உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-34

 


அத்தியாயம்-34

றுநாள் காலையில் தாமதமாக கண் விழித்தாள் பவித்ரா...எழுந்ததும் நேற்றைய நிகழ்வுகள் நினைவு வந்தன...  கடைசியாக அவனுடன் காரில் வந்தது நினைவு வர, அதோடு அவள் அவனை முறைத்து கொண்டு வந்ததும் பின் ராஜாவின் பாடலை ரசித்துகொண்டு வந்ததும் நினைவு வர,

“அப்படீனா... நேற்றும் கார்லயே தூங்கிட்டனா?? சே!!  என்னை  பற்றி என்ன நினைப்பான்??... எப்படிதான் அவன் பக்கத்துல இருந்தா மட்டும் இப்படி தூக்கம் வருதோ?? இப்ப எப்படி அவன் முகத்துல முழிக்கிறது.. “  என்று புலம்பி கொண்டே அவன் படுக்கையை பார்க்க அது காலியாக இருந்தது..

“அப்பாடா... முன்னாடியே எழுந்து போய்ட்டான் போல.. அப்ப வசதியா போச்சு.. “ என்று சிரித்து கொண்டே குளியல் அறைக்குள் சென்று குளித்து முடித்து ஒரு சுடிதாரை அணிந்து கொண்டு கீழ இறங்கி வந்தாள்...

கடைசி படியில் கால் வைக்கவும்    

“பவித்ரா...” என்று ஆதி  கத்தியதை போல இருந்தது அவளுக்கு....

சுற்றிலும் பார்க்க அவன் எங்கும் இல்லாததால்

“சே.. அவனை நினைச்சுகிட்டே இருக்கிறதால அவன் கூப்பிடற மாதிரியே இருக்கும் போல.. “ என்று சிரித்துக் கொண்டவள் மீண்டும் ஒரு அடி எடுத்து வைக்க , மீண்டும்

“பவித்ரா... “ என்று கத்தினான் ஆதி.. இப்பொழுது உற்று கவனிக்க அவன் அலுவலக அறையில் இருந்து தான் வந்தது அந்த கத்தல்..

அதை கேட்டு திடுக்கிட்டவள், வேகமாக  ஒடி சென்றாள் அவன் அலுவலக அறைக்கு.. இதுவரை அவளை பெயர் சொல்லி அழைத்தது இல்லை அவன்..எப்பொழுதும் பேபி என்றே அழைத்தவன் இன்று முதல் முறையாக தன் பெயர் சொல்லி அழைக்கிறான்.. அதுவும் அந்த குரலில் அவ்வளவு கோபம் இருந்தது புரிய என்னவாக இருக்கும்??  என்று யோசித்து கொண்டே வேகமாக அவன் அறைக்கு சென்றாள்..

அவள் உள்ளே சென்றதும் அதுவரை தன்  லேப்டாப்பில் எதையோ பார்த்து கொண்டிருந்தவன் நிமிர, அவன் முகம் இறுகி, கண்கள் கோபத்தில் சிவந்து  ஒரு கோபம் கொண்ட புலியைப் போல இருந்தான் ஆதி... அவளை எரித்து விடுவதைப் போல பார்த்தவன்

“நேற்று எங்க போயிருந்த?? “ என்று கர்ஜிக்க, பவித்ராவுக்கோ அவனின் அந்த தோற்றத்தை கண்டு கை கால்கள் உதறல் எடுக்க ஆரம்பித்தது.. நாக்கு ஒட்டி கொள்ள அவளுக்கு பேச வராமல் முழித்து கொண்டு நிக்க

“சொல்லு டி.. எங்க போயிருந்த??  “என்று மீண்டும் கர்ஜிக்க, பவித்ராவோ எதுவும் நினைவு வராமல்

“நான் எங்கயும் போக... “ என்று முடிக்கு முன்னே

“ஏய்... நீ பொய் சொல்ல மாட்டேனு நம்பிகிட்டிருக்கேன்... என் நம்பிக்கையை பொய்யாக்கிடாத... உண்மையை சொல்.... எங்க போயிருந்த.. “ என்று மீண்டும் அதட்ட அவன் முதலில் கத்தியதை கேட்டு வேலை நிறுத்தம் செய்திருந்த அவள் மூளையை கசக்கி யோசிக்க, ஒரு வழியாக அவள் நேற்று கடைக்கு சென்றது நினைவு வர

“கடைக்கு போயிருந்தேன்.. “ என்று மென்று முழுங்கினாள்..

