உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-46

 


அத்தியாயம்-46

திக்கும் பவித்ராவிற்குமே அந்த நொடி இனம் புரியாத பரவசமக இருந்தது...

கோயிலுக்கு உள்ளே சென்றவன் விடாமல் அவள் கையை பற்றி இருந்தான்.. பவித்ராவுக்கும்  தன் கையை விலக்க பிடிக்க வில்லை...

அதற்குள் ஊர் பெரியவர்கள் அவர்கள் அருகில் வரவும் , பவித்ரா வேகமாக தன் கையை இழுத்துக் கொண்டாள்...

வந்தவர்கள் மரகதத்திடம் வணக்கம் சொல்லி அவர்களை வரவேற்க, பின் பவித்ராவையும் வரவேற்றனர்... அதில் ஒரு பெரியவர்

“என்ன பட்டணத்து மருமகளே... எங்க ஊர் பிடிச்சிருக்கா?? இனிமேல் நீதான் உன் மாமியார் இடத்துல இருந்து நல்லது கெட்டது எல்லாம் பார்க்கணும்... அந்த மகராசி இந்த ஊருக்காக எவ்வளவோ செஞ்சாங்க...

இன்னும் கொஞ்சம் நாள் இருந்து பார்க்க கொடுத்து வைக்கல... அவங்க விட்ட பணியை நீ தொடரணும்... செய்வியா?? “ என்றார் சிரித்தவாறு..

பவித்ராவும் சிறிதும் யோசிக்காமல்

“கண்டிப்பா ஐயா... எனக்கும் இந்த ஊரை ரொம்ப பிடிச்சிருக்கு.. என்னால முடிஞ்ச வரையிலும் உதவி செய்யறேன்.. “ என்று புன்னகைத்தாள்...

எங்க பட்டணத்து பொண்ணு இந்த கிராமத்திற்கு வரப்போகுது என்று எண்ணி இருந்தவர்களுக்கு அவளின் பதிலில் அனைவருக்கும் திருப்தியாக, பின் அவர்கள் மற்ற கதைகளை பேச ஆரம்பித்தனர்...

அவர்கள் உடனே உள்ளே வந்திருந்த சரோஜாவுக்கும் நந்தினிக்கும் தான் உள்ளே இன்னும் குமுறிக் கொண்டிருந்தது...ஆனாலும் வெளியில் காட்டி கொள்ளாமல் நல்ல ஒரு சந்தர்ப்பத்துக்காக காத்து கொண்டிருந்தனர்...   

அதே நேரம் ஜனனி பவித்ராவின் அருகில் வந்தவள்

“அண்ணி... இனிமேல் இங்க இருந்தீங்க னா பயங்கர போர் அடிக்கும்.. வாங்க நாம போய் மாவிளக்கு கொண்டு வருவதை பார்க்கலாம்.. வாங்க..”  என்று அவள் கையை பிடித்து இழுத்து சென்றாள்..

பவித்ராவும் மரகதத்திடம் சொல்லி விட்டு ஜனனியுடன் நடந்தாள்...

கோவிலில் இருந்து சிறிது தூரம் சென்றதும் அங்கு பறை அடிக்கும் ஓசை கேட்டது...

பவித்ராவும் ஆர்வத்துடன் அங்கு சென்றாள்..

இரண்டு பேர் பறை அடித்து கொண்டே ஒவ்வொரு வீட்டின் வாயிலிலும் சில விநாடிகள் நிக்க, அந்த வீட்டில் இருந்த பெண்கள் அவர்களுடைய மாவிளக்கு தட்டை தூக்கி தலையில் வைத்த வண்ணம் வெளியில் வந்து அங்கு ஏற்கனவே நின்றிருந்த மற்ற பெண்களின் கும்பலோடு இணைந்து கொண்டனர்..

இதே மாதிரி ஒவ்வொரு தெருவிலும் மற்ற இருவர் சென்று அழைத்து வர, இறுதியில் அந்த ஊரே திரண்டு இருந்தது... சிறுவர்கள், இளைஞர்கள் குத்து பாட்டுக்கு டான்ஸ்  ஆட , ஊர் பெரியவர்கள் சில பேர் முன்னால் நடக்க, அந்த ஊரே திரண்டு வந்ததை போல இருந்தது...

அப்பொழுது தான் உற்று கவனித்தாள் பவித்ரா.. ஜனனி சொன்ன மாதிரி ஒவ்வொரு பெண்களும் விதவிதமான ஆடைகளும் நகைகளும் அணிந்திருந்தனர்.. ஒவ்வொருத்தர் கையிலும் அழகான தட்டுக்கள் விதவிதமாக அலங்கரித்திருந்தனர்...

பவித்ராவுக்கு இதெல்லாம் பார்க்க பார்க்க அதிசயமாக இருந்தது...அந்த காட்சி எல்லாம் தன் அலைபேசியில் பதிந்து கொண்டாள்... தன் உற்சாகத்தை   ஜனனியிடம் சொல்ல, ஜனனியும் சிரித்து கொண்டே

“அண்ணி... அப்படியே இன்னொரு சர்ப்ரைஸ் சொல்றேன் கேளுங்க.. இன்னைக்கு தான் எங்க ஊர்ல எத்தனை காதல் ஜோடி இருக்காங்கனு கண்டுபிடிக்கலாம்.. “என்று மெல்ல முனகினாள்...

