காந்தமடி நான் உனக்கு!!-38
அத்தியாயம்-38
ஆரவ் வெட்ஸ் மேக்னா என்ற பெரிய எழுத்துக்களில் ஜொலித்த அந்தத் திருமண அழைப்பிதழை
வேதனையோடு வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் சத்யா.
அந்த திருமண அழைப்பிதழ் மட்டுமே ஒவ்வொன்றும்
லட்ச ரூபாய் மதிப்பு மிக்கது. அந்தளவுக்கு
தங்களுடைய செல்வ வளத்தை அந்த அழைப்பிதழில் காட்டியிருந்தார் ரூபாவதி.
அழைப்பிதழ் மட்டுமா? தன் ஒரே மகனின் திருமணத்தையும் பிரம்மாண்டமாக இங்கே
பெங்களூரிலேயே நடத்திக் கொண்டிருக்கிறார்.
அது ஏனோ அந்த மேக்னாவின் பக்கமும்
பூர்வீகம் சவுத் இந்தியா என்பதாலும் திருமணத்தை தமிழ்நாடு முறைப்படி நடத்திய பிறகு
மும்பையில் வரவேற்பு பிரம்மாண்டாக வைத்துக் கொள்வதாக ஏற்பாடு செய்திருந்தனர்
அந்த திருமண அழைப்பிதழைத் தான்
வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் சத்யா.
அப்பொழுது அவளின் அறைக்கதவை தட்டி
விட்டு உள்ளே வந்தனர் அவளின் இரு சகோதரிகள்.
வித்யா அன்றுதான் முதன்முறையாக புடவை
கட்டியிருந்தாள். அதுவும்
விலைமதிப்புமிக்க டிசைனர் புடவை. அமுதன் தான் இல்லை இல்லை ஆரவ் தான் வாங்கிக்
கொடுத்திருந்தான்.
அதே போல இளையவள் நித்யாவிற்கு அழகான
வேலைப்பாடு மிக்க காக்ராவை வாங்கி கொடுத்திருக்க,
அவளும் ஆசை ஆசையாக அதை அணிந்து கொண்டு தன் அக்கா முன்னே நின்றிருந்தாள்...
இருவருமே புது ஆடையிலும், ஸ்பெஷல் அலங்காரத்திலும் தேவதைகளாக ஜொலித்தனர்...
அவர்களைப் பார்த்த சத்யாவிற்கு ஒரு
நொடி ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. தன் தங்கைகள் இவ்வளவு வளர்ந்து
விட்டார்களா என்று ஆச்சர்யமாக இருந்தது.
அதுவும் வித்யா புடவையில் அம்மன்
சிலையாட்டம் மின்ன, சத்யாவுக்கே பொறாமையாக இருந்தது தன்
தங்கையை பார்த்து...இருவரின் தோற்றத்தை கண்டு பூரித்தவன் இதழ் திறந்து அழகாய்
புன்னகைத்தாள்...
ஆனால் அடுத்த நொடி ஏதோ நினைவு வர, அவளின் முகம் அனிச்சமலராய் வாடி விட்டது...
அவர்கள் செல்வது அந்த அமுதனின் திருமணத்திற்கு..!
அதை நினைக்கும்பொழுதுதான் அவள் மனம் எல்லாம் கசந்து வழிந்தது....
“அக்கா...! இந்த ட்ரெஸ்ஸில் நாங்க
எப்படி இருக்கோம்? “ என்று இருவரும் தங்களை ஒரு சுற்று சுற்றி காண்பிக்க, சத்யாவுக்கோ மனதில் வேதனை அப்பியது.
ஆனாலும் தன் தங்கைகளை வருத்தப்பட வைக்க
விரும்பாமல்
“சூப்பரா இருக்கு செல்லம்ஸ்...என்
தங்கச்சிங்க எது போட்டாலும் அழகுதான்...நீங்க போட்டா தான் இந்த டிரெஸ்க்கே ஒரு
அழகு வந்து சேரும்....” என்று தன் வேதனையை மறைத்துக் கொண்டு புன்முறுவலித்தாள்
சத்யா...
தன் அக்காவின் வேதனையை அறியாத அந்த இரு
பெண்களும், ஓரக் கண்ணால் ஜாடை செய்து நீ சொல்லு...நீ சொல்லு...என்று
பேசிக் கொண்டவர்கள், பின் ஒரு முடிவாக இருவருமே மெதுவாக
“அக்கா...ப்ளீஸ் நீயும் வாயேன்...உனக்கும்
தானே மாமா அழகான புடவை வாங்கி கொடுத்திருக்கிறார். அதைக் கட்டிக்கிட்டா நீயும்
தேவதை மாதிரி தான் இருப்ப.
நாம மூணு பேருமே கல்யாணத்துக்கு
போயிட்டு வரலாம். அம்மா கூட சூப்பரா ரெடி ஆயிட்டாங்க...” என்று சொல்லிக் கொண்டிருக்கும்
போதே தன் புடவை முந்தானையை சரி செய்தபடி உள்ளே வந்தார் வளர்மதி
அவர் முகத்திலோ,
மகிழ்ச்சியும் இன்றி, கவலையுமின்றி அமைதியாய் இருந்தது.
