உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-48
அத்தியாயம்-48
மாலை 5 மணிக்கு அசந்து உறந்கி கொண்டிருந்த
பவித்ராவை எழுப்பினாள் ஜனனி....
“டயர்டா
இருக்குனு இப்பதான் டி படுத்தேன்.. அதுக்குள்ள எதுக்கு எழுப்ப ற? என்று திட்டி கொண்டே எழுந்து
அமர்ந்தாள் பவித்ரா...
அட போங்க
அண்ணி.. தூக்கம் தான... உங்க ஊர்ல போய்
நல்லா தூங்கிக்கங்க.. நீங்க இப்ப வாங்க உங்களுக்கு இன்னொரு இன்டெரெஸ்டிங் ஆன விசயம் காமிக்கறேன்... “ என்று சஸ்பென்ஸ்
வைத்தாள் ஜனனி..
அவள் சொன்னதை கேட்டதும்
பவித்ராவும் ஆர்வமாகி நொடியில் கிளம்பி ஜனனியுடன் நடந்தாள்...
அவர்கள் அந்த
கிராமத்துக்குள் வந்திருக்க,
அப்பொழுது தான் மஞ்சள் நீர் விளையாட்டு ஆரம்பமாகியிருந்தது...
ஆங்காங்கே வயது
பெண்கள் சொம்பில் மஞ்சள் நீரை எடுத்து கொண்டு அவர்கள் மாமன் முறையில் இருப்பவர்களை
விரட்டி கொண்டிருந்தனர்...
சிறுவர்
சிறுமியர்களும் இதில் களம் இறங்க,
ஒருவருக்கொருவர் நீரை ஊற்றி விளையாண்டு கொண்டிருந்தனர்....அதை கண்டதும் பவித்ரா அதை பற்றி கேட்க, ஜனனி அந்த விளையாட்டை பற்றி விளக்கினாள்...
“ஓ.. ஹோலி
பண்டிகை மாதிரி இங்கயும் இப்படி எல்லம் ஆடறாங்களா?? சூப்பரா இருக்கு பார்க்க.. ஆமாம் ஜனி.. நீ
இதுல கலந்துக்கலயா?? “ என்றாள் பவித்ரா...
“”ஹீ ஹீ ஹீ...
நான் ஊருக்குள்ள வர்ரேனு தெரிஞ்சே என் மாமனுங்க எல்லாம் ஓடி போய் ஒளிஞ்சு கிட்டு
இருப்பானுங்க.. அதோட இந்த ஊர்ல எங்க சொந்தம் அவ்வளவா இல்லை அண்ணி..
இது உங்க
மாமியார் ஊர்.. எங்க அம்மா அப்பா ஊர் பக்கத்து கிராமம்.. அங்கதான் நிறைய
சொந்தகாரங்க இருக்காங்க.. அவங்க ஊருக்கு
திருவிழாவுக்கு போறப்போ எல்லாம் நான் புகுந்து ஆடுவேனாக்கும்.. என்கிட்ட
இருந்து யாரும் தப்பிக்க முடியாது..எல்லார் சட்டையையும் நனைச்சு விட்டிடுவேன் “
என்று சிரித்தாள்....
அப்பொழுது ஒரு
பெண் நீருடன் சுற்றிலும் யாரையோ தேடி கொண்டே வர, அவளை கண்ட ஜனனி
“ஹேய்.. கலை..
என்ன உன் மாமனையா தேடறா?? உனக்கு பயந்து கிட்டு அந்த வீட்டுக்கு பின்னாடி ஒளிஞ்சிருக்கான்...
விட்டறாத.. “ என்று அங்கு ஒரு வீட்டின் பின்னால் ஒளிந்து
கொண்டிருந்தவனை காட்டி கொடுக்க, அந்த பெண்ணின் முகம்
மலர்ந்தது...
தேங்க்ஸ் டி..
ஜனனி.. இவன் காலையில் இருந்தே என்கிட்ட மாட்டாம எஸ் ஆகிட்டே வந்தான்.. கடைசியில
புடிச்சுட்டேன்... மாமா.. நீ மாட்டுன.. “என்று வேகமாக சென்று அங்கு
ஒளிந்திருந்தவன் மேல் மஞ்சள் நீரை ஊற்ற
“ஹோய்....
