க.. “ என்று சொல்லவும் அந்த கணவனின் முகம் லேசாக மாறியது..

ஒருவேளை தான் காதலுடன் பேசிக் கொண்டிருப்பதை கண்டுக்காமல் தன் மனைவி கிளம்புவதாக சொன்னதால் வந்த எரிச்சலோ??

பின் சிறிது நேரத்தில் அவர்கள் கிளம்பி விட்டார்கள்.. இதை  கண்டு கொண்டிருந்த பவித்ரா ஆதியிடம் திரும்பி,

“இந்த ரெஸ்டாரன்ட் பக்கத்தில குழந்தைங்கள பார்த்துக்கற மாதிரி ஏதாவது இருக்கா??.”  என்றாள்..

அவள் திடீரென்று சம்மந்தம் இல்லாமல் கேட்கவும் முதலில் முழித்தவன் காரணத்தை கேட்க,

“ஹ்ம்ம்ம் வந்து நீங்க சொன்ன மாதிரி தான் நிறைய கணவன் மனைவிகளும் இங்க வர்ராங்க பாஸ்... ஆனால் என்ன ஒரு அசௌகர்யம்னா, வீட்ல குழந்தைங்களை விட்டுட்டு  வர்றவங்க கொஞ்ச நேரத்துல அந்த குழந்தைங்க ஞாபகம் வந்திடும்னு நினைக்கிறேன்..

என்னதான் தங்கள் நேரத்தை இருவரும் ஒதுக்கி அனுபவித்தாலும் எல்லா அம்மாக்களுக்கும் கொஞ்ச நேரத்தில் தங்கள் குழந்தைங்க நினைவு வந்திடும்....

அதுவே பக்கத்திலயே குழந்தைங்க விளையாடற மாதிரி ,குழந்தைங்கள பாத்துக்கிற மாதிரி ஏற்பாடு செய்திருந்தால் அவங்களும் நிம்மதியாக குழந்தைங்களை அங்க விட்டுட்டு ரிலாக்ஷ் டா மனம் திறந்து நிறைய பேசலாம்.. தங்கள் நேரத்தை தன்  துணையுடன் அனுபவிக்கலாம்.. “ என்றவள் அவள் பார்த்த அந்த கபுல் பற்றி சொன்னாள்..  அதை கேட்டவன் வியந்து

 “வாவ்.. சூப்பர்  ஐடியா பேபி... இது எனக்கு தோணலையே...  “என்றான்..

இவனுக்கு எதுக்கு தோணனும் என்று எண்ணி கொண்டவள் பின் தன்  ஐஸ்கிரீமை முடிக்க, இருவரும் எழுந்து கிளம்பி சென்றனர்..

வெளியில் வந்ததும், அப்பொழுதுதான் பவித்ராவுக்கு  உறைத்தது அவர்கள் தாங்கள் சாப்பிட்டதுக்கு பணம் எதுவும் கொடுக்காமல் வந்தது... பின் அவனை பார்த்து

“என்ன பாஸ்.. சாப்பிட்டதுக்கு எதுவும் பே பண்ணாமல் போறீங்க?? ..” என்றாள் சந்தேகமாக..

“ஹ்ம்ம்ம் அதான்  நம்மலை யாரும் கேட்கலை இல்லை..அவங்களே கண்டுக்காமல் விட்டபிறகு நீ ஏன் கண்டுக்கற.. விடு.. இப்படியே எஸ் ஆகிடலாம் “ என்றான் தன் சிரிப்பை மறைத்து கொண்டு...

“ம்ஹூம். இல்லை.. அது தப்பு.. அடுத்தவங்களை ஏமாத்த கூடாது... நீங்க பர்சை கொடுங்க.. நான் போய் கொடுத்திட்டு வர்ரேன் என்றவள்.. “ எட்டி அவன் பாக்கெட்டில் இருந்த வாலட்டை எடுத்து கொண்டு வேகமாக ஓடினாள் அந்த பில்கவுண்டரை நோக்கி...

