உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-41
அத்தியாயம்-41
“நான் என் அம்மா அப்பா வை மிஸ் பண்றேனா னு கேட்டா.... இல்லை னு தான் சொல்வேன்... ஏனா அவங்க எப்பவும்
என் கூடவே தான் இறுக்கிற பீல்... அவங்க என்னை விட்டு எங்கயும் போகலை...ஏதோ ஒரு தூரத்து ஊர்ல இருக்கிற மாதிரிதான் தோணும்... நீ சொன்ன மாதிரி ஒரு ஹாப்பி பேமிலிதான் எங்களோடது அப்போ...
ஒவ்வொரு முறை
இங்க வரும்பொழுதும் அவ்வளவு ஜாலியா இருக்கும்.. அதுவும் இரண்டு தாத்தா கூடயும்
சேர்ந்து ஆட்டம் போடுவேன்.. எங்க கிணறு ஒன்னு இருக்கு...நான் நீச்சல் கத்துகிட்டது
அங்கதான்.. என் இரண்டு தாத்தாவுமே அவ்வளவு
ப்ரெண்ட்லியா பழகுவாங்க..
நீ பார்த்தியே
அந்த தோப்பு.. அதெல்லாம் நான், மை டாட், மாம், அப்புறம் இரண்டு தாத்தா, பெரியம்மா பேமிலி என
எல்லாருமே சேர்ந்துதான் இந்த மர கன்றுகளை நட்டது..
அதுவும் நானும்
ஜனனியும் ஓடிப்போய் ஒவ்வொரு கன்னா எடுத்து வந்து கொடுப்போம்.. என் கைய
பிடிச்சுதான் என் தாத்தா இந்த தோப்புல முதல் மரக் கன்னை நட்டார்... அப்ப அவர்
சொன்னது இன்னும் நினைவு இருக்கு..
“நிஷாந்த்..
எந்த காரணத்தை கொண்டும் இந்த தோப்பை அழிய விடக்கூடாது... நீதான் இதுக்கு
பாதுகாப்பா இருந்து இந்த தோப்பையும் இந்த பண்ணையும் பார்த்துக்கனும் னு என் கையை பிடிச்சுகிட்டு சொன்னார்...
சரவணனயும்
பார்த்து நீதான் அவனுக்கு துணையா இருக்கனும் . னு சொன்னார்... அதே மாதிரி இந்த பண்ணையை
இன்று வரைக்கும் நல்லா பார்த்துகிட்டு
வர்ரோம்.. நான் இல்லைனாலும் பெரியம்மாவும், பெரியப்பா, சரவணன் எல்லாம் நல்லா
பார்த்து கிட்டாங்க...
எங்கப்பாவுக்கு
என்னவோ நான் அவர் தொழில் வாரிசா வரணும்னு
ஆசை... அதனால சின்ன வயசுல இருந்தே நிறைய தொழில் பற்றி பேசுவார்... எனக்கு புரியுதோ
இல்லையோ அவர் கண்கள் விரிய பேசும் பொழுது
எனக்கும் அதை பார்த்து ஆசையாக இருக்கும்..
சின்ன வயசுல
இருந்தே எனக்கும் அவர் மாதிர் பெரிய பிசினஸ் மேனாகணும் னு ஆசை...சில முக்கியமான கான்ப்ரென்ஸ்க்கெல்லாம்
கூட என்னை கூட்டிகிட்டு போயிருக்கார்...
அப்புறம் நான்
கொஞ்சம் வளர்ந்ததும்,
எனக்கு செல்ப் கான்பிடன்ஸ் வரணும்னு தான்
என்னை ஊட்டி கான்வென்ட் ல் சேர்த்தது.. எனக்கும் நிறைய தெரிஞ்சுக்கணும் னு ஆர்வம் இருந்ததால் அவர்களை பிரிவது கஷ்டமாக இல்லை.. அதோடு என்னை சேர்த்த முதல் நாள் மை டாட் என்னை தனியா கூப்பிட்டு பேசினார்...