எட்டப்பி ஜனனி... உனக்கு இருக்கு டி.. என்கிட்ட தனியா மாட்டுவ இல்ல.. உன்னை
பார்த்துக்கறேன்.. “என்று அவன் கை நீட்டி ஜனனியை
மிரட்ட.
“போடா டேய்..
உன்ன மாதிரி எத்தனை பேர பார்த்திரூப்பேன்... “ என்று தன் இல்லாத காலரை
தூக்கிவிட்டு கொண்டு ஸ்டைலாக நடந்தாள் ஜனனி...
அதைக் கண்டு
வாயை பிளந்தாள் பவித்ரா....
“சான்ஷே இல்ல
ஜனி.. பின்ற... “ என்று பவித்ரா அவளை ஓட்ட, பின் இருவரும் சிரித்து கொண்டே அந்த கிராமத்தை சுற்றி
பார்த்துவிட்டு அங்கங்கே நின்று அந்த விளையாட்டை ரசித்து விட்டு வீடு
திரும்பினர்...
வீட்டிற்குள்
வருகையிலயே சரவணனும் ஆதியும் தோப்புக்குள் சேரை போட்டு கதை அடித்து கொண்டிருக்க, பவித்ராவுக்கு டக்குனு ஒரு
ஐடியா வந்தது.. அவளுக்கும் இந்த விளையாட்டை விளையாடணும் என ஆசை வர, ஜனனியையும் துணைக்கு அழைத்தாள்...
“ஐயோ அண்ணி..
அவனுங்க இரண்டு பேரும் எனக்கு அண்ணனுங்க.. மாமா கூடதான் இத விளையாடணும்..
உங்களுக்கு அவங்க இரண்டு பேருமே மாமா முறைதான்..
அதனால நீங்க
புகுந்து கலாக்குங்க...நான் உங்களுக்கு கலக்கி தர்ரேன்.. “என்று சிரித்து கொண்டே
பவித்ராவை சமையல் அறைக்கு அழைத்து சென்று ஒரு பக்கெட்டில் நீரை பிடித்து அதில்
மஞ்சள் தூளை போட்டு இன்னும் சில பொருட்களையும் மிக்ஸ் பண்ணி ஒரு வெண்கல சொம்பை
எடுத்து கொடுத்தாள் ஜனனி...
“All the best அண்ணி... சரவணன் அண்ணா அவன் மேல
யாராவது தண்ணிய ஊத்திடுவாங்கனு பயந்து கிட்டே வெளில போகாம வீட்டுகுள்ளயே இருக்கான்... நீங்க
விட்றாதிங்க... நல்லா ஊத்துங்க.. “என்று தன் கட்டை விரலை உயர்த்தி காட்ட, பவித்ராவும் அவளுக்கு சியர்ஸ் சொல்லி
அந்த வாளியை தூக்கி கொண்டு அவர்கள் அமர்ந்து இருந்த பகுதிக்கு மறைந்தவாறே
சென்றாள்...
அதுவரை தன் தம்பியுடன் ஏதோ சீரியசாக பேசிகொண்டிருந்த
சரவணன் பவித்ரா கையில் வாளியுடன் மறைந்த படியே வருவரதை கண்டு கொண்டு
“ஆஹா... உன்
பொண்டாட்டி எதோ வில்லங்கமா பண்ண வர்றாடா தம்பி .. எஸ்கேப்.. “என்று சொல்லியவாறே
வேகமாக எழுந்து ஓட முயல,
அதற்குள் பவித்ரா தண்ணீரை எடுத்து தொலைவில் இருந்தே சரவணன் மேல் வீச, அது குறி தவறாமல் அவன் இதுவரை தப்பித்து காத்து வந்த வெள்ளை வெளேர் என்ற
சட்டையை நனைத்து முழுவதும் மஞ்சள் ஆக்கியது....
என்ன நடக்கிறது
என்று புரியாமல் ஆதியும் எழுந்து
முழித்து கொண்டு அங்கயே நிக்க, பவித்ரா அடுத்த சொம்பு நீரை எடுத்து
“ஆதி மாமா...
