உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-40

 


அத்தியாயம்-40

தி கட்டிலில் அமர்ந்து கொண்டு தன் ஐபேடில் எதையோ நோண்டி கொண்டிருந்தான் தலையை குனிந்தவாறே...

அறைக்குள் பால் டம்ளருடன் வந்த பவித்ரா அவன் முன்னே சென்று  பால் டம்ளரை நீட்ட, அவனும் அவளை நிமிர்ந்து பார்க்காமல் தன் ஐபேடையே பார்த்து கொண்டு, டம்ளரை கையில் வாங்கி பாலை குடித்தபின் மீண்டும அவளிடமே டம்ளரை நீட்டினான்..

தான் வந்து அவன் முன் நின்னும் அவன் கண்டுக்காமல் தன்  வேலையில் கவனமாக இருக்க, அதில் கடுப்பானவள் அவன் நீட்டிய அந்த டம்ளரை  வெடுக்கென்று பிடுங்கி கொண்டு,

“பெரிய அம்பானி.. இல்ல டாட்டா பிர்லா... அப்படியே தீயா வேலை செய்யறார்.. சரியான வொர்ககாலிக்.. எப்படி தான் இங்க வந்தும் அந்த பிசினஸ் ஐ பத்தியே யோசிச்சு கிட்டிருக்கானோ?  “ என்று மனதுக்குள் அவனை அர்ச்சனை பண்ணியவள் அப்பொழுது தான் நினைவு வந்தது அவள் நகை கடை..

“சே.. எப்படி இதை  கண்டுக்காமல் விட்டேன்.. பாவம் சரண்.. எப்படி சமாளித்தாளோ?? .. இன்னும் கொஞ்சம் ட்யூசன் எடுத்துக்கணும் நம்ம பாஸ் மாதிரி இருக்க.. “ என்று சிரித்து கொண்டவள் தன் அலைபேசியை எடுத்து சரண்யாவை அழைத்தாள்..  அவள் அழைப்பை சரண்யா ஏற்கவும்,

“ஹே.. சரண்..எப்படி இருக்க??  ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே.. சமாளிக்க முடிஞ்சுதா?? “என்று தன் கேள்விகளை அடுக்கினாள் பவித்ரா...

“ஹே..  கூல்டவுன் ஜான்சி ராணி... இங்க ஒன்னும் பிரச்சனை இல்ல.. எல்லாம் ஸ்மூத்  ஆ போய்கிட்டிருக்கு... அப்படி எதுவும் எமெர்ஜென்சினா அதான்  உன் ஜொள்ளு ப்ரதர் இருக்காரே.. அவர கூப்பிட்டுக்கறேன்... நீ ஜாலியா உன் ட்ரிப் ஐ என்ஜாய் பண்ணு.. “ என்று சிரித்தாள்..

“ஓ... கதை  அப்படி போகுதா?? ஓகே ஒகே.. நீ நடத்து டீ “ என்று சரண்யாவை வாரினாள் பவித்ரா...

“ஹீ ஹீ ஹீ.. அதெல்லாம் ஒன்னும் இல்ல டீ....நீ  பாட்டுக்கு எதையாவது கற்பனை பண்ணிக்காத..  சரி..   உன் ஹனிமூன் எப்படி போய் கிட்டிருக்கு??

ஹ்ம்ம்ம் அவங்கவங்க ஹனிமூன் க்கு ஸ்விட்சர்லாந் அப்படி இல்லைனா கூட பக்கத்துல இருக்கிற சிங்கப்பூர் மலேசியா னு போறாங்க... இவ்வளவு பெரிய பிசினஸ் மேன்..  ஹனிமூன் க்கு வில்லேஜ்க்கு போன ஒரே கபுல் நீங்க தான் டி  “ என்று சிரித்தாள்...

“என்னது  ஹனிமூன் ஆ??  ஹே..நாங்க சும்மா இங்க பெஸ்டிவல் னு  வந்திருக்கிறோம் டீ..” என்று முறைத்தாள் பவித்ரா..

“ஹீ ஹீ ஹீ  எதுக்கு போனா என்ன?? அதை  அப்படியே ஹனிமூன் ட்ரிப் ஆ மாத்திட வேண்டியது தான... எனிவே என்ஜாய் யுவர் டேஸ்... ஹாவ் அ குட் ட்ரிப் .. “என்று சிரித்தவாறு அலைபேசியை வைக்க போக

“ஹே சரண்.. இரு டீ..  அதுக்குள்ள எதுக்கு வைக்கிற?? .. அங்க என்ன நடக்குது?? எப்படி எல்லாம் போய்கிட்டிருக்கு??  நீ எப்படி எல்லாம் சமாளிச்ச ??  னு சொல்லுடி..