“யார் கடைக்கு?? “ என்று மீண்டும் அவன் கண்கள் இடுங்க கேட்க

“வந்து.. வந்து...  ரிஷி கடைக்கு... “ என்று அவள் முடிக்கு முன்னே  அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான்....

“உனக்கு எத்தனை தரம் சொல்றது.. அவன் கிட்ட பேசாத..  அவனை கண்டால் தள்ளி நில்லுனு....நீ அதை காதுலயே வாங்காம அவன் கடைக்கே போயிருக்க??  என்ன தைரியம் உனக்கு??

எதுக்கு அவன் கடைக்கு போன?? உனக்கு எதுனாலும் என்கிட்ட கேட்க வேண்டியதுதான.. இல்லைனா நம்ம கடைல போய் வாங்க வேண்டியது தான?? அதை விட்டுட்டு அவன் கடைக்கு எதுக்கு போன?? “என்று மீண்டும் உறுமினான்...

அவன் அடித்ததில் தன் கன்னத்தில் கை வைத்து கொண்டு, கண்களில் கண்ணீர் திரண்டு நிக்க, தலை  குனிந்து நின்றாள்...

“சொல்லு டீ.. கத்திகிட்டு இருக்கேன் இல்ல.. வாய திறந்து சொல்லு... எதுக்கு அவன் கடைக்கு போன??  “   என்று மீண்டும் கத்த

“வந்து.. வந்து... உங்களுக்கு சர்ப்ரைஸா கிப்ட் கொடுக்கனும்னு நேற்று எங்க வீட்டுக்கு பக்கத்துல இருந்த கடைக்கு போயிருந்தேன்.... அது அவன் கடைனு தெரியாது.. பில் போடறப்ப தான் வந்தான்...அதுக்கு மேல  எப்படி வாங்காமல் வர்றது... ” என்று மெல்ல முனகினாள் தன் வலியை பொறுத்து கொண்டு

“அப்படி என்னத்த வாங்கி தொலச்ச??.. “  என்றவன் பார்வை அவன் கையில் அணிந்திருந்த மோதிரத்திற்கு செல்ல

“ஓ...  இது அவன் கடையில தான் வாங்கினியா?? இந்தா... இத நீயே வச்சுக்க... “ என்று அந்த மோதிரத்தை கழற்றியவன் தூக்கி விசிற முயல, அவள் கண்ணில் தெரிந்த கெஞ்சல் பார்வையும் அதை கழட்ட வேண்டாமே என்ற பரிதவிப்பும் தெரிய விரலை விட்டு வெளியில் வந்த அந்த மோதிரத்தை மீண்டும் உள்ளே தள்ளி கொண்டான்...

அவள் முதல் முதலாக அவனுக்கு வாங்கி கொடுத்த கிப்ட் அது... அதை  தூக்கி எறிந்தால் அவளையே தூக்கி எறிந்ததை போல இருக்க, அதனாலயே எங்க அதை  கழட்டி எறிந்து விடுவானோ என்று அவளுள் பதற்றம் வந்தது... அவன் கழட்டாமல் அதை மீண்டும் தன் விரலிலயே அணிந்து கொள்ள அவ்வளவு வலியிலும் ஒரு வித நிம்மதி பரவியது அவளுள்...

ஆனால் இன்னும் எரிமலையாகி அவளை கடித்து கொண்டிருந்தான் ஆதி.. அவளுக்கு இன்னும் ஒன்றும் புரியவில்லை..

“நான் அந்த கடைக்கு போய் வந்தது எப்படி அவனுக்கு தெரிந்தது??.. அப்படியே தெரிந்தாலும் அதுக்கு எதுக்கு இவ்வளவு தூரம் கோபப்படணும்??  “ என்று குழம்பியவள் மெல்ல நிமிர்ந்து கண்ணில் நீர் தேங்கி நிக்க

“என்னாச்சு பாஸ்??  Anything wrong??...”என்று மென்று முழுங்கி மெதுவாக கேட்டாள்..

