உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-35
அத்தியாயம்-35
ஆதித்யாவின் அறையை விட்டு வெளியில் வந்த பவித்ராவும் பேருக்கு ஏதோ சாப்பிட்டுவிட்டு
தன் அறைக்கு சென்றாள்..
தன் அறைக்கு சென்று ஷோபாவில் அமர்ந்து கொண்டு அடுத்து
என்ன செய்ய என்று யோசித்தாள்..
“சை. எல்லாம் இந்த ரிஷி குரங்கால வந்தது... இவன்
பாட்டுக்கு பல்ல இளிச்சுகிட்டு போய்டுவானு பார்த்தால் பின்னாடி இவ்வளவு பெரிய வேலை
பண்ணி வச்சிருக்கானே.. இவன் மட்டும் இப்ப என் கையில மாட்டுனான் அவ்வளவுதான்... “என்று
பொருமி கொண்டிருந்தாள்..
பின் அருகில் இருந்த மொபைலை எடுத்து நோண்ட, எதேச்சையாக சரண்யாவின் வாட்ஸ்அப்
புரபைல் ஒபன் ஆக அதில் அவள் அணிந்திருந்த கம்மலை கண்டவள் மூளையில் மின்னல்
வெட்டியது.... முகம் பிரகாசிக்க உடனே சரண்யாவை அழைத்தாள் பவித்ரா....
சரண்யாவும் பவித்ராவின் அழைப்பை ஏற்று
“என்னடி.. மிஸர்ஸ் ஹீரோ... இப்ப தான் உனக்கு என்
ஞாபகம் வந்ததா??... “
என்று வழக்கமான தன் குறும்பு பேச்சை ஆரம்பிக்க
“உன் கூட விளையாட நேரம் இல்லடி.. நீ எனக்கு ஒரு உதவி செய்யனும்.. “என்று சீரியஸாக
ஆரம்பித்தாள் பவித்ரா..
அவள் குரலில் இருந்தே ஏதோ பிரச்சனை என்று
புரிந்து கொண்ட சரண்யா தன் விளையாட்டை நிறுத்தி
“சொல்லுடி.. உனக்கு என்ன பிரச்சனை?? .. “ என்றாள் அக்கறையாக
“ஹ்ம்ம்ம் பிரச்சனை எல்லாம் பெருசா ஒன்னும்
இல்லை... சும்மாதான்.. “ என்று நடந்தவைகள சுருக்கமாக சொன்னாள்...
“உனக்கே தெரியும் இல்ல டி .. எனக்கு இந்த நகை
விசயத்துல A B C D கூட
தெரியாது... என்னை போய் அவ்வளவு பெரிய கடைய பார்த்துக்கணும்னா நான் என்ன பண்றது??... நீதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும் டி..
உனக்கு தான் இந்த ஜிவெல்லரிஸ் பத்தி நல்லா
தெரியுமே...என்னென்ன லேட்டஸ்ட் மாடல் வந்திருக்கு, எவ்வளவு விலை அதெல்லாம் கரச்சு
குடிச்சவளாச்சே.... காலேஜ் படிக்கறப்போ உனக்கு தூக்கம் வர்றப்போ எல்லாம் என் நோட்டுல
ஒவ்வொரு டிசைனா கிறுக்கி வச்ச இல்ல... அதனால நீயும் என் கூட வந்து எனக்கு ஹெல்ப்
பண்ணனும்.. “
“ஹா ஹா ஹா நான் மட்டும் என்ன இதுல P.hD பண்ணி இருக்கேனா?? நான் சும்மா கிறுக்குனத வச்சு நான் பெரிய டிசைனர் னு முடிவு பண்ணீட்டீங்களாக்கும்..... எனக்கும் அதெல்லாம் ஒன்னும் தெரியாதுடி.. நீ என்னை இதுல
இழுத்து விடாத... “
“ஹே ப்ளீஸ் டீ... உன்னை நம்பித்தான் இவ்வளவு
பெரிய பொறுப்பை ஏற்றிருக்கேன்.. “ என்று இன்னும் கொஞ்சம் அவளுக்கு ஐஸ் வச்சு
கொஞ்சி கெஞ்ச, சிறிது
நேரம் யோசித்த சரண்யா
“சரி டி ..நான் என்ன செய்யணும்??..”