“என்ன ஜனி சொல்ற??  “என்றாள் பவித்ரா புரியாமல்...

ஆமா அண்ணி... அப்படியே மெல்ல அந்த பக்கம் பாருங்க.. எங்க ஊர் இளைஞர்கள் மட்டும் இல்லாமல் பக்கத்து ஊர் காளைகளும் வந்திருக்காங்க... இதுல யார் கண்ணெல்லாம் எங்க ஊர் பொண்ணுங்க மேல இருக்கோ அதுக்கு இவளுங்களும் ஒரு ரியாக்சன் கொடுக்கறாளுங்களோ அவங்க எல்லாம் எங்க ஊர்  காதல் ஜோடிகள்... நீங்க வேணா மெதுவா அந்த பக்கம் பாருங்க.. “ என்றாள் ஜனனி சிரித்து கொண்டே..

பவித்ராவும் தலையை குனிந்து கொண்டே ஓரக்கண்ணால் அந்த பக்கம் பார்க்க, ஜனனி  சொன்ன மாதிரியே அங்கு நின்றிருந்த இளைஞர்கள் தங்கள் மன்மத அன்புகளை அங்கு இருந்த பெண்கள் மீது செலுத்த அவர்களும் வெக்கபட்டு ஓரப்பார்வை பார்ப்பதும் தெரிந்தது... அதை  கண்டு பவித்ரா சிரித்து கொண்டாள்...

“என்ன அண்ணி.. நான் சொன்னது கரெக்டா?? “  என்று கண்ணடித்தாள் ஜன்னி...

“ஹே ஜனி... இதையெல்லாமா பார்ப்ப?? நீ ரொம்ப மோசம்.. “ என்று செல்லமாக கண்டித்தாள் பவித்ரா...

“அட போங்கஅண்ணி...அவங்க கண்ணால நடத்தற  நாடகத்தை பார்க்கிற சுகமே தனி   அண்ணி.. அதோட எவ எல்லாம் இன்னைக்கு மாட்டாறாளுங்களோ அவளுங்கள நாளைக்கு ஓட்டியே வெறுப்பேத்துவோம்...அதுக்கு தான் இப்ப எல்லாம் பார்த்து வச்சுக்கறது.. “   என்று சிரித்தாள் ஜனனி...

“ஹ்ம்ம்ம் செம இன்ட்ரெஸ்டிங் ஆ தான் இருக்கு.. “ என்று சிரித்தாள் பவித்ரா....

இதற்குள் மாவிளக்கு கோவிலை நெருங்க அதுவரை அமைதியாக வந்த பெண்கள் இடையில் திடீரென்று சலசலப்பு தோன்றியது...

“என்னாச்சு ஜனி?? ஏன் இப்படி எல்லாம் டென்சனா இருக்காங்க ??” என்றாள் பவித்ரா புரியாமல்...

“ஹா ஹா ஹா அதுவா அண்ணி.. கோவில் வந்திருச்சுல்ல.. இப்ப இதுல யார் போய் முதல்ல சாமி கிட்ட இருக்கிற இடத்தை பிடிக்கிறதுனு ஒரு போட்டி அவங்களுக்குள்ளே இருக்கும்.. எல்லாரும் முன்டி அடிச்சிகிட்டு ஓடுவாளுங்க பாருங்க...செமயா இருக்கும்..” என்று சிரித்தாள்...

“ஓ.. எதுக்கு அப்படி ஓடனும்?? எதுக்கு சாமி பக்கத்துல சீட் வேணும் “ என்றாள் பவித்ரா புரியாதவாறு

“ஹ்ம்ம்ம் யார் தட்டு சாமி கிட்ட இருக்கோ அவங்களுக்கு தான் அந்த ஆத்தா அருள் கிடைக்கும்னு இவங்களே நினைச்சுக்கிறது.. அதோட இதுல அவங்க கௌரவமும் அடங்கியிருக்கு அண்ணி.. யார் முன்னாடி இடம் பிடிக்கிறாங்களோ அவங்களே பெரிய ஆள் னு நினைப்பு...

“ஓ.. அப்ப நானும் போய் நம்ம தட்ட எடுத்துகிட்டு வரவா?? நானும் இந்த ஆட்டத்துல கலந்துக்கறனே?? “ என்றாள் கண்ணில் ஆர்வத்துடன்...

“ஹா ஹா ஹா..அண்ணி.. நீங்க இந்த போட்டியில சேர்ந்தீங்க உங்கள கீழ தள்ளி மிதிச்சிட்டு போய்ட்டே இருப்பாளுங்க...அந்த விச பரிட்சை  எல்லாம் உங்களுக்கு வேண்டாம்.. “ என்று சிரித்தாள் ஜனனி...

“ஹோய்... நான் ரன்னிங் ல எப்பவும் ஃபர்ஸ்ட் பிரைஸ் ஆக்கும்.. நானும் ஃபாஸ்ட் ஆ ஓடுவேன்.. “ என்று முறைத்தாள் பவித்ரா...

”ஹ்ம்ம்ம் உங்க வீரத்தை எல்லாம் அப்புறம் பார்க்கலாம்... இப்ப வாங்க நாம  உள்ள போகலாம்... அம்மா நமக்காக பார்த்துகிட்டு இருப்பாங்க.. “என்று பவித்ராவின் கையை பிடித்து இழுத்து கொண்டு உள்ளே சென்றாள் ஜனனி...

