உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-44

 


அத்தியாயம்-44

 ந்தினி பேசியதை கேட்ட பவித்ரா தன்னை கட்டுபடுத்தி கொண்டு அவளை ஒரு ஆழ்ந்த பார்வை ஒன்றை செலுத்தி திரும்பி நடந்தவளுக்கு அவள் போட்ட கணக்கிற்கு கிடைத்த விடையும் சரியே என சற்றுமுன் உறுதி செய்ததும் அவள் முகத்தில் புன்னகை அரும்பியது.. ..

கூடவே சற்று முன் நந்தினி பேசியதும் நினைவு வர,

“பாவம் புவர் கேர்ள்... இந்த பவித்ரா  யாரு னு தெரியாமல் என்கிட்டயே கேம் ஆடறா...இவள் ஆட்டமும் இன்ட்ரெஸ்டிங் ஆ தான் இருக்கு...Let’s wait and see her play..So pitty… “ என்று தனக்குள் சிரித்துக் கொண்டவள் சமையல் அறையை நோக்கி நடந்தாள்...

ஒருவேளை பவித்ரா அந்த நந்தினியை குறைத்து எடை போட்டுவிட்டாளோ?? இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து யோசித்திருந்தாள் பின்னால் வரும் பெரும் ஆபத்தை தடுத்திருக்கலாம்... 

உள்ளே சென்றவள் அங்கு மரகதம் பரபரப்பாக எதையோ செய்து கொண்டிருக்க, அதை கண்டு ஆர்வமானவள் நந்தினியை பின்னுக்கு தள்ளி மரகதத்திடம் சென்றாள்....

“என்ன பண்ணிகிட்டிருக்கீங்க அத்தை... பார்க்க வித்தியாசமா இருக்கு... “ என்று சிரித்தாள்..

மரகதமும் அவளை பார்த்து புன்னகைத்து

“மாவிளக்குக்கு மாவு சானை ரெடிபண்ணிகிட்டிருக்கேன் பவித்ரா.... “

“மாவிளக்கா?? அப்படீனா என்ன அத்தை ?? “என்றாள் இன்னும் ஆர்வமாக....

“ஓ... உனக்கு இத பத்தி தெரியாதா??  ஆமா  நீ பட்டணத்துல பொறந்து வளர்ந்தவ ஆச்சே... உனக்கு எப்படி தெரிஞ்சிருக்கும்... சொல்றேன் கேள் பவி மா...”  என்று தன் கதையை ஆரம்பித்தார்...

கிராமத்து திருவிழாக்களில் முக்கியமானதே மாவிளக்கு பூஜைதான்...எல்லா ஊர்லயும் ஒரு  மாரியம்மன் கோயிலாவது இருக்கும்.. இன்னும் சில  அம்மன்களும் இருக்காங்க... அப்படி அந்தந்த  ஊர்ல இருக்கிற அம்மன்களுக்கு வருசம் ஒரு முறை இந்த மாதிரி திருவிழா கொண்டாடுவாங்க

முக்கியமா சித்திரை மாசம் தான் இந்த மாதிரி திருவிழா வரும்.. அப்பதான் மக்களும் வயல் ல வேலை குறைஞ்சு இருக்கும்... அவங்களுக்கும் ஒரு ஓய்வு வேணும் மற்றும் மகிழ்ச்சியா எல்லா சொந்தக்காரங்களயும் அழைத்து ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்கணும்னு தான் இந்த திருவிழா வைக்கிறது...

அதுல மாவிளக்கு  பூஜைதான் முக்கியமானது..

பச்ச அரிசியை ஊற வச்சு  அத நிழல் ல உளற  வச்சு அதை  மாவாக்கணும்... முன்னாடி எல்லாம்  இந்த  அரிசிய  கை உலக்கையாலயே குத்தி  மாவாக்குவோம்.. இப்பல்லாம் யார்  கையில குத்தறா??  எல்லாம்  மாவு அரைக்கிற மெசின்ல  கொடுத்து  அரைச்சுகிறாங்க....

அப்படி அரைச்ச மாவை, வெல்லம் இல்லைனா சர்க்கரை பாகு பண்ணி அதை இந்த மாவுல கொஞ்சம் கொஞ்சமா ஊற்றி நல்லா பிசையணும்.. அதுக்கப்புறம் இந்த மாதிரி செவ்வக வடிவத்துல அதை  தட்டணும்.. இதுக்கு பேர் மாவு சானை ...