இது உங்களுக்கு... “ என்று சிரித்துக் கொண்டே அவன் மேல் வீச, அவன் எவ்வளவு குனிந்து தப்பிக்க
முயன்றும் அது தவறாமல் அவன் சட்டையையும் நனைத்தது....
“ஹேய்... இருடி
வர்ரேன்... “ என்று ஆதி அவளை துரத்த,
“அதான... விடாத
நிஷாந்த்... அவளை பிடி..என் வெள்ளை சட்டையை இப்படி மஞ்சள் சட்டையா மாத்திட்டாளே... அவளுக்கும் ஊத்தலாம்... “ என்று சரவணனும்
துரத்த, பவித்ராவோ அவர்கள் கைக்கு
கிடைக்காமல் இலாவகமாக ஓடி கொண்டே அவர்கள் மீது நீரை அடித்து கொண்டிருந்தாள்....
ஜனனியும்
சிரித்து கொண்டே அவளுக்கு சப்போர்ட் பண்ணி கொண்டே அவர்கள்ஆட்டத்தை தன் அலைபேசியில் பதிவு செய்து கொண்டிருந்தாள்....
சிறிது நேரம்
முவரும் துரத்தி விளையாட,
கடைசியில் ஆதி அவளை பிடித்து மீதி இருந்த தண்ணீர் முழுவதையும் அவள் மேல் கொட்ட, மூவருமே சிரித்து மகிழ்ந்தனர்...
அவர்களின்
ஆட்டத்தை தன் அறையில் இருந்த சன்னல் வழியாக கண்ட நந்தினிக்கு உள்ளம்
கொதித்தது...தன் அக்காவை அழைத்து அவர்கள் மூவரும் விளையாடி கொண்டிருப்பதை காட்டி
“பாருக்கா...
கொஞ்சம் கூட நாகரிகமா நடந்துக்கறாளா?? கல்யாணம் ஆனவர்
என்று தெரிந்தும் சரவணன் மாமாகிட்ட எப்படி கொஞ்சறா?? இந்த
மாமாவும் அவ கிட்ட பல்ல இழிச்சுகிட் டு அவள துரத்திகிட்டு இருக்கார்...
என்னைக்காவது
என்கிட்ட இப்படி சிரிச்சு பேசியிருக்கார?? எல்லாம் அவ மயக்கி வச்சிருக்கா... “ என்று இன்னும் நிறைய
பில்டப் பண்ணி சொல்லி சரோஜா மனதில் தீயை மூட்டினாள்....
ஏனொ சரோஜாவுக்கும் முதலில் பவித்ராவை பிடித்து
இருந்தாலும் அவதான் இந்த பண்ணைக்கு சொந்தக்காரி என்று தெரிந்ததும் அதோடு தனக்கு கிடைக்க வேண்டிய
மரியாதை எல்லாம் அவளுக்கு போகவும் சரோஜாவுக்குள்ளும் பவித்ராவின் மேல் வெறுப்பு
திரும்பியது...இப்பொழுது அவளின் மகிழ்ச்சியை காண, இன்னும் கொதித்தாள்
அவள் கோபம்
முகத்தில் தெரிய,
அதை கண்டு நந்தினி துள்ளி குதித்தாள்...
அன்று இரவு பவித்ரா பாலை எடுத்துகொண்டு தங்கள் அறைக்கு வர, ஆதி கட்டிலில் தலையணையை பின்னால் வைத்து
சாய்ந்து கொண்டு காலை நீட்டி அமர்ந்து, தன் ஐபேடை நோண்டி
கொண்டிருந்தான்...
அவன் அருகில்
வந்தவள்
“என்ன பாஸ்?? ஆபிஸ் வேலையா?? “ என்று கேட்டுக் கொண்டே பாலை நீட்ட, அவளை பார்த்து
புன்னகைத்து எதுவும் பேசாமல் அவள் நீட்டிய பாலை வாங்கி பருகியவன் மீண்டும் அவளிடம்
டம்ளரை நீட்ட,
“இவனுக்கு நான்
என்ன வேலக்காரியா?? நான் கேட்டதுக்கு வாய திறக்கறானா பார்?? பெரிய
மஹாராஜா.. “ என்று முனகிக் கொண்டே அந்த
டம்ளரை வாங்கி அருகில் இருந்த டேபிலில் வைத்துவிட்டு, அவளும்
கட்டிலில் ஏறி அவனை மாதிரியே தலையணையை எடுத்து பின்னால் வைத்து அவன் அருகில்
அமர்ந்து கொண்டு தன் அலைபேசியை நோண்ட ஆரம்பித்தாள்....