“ஆனாலும் உன் தொழில் பக்திக்கு ஒரு அளவே இல்லை டீ மா.. அப்படியே  உன் புருஷனை உரிச்சு வச்சிருக்க...இப்பதான்  கொஞ்ச நேரம் முன்னாடி உன் புருஷன் போன் பண்ணி அக்கரையா விசாரிச்சார்... இப்ப என்னடான்னா நீ .. இரண்டு பேரும் அங்க போய் உட்கார்ந்துகிட்டு ஆபிஸ் பத்திதான் யோசிச்சு கிட்டிருப்பீங்களா??

இங்க எல்லாம் நல்லா போய்கிட்டிருக்கு.. அப்படி ஏதாவது ப்ராப்ளம்னா உடனே உனக்கோ இல்ல என் ஹீரோவுக்கோ கூப்பிடறேன்....

நீ இப்ப மணிய பார்...பிசினஸ் பத்தி பேசற நேரமா இது?? ஒழுங்கா போய் என்  ஹீரோவை கவனி.. வை டி போன ...” என்று அவளை முறைத்தவாறு தன்  அலைபேசியை அணைத்தாள் சரண்யா சிரித்து கொண்டே...

பவித்ராவும் அவளை திட்டிகொண்டே போனை வைத்தவள் திரும்பி ஆதியை பார்க்க அவன் இன்னும் தன் தலையை அந்த ஐபேட் ல் புதைத்து கொண்டிருக்க, அதில் இன்னும் கடுப்பானவள்

“ம்ஹூம்... ஹனிமூன் ஆம்..  என்ஜாய் பண்றதாம்..  இதோ இப்படி எப்ப பார் பிசினஸ்க்குள்ள புகுந்து கிட்டிருந்தா என்னத்த என்ஜாய் பண்றது?? “  என்று முனகியவாறு கட்டிலின் அருகில் சென்றவள்,

“போதும் பாஸ்.. ரொம்ப ஓவரா உங்க பிசினஸ் பொண்டாட்டிய கட்டிகிட்டு கொஞ்சாதிங்க.. அப்புறம் மூளை சூடாயிடும்.. இங்க வந்தும் அதையே கட்டிகிட்டு அழனுமா?? என்ஜாய் பண்ணுங்க பாஸ்.. “ என்றாள் சிறு எரிச்சலுடன்..

“ஹா ஹா ஹா. கொஞ்சம் அர்ஜென்ட்  மெய்ல் ஸ் க்கு எல்லாம் ரிப்ளை பண்ண வேண்டியது இருந்தது பேபி...அதான்..  நவ் டன்.. “ என்று சிரித்துகொண்டே தன்  ஐபேடை மூடி அருகில் இருந்த டீபாயில் வைத்துவிட்டு அவள் புறம் திரும்பியவன்,

“ஹ்ம்ம்ம் அப்புறம் என்ன சொன்ன??  பிசினஸ் பொண்டாட்டிய கட்டிக்காதிங்க னா ??  ஹ்ம்ம்ம்ம் என் பெர்சனல் பொண்டாட்டியை கட்டிக்க எனக்கும் ஆசைதான்.. ஆனால் அவதான் முறுக்கி கிட்டு இருக்காளே.. நான் என்ன செய்ய?? “  என்றான் அவளை பார்த்து குறும்பாக கண் சிமிட்டி

“ஐய... நீங்க உங்க மனசால பொண்டாட்டியா நினைச்சு கிட்ட வந்தா அவ  ஏன் எட்டி நிக்க போறாளாம்?? அடுத்த நொடி உங்க காலடியில கிடப்பா... நீங்கதான் அவளை பொண்டாட்டியா ஏத்துக்காம முறுக்கி கிட்டு இருக்கீங்க..”  என்று கழுத்தை நொடித்தாள்..