வாழ்க்கையில்
எதற்கும் யாரையும் டிபன்ட் பண்ணி இருக்க கூடாது.. நம் வாழ்க்கையை நாம தான்
வாழணும்.. எங்களுக்கே கூட எதாவது ஆகிட்டா நீ துவண்டு விடக்கூடாது.. தைரியமா
இருந்து நீ ஜெயித்து காட்டணும்..
நீ எப்பவும்
ஜெயிக்க பிறந்தவன் ஆதித்யா... என்று என்னை
அணைத்து முத்தமிட்டது இன்னும் நினைவு இருக்கு பேபி...
அவருக்கு
முன்னரே என்னை விட்டு பிரிந்து விடுவார்கள் என்று தெரிந்ததோ என்னவோ.. அவர் முன்னயே
என்கிட்ட எல்லாம் சொல்லி இருந்தார்...
அதனாலயே என்னவோ
அவர்கள் இறந்த பிறகு என் பெரியப்பா வந்து கூட்டிகிட்டு வந்தப்போ மூன்று பேரையும்
உயிரற்றவர்களாக பார்க்க கொஞ்சம் கஷ்டமா இருந்தது..
பட் அவங்க என்னை
விட்டு போகலை... அவங்க இறக்கலை னு
என் மனதுக்குள் திரும்ப திரும்ப சொல்லிகிட்டேன்... அதனாலயே என்னவோ எனக்கு அழ கூட தோணலை.. ஏன் இதுவரைக்குமே நான்
எதுக்கும் அழுததில்லை....” என்று தழுதழுத்தான்...
பவித்ராவுக்கும்
அவனின் அந்த இலகிய நிலை மனதுக்கு கஷ்டமாக இருக்க தன் மறு கையால் அவன் தலை முடியை
கோதிவிட்டாள் பரிவுடன்.... ஒரு விநாடிதான் அவன் இளகியது.. அடுத்த விநாடியே
சாதாரணமாகி சிரித்துக்கொண்டே மேலும் தொடர்ந்தான்.. ..
“அழுவது கோழைத்தனம்...
ஒன்னு நாம் கேட்டது கிடைக்கிறவரை போராடணும்... இல்ல கிடைக்கிறத வச்சுகிட்டு
திருப்தி ஆகிக்கணும்.. இதுல அழுகை எங்க வர்றது?? எதுக்கு அழணும் ?? என்று என் அப்பா சொல்லி கொடுத்த
பாடம்...அதனாலயோ என்னவோ எனக்கு அழத் தோணலை அப்பொழுது...
பெரியம்மாதான்
எனக்காக ரொம்ப அழுதாங்க.. என்னை அவங்க பையனா வளர்க்கிறதா சொன்னாங்க.. பட் எனக்கு
அவங்க பேமிலிய என் பேமிலியா ஏத்துக்க முடியல..
என் அம்மா அப்பா
இருந்த இடத்துல இன்னொருத்தங்கள வச்சு பார்க்க முடியல.. நான் ஊட்டிக்கே போறேனு சொல்லிட்டேன்.. பெரியம்மாவும்
ஒன்னும் செய்ய முடியாமல் கொண்டு வந்து விட்டுட்டாங்க.. அப்பவும் மாதம் ஒரு முறை
என்னை பார்க்க வந்திடுவாங்க..
எல்லாரும்
நினைக்கிற மாதிரி என் அப்பா அம்மாவை சின்ன வயசுல இழந்துட்டேனு நான் எப்பவும் கஷ்ட
பட்டதில்லை .. ஆக்சுவலா தனியா ஐடிலா (idle) இருந்திருந்தா
என் அம்மா அப்பாவுக்காக ஏங்கி இருப்பேனோ என்னவோ.. பட் நான் அந்த மாதிரி
ஆகக்கூடாதுனு எப்பவும் ஐடில் ஆ இருக்காத மாதிரி நான் என் நாட்களை, என் வாழ்க்கையை திட்டமிட்டேன்..