சிறிது
நேரத்தில் அது போரடிக்க, ஓரக்கண்ணால் அவனை காண, அவன் தன் ஐபேடை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்...
அதற்கு மேல்
தாங்க முடியாமல் தன் ஈகோவை விட்டு,
“பாஸ்.. அப்படி
எதை பார்த்து அப்படி சிரிச்சுஇட்டு
இருக்கீங்க??...
என்கிட்ட சொன்னா நானும் சிரிப்பேன் இல்ல... “ என்றாள் ஆர்வமாக...
“ஹ்ம்ம்ம்ம்
இந்தா நீயே பார்.. “ என்று தன் ஐபேடை
அவளிடம் நீட்டினான் இன்னும் அதே சிரிப்புடன்...
அதை வாங்கியவள் அதில்
பார்வையிட, அவன் ட்விட்டர் பக்கத்தில் #DayAtVillageFestival என்ற தலைப்பில் நேற்று இரவு எடுத்திருந்த சில புகைப்படங்களை பதிவு
செய்திருந்தான்...
பவித்ரா
மாவிளக்கு தட்டை வைத்து கொண்டு ஒரு காலை முன்னே
நீட்டி காரில் இருந்து இறங்கும் பொழுது எடுத்த புகைபடம் முதலில் இருந்தது..
அவள் வெளியில்
நீட்டியிருந்த ஒற்றைக் காலில் புடவை
கொஞ்சமாக மேலே ஏறியிருக்க,
அவளின் வெள்ளை நிற வழுவழுவென்றிருந்த காலில் அணிந்திருந்த கொலுசும் அவள் கால்
விரலில் சிறிய முத்துடன் அணிந்திருந்த
மெட்டியும், பட்டு புடவையும் வைர அட்டிகையும் பளபளக்க, ஒரு கையில் தட்டை பிடித்து கொண்டு புன்னகையுடன் அவள் கீழ இறங்க
எத்தனிக்கும் அந்த காட்சி அவ்வளவு அழகாக இருந்தது அதில் பார்க்க....
“திருடா...
இதை எப்ப எடுத்தான்?? “ என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டே மற்ற
புகைபடங்களை பார்வையிட்டாள்...
கோவிலில்
இருவரும் அருகில் நெருங்கி நின்றிருக்க, ஆதி பரிவட்டம் கட்டி
ராஜகுமாரனாக நின்றிருந்த தோரணையும், அவன் அணிந்திருந்த பட்டுவேட்டி சட்டைக்கும்
அவளின் பட்டுபுடவயும் அவள் அணிந்திருந்த ஆபரணங்களும் அவ்வளவு பொருத்தமாக இருக்க, அந்த புகைபடங்கள் மனதை அள்ளியது...
அவள் அந்த
புகைபடங்களை ரசித்து பார்த்து கொண்டிருக்க, அவளின் அந்த ரசித்த பார்வையை கண்டு ரசித்தவன்
“என்னோட காஸ்ட்யூம்
சூப்பரா இருக்கு... அவங்களுக்கும் இதே மாதிரி ஒரு செட் வேணும்னு என் பாரின்
பிரெண்ட்ஸ் அன்ட் கிளைன்ட்ஸ் நிறைய பேர் கேட்டிருந்தாங்க பேபி... அவங்களுக்கு இந்த
ட்ரெஸ் போட்டா எப்படி இருக்கும்னு கற்பனை
பண்ணி சிரிச்சு கிட்டிருந்தேன் பேபி.. “ என்று விளக்கம் கொடுத்தான்...
அவளும் சிரித்து
கொண்டே அதில் வந்திருந்த கமென்ட்ஸ்களை படிக்க, நிறைய பேர் இருவரையும் பாராட்டி “made for each other”
என்று வாழ்த்தி
இருந்தார்கள்...
