காந்தமடி நான் உனக்கு-40
அத்தியாயம்-40
அதையெல்லாம் இப்பொழுது நினைத்துப் பார்த்தவளுக்கு ஒரு முறை உடல்
குலுங்கியது.
“அமுதன் பிடிவாதக்காரன்...ஒருவேளை அவன்
அன்று சொன்னதைப் போல கடமைக்காக இந்த
கல்யாணத்தைப் பண்ணிக்கொண்டு அவன் வாழ்க்கையில் சந்தோசமாக இருக்க மாட்டானோ? “ என்று கேட்க, உடனே அவள் மனசாட்சியும்
“ஹா ஹா ஹா உன்னால் அவனைப் பிரிந்து
சந்தோசமாக இருக்க முடியுதா? நீ எப்படி உன்னுடைய உயிரை தொலைத்து விட்டு, ஜடமாக உலா வர போகிறாயோ அதே போலத்தான் உன் அமுதனும் உயிரற்ற ஜடமாக சுற்ற
போகிறான்.
அதை நன்றாக பார்த்து ரசி... “ என்று பரிகசிக்க,
அதைக்கேட்டு திடுக்கிட்டுப் போனாள் சத்யா.
அப்பொழுதுதான் அவளுக்கு ஒன்று
உரைத்தது...
பணவளமும்,
அந்தஷ்த்ம், பெரிதாக சாதிக்கிறது மட்டுமே வாழ்க்கை
இல்லையே..!
அவ்வளவு சாதித்த பில்கேட்ஸ் கூட
இறுதியில் மன நிம்மதிக்காக அதை விட்டுவிட்டு மனதுக்கு அமைதி தரும் பணியை அல்லவா
மேற்கொண்டார்.
இது மாதிரி எத்தனையோ ஜாம்பவான்கள்
எவ்வளவு சாதித்தாலும் இறுதியில் மனநிம்மதியை தேடித்தான் போய்விட்டார்கள். ஆனால் அவளுடைய
அமுதனுக்கோ அது ஆரம்பத்திலிருந்தே கிடைக்கப் போவதில்லை. .
அவள் அமுதன் வெறித்தனமாக உழைத்து சாதிக்கத்
தான் போகிறான். ஆனால் சந்தோஷம்? காதல்? அது அவன் வாழ்வில் இல்லாமல் போய் விடுமே..
நான் தானே அவனுக்கு காதலிக்க கற்றுக்
கொடுத்தேன். இப்பொழுது நானே அந்த காதலை அழித்துவிட போகிறேனே..!
உயிரில்லாத உடலுக்கு மட்டும் என்ன
மதிப்பு இருந்துவிடப்போகிறது... இல்லை... என் அமுதன் தொழிலிலும், சொந்த வாழ்விலும்
இரண்டிலுமே சாதிக்க வேண்டும்.
அவனுக்கு பிடித்தமான வாழ்க்கையை அவன்
வாழவேண்டும்.” என்று கொஞ்சம் புத்திசாலித்தனமாக
யோசிக்க, அப்பொழுது அவளுடைய அலைபேசி ஒலித்தது
அவசரமாய் அதை எடுத்து பார்க்க, அவளுடைய தங்கை திவ்யா தான் அழைத்திருந்தாள்.
“அக்கா...நாங்க ஹோட்டலுக்கு
வந்துட்டோம். இங்க எவ்வளவு சூப்பரா இருக்கு தெரியுமா? அதுவும் மாமா பட்டு வேஷ்டி சட்டையில் அவ்வளவு அம்சமா
இருக்கார். பார்க்க பார்க்க எனக்கே
பொறாமையா இருக்கு...
அப்படிப்பட்டவரை மிஸ் பண்ணிட்டியேனு
எனக்கே ஆற்றாமையா இருக்கு. நான் வேணா போட்டோ அனுப்புறேன் பாரு...”
என்றவள் சத்யாவின் பதிலுக்கு கூட
காத்திருக்காமல் அவசரமாய் அமுதன் மணக்கோலத்தில் இருந்த போட்டோவை சத்யாவின்
வாட்ஸ்அப் ற்கு அனுப்பி இருந்தாள்.
சத்யா கற்பனை செய்திருந்த மாதிரியே, மணமகன் தோற்றத்தில்
கம்பீரமாய் ஆணழகனாய் திருமண மேடையில் வீற்றிருந்தான்
ஆரவமுதன். ஆனால் முகத்தில் மட்டும் கல்யாணத்திற்கான மகிழ்ச்சி கொஞ்சமும் இல்லை.
முகம் கடுகடுவென இருந்தது. தன் முகத்தை
இறுக்கி கொண்டு அவ்வபொழுது யாராவது தெரிந்தவர்கள் வந்தால் மட்டும்,ரெடிமேட் புன்னகை ஒன்றை
உதிர்த்து சிரித்து வைத்தான்.