ஸ்கூல் டேஸ்ல எல்லா ஸ்போர்ட்ஸ் லயும் நான்
இருப்பேன்...எல்லா எக்ஸ்ட்ரா கரிகுலர்
ஆக்டிவிடிஸ் லயும் நான்.. அப்பவும் மீதி இருக்கும் நேரங்களில் லைப்ரரிக்கு
போய்டுவேன்..
எல்லா விதமான
புத்தகங்களும் படிப்பேன்.. என்னுடைய் 8 ஆம் வகுப்பில் எல்லா ஆங்கில நாவலும்
படித்து முடித்து விட அந்த வயதிலயே தொழில் சம்பந்தமான புத்தகங்களை அந்த வயதுக்கு
புரியிற மாதிரி புத்தகங்ககளை தேடி படிக்க ஆரம்பித்தேன்..
அங்கு எனக்கு
ஒரு சார் ரொம்ப கைடா இருந்தார்.. அவரும் நிறைய புத்தகங்கள் சஜெஸ்ட்
பண்ணுவார்...இப்படி அப்பயே நிறைய தேடல் எனக்குள்.. என் வாழ்க்கையை நானே
நிர்ணயித்தவன்..
என் பள்ளி
படிப்பு முடிந்ததும் எனக்கு வெளிநாட்டில் சென்று படிக்க வேண்டும் என்று ஆசை...
அதனாலயே ஹார்வார்ட் யுனிவெர்சிடியில் (Harvard University) ல் சேர்ந்தேன்.. அங்கயே Bachelor
and Masters in Business Management முடிச்சேன்..
என்னோட
ஆராய்ச்சியே ஒவ்வொரு தொழிலும் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு நிலையில்
உச்ச கட்டத்தை அடையும்.. அதை Saturation
Point னு சொல்லுவாங்க.
அதற்கப்புறம்
அது கொஞ்சம் கொஞ்சமாக சரிய தொடங்கும்..
ஒரு வெற்றி கரமான பிசினஸ்க்கு இந்த Saturation Point எது.. அது எப்பொழுது எப்ப வரும்?? அதை எப்படி மேனேஜ் பண்ணி சரிவிலிருந்து காப்பது
என்பதுதான்....
அதே மாதிரி ஒரு
தொழில் சரிய தொடங்கினால் ஒன்னு அதை சரி
பண்ணலாம்... இல்ல அதை அழித்து விட்டு வேற ஒன்று புதியதாக ஆரம்பிக்கனும்...அப்படி
அழிக்கும் பொழுது என்னென்ன அந்த தொழில் இருந்து பிரித்து எடுத்து ரீயூஸ் பண்ணலாம் என்பதும் தான் என் ஆராய்ச்சி....
அதாவது ஒரு
வீட்டை demolish பண்ணும்பொழுது அந்த
வீட்டில் இருக்கும் நல்ல பொருட்கள எடுத்து கொள்கிறோமே அது மாதிரி..
நான் என்னுடைய
ஆராய்ச்சியை முடிக்கும் பொழுது தான் என் கார்டியன், அப்பா தொழிலை எல்லாம் பார்த்து
கொண்டிருந்தவர், ப்ரேம் ஓட அப்பா... என்னை அழைத்து எங்கள் தொழில் நலிவடைவதாகவும்
சீக்கிரம் வந்து என்னை பொறுப்பேற்று கொள்ள சொன்னார்...
நானும் என்
ஆராய்ச்சியை இம்ப்லிமென்ட் பண்ண ஒரு சான்ஸ் மற்றும் எப்பவும் எனக்கு சேலன்ஜ் னா
ரொம்ப பிடிக்கும் என்பதால் இதை ஒரு சேலன்ஜ் ஆ
எடுத்து கிட்டு உடனே இந்தியா வந்துட்டேன்... அப்ப ஆரம்பிச்சது தான் என்
ஓட்டம்..