ஜனனி சொன்ன மாதிரியே கோவிலை சுற்றி வந்த பெண்கள் உள்ளே வரும்பொழுது ஒருவரை ஒருவர் தள்ளி கொண்டு முதல் இடத்தை பிடிக்க வேகமாக  உள்ளே வந்தனர்.. அதை ஜாடை காட்டி ஜனனி சிரித்தாள்...

அதற்குள் அந்த ஊர் தலைவர் ஆதியை முன்னால் அழைக்க, அவனும் தன் வேட்டியை இறக்கி விட்டு அவர் முன்னே சென்று நின்றான்... 

பூசாரி ஒரு தட்டில் இருந்த பரிவட்டத்தை கொண்டு வர, அந்த தலைவர் அதை  எடுத்து ஆதியின் தலையில் வைத்தார்... பின் ஒரு மாலையை எடுத்து அவன் கழுத்தில் போட்டார்...

பவித்ராவையும் அழைத்து அவன் அருகில் நிக்க சொல்லி அவள் கையால் அவள் கொண்டு வந்திருந்த தட்டை எடுத்து கொடுக்க சொல்ல அவளும் அதே மாதிரி செய்தாள்...

அந்த பூசாரியும் அவள் தட்டை வாங்கி கொண்டு அதில் இருந்த தேங்காயை எடுத்து உடைத்து பூஜையை ஆரம்பித்து வைத்தார்...

ஆதியும் பவித்ரா இருவரும் ஜோடியாக நிற்பதை கண்டு நல்ல ஜோடி பொருத்தம் என்று அனைவரும் அவர்களையே பார்த்து இருந்தனர்... 

கம்பீரமாக நிக்கும் அவன் அருகில் நிற்பதே அவளுக்கு பெருமையாக இருந்தது... மெல்ல நிமிர்ந்து அவனை ஓரக் கண்ணால் பார்க்க,   அவன் தலையில் வைத்திருந்த பரிவட்டத்தையும் அவன் தோற்றத்தையும் பார்க்கையில் அசல் ராஜகுமாரானாட்டம் இருந்தான்....

ஜனனி அவர்கள் இருவரையும் நெருங்கி நிற்க வைத்து தன் மொபைலில் பதிந்து கொண்டிருந்தாள்...

அதை  எல்லாம் கண்டு சரோஜாவிற்கு கொதித்தது... இந்த மரியாதை எல்லாம் போன வருடம் அவளுக்கும் அவள் கணவன் சரவணனுக்கும் கிடைத்தது...

“அப்ப எவ்வளவு பெருமையா திமிரா இருந்தேன் இந்த ஊரே எனக்கு மரியாதை செய்யுது னு...

இப்ப எல்லாம் போச்சே... நேற்று வந்தவ அவளுக்கு இவ்வளவு மதிப்பா?? இனிமேல் என்னை யார் மதிப்பா?? “என்று உள்ளுக்குள் குமுறினாள்...

நந்தினி அதைவிட கொதித்தாள்...  அவன் பக்கதில் நான் நிக்காமல் அந்த பவித்ரா இருக்காளே... இருக்கட்டும்... இந்த வருசம் மட்டும் தான இவ இருப்பா.. அடுத்த வருடத்தில் இருந்து அது என் இடம்... “ என்று கருவிக் கொண்டிருந்தாள்....

அங்கு இருந்த பூசாரி ஒவ்வொரு மாவிளககு தட்டிலும் இருந்த தேங்காயை உடைக்க, ஒவ்வொருவரும் அந்த தேங்காய் நல்ல விதமாக உடைய வேண்டும் என்று மனதுக்குள் பயந்து கொண்டே தேங்காய் உடைப்பவரை பார்த்தனர்.. நல்ல விதாமக உடைந்ததும் அவர்களுக்கு  மனதில் அப்படி ஒரு நிம்மதி...

ஜனனி அதை பற்றி விளக்க, பவித்ராவிற்கு ஆச்சரியம்.. ஒரு தேங்காயை வைத்து அவர்கள் அந்த வருசம் எப்படி இருக்கும் னு   பிரெடிக்ட்( predict)  பண்றாங்களே.. “என்று..

பின் மற்ற பார்மாலிட்டிஸ் ம் முடிய அடுத்து அம்மனுக்கு மணி அடித்து தீபாராதனை காட்ட, திடீரென்று வெளியில்   பட்டாசுகள் வெடித்தன...

கிராம திருவிழாவுக்கேயான வானம் மற்றும் கலர் கலரான பட்டாசுகள் வெடித்து சிதற, இதை  எதிர்பார்க்காத பவித்ரா அலறி அருகில் நின்றிருந்த ஆதியை இறுக்கி கட்டி கொண்டு அவன் மார்பில் தன் முகத்தை புதைத்துக் கொண்டாள்...

ஆதிக்கும் அவள் செயல் அதிர்ச்சியாக இருந்தாலும் அவளின் அந்த பயந்த முகமும் தன்னை இறுக்கி அணைத்திருந்த விதமும் கண்டு அவளையே ரசனையுடன்  பார்த்தான்...