ஹ்ம்ம்ம்ம் Everything went wrong… நீ பண்ணி வச்சிருக்கிற காரியத்துக்கு Anything wrong னா கேட்கற?? “என்று மீண்டும் ஒரு முறை அவளை திட்டி தீர்த்தவன் தலையின் பின்னால் கை வைத்து தன் கண்களை இறுக மூடி அவன் அமர்ந்திருந்த நாற்காலியின் பின்னால் சாய்ந்து சிறிது நேரம் அப்படியே அமர்ந்து இருந்தான்

அவளுக்கே பாவமாக இருந்தது அவனை அப்படி பார்க்கையில்... ஆனால் என்ன நடந்தது என்று தெரியாமல் அவளுக்கு மண்டை குடைந்து கொண்டிருந்தது...மீண்டும் அவனிடம் எதையாவது கேட்டு திரும்பவும் வாங்கி கட்டிக்கணும் என்று எதுவும் பேசாமல், அமைதியாக தலையை குனிந்து நிக்க, சிறிது நேரத்தில் தலை  நிமிர்ந்தவன் தலையை உலுக்கி கொண்டு

“சரி சொல்லு.... நேற்று அவன் கடையில் நடந்ததை அப்படியே சொல்லு.. “ என்று மீண்டும் அதட்ட,

பவித்ராவும் கொஞ்சம் பயந்து கொண்டே  அவள் கடைக்கு போனதில் இருந்து நடந்தவையும், பின் அவள் அருகில் வந்து நின்ற அவன் பேச்சும் நடவடிக்கையையும் பற்றி சொல்ல,

“ராஸ்கல்... எவ்வளவு தைரியம் அவனுக்கு.. “ என்று மீண்டும் பல்லை கடித்தான் ஆதி ...

அவளும் மெல்ல தைரியத்தை வரவழைத்து கொண்டு

“என்னாச்சு பாஸ்.. கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்களேன்... எனக்கு ஒன்னும் புரியல..” என்றவள் முன்னே அன்றைய செய்தித்தாளை எடுத்து போட்டான்...

அதில் வணிக பகுதியில் முதல் பக்கத்தில் பவித்ரா அந்த ரிஷியுடன் நெருக்கமாக நின்று சிரித்து கொண்டு இருப்பதை போல போட்டோ இருந்தது...

அதை கண்டு அதிர்ந்தவள்

“எப்படி இது?? “ என்று யோசித்தாள்..

அப்பொழுது தான் அதற்கு கீழ இருந்த அந்த செய்தியை படித்தாள்..

AN Jewellery  MD ஆதித்யாவின் மனைவி ரிஷி ஜிவெல்லரிக்கு விஜயம்.. “ என்று ஹெட்லைன் போட்டு ஆதித்யாவின் மனைவி தங்கள் கடையை விட்டு ரிஷி ஜிவெல்லரி யில் லேட்டஸ்ட் கலெக்ஷன்களை வாங்கி சென்றார்...   என்று இன்னும் என்னென்னவோ திரித்து போட்டிருந்தார்கள்..

அந்த அறையில் இருந்த டீ வீ யிலும் அந்த போட்டோவை போட்டு Breaking News ஆக ஓடிக்கொண்டிருந்தது... அதை கண்டு மேலும் அதிர்ந்தவள்

“நான் ஜஸ்ட் 2 நிமிடம் கூட அவன் கூட பேசலை... அதுக்குள்ள எப்படி இப்படி போட்டிருக்காங்க?? ... நாங்க போட்டலாம் எடுக்கலையே... இது எப்படி?? “ என்று முனகினாள்

“ஆமா... அவனே ஒரு பொறுக்கி... உங்கிட்ட கேட்டுகிட்டு தான் போட்டோ எடுப்பானாக்கும்... அதான் அங்கங்க கேமரா வச்சிருக்கான் இல்ல.. அதுல இருந்து எடுத்திருப்பான்... இப்படியா அவன் கிட்ட போய் பல்ல இளிச்சுகிட்டு நிப்ப?? “ என்று மீண்டும் அர்ச்சனை பண்ணினான்...