“ஹேய்... “ என்று அவன் தடுக்கும் முன் மறைந்திருந்தாள்...

அவனும் சிரித்து கொண்டே காரில் ஏறி அமர்ந்து இருந்தவன் அவள் வெளியே வருவதற்காக காத்துக்கொண்டு இருந்தான்..

நேராக உள்ளே சென்றவள் பில்கவுண்டரில் இருந்தவர்களை ஒரு பிடி பிடித்தாள்..

“என்ன சார் ??  இப்படியா ரெஸ்டாரண்டை நடத்துவீங்க?? ... யார் பே பண்றாங்க  பண்ணலைனு கவனிக்க மாட்டிங்களா??? நாங்க பாட்டுக்கு சாப்டிட்டு போய்ட்டா அப்படியே விட்டுடுவீங்களா?? .. இது மாதிரி எத்தனை பேரை அனுப்பி இருக்கீங்க??

உங்களை நம்பி இதை ஒப்படைச்சிருக்காரே உங்க ஓனரை சொல்லனும்... கூப்பிடுங்க அவரை.. நான் அவர்கிட்டயே கம்லெய்ன்ட் பண்றேன் “ என்று பொரிந்து தள்ளினாள்... அங்கு இருந்தவர்கள் முழித்து கொண்டு நின்றனர்...அப்பொழுது

“யெஸ் மேம் .. நான்தான் இந்த ரெஸ்டாரண்ட்  ஓனர்.. என்ன கம்லெய்ன்ட் பண்ணனும். சொல்லுங்க..  “என்று மார்புக்கு குறுக்காக கைகளை கட்டி கொண்டு குறும்பாக சிரித்து கொண்டு நின்றான் ஆதித்யா...

அவனை பார்த்ததும் அதிர்ச்சியில் வார்த்தை வரவில்லை அவளுக்கு...

“ஆங் ...நீ... நீங்க??  “ என்று கண்களை அகல  விரித்து நின்றாள்..

அங்கு இருந்தவர்கள் எல்லாம் அடக்க முடியாமல் சிரித்தனர் அவளை பார்த்து...

ஆதித்யாவும் சிரித்த வாறே

“Sorry guys..It’s just for fun.. you guys carry on…என்று கை  அசைத்தவன் அவள் கையை பிடித்து இழுத்து கொண்டு வந்தான் யாருக்கும் தெரியாமல்...

காரின் அருகில்  வந்தவன் அவள் பக்கம் கதவை திறந்து விட்டு அவளை உள்ளே தள்ளி மறுபுறம் சென்று அவனும் உள்ளே ஏறி அமர்ந்ததும்  விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான்...

பவித்ராவுக்கோ அவமானமாக இருந்தது...

“சே .. எல்லார் முன்னாடியும் என்னை இப்படி பல்ப் வாங்க வச்சுட்டானே... முன்னாடியே சொல்லி தொலைக்க வேண்டியதுதான இவன்தான் இந்த ரெஸ்டாரண்ட் ஓனர் னு...

நானும் இப்படி அவமானபட்டு நிக்க வேண்டி இருந்திருக்காது..  ” என்று தன்  கோபத்தை அவன் பக்கம் திருப்பினாள்.. அவள் முகம் சிவக்க, காது விடைக்க, மூக்கு இன்னும் கோபத்தில் துடிக்க, திரும்பி அவனை அடிக்க ஆரம்பித்தாள்..

“யூ ... ராஸ்கல்... ப்ராடு..சீட்டர்...  முன்னாடியே சொல்லி தொலைக்கிறதுக்கு என்ன??.. “ என்று தன் கோபம் அத்தனையும் திரட்டி  நன்றாக மொத்தினாள்..