அவருக்கும் அமுதனை ரொம்ப பிடிக்கும்
என்பதால் அமுதனுக்கு திருமணம் என்று மகிழ்ச்சியாக இருந்தாலும் மற்றொரு பக்கம் இந்த
முட்டாள் பெண் தனக்கு அமைய வேண்டிய நல்ல வாழ்க்கையை கெடுத்துக் கொண்டாள் என்று
வேதனையாகவும் இருந்தது
ஆனாலும் அந்த நல்ல நேரத்தில், நல்ல நாளில் வேதனைப்
பட்டுக் கொண்டிருக்க விருப்பப்படாமல், நடக்கிறது நடக்கட்டும் என்று அந்த ஆண்டவன் மீது
பொறுப்பை தூக்கி வைத்தவர், பின் சத்யாவின் பக்கமாய் பார்த்து
“சத்யா...நீயும் வாயேன் டி...அமுதன்
அவ்வளவு தூரம் உன்னையும் வரச் சொல்லி தானே அழைத்து விட்டுப் போனான். நல்ல பையன்.... நமக்குத்தான் அவனை மாப்பிள்ளையாக்கிக்க
கொடுத்து வைக்கவில்லை.
அட்லிஸ்ட் அவன் திருமண வாழ்க்கை நன்றாக
அமைய வேண்டும் என்று ஒரு வாய் வாழ்த்தி விட்டு வரலாம்...வாயேன்...” என்று அழைக்க, சத்யாவிற்கு உள்ளுக்குள் பொங்கி வந்தது அழுகை
“அது எப்படி என் அமுதனை, நான் இன்னொருத்தி கழுத்தில் தாலி கட்டுவதை பார்க்கமுடியும்...இல்லை...
எனக்கு அந்த அளவுக்கு தைரியம் இல்லை...நான்தான் அவனை என் வாழ்க்கையில் இருந்து
அடித்து துரத்தி விட்டேன்.. இனி அவன் எங்கிருந்தாலும் சந்தோசமா இருக்கட்டும்…”
என்று தனக்குள்ளே மருகிக் கொண்டவன், வரவழைத்த புன்னகையுடன்
“இல்லம்மா... நீங்க போயிட்டு வாங்க...எனக்கு
தலை வலிக்குது. நான்தான் உங்களுக்கு கேப் புக்
பண்ணி கொடுத்து இருக்கேனே. அதுல போயிட்டு வாங்க..” என்று மறுத்தாள்
“அக்கா...அது எவ்வளவு பெரிய ஹோட்டல்
தெரியுமா. தாஜ் ஹோட்டல் பெங்களூரிலேயே நம்பர் ஒன். சாதாரணமா நாம வெளியில நின்னு
தான் பார்க்க முடியும்.
ஆனால் அவ்ளோ பெரிய ஹோட்டல்ல அமுதன்
மாமா மேரேஜ்...! நினைச்சாலே எக்ஸைட் ஆ இருக்கு. நீ மட்டும் மாமா வை கட்டிக்க ஓகே சொல்லியிருந்தால்
இந்நேரம் நாங்கள் இருவரும் அதே ஹோட்டல் ல, கல்யாண ரிசப்ஷன் ல நின்னுட்டு, பெரிய பெரிய வி.ஐ.பிக்களை எல்லாம் வரவேற்று கொண்டிருப்போம்
நல்ல சான்சை மிஸ் பண்ணிட்ட. மும்பையில்
இருந்து நிறைய ஆக்டர், ஆக்ட்ரஸ் கூட இங்கே திருமணத்திற்கு வராங்களாம்.
மீடியால எல்லாம் இந்த திருமணத்தை பற்றித் தான் பரபரப்பா சொல்லிக்கிட்டு இருக்காங்க.
ராணி மாதிரி, பிரின்சஸ் மாதிரி உன்னை மேக்கப் பண்ணி இருப்பாங்க...
எல்லாத்தையும் தூக்கிபோட்டு உடச்சிட்டியே.. பேசாம அந்த சான்ஸ் ஐ எனக்காவது
கொடுத்திருக்கலாம்.
நானும் வெட்கத்தை விட்டு மாமா கிட்ட
என்னைய கல்யாணம் பண்ணிக்கோங்க னு கேட்டுட்டேன். அவர்தான் என் தலையில் ஓங்கி கொட்டி, நீ சின்ன பிள்ளை...ஒழுங்கா
உன் கேரியரை பாரு.. என்று மறுத்துட்டார்.
