காந்தமடி நான் உனக்கு!!-39
அத்தியாயம்-39
அமுதனுடைய மென்பொருள் நிறுவனத்தின் துவக்க விழா முடிந்ததும், ரூபாவதி மேக்னாவை
கைகாட்டி அவனுக்கும் அவளுக்கும் மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிவிட்டது என்று சொல்ல, உடனே அதிர்ந்து போனவள்
தன்னை பட்டுபடுத்திக் கொண்டு விடுவிடுவென்று வீட்டிற்கு வந்து விட்டாள் சத்யா.
அதன் பிறகு அன்று இரவு... மற்றும் அதற்கு
தொடர்ந்து வந்த நாட்களில் அமுதன் எவ்வளவோ அவளை சமாதானம் செய்ய முற்பட்டான். அவள் தான்
ஒத்துக் கொள்ளவே இல்லை.
அதே நேரம் அமுதனுக்கு தன் அன்னையின் வழியாகவும்
நெருக்கடி ஆரம்பித்தது. மேக்னாவை திருமணம் செய்து கொள்ள சொல்லி அவனை கட்டாயப்படுத்தினார்
மேக்னா வை திருமணம் செய்யாவிட்டால்
அவருடைய சொத்தில் அவனுக்கு எந்த உரிமையும் இல்லை. அவன் இப்பொழுது நிர்வகிக்கும்
பதவியும் கிடையாது... என்று அவனை பிளாக்மெயில் பண்ண, அடுத்த நிமிடமே அனைத்தையும் தூக்கி எறிந்து
விட்டு, பெங்களூருக்கு பறந்து வந்துவிட்டான். அமுதன்
வந்தவன் நேராக சத்யாவிடம் வந்து நின்றான்.
“சது...ஆரம்பத்திலிருந்தே உனக்கு
பிரச்சனையாக இருப்பது என்னுடைய பின்புலம் தானே. என்னுடைய பணவளமும் ஸ்டேட்டஸ் ம்
தானே. இன்று உனக்காக அதெல்லாம் உதறி விட்டு வந்து விட்டேன்.
நான் இப்பொழுது உன்னுடைய அமுதன் ஆக வந்திருக்கிறேன்.
என்னுடைய பேங்க் பேலன்ஸ் ஜீரோ. என்கிட்ட சொகுசான ஆடி கார் இல்லை. விதவிதமான ஆடைகள்
இல்லை
நான் முன்பு இருந்த அதே சிச்சுவேஷன்
இப்பொழுது இருக்கிறேன். உனக்கு இந்த
டெலிவரி பாய் ஐ கல்யாணம் பண்ணிக்க சம்மதமா? “ என்று அவன் முன்னே மண்டியிட்டு அவள் சம்மதத்தை
யாசித்தான் அமுதன்.
அதைக்கண்டதும் இன்ப அதிர்ச்சியில்
அதிர்ந்து போனாள் சத்யா.
“அவ்வளவுதான்...வந்துவிட்டான்...என்
அமுதன் என்னவனாகவே வந்து விட்டான். என்னைத் தேடி வந்துவிட்டான்... இந்த சாதுவை
தேடி வந்துவிட்டான்...”
என்று பூரித்தவள், அடுத்த நொடி பாய்ந்து சென்று அவனை இறுக்க கட்டிக்கொண்டு, அவனின் கழுத்தை வளைத்து அவன்
முகமெங்கும் முத்த மழை பொழிந்தாள்.
ஒரு நொடி திகைத்துப் போனான் அமுதன்.
இத்தனை நாட்களாய் தன்னவனை பிரிந்து
இருந்த ஏக்கம் எல்லாம் முன்டி அடித்துக்கொண்டு வந்து இருக்க,
அதை எல்லாம் அவளின் இறுகிய அணைப்பிலும், முத்த
மழையிலுமாய் கொட்டிக் கொண்டிருந்தாள்.