“ஆஹா... இந்த குட்டச்சி எப்படி சுத்தி வந்தாலும் அவ பாயிண்ட் ஐ பிடிச்சிடறாளே.. அவள் சவாலில் குறியா இருக்கா... ராட்சசி..”  என்று திட்டி கொண்டவன்

“ஹா ஹா ஹா.. அது எப்படி ஒத்துக்கறதாம்?? அப்ப நான் தோத்தவனா ஆயிடுவேன்.. இந்த ஆதித்யா எப்பவும் தோக்க மாட்டான்... நான் ஜெயிக்க பிறந்தவன்..” என்று தன்  காலரை தூக்கி விட்டு சிரித்தான்..

“போச்சுடா.. திரும்பவும் முருங்க மரம் ஏறிட்டான்..” என்று மனதுகுள்ளே திட்டியவள்

“அப்படீனா.. இந்த பவித்ராவும் முன் வச்ச காலை பின் வைக்க மாட்டா...நானும் ஜெயிக்க பிறந்தவ தான் .. ”  என்று தன் கட்டை விரலை இரு பக்கமும் ஆட்டி காட்டினாள்..

“ஹ்ம்ம்ம் அதையும் பார்க்கலாம்.. சீக்கிரமே நீயா என்னை தேடி வர வைக்கிறேன்.. “ என்று சிரிக்க

“ஹ்ம்ம்ம் பாருங்க.. அது இந்த ஜென்மம் மட்டும் இல்ல.. இன்னும் ஏழு ஜென்மம் எடுத்து வந்தாலும் இந்த பவித்ரா தானா உங்க கிட்ட வரமாட்டா... “ என்று அவளும் பதிலுக்கு சிரித்து கொண்டே அருகில் இருந்த தலையணையையும் பெட்சீட்டையும் எடுத்தாள்... 

“ஹே !!!  இப்ப எதுக்குடி அத உருவற?? “என்றான் புரியாமல்...

“ஹ்ம்ம்ம்ம் என் மாமனார் மாமியார் இருக்காங்களே.. கொஞ்சம் கூட மூளை இல்லாதவங்க.. இவ்வளவு பெரிய ரூம் இருக்கு... இவ்வளவு பெரிய கட்டில் இருக்கு... நாளைக்கு தன் மருமகள்  தன் மகன் கிட்ட கோவிச்சுகிட்டு தள்ளி படுக்க ஒரு ஷோபாவை போட்டு வச்சிருக்காங்களா?? பார்.. இப்ப நான் கீழ படுக்க வேண்டியதா இருக்கு... “ என்று புலம்பினாள்...

“அப்படி சண்டை போட்டாலும் தன் மகனும் மருமகளும்  சீக்கிரம் ஒன்னு சேர்ந்துக்கணும்னு தான் தனியா ஷோபா வை போடலடி குட்டச்சி.. உன்  மாமியார் விவரமா தான் இருந்திருக்காங்க... நீதான் மக்கு.. அத புரிஞ்சுக்க தெரியல.. “என்று மனதுக்குள் சொல்லி சிரித்து கொண்டான்...

பின் எட்டி அவள் கையை பிடித்தவன்,

“இப்ப எதுக்கு நீ கீழ படுக்கற...அதான் இவ்வளவு பெரிய கட்டில் இருக்கு இல்ல.. அதிலயே படுத்துக்க .. நான் இந்த ஓரம் நீ அந்த ஓரம்..” என்றான் சிரித்தவாறு..

“ம்ஹ்ஹும்ம் அது சரி வராது... உங்களை நம்ப முடியாது.. நான் கீழயே படுத்துக்கறேன்...”  என்று முறுக்கினாள்..

“ஹா ஹா ஹா. அப்படி என்ன நான் உன் மேல பாய்ஞ்சுடுவேனா??.. நெவர் பேபி.. என்  சேலன்ஜ் ஞாபகம் இருக்கு இல்ல... அதனால டோன்ட் வொர்ரி...“ என்றான்..

“ஹ்ம்ம்ம் அப்ப அன்னைக்கு பாத்ரூம்ல எங்க போச்சாம் உங்க சேலன்ஜ் எல்லாம்?? “என்று முறைத்தாள்

“ஹீ ஹீ ஹீ.. அன்னைக்கு I was totally out of my control. That was first time happened in my life.. I swear அது மாதிரி திரும்ப நடக்காது.. என்னை  நம்பலாம்.. என் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு..

ஒரு வேளை உன் மேல நம்பிக்கை இல்லாம, எங்க தூக்கத்துல உன்னை மறந்து என்கிட்ட வந்திடுவியோனு பயமா இருந்தா நீ கிழயே படுத்துக்கோ??.. “என்று அவளை சீண்டினான்...