“நான் ஒன்னும் இளிக்கலை... ஜஸ்ட் தெரிஞ்சவ ர் னு  என்று அவள் மரியாதை கொடுக்க, அதை கண்டு அவன் முறைக்க, தெரிஞ்சவன் னு  ஜஸ்ட் ஸ்மைல் பண்ணினேன்.. அத போய் இப்படி போட்டிருக்கானே.. விளங்காதவன்... “

“ஆமா.. பாஸ்.. நான் போய் அந்த கடையில வாங்கினா என்ன தப்பு?? .. அதுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய நியூஸ் ஆக்கியிருக்காங்க... “ என்றாள் குழம்பியவளாக

“ஹ்ம்ம்ம் எல்லாம் அவன் கடைக்கு ஒரு விளம்பரத்துக்காகத்தான்.. மார்க்கெட்ல அவன் ம் நானும் தான் காம்பெடிட்டர்... நம்ம Jewellery தான் மார்க்கெட் ல பர்ஸ்ட்... அதை  தடுக்க அந்த ரிஷி நாய் சான்ஸ்  பார்த்துகிட்டு இருந்திருக்கான்.. சரியா நீ போய் அங்க மாட்டவும் அதை பயன்படுத்தி கிட்டான்... “

“நீ ஒரு ஹோட்டல் வச்சு நடத்திகிட்டு உன் கடைல சாப்பிடாம பக்கத்து ஹோட்டல் ல போய் சாப்பிட்டா என்ன நினைப்பாங்க?? .. உன் ஹோட்டல் ல சாப்பாடு நல்லா இல்லை... இல்லைனா தரமானதா இல்லைனு தான பக்கத்து  கடைக்கு போன னு ஆகிடும்....

அது மாதிரி தான் இதுவும்... நம்ம கடையே பல  இடத்துல ,அத்தன லேட்டஸ்ட் டிசைன்ஸ் ம்  இருக்கிறப்போ நீ அவன் கடைக்கு போனா, அதை சொல்லியே  அவன் விளம்பர படுத்தி இருக்கான்....

என்ன ஒரு வருத்தம்னா இந்த செய்தியை கண்டு சேர் மார்க்கெட் ல  AN Jewellery  யோட பங்குகள் எல்லாம் சரியும்... அதை கண்டு நடுத்தர மக்கள் நம்ம பங்குகளை வாங்கியிருக்கறவங்க எல்லாம் அவசர பட்டு விற்றால் நஷ்டம் தான் வரும் அவங்களுக்கு... அவங்க அவசரப்படாமல் இருக்கணும்...அதுக்குள்ள ஏதாவது செஞ்சு ஆகனும்....”  என்று மீண்டும் தலையை பிடித்துகொண்டு யோசிக்க ஆரம்பித்தான்

“சாரி... எனக்கு இந்த அளவுக்கு சீரியஸாகும்னு தெரியாது.. “ என்றாள் வருத்தத்துடன்

“ஹ்ம்ம்ம் இப்பயாவது உன் மதிப்பு தெரியுதா.... நீ இப்ப AN Group of companies MD ன்  மனைவி....நீ எது செஞ்சாலும் அது என் மனைவியாதான் இந்த மீடியாவுக்கு தெரியும்... அதனால தான் அத்தனை முறை சொன்னேன்..கவனமா இரு னு ...  “ என்றுக்ஒஞ்சம் கோபம் தணிந்து

 “ஹ்ம்ம்ம் இனிமேல் கவனமா இருப்பேன்....ப்ளீஸ்.. இதை எப்படியாவது சரி பண்ணிடுங்க... என்னால யாருக்கும் நஷ்டம் வரக்கூடாது.. “ என்றாள் அடிபட்ட பாவத்துடன்....

“சரி நான் பாத்துக்கறேன்...  நீ போய் ஏதாவது சாப்பிட கொண்டு வா... பசி வேற கொல்லுது....”

“ஐயோ.. நீங்க இன்னும் சாப்பிடலையா.?? இதோ  இப்பயே எடுத்துட்டு வர்ரேன்... “ என்று பதறி வேகமாக சமையல் அறைக்கு ஓடி வள்ளி செய்து வைத்திருந்த காலை உணவை தட்டில் எடுத்து வந்தாள்...