காட்டாற்று வெள்ளம் போல அவளின் காதல்
பெருக்கெடுத்து இருக்க, அதை எல்லாம் மொத்தமாக தன்னவன் மீது பொழிந்தாள் சத்யா.
அவளின் அந்த அதிரடியான வேகத்தில் ரொம்பவுமே
ஆடித்தான் போனான் அமுதன்.
“இந்த அளவுக்கு இந்த பெண் என்னை
காதலிக்கிறாளா? “ என்று ஆச்சர்யம் கூடவே ஒரு கர்வமும் பொங்கி
பெருக, அடுத்த நொடி அவளை இடையோடு பற்றி அணைத்து, அவள்
கொடுத்ததை எல்லாம் திருப்பி அவளுக்கு பரிசளித்தான்.
இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி இத்தனை
நாட்களாய் பிரிந்து இருந்த ஏக்கத்தை, தங்களின் காதலை
இருவரும் சளைக்காமல் பரிமாறிக் கொண்டனர்.
சில நிமிடங்கள் ஆனது இருவருமே
தன்நிலைக்கு வர.
அப்பவும் தன்னவளை விலக்க மனம் இல்லாமல், அவளை இன்னுமாய் இறுக்கி அணைத்துக் கொண்டவன், அவளின் கழுத்து வளைவில் அழுத்தமாய் முத்தம்
பதித்து,
“எப்ப வச்சுக்கலாம் நம் கல்யாணத்தை ஹனி?” என்றான் ஹஸ்கி குரலில், இன்னுமே அவனுள் பரவிய ஏகாந்தம் கொஞ்சமும் குறையாமல் ஒரு வித
போதையில் ஆட்கொண்டவனாய்.
அதைக் கேட்ட சத்யா திடுக்கிட்டு
போனாள். அப்பொழுதுதான் அவளுக்கு நிதர்சனம் உரைத்தது.
அமுதன் அனைத்தையும் விட்டுவிட்டு
வந்துவிட்டான் என்றதும் குதூகலித்த அவள் மனம், அடுத்த நொடி அவனின் எதிர்கால நிலையை பற்றி எண்ணி
பார்த்தது.
தினமும் பகட்டான ஆடை அணிந்து, குளு குளு ஏசி அறையில்
சொகுசு காரில், ஸ்டைலாக வலம் வருபவன்... தன் நுனி நாக்கு
ஆங்கிலத்தில் அனைவரையும் கட்டிப் போட்டு, தொழில் சாம்ராஜ்ஜியத்தில் வளர்ந்து வரும் இளம்
தொழிலதிபன் என்று தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருப்பவன்.
அந்த நிலை மாறி, நாளையிலிருந்து
சாதாரண டெலிவரி பாயாக இருக்கப் போகிறான் என்று அறிவு பூர்வமாக யோசித்தவளுக்கு
அடுத்த நொடி திக்கென்றது.
“எல்லாம் என்னால் தானே...இந்த காதலால்
தானே.. காதல் என்பது குப்பை மேட்டில் இருக்கும் ஒருவனையும் கோபுரத்தில் ஏற்றி
வைப்பதாக இருக்கணுமே தவிர, கோபுரத்தில் இருப்பவனை குப்பை மேட்டுக்கு
கொண்டு வருவதா காதல்?
அப்படிக் கொண்டு வருபவளா அவனுக்கு
சரியான துணைவி? இல்லை...இது சுயநலமில்லையா? என்னுடைய சுயநலத்துக்காக
அத்தனை வளங்களையும், அவனுடைய எதிர்காலத்தையுமே, அவன் இழந்து விட்டு விடுகிறேன் என்கிறான்
அவன் சுயநலமில்லாதவன். என் அன்பை மட்டுமே
யாசித்து நிற்பவன். ஆனால் அவனை அப்படி செய்ய வைத்தால்,
அது எனக்கான சுயநலம் ஆகிவிடும்.
இல்லை...என் அமுதன் எப்பவும் சாதிக்க
பிறந்தவன். அவன் இந்த இன்டஸ்ட்ரியில் இன்னும் மேலும் மேலும் சாதிக்க வேண்டும்.
