உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-37

 


அத்தியாயம்-37

ங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று கண்களை குளிர வைத்தது அந்த கிராமம்.. சாலையின் இரண்டு பக்கமும் மாந்தோப்பும் தென்னந் தோப்பும் மற்றும் கொய்யா சப்போட்டா என்று பல வகை மரங்கள் நிறைந்து இருந்தது அந்த பண்ணை...

ஆதித்யாவின் கார் அந்த பிரமாண்ட பண்ணை வீட்டிற்குள் நுழைந்தது...அதை கண்டதும் பவித்ராவின் கண்கள் அகல விரிந்தன...

“வாவ்... சூப்பரா இருக்கு பாஸ்... இந்த வீடு.. அந்த காலத்து ராஜாவின் அரண்மனை மாதிரி...” என்று ஆர்பரித்தாள்.. அவளின் அந்த குதூகலித்த முகத்தை ரசித்து கொண்டே,

“ஹ்ம்ம்ம் இன்னும்  நிறைய இருக்கு பேபி.. இதுக்கே இப்படி வாயை பிளந்தா எப்படி??  சரி வா.. இறங்கலாம்.. “ என்று சிரித்து கொண்டே கார்  ஐ நிறுத்தி விட்டு இருவரும் இறங்கி வீட்டின் வாயிலை நோக்கி நடந்தனர்...

அதற்குள் காரின் ஓசை கேட்டு மரகதம் அவர் கணவர் சதாசிவம்  மற்றும் அனைவரும் வாயிலுக்கு வந்திருந்தனர்... மரகதம் புன்னகையோடு இருவரையும் வரவேற்று ஒன்றாக நிற்க வைத்து ஆரத்தி எடுத்தார்...

பின் பவித்ரா ஆதியின் கையை பிடித்து கண்ணால் ஜாடை காட்டி அவர்கள் காலில் விழ, ஆதியும் அவளோடு விழுந்து வணங்கினான்..

அவன் பெரியம்மா மற்றும் பெரியப்பாவும் பதறி குனிந்து தூக்கி இருவரையும் ஆசிர்வதித்தனர்..

“எப்படி இருக்க நிஷாந்த்.. “என்று அவனை கட்டி கொண்டார் அவன் பெரியப்பா...

அவனும்

“நல்லா இருக்கேன் பெரியப்பா..நீங்க எப்படி இருக்கீங்க  “ என்று நலம் விசாரிக்க பின் பவித்ராவை பார்த்து

“வாம்மா மருமகளே.. எங்க பையனை நல்லா பார்த்துக்கறியா?? “ என்று குறும்பாக சிரிக்க, முதல் பார்வையிலயே அவரை ரொம்ப பிடித்து விட்டது பவித்ராக்கு..

“ஹ்ம்ம்ம் சூப்பரா பார்த்துக்கறேன் மாமா... இரண்டு கிலோ எடை கூடியிருக்கிறார் னா பார்த்துக்கோங்க.. “ என்று அவளும் சிரித்தாள்..

பின் மரகதம் சரவணனையும் அவன் மனைவி சரோஜாவையும் அறிமுக படுத்த அவர்களுக்கு வணக்கம் சொன்னாள்..

சரோஜா அவளை விடுத்து அவர்கள் வந்திருந்த பெரிய சொகுசு காரை கண்டதும் வாயை பிளந்தாள்.. அவர்களிடமும் கார் உண்டுதான்.. அது சாதாரண சான்ரோ.. அதுக்கே அவ்வளவு பெருமையாக இருக்கும் அந்த ஊரிலயே தாங்கள் தான் கார் வைத்திருப்பவர்கள் என்று...

இந்த மாதிரி காரை அவள் பார்த்ததில்லை... அதே மாதிரி அவள் அருகில் நின்றிருந்த மற்றொரு பெண்ணும்  வாயை பிளந்து பார்த்தாள்.. காரை மட்டு மல்லாமல் காருக்கு சொந்தக் காரனையும்...

ஆறடி உயர்த்தில் முகத்தில் குறும்பு சிரிப்புடன் நின்று கொண்டிருந்த ஆதியை கண்டதும் அவள் பார்வை விரிந்தது...

“சினிமா படத்துல வர்ற ஹீரோ மாதிரி இருக்காரே... செம ஹேன்ட்ஸம்....”என்று உற்சாகமானாள்..