அதற்குள் நியூஸ் எல்லாருக்கும் பரவி அவனுக்கு அனைவரும் மொபைலில் அழைக்க ஆரம்பித்திருந்தனர்.. ஒவ்வொருத்தருக்கும் பதில் சொல்லி கொண்டிருந்த அவன் நிலையை பார்க்க அவளுக்கே கஷ்டமாக இருந்தது...

பங்கு வர்த்தகம் ஆரம்பித்திருக்க,  ஆதி கெஸ் பண்ணின மாதிரியே  AN ஜுவெல்லரி பங்குகள் சரிய ஆரம்பித்தன. ரிஷி ஜுவெல்லரி ன்  பங்குகள் எல்லாம் ஏறுமுகமாக இருந்தன...

பின் அவசரமாக எதையோ யோசித்தவன் தன் ட்விட்டரை திறந்து அவசரமாக ஒரு பதிவை வெளியிட்டான்...

இவனின் பதிவு வந்த சில நிமிடங்களில் அவன் பங்குகள்  வேகமாக மேல  ஏற ஆரம்பித்தன...அதுவும் பழைய விலையை விட அதிகமாக அவன் பங்குகள் உயர ஆரம்பித்தன

காலை உணவை எடுத்து கொண்டு பயந்தவாறே அவன் அருகில்  வ்நதாள் பவித்ரா.. மீண்டும் ஒரு முறை சாரி என்று சொல்ல

“டோன்ட் வொர்ரி  பேபி... நான் சமாளிச்சுட்டேன்.. அங்க பார்...”என்று சிரித்தவாறு அந்த டீ வி யின் திரையை காண்பிக்க இவன் பங்குகள் எல்லாம் கிரீன் கலரில் மேல் நோக்கி இருக்க, அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.. இப்பதான் அவ்வளவு கீழ போனது.. அதுக்குள்ள எப்படி என்று முழித்தவள்

“எப்படி பாஸ்?? என்ன மேஜிக் பண்ணினீங்க?? .. “ என்றாள் ஆர்வமாக

“ஹ்ம்ம்ம் இப்படித்தான்.. இந்த மேஜிக் தான்... “ என்று தன் ட்விட்டர் பக்கத்தை அவள் புறம் திருப்பி காண்பித்தான்...

அதில் இருந்த செய்தியை படித்தவள் அதிர்ந்து நின்றாள்... மீண்டும் ஒரு முறை படிக்க இன்னும் அதிர்ச்சியானாள்.. அதில் அவன் வெளியிட்டிருந்த பதிவு இதுதான்...

“என் மனைவி ரிஷி ஜுவெல்லரியில் பயிற்சி பெற்றதாகவும் விரைவில் AN Jewellery  ன் புதிய ஷோரூம் நகரின் மையப்பகுதியில் திறக்க இருப்பதாகவும் அதில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பணி புரியும் இடம்... AN Jewellery மகளிர் மட்டும் பிரிவு(branch) இது.. 

இந்த பிரிவின்(branch)  இன்னோரு விஷேசம்,  வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த டிசைன் ஐ  அவங்களே டிசைன் பண்ணிக்கலாம்...அதே மாடலில் உடனே செய்து கொடுக்கபடும்...

வாடிக்கையாளருக்கு பிடித்த டிசைனை வடிவமைக்க, அனுபவம் வாய்ந்த நகை டிசைனரும் உதவிக்கு இருப்பர்....நேரில் வர முடியாதவர்களுக்கு  உதவ  விரைவில் ஆன்லைன்லயும் (online) அவங்களே டிசைன் பண்ணி அனுப்ப வசதி செய்யப்படும்...

என் மனைவியே அதன் தலைமை பொறுப்பை ஏற்பார்..பயிற்சி அளித்த ரிஷிக்கும் ரிஷி Jewelleryக்கும்  மிக்க நன்றி.... விரைவில் என் மனைவியிடம் இருந்து முறைப்படி அறிவிப்பு வரும்.. “ என்று இருந்தது....