“ஹா ஹா ஹா பயமா?? எனக்கா?? அதுவும் உங்க கிட்ட?? நோ வே. என் மேல எனக்கும் நம்பிக்கை இருக்கு.. நான் எப்படி படுக்கிறனோ அப்படியே காலையில வரைக்கும் தூங்குவேனாக்கும்... “ என்று பழிப்பு காட்டியவள் இரண்டு தலையனையை எடுத்து அந்த கட்டிலின் நடுவில் வைத்தாள்

“ஹே .. இது எதுக்குடி...??  “ என்றான் புரியாதவாறு         

“ஹ்ம்ம்ம் இதுதான் Radcliffe Line..  இந்தியா பாகிஸ்தான் எல்லைக் கோடு.. நீங்க பாகிஸ்தான்.. நான் இந்தியா.. இந்த கோட்டை தாண்டி நீங்க வரக்கூடாது..நானும் வரமாட்டேன்..  டீல்??? “என்று தன் கையை உயர்த்தி காட்ட அவனும் சிரித்து கொண்டெ  டீல் என்று அவள் கையை தன் கையால் முட்டினான்...

சரி  லைட் ஐ ஆப் பண்ணு..”  என்கவும், அதிர்ந்தவள்

“ஆங்க் எதுக்கு?? “என்று முழித்தாள்..

“தூங்கத்தான் டி.. சீக்கிரம் ஆப் பண்ணிட்டு வா.. “ என்று குறும்பாக சிரிக்க அவளும்    விடிவிளக்கை ஆன் பண்ணி  மற்றதை அணைத்து விட்டு வந்து படுத்து கொண்டாள்...

சிறிது நேரத்தில் தூக்கம் வராமல் புரண்டவன் அவள் பக்கம் திரும்பி படுத்தான்...  அந்த விடிவிளக்கின் மங்கிய, மனதை வருடும் வெளிச்சத்தில் அவ்வளவு பக்கத்தில் இருந்த தன் மனைவியின் அந்த குறும்புதனமான முகத்தையும் எப்பவும் புன்னகையுடன் சிரித்து கொண்டிருக்கும் அவளின் கண்களும் அந்த கன்னத்து குழியும் வழக்கம் போல அவனை இம்சித்தன...

அவளின் திரண்ட சிவந்த இதழ்கள் அவனை சுண்டி இழுக்க, தன்னை கட்டுபடுத்தி கொண்டவன்  அதையே ஆசையாக ரசித்து பார்த்து கொண்டு இருந்தான்...

எதேச்சையாக அவன் பக்கம் திரும்பியவள் அவன் தன்னையே ரசித்து பார்த்து கொண்டிருப்பதை கண்டு உள்ளுக்குள் சிலிர்த்தாலும் அதை மறைத்துகொண்டு  தன்  ஆட்காட்டி விரலை நீட்டி “கொன்னுடுவேன் .. “ என்று மிரட்டினாள் அவனை முறைத்தவாறு...

அவனும் கண் அடித்து குறும்பாக சிரித்து பின்,

”ஆமா பேபி.. உனக்கு இந்த இடம் பிடிச்சிருக்கா..?? “ என்றான்

தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த பவித்ராவும் அவன் புறம் திரும்பி படுத்து கொண்டே,

“ஓ.. யெஸ்... சூப்பரா இருக்கு பாஸ்... இந்த தோப்பு..   இந்த வீடு... “என்று கண்கள் விரிய தான் மதியம் பார்த்தவைகளை வர்ணிக்க, அவளின் படபடக்கும் இமைகளையே ரசித்து கொண்டிருந்தவன் அவளின் அந்த ஆர்வமான பேச்சை கேட்டதும்,

“ஹ்ம்ம்ம் அப்ப ஏன் பெரியம்மா கிட்ட இந்த பட்டிகாட்டுக்கு வரமாட்டேனு சொன்ன?? “ என்று கொக்கி போட்டான் இடுங்கிய கண்களுடன்..அதை கேட்டு அதிர்ந்தவள்,

“ஆஹா... ஆர்வ கோளாறுல எல்லாத்தையும் உளறி இப்படி மாட்டிகிட்டியே பவித்ரா... ஹ்ம்ம்ம் எதையாவது சொல்லி சமாளிப்போம்... “என்று அவசரமாக யோசித்தவள்

“ஹீ ஹீ ஹீ அது வந்து.. வந்து..  ஆங்க் அப்ப இது மாதிரி எல்லாம் இங்க இருக்குனு தெரியாது இல்லை யா... அதான்... “ என்று அசடு வழிந்தாள்...