ஆனால் அவளின் உற்சாகம் அருகில் இருந்த பவித்ராவை கண்டதும் வடிந்தது... அவளின் குட்டை உருவமும் அவனுடன் ஒட்டி நின்ற தோற்றமும் அவன் அவளுக்கு உரிமையானவன் என்பதை காட்ட, ஏனோ  அவளுக்குள் பொறாமையை தூண்டியது..

அவள் மனம் அவசரமாக அந்த பவித்ரா இடத்தில் தன்னை வைத்து பார்த்தது... அவனின் உயரத்திற்கு தான் தான் பொருத்தமாக இருப்பதாக தோன்றியது...

“அதோடு நீ கனவு கண்டுவரும்  ஆணழகன், கனவுநாயகன், உன் ஹீரோ இவன் தான்.. “ என்று அவள் மனம் எடுத்துரைக்க, அந்த கணமே ஏனோ  அவன் அவள் மனதிற்குள் நுழைந்தான்..

சரவணன் ஆதியை கட்டி கொள்ள  பவித்ராவின் பார்வை  சரோஜாவின் அருகில் நின்றிருந்த மற்றொரு பெண்ணிற்கு செல்ல,

“இது சரோஜா வோட  தங்கை நந்தினி..  பவித்ரா.. “ என்று அறிமுகபடுத்தினார் மரகதம்

“ஹலோ... “ என்று பவித்ரா சினேகமாய் கையை நீட்ட அந்த நந்தினியோ ஹாய் என்று வேண்டாதவளாக முறுவலித்து கண்களால் அவளை பொறாமையோடு நோக்கினாள்..

அதே நேரம் ஆதி அவளிடம் கை நீட்ட, வேகமாக தன் கையை நீட்டி அவன் கையை பற்றி கொண்டு தலையை சரித்து சிரித்தாள்...அதை கண்ட பவித்ரா தன் தோளை குலுக்கி மெல்ல சிரித்து கொண்டே, அடுத்து நின்று கொண்டிருந்த ஜனனியை பார்க்க, அவள் முறைக்காக காத்திருந்த ஜனனி  ஒரு அடி முன்னால் வைத்து ஓடி வந்து கட்டி கொண்டாள்...   

“வாங்க அண்ணி!! “ என்று வாயெல்லாம் பல்லாக அவளை கட்டிக் கொண்டாள்... பின் ஆதியை பார்த்து

“ நிஷா அண்ணா... இப்பவாவது எங்க ஊருக்கு வரணும்னு தோணிச்சே....” என்று முகத்தை நொடித்தாள் ஜனனி...

“நேரம் இல்லை வாலு.. அதான்.. என்று அவன் சிரிக்க

“ஹீ ஹீ ஹீ.. நம்பிட்டேன்.. நம்பிட்டேன் ..  ஆபிஸ் வேலையால நேரம் இல்லையா??.. இல்லை பவி அண்ணி கூடயே சுத்திகிட்டி இருந்ததனால நேரம் இல்லையா?? .. “என்று கண்ணடித்தாள்..

அதை கேட்டு அவன் மெல்ல வெக்கபட்டு சிரித்துகொண்டே

“வாயாடி..” என்று அவள் தலையை செல்லமாக கொட்ட வர , அதற்குள் அவள் இலாவகமாக கீழ குனிந்து கொண்டு நாக்கை நீட்டி பழிப்பு காட்டினாள் ஜனனி...

பெரியவர்களும் அவள் குறும்பை ரசித்த வண்ணம் அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்து சென்று ஹாலில் அமர வைக்க, ஆதி  பவித்ராவின் அருகில் சென்று நெருக்கமாக அமர்ந்து கொண்டான்...

அதை கண்ட நந்தினிக்கு உள்ளம் கொதித்தது... ஏனோ  தனக்கு சொந்தமானதை பவித்ரா பறித்து கொண்ட மாதிரி உணர்ந்தாள்...