“நீ இப்ப கிளம்பி இங்க வா.. இரண்டு பேரும் சேர்ந்து என்ன பண்றதுனு யோசிக்கலாம்..”
“ஹே எனக்கு வேலை இருக்குடி... அங்கெல்லாம் வர
முடியாது..”
“சும்மா காது குத்தாத .. அங்க வெட்டியா சாப்ட்டு சாப்ட்டு தூங்கிட்டிருக்கனு எனக்கு
தெரியும்... ரொம்ப பந்தா பண்ணாம கிளம்பி வா டி..”
“இல்லடி... எனக்கு நாளைக்கு ஒரு இன்டர்வ்யூ
இருக்கு.. அதுக்கு தயார் பண்ணனும்.. “ என்று அடுத்த காரணத்தை சொல்ல
“ஹா ஹா ஹா நீயும் ஒரு வருடமா வேலை தேடி
கிட்டிருக்க... இன்னும் அது உன் கண்ணுலயே பட மாட்டேங்குது.... இதுல நாளைக்கு
இருக்கிற இன்டர்வ்யூ ல மட்டும் அப்படியே வேலை கிடைச்சிட போகுதாக்கும்...
சரி
போனா போகுது.. நான் உனக்கு வேலை போட்டு தர்ரேன்.. இனனையில் இருந்து நீ
எனக்கு அசிஸ்டன்ட்.. டீலா?? “ என்று சிரித்தாள் பவித்ரா..
“கொலுப்புடீ உனக்கு... உனக்கெல்லாம் அசிஸ்டன்ட் ஆ
வேலை பார்க்க முடியாது.. போடி.. “என்று திருப்ப
“ஹே ஹே சரண்... காலை வாரி விட்டறாத டி.. உன்னை
நம்பித்தான் இருக்கேன்.. நீ அசிஸ்டன்ட் ஆ வேண்டாம்.. இதுல நீயும் பார்ட்னராவே
சேர்ந்துக்கலாம்.. “என்று மேலும் கெஞ்ச,
“ஹீ ஹீ ஹீ. ஆளை
எப்படி மடக்கிறதுனு உன்கிட்ட தான்டி கத்துக்கணும் .. சரி நம்ம இரண்டு பேருமே
இதுக்கு புதுசு.. இதுல நாம என்ன பண்ணமுடியும்?? என் ஹீரோ எப்படி இதை யோசிக்காமல் இவ்வளவு பெரிய பொறுப்பை
தூக்கி உன்கிட்ட கொடுத்திருக்கார்?? “
“ஹ்ம்ம்ம் அவரோட ஃப்ரெண்ட் ப்ரேம் இருக்கார்
இல்ல.. அவர் ஜுவெல்லரிதான் வச்சிருக்காரம்.. அவர் கிட்ட நிறைய டிப்ஸ் லாம் கேட்க
சொன்னார் உன் ஹீரோ...அவரும் கைட் பண்றேனு சொல்லியிருக்கார் “
“யாரு? உன் கலயாணத்துல இருந்தாரே அந்த ஜொள்ளு பார்ட்டியா?? “
“ஆங்க்.. ஹே..
அப்ப ப்ரேம் ஐ முன்னாடியே உனக்கு தெரியுமா?? .. அவர் உன்னை பார்த்து ஜொள்ளு விட்டாரா?? இது எப்படி எனக்கு தெரியாம போச்சு... “
“ஹலோ மேடம்.. அன்னைக்கு முழுவதும் நீங்க தான்
இந்த உலகத்துலயே இல்லையே... வேற உலகத்துல இல்ல டூயட் பாடிகிட்டிருந்தீங்க..
நாங்கல்லாம் எப்படி உங்க கண்ணுக்கு தெரியுமாம்.. “ என்று மடக்க,
“ஹீ ஹீ ஹீ.. சாரி டி... இப்ப அவர் என் ப்ரதர்..