ரத்தன் டாட்டா பை போல, அம்பானியைப்போல என் அமுதனும் பெரிய ஆளாக வரவேண்டும். அதற்கு நான்
தடையாக இருக்கக் கூடாது. கண்டிப்பாக நான் இவனை ஏற்றுக்கொண்டால் அடுத்த நொடி என்
அமுதன் அத்தனையும் இழக்க வேண்டியிருக்கும்.
அப்படிப்பட்ட ஒரு நிலை என் அமுதனுக்கு
வரக்கூடாது. வரவும் விடமாட்டாள் இந்த சது...” என்று தன் மனதுக்குள் உறுதி செய்து கொண்ட பின்
மெதுவாய் அவன் அணைப்பிலிருந்து விலகினாள் சத்யா.
அமுதனோ அவள் விலகிய அந்த நொடி கூட, அவள் பிரிவை தாங்க முடியாதவனாய், மீண்டும்
அவளை இழுத்து தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டவன்,
“நீ எப்பவும் இங்கே தான் இருக்கணும் சது.
உன்னை விட்டு என்னால் ஒரு நொடி கூட பிரிந்திருக்க முடியாது. அதனால் தான் நான் அன்றைக்கே, ஒரு வருடத்திற்கு முன்பே சொன்னேன்...
நான் அன்றைக்கு சொன்ன படி நாம் ரிஜிஸ்டர்
மேரேஜ் பண்ணி இருந்தால், இப்பொழுது எந்த பிரச்சனையும் இல்லை
யாரும் என்னை கட்டாயப்படுத்தி வேற
ஒருத்திக்கு கணவனாக்க முடியாது. அதற்காகத்தான் அன்று அவ்வளவு மன்றாடி, கெஞ்சி கேட்டேன். ஆனால் நீ
தான் பிடிவாதமாய் முடியாது என்று மறுத்து விட்டாய்...
இப்பவும் ஒன்றும் நட்டம் இல்லை.
நாளைக்கு நாம் இருவரும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்...” என்று அவன் பட்டியலிட்டு செல்ல, உடனே இல்லை..நோ... என்றாள்
கொஞ்சம் சத்தமாக.
அதைக்கேட்டு திடுக்கிட்டவன், அதிர்ந்து
“என்னாச்சு டா? “ என்று யோசனையுடன் தலையை குனிந்து தன் மார்பின்
மீது புதைந்திருந்தவளின் முகம் பார்க்க, அவளும் அவன்
அணைப்பில் இருந்தவாரே தலையை நிமிர்த்தி அவன் முகத்தை ஏறிட்டவள்
“வ... வந்து...வந்து...அம்மு....இந்த
கல்யாணம் வேண்டாம்... இது நடக்காது...வேண்டாம்...” என்றாள் வெளிவராத குரலுடன்.
அதை கேட்டவனோ அதிர்ந்து போய்
“என்ன சொன்ன சது? “ என்றான் அவள் சொல்லியதை சரியாக புரிந்து
கொள்வதற்கு
“ஹ்ம்ம் உங்கள் காதில் சரியாகத்தான்
விழுந்தது அம்மு. நாம் இருவரும் சேர்வது முடியாது. நீங்கள் உங்க பெற்றோர்களின் விருப்பப்படி உங்களுக்கு
பார்த்து இருக்கிற பொண்ணையே கல்யாணம்
பண்ணிக்கோங்க.
நான் உங்களுக்கு பொருத்தமானவள் இல்லை...”