மரகதம் சமையல் அறைக்குள் சென்று அனைவருக்கும் பழச்சாறு கொண்டு வந்து கொடுக்க, அனைவரும் அதை குடித்து கொண்டே வழக்கமான உரையாடல் தொடர, பவித்ரா ஏதோ நினைவு வர எழுந்து சென்று வேலை ஆட்கள் கொண்டு வந்து வைத்திருந்த ஒரு பெட்டியை திறந்து ஒவ்வொருவருக்கும் அவள் வாங்கி வந்திருந்த விலை உயர்ந்த ஆடைகளை எடுத்து கொடுத்தாள்...

ஆதியின் பெரியம்மா பெரியப்பாவிற்கு பட்டு புடவையும்,  வேட்டி சட்டையும், சரவணனுக்கு ம் அவன் மனைவிக்கும் பேன்ட் சர்ட்ம் மற்றும் பட்டு புடவையும் ஜனனிக்கு அழகான சல்வாரும் எடுத்து கொடுக்க,  அனைவரும் மகிழ்ச்சியோடு வாங்கி கொண்டனர்..  அப்பொழுது தான் அருகில் நின்றிருந்த நந்தினி நினைவு வர,

“சாரி நந்தினி.. உங்களை பற்றி எனக்கு தெரியாது... வந்து..  நீங்க இங்க இருக்கிறது பற்றி எனக்கு தெரியாது.. அதனால உங்களுக்கு எதுவும் வாங்கி வரலை... இங்க பக்கத்துல எதும் கடை இருந்தா, நான் உங்களுக்கு வாங்கி கொடுத்திடறேன்.. “

என்று உண்மையான வருத்தத்துடனும் தயக்கத்துடனும் பவித்ரா சொல்ல, அந்த நந்தினியோ இவளை எரித்து விடுவதை போல ஒரு நொடி பார்த்து பின் தன் பார்வையை உடனே மாற்றி கொண்டு

“இட்ஸ் ஓகே... என்கிட்ட நிறைய ட்ரெஸ் இருக்கு... நீ  வாங்கி கொடுத்து தான் நான் போடணும்னு அவசியம் எனக்கில்லை.. “ என்று வெடுக்கென்று சொன்னாள்.. அதை கேட்டு ஒரு விநாடி பவித்ராவின் மனம் சுருங்கினாலும் அடுத்த விநாடி சமாளித்துக் கொண்டு

“அடுத்த முறை உங்களுக்கு பெரிய கிப்ட் ஆ வாங்கி வர்றேன்.. “ என்று சிரித்தாள்...

பின் மற்றொரு பாக்சை எடுத்தவள் அதில் குழந்தைக்கான பரிசு பொருட்கள் இருந்தன...

“அத்தை.. எங்க உங்க பேரன்??.. அவனை பார்க்க இந்த சித்தி சித்தப்பா வந்திருக்காங்கனு சொல்லுங்க.. “ என்று சிரிக்க, மரகதம் சிரித்து கொண்டெ உள்ளே சென்று தன் பேரனை தூக்கி வந்தார்...

அதற்குள் பவித்ரா வாங்கி வந்திருந்த விதவிதமான ஆடைகளும் விளையாட்டு பொருட்களையும் எடுத்து சரோஜாவிடம் கொடுத்து இருக்க, அதை எல்லாம  கண்டு சரோஜா இன்னும் வாயை பிளந்தாள்...

மரகதம் தன்  பேரனுடன் அருகில் வரவும் ஒரு நகை  பெட்டியை எடுத்து அதை திறந்து அதில் இருந்த ஒரு தங்க சங்கிலியை எடுத்து ஆதியின் கையில் கொடுத்து போட்டு விட சொல்ல, அவனும் திகைத்தவாறு அந்த செயினை குழந்தைக்கு அணிவித்தான்...

பின் இன்னொரு பெட்டியில் இருந்த கொலுசையும் எடுத்து கொடுக்க, ஆதிக்கு ஆச்சரியம் “இதெல்லாம் எப்ப இவ  வாங்கினா??  அதுவும் என்னிடம் எதுவும் சொல்லாமல்..” என்று

அவனுக்கு இந்த மாதிரி பார்மாலிட்டிஸ் எதுவும் தெரியாததால் அவன் எதையும் வாங்கி இருக்கவில்லை... பவித்ராவிடமும் எதுவும் சொல்ல வில்லை... ஆனால் அவளாகவே இதை  எல்லாம் யோசித்து வாங்கி இருக்கிறாளே..கெட்டிக்காரிதான்  என்று மனதுக்குள் மெச்சி கொண்டான்...