3 வருடம் என்
கடின உழைப்பால் சரிந்த தொழில்களை
ஓரளவுக்கு எல்லாம் சரியாக்கி அப்புறம் வெற்றி பாதையில் செல்ல முடிந்தது... But that was also
interesting and very challenging journey… I enjoyed lot
“ என்று நிறுத்தினான்...
“என்
வாழ்க்கையில் எப்பவுமே எனக்கு சலிப்பு
வந்ததில்லை...எதையாவது தேடி ஓடிகிட்டே இருக்கணும்...எப்பவும் பிசி யா இருக்கணும்..அதோட
லைப் ஐயும் என்ஜாய் பண்ணனும்.. I was
successful in everything so far and hope it will continue.. “ என்று
நிறுத்தினான் புன்னகைத்தவாறு...
பவித்ராவோ அவன்
சொல்வதையே மெய் மறந்து ஆர்வமாக கேட்டு கொண்டிருந்தாள்....அவன் கடந்து வந்த பாதையை, தனி ஆளாக வளர்ந்து தன்னை இந்த அளவுக்கு அவனாகவே
செதுக்கியதை நினைத்து பெருமையாக இருந்தது..
“வாவ்... சூப்பர் பாஸ்.. நம்ம தல மாதிரி உங்க
வாழ்க்கைய நீங்களே செதுக்கி இருக்கீங்க....சூப்பர்.. “ என்று சிரித்தாள்...
அதை கேட்டு புரியாதவன்
“தலயா?? அது யாரு?? “ என்றான்...
“என்னது?? நம்ம தலய தெரியாதா?? நீங்கல்லாம்
தமிழ்நாட்டுல இருக்கிறதே வேஸ்ட் பாஸ்... நம்ம தல அஜித் தான்.. அவர்தான் சொல்லி இருக்கார்...
“என்
வாழ்க்கை ல ஓவ்வொரு நாளும் ஓவ்வொரு நிமிஷமும் ஏன் ஓவ்வொரு நொடியும் நானா
செதுக்குனது டா... “
என்று
அஜித் டயலாக் ஐ அப்படியே ஆக்சன் உடன் பவித்ரா நடித்து காட்ட, அதை
கண்டு விழுந்து விழுந்து சிரித்தான் ஆதி...
“வாவ்...
சூப்பர் பேபி... உன் ஆக்ஸன்.. நீ பேசாம நடிக்க போயிருக்கலாம்... “ என்று சிரிக்க,
“ம்ஹூம்ம்..
அதான் தினமும் நம்ம வாழ்க்கையில நடிச்சுகிட்டுதான இருக்கோம்.. இதுல தனியா
போய் என்ன நடிக்கிறது.. “ என்று தத்துவத்தை சொல்லி சிரித்தாள்...
அவனுடன் இலகுவாக
பேசி சிரித்து கொண்டிருந்தவளின் மனதில் இன்னொரு கேள்வி பாக்கி இருந்தது.. அதை
கேட்கலாமா என்று யோசிக்கையில் அவனே தொடர்ந்தான்..
“ஹ்ம்ம்ம் ஒரே
ஒரு ப்ளாக் மார்க் இன் மை லைப்... அதுகூட என்னை
பொறுத்த வரைக்கும் ப்ளாக் மார்க் இல்ல.. பட் நம்ம கல்ச்சர்க்கு அது ஒரு
ப்ளாக் மார்க் னு பின்னால தான் தெரிஞ்சது...