அதை  கண்டு அதிர்ச்சியில் முழித்த பவித்ரா,

 “பாஸ்... என்னது இது?? .. எதுக்கு இப்படி ஒரு  பொய்யான நியூஸ் ஐ போட்டிருக்கீங்க.. நாளைக்கே மக்களுக்கு தெரிய வந்தால்??.... “

ஹா ஹா ஹா.. பொய்யான நியூஸா??  இந்த ஆதித்யா எப்பவும் பொய் சொல்ல மாட்டான் பேபி.. நான் ஏன் பொய்யான நியூஸ் போடணும்.. அதில் நான் சொல்லி இருக்கிறது எல்லாம் உணமை ... “ என்று சிரித்தான் அதுவரை இருந்த அழுத்தம் குறைந்து ரிலாக்ஷாக ...அவனிடமிருந்த டென்ஷன் இப்ப பவித்ராவை ஒட்டி கொண்டது..

“ஐயோ!! பாஸ்.. எனக்கு ஜுவெல்லரி பத்தி எதுவும் தெரியாது.. என் ஃப்ரெண்ட்ஸ் ஆர்ட்டிபிசியல் ம்  ,கோல்ட் கொடுத்து காமிச்சப்போ கூட எது கோல்ட் எது ஆர்ட்டிபிசியல் னு  கண்டுபிடிக்க தெரியல... நான் போய் ஒரு கடையை மேனேஜ் பண்றதா??.. காமெடி பண்ணாதிங்க பாஸ்....உடனே இந்த மெஜேஜை மாத்துங்க...  “

“கடையை மேனேஜ் பண்ண அதை பத்தி தெரிஞ்சுக்கனும் னு இல்ல பேபி... நீ சும்மா போனா  போதும்.. ஒவ்வொன்னுக்கும் அது அதுக்கு ஆள் இருப்பாங்க.. you just monitor them.. “

ம்ஹூம்... இது சரி வராது... நான் இதுக்கு செட் ஆக மாட்டேன்...  என்னை விட்டுடுங்க பாஸ்.. “ என்று கெஞ்சினாள்

“ஏய்... அதெல்லாம் விட முடியாது.. நீதான இதை ஆரம்பிச்ச.. அப்ப நீ தான் சரி பண்ணனும்..

அதோட உன்னை பத்தி எனக்கு தெரியும் பேபி... மேனேஜர் ஒருமுறை தெரியாமல் கார்பென்டரை கூட்டிகிட்டு வந்து வீட்டுக்கு அனுப்பறப்போ நீதான அவங்களுக்கு காம்பரமைஸ் பண்ணி அனுப்பின.. அன்னைக்கு ரெஸ்டாரெண்ட்ல கூட நீதி,நேர்மை னு  எப்படி நடந்துகிட்ட... இதை எல்லாம் பார்த்து தான் இந்த முடிவு... உன் கிட்ட திறமை இருக்கு.. உன்னால முடியும்.. “

“ஹ்ம்ம்ம் நான் கார்பென்டர் கூட எப்பயோ பேசியது இவனுக்கு  எப்படி தெரியும்??  ஒரு வேளை அங்கங்க ஸ்பை வச்சிருக்கானா??  “ என்று யோசித்தவளுக்கு

“அதான் அங்கங்க சிசிடிவி வச்சிருக்கானே.. அதுல பார்த்தானா  இருக்கும்..” என்று எண்ணிக் கொண்டாள்.. ஆதி  தொடர்ந்து பேசிகொண்டிருந்தான்

“நான் ஏற்கனவே திட்டமிட்டு வச்சிருந்த ப்ளான் தான் இது.. ஆக்சுவலா இன்னும் கொஞ்சம் எல்லா ஏற்பாடு செய்துட்டு announce  பண்றதா இருந்தது... இந்த  ரிஷி நாயால இப்படி அவசரமா announce  பண்ண வேண்டியதா போச்சு..சோ டோன்ட் வொர்ரி.. You can do it !!! ” 

 “ஆனாலும்.. என்னால முடியுமா?? பாஸ்..இதுனால மேலும் நஷ்டம் ஆகியிருச்சுனா??  “ என்று இழுத்தாள்

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது... உன்னால முடியும்... உன் ப்ரதர் ப்ரேம்  அவனும் ஜிவெல்லரி ஷாப் தான் வச்சிருக்கான்.. அவன் கிட்ட எல்லாம் கேட்டு தெரிஞ்சுக்கோ... அப்புறம் நெட்ல போய் பார்.. இது சம்பந்தமா நிறைய படி... சீக்கிரம் எல்லாம் தெரிஞ்சுக்கலாம்.. நானும் கைட் பண்றேன்..இதை ஒரு சேலன்ஜ் ஆ எடுத்து பண்ணு... 