அந்த பட்டாசுகள் தொடர்ந்து வெடிக்க, பவித்ரா இன்னும் தன் கண்ணை இறுக்கி மூடிகொண்டு அவன் உள்ளே இன்னும் புதைந்தாள்....

அவர்கள் அம்மனின் அருகில் முதலில் நின்றிருந்ததால், பூஜை நடக்கும் பொழுது எல்லாரும் அம்மனை பார்க்க, அங்கு பவித்ரா பயந்து போய் தன் கணவனை கட்டி கொண்டு நிற்பதை கண்டு அனைவரும் சிரித்தனர்...

ஒரு வழியாக பூஜை முடிய, அந்த வானங்களும் பட்டாசுகளும் நின்றன... அதன் பின்னரே தன் முகத்தை அவன் மார்பில் இருந்து வெளியில் எடுத்தாள்...

தலையை நிமிர்ந்தவள் சுற்றிலும் பார்க்க, அனைவரும் அவளை பார்த்து சிரிக்க அப்பொழுது தான் அவள் செய்த காரியம் உரைத்தது

“ஐயோ.. இப்படி எல்லார் முன்னாடியுமா இப்படி செஞ்சேன்?? மானம் போச்சு.. “ என்று வெக்க பட்டு அவசரமாக அவனிடம் இருந்து விலகி நின்று தலையை குனிந்து கொண்டாள்...

அதற்குள் அந்த பூசாரி சிரித்து கொண்டே தீபாரதனையை அவர்களிடம் நீட்ட பவித்ராவும் வெக்க பட்டு சிரித்து கொண்டே அதை வணங்கி அதில் இருந்த திருநீற்றை  எடுத்து நெற்றியில் வைத்து கொண்டாள்....

அந்த அம்மன் குங்குமத்தை எடுத்து தன் நெற்றியில் வகிட்டிலும் பின் தன் மாங்கல்யத்தை வெளியில் எடுத்து அதன் மீதும் வைத்து கொண்டாள்....

அதை  கண்ட ஆதி இன்னுமாய் அவள் பக்கம் சாய்ந்தான்... 

அந்த பூசாரி அடுத்தவர்களிடம் நகர, அருகில் நின்றிருந்த ஜனனி

“வாவ்... சூப்பர் அண்ணி... எங்க ஊர் மக்களுக்கெல்லம் டிபரண்ட் ஆ ஒரு ரொமான்ஸ் சீன் காட்டிட்டீங்க... எல்லாரும் சாமிய கும்பிட்டாங்களோ இல்லையோ உங்கள தான் வேடிக்கை பார்த்தாங்க... “என்று சிரித்தாள்...

“ஹே  ஜனி.. சும்மா இரு... திடீர்னு பட்டாசு வெடிக்கவும் நான் பாம் தான் வெடிக்குதோனு பயந்து போய் தான் அப்படி செஞ்சேன்...நீயாவது முன்னயே சொல்லி இருக்கலாம் இல்ல.. இந்த மாதிரி எல்லாம் செய்வாங்கனு...  “என்று சமாளித்தாள் பவித்ரா..

“ஹீ ஹீ ஹீ நம்பிட்டேன் அண்ணி...

ஆமா எனக்கு ஒரு சந்தேகம்... அப்படி பயந்த நீங்க உங்க பக்கத்துலயே நிக்கற என்னை கட்டி பிடிக்காம ஏன் அந்த பக்கம் இருக்கிற நிஷா அண்ணனை மட்டும் கரெக்டா  கட்டி பிடிச்சீங்க?” என்று கண்ணடித்தாள்..

அவளின் கண் சிமிட்டலுக்கும் கேலி பேச்சிற்கும் பவித்ராவின் முகம் மேலும் சிவந்தது...

“ஆனா ஒன்னு அண்ணி... நீங்க வேணா பயந்த மாதிரி இருந்தீங்க.. ஆன உங்க ஆளு இருக்காரே....

அப்பா...  என்ன ஒரு ரொமாண்டி க்  லுக் உங்கள பார்த்து... அந்த காலத்து நம்ம அரவிந்த் சாமி, மாதவன் எல்லாம் தோத்து போய்ட்டாங்க.. அப்படி ஒரு லுக்.. எங்க ஊர் பொண்ணுங்க பாதி பேர் ப்ளாட்  ஆகிட்டாங்க...இப்பகூட எல்லாரும் உங்களையே தான் பொறாமையா பார்க்கிறாளுங்க... 

பாத்து அண்ணி.... எல்லாரும் உங்க புருசனை கொத்தி கிட்டு போக ரெடியா இருக்காளுங்க.. பத்திராம முடிஞ்சு வச்சுக்கங்க.. “ என்று சிரித்தாள் ஜனனி...

பவித்ராவும் சிரித்துகொண்டே தன் கணவனை ஓரப்பார்வை  பார்க்க அவனோ மந்திரிச்சு விட்ட மாதிரி இன்னும் கிறங்கி நின்று கொண்டிருந்தான்... 

பின் பூஜை முடியவும்  அவர்கள் இருவரையும் ஒன்றாக நிக்க வைத்து அந்த மாவிளக்கு தட்டை கொடுக்க, பவித்ரா வும் ஆதியும் அவர் காலில் விழுந்து வணங்கி அதை  வாங்கி கொண்டனர்...