இந்த மாதிரி இரண்டு செய்து அதை ஒரு பெரிய தாம்பாளத்துல வைத்து அதன் மேல் கலர் கலரா மெழுகுவர்த்தி வச்சுக்கலாம்.. அப்புறம் தேங்காய், பழம் வெத்திலை சாமிக்கு மாலை னு எல்லாம் வைத்து அந்த மாவிளக்கு தட்டை அலங்கரிக்கணும்..

இன்னும் சில பேர் தட்டு அழகா இருக்கணும் னு   விசிறி மாதிரி இருக்கிற பூவை சொருகுவாங்க...

ஒவொருத்தரும் யார் தட்டு அழகா இருக்குனு பார்க்கிறது தான் முதல் வேலை... அதுக்காகவே ஒவ்வொருத்தியும் மெனக்கெட்டு இந்த தட்டை அலங்கரிப்பாளுங்க...

ஒவ்வொரு ஊர்லயும் ஒவ்வொரு மாதிரி பண்ணுவாங்க.. நம்ம ஊர்ல இந்த பூஜை நைட் தான் நடக்கும்.. ஒரு 9 மணிக்கு மேல இங்க இருக்கிற பறை அடிக்கிறவங்க ஒவ்வொரு வீடா போய் மாவிளக்கு அழைச்சுகிட்டு வருவாங்க..

கடைசியா இருக்கிற வீட்டுக்கு முதல்ல போவாங்க... ஒவ்வொருத்தரா சேர்ந்து அப்புறம் ஒவ்வொரு தெருவா சேர்ந்து எல்லாரும் அந்த பறை அடிக்கிறவங்க கூடவே நடந்து வரணும்.. கடைசியா ஊரே திரண்டு ஒன்னா வரும்.... அதை பார்க்க ரம்மியமா இருக்கும்....” என்று சிரித்தார்..

“வாவ்... சூப்பர் அத்தை... அப்ப இன்னைக்குதான்  அந்த பூஜையா?? “ என்றாள் பவித்ரா கண்கள் மின்ன...

“ஆமாம் பவி...உன் மாமியார் வாணி இருந்தால் ஒவ்வொரு வருசமும் இந்த பண்டிகைக்கு ஓடி வந்திடுவா... அவளுக்கு இந்த மாவிளக்கு எடுத்துகிட்டு போறதுனா அவ்வளவு பிடிக்கும்...அவ போனதுக்கப்புறம் நானும் இத கடனேனு தான் செஞ்சுகிட்டிருக்கேன்... “ என்று தழுதழுத்தவர் பவித்ரா அவர் கையை அழுத்தவும் தன்னை சுதாரித்து கொண்டார்...

 “ அதான் இந்த வருசம் உங்களை வர சொன்னது.. கல்யாணத்துக்கப்புறம் வர்ற பண்டிகை இல்லையா...  நீதான் இன்னைக்கு இந்த மாவிளக்கு தட்டை எடுத்து கிட்டு வரப்போற...

அதோட ஊர் பெரியவங்க எல்லாம் நம்ம நிஷாந்த் க்கு பரிசம் கட்டி இந்த பூஜையை அவன் தலைமையில நடத்தறதா ஏற்பாடுபண்ணியிருக்காங்களாம்.. நீயும் அவன் பக்கத்துல நிக்கணும்... அதனால நீ போய் நல்ல புடவையா கட்டிக்கோ... “ என்றார்....

அவர் பேசி கொண்டிருக்கும்பொழுதே

“எங்க போனிங்க அண்ணி?? உங்கள எங்க எல்லாம் தேடறது??  “என்றவாறு ஜனனி உள்ளே வந்தாள்...

அவளை கண்டதும் பவித்ரா வாயை பிளந்தாள்...

பட்டுபாவாடை தாவணி  அணிந்து கையில் குலுங்கும் வளையல்களும்  கழுத்தில் மின்னும் நெக்லசும் தலையில் நெத்தி சுட்டியும் வைத்து கலக்கலாக  இருந்தாள்  ஜனனி....

“வாவ்.. சூப்பரா இருக்க  ஜனிஎன் கண்ணே பட்டுடும் போல இருக்கு... “ என்று அவளுக்கு திருஷ்டி சுத்தினாள் பவித்ரா....

“அட போங்க அண்ணி.. இதுக்கே இப்படி சொன்னா எப்படி?? இன்னைக்கு நைட் கோயில்ல வந்து பாருங்க...  ஒவ்வொருத்தியும் எவ்வளவு அழகா அழகா வருவாளுங்கனு.... எனக்கே ஆச்சர்யமா இருக்கும் இந்த ஊர்ல இத்தன பொண்ணுங்க இருக்காங்காளானு...