என்று தழுதழுத்தவாறு தரையை பார்க்க
அதைக்கேட்டு மேலும் அதிர்ந்தவன்
“என்ன ஆயிற்று இவளுக்கு? சற்று நேரம் வரைக்கும்
என்னோட அப்படி குழைந்தாளே...அதற்குள் என்ன ஆனது?” என்று அவசரமாக யோசித்தவாறு
“என்னாச்சு கண்ணம்மா? எதுவாக இருந்தாலும் உன் மனதில் இருப்பதை சொல்...” என்று மீண்டும் அவளை ஊக்குவிக்க, அவளும் ஒரு நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டவள்
“என்னால் நீங்க கஷ்ட பட வேண்டாம் அம்மு...நீங்கள்
சாதிக்கப் பிறந்தவர்...” என்று சற்றுமுன்
அவள் மனதில் யோசித்ததை பட்டியலிட,அதைக்கேட்டு கோபம் தலைக்கேற அவளை
பார்த்து முறைத்தவன்
“இடியட்...என்ன பேசற சது? நான் வெறும் கை கலோடு வந்தாலும்,
நான் சாதிக்கத்தான் போகிறேன். நான் எப்பவும் அப்படியே டெலிவரி பாயாக இருந்து விட
மாட்டேன்.
இது என்னுடைய தற்காலிக அடையாளம்தான். இதை
வைத்து எப்படி முன்னேறுவது என்று எனக்கு தெரியும். அனைத்தையும் இழந்த விட்டு வந்தாலும்
என்னால் இன்னும் ஐந்து வருடத்தில் சாதித்துக் காட்டுவேன்.
என்ன... கொஞ்சம் காலம் ஆகும். மற்றபடி
என்னுடைய விவேகம்... என்னுடைய அறிவு... அதை யாரும் சுரண்டிக் கொள்ள முடியாது. அது என்னோடு தான் இருக்கும். அதை வைத்து எதை வேண்டுமானாலும்
சாதிக்கலாம்.
என் டாட் கூட அவருடைய லைப் ஐ சாதாரண
ஏழ்மை நிலையில் இருந்துதான் ஆரம்பித்தார். இன்று பிஸ்னெஸ் வோர்ல்ட் ல் எவ்வளவு
சக்ஸஸ்புல் ஆக இருக்கிறார்.
அவர் மகன் நான்... என்னால் மட்டும்
அப்படி ஒரு நிலையை அடைய முடியாதா என்ன?
அடைவேன்...அடைந்து காட்டுவேன் சது.
ஆனால் நீ? உன்னை என்னால் எதற்காகவும் விட்டுக் கொடுக்க
முடியாது. நீ என் உயிர் டி. உன்னை விட்டு விட்டு நான் என்னத்தை சாதிக்கப் போகிறேன்...நீ
இல்லையென்றால் நான் ஜீரோ டி...” என்றான்
குரல் தழுதழுத்தது
அதைக்கேட்டவளுக்கோ மனம் பாகாய் உருகி
விட்டது...
“என் மீது இவ்வளவு காதல்
வைத்திருக்கிறானா? அப்படி என்ன இருக்கிறதாம் என்னிடம்? ஏன் என் மீது இப்படி
பைத்தியமாகி போனான்?”
என்று வேதனையுடன் பூரித்தவள் அதையே
அவனிடம் கேட்டு வைத்தாள் சத்யா.
“உன்னிடம் நல்ல மனசு இருக்கிறது ஹனி...அதை
பார்த்துத் தான் என் மனம் அடிமையாகி போனது...என் காதலடி நீ...” என்று மீண்டும் பாரதியாரின் கவிதைகளை சொல்ல, அதில் பெண்ணவள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்தாள்.
ஆனாலும் தன் மீது இவ்வளவு எல்லையில்லா காதல் கொண்டு இருப்பவனுக்கு, தகுந்த பரிசு அவனை அவனாகவே
இருக்க விடுவது தான். எனக்காக அவன் நிலை
தாழ்ந்து வரக்கூடாது...” என்று இன்னுமாய்
உறுதி செய்து கொண்டவள்
“இல்லை அம்மு... நீங்க எவ்வளவு தான்
சொன்னாலும் என்னால் இதற்கு சம்மதிக்க முடியாது. எனக்காக உங்களுடைய வளமான
வாழ்க்கையை தியாகம் செய்ய வேண்டாம். ப்ளீஸ் உங்களுக்கு,
உங்கள் பெற்றோருக்கு பிடித்த பெண்ணை
பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க...