பின் அழைத்து  வந்த மாதிரியே ஒவ்வொரு தெருவாக சென்று அவர்களை விட்டு வர, ஆதியின் குடும்பமும்  அனைவரிடமும் விடை பெற்று வாயிலை நோக்கி நடந்தனர்....

ஏற்கனவே குமுறி கொண்டிருந்த   நந்தினிக்கு  அங்க நடந்ததை எல்லாம் பார்க்க இன்னும் எரிமலையானாள்.. அவளுக்கு எப்படியாவது பவித்ராவை பழி வாங்க வேண்டும் போல கொதித்தது..

முன்னால் நடந்த  நந்தினி ஓரமாக நின்று கொண்டிருக்க, பவித்ரா அருகில் வரவும் திடீரென்று தன் காலை  முன்னால் நீட்டினாள் அவளை விழ வைக்க வேண்டும் என்ற திட்டத்தில்..

எப்பவும் விழிப்புடன் இருக்கும் பவித்ரா நந்தினி நொடியில் காலை நீட்டியதை கண்டு கொண்டு உடனே அப்படியே நின்று கொண்டாள்...

தன் இன்ஸ்டன்ட் திட்டம் தோழ்வி அடைந்ததில் கொதித்த அந்த நந்தினி பவித்ராவை முறைத்தவாறு முன்னே சென்றாள்... இதை கண்டு கொண்ட ஜனனி,

“வாவ்... சூப்பர் அண்ணி... அந்த நந்தினிக்கு நல்லா பல்ப் கொடுத்தீங்க.. இப்ப ஒத்துக்கறேன் நீங்க ஒரு  ஜான்சி ராணி தானு.. “ என்று சிரித்தாள்..பவித்ராவும் அவளுடன் இணைந்து நகைத்தாள்..

பின் அனைவரும் கார் நிறுத்தியிருந்த பகுதியை அடைய, ஆதி தன் மனைவிக்காக முன் கதவை திறந்து வைத்திருக்க, நந்தினி வேகமாக சென்று  ஆதியின் காரின் முன்னால் அமர்ந்து கொள்ள, பவித்ராவும் சிரித்து கொண்டே சரவணன் காரில் சென்று ஏறிக் கொண்டாள்...

ஆதி பவித்ராவை பார்த்து முறைக்க, அவள் கண் சிமிட்டி, அவனை கண்டு கொள்ளாமல் சென்று விட்டாள்...

வீட்டை அடைந்ததும் ஆதி நேராக அவன் அறைக்கு சென்றுவிட, பவித்ரா வாணியின் மருமகள் என்று தெரிந்ததால் அவரால் உதவி பெற்ற சில  பேர் அவளை பார்ப்பதற்காக முன்னரே அங்கு வந்து காத்திருந்தனர்..

பவித்ராவும் அவர்களுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாள்.. அவர்கள் விடை பெற்று செல்லவும் தங்கள் அறையை நோக்கி மாடியில் ஏறிக் கொண்டிருந்தாள்...

ஏறும் பொழுதே கோவிலில் நிகழ்ந்தவை நினைவுவர, அதிலும் அவள் அத்தன பேர் முன்னாடியும் கட்டி கொண்டு நின்றது நினைவு வர, அவள் கன்னம் தானாக சிவக்க, துள்ளலுடன் மாடி ஏறினாள்...

அதே உற்சாகத்தில் அறை கதவை திறந்தவள் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்...

வள் உள்ளே கால் வைத்ததும் கதவை வேகமாக மூடி அவளை இறுக்கி அணைத்திருந்தான் அவள் கணவன்...

அந்த எதிர்பாராத இறுகிய அணைப்பில் திகைத்து நின்றாள் பவித்ரா...அவளை கோவிலில் கண்டதில் இருந்தே தன்  நிலை இழந்திருந்தவன், மேலும் அவள் அவனை இறுக்கி கட்டி பிடித்து மார்பில் சாயவும் முழுவதுமாக தன் வசம் இழந்திருந்தான்...

காரிலயே அவன் அருகில் அவள் அமருவாள் என்று எதிர்பார்த்தவனுக்கு அவன் சரவணன் காரில் வரவும் தன்னை கட்டுபடுத்திகொண்டு அவளை மனதுக்குள் திட்டியவாறு தன் அறைக்கு வந்தவன் அவளின் வருகைக்காக காத்து கொண்டிருந்தான்...

அந்த ஏக்கத்தை எல்லாம் தீர்த்து கொள்ள எண்ணி  அவளுக்காக காத்திருந்தவன் அவள் உள்ளே வந்ததும் அப்படியே அள்ளி அணைத்து கொண்டான்...

பவித்ராவும் தன் கணவனின் இறுகிய அணைப்பில் இளகி குழைய ஆரம்பித்தாள்... அவளின் அந்த இலகிய நிலையை கண்டு அவள் கணவன் மேலும் முன்னேற, சரியாக அந்த நேரம் பவித்ராவிற்கு அவள் கண்ட அந்த காட்சியும் அதை தொடர்ந்து நந்தினி தோட்டத்தில் பேசிய பேச்சும் நினைவு வர

அவள் சொன்ன புருசனை கைக்குள்ள போட்டுக்கணும்  என்றது நினைவு வர,

“பேசாமல் அவள் சொன்ன மாதிரி தன் வீராப்பை ஈகோ வை விட்டு கொடுத்திடலாமா?? “என்று யோசித்தாள்....