அவங்கள சைட் அடிக்கிறதுக்குனே எங்க ஊர் இளவட்டங்க எல்லாம் என்னமா சீன் போடுவாங்க பாருங்க.. செம ஜாலியா இருக்கும்... சீக்கிரம் கிளம்புங்க... நாம கோயிலுக்கு போலாம்.. “ என்று அவசர படுத்தினாள்...

“ஹே .. இப்பயே வா... மணி  7 தான் ஆகுது.. அத்தை 9 மணிக்கு தான் பூஜை னு சொன்னாங்க ... “

“பூஜை 9 மணிக்குதான் அண்ணி.. நாம முன்னாடியே போலாம்.. அதோட இந்த வருசம் தேர்கடை நிறைய வந்திருக்காம்... அப்புறம் குடை ராட்டினம் ,ரோலர் கோஸ்டர் எல்லாம் இருக்காம்... நாம முன்னாடியே போய் அதெல்லாம் ஆடலாம் வாங்க அண்ணி.. “

“ஹே.. இதெல்லாம்  தான் எல்லா தீம் பார்க்லயும் இருக்கே.. சென்னைல எத்தன இடத்துல இருக்கு தெரியுமா?? நீ என்னவோ பார்க்காததை பார்க்கிற மாதிரி சொல்ற “ என்று சிரித்தாள்..

“ஹ்ம்ம்ம் உங்க சென்னைல எல்லாம் தான் இருக்கு அண்ணி.. ஆனால் எங்க ஊர்ல ஆடற மாதிரி ஒரு கிக் இருக்காது... சின்னதா இருந்தாலும் அதோட enjoyment சூப்பரா இருக்கும்... வலவலனு பேசாம சீக்கிரம் வாங்கஅண்ணி...”  என்று அடம் பிடித்தாள்...

“ஐயோ... எனக்கு அந்த மாதிரி எல்லாம் நான் போனது இல்லை.. எனக்கு அத பார்த்தா பயம்..  தலை  சுத்தும்... வாமிட் வரும்.. நான் வரலை.. நான் அத்தை கூடவே வர்ரேன்.. நீ போ ..”  என்று மறுத்தாள் பவித்ரா

“என்னது?? பயமா?? தலை சுத்துமா?? என்ன அண்ணி சொல்றீங்க?? கலயாணத்துல உங்க பிரெண்ட் என்னவோ நீங்க பெரிய ஜான்சி ராணினு சொன்னாங்க.. நீங்க என்னடான்ன தண்ணில கண்டம் னு தண்ணிய பார்த்து பயந்துக்கறீங்க... இப்ப இந்த குட்டியூனு இராட்டணத்துல சுத்தறதுக்கு இப்படி நடுங்கறீங்க...

எனக்கு ஒரு சந்தேகம்.. நீங்க உண்மையிலயே ஜான்சி ராணி தானா??  இல்ல நம்ம வடிவேல் காமெடி யில  நானும் ரவுடி தான் சொல்லிக்குவாரே அந்த மாதிரி வெளில அப்படி சொல்லிகிட்டு சுத்தறீங்களா?? “  என்று சிரித்தாள்...

அதை  கேட்டு ஜனனியை முறைத்தாள் பவித்ரா....

“ஆகா.. இந்த முறைக்கிறத வச்சு வேணா நீங்க ஜான்சிராணி னு சொல்லலாம்... மத்தபடி நீங்க வேஸ்ட்... “ என்று சிரித்தாள்...

“ஹே !!  என்ன வாலு. என் பொண்டாட்டிய வேஸ்ட் னு சொல்லி கிட்டிருக்க?? “ என்று சிரித்தவாறு மாடியில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தான் ஆதித்யா....

பட்டு வேட்டியும் இப்ப ட்ரென்ட் ஆன பளபளக்கும் மெருன் கலர் சில்க் சட்டையும் அணிந்து தன் சட்டையின் கையை மடித்த வாறெ குறும்பு சிரிப்புடன் இறங்கி வந்தான்....

கம்பீரமாக இறங்கி வரும் தன் கணவனையே இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தாள் பவித்ரா...

“அண்ணி... வாயில கொசு போகுது.. மூடிக்கங்க.. என்னமோ பார்க்காதத பார்க்கிற மாதிரி இப்படி ஜொள்ளு விடறீங்க.. நீங்க  5 மசாமா பார்த்துகிட்டிருக்க மூஞ்சிதான..”  என்று சிரித்தாள் ஜனனி..