நான் முதல் வரிசையில் வந்து அமர்ந்து பார்ப்பேன்...”
என்று ததும்பிய கண்ணீருடன் கஷ்டப்பட்டு
சொல்லி முடிக்க, அவனும் விருட்டென்று அவளை தன்னிடமிருந்து
பிரித்து விலக்கி நிறுத்தியவன், அவள் கையைப் பற்றியவன்
“உண்மையைச் சொல்லு சத்யா...அப்ப நீ
என்னை காதலிக்கவில்லை? “ என்றான் அவள் கண்களுக்குள் ஆழ்ந்து பார்த்தவாறு.
“ஹ்ம்ம் காதலித்தேன்... நான்
காதலித்தது என்னுடைய அமுதனை...ஆனால் எப்பொழுது உங்களை ஆரவ் ஆக கண்டேனோ, உங்களை பெரிய தொழிலதிபராக பார்த்தேனோ அப்பொழுதே அந்த காதல்
செத்துவிட்டது
இப்போதும் காதலித்துக்
கொண்டிருக்கிறேன் தான்...ென் அமுதனை..என் அம்முவை காதலித்துக் கொண்டிருக்கிறேன்.
எப்பவும் காதலிப்பேன். ஆனால் அந்த காதலுக்காக என் அம்மு எதையும் இழக்க கூடாது.
இதுதான் என்னுடைய முடிவு. என்னை இதற்கு
மேல் கட்டாயப் படுத்தாதீங்க...ஹோப் யூ அன்டர்ஸ்டேன்ட்...ஆல் தி பெஸ்ட்...” என்று அவன் கையை பிடித்து விலக்கியவள் பின் கடகடவென்று
மாடி இறங்கி சென்று விட்டாள்.
அதன் பிறகு எத்தனையோ முறை அமுதன் சமாதானம்
செய்தாலும் சத்யா தன் முடிவிலிருந்து மாறவில்லை. அவனை ஏற்றுக் கொள்ள முடியாது. அவன்
அன்னை பார்த்திருக்கும் பெண்ணையே திருமணம்
செய்து கொள்ளும்படி திரும்பத் திரும்ப உருப் போட்டுக் கொண்டிருந்தாள்.
ஒரு மாதம் போராடி பார்த்தவன், அவள் மனம் மாறாமல் பிடிவாதமாய் நின்று விட, அதன் பிறகு தன் முயற்சியை விட்டு விட்டான்.
அடுத்த வாரம் தன் திருமண அழைப்பிதழ் உடன் திரும்பி வந்திருந்தான்
அமுதன்.
அடுத்த மாதம்,
அடுத்த முகூர்த்தத்திலேயே அவனுக்கும் அந்த மாடல் அழகி மேக்னாவிற்கும் திருமணம்
என்றான் சத்யாவை வெறித்த பார்வை பார்த்து...
அதைக்கேட்டு சத்யாவும் திடுக்கிட்டு
அதிர்ந்து போனாள்.
ஆனாலும் தன்னை மறைத்துக் கொண்டு
வரவழைத்த புன்னகையுடன், அவன் கையை பற்றி குலுக்கி கன்கிராட்ஸ் அமுதன் என்று
வாழ்த்த, வளர்மதியோ ஷாக் ஆகிப் போனார்..
அவளுடைய இரு தங்கைகளும் முகம் சுண்டிப்
போனது.
“என்னாச்சு அமுதன்? ஏன் இந்த திடீர் கல்யாணம்?” என்று அதிர்ச்சியோடு
வளர்மதி விசாரிக்க, அவனும் கசப்புடன்
“வேற என்ன செய்ய ஆன்ட்டி? நானும் சத்யாவிடம் எவ்வளவோ
கெஞ்சிப் பார்த்து விட்டேன். அவள் ஒரே பிடிவாதமாக என்னை மணக்க மறுத்து விட்டாள்.