ஆனால் அவனுக்கோ அந்த பட்டு கைகளின் அடி ஒன்றும் பெரிதாக தெரியவில்லை... அவளின் சிவந்த முகத்தையே ரசித்தவாறு , மந்தகாசமாய் சிரித்து கொண்டு இருந்தான்...

அவனின் சிரிப்பு அவளுக்கு மேலும் கோபத்தை தூண்ட இப்பொழுது அவன் மார்பில் அடிக்க வந்த   அவளை வேகமாக இழுத்து தன்  மடியில் கிடத்தி அவளின் இதழில் அழுந்த முத்தமிட்டான்...

திடீரென்று அவன் இழுத்ததில் அப்படியே அவன் மடியில் சரிந்தவள் அவனின் முத்தத்தில் கிறங்கி மயங்கிதான் போனாள் சில  விநாடிகள்... பின் வேகமாக சுதாரித்தவள் அவனை பின்னுக்கு தள்ளி, வேகமாக எழுந்து இருக்கையின் மறு பக்கம் வந்து சன்னலின் ஓரம் அமர்ந்து கொண்டாள் அவனை முறைத்தவாறு...

அவனும் சிரித்தவாறே காரை ஸ்டார்ட் செய்து செலுத்த ஆரம்பித்தான் உல்லாசமாக விசில் அடித்தபடி...

பவித்ராவோ அவனை முறைத்தவள் வெளியில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் அவன் பக்கம் மறந்தும் திரும்பாமல்....

சிறிது தூரம் சென்றதும், ஆதித்யா இளையராஜாவின் பாடலை ஒலிக்க வைக்க, ஒரு சில  பாடல்கள் ஓட, அதை ரசித்துக் கொண்டே அப்படியே முகத்தை திருப்பி கொண்டு அமர்ந்து இருந்தவள் அவளுடைய பேவரைட் பாடலான  

வா.. வா .. அன்பே.. அன்பே..

காதல் நெஞ்சே... நெஞ்சே..  

 

ஒலிக்க, தன்னை மறந்து தானாக நெருங்கி வந்து ஆதியின் அருகில் அமர்ந்து அவன் கையை பிடித்து கொண்டு, லேசாக அவன் தோளில் சாய்ந்து கொண்டே அந்த பாடலை ரசிக்க ஆரம்பித்தாள்...

இதைத் தான் எதிர்பார்த்தான் அவள் கணவனும்.. குனிந்து மெல்ல அவள் முகம் பார்க்க, இன்னும் பாதி கோபத்துடனும் பாதி இளகியும் இருந்த அவள்  முகத்தை கண்டு

“ராட்சசி...” என்று சிரித்துகொண்டே அவனும் பாடலை ரசிக்க ஆரம்பித்தான்....

கார் வீட்டை அடைந்ததும் குனிந்து அவளை பார்க்க, வழக்கம் போல அவன் மார்பில் சாய்ந்து தூங்கியிருந்தாள் பவித்ரா..

“இவளுக்கு இது ஒரு வியாதி.. எப்ப கார்ல உட்கார்ந்தாலும் தூங்க ஆரம்பிச்சுடறா... ஹ்ம்ம்ம் நமக்கும் இது வசதி தான்... “ என்று  குறும்பாக சிரித்தவாறு வழக்கம்  போல அவனின்  பூனைக்குட்டியை கையில் அள்ளிக் கொண்டான் ஆதி...

ராஜாவின் மனதை வருடும் மெல்லிசை பாடல்களின் மயக்கத்திலும், தன்  கணவனின் அருகாமையிலும் ஏற்கனவே  நன்றாக உறங்கி இருந்தவள் நாளை வரப்போகும் அதிர்ச்சியை அறியாமல் தன் கணவனின் கை சுகத்தில் இன்னும் சுகமாக உறங்கினாள் பவித்ரா....



Comments

  1. Mam unga story la enaku romba pidichathu entha story than mam. Na three novel padichiruken.

    ReplyDelete

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!