உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-50
அத்தியாயம்-50
நந்தினி சொன்னதை கேட்டு மன்னிப்பு கேட்டு தலை குனிந்தான் ஆதி... பின்
மெல்ல நிமிர்ந்தவன் மேலும் தொடர்ந்தான்..
“அந்த டிரிங்கை குடிச்சது
மட்டும் தான் நினைவு இருக்கு.. அதுக்கப்புறம் என்ன நடந்தது என்று சுத்தமா தெரியல... அப்படியே ப்ளாங்க ஆ இருக்கு...
“ என்று தலையை பிடித்து கொண்டான்....
“ஹ்ம்ம்ம் அது
எப்படி உங்களுக்கு நினைவு இருக்கும்.. பாதிக்கபட்டது எங்க பொண்ணு இல்ல... இப்ப இவ
வாழ்க்கையே தொலைச்சுட்டு நிக்கறாளே... இனிமேல் இவள யார் கலயாணம் பண்ணிக்கவா?? “என்று ஒப்பாரி வைத்தாள் சரோஜா...
“சரோஜா..
அழுவாத.. அதான் விசாரிச்சுகிட்டிருக்கோம் இல்ல...
நிஷாந்த்.. என்ன
நடந்ததுனு நல்லா யோசிச்சு பார் ப்பா ... “ என்றார் ஆதியின் பெரியப்பா...
அவன் தலையை
பிடித்து கொண்டு கண்களை சுருக்கியும் சில நொடிகள் யோசித்தவன்
“ம்ச்...
எதுவும் சரியா தெரியலை பெரியப்பா... நந்தினி அந்த ட்ரிங்க் ஐ கொடுத்தது நினைவு
இருக்கு.. அத குடிச்சதுக்கப்புறம் தலை சுத்தற மாதிரி இருந்துச்சு... அதுக்கப்புறம்
எதுவும் நினைவு வர மாட்டேங்குது... “ என்றான் தன் நெற்றியை பிடித்தபடி...
“அதான் என்
தங்கச்சி என்ன நடந்ததுனு சொல்லிட்டா இல்ல... அப்புறம் என்ன இன்னும் ஆராய்ச்சி
பண்ணிகிட்டிருக்கீங்க... இவ வாழ்க்கைக்கு ஒரு வழி சொல்லுங்க..
இவரோட தம்பி ...
பெரிய இடம் தப்பு எண்ணம் இருக்காதுனு தெரிஞ்சு தான நந்து தனியா இருக்கிறது
தெரிஞ்சும் உங்ககிட்ட சாவிய கொடுத்து விட்டேன்.. இப்படி நடக்கும்னு தெரிஞ்சிருந்தா
நானும் உங்க கூடவே வந்திருப்பேனே... இப்ப வாழ்க்கை இவ போச்சே... “ என்று மீண்டும் ஒப்பாரி வைத்தாள்
சரோஜா...
“அண்ணி...
கண்டிப்பா நான் அப்படி நடந்திருக்க மாட்டேன்...”என்று அவன் இன்னும் ஏதோ சொல்ல வர,
“அப்ப..
என் தங்கச்சி பொய் சொல்றாளா?? இந்த விசயத்துல எந்த பொண்ணும் பொய் சொல்வாளா?? எல்லாம் எங்க நேரம்.. “ என்று கோபத்தில் ஆரம்பித்து அழுகையில் முடித்தாள்
சரோஜா....
“நானே தப்பா
நடந்துகிட்டாலும் உங்க தங்கச்சிக்கு எங்க போச்சு அறிவு?? அவள் என்னை தடுத்து இருக்கலாம்
இல்ல.. “ என்றான் கொஞ்சம் கோபமாகி...
“நானும் எவ்வளவோ
முயற்சி செஞ்சேன்... நீங்க தான்... “ என்று மீண்டும் தேம்ப ஆரம்பித்தாள்...
“வெல்... இப்ப
என்னதான் செய்யணும்?? “ என்றான் சற்று கோபமாக
“ஹ்ம்ம்ம் என்
தங்கச்சிக்கு ஒரு வழி சொல்லுங்க?? “
“ஹ்ம்ம்ம் என்ன
வழி ?? என்ன செய்யணும்.. ?? “ என்றான் புரியாமல்..
என் தங்கச்சி வாழ்க்கையை
அழிச்ச நீங்கதான் அவளுக்கு ஒரு வாழ்க்கைய கொடுக்கணும்... “ என்றாள் சரோஜா..