அதற்குமேல் என் அம்மாவிடமிருந்து வேறு எனக்கு நெருக்கடி.
அது தான் சரி என்று முடிவு எடுத்து
விட்டேன். நான் ஆசைப்பட்டது தான் நடக்கவில்லை. ஒரே மகன் எனக்கு கல்யாணம் பண்ணி பார்க்கணும்...
என்னை கல்யாண கோலத்தில் பார்க்க வேண்டும்
என்று கேட்கிறார்கள்.
சரி...அவர்கள் சந்தோஷமாவது...அவர்கள்
ஆசையாவது நிறைவேறட்டும் என்று ஒத்துக் கொண்டேன்...” என்று தன் பக்கத்து நிலையை விளக்கினான் அமுதன்.
வளர்மதியும் ஒன்றும் செய்ய முடியாத
கையறு நிலையில் தன் மகளை வேதனையுடன் பார்க்க,
அவளோ தன் வருத்தத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சிரித்த முகத்துடன் அமுதனை உபசரித்தாள்.
அமுதனும் அவளை முறைத்தபடி இருந்தவன், பின் அவன் வாங்கி வந்திருந்த ஆடைகளை எல்லாம் எடுத்துக் கொடுத்து, அவர்களை கட்டாயம்
திருமணத்திற்கு வரச் சொல்லி அழைத்தான்.
சத்யாவை மட்டும் தனியாக அவள் அறையில்
சந்தித்தவன், அவளை வெறித்த பார்த்து
“சத்யா...தயவு செய்து நீ மட்டும் என்
திருமணத்திற்கு வந்து விடாதே. உன்னை பார்த்துக்கொண்டே என்னால் இன்னொருத்தி கழுத்தில்
தாலி கட்ட முடியாது. அதனால் நீ வராதே...” என்று சொல்ல, அதைக்
கேட்டவளுக்கும் தன் உள்ளத்தை இரண்டாக பிளப்பதை போல இருந்தது.
பொங்கி வந்த தன் கண்ணீரை மறைக்க, தலையை குனிந்து கொண்டாள்.
அமுதனும் அவளையே ஒரு நொடி ஆழ்ந்து பார்த்து இருந்தவன் பின் ஒரு நீண்ட மூச்சை
இழுத்து விட்டு அறையை விட்டு வெளியே செல்ல
எத்தனித்தான்...
அவன் செல்கிறான்...தன்னை விட்டு நிரந்தரமாக
செல்கிறான் என்று புரிந்ததும் சட் என்று தலையை நிமிர்த்தியவள், எட்டி அவன் .கையை பிடித்து இழுத்து உள்ளேயே நிற்க வைத்தவள்
“அம்மு... இப் யூ டோன்ட் மைன்ட்...ஒரே
ஒரு டைம் நான் உன்னை கிஸ் பண்ணிக்க வா? நீ வேற ஒருத்திக்கு
சொந்தம் ஆகிவிட்டால், என்னால் இது மாதிரி செய்ய முடியாது.
ஒரே ஒரு முறை என்னை அலவ் பண்ணு...” என்றாள் கண்ணில் வழிந்த நீருடன்.
அதைக்கேட்டு அவனோ சிலையாகிப் போனான். தன் கை முஷ்டியை இறுக்கிக் கொண்டவன், உடல் விறைக்க அப்படியே நின்றிருந்தான்.
அவன் மௌனத்தை சம்மதம் என்று
எடுத்துக்கொண்டவள், அவனின் ஆறடி உயரத்திற்கு அவன் முகம்
எட்டாமல் போய்விட, இரும்பை போல இறுகியிருந்த அவன் பாதத்தின்
மேல் தன் பாதத்தை வைத்து ஏறி நின்றவள் அவனுக்கு முத்தமிட முயன்றாள்.
அவனோ அப்பொழுதும் கொஞ்சமும் வளைந்து
கொடுக்காமல் நேராக விரைத்துக் கொண்டு நிமிர்ந்து நின்றிருக்க, தன் தயக்கத்தை விடுத்து, அவன் கழுத்தில்
தன் இரண்டு கரங்களையும் போட்டு மாலையாக்கி, தன் பலத்தைக்
கொண்டு அவன் கழுத்தை தன்னை நோக்கி வளைத்தவள், எக்கி அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்...