பின் பவித்ரா அந்த குழந்தையை கண்டு அதன் கொலுகொலு கன்னமும் குண்டு கண்களும் அவளை கட்டி இழுக்க,

“அத்தை.. நான் தூக்கிக்கவா.. இவனை.. “ என்று ஆசையாக கேட்க, அதற்குள் இவள் மற்றவர்களுக்கு கொடுத்த பரிசை எல்லாம் ஒரு வித பொறாமையோடு பார்த்து வந்த நந்தினி

“அதெல்லாம் கூடாது.. வெளியில் இருந்து வந்தால் கை கால் எல்லாம் கழுவிட்டு அப்புறம் தான் குழந்தையை தூக்கனும்.. “என்று தடையிட்டாள் ஒரு வித குரோதத்துடன்...

அதற்குள் மரகதம்,

“இருக்கட்டும் நந்தினி.. அவங்க ஏசி  கார் ல தான வந்திருக்காங்க..தூசி எல்லாம் இருக்காது.. அதோட பவித்ரா ஆசையா கேட்கற.. நீ தூக்கிக்கோ பவித்ரா.. “

என்று அவளிடம் கொடுக்க, அந்த குட்டி இளவரசனை  அள்ளி கொண்டவள் அதன் பட்டு கன்னத்தை மெல்ல தொட்டு பார்க்க,  அந்த குட்டி பையனும் பவித்ராவை கண்டு பொக்கை வாயால் சிரித்தான்...

புதியவளான பவித்ராவிடம் அவன் அழாமல் சென்றதை கண்டு அனைவரும் அதிசயித்து நிக்க, பவித்ரா அவனை இலாவகமாக பிடித்து கொண்டு கொஞ்சி கொண்டிருந்தாள்...

அவள் அந்த குழந்தையை கொஞ்சும் அழகை ரசித்து கொண்டிருந்தான் ஆதி.. உடனே அவனுக்கு அவள் தங்கள் குழந்தையை எப்படி கொஞ்சுவாள் என தோன்ற, பவித்ரா அவன் அருகில் நின்றிருக்க அவன் தோளில் சாய்ந்து கொண்டு  அவன் குழந்தையை கொஞ்சுவதை போலவும் ஒரு குடும்பமாக அவன் மனக்கண்ணில் தோன்ற திகைத்து நின்றான் ஆதி..

இதுவரை தன் குடும்பம் குழந்தை என்று எதையும் நினைத்ததில்லை  அவன்.. அதில் இன்ட்ரெஸ்ட்ம் இல்லாதவன்... பவித்ராவை மணந்ததே வேறு ஒரு காரணத்துக்காக.. அப்படி பட்டவனுக்கு முதல் முதலில் தனக்கு ஒரு குடும்பம் என்று தோன்ற உள்ளுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு தோன்றியது அவனுக்கு...

சிறிது நேரம் அந்த குழந்தையை கொஞ்சியவள் எதேச்சையாக தன் கணவனை காண அவனும் அந்த குழந்தையையும் குழந்தையை கொஞ்சி கொண்டிருந்தவளையும் ஆசையோடு பார்த்து கொண்டிருக்க, அவளும் சிரித்து கொண்டே அவன் அருகில் வந்து

“உன்  சித்தப்பாகிட்ட போடா குட்டி... “ என்று திடீரென்று அந்த குழந்தையை ஆதியின் கையில் கொடுக்க, இதை எதிர்பாராதவன் தானாக அந்த குழந்தையை கையில் வாங்கி கொண்டான்..

அவனிடம் வந்த அந்த குட்டி பையன் ஆதியையும் பார்த்து பொக்கை வாயில் சிரிக்க, அதை கண்டு இன்னும் பரவசமானது அவனுக்கு....

இந்த மாதிரி குட்டி குழந்தையை அவன் அருகில் பார்த்தது கூட இல்லை.. அதையே கையில்  பிடிக்கவும் இன்னும் பரவசமாகி அவனும் அதன் பட்டு கன்னத்தில் குனிந்து முத்தமிட்டான்...

அனைவரும் சிரித்து ரசித்து கொண்டிருக்க, நந்தினி மட்டும் பொறாமையில் புழுங்கி கொண்டிருந்தாள்...




Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!