“புரியலையே... “
என்றான் குழம்பியவாறு
“நேரடியாகவே
சொல்றேன்...நீங்க என் தங்கச்சிய கல்யாணம்
பண்ணிக்கனும்... “ என்றாள் அவனை நேருக்கு
நேராக பார்த்து...
அதை கேட்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ந்தனர்
பவித்ரா உள்பட்.... சரோஜாவின் வார்த்தியை கேட்டவன்
“What non-sense this?? I’m already married…எனக்கு
ஏற்கனவே கல்யாணம் ஆகியிருச்சு... “ என்று கத்தினான் கோபத்தில்..
“அதனால் என்ன?? அதான் உங்களுக்குள்ள
இன்னும் ஒன்னும் நடக்கலையே.. சும்மா ஊருக்காகதான் புருசன் பொண்டாட்டியா
இருக்கீங்க... “ என்றாள் சரோஜாவும் விடாமல்...
அதை கேட்டு
மேலும் அதிர்ந்தனர் அங்கிருந்த
அனைவரும்...
ஆதியும்
பவித்ராவும் ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டனர் தங்களுக்குள் இருப்பதை அடுத்தவர்
வெளியில் சொல்லி விட்டதாக எண்ணி..
“உங்களுக்கு
எப்படி இதெல்லாம்... “ என்றான் குரலில் ஸ்ருதி இறங்கி பவித்ராவை பார்த்து இன்னும்
முறைத்தவாறு...
“எங்களுக்கு
எப்படியோ தெரியும்... இப்ப அதுவா முக்கியம்... நான் சொன்னது உண்மையா இல்லையா?? ...எப்படியோ உங்களுக்கு ஒருத்தருகொருத்தர் பிடிக்காமதான் தள்ளி இருக்கீங்க... அதனால
அவள வெட்டிவிட்டுட்டு அதாவது டைவர்ஸ்
பண்ணிட்டு என் தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்கணும்... “ என்றாள்
“நோ...
அதெல்லாம் முடியாது... எனக்கு அவ
மட்டும்தான் வைப்...என்னால வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது.. ”
“அப்படி இருக்கறவர் என் தந்க்கச்சி கிட்ட எதுக்கு நெருங்கி நெருங்கி
கொஞ்சினீங்களாம்?? அப்பயே தள்ளி இருக்க வேண்டியது
தான?? நீங்க பட்டணத்துல எப்படி வேணா இருக்கலாம்..
இங்க ஒட்டி
பேசவும் என் தங்கச்சியும் வெகுளியா உங்க கூட பழகியிருக்கா... அதுக்கு போய்..
இப்படி... அவ வாழ்க்கையையே அழிச்சுட்டீங்களே.. இனிமேல் இவள யார் கல்யாணம்
பண்ணிப்பா??...”
“அண்ணி...இந்த
காலத்துல இதெல்லாம் சகஜம்..அதுக்காக எல்லாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியுமா?? வேணும்னா எவ்வளவு பணம் வேணும்னு
சொல்லுங்க...தர்ரேன்.. நானே உங்க தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்...
“ என்று அவன் முடிக்கும் முன்னே
“பார்த்திங்களா?? பார்த்திங்களா?? இவர் கிட்ட காசு பணம் இருக்குனு
எப்படி பேசறார் பாருங்க... அத்தை... மாமா... நீங்களே சொல்லுங்க.. உங்களுக்கும் ஒரு
பொண்ணு இருக்கு.. நாளைக்கு அவளுக்கு இந்த மாதிரி
ஒரு நிலைமை வந்தா அப்படியே விட்டுடுவீங்களா?? நீங்களே
ஒரு நியாயத்தை சொல்லுங்க... “ என்று
பெரியவர்களை பார்த்தாள் முகத்தை சோகமாக வைத்து கொண்டு
அவர்களோ
இன்னும் அtதிர்ச்சியில் இருந்து
விலகாமல் ஒருவரை ஒருவர் பார்த்து முழித்து
கொண்டு நின்றனர்...
பின் அனைவரும்
பவித்ராவை பார்க்க,
அவளோ அமைதியாக தலையை குனிந்தபடி நின்று கொண்டிருந்தாள்...
ஆதியும்
பவித்ராவை பார்க்க குற்றமாக இருந்தது..