மறுநிமிடம்

“அப்ப நான் அவனிடம் தோத்தவளா ஆகிடுமே…அதோடு அந்த நந்தினிக்கு எனக்கும் என்ன வித்தியாசம்?? தாலி கட்டினாலும் இன்னும் அவன் மனதால் என்னை மனைவியாக ஏற்றுக் கொள்ளாதவனிடம் அந்த உரிமையை தர முடியாது...

நீ என் கணவனே ஆனாலும் மனதால் என்னை மனைவியாக ஏற்றுக் கொள்ளாதவரை உன்னை விட மாட்டேன் என்னை நெருங்க... “ என்று உறுதி கொண்டு அவன் அணைப்பில் இலக ஆரம்பித்தவள் மீண்டும் இறுக ஆரம்பித்தாள்...

அவன் பிடியிலிருந்து விலக முயல,  அவனோ இன்னும் அவளை இறுக்கி அணைத்தான்...  அதே  நேரம் அவர்களின் அறைக்கதவு தட்டபட்டது... முதலில் அதை கண்டு கொள்ளாதவன் மீண்டும் கதவு வேகமாக தட்டப்பட,

“சே.. யார் இந்த நேரத்துல??...கொஞ்சம் கூட டீசன்சி இல்லாமல்..”  என்ற எரிச்சலுடன் தன் பிடியை தளர்த்தினான்... பவித்ராவும் இதுதான் சான்ஸ் என்று அவனை விட்டு விலகி தள்ளி நின்று கொண்டாள்...

அறைக் கதவு மீண்டும் வேகமாக தட்டப்பட, மீண்டும் அதே எரிச்சலுடன் சென்று கதவை திறந்தான் ஆதி...

“சாரி... மாமா.. டிஸ்டர்ப் பண்ணிட்டனா?? “ என்றவாறு வேகமாக உள்ளே வந்தாள் நந்தினி..வந்தவள் அவசரமாக அந்த அறையை நோட்டமிட அங்கு பவித்ரா கசங்கிய புடவையுடன் நின்று கொண்டிருப்பதை கண்டு நிம்மதி மூச்சு விட்டாள்

“அப்பாடா... நல்ல நேரத்துல தான் வந்திருக்கிறேன்... நான் நினைச்சது சரியாதான் இருக்கு...இவன் கோவிலில் அந்த பவித்ராவை லுக் விட்டதிலயே அவன் எண்ணம் நந்தினிக்கு புரிந்து போக, அவர்களுக்குள் எதுவும் நடக்கும் முன்னே  தடுக்க எண்ணி அவசரமாக அவர்கள் அறைக்குள் வந்தாள்...

பவித்ரா இன்னும் கட்டிய புடவையுடன் நின்று கொண்டிருப்பதை கண்டு திருப்தியுற்று ஆதியிடம் திரும்ப, அவனோ அவளை எரித்து விடும் பார்வை பார்த்து கொண்டிருந்தான்....

அவனின் பார்வையை கண்டு திடுக்கிட்டவள்

“சாரி மாமா... ரொம்ப தலவலி.. அதான் உங்க கிட்ட எதுவும் தைலம் இருக்குமானு கேட்க வந்தேன்... “ என்றாள் கொஞ்சலாக... அவன் பவித்ரா முன்னால் தன்னை எதுவும் திட்டி விடக் கூடாதே என்று உள்ளுக்குள் பயந்தவாறு...

அவள் கொஞ்ச ஆரம்பித்ததும் பவித்ரா ஒரு சுடிதாரை எடுத்து கொண்டு குளியல் அறைக்குள் சென்று விட்டாள் புடவையை மாற்ற....

அவள் சென்றதும் அந்த நந்தினியை பார்த்து பல்லை கடித்தான் ஆதி....

“லுக் நந்தினி.. நான் உன்னிடம்  பழகுவது சும்மா என் மனைவியை வெறுப்பேத்த தான்... அதை சாக்கா வைத்துக் கொண்டு என் பெட்ரூமுக்குள் வரும் வேலை எல்லாம் வச்சுக்காத...எதுனாலும் வெளில நின்னு பேசு... 

இன்னொரு தரம் இந்த  மாதிரி  உள்ள வந்த தொலச்சுடுவேன்.. “ என்று உறுமி அவள் கேட்ட தைலத்தை தேடி எடுத்து தூக்கி எறிந்தான்....

அதை எடுத்து கொண்டவள் மீண்டும் ஒரு முறை அவனிடம் சாரி சொல்லி தன் அறைக்குள் சென்றவள் மனம் எரிமலையாக குமுறியது...

“சே.. என்ன வார்த்தை சொல்லிட்டான் என்னை பார்த்து... டேய்.. நிஷாந்த்... உன்னை என் காலடியில் விழ வைக்கிறேன்.. உன் பெட்ரூமுக்குள் என்னை வரவேண்டாம்னு சொன்ன உன்னை காலம் முழுவதும் நான் மட்டுமே உன் பெட்ரூம்க்குள் இருக்கிற மாதிரி மாத்தி காமிக்கறேன்...அதுவரை உன்னை விட மாட்டேன்.. “என்று சூளுரைத்தாள் நந்தினி

குளியலறைக்குள் சென்று சுடிதாரை மாற்றி கொண்டு வெளியில் வந்தவள் அந்த நந்தினியை தேட அவள் இல்லாததை கண்டு நிம்மதி மூச்சுடன் தன் கணவனை காண, அவனோ கட்டிலில் படுத்துக் கொண்டு ஒரு தலையணையை எடுத்து தன் முதுகுக்கு வைத்து கொண்டு குளியல் அறையில் இருந்து வெளியில் வந்தவளையே ஒரு  மார்க்கமாக பார்த்து கொண்டிருந்தான்... 