எப்பவும் பிசினஸ்
பத்தி மட்டுமே யோசித்து கொண்டிருந்த எனக்கு நம்ம கல்ச்சர் பத்தி தெரியாமல்
போயிருச்சு.. என்னுடைய டீன் ஏஜ் ல யே நான் வெளிநாடு போய்ட்டேன்.. ஆரம்பத்தில்
என்னுடய அறிவு தேடல் மட்டும்தான் primary ஆ இருந்தது.. என்னுடய 21 ஆவது வயதில் ஓரளவுக்கே எல்லாம்
கற்ற பிறகு வெளி உலகத்தையும் ஆராய்ந்தேன்..
அப்பொழுது
தான் என் க்ளாஸ்மேட்ஸ் எல்லாம் எப்ப பார்
பொண்ணுங்களை பத்தியே பேசிகிட்டிருப்பதை கண்டேன்.. அப்பொழுதுதான் எனக்கும் ஒரு
ஆர்வம் வந்தது.. அப்படி என்னதான் இருக்கு னு தெரிஞ்சுக்கணும்னு..
நான் தனியா
வளர்ந்ததால பொண்ணுங்களை பற்றியும் நாம எப்படி அவங்க கிட்ட பழகணும் என்பதை பற்றி
எல்லாம் யாரும் சொல்லி கொடுக்க வில்லை..
ஜஸ்ட் ஒரு
க்யூரியாசிட்டி... அதோடு எனக்குள்
இருக்கும் ஒரு சேலன்ஜ் ஐ தேடும் குணம்.... அதோட அங்க எல்லாம் டேட்டிங் சாதாரணம்.. அது மாதிரி தான் நானும் டேட்டிங்
னு போனது.. அதுவும் நிறைய பொண்ணுங்க அவங்களா அப்ரோச் பண்ணினாங்க..
அந்த ஏஜ் ல அது
ஒரு மாதிரி.. பீலிங்.. நான் மீட் பண்ணின பர்ஸ்ட் கேர்ள்.... நேம்
கூட ஹ்ம்ம்ம் ஐ பர்காட்.. “என்று
மெல்லிய வெட்கத்துடன் அவன் முதல் டேட்டிங் ஐ பற்றி அவன் விவரிக்க, பவித்ராவோ பல்லை கடித்தாள்
“அடப்பாவி.. ஒரு
பொண்டாட்டிகிட்ட சொல்ற விசயமா இது.. அடுத்த பொம்பளை கூட எப்படி கூத்தடிச்சேனு வாய்
கூசாம சொல்ற.. அதையும் நானும் கேட்டு தொலைக்கிறேன்.. இத மட்டும் ஒரு மானமுல்ல எந்த
பொண்டாட்டியாவது கேட்டிருந்தா அடுத்த நாளே.. ம்ஹூம் அடுத்த நிமிசமே டைவர்ஸ் கேட்டு
கோர்ட்ல நின்னுருப்பா...”
“ம்ம்ம்ம்ம் என்ன பண்றது??... என் தலை எழுத்து.. நீதான் என்னை
பொண்டாட்டி இல்லைனு சொல்லிட்டியே... அப்புறம் நான் எந்த கோர்ட்ல போய்
நிக்கறதாம்... ஏதோ ஒரு பிரென்ட் னு
நினைச்சு நீ சொல்ற இந்த குப்ப கதை எல்லாம் நானும் கேட்டு தொலையறேன்.. “என்று
பொரிந்தாள் மனதுக்குள்..
பின் இந்தியா
வந்த பிறகும் முதல் 3 வருடம் எனக்கு வேற எந்த எண்ணமும் இல்லை....எப்பவும் என்
கம்பெனி மட்டும் தான்.. ஒரு வழியாக அதை தலை நிமிர்த்திய பிறகு தான் மூச்சு விட
முடிந்தது.. அந்த சமயம் என் பெர்சனாலிட்டிய பார்த்தும் நான் அடையற வளர்ச்சிய
பார்த்தும் என்மேல நிறைய பொண்ணுங்க வந்து விழுந்தாங்க...