“சே.. நானே
வம்பை விலைக்கு வாங்கின மாதிரியாயிருச்சு.. இந்த நந்தினி கிட்ட நெருங்கி
பழகியிருக்க கூடாதோ?? இப்ப இவ வேற என்ன நினைக்கிறாளோ?? “
என்று எண்ணி தன்னை தானே நொந்து கொண்டிருந்தான்...
சிறிது நேரம்
அமைதி நிலவ ,
மரகதம்
பவித்ராவை பார்த்து
“பவித்ரா...
நீதான் அடுத்து என்ன செய்யணும்னு
சொல்லணும்... எல்லாம் உன்னால் வந்தது... நிஷாந்த் நந்தினி பக்கம் பார்க்கிறப்பயே
ஒரு நல்ல பொண்டாட்டியா அவன கண்டிச்சு திருத்தியிருக்கணும்...
அவன ஆட விட்டு
இப்ப வம்பை விலைக்கு வாங்கி வச்சிருக்க... கட்டின பொண்டாட்டி சரியில்லைனா இப்படி
தான்...” என்று பவித்ராவை குற்றம் சுமத்தினார்...
அதுக்கும் அவள்
எதுவும் சொல்லாமல் தரையை பார்த்திருந்தாள்...
சதாசிவம்
நந்தினியை பார்த்து
“நீ என்ன சொல்ற நந்தினி?? உங்க அக்கா சொல்றதுக்கு
சம்மதமா?? “ என்றார் நந்தினைய பார்த்து..
சிறிது நேரம் யோசித்தவள்
“ஹ்ம்ம்ம்
அக்கா சொல்றதும் சரிதான் மாமா...எனக்கு சம்மதம்..அவர் பவித்ராவை டைவர்ஸ்
பண்ணிட்டு என்னை கல்யாணம் பண்ணிக்கட்டும்...
“ என்றாள் அதுவரை தேம்பி கொண்டிருந்தவள்...
“ஏய்.. என்ன
உளறர நீ ?? என்னால என் பொண்டாட்டிய டைவர்ஸ்
எல்லாம் பண்ண முடியாது.. எனக்கு அவ மட்டும்தான்... “ என்று உறுமினான்..
அதை கேட்டு
அதுவரை அழுது கொண்டிருந்தவள் கோபமாக அவனை பார்த்து
“அப்படி இருக்கிறவர்
எதுக்கு என் வாழ்க்கையை நாசமாக்கனும்..
என்கிட்ட எதுக்கு அப்படி குழையணும்??? “
“ஏய்.. அது
சும்மா பவித்ராவை வெறுப்பேத்த...நீ என் பெட்ரூமுக்கு வந்த அன்னைக்கே உன்னை
கூப்பிட்டு நான் வார்ன் பண்ணினேன் இல்ல.. நான் செய்வது சும்மா நடிப்புனு
உன்கிட்டயே சொன்னேன் இல்ல...பவித்ரா இல்லாத நேரத்துல எப்பயாவது என் பார்வை உன் மேல
தப்பா பட்டிருக்குமா??
சே.. ஏதோ
விளையாட்டுக்கு செய்ய போய் இப்படி வந்து முடிஞ்சிருக்கே... “ என்று கை முஷ்டியை
இறுக்கினான்...
“நான் எவ்வளவு
குடிச்ச பொழுதும் என் கன்ரோலை இழந்ததில்லை.. சே.. இப்ப போய் எப்படி?? “ என்று மீண்டும் புருவங்களை
சுருக்கி தன்னையே நொந்துகொண்டு யோசித்தான்...
...
“ஹ்ம்ம்ம்
பொண்டாட்டி கூட வாழ்ந்திருந்தா அடுத்த பொண்ண பார்க்க தோணியிருக்காது.. நீங்கதான்
அப்படியில்லையே.... அதான் இப்படி போதையில என்ன பண்றோம்னு கூட தெரியாம பண்ணியிருக்கீங்க... ” என்று நக்கலாக
பார்த்தாள் நந்தினி
அதை கேட்டு பல்லை கடித்தாள் பவித்ரா..
“ஏய்.. இதுக்கு
மேல எதுவும் பேசின நான் என்ன செய்வேணு எனக்கே தெரியாது.. வேணா சொல்லு.. எவ்வளவு
காசு வேணும்னு.. துக்கி வீசறேன்... “ என்றவன் முடிக்குமுன்னே
“நிஷாந்த்... “
என்று கத்தினார் மரகதம்...
