உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-43
அத்தியாயம்-43
தன் கணவனை பற்றி மனம் நிறைந்த பூரிப்பில் அவனை காணும்
ஆவலில் துள்ளி குதித்தபடி மாடி ஏறிய பவித்ரா அறையின் உள்ளே அவள் கணவன் நந்தினியை அணைத்தவாறு கட்டிலில்
மிக நெருக்கமாக இருந்ததை கண்டு அதிர்ந்து கால்கள் நழுவ அப்படியே சுவற்றில்
சாய்ந்து கொண்டாள்....
ஒரு வேளை தான்
கண்டது கனவோ இல்லை பிரம்மையோ என்று நம்ப
முடியாமல் மீண்டும் ஒரு முறை உள்ளே எட்டி பார்க்க நினைக்கையில், உள்ளே இருந்து ஏதோ அரவம் கேட்க, தன் எண்ணத்ஹை விடுத்து அப்படியே சுவற்றில் சாய்ந்து கொண்டாள்.....
உள்ளே இருந்து
“சீ ... போதும்
விடுங்க மாமா... யாராவது வந்திட போறாங்க...நான் கீழ போறேன்...“என்று நந்தினி குழைவது மெலிதாக
பவித்ராவின் செவியில் விழுந்தது.. அதை தொடர்ந்து நந்தினி கட்டிலில் இருந்து இறங்கி
அறை வாயிலை நோக்கி வருவது தெரியவும் பவித்ரா இன்னும் சுவற்றுடன் ஒட்டி நின்று
கொண்டாள்...
தன் ஆடையை சரி
செய்த படியே வெளியில் வந்த நந்தினி
“அப்பா... என்ன ஒரு
முரட்டுதனம்... பார்க்கத்தான் டீசன்ட் ஆ இருக்கிற மாதிரி இருக்கார்.. ஆனால்
இவ்வளவு முரட்டுதனமா?? “ என்று முனகியவாறு தன் உதட்டை கையால் வருடியவாறே முகம் சிவந்த
வெக்கத்துடன் பவித்ரா நின்று கொண்டிருந்ததற்கு மறுபக்கமாக சென்று படியில் இறங்கி
கீழ சென்றாள்...
அவள் இறங்கி
செல்வதையே ஒரு வித கசப்பு மற்றும் வெறுப்புடன் வெறித்து பார்த்தாள் பவித்ரா...
ஒரு சில விநாடிகளிலலயே தன் சக்தி எல்லாம்
வடிந்து விட்டதை போல இருந்தது... கால்களை நகர்த்த கூட முடியாமல் சிறிது நேரம் அப்படியே நின்றவள் பின்
சுதாரித்து கொண்டு அவள் வந்த வழியே மாடியின் கைபிடியை பிடித்து மெதுவாக இறங்கி
தோப்புக்குள் சென்றாள்...
தோப்புக்குள்
சென்றவள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள் உள்ளுக்குள் கோபம் கொப்புளிக்க....
எவ்வளவு முயன்றும் அவள் கண்ட அந்த காட்சியே திரும்ப திரும்ப அவள் கண் முன்னே
வந்தது...அவள் உடல் பற்றி எரிவதை போல இருந்தது
கோபத்தில்....
“சே... இவனை
போய் நல்லவன்.. திருந்திட்டானு நினைச்சேனே.. கடைசியில அவன் புத்திய
காட்டிட்டானே... “ என்று உள்ளுக்குள் குமுறினாள்..
மீண்டும் ஒரு
முறை நேற்று இரவு அவன் சொன்ன கதையை மனதுக்குள் ஓட்டி பார்த்தாள்.. தான் பெண்கள்
விசயத்தில் கொஞ்சம் வரம்பு மீறி நடந்ததை அவனே ஒத்து கொண்டான் தான்..
ஆனால் கடைசியாக
அதை எல்லாம் விட்டு விட்டதாகத்தானே சொன்னான்... ஆனால் மீண்டும் எப்படி இப்படி ??” என்று யோசித்தவளுக்கு
மீண்டும் அந்த காட்சி கண் முன்னே வர, கை முஷ்டிகள் இறுகின...
மீண்டும் நேற்று
இரவு அவனின் இலகிய நிலையும்
“எப்ப உன்னை
பார்த்தனோ அப்பவே எல்லாம் விட்டுட்டேன்.. I’m getting bored of all. Now I’m interested only on my
sweet பேபி.”