அவன் பார்வையில் இருந்த மாற்றத்தைக் கண்டு கொண்டவள் வயிற்றில் பட்டாம் பூச்சிகள் பறக்க, தன்  கன்ன சிவப்பை கஷ்டபட்டு மறைத்துக் கொண்டு குனிந்தவாறே கட்டிலின் அருகில் வந்தாள்...

வரும் பொழுதே ஓரளவுக்கு தன்னை சமாளித்துக் கொண்டவள் அருகில் வந்து கட்டிலில் இருந்த பெட்சீட் மற்றும் தலையணையை எடுக்க, அவளையே இமைக்க மறந்து ரசித்து கொண்டிருந்தவன் எட்டி அவள் கையை பற்றியவன்

“ஹே.. இப்ப எதுக்கு பேபி அதை  உருவற?? நேற்று மாதிரியே இங்கயே தூங்கு.. “ என்றான் குறும்பாக சிரித்தவாறு...

“ம்ஹூம்... நீங்க இன்னைக்கு சரியில்லை பாஸ்... உங்கள நம்பி நான் விச பரிட்சைக்கு தயாராக இல்ல... நீங்க கொஞ்சம் தள்ளியே இருங்க... “ என்று தன் கைகளை அவன் பிடியிலிருந்து விடுவித்து கொள்ள முயன்றாள்...

அவளின் எண்ணம் புரிந்தவன் அவள் கையை விடாமல் கொஞ்சம் வேகமாக இழுக்க, இதை  எதிர்பார்க்காதவள் தடுமாறி காலை நீட்டி அமர்ந்து இருந்தவன் மார்பின் மேல் விழுந்தாள்... 

தன் மேல் பூச்சென்டாக வந்து  விழுந்தவளை  அவனும் பின்னால் இருந்து இறுக்கி கட்டிகொண்டு அவள் கழுத்தின் வளைவில் மெல்ல இதழ்  பதித்தான்...

அவள் தலையில் சூடியிருந்த அடுக்கு மல்லி அப்பொழுதுதான் நன்றாக மலர்ந்து மணம் வீச, அதன் வாசத்தில் இன்னும் கிறங்கியவன் தன் பிடியை இன்னும் இறுக்கினான்...

முதலில் அவன் அணைப்பில் மயங்கியவள் பின் சுதாரித்துக் கொண்டு

“வேண்டாம் பாஸ்... என்னை தொட மாட்டேனு பிராமிஸ் பண்ணி இருக்கீங்க...” என்று முனகினாள்....

“ஹ்ம்ம்ம் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் அந்த  பிராமிஸ் க்கு லீவ் விட்டறலாம் பேபி... உன்னை அந்த புடவையில் பார்த்ததும் I was totally lost…செமயா இருக்க டீ.. அதுவும் இந்த பூ  இருக்கே.. சான்சே இல்ல அப்படியே ஆழ கவுக்குது.. “ என்று குனிந்து அவள் தலையில் இருந்த பூவின் வாசத்தை முகர்ந்து ஆழ்ந்த மூச்சை வீட்டான்..

அவனின் சூடான மூச்சு காற்று பட்டு பவித்ராவுக்கு குறுகுறுக்க செய்தது.. அவளுமே அவன் அணைப்பில் மயங்கி அவன் மார்பில் வாகாக சாய்ந்து கொண்டாள்...

அதோடு அவன் தன் பேச்சை  நிறுத்தியிருக்கலாம்... ஆனால் தொடர்ந்து

“சே.. இந்த நந்தினி மதியம் ஏதோ ஒரு  டிரிங்க் ஐ குடிக்க கொடுத்தாள்... அதை குடித்ததில் இருந்தே I’m out of my control…அதுவும் உன்னை கோவில்ல அந்த கெட்டப்பில் பார்த்ததுமே நான் ப்ளாட் ஆகிட்டேன்... அப்பயே உன்னை அப்படியே தூக்கிகிட்டு வந்திருப்பேன்.... “ என்று கிறக்கத்தில் ஏதோ உளறிக் கொண்டிருந்தான்...

ஆனால் பவித்ரா அந்த நந்தினியின் பெயரை கேட்டதுமே விழித்துக் கொண்டாள்...