அவளின் கிண்டலில் முகம் சிவந்து தலையை குனிந்து கொண்டாள் பவித்ரா.. இறங்கி வரும்பொழுதே பவித்ராவின் ரகசிய பார்வையை கண்டு கொண்டவன் அவளை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டு வர ஜனனியின் கேலி பேச்சுக்கு பவித்ரா முகம் சிவக்கவும் அவனுக்கு கண் கொள்ளா விருந்தானது...

அவளை ரசித்து கொண்டே மாடியில் இறங்கி சமையல் அறைக்கு வரவும் அவனை கண்ட  ஜனனி,

“வாவ்.. சூப்பரா இருக்கீங்க நிஷா அண்ணா...TVS பைக் விளம்பரத்துக்கு மை டார்லிங் தோனி வேட்டியில செமயா இருப்பார்...அவர விட  நீங்க இன்னும் சூப்பரா இருக்கீங்க அண்ணா...அதான் உங்க பொண்டாட்டி உங்களயே சைட் அடிச்சுகிட்டு இருந்தாங்களாக்கும்....“  என்று கண் சிமிட்டி சிரித்தாள்...

“ஹா ஹா ஹா.. “ என்று வாய்விட்டு சிரித்தவன்

“சரி .. என்ன என் பொண்டாட்டி கிட்ட வம்பு இழுத்துகிட்டு இருந்த??

“அட போங்க அண்ணா... ஒரு  இராட்டணத்துல சுத்தலாம் வாங்கனா பயமா இருக்கு தலை  சுத்தும் ங்கறாங்க.. அதான் ஓட்டிகிட்டிருந்தேன்.. “என்று மீண்டும் சிரித்தாள் ஜனனி...

“உன்ன மாதிரி தைரியம் யாருக்கும் வரும் வாலு??...இராட்டணம் தான... வா நாம போலாம்...” என்று சிரித்தான் ஆதி...

“ஐ.. ஜாலி... அப்ப இன்னைக்கு தேர் கடையவே காலி பண்ணிடலாம்... அண்ணா மறக்காம கேஷ்  நிறைய எடுத்துட்டு வாங்க... இங்க உங்க கிரெடிட் கார்ட் டெபிட்கார்ட் எல்லாம் செல்லாது.. “ என்று சிரித்தவாறு அவன் கையை பிடித்து இழுத்து கொண்டு துள்ளலுடன் சென்றாள் ஜனனி...

அவர்கள் வாயிலை அடையவும், தன் அறையில் இருந்து வேகமாக வெளியில் வந்தாள் நந்தினி...

“மாமா... நானும் உங்க கூட  வரலமா?? “ என்றாள் கொஞ்சும் குரலில்...

மெல்லிதான டிசைனர் புடவையில் இடையில் தாரளமாக இறக்கி கட்டி, வயிற்று பகுதியும் ட்ரான்ஸ்பரென்ட் ஆக தெரியுமாறு இருந்த புடவையை கண்டு முகம் சுளித்தாள் ஜனனி...

அதற்குள் அவள் குரல் கேட்டு நின்று திரும்பி பார்த்த ஆதி

“ஓ ஸ்யூர் நன்ஸ் டார்லிங்.. நீ இல்லாமலயா?? வா போகலாம்... “ என்று பவித்ராவை ஓர பார்வை பார்த்து கொண்டே சிரித்தான்....

அவனின் பார்வையை கண்டவள்

“என்ஜாய் பண்ணுங்க பாஸ்... “ என்று தன் கட்டை விரலை உயர்த்தி காட்டி கண் சிமிட்டி குறும்பாக சிரித்தாள் பவித்ரா....

அந்த நந்தினியிடம் நடந்து கொண்டதுக்கு இன்னேரம் பொறாமையில் வெந்து கொண்டிருப்பாள்.. தன்னிடம் சண்டை போடுவாள் என்று எதிர்பார்த்தவனுக்கு பவித்ரா அதை சட்டை பண்ணாமல் கூலாக சிரித்து கொண்டிருக்கவும் பெரிய பல்ப் வாங்கின மாதிரி ஆனது ஆதிக்கு...

“சே!!  இந்த குட்டச்சி என்ன பண்ணாலும் அசர  மாட்டேங்கறாளே... சரியான ராட்சசி தான் போல... “ என்று உள்ளுக்குள் சிரித்துகொண்டே வாயிலை நோக்கி நடந்தான்....

திருவிழா கொண்டாட்டத்தையும் நந்தினி ஆட்டத்தின் க்ளைமேக்ஸையும் பார்க்கலாம்.. தொடர்ந்து படியுங்கள்..

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!