என்று அவன்
சொன்னதும் நினைவு வர
“அப்படி
சொன்னவன் எப்படி ஒரே நாளில் இப்படி மாற முடியும்?? ஒரு வேளை இது எதுவும் அவனின் விளையாட்டோ?? தன்னை அவன் பக்கம் இழுக்க.. “
என்றது ஒரு மனம்..
மற்றோரு மனமோ
“அப்படி என்றால் அந்த நந்தினி எப்படி
அறையில் இருந்து வந்தாள்?? அதுவும் இந்த மாதிரி ஒரு விளையாட்டுக்கு எந்த பெண் சம்மதிப்பாள்..?? அவன் கெட்டவன் தான்.. “ என்று வாதாட இப்படியே கொஞ்ச நேரம் தனக்குள் பட்டி
மன்றம் நடத்தினாள்...
முடிவு எதுவும்
தெரியாமல் தலைவலி அதிகரிக்க,
அப்பொழுதுதான் இதுவரை நடந்ததில் கால் வலியும் சேர தலையில் கை வைத்து கொண்டு
அருகில் இருந்த பலகை மாதிரியான கல்லில் அமர்ந்தாள்...
அப்பொழுது தான்
தன் அன்னை சொன்ன ஒரு இன்ஸ்டன்ட் நினைவு வந்தது.. பக்கத்து வீட்டில் நடந்த ஒரு
நிகழ்வை பற்றி தன் அம்மாவுடன் பேசி கொண்டிருக்கும் பொழுது அவர் சொன்ன பொன்மொழி
“கண்ணால்
பார்ப்பதும் பொய்.. காதால் கேட்பதும்
பொய்.. தீர விசாரிப்பதே மெய்..”
ஒரு சூழ்நிலை
ஒரு நல்லவனை கெட்டவனாக காட்டும்... அதே மாதிரி கெட்டவனையும் நல்லவனாக காட்டும்....
அதனால் நாம கண்ணால் பார்ப்பதை வைத்து டக்குனு எதயும் முடிவு பண்ணக்கூடாது..
அந்த சூழ்நிலையை
ஆராய்ந்து அதன் பின்னரே எதையும் முடிவு பண்ணனும்.. “ என்று சொல்லி மஹாபாரதத்தில் வரும் ஒரு நிகழ்ச்சியை மேற்கோலாக
சொல்லியது நினைவு வந்தது..
ஒருமுறை கர்ணன்
ம் அவன் நண்பன் துரியோதனன் மனைவி பானுமதி யும் பகடை விளையாடிக்
கொண்டிருந்தனர்...ஆட்டத்தில் கர்ணன் வெற்றி பெறும் நிலை வரும்பொழுது துரியோதனன்
அந்த அறைக்குள் நுழைந்தான்...
தன் கணவனை
கண்டதும் மரியாதை நிமித்தமாக பானுமதி எழ முயல, கர்ணன் அவள் ஆட்டத்தில் இருந்து தப்பிக்க எழுகிறாள் என்று
நினைத்து அவள் கையை பற்ற, தவறி இடையில் அணிந்திருந்த முத்துமாலை யில் பட, அது
அறுந்து முத்துக்கள் சிதறி கீழ விழுந்தன..
சரியாக அந்த
நேரத்தில் துரியோதனன் அவர்கள் இருவரையும்
கண்டான்... அந்த நிலையில் துரியோதனனை காணவும் அவன் தவறாக எடுத்துக் கொள்வானோ என்று
இருவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்...
தர்மசங்கடமாக
அவர்கள் விழித்து கொண்டிருக்கும் அந்த சூழ்நிலையை மட்டும் பார்த்தால் எந்த
கணவனுக்கும் அது தவறாகவே தோன்றியிருக்கும்... ஆனால் துரியோதனன் தன் நண்பன் மேலும் தன் மனைவி மேலும்
கொண்டிருந்த நம்பிக்கையால் அந்த சூழ்நிலையை சரியாக புரிந்து கொண்டு
“எடுக்கவா?? கோக்கவா?? “ என்று ஒரே வரியில் அவர்கள் மீது இருந்த
நம்பிக்கையை வெளிபடுத்துவான்...
துரியோதனன்
கெட்டவனாக இருந்தாலும் அவனுடைய நல்ல குணங்களில் ஒன்றாக கூறப்படுவது அவனின் இந்த நம்பிக்கை...