“என்னடா பேசற?? காசு கொடுத்திட்டா ஒரு பொண்ணோட
மானம் திரும்பி வந்திடுமா??
எவ்வளவு குடிச்சாலும் அடுத்த பொண்ணுனு கூடவா உனக்கு தெரியாம போச்சு??
உனக்கு எப்படி
தெரியும்?? நீதான் இதுலயே புரழ்றவன்
ஆச்சே... கல்யாணம் ஆனதக்கபுறமாவது திருந்திட்டனு நினைச்சேன்...
சே.. நீ இன்னும்
திருந்தவே இல்லையா?? எப்படிடா நீ போய் என் தங்கச்சிக்கு மகனா பொறந்தா??
உன்னை போய் தவமிருந்து பெத்தாளே அவளை சொல்லனும்..
உங்கப்பா உன்
அம்மாவை தவிர வேற யாரையும் நிமிர்ந்து கூட பார்த்ததில்லை.. அவருக்கு போய்...
இத எல்லாம்
பார்க்க கூடாதுனு தான் முன்னாடியே போய் சேர்ந்துட்டாங்க போல...
சரியான பொ.... “
என்று ஏதோ சொல்ல வர
“போதும்
நிறுத்துங்க.... இதுக்கும் மேல என்
புருசனை பத்தி ஒரு வார்த்தை பேசுனீங்க... நான் மனுசியா இருக்க மாட்டேன்... “ என்று உருமினாள் அதுவரை அமைதியாக இருந்த
பவித்ரா.....
அவள் கத்தலில்
அனைவருமே ஒரு நிமிடம் ஆடி போயினர்.. .
எல்லாரும்
அவளையே பார்க்க, பவித்ரா
அமைதியாக முன்னே வந்து நந்தினியின் அருகில் வந்தாள்...
அவள் கண்ணை
நேருக்கு நேராக பார்க்க,
நந்தினியும் அவளை நேருக்கு நேராக எதிர்நோக்கினாள்...
அவள் பார்வையில்
திமிர் நீ என்னை என்ன செய்ய முடியும்..
என்றது மாதிரி திமிருடன் பவித்ராவை முறைத்து பார்த்தாள்...
சில நொடிகள்
அவள் முகத்தையே உற்று பார்த்த பவித்ரா
“சோ... என்
புருசன் உன் வாழ்க்கைய அழிச்சுட்டார்?? அப்படிதான?? “ என்றாள் இடுங்கிய
கண்களுடன் ஊடுருவும் பார்வையுடன்..
“ஏய்.. நீ என்ன
லூசா ?? இதைதான இவ்வளவு நேரமா
சொல்லிகிட்டிருக்கேன்.. “ என்று நக்கலாக திருப்பினாள் நந்தினி...
“ஹ்ம்ம்ம்ம்
சரி... அதுக்கு என்ன செய்யணும்?? “ என்றாள் அவளை நேராக பார்த்து
“ஹ்ம்ம்ம்ம்
அவர் எனக்கு தாலி கட்டணும்.. “ என்றாள் அதிகாரமாக...
“சரி கட்டுவார்.. “என்று முடிக்குமுன்
“விது...” என்று
ஆதி ஏதோ சொல்ல வர
“வேகமாக
அவன்புறம் திரும்பி கையை அவன் முன்னால் நீட்டி
“நீங்க
கொஞ்ச நேரம் வாயை மூடிகிட்டு இருக்கீங்களா?? “ என்று ஒரே மிரட்டலில் அடக்கினாள்
அவனை.. பின் நந்தினியிடம் திரும்பியவள்
“ஹ்ம்ம்ம்
சொல்லு நந்தினி.. தாலி மட்டும் கட்டிட்டா
போதுமா?? “ என்றாள்
அதே ஆழ்ந்த பார்வையுடன்
“ஹ்ம்ம்ம்
போதும்..” என்றாள் நந்தினி மிடுக்காக
“ஹ்ம்ம்ம் அவர்
எனக்கு தாலிகட்டியிருக்கிறார்... சட்டபடி நான் தான் அவர் மனைவி .. அவர் அப்படியே
உனக்கு தாலி கட்டினாலும் நீ அவர்க்கு சட்டப்படி மனைவியாக முடியாது தெரியுமா??