அதைக்கண்ட சத்யாவுக்கும் மனதை
பிசைந்தது.
“ஒருவேளை அவன் தந்தையை போல, இவனும் தொழிலுக்காக, இந்த வாழ்க்கையை, மனதுக்கு பிடிக்காத கசப்பான
வாழ்க்கையை வாழப் போகிறானோ?
கண்டிப்பாக அந்த மேக்னா , அவன் அன்னை ரூபாவதியின் மறு உருவமாய் இருக்க போகிறாள். அமுதனை அவள் கண்டுகொள்ளவே மாட்டாள். அவளுடைய
பொழுதுபோக்கை தான் பெரிதாக கருதுவாள்.
அப்படியென்றால் இனி காலம் முழுவதும்
என் அமுதன் இப்படியேதான் இறுகிப்போய் இருக்க போகிறானா? இதைத்தானா,இப்படிபட்ட
ஒரு வாழ்க்கையை யா நான் அவனுக்கு பரிசு அளிக்கப் போகிறேன்?
இதையா நான் காதல் பரிசாக அவனுக்கு திருப்பிக் கொடுக்க
போகிறேன்? “ என்று உள்ளுக்குள் புலம்ப, அவள் மனநிலை அறியாத அவள் தங்கை திவ்யாயும் விடாமல் அங்கிருக்கும் ஒவ்வொரு
காட்சியையும் விவரித்துக் கொண்டிருந்தாள்.
அதை கேட்க கேட்க சத்யாவின் உடல் நடுங்க
ஆரம்பித்தது.
“அக்கா.. இன்னும் கொஞ்ச நேரத்தில் மாமா
அந்த ரசகுல்லா கழுத்தில் தாலி கட்டப் போகிறார். அதற்கு பிறகு மொத்தமாகவே அமுதன்
மாமா உனக்கு இல்லாமல் போய்விடுவார்.
ப்ளீஸ்...இன்னொரு முறை கன்சிடர் பண்ணிப்பாரேன்.
இப்போ மட்டும் ஒரு வார்த்தை நீ சரி சொல்லிவிட்டால், உடனேயே இந்த திருமணத்தை நிறுத்தி விடுவார் மாமா...
ப்ளீஸ் க்கா... பிடிவாதம் பிடிக்காமல் யோசித்து பாரேன்...” என்று கெஞ்சினாள்.
சத்யாவிற்கும் இருதலைக்கொள்ளி
எறும்பாய் என்ன செய்வது என்று தவித்துப் போனாள். அதேநேரம் சது என்று ஒரு ஆழ்ந்த குரல் அவள்
செவியை தழுவியது
அடுத்த நொடி திடுக்கிட்டு, நிமிர்ந்து பார்க்க, காணவில்லை அவனை. ஆனால் மீண்டும்
அடிவயிற்றிலிருந்து அவன் காதலுடன் அழைக்கும் சது என்ற குரல் மீண்டும் கேட்க, அந்த குரல் அவளின் உயிர் வரை சென்று தீண்டியது.
உடனே சுற்றும் முற்றும் அவள் கண்கள் அவனை
தேடிப்பாக்க, எங்கும் காணவில்லை அவனை. அப்பொழுதுதான்
அலைபேசியை கவனித்தாள்.
அந்த அலைபேசியில் இருந்து தான் அவனின் குரல்
வந்து கொண்டிருந்தது.. அமுதனுடைய குரல்...
அப்படி என்றால் தன் தங்கையிடம் இருந்து போனை வாங்கி இருக்கிறான் என்பது புரிய,
அவன் குரலை இன்னும் ஒருமுறை கேட்க வேண்டும்
போல இருக்க, ஆவலுடன் அந்த அலைபேசியை காதில் வைத்தவள், வார்த்தை வராது ஊமையாகி நின்றாள்..
“ஐ லவ் யூ டி செல்லம்மா... ஐ லவ் யூ சது.
முடியல டி. சத்தியமா என்னால இங்க முடியல. என்னால உன்னைத் தவிர வேற யாரையும் என் அருகில்
அமர்த்தி பார்க்க முடியாது.
ப்ளீஸ் செல்லம்மா....வந்துவிடேன்... என்னிடம்
வந்து விடேன். நீயில்லாத வாழ்க்கை சத்தியமா நரகமாதான் இருக்கும் டி...” என்றவன் அவள்
எதிர்பாராத விதமாய் அவர்களுடைய பேவரைட் பாடலை பாட ஆரம்பித்தான்
பாயுமொளி நீ எனக்கு..!
காதலடி நீயெனக்கு..!
என்று உருகி பாட, சத்யாவோ
நிலைகொள்ளாமல் தவித்தாள். அவனை அந்த பாடலை பாட வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை
அவன் பாட பாட கொஞ்சம் கொஞ்சமாக தன்வசம்
இழந்து கொண்டிருந்தாள் சத்யா.