என்று தன்
அன்னையின் விளக்கத்தை நினைவு கூர்ந்தவள், அதுவரை உணர்ச்சி வசப்பட்டதில் தூங்கி கொண்டிருந்த தன் மூளையை
தட்டி எழுப்பி அதை தூண்டிவிட்டு, மறுபக்கத்தில் இருந்து அந்த சூழ்நிலையை ஆராய்ந்தாள்..
அவர்கள் இந்த
வீட்டிற்கு வந்ததில் இருந்து அந்த நந்தினியின் செயல்பாட்டை மனதுக்குள் ஓட விட்டு பார்த்தும், ஜனனி அப்பப்ப சொல்லும் அவள்
ஏதோ திட்டத்தோட இருக்கிறாள் என்றதும் நினைவு வர, தன் மனதுக்குள் சில கணக்குகளை போட்டு
பார்த்தாள் பவித்ரா...
அதன் விடை
அவளுக்கு திருப்தியானதாக,
அவள் எதிர்பார்த்த மாதிரியாக வர, முகத்தில் ஒரு நிம்மதியும்
தெளிவும் வந்தது...
அந்த விடையை
சரிபார்த்தால் போதும்.. அது மட்டும் நான் நினைத்த படி வர வேண்டும் என்று அந்த கடவுளை வேண்டி கொண்டாள்..
கடந்த ஒரு மணி
நேரமாக குழப்பத்தில் இருந்ததால் அவளை விட்டு சென்றிருந்த அந்த உற்சாகம்
சுறுசுறுப்பும் தன்னுள் வந்த தெளிவால்
மீண்டும் அவளை வந்து ஒட்டி கொண்டது...
அதே
உற்சாகத்துடன் எழுந்து வீட்டிற்கு உள்ளே வந்தாள்... அவள் வருவதை சமையல் அறையில்
இருந்த மரகதம் காணவும்
“பவித்ரா... “
என்று சத்தமாக அழைத்தார்...
பவித்ராவும்
அவரின் குரலை கேட்டு சமையல் அறைக்குள் சென்றவள்
“சொல்லுங்க
அத்தை... எதும் ஹெல்ப் வேணுமா?? “ என்றாள் சிரித்த முகமாக..
“ஹ்ம்ம்ம்
நிஷாந்த் தோட்டத்தில இருக்கான் பவி மா.. இந்த காபிய கொண்டு போய் கொடுத்திடறியா?? அப்படியே இந்த கப் ஐ அந்த நந்தினி பொண்ணு கிட்டயும் கொடுத்திடு..
அவளும் அங்க தான் இருக்கா போல இருக்கு.. “ என்று ஒரு ட்ரேயில் இரண்டு கப் காபியை
வைத்து பவித்ராவின் கையில் கொடுத்தார்...
பவித்ராவும்
மறுத்து சொல்ல முடியாததால் அதை வாங்கிகொண்டு அந்த தோட்டத்தை நோக்கி நடந்தாள்..
தோட்டத்திற்குள் நுழையும் பொழுதே அவள் கணவனும்
நந்தினியும் கொஞ்ச தொலைவில் இருந்த பென்ச் ல்
நெருக்கமாக அமர்ந்திருப்பதை கண்டு கொண்டாள்.. முகத்தில் எந்த
உணர்ச்சியையும் காட்டாமல் தைர்யமாக தன் அடியை எடுத்து வைத்தாள் அவர்களை நோக்கி..
அவர்கள் அருகில்
நெருங்க நெருங்க அவர்கள் பேசுவது.. இல்லை அந்த நந்தினி குழைவது அவள்
காதில் விழுந்தது.
“மாமா... எப்படி
இருந்தது நான் தந்தது ?? “ என்றாள் கொஞ்சலுடன...
“வாவ்..
அமேசிங்... சூப்பர்... இந்த மாதிரி நான் என் லைப்ல அனுபவிச்சதில்ல.. மைன்ட்
ப்ளோயிங்க்.. அப்படியே சொர்க்கத்துக்கு போன மாதிரி இருந்தது... எல்லாம் உன்னால
தான்... தாங்க்ஸ் பார் தட் நன்ஸ் டார்லிங்... “ என்று அவள் கன்னத்தை தட்டினான்...
“Its my pleasure மாமா...உங்களுக்காக தான் நான் இருக்கேன் “ என்று பவித்ராவை ஓரக் கண்ணால்
பார்த்து கொண்டே நந்தினி மேலும் குழைந்தாள்..