அவள் அசடு வழிந்ததிலும் அவள் தடுமாறி பதில் அளித்ததிலும் அவனுக்கு எல்லாம் விளங்கியது... இந்த ஊருக்கு வர  விரும்பி அவள் போட்ட திட்டம் புரிய,

“ப்ராடு...என்கிட்டயே மாத்தி பேசி என்னையே ஏமாத்திட்டியே டி .. அதுவும் பெரியம்மா கிட்ட இருந்து வராத போனுக்கு அப்படி ஒரு  ஆக்சன் வேற... நீ பெரிய ஜான்சி ராணி தான்.. “என்று வாய் விட்டு சிரித்தான்..

அவனின் அந்த வசீகர சிரிப்பையே இமைக்காமல் ரசித்து பார்த்தாள் அவன் அறியாமல்... பின் தன்னை சமாளித்து கொண்டு,

“ஹீ ஹீ ஹீ அரசியல் ல இதெல்லாம் சாதாரணம் பாஸ்.. அதெல்லாம் கண்டுக்காதிங்க... “என்று கண் சிமிட்டி அவளும் இணைந்து நகைத்தாள்..

“சரியான வாலு டீ நீ.. “ என்று அவள் மூக்கை பிடித்து செல்லமாக ஆட்டினான்..

“சரி... வேற என்னெல்லாம் பிடிச்சிருக்கு.. ?? “ என்று  அவளை மீண்டும் தூண்ட

“ஹ்ம்ம்ம்..  அப்புறம் இந்த வீட்ல இருக்கிறவங்க... எல்லாருமே சோ ஸ்வீட்.... அந்த நந்தினியை தவிர.. “ என்று மெல்ல முனகி கொண்டாள்...

“இந்த குடுமபத்தை பார்க்கிறப்போ எவ்வளவு கலகல னு ஜாலியா இருக்கு பாஸ்... நமக்கும் இந்த மாதிரி ஒரு குடும்பம் இருந்திருக்கலாம்... எங்க வீட்லயும் நானும் அம்மாவும்  னு இரண்டே பேரோடு நின்னு போய்டுச்சு... உங்க வீட்லயும் நீங்களும் நானும் மட்டுமே..

செம  போர்.. பேசாம என் மாமியார் மாமனார் இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம்.. “ என்றதும் மரகதம் தன் மாமியாரை பற்றி சொன்னது நினைவு வர

“என்  மாமியார் சோ  ஸ்வீட் இல்ல... எப்படி இவ்வளவு ஒரு பெரிய பண்ணைய உருவாக்கியிருக்காங்க..  நானும் அவங்க மாதிரி ஏதாவது சாதிக்கணும்  பாஸ்.. வெரி நைஸ் பெர்ஸனாலிட்டி... I miss them both..” என்று பெருமூச்சு விட்டாள்...பின் ஆதியை பார்த்து

“பாஸ்.. அவங்கள நேர்ல பார்க்காத எனக்கே அவங்கள மிஸ் பண்ற பீல் வருதே.. அவங்க கூடவே இருந்த உங்களுக்கு...?? நீங்க அவங்கள மிஸ் பண்ணலையா?? “ என்றாள் அவன் மனதில் இருப்பதை சொல்லட்டும் என்று..

காலையில் அவன் முகத்தில் வந்து போன வேதனையும் அவன் கண்ணில் தெரிந்த ஈரமும் வலியும் அவன் மனதில் ஏதோ ஒன்று இருக்கிறது என்று தோன்றியது அவளுக்கு..

ஆனால் அவனோ மெல்ல சிரித்துக் கொண்டான் எதுவும் சொல்லாமல்...அதை கண்டவள்

“சரியான கல்லுளி மங்கன்... வாயை திறந்து தன் மனசுல இருக்கிறதை சொல்றானா பார்... சரியான அழுத்தக்காரன்..” என்று மனதுக்குள் திட்டியவள் தன் முயற்சியை விடாமல்

“ஹ்ம்ம்ம் சொல்லுங்க பாஸ்... நீங்க உங்க அம்மா அப்பா வை மிஸ் பண்ணலை?? “  என்று மீண்டும் துருவினாள்..

அவனும் ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டு, அவள் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து கொண்டு பேச ஆரம்பித்தான்...




Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!