இல்லைன்னா அட்லீஸ்ட் நானாவது அந்த
வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு இருப்பேன்...” என்று தன் ஆதங்கத்தை எல்லாம் கொட்டித் தீர்த்தாள்
திவ்யா
இதைக் கேட்ட சத்யாவுக்கு இன்னுமாய் மனதை
பிசைந்தது. அவள் தங்கை வர்ணித்த ஆடம்பரமான
ஹோட்டலையோ இல்லை அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரம்மாண்டமான திருமணத்தின் நாயகியாக தனக்கு கிடைத்த வாய்ப்பை தவற விட்டதை
பற்றியும் அவள் பெரிதாக கண்டு கொள்ள வில்லை
ஆனால் அமுதன்? அவனை அல்லவா இழக்க வேண்டும். இந்த திருமணம்
நடந்து விட்டால், அவன் வேறு ஒருத்திக்கு சொந்தமாகி விடுவான்.
அப்புறம் அவனை நான் ஏறெடுத்தும் பார்க்க முடியாது.
அவனை கட்டிக்க முடியாது...அவன் குண்டு கன்னத்தில்
முத்தமிட முடியாது... காந்தமடா நீ எனக்கு என்று மையலுடன் கவிதை சொல்ல முடியாது...
மொத்தமாக என்னை விட்டு போய் விடுவான் என் அமுதன் என்றுதான் அவள் மனம் அரற்றிக் கொண்டிருந்தது.
அவள் முகத்தில் வந்த சிறு வேதனையையும், யோசனையையும் கண்டதும், இளையவர்களுக்கு கொஞ்சம்
நம்பிக்கை வந்தது.
“இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போயிடலக்கா...
நீ ஒரே ஒரு வார்த்தை சரின்னு சொல்லு. இந்தக் கல்யாணத்தை நிறுத்தி விடுவார் அமுதன்
மாமா... அடுத்த முகூர்த்தத்திலேயே உனக்கும் அவருக்கும் கல்யாணம் அதே ஹோட்டலில்
நடக்கும்
ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் கொஞ்சம் கன்ஸிடர்
பண்ணி, ஒரே
ஒரு வார்த்தை ஓகே சொல்லிடு...” என்று
கெஞ்சினாள் நித்யா
திவ்யாவும் அதை ஆமோதித்து தன் அக்காவை
வற்புறுத்த, உடனே சத்யா தன்னை மறைத்துக்கொண்டு தன்
தங்கைகளை பார்த்து முறைத்தவள்
“என்னங்கடி...நீங்க எல்லாம் எனக்கு
அட்வைஸ் பண்ற அளவுக்கு வளர்ந்துட்டீங்களா? ஹ்ம்ம்ம் உங்களுக்கு
புடிச்சா அங்க போய் பல்ல இளிச்சு கல்யாணத்த
பார்த்திட்டு, பைவ் ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு நல்ல ஒரு கட்டு கட்டிட்டு
வாங்க...
என்னை தொந்தரவு பண்ணாதீங்க... நான் ஒரு
தரம் முடிவு எடுத்தால் எடுத்தது தான்...” என்று வரவழைத்த கோபத்துடன் முகத்தை வேறு பக்கம்
திருப்பிக் கொண்டாள்.
அதுவரை தன் மகள்களின் உரையாடலை
கேட்டுக் கொண்டிருந்த வளர்மதிக்கும் வேதனையாக இருந்தது. சத்யா பிடித்தால்
பிடிவாதமாக நின்று விடுவாள் என்று புரிந்திருந்தார்.
“சரி நித்யா... வித்யா... வாங்க நாம போகலாம்.
அட்லீஸ்ட் அமுதனுக்காக நாம கல்யாணத்துக்கு போயிட்டு வரணும். சத்யா... நீ கதவை
உள்பக்கம் தாள் போட்டுக் கொள்...” என்று
சொல்லி விட்டு தன் மகள்களை அழைத்துக் கொண்டு சென்றார் வளர்மதி
அவர்கள் சென்ற சிறிது நேரத்தில்
மீண்டும் ஒருமுறை அழுது தீர்த்தாள் சத்யா.
எவ்வளவுதான் அழுது முடித்தாலும் மீண்டும் மீண்டும் சுரக்கும்
அமுதசுரபியாக அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.
“எப்படி அவனால் என்னை மறந்து வேற
ஒருத்தியின் கழுத்தில் தாலி கட்ட முடிகிறது?” என்று தனக்குள்ளே கேட்டுக் கொள்ள
“அடியே முட்டாள்...அவன் எங்க
சிரிச்சிக்கிட்டே தாலிகட்ட உன்னிடம் அவ்வளவு தூரம் போராடினான். அவன் பெற்றோர்களின் சம்மதம் இல்லாமல் திருமணம்
செய்துகொள்ளலாம் என்று எவ்வளவு கெஞ்சினான்.
நீதானே அதெல்லாம் முடியவே முடியாது
என்று அவனை திருப்பி அனுப்பி விட்டாய் “ என்று அவள் மனசாட்சி அவளுக்கு இடித்துரைக்க, அப்பொழுதுதான் மீண்டும்
அன்றைய நாள் நினைவு வந்தது...
Ennachu mam.. Aarav weds magna marriage.. Epdi aarav accept pannalam.. Too bad
ReplyDeletethanks pa. keep watching what is going to happen
ReplyDelete