அதற்குள்
பவித்ரா அவர்கள் அருகில் வந்து விடவும் தன் தொண்டையை செறுமி அவர்கள் முன்னால்
ட்ரேயை நீட்டினாள்…
ஆதியும்
நிமிர்ந்து பவித்ராவை அப்பொழுது தான் பார்ப்பவனாக இலேசாக புன்னகைத்து அவள் நீட்டிய
ட்ரேயில் இருந்து ஒரு கப் ஐ எடுத்து கொண்டான்... பவித்ராவும் குனிந்து அவன் கண்ணை
நேருக்கு நேராக உற்று பார்க்க,
அவனும் அவள் பார்வையை எதிர் கொண்டு பின் கண் சிமிட்டி புன்னகைத்தான் குறும்பாக....
அவள் பார்வையை
நேருக்கு நேர் எதிர்கொண்டதோடு அவன் கண்ணில் எந்த குற்ற உணர்வும் இல்லாததை கண்டு
தான் போட்ட கணக்கு 50% விடை சரியாக இருக்க மனதுக்குள் குதித்து கொண்டாள்...
அதற்குள்
ஆதிக்கு மொபைலில் அழைப்பு வர,
தன் காபி கப்பை எடுத்து கொண்டு மறுபக்கம் சென்றான்...
இப்பொழுது
நந்தினியின் முன்னே ட்ரேயை நீட்டிய பவித்ரா நந்தினியின் கண்களை நேருக்கு நேராக
பார்த்தாள்.. அவள் கண்ணிலும் எந்த ஒரு தவறு செய்தத்திற்கான பயமோ குற்றமோ இல்லை...
அதை கண்டதும்
அவள் விடை 100% சரிதான் என்று மனதுக்குள் புன்னகைத்தாள்...
நந்தினியும் தன்
கப்பை எடுத்து கொள்ள,
பவித்ரா திரும்பி நடந்தாள்..
“ஒரு நிமிடம்..
“ என்ற நந்தினியின் குரலை கேட்டு திகைத்து நின்றாள் பவித்ரா...
பவித்ரா இங்கு
வந்ததில் இருந்து அனைவரும் அவளுடன்
பேசியிருந்தார்கள்... ஏன் சரோஜா கூட அவளுடன் நன்றாகத்தான் பழகினாள்..
ஏனோ இந்த
நந்தினி மட்டும் அவளிடம் முறைத்து கொண்டே எட்டி நின்றாள்... அப்படிபட்டவள் தானே
தன்னிடம் பேச வரவும் திகைப்புடனும் ஒரு வித ஆர்வத்துடனும் நின்றவள் திரும்பி
நந்தினியை பார்த்தாள்..
அந்த நந்தினியோ
பவித்ராவை மேலும் கீழும் பார்த்து
“உன்னை
பார்த்தால் எனக்கு பாவமாக இருக்கு.. “ என்றாள் நக்கலாக
பவித்ராவும்
எதுக்கு பாவம் என்று புரியாமல் நந்தினியை
பார்க்க அவளே தொடர்ந்தாள்...
“லுக் பவித்ரா...
உன் கிட்ட நேரடியாகவே சொல்றேன்..
நிஷாந்த் மாமாவுக்கு என்னை ரொம்ப பிடிச்சிருச்சு... எனக்கும் அவரை ரொம்ப
பிடிச்சிருக்கு....அதோட அவரோட உயரத்துக்கும் பெர்ஷனாலிட்டிக்கும் அவர் இடுப்புக்கு
கூட இல்லாத நீ பொருத்தமே இல்ல...
அவர் தோளுக்கு
இருக்கிற நான்தான் பொருத்தமா இருப்பேன்... ஏதோ ஒரு வேகத்துல மாமா உன் கழுத்துல
தாலி கட்டிட்டார்... ஆனால் அவருக்கு உன் கிட்ட எந்த இன்ட்ரெஸ்ட் ம் இல்ல...
இல்லைனா இப்படி
கல்யாணம் ஆகியும் இன்னும் உங்களுக்குள்ள ஒன்னும் நடக்காம இருந்திருக்குமா?? என்னதான் நீ தடா போட்டிருந்தாலும் உன் மேல ஆசை
இருந்தால் அதை எல்லாம் எப்பயே உடச்சிருப்பார்...