நல்ல ஜாலியான டைப்.. உன்னை மாதிரியே எப்பவும் சிரிச்சுகிட்டே, கூட இருக்கிறவங்களை சிரிக்க
வச்சுகிட்டே இருப்பார்... அவரை வர சொல்றேன்.. இரண்டு பேரும் அவரோட சேர்ந்து டிஸ்கஸ்
பண்ணலாம் “
“ம்ஹும்ம் அவர் வந்தா நான் வரலை... அந்த ஆளு அப்பவே அப்படி ஜொள்ளு விட்டான்... “
“ஹே... இவங்க எல்லாம் தொழில் பற்றி பேச ஆரம்பிச்சா வேற ஆளா மாறிடறாங்க தெரியுமா.?? . அதுவும் இல்லாம அப்ப வேற
எந்த பிகரும் கிடைச்சிருக்காது.. அதுனால உன்னை போய் சைட் அடிச்சிருக்கலாம்.. ஆனால் பிசினஸ் னு வந்துட்டா அப்படியே மாறிடறாங்க.. நீ வேணா
பார்.. உன் பக்கமே திரும்ப மாட்டார்... அதனால் நீ பிகு பண்ணாம கிளம்பி சீக்கிரம்
வாடி...”
“சரி... நான் அப்பாவுக்கு சமைச்சு வச்சுட்டு 3
மணி போல வர்றேன்.. “ என்று போனை வைத்தாள்
சரண்யா...
பின் பவித்ரா ப்ரேமுக்கு கால் பண்ணி இன்று மாலை
வீட்டுக்கு வரச் சொல்ல,
“ஹ்ம்ம்ம் ஒகே சிஸ்டர்.... நான் உங்களுக்கு
ஹெல்ப் பண்ணினா எனக்கு என்ன கிடைக்கும்?? “என்றான்
குறும்பாக...
“ஹ்ம்ம்ம் நீங்க வீட்டுக்கு வாங்க ப்ரதர்..
உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு...
அதான் என்னோட கிப்ட் ஆக்கும்... “ என்று அவளும் சிரித்து போனை வைத்தாள்
பின் பவித்ரா நெட்டில் தேடி சில குறிப்புகளை எடுத்து
வைத்தாள்.. பின் மணியை பார்க்க நேரம் மதியம் நெருங்குவதை கண்டு
மெல்ல ஆதியின் ஆபிஸ் கதவை திறந்து பார்க்க அவன் இன்னும் சீரியஸாக பேசி
கொண்டிருந்தான்... அவன் சாப்பிட வரமாட்டான் போல என்று எண்ணியவள்
சமையல் அறைக்கு சென்று வள்ளியிடம் எளிதாக ஏதாவது
சமைக்குமாறு கூற வள்ளியும் சிக்கன் பிரியாணி தயார் பண்ணினாள்... மணி இரண்டு
ஆகியும் அவன் வெளியில் வராததால்
அந்த பிரியாணியை எளிதாக எடுத்து சாப்பிடற
மாதிரி ஒரு பவுலில் போட்டு கொண்டு அதன்
மீது ஒரு ஸ்பூனை வைத்து எடுத்து கொண்டு உள்ளே சென்றாள்... அவன் இன்னும் தீவிரமாக பேசி கொண்டிருக்க
அவன் அருகில் ஓசை எழுப்பாமல் சென்று அவன் முன்னே
வைத்து சாப்பிட சொல்லி சைகை காண்பிக்க, அவனோ வேண்டாம் என்று தலையாட்ட அவள் சுவற்றில் இருந்த
கடிகாரத்தை காட்டி மணி இரண்டு என்று சைகை செய்தாள்...
அவன் மீண்டும் வேண்டாம் என்று அவளை பார்த்து
முறைக்க, அவன் அமர்ந்து இருந்த
இருக்கையின் அருகில் இருந்த மேசையின் மீது ஏறி அமர்ந்தவள் அந்த பவுலை கையில் எடுத்து
அதில் இருந்த ஸ்பூனால் எடுத்து அவனுக்கு ஊட்டினாள்...
முதலில் திகைத்தவன் அவள் ஆசையாக தனக்கு ஊட்ட, அந்த காலை தொடர்ந்து பேசிகொண்டே
அவனும் சாப்பிட ஆரம்பித்தான்..
எத்தனையோ நாட்கள் வேலை பிசியில் மதிய உணவை தவற
விட்டு நான்கு மணிக்கெல்லாம்
சாப்பிட்டிருக்கான்..இன்னும் சில நாட்களில் மதிய உணவு என்பது மறந்தே
போகும்... அப்பொழுது அவனுக்கு அக்கறையாக
சாப்பிட சொல்ல யாரும் இருந்ததில்லை..