கொஞ்ச நாள்
விட்டிருந்த அந்த பழக்கம் மீண்டும் ஒட்டி கொண்டது... பட் அங்க மாதிரி இங்க ப்ரீயா
சுத்த முடியாது.. மீடியாவும் மத்த நியூசை கவர் பண்றாங்களோ இல்லையோ இந்த மாதிரி நியூஸ்க்கு
தான் அலைவாங்க இங்க..
அதனால I was very careful ..அதுவும்
நானா யாரயும் நாடி போனது இல்லை.. அவங்களா வந்தது தான்.. “ என்று சிரிக்க
பவித்ராவுக்கோ கோபம் உச்ச கட்டத்தை தொட்டது... அவள் முகம் கோபத்தில் சிவந்து
கொதிக்க, அவனை பார்த்து எரிமலையாக முறைத்தாள்...
“ஹே சாரி பேபி..
இதெல்லாம் ஒரு காலத்துல.. இப்ப இல்ல.. எப்ப உன்னை பார்த்தனோ அப்பவே எல்லாம்
விட்டுட்டேன்.. I’m getting
bored of all. Now I’m interested only on my sweet பேபி...ட்ரஸ்ட் மி.. “ என்று அவளின் பட்டு
இதழ்களை தடவ நீண்ட அவன் கையை தட்டிவிட்டு
முறைத்தாள் பவித்ரா...
அவளின் கோபத்தை
கண்டவன்
“ஹா ஹா ஹா...
இப்ப எல்லாம் நீ ரொம்ப ஸ்மார்ட் ஆகிட்ட
பேபி.. நான் அடுத்து என்ன செய்வேனு முன்னாடியே தெரிஞ்சு வச்சிருக்க.. சோ ஸ்வீட்...
ஆனாலும் இந்த கோபத்துல நீ இன்னும் அழகா இருக்க டார்லிங்.. “ என்று மீண்டும் அவளை
வம்பு இழுத்தான்...
அவளும் அவனுக்கு
பழிப்பு காட்டி அவன் பிடியில் இருந்த அவள் கையை இழுக்க அவனோ அவள் கையை விடாமல்
இன்னும் இறுக்கி பிடித்து கொண்டான்..
“ஹ்ம்ம்ம்
இதுதான் என் வாழ்க்கை வரலாறு .. செமயா இருக்கா?? ... “ என்று கண்ணடித்தான்..அதற்குள் தன் கோபம் தணிந்தவள்,
“ஹ்ம்ம் சூப்பர்
பாஸ்..உங்க வாழ்க்கை வரலாற்றை புத்தகமா போடலாம்..
பிச்சுகிட்டு போகும்.. சரி இப்ப கையை விடுங்க தூங்கணும்.. “ என்று
சிணுங்கினாள்..
“ஹ்ம்ம்ம் முதல்
முதலா என் மனதில் இருப்பதை இப்படி வெளியில சொல்லி இருக்கேன்.. I’m feeling relaxed.. தேங்க்ஸ்..பேபி.. “என்று அவன் கைக்குள் இருந்த அவள் கைக்கு முத்த மிட்டவன் முகத்தில்
மீண்டும் வந்திருந்தது அந்த இலகிய நிலை...
அவனின் அந்த
இலகிய நிலையை கண்டவளுக்கு மனம் இளகியது....அவன் வெளியில் தன் பெற்றோர்களை
இழந்ததால் கஷ்டபட வில்லை என்று சொன்னாலும் உள்ளுக்குள் அவனை அறியாமலயே அந்த ஏக்கம்
இருந்திருக்கும்.. அதுதான் காலையில் அவன் கண்ணில் வந்துபோன அந்த ஈரமும் வலியும் என
புரிந்தது அவளுக்கு...
அவனுக்கு ஒரு
தாயாக மாறி அவன் இழந்த தாய் மடி சுகத்தை வாரி வழங்கிட துடித்தது அவளுள் இருந்த
தாய்மை..அதை விட இந்த மாதிரி அவன்
இருக்கும் நேரங்களில் ஒரு தாரமாகி அவன் காயத்திற்கு மருந்திட முடியாத தன் நிலையை
நினைத்து அவளுக்கு வருத்தமாக இருந்தது...