ஆனால்
உள்ளுக்குள்ள உன் மேல இன்ட்ரெஸ்ட் இல்லை..
அதனால தான் நீங்க ரெண்டு பேரும் தள்ளியே இருக்கீங்க... “ என்று நிறுத்தியவள் பவித்ராவின் முகத்தை
கூர்ந்து ஆராய்ந்தாள்....
பவித்ராவிற்கும்
திக் என்றது..
“தங்களுக்குள்
இருக்கும் ரகசியம் இவளுக்கு எப்படி தெரிந்தது?? .. “என்று குழம்பினாள்..
அவள் முகத்தில்
வந்து போன குழப்பத்தை கண்ட நந்தினிக்கு இன்னும் வசதியாக போனது.. இதத்தான் அவள்
எதிர்பார்த்தாள்... அதே குசியில் மேலும்
தொடர்ந்தாள்...
“உங்க ரகசியம்
எனக்கு எப்படி தெரிந்தது என்று குழப்பமா இருக்கா...?? இதெல்லாம் அவர்தான் என்கிட்ட சொன்னார்...
அதுவும் எப்ப
தெரியுமா?? நாங்க இரண்டு பேரும் நெருக்கமா இருந்தப்போ... “
என்றாள் வெக்கத்துடன்.. பின் அவளே பதறி
“ஐயோ.. சாரி
பவித்ரா... நான் பாட்டுக்கு உளறிட்டேனே... சரி முழுசாவே சொல்லிடறேன்...
மதியம் நாங்க
அந்த தொட்டியில் ஒன்னா நீந்திகிட்டிருந்த மா.. திடீர் னு என்னை கட்டி பிடிச்சுகிட்டார்...
“நன்ஸ்
டார்லிங்.. உன்னை பார்த்தவுடன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு....நாம இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமானு
கேட்டார்... எனக்கு அதிர்ச்சியில் என்ன சொல்றதுனு தெர்யல...
எனக்கும் அவரை
பார்த்த உடனே பிடிச்சிருந்தது தான்... ஆனால் அவர் உன்னை கல்யாணம்
பண்ணியிருக்காரேனு சொன்னேன்.. அப்பதான் எல்லாம் சொன்னார்...
இன்னும்
உங்களுக்குள் ஒன்னும் நடக்கலை.. நீ அவரை தள்ளி வச்சிருக்கிறதும் வருத்ததுடன்
சொன்னார்.. எனக்கும் அவர் கதையை கேட்டு உடனே மனசு இளகிடுச்சு... அதனால அவர் என்னை முத்தமிட்டப்போ என்னால தடுக்க முடியல...
அதே வேகத்துல
என்னை அவரோட பெட் ரூமுக்கு கூட்டிகிட்டு வந்திட்டார்...
அப்புறம்.....
நான் எவ்வளவு துரம் வேண்டாம்னு தான் சொன்னேன்... ஆனா அவர் கேட்கிற நிலையில இல்லை... அப்பா அப்படி ஒருவேகம்.. என்னாலயும் தடுக்க முடியல..
கிட்ட தட்ட எங்களுக்குள்ள எல்லாம் நடந்திருச்சு.. ஆனால் கடைசி மட்டும் என்
கழுத்துல தாலி கட்டினா மட்டும்தான் னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டேன்...
அவரும்
சீக்கிரம் உன்னை டைவர்ஸ் பண்ணிட்டு என்னை கல்யாணம் பண்ணிக்கிறதா ப்ராமிஸ் பண்ணி
இருக்கார்...
எப்படியும் அவர்
வாயாலயே உன்னை வேண்டாம்னு சொல்ல போறார்... அப்ப உனக்கு சாக் ஆ இருக்க கூடாது
இல்லையா.. அதான் முன்னாடியே எங்களுக்குள்ள நடந்ததை எல்லாம் உன்கிட்ட
சொல்லிட்டேன்...
நீயும் அவர்
கேட்கறப்போ டைவர்ஸ் பேப்பர்ல கையெழுத்து போட்டுடு... உனக்கு தான் அவரை பிடிக்கலை
இல்ல.. அவராவது அவருக்கு பிடிச்ச மாதிரி வாழ்ந்துட்டு போகட்டும்...