தன்னை மறந்து
காந்தமடா நீ எனக்கு... என்று சொல்ல அவள் இதழ்கள் தவித்தன.
“ஒரு வார்த்தை சொல்லடி. நாம் கல்யாணம்
பண்ணிக்கலாமா? இப்பவே எல்லாத்தையும் நிறுத்திடறேன்...” என்று மீண்டும் தவிப்புடன் அவள் காதலை யாசிக்க
பெண்ணவளோ வார்த்தை வராமல் அடைத்துக்கொள்ள, மூச்சுக்காற்றுக்கு தவித்துக் கொண்டிருந்தாள்.
அவளிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போக,
“சே...நீ சரியான அழுத்தக்காரி டி. செல்பிஷ்...உனக்கு
யாரை பற்றியும் கவலை இல்லை. நான் உயிரற்ற உடலாய் சுற்றி வந்தால் கூட உனக்கு
ஒன்றுமே இல்லை.
ராட்சசு...பிசாசு...அழுத்தக்காரி. சை...
உன்னை போய் காதலித்து தொலைத்தேனே.. எனக்கு
இதுவும் வேண்டும்... இன்னமும் வேண்டும்...” என்றவன் மீண்டுமாய் தன் பல்லை கடித்துக் கொண்டு
“லுக் சது... கடைசி கடைசியா கேட்கிறேன்.
என்னை மணந்து கொள்ள சம்மதம் என்று சொல்லடி. சரி அதுவும் வேண்டாம். ப்ளீஸ் அட்லீஸ்ட்
ஒரே ஒரு முறை ஐ லவ் யூ ஆவது சொல்லு.
இந்த ஜென்மத்தில் அதை நினைத்துக்
கொண்டே நான் வாழ்ந்து விடுவேன்...” என்று கெஞ்சலுடன்
குரல் தழுதழுக்க மீண்டுமாய் அவளிடம் மன்றாடினான் அமுதன்.
அவ்வளவுதான்...அதற்கு மேல் தன்னை கட்டுபடுத்த
முடியாமல் தனக்குத்தானே போட்டிருந்த விலங்கை அறுத்தெறிந்தாள். மொத்தமாக அவன் காதலில்
சரணடைந்து போனாள் சத்யா.
அவன் இன்றி அவள் எல்லை இன்பது இப்பொழுது
தெளிவாக புரிந்து போனது.
“இல்லை... என் அமுதனை யாருக்கும்
விட்டு தரமாட்டேன். அவன் எனக்கானவன். அவன் சந்தோஷமாக வாழவேண்டும். அவனை
கஷ்டபடுத்தி பார்க்க மாட்டேன்...”
என்று வெகுண்டு எழுந்தவள், இப்பொழுது முழுவதுமாய் தன்னைப்பற்றி
தெளிந்திருக்க, அடுத்த நொடி
“சம்மதம்...சம்மதம்...சம்மதம்....ஒரு முறை
என்ன ? ஓராயிரம் முறை சொல்வேன்... ஐ லவ் யூ... ஐ லவ்
யூ அம்மு...ஐ லவ் யூ சோ மச்...” என்று
ஆர்ப்பரித்தாள் முகம் முழுவதும் சந்தோச
பூக்கள் பொங்கி வழிய
“யெஸ்...யெஸ்... நாம இப்பவே கல்யாணம்
பண்ணிக்கலாம். யாருக்கும் என்னால் உன்னை
விட்டுக்கொடுக்க முடியாது...” என்று மீண்டுமாய்
சற்று முன்பு அவன் கேட்டதுக்கு பதில் சொல்லி ஆர்ப்பரிக்க,
மறுமுனையில் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.
அதைக்கேட்டு திடுக்கிட்டுப் போனாள்
“இந்நேரம் நான் சொல்லியதை கேட்டு துள்ளிக்
குதித்திருப்பானே... என்னை தூக்கி தட்டாமாலை சுற்றி இருப்பானே. என்ன ஆனது? இவ்வளவு சைலன்ட்டாக இருக்கிறான்... “ என்று தன் அலைபேசியை காதில் இருந்து எடுத்து பார்க்க, அதுவோ பேட்டரி இல்லாமல் உறக்கத்திற்கு
சென்று விட்டிருந்தது.
“ஓ ஷிட்... அப்படி என்றால் நான்
சொல்லியதை அமுதன் கேட்கவில்லையா? நான் சொன்ன சம்மதம் அமுதனை
அடையவில்லையா? சே...டேமிட்...” என்று டென்ஷன் ஆனவள்,
கோபத்தில் கையிலிருந்த அலைபேசியை தூக்கி எறிய, அதுவும் தரையில் வீழ்ந்து தூள் தூளாக சிதறிப் போனது...
Mam sema tension ah eruku mam. Next episode quick ah podunga
ReplyDeleteThanks pa!
Delete