அப்பவும் அவளுடைய ஆசை தீராமல், அவன் மீதான் அவளின் காதல் பொங்கி பெருக, அடுத்ததாய்
அவனுடைய அழுத்தமான இதழ் உடன் தன்னுடைய இதழை சேர்த்து ஆழமாக, அழுத்தமாக முத்தம் இட்டாள்.
அவன் மீதான தன் காதலை எல்லாம் அந்த
நொடி, தன்
மனதிலிருந்து வடித்து எடுத்து, அவன் உள்ளே பாய்ச்சி விடும் வேகம் அவளின் அந்த
அழுத்தமான இதழ் அணைப்பில் தெரிகிறதுதான்.
உடல் இறுகி விரைத்து நின்றாலும், அவளின் பட்டு போன்ற பொன்னான
மேனி தன் மீது உரசவும், கூடவே அவளின் அழுத்தமான இதழ் அணைப்பு, ஆணவன் உறுதியை அசைத்து பார்த்தது.
அவன் கரங்கள் அனிச்சையாய் உயர்ந்து, அவளை, தன்னவளை தன்னோடு சேர்த்து அணைத்துக்
கொண்டு, அவள்
கொடுத்ததை வட்டியோடு சேர்த்து திருப்பி கொடுக்க தவித்தது அவன் உடலும் மனமும்.
ஆனாலும் கஷ்டப்பட்டு தன் கரங்களை
கட்டிப்போட்டவன் இன்னுமே இரும்பாய் விரைத்துக் கொண்டு நீ செய்வதை செய்து கொள் என்றபடியாய்
சிலை போல நின்றிருந்தான் அமுதன்.
பெண்ணவளுக்கும் அவன் நிலை புரிகிறது
தான்.
இதுவே சாதாரண அமுதனாக இருந்திருந்தால், இந்நேரம் அவளின் எலும்புகள்
நொறுங்கி இருக்கும். அந்த அளவுக்கு அவள் செய்ததற்கு அவன் திருப்பி இறுக்கி அணைத்து
அவள் இதழில் கவிதை பாடியிருப்பான்.
ஆனால் இன்றோ தன்னுடைய உணர்வுகளை
எல்லாம் கட்டுப்படுத்திக் கொண்டு போர் வீரனாய் நின்று இருப்பவனை கண்டவளுக்கு
இன்னுமாய் மனதை பிசைந்தது.
இப்படிப்பட்ட நல்லவனை, தன் மீது உயிராக இருப்பவனை பிரிய போகிறேனே என்று நெஞ்சை அடைக்க, அவனை விலக்க மனம் இல்லாமல், தன்னையும் மீறி
தன்னவனை இன்னுமாய் இறுக்கி அணைத்துக் கொண்டு அவன் முகம் எங்கும் முத்த மழை
பொழிந்தாள்...
பின் சிறிது நேரம் கழித்து, நேரம் ஆவதை உணர்ந்து மனமே இல்லாமல் அவன் இதழை விட்டவள், மீண்டும் காதல் பொங்க,
மீண்டும் ஒரு முறை அவனை இழுத்து அணைத்து
முத்தம் பதித்து அவனை விட்டவள்
“தேங்க்ஸ் அம்மு...” என்றாள் தயக்கத்துடன்.
அழுத்தமாய் இறுக மூடியிருந்த தன்
இமைகளை பிரித்தவன்
“என் மீது இவ்வளவு காதலை உன் மனதில்
வைத்துக்கொண்டு ஏன் இந்த தியாகி வேஷம் சத்யா. இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை. நீ உன் முடிவை மாற்றிக் கொள்.
எனக்கு ஒரே ஒரு வார்த்தை...சம்மதம் என்று
சொல். நான் அனைத்தையும் நிறுத்தி விடுகிறேன். உன்னவனாய் உன்னுடனே வந்துவிடுகிறேன்.