உனக்கு
அவர் மனைவியாக எந்த உரிமையும் கிடைக்காது
...பரவாயில்லையா?? “ என்றாள் தன் புருவங்களை உயர்த்தி
“அவர்தான் உன்னை
டைவர்ஸ் பண்ணிடுவாரே.. அப்புறம் நான் தான்
சட்டபடி அவர் மனைவியாவேன்.. “என்று அவளும்
திருப்பினாள் அவள் உதட்டை ஏலனமாக வளைத்து....
“ஹ்ம்ம்ம்
அப்படியா?? ஒரு வேளை நான் அவர்க்கு டைவர்ஸ்
கொடுக்கலைனா??
“என்று தன் புருவங்களை உயர்த்தினாள் பவித்ரா அதே நக்கல் சிரிப்புடன்..
“என்னது?? நீ என்ன சொல்ற?? “ என்று புரியாமல் அதிர்ச்சியுடன் நந்தினி பவித்ராவை பார்க்க
“ஆமாம்...
இவ்வளவு பெரிய பணக்காரன கோடீஸ்வரன விட்டு யாராவது போவாங்களா?? அவர் சொத்தெல்லாம் அவர்
மனைவியா எனக்கு மட்டுமே உரிமையா இருக்கிறப்போ எவளாவது டைவர்ஸ் கொடுப்பாளா??
அதனால அவரே டைவர்ஸ்
கேட்டாலும் நான் கொடுக்க மாட்டேன்... இரண்டு பேரும் சம்மதிக்கலைனா டைவர்ஸ் அவ்வளவு
சீக்கிரம் கிடைக்காது தெரியுமா?? அப்ப நீ என்ன செய்வ??
வெறும் தாலிய
மட்டும் கட்டிகிட்டு அவருக்கு சட்டபடி மனைவியா இல்லாமல் இருந்தா அதுக்கு வேற பேர்
தெரியுமா??
ஹ்ம்ம் இங்க
என்ன சொல்லுவாங்க?? ...” என்று தன் நெற்றியில் கை வைத்து யோசித்தவள்
“ஆங்,,, வப்பாட்டி... சின்னவீடு னு பேர்...
என்ன ?? என் புருசனுக்கு வப்பாட்டியா இருக்க போறியா?? “ என்றாள் மீண்டும் தன்
புருவங்களை உயர்த்தி....
அதை கேட்டு ஆதி ஏதோ சொல்ல வர, மீண்டும் பவித்ரா அவனை
எரிக்கும் பார்வை பார்க்க, அவன் அப்படியே நின்று
விட்டான்...
அதை கேட்டு
திருதிருவென்று என்று முழித்தாள் நந்தினி...
“ பொதுவா தன்
புருசன் அடுத்த பொம்பளைய தப்பா பார்த்தானு தெரிஞ்சாலெ பிரிஞ்சு போய்டு வாங்க
இந்த காலத்து மனைவிகள்.... இப்படி ஒரு
நிக்ழ்ச்சி நடந்த பிறகு பவித்ரா அவள் தாலிய கழட்டி வீசி எறிந்து விட்டு
போய்டுவாள்....
அதற்குபிறகு
அவள்இடம் தனக்குத்தான் “ என்று எண்ணி
இருந்தவளுக்கு பவித்ரா தைர்யமாக நின்றதும்
அதோடு டைவர்ஸ் கொடுக்க முடியாது னு சொல்லவும் நந்தினிக்கு என்ன சொல்வது என்று தெரிய
வில்லை...
இந்த ட்விஸ்டை
அவள் எதிர் பார்க்க வில்லை... இந்த மாதிரி யோசித்து வைக்கவும் இல்லை... அதனால
திருதிரு வென்று முழித்தாள்...
அவளையே பர்த்து
கொண்டிருந்த பவித்ரா
“ஹ்ம்ம்ம்
சொல்லு நந்தினி.. என்ன என் புருஷன் க்கு சின்ன வீடா இருக்க உனக்கு சம்மதமா?? “என்றாள் மீண்டும் கண்கள்
இடுங்க...
நந்தினி என்ன
சொல்வது என்று தெரியாமல் தன் அக்காவை பார்கக சரோஜாவும் அவளை போலவே முழித்து
கொண்டிருந்தாள்...
பவித்ரா அவளையே
பார்த்து கொண்டிக்க,
அவசரமாக யோசித்தாள் நந்தினி..