“ஹ்ம்ம்ம்
இதெல்லாம் இவன் காமால கண்ணுக்கு தெரியாதே?? இவன் காஸ்ட்யூம் நல்லாயிருக்குனு எந்த மடையனோ புகழ்ந்தானு
இளிச்சுகிட்டு இருக்கான்..” என்று
உள்ளுக்குள் திட்டி கொண்டே மற்ற கமென்ட்ஸ்களையும் படிக்க,
அதில் நிறைய பெண்கள் அவள் காஸ்ட்யூமை பற்றியும் கேட்டிருந்தார்கள்..
நிறைய பேர்
அவள் புடவை மற்றும் அதே செட் நகைகள்
வேண்டும்.. எப்படி ஆர்டர் பண்ணுவது என்று கேட்டிருந்தார்கள்..
அதை கண்டபவித்ரா
“பாஸ்.. உங்க காஸ்ட்யூம்
மட்டுமில்ல.. என்னோடதும் தான் நிறைய பேர் நல்லாயிருக்குனு பாராட்டியிருக்காங்க...
“என்று தன் இல்லாத காலரை தூக்கிவிட்டுக் கொண்டாள்.. பின் ஏதொ நினைவு வந்தவளாக,
“பாஸ்..
இதெல்லாம் அத்தையோடபழைய டிசைன்ஸ்.. இப்பதான் பழைய டிசைன்களுக்கு நிறைய வரவேற்பு
இருக்கே.. நாம இந்த பழைய டிசைனில் கொஞ்சம் மாற்றம் பண்ணி நம்ம கடையில் வைக்கலாமா??
அதே மாதிரி
பட்டு புடவைகளும் நிறைய பழைய டிசைன்ஸ் கொண்டு வரலாம்... “ என்றாள் ஆர்வமாக...
அதை கேட்டு
ஆதியின் கண்கள் விரிந்தன... சற்றுமுன்
அவனும் இதையே தான் யோசித்துக் கொண்டிருந்தான்... அவளும் அதையே கூற, இருவரும் ஒரே மாதிரி சிந்திப்பதைக் கண்டு சிரித்து
கொண்டான்....
“சூப்பர் பேபி..
நானும் இதை பற்றிதான் யோசித்து கொண்டிருந்தேன்... நீ சொன்ன மாதிரியே
பண்ணிடலாம்...” என்று சிரித்தவன் தன் திட்டத்தை விவரித்தான்.. அதை எல்லாம் ஆர்வத்துடன் கேட்டு கொண்டிருந்தாள்
பவித்ரா...
பின் பவித்ரா
இன்னும் சில சந்தேகங்கள் கேட்க,
அவளின் ஆர்வத்தை கண்டு வியந்து கொண்டே இன்னும் விவரித்தான்.. சிறிது நேரத்தில்
அவளிடமிருந்து எந்த பதிலும் வராமல் போக, திரும்பி அவளை
பார்க்க, அவன் தோளில் சாய்ந்து கொண்டு நன்றாக
உறங்கியிருந்தாள் பவித்ரா ...
அதை கண்டவன்
“தூங்குமூஞ்சி...
நான் எவ்வளவு இன்ட்ரெஸ்டிங்க் ஆ explain பண்ணி கிட்டிருக்கேன்... தூங்கிட்டாளே...குட்டச்சி... “ என்று சிரித்து
கொண்டே அவளை நேராக படுக்க வைத்து அவள் மீது போர்வையை மூடி அவள் முன் உச்சி
நெற்றியில் மெல்ல இதழ் பதித்து
“குட் நைட் மை ஸ்வீட்
டார்லிங்... “ என்று புன்னகைக்க,
தூக்கத்திலும் அவன் மெல்லிய ஸ்பரிசத்தை உணர்ந்தவள் உதடுகள் மெல்ல விரிந்து புன்னகைக்க, அந்த அழகு அவன் மனதை அள்ளியது...
அப்படியே அவளை அள்ளி கொள்ள துடித்த தன் கரங்களை கட்டுபடுத்தி கொண்டவன் அவள் அருகில் நெருங்கி படுத்து கொண்டு கண் மூட, அடுத்த நொடியில் உறங்கியிருந்தான் நிம்மதியாக நாளை அவன் நிம்மதி பறி போவதை அறியாமல்...!
Comments
Post a Comment