ப்ளீஸ் செல்லம்மா...ஒரே ஒரு வார்த்தை...” என்றான் தவிப்புடன் அவள் சம்மதத்தை
யாசித்தான்...
அதற்குள் தன்னை சமாளித்துக்கொண்டவள், அவள் எடுத்திருந்த முடிவு நியாபகம் வர,
“இல்லை... இல்லை... “ என்று அவசரமாய் தன்
இரண்டு பக்கமும் தலையை வேகமாக உருட்டியவள்
“அது முடியாது அமுதன்...” என்றாள்
வேதனையுடன்.
அதைக் கண்டவன் கை முஷ்டி மீண்டும் இறுகியது. தன் பல்லைக் கடித்தவன்
“ராட்சசி...என்னை கொல்ற டி...என்னை
மொத்தமாகவே கொன்றுவிட போகிறாய். மீதி இருப்பது இந்த உடல் மட்டும் தான். இந்த
உடல்தான் அந்த மேக்னா கழுத்தில் தாலி கட்ட போகிறது. அவ கூட குடும்பம் நடத்தப்
போகிறது
என் உயிர்... என் ஜீவன்... எப்பவும்
உன்னிடமே...உன்னையே தான் சுத்திக் கொண்டிருக்கும். நீ இல்லாத வாழ்வு, ஜீவன் இல்லாத மங்கிப்போன வாழ்வாகத்தான் இருக்கும்...
உனக்கு சந்தோஷம்தானே...திருப்தி
தானே...இதற்குத்தானே ஆசைப்பட்டாய்... சரி... அப்பயாவது நீ சந்தோஷமா இரு...” என்று
சொல்லி விட்டு அவளை அடிபட்ட பார்வை பார்த்தவன் திரும்பி நடக்க எத்தனிக்க,
என்ன நினைத்தாளோ,
அந்த நொடி
“அம்மு....” என்றாள் தன் அடி வயிற்றில்
இருந்து.
அவனும் முன் வைத்த காலை அப்படியே இழுத்துக்
கொண்டு கழுத்தை மட்டும் திருப்பி ஆர்வமாய், ஆவலாய் அவள்
மீது பார்வையை பதிக்க, மீண்டுமாய் அவன் அருகில் வந்தவள், எக்கி அவன் கன்னத்தில் முத்தமிட்டு
“விஷ் யூ ஹேப்பி மேரிட் லைப்...என்
அம்மு இன்னும் நிறைய நிறைய நிறைய சாதிக்க வேண்டும்...” என்று கண்கள் பளபளக்க சொல்ல
“சீ போடி... ராட்சசி...கொஞ்சம் கூட
இரக்கம் இல்லாதவள் நீ...என் காதலை கொன்று புதைத்து விட்டு என்னை மகிழ்ச்சியோடு இரு
என்கிறாய். முட்டாள். கல்நெஞ்சுக்காரி...
லுக் சத்யா... நான் முன்பே சொன்னது போல
இந்த அமுதன் சாதிக்கத்தான் போகிறான். வளமான வாழ்க்கை வாழத்தான் போகிறான். ஆனால் அதில்
ஜீவன் இருக்காது.
கொஞ்சமும் உயிர் இருக்காது. வெறும்
உடல் மட்டும் தான் நடமாடிக்கொண்டிருக்கும். அதைப்பற்றி உனக்கு என்ன கவலை. எனிவே டேக்
கேர் ஆஃப் யூ அன்ட் யுவர் பேமலி... குட் பை...” என்று
இறுகிய முகத்துடன் சொல்லிவிட்டு விடுவிடுவென்று நடந்து வெளியேறிவிட்டான்...
அவனின் பரந்து விரிந்திருந்த முதுகையே
நீண்ட நேரம் வெறித்து பார்த்தபடி சிலையாக நின்றிருந்தாள் சத்யா..!
Comments
Post a Comment