“பேசாம இந்த
ஆட்டத்தை கலச்சுட்டு, என் தோழ்வியை ஒத்துகொள்ளலாமா?? எவ்வளவு நாள் தான் இப்படி கண்ணாமூச்சி ஆடறது .. என்றது ஒரு மனம்..
மறுபக்கமோ
ம்ஹும்ம்... அது
எப்படி நீ விட்டு கொடுக்கலாம்.. அது
முடியாது.. “என்று முரண்டு பண்ணியது... எந்த பக்கமும் போக முடியாமல் என்ன
செய்வது என்று உள்ளுக்குள் குழம்பி கொண்டிருந்தாள் பவித்ரா....
அவளிடமிருந்து
சிறிது நேரம் எந்த பதிலும் வராமல் போக அவள் முகத்தை பார்த்தவன் அவள் முகத்தில் இருந்த குழப்பத்தை கண்டவன்
“என்ன
டார்லிங்... என் பெருமையெல்லாம் கேட்டு பேசாம தோழ்விய ஒத்துகிட்டு என்கிட்ட
வந்திடலாம்னு யோசிக்கிறியா?? “ என்று சிரித்தான்...
தவளை தன்
வாயாலயே கெடும் என்பதைப்போல,
கொஞ்சமாக இளகி கீழ இறங்கி அவன் பக்கம் சாய்ந்தவள் அவனின் நக்கலான் சிரிப்பில் மீண்டும் கடகடவெண்று வேகமாக மேல ஏறி உச்சி
கொம்பில் அமர்ந்து கொண்டாள்...பின் அவனை பார்த்து
“ஹீ ஹீ ஹீ
நினைப்புதான்...நான் வேற எதுவோ யோசிச்சு கிட்டிருந்தேன்... ஓகே பாஸ்...
அதான் உங்க மனசுல இருந்ததை எல்லாம்
சொல்லீட்டீங்க இல்ல... இப்ப
ஹாப்பியா தூங்குங்க.. குட் நைட்.. “ என்று சமாளித்து சிரித்தாள்..
“அதான... நீ
மட்டும் உண்மைய ஒத்துகிட்டா காஜா புயல்
மாதிரி வேற எந்த புயலாவது வந்திராது...அப்படி வந்தா இந்த கிராமம் தாங்காது...
வேணாம் தாயே... நீ அப்படியே இரு..சரி இப்ப தூங்கலாம்....குட் நைட்..ஸ்வீட் ட்ரீம்ஸ்..
“ என்று கண்ணடித்து பின் தன் கண்ணை மூடி கொண்டு சிறிது நேரத்தில் உறங்கி போனான்...
ஆனால்
பவித்ராவுக்கோ தூக்கம் தொலைந்து போனது..அவன் ஆரம்பித்த கதையையும் அதை முடித்த
நிலையையும் மீண்டும் நினைத்தவளுக்கு அவன்
ஒரு இன்ட்ரெஸ்டிங் ஆன கேரக்டர் ஆக
தெரிந்தான்.. இவன் நல்லவனா?? இல்லை கெட்டவனா?? என்ற கேள்வி வந்தது..
எது எப்படியோ
நடக்கிறது நடக்கட்டும் என்று நினைத்துகொண்டவள் திரும்பி உறக்கத்தில் இருந்தவனை ரகசியமாய்
ரசித்தாள்... பின் அவன் குண்டு கன்னத்தை செல்லமாக கிள்ளி,
“திருடா... You are making my life so interesting and beautiful.. Thank you my dear sweet hubby…” என்று செல்லம் கொஞ்சியவள், கண்ணை மூடி உறங்க முயன்றாள் நாளை வரப்போகும் திருப்பத்தை அறியாமல்...
Comments
Post a Comment