ஆனால் உன்னை
நினைச்சா தான் பாவமா இருக்கு... நல்ல வசதியானவனை வளச்சு போட்டிட்டனு நிம்மதியா
இருந்திருப்ப.. இப்ப அதெல்லாம பாதியில் போக போகுதே... அதுக்கெல்லாம் நான்தான்
சொந்தக்காரி ஆகப்போறேன்.. “என்று நக்கலுடன் சிரித்தாள் நந்தினி...
“ஹ்ம்ம்ம்
இதுக்குத்தான் கல்யாணம் ஆன உடனே புருசனை
கைக்குள்ள போட்டுகணும்ங்க்றது.. வரட்டு கவுரம் பார்த்துகிட்டு தள்ளி வச்சா ஆம்பளைங்க இப்படிதான் அடுத்த
இடத்தை தேடி போய்டுவாங்க... நானெல்லாம் அப்படி இருக்க மாட்டேன் பா... “ என்று அவள் இன்னும் வெக்கபட்டு சிரித்தாள்..
பவித்ராவோ அவள்
சொன்ன கன்றாவதி கதை எல்லாம் கேட்டு பல்லை கடித்தாள்... ஆனாலும் அவள் கஷ்டபட்டு
தன் முகத்தில் எதையும் காட்டி
கொள்ளவில்லை...
எதிரியிடம் நம்
பலவீனத்தை முகத்தில் காட்டினால் அதுவே அவங்களுக்கு வெற்றி பெற்றதாக இருக்கும்...
என்று எண்ணி அவள் தன் உணர்ச்சிகளை முகத்தில் காட்டாமல் கட்டுபடுத்திக்
கொண்டிருந்தாள்...
அதோடு நந்தினியை
ஒரு ஆழ்ந்த பார்வை மட்டும் ஒன்றை செலுத்தி திரும்பி நடந்தாள்....
பவித்ராவின் நடவடிக்கையை
கண்டு நந்தினிக்கு அதிர்ச்சியாக இருந்தது...
“நான் சொன்னதை
எல்லாம் வைத்து பவித்ரா கோபமாவாள்... கத்துவாள்.. ஏதாவது உளறுவாள்.. அதை வச்சு
அவளுடைய அடுத்த மூவ் ஐ திட்டமிட்டிருந்தாள் நாந்தினி... ஆனால் இந்த குட்டச்சி
எதுவும் பேசாமல் போறாளே..அதுவும் பெட்ரூமில் நெருக்கமாக தங்களை பார்த்தும் எதுவும்
கண்டுக்காமல் போறாளே.. எப்படி???
ஒருவேளை இந்த
மாதிரி இவ பார்த்து பழகி போச்சோ.. இந்த நிஷாந்த் ஓ ஆதியோ இவனுக்கு இதெல்லாம்
பழக்கமோ?? இப்பதான் பட்டணத்துல அதுவும்
பெரிய தொழில் அதிபர்கள் பொண்ணுங்க கூடஅப்படி இப்படி இருப்பது சாதராணமானது என எத்தனை படத்துல பார்த்திருக்கா.. அப்ப இவனும்
அந்த மாதிரி கேசா...
சே.. இது
தெரியாம நான் பாட்டுக்கு இவன மடக்கிரதுக்கு பெரிய பெரிய ப்ளான் எல்லாம் போட்டு
வச்சேன்... கண் அசைச்சால் போதும் வந்திடுவான் போல...
இந்த
குட்டச்சியும் அவன் வசதிக்கு ஆசைபட்டு இதை எல்லாம் கண்டும் காணாமல் இருப்பா போல
இருக்கு....
எது எப்படியோ... சீக்கிரம் என் திட்டத்தை நிறை
வேற்றி அந்த பவித்ரா இடத்தை நான் பிடிக்கணும்.. அப்பதான் இத்தனை சொத்துக்கும் நான்
சொந்தக்காரியா ஆக முடியும்.. அதுவும் இந்த பண்ணை ஒன்னே எத்தன கோடி போகும்....
ஹ்ம்ம்ம்ம்ம்
சீக்கிரம் இந்த பவித்ராவுக்கு ஒரு முடிவு கட்டறேன்.. “என்று மனதுக்குள்
சூளுரைத்தாள் நந்தினி….
Pavi super da
ReplyDeleteThanks pa!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSuper epi but 43 ku aprm episodes kanom
ReplyDeleteThanks pa. other epis updated in home page. yet to update in story page.check the home page: https://padminiselvaraj.blogspot.com/2021/03/home.html
Delete