இப்ப எனக்கு வேலை இருக்கு.. இன்னைக்கு இருக்கிற எல்லா கால்ஸ் ம் வீட்ல இருந்து தான் அட்டென்ட் பண்ணனும்... என்னை எதுவும் டிஸ்டர்ப் பண்ணாம போ .. “ என்றவன் கண்கள் பவித்ராவின் கன்னத்தை காண, அவன் அறைந்ததில் அவள் கன்னம் சிவந்து லேசாக வீங்கி இருந்தது...

அதை கண்டதும் அவன் மனம் வலித்தது...

“சே.. கோபம் வந்தால் என்ன செய்யறேனு எனக்கே தெரிய மாட்டேங்குது... பாவம் அவ.. எப்படி என் அடியை தாங்கினாளோ.. “ என்று வருந்தியவன் தன் முகத்தையே பாவமாக பார்த்து கொண்டு  நின்றிருந்தவளை அருகில் வா என்று கண்ணால் ஜாடை செய்ய, அவளும் மெல்ல அவன் அருகில் வந்தாள்...

“சாரி.. பேபி... I was totally out of my control.. ரியலி சாரி... வலிக்குதா?? “ என்று முகத்தில் அடிபட்ட பாவத்துடன் அவள் கன்னத்தை மெல்ல வருடினான்....

அவனின் அந்த மெல்லிய வருடலில் அதுவரை இருந்த கொஞ்ச வலியும் பறந்து போனது அவளுக்கு...அவன் கண்ணில் தெரிந்த வலியை காண பொறுக்காமல்

“அதெல்லாம் ஒன்னும் இல்லை பாஸ்...நான் ஏற்கனவே ஐஸ் கட்டி வச்சுட்டேன்..  இப்ப வலி போய்டுச்சு... நீங்க ஒன்னும் பீல் பண்ணாதிங்க...இந்த பவித்ரா எதையும் தாங்குவா....

என்னாலதான் உங்க டே மெஸ் ஆகியிருச்சு... சாரி.. நீங்க உங்க ட்யூட்டியை பாருங்க பாஸ்...” என்று சிரித்து கொண்டே வெளியில் சென்றாள்..

அவளை நினைக்கையில் அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது... பொதுவா பெண்கள் ஒரு சின்ன விசயத்தை கூட பெருசாக்குவாங்க..  தொட்டதுக்கெல்லாம் மூஞ்ச தூக்கி வச்சுக்குவாங்க, அப்படியும் பெருசானா அவங்க அம்மா வீட்டுக்கு போய்டுவாங்கனு கேள்வி பட்டிருக்கான்.... ஆனால் இவள் முற்றிலும் வேறாக இருந்தாள்...

அவன் இரண்டு முறை கை நீட்டிய பொழுதும், அவளை சொற்களால் காய படுத்திய பொழுதும் கூட, அடுத்த நிமிடம் அதை தூக்கி போட்டுட்டு அடுத்து என்ன??  என்று போகும் அவளுடைய அந்த ஈசி கோயிங்க் குணம் அவனை ஆச்சர்ய பட வைத்தது...

நான் எவ்வளவு தான் அவளை கஷ்ட படுத்திய பொழுதும் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் அவனை விட்டு பிரியணும் என்று நினைக்காமல் அவனையே சுற்றி வருவதும் கண்டு அசந்து நின்றான்...

“இப்படி பட்டவள் எனக்கு மனைவியாக அமைந்ததுக்கு நான் கொடுத்து வச்சிருக்கணும்...

I’m so lucky  for having such a wonderful better half … She is my precious gift in my life..என் வாழ்வில் வந்த பொக்கிஷம் அவள்... எப்பவும் உன்னை விட மாட்டேன் பேபி... “ என்று மனதுக்குள் சொல்லியவன் உல்லாசமாக விசில் அடித்துகொண்டே தன் வேலையை தொடர்ந்தான்...! 




Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!