“அட்லீஸ்ட்
கழுத்துல தாலி கட்டிட்டா எப்படியும் ஆதி என்கிட்ட வரணும்... அதை வச்சு அவனை
மடக்கிடலாம்.. இப்போதைக்கு உள்ள நுழைய ஒரு இடம் வேணும்.. அதுக்கப்புறம் இந்த
குட்டச்சி கண்ணுல விரலை விட்டு ஆட்டணும்.... என்ருறு முடிவு செய்தவள்
“ஹ்ம்ம்ம்
சம்மதம்.... இனிமேல் எனக்கு வாழ்க்கை இல்ல...என் மனசாட்சிக்கு விரோதமா யாரையோ
கல்யாணம் பண்ணிகிட்டு ஏமாற்றாமல் இவருக்கே நான்... “ என்று முடிக்கு முன்னே
பவித்ராவின் கை அவள் கன்னத்தில் இடியென
இறங்கியிருந்தது...
பவித்ரா ஓங்கி
அறைந்திருந்தாள் நந்தினியை... அவள் அடித்த அடி தாங்க முடியாமல் தலை சுற்றி கீழ
விழுந்தாள் நந்தினி...
“ஏய்.. என்
தங்கச்சிய... “ என்று சொல்ல வந்த சரோஜாவை தன கையை வேகமாக முன்னே நீட்டி
“ஹ்ம்ம்ம்ம்...
“ என்ற ஒரே பார்வையில் அடக்கினாள்...
“இவள்
செஞ்சிருக்கிற காரியத்துக்கு அடியோட விடறேன்...என் புருஷனை பத்தி மறுபடியும்
எதுவும் தப்பா பேசினிங்க எல்லாரையும் தொலச்சிடுவேன்.. “ என்று அனைவரயும் கை நீட்டி
மீண்டும் உறுமினாள்....
ஆதியோ அவள்
செய்கையில் மூச்சடைத்து நின்றான் அவள் என்ன செய்கிறாள் என்று ஒன்றும் புரியாமல்...
பவித்ரா
நந்தினியின் அருகில் சென்றவள் அவள் முடியை பிடித்து தூக்கி
“ஹ்ம்ம்ம் இப்ப
சொல்லுடி... என் புருசன் நிஜமா உன்கிட்ட தப்பா நடந்துகிட்டாரா?? “என்று உரும அதில் கொஞ்சம் ஆடிப்போனாள் நந்தினி...
“ஆமாம்... “
என்று ஏதோ சொல்ல வர
“ஏய்...
திரும்பவும் பொய் சொன்ன தொலச்சுடுவேன்.. ஒழுங்கா என்ன நடந்ததுனு சொல்.. “ என்று
கர்ஜித்தாள்..
“ஏய்.. நீ என்ன
மிரட்டினாலும் அது தான் நடந்தது.. “ என்று நந்தினியும் கோபமாக கத்தினாள்...
“சீ...
நீயெல்லாம் ஒரு பொண்ணா.. கேவலம் என் புருசன் சொத்துக்காக இவ்வளவு கீழ்தரமா
நடந்துக்கற.. நீ சொத்து பணம் வேணும்னு கேட்டிருந்தா இந்த பண்ணையே கூட உனக்கு எழுதி
வைக்க சொல்லியிருப்பேன்... இப்படி ஒரு கேவலமான கரியத்தைட பண்ணியிருக்க...”
என்றுபவித்ரா அறுவெறுப்பாக தன் முகத்தை சுழித்தாள்
“போது
நிறுத்தும்.. நீ பாட்டுக்கு ஏதோ பேசிகிட்டே போற.. “ என்றாள் நந்தினி கடுப்புடன்
“ஹ்ம்ம்ம் நானா?? நீதான் நடந்ததை மறைத்து ஏதேதோ
கதை சொல்லிகிட்டு இருக்க... எனக்கு நடந்தது எல்லாம் தெரியும்.. நீ எந்த
அளவுக்கு ட்ராமா பண்றனு பார்க்க தான் இதுவரை அமைதியா இருந்தேன்.. நீயும் நல்லாவே
தான் நடிச்ச... “ என்றாள் நக்கல் சிரிப்புடன்...