“சோ... நான் போட்ட கணக்கு படி அந்த நந்தினி தான் ஏதோ கேம் ஆடியிருக்கா... சீக்கிரம் முழு விடையையும் கண்டு பிடிக்கிறேன்...“ என்று எண்ணியவளுக்கு  இதுவரை மறந்திருந்த அவர்களின் கண்ணாம் மூச்சி ஆட்டம் நினைவு வர, மார்பில் சாய்ந்திருந்தவள் தன் தலையை நிமிர்த்தி அவனை பார்த்து

“அப்பனா... நீங்க என்னை உங்க பொண்டாட்டி யா ஏத்துக்கிட்டீங்களா பாஸ்..??  “ என்றாள்

“ஹே .. நீ எப்பவும் என் பொண்டாட்டி தான் டி.. “ என்று சொல்ல வந்தவன் பவித்ராவின் அடுத்து வந்த

“அப்ப உங்க தோழ்வியை ஒத்துக்கறீங்களா??  நீங்க  தோத்து போய்ட்டீங்க... இந்த பவித்ரா தான் ஜெயிச்சானு declare பண்ணிடலாமா?? “ என்றாள்  கண் சிமிட்டி  குறும்பாக  சிரித்தவாறு...

அதுவரை அவளின் மயக்கதிதில் இருந்தவன் நீங்க  தோத்து போய்ட்டீங்க...  என்று சொன்னதும் அப்பொழுது தான் அவர்களின் ஆட்டம் நினைவு வர, சிலிர்த்து எழுந்தான் உள்ளுக்குள்...

“நோ வே.. இந்த ஆதித்யா எப்பவும் தோற்க மாட்டான்... எப்பவும் ஜெயிக்க மட்டுமே பிறந்தவன்.. “என்று தன் பழைய பல்லவியை பாட, அதற்குள் பவித்ரா கடுப்பானாள்...

“ஹ்ம்ம்ம் அப்படீனா இதுக்கு என்ன அர்த்தம் ?? “ என்று அவன் அவளை கட்டி பிடித்திருந்ததை சுட்டி காட்டி முறைக்க, அவன் பதில் சொல்லு முன்னே  அவர்கள் அறைக்கதவு மீண்டும் தட்டும் ஓசை கேட்டது....

அந்த சத்தத்தை கேட்டதும் “சே... இப்ப யார்?? “ என்று எரிச்சலுடன் முனகியவாறு  அவன் பிடி சிறிது தளற, உடனே பவித்ரா வேகமாக அவன் கையை விலக்கி விட்டு துள்ளி குதித்து கட்டிலில் இருந்து எழுந்து நின்றாள்....

அதே வேகத்தில் சென்று அறைக்கதவை திறக்க, அங்கு ஜனனி நின்று கொண்டிருந்தாள்...

“சாரி அண்ணி... என்ன பூஜை வேலை கரடியா வந்திட்டனா?? “ என்று சிரித்தாள்...

ஆதி அவளை பார்த்து முறைக்க, அவன் பார்வையை கண்டு கொண்டவள்

“ஆஹா... அண்ணா முறைக்கிறதில் இருந்தே பூஜை வேலை கரடி தான் போல இருக்கு...

சாரி னா... அண்ணி இன்னைக்கு நைட் தெருக் கூத்து பார்க்க போகலாம்னு சொன்னாங்க... அவங்களுக்காகத்தான் இவ்வளவு நேரம் கீழ வெய்ட் பண்ணி கிட்டிருந்தென்… அவங்கள காணோம்.. அப்புறம் ஏன் கூட்டிட்டு போகலைனு திட்டுவாங்கனு தான் வந்தேன்... “ என்றாள் தயங்கியவாறு....

அதில் கடுப்பானவன்

“என்னது தெரு கூத்தா???   அதெல்லாம் அவ வரமாட்டா.. நீ போ.. “என்று சொல்லி கொண்டிருக்கையிலயே

“நீ இரு ஜனி.. நான் வர்ரேன்.. நான் இந்த மாதிரி தெருக் கூத்தெல்லாம் பார்த்ததில்ல... அதனால தான் உன்கிட்ட சொல்லி இருந்தேன்... எனக்கு அது மறந்தே போச்சு.. “ 

என்று சொல்லியவாறு உள்ளே வந்து தன் சுடிதாரின் சாலை எடுக்க, ஜனனி இன்னும் வெளியில் நின்று கொண்டிருந்ததால், ஆதி அவளை  முறைத்தவாறு அவள் கையை எட்டி பிடிக்க, அவன் கைக்கு கிடைக்காமல் நழுவியவள் தன்  நாக்கை துருத்தி ஒழுங்கு காட்டி தன் கட்டை விரலை கீழாக பிடித்து (thumbs down) ஆட்டியவாறு

“பை பாஸ்.. குட் நைட்.... ஸ்வீட் ட்ரீம்ஸ்... “ என்று குறும்பாக கண்ணடித்து வெளியில் ஓடி விட்டாள்...

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத தவிப்பில் இருந்த ஆதி

“சே...இந்த குட்டச்சி ஆட்டம் தாங்க முடியலை... பூனக்குட்டி மாதிரி இருந்து கிட்டு என்னமா பிடிவாதமா இருக்கா??

ராட்சசி... இவளுக்காக கிட்ட தட்ட ஒரு வருடமா  என் பிரம்மச்சர்யத்தை கஷ்ட பட்டு காப்பாத்தி வந்தா ஓவரா துள்ளறாளே...

சீக்கிரம் இவளுக்கு ஒரு முடிவு கட்டறேன்.... உன்னை விட மாட்டேன் பேபி... இந்த ஆதி  யார் னு சீக்கிரம் உனக்கு காட்டறேன்... “ என்று உள்ளுக்குள் பொருமினான் ஆதி.... 




Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!