இன்று அவன் வேண்டாம் என்று அவளை முறைத்தாலும்
அவள் அடம் பிடித்து விடாப்பிடியா அவனுக்கு உண்ண வைத்தாள்... அதை
நினைக்கும் பொழுது மனம் நிறைந்து இருந்தது ஆதித்யாவுக்கு...
முதன் முதலாக ஒரு தாயின் கண்டிப்பையும், அக்கறையையும் கண்டான் அவளுள்...
இதுவரை இந்த மாதிரி பாசத்தை அனுபவித்திராதவனுக்கு இது புதியதாக இருந்தது..
அவள் சாப்பாடு ஊட்டும் அழகை ரசனையோடு
பார்த்து கொண்டே சாப்பிட்டான்..
அவன் முழுவதும் சாப்பிட்டு முடிக்க, அந்த டேபிலில் இருந்து கீழ
எட்டி குதித்து இறங்கினாள்...
அவளின் அந்த வால் தனத்தை பார்த்து சிரித்து
கொண்டே அவன் தன் உரையாடலில் கவனம் செலுத்த, அவள் அவன் சாப்பிட்டதை எடுத்து கொண்டு சமையல் அறைக்கு சென்று
வைத்து விட்டு அங்கு இருந்த டெசர்ட் ஐ எடுத்து கொண்டு வந்து அவன் அருகில் வந்து
அவன் முன்னால் வைத்தாள்..
ஆதி அவளையே ஊட்ட சொல்லி சைகை காட்ட, அவளும் சிரித்துகொண்டே அந்த
இனிப்பை எடுத்து அவனுக்கு ஊட்டினாள்...
அவன் அமர்ந்திருந்த நாற்காலியின் அருகில், மிக நெருக்கமாக நின்றிருந்தவளின் வெற்றிடை அவனை இம்சிக்க,
அடுத்த நொடி அவளை அப்படியே இடையோடு சேர்த்து கட்டி கொண்டே தன் உடையாடலை
தொடர்ந்தான்...
அதில், அந்த அணைப்பில் கொஞ்சமும் காமம் இல்லை. ஒரு தாயை தேடும் குழந்தையின் பரிசம் உணர, பவித்ராவும் அவன் தலையை செல்லமாக
கலைத்து விட்டு கொண்டே அவனுக்கு ஊட்டினாள்..
அவன் சாப்பிட்டு முடித்ததும், நீரை எடுத்து அவன் அருகில்
வைத்து விட்டு, கட்டை விரலை உயர்த்தி காட்டி புன்னகைத்தவாறு
அவள் நகர போக, தன் காலை mute பண்ணியவன்
அவளை பார்த்து
“ரொம்ப தேங்க்ஸ் விது.. “ என்றான் கண்ணில் ஏதோ
ஒரு புதுவித ஒளியுடன்..
அதை கேட்ட பவித்ரா திகைத்து,
“என்ன சொன்னீங்க பாஸ்.. ஏதோ வித்தியாசமாக கேட்டதே..
“ என்று ஆர்வமாக கேட்க
அப்பொழுதுதான் உறைத்தது தான் அவளை விது என்று அழைத்தது... அவன்
அவளுக்கு வைத்திருக்கும் செல்லப் பெயர்.. மனதுக்குள் அவளுடன் பேசும் பொழுது அவன்
விது என்று அழைப்பதால் அதுவே வந்திருந்தது இப்பொழுது...
ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சமாளித்து
கொண்டு
“ரொம்ப தேங்க்ஸ் பேபி... சிம்பில் அன்ட் சூப்பர்
லன்ச்... “ என்று கண் சிமிட்டி சிரித்தான்...
“இல்ல.. நீங்க வேற ஏதோ சொன்னீங்களே... “ என்று
அவள் சந்தேகமாக கேட்க அவனோ தான் பேசி கொண்டிருப்பதை ஜாடை காட்டி பிறகு பேசலாம் என தப்பித்து
கொண்டான்...
பவித்ராவும் அவன் என்ன சொன்னான் என்று யோசித்து
கொண்டே அவளும் சாப்பிட்டு முடித்து, ஹாலில் அமர்ந்து தன் அலைபேசியை நோண்டி கொண்டே சரண்யாவுக்காக
காத்திருந்தாள்...
Thanks vidhu super mam
ReplyDeleteThanks pa!
Delete