“ஏய்... நீயே
எதுவும் கற்பனை பண்ணி உளறாத?” என்றாள் நந்தினி மீண்டும் கடுப்புடன்
“ஹா ஹா ஹா கற்பனையா?? இப்ப சொல்றேன் கேள்...நீ குடிக்க கொடுத்தியே கல்லு.. அதில
ஏற்கனவே தூக்க மாத்திரைய கலந்து வச்சிருக்க.... அதை குடிச்ச உடனே அவர்க்கு தலை சுத்தவும் உன் ரூமுல வந்து
படுத்து தூங்கிட்டார்....
அது மட்டும்
இல்ல.. நீ நேற்று முதல் நாளே இதையே பண்ணி
அவருடன் நெருக்கமாக இருக்கிற மாதிரி நீ ஆடின
நாடகம் எல்லாம் எனக்கு தெரியும்... இப்ப சொல்லு ?? நான் சொல்றது கற்பனையா?? “ என்றாள் அதே நக்கல் சிரிப்புடன்...
அதை கேட்டு
நந்தினியும் சரோஜாவும் திடுக்கிட்டனர்... இவளுக்கு எப்படி நடந்தது தெரிந்தது என்று
...
நேற்று மாலை
மஞ்சள் நீர் ஆட்டத்தில் விளையாடிகொண்டிருந்த பவித்ராவை காட்டி ஏதேதோ சரோஜா வெறுப்பேற்றினாள் நதினி... தன் அக்காவின் இந்த வெறுப்பை தனக்கு சாதகமாக
பயன்படுத்தி கொண்டு ஆதியை மடக்க தான் போட்டு வைத்த கடைசி திட்டத்தை சரோஜாவிடம்
விளக்கினாள்...
அதை கேட்டதும் அதிர்ந்த சரோஜா வேணாம் என்று
மறுக்க, அவளை இன்னும் கொஞ்சம் பிரெய்ன் வாஷ் பண்ணி
தன் திட்டத்திற்கு சம்மதிக்க வைத்தாள் நந்தினி...
தன் அக்கா சம்மதித்ததும் மகிழ்ந்தவள்
“டேய் ஆதி... என்னையவா திட்டின?? உன்னை எப்படி என் வழிக்கு கொண்டுவர்ரேன் பார்.... “என்று
உள்ளுக்குள் சூளுறைத்தாள் நந்தினி...
அவர்கள் போட்ட
திட்டத்தை பவித்ரா அப்படியே
சொல்ல,
அதிர்ந்து போயினர் இருவரும்... ஆனாலும் தன்னை சமாளித்து கொண்டு
“ஏய்... நீ
சும்மா சொல்ற?? “என்று
தடுமாறினாள் நந்தினி..அவள் சொன்னதை கேட்டதும் அtதுவரை சிரித்துகொண்டிருந்த பவித்ரா எரிமலையானாள்.... முகத்தில் அனல் பறக்க
“ஏய்.. திரும்ப
திரும்ப அதையே சொல்லாத....நீ உண்மைய ஒத்துக்கலைனா நான் மருத்துவ முறையில்
நிரூபிக்க வேண்டி இருக்கும்.... ஒரு டெஸ்ட் பண்ணினா நீ இன்னும் கன்னி பெண்ணா
இல்லையானு தெரிஞ்சுடும்...
“ஹ்ம்ம்ம் அது
கூட நீ வேற எங்கயாவது போய் முன்னாடியே கெட்டு போயிருந்தனா கண்டு பிடிக்க முடியாது
தான்... “ என்று பவித்ரா முடிக்கு முன்னெ
“போதும் நிறுத்து பவித்ரா.... நான் ஒன்னும் அந்த மாதிரி பொண்ணு இல்ல... நானும்
நல்ல குடும்பத்துல பொறந்துவ தான்... ஏதோ நிஷாந்த மாமா மேல ஆசை பட்டதுல அவர் எப்படியாவது எனக்கு
சொந்தமா ஆக்கிக்கணும்னு தான்.. இப்படி நடந்துகிட்டேன்... “ என்றாள் மெல்லிய குரலில்...
“சீ வாய மூடு..
அடுத்தவ புருசன் மேல ஆசைபடறது தப்புனு
தெரியாது??... நீ ஆசைபட்டது அவர் மேல இல்ல... அவர் சொத்து மேல... உன் பேராசைக்கு
எந்த தப்பும் பண்ணாத எங்கயும் தலை குனிந்து நிக்காத என் புருசனை தலை குனிய
வச்சுட்டியே... “
இப்ப
எல்லாருக்கும் தெரிஞ்சுருக்குமே என்ன நடந்ததுனு...
கட்டின
பொண்டாட்டியவே அவள் சம்மதம் இல்லாமல் தொடாதவர் எவ்வளவு போதை இருந்தாலும் அடுத்தவளை
பார்க்க மாட்டார் என் புருசன்...” என்றவள் மரகதத்திடம் வந்து
“என்ன சொன்னீங்க
அத்தை?? கண்டிக்கலைனா??
என் புருசனை
பத்தி எனக்கு தெரியும்.. அவர் நந்தினி கூட விளையாட்டுக்கு தான் பேசறார் னு எனக்கு
தெரியும்...
அதோட கண்டிச்சு
திருந்தறது இல்லை கணவன் மனைவி உறவு... ஒருவர் மேல ஒருவர்க்கு நம்பிக்கை இருந்தால்
எந்த நேரத்திலும் எப்படி பட்ட சூழ்நிலையிலும் அடுத்தவங்களை ஏமாற்றி தப்பு செய்ய
முடியாது...
அப்படிதான் என்
புருசனும்....” என்றாள் கர்வமாக
“அப்புறம் ஏன்
தனியா..” என்று கேட்க வந்த மரகதத்தை
மீண்டும் கையை நீட்டி தடுத்தாள் பவித்ரா...
“அது எங்களோட பெர்சனல்... யாருக்கும் அதுக்கு
விளக்கம் கொடுக்கணும்னு அவசியம் இல்லை...” என்று ம்உடித்தாள்....
நந்தினி உண்மையை
ஒத்துக்கொண்டதும் அனவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்... பின் பவித்ரா கூறியதை
கேட்டதும் மரகதம் சுதாரித்து
“என்னை
மன்னிச்சிடு பவித்ரா... உண்மை என்னனு தெரியாமல் அநியாயமா நிஷாந்த் மேல பழி போட்டுட்டேனே... “ என்றார் வருத்தமாக
குற்ற உணர்வுடன்
“ஹ்ம்ம்ம்
ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லலாம் அத்தை... ஒரு தாய்க்கு தெரியணும் தன் மகன் தப்பு
பண்ணியிருப்பானா?? இல்லையானா னு??
இதே சரவணன்
மாமா மேல இப்படி ஒரு பழி வந்திருந்தா நீங்க
அவர் பக்கம் தான நின்றிருப்பீங்க... ஆன இவர்...
ஓ.. இவர்தான்
உங்க பையன் இல்லையே ... தங்கச்சி பையன என்னதான் தன் மகனா நினைச்சாலும் சொந்த மகன்
ஆகமாட்டானு காட்டீட்டிங்க... ரொம்ப சந்தோசம்...”
என்று கை கூப்பினாள்..
அதை கேட்டு
பதறிய மரகதம்
“ஐயோ...
அப்படி எல்லாம் இல்லை பவித்ரா... நிஷாந்த்
எனக்கு சரவணன் மாதிரிதான்... ஆனால் அவன் கொஞ்சம் இந்த விசயத்துல சறுக்கிறவன்
னு தெரிஞ்சதாலயும் அதோட இவ வேற அப்படியே உண்மையாவே நடந்த மாதிரி நடி ச்சதாலயும்
ஒரு நொடி நானும் தடுமாறிட்டேன்...
எங்களை மன்னிச்சிடு நிஷாந்த்.. “என்று அவனை
பார்க்க அவனோ அனைவர் மேலும் ஒரு வெறித்த பார்வையை
செலுத்தினான்...
பவித்ரா மேலும்
தொடர்ந்தாள்..
“உங்க பையனா இருக்கிறவரை
அவர் எப்படி வேணா இருந்திருக்கலாம்... எப்ப என் கழுத்துல தாலி கட்டி எனக்கு
புருசனா ஆனாரோ அப்பயே அவர் எல்லாத்தையும்
விட்டுட்டார்.... அதை முதல்ல நினைவில வைங்க....
எனிவே ஆசையா
இந்த திருவிழாவுக்கு வந்த எங்களுக்கு நல்ல ஒரு மரியாதை செஞ்சுட்டீங்க... ரொம்ப
சந்தோசம்...
இன்னும் ஏன்
இங்க நிக்கறீங்க.. அதுக்கு கூட ஏதாவது காரணத்தை சொல்லி மாட்டி விடுவாங்க.. வாங்க
போகலாம்... “ என்று அவன் கையை பிடித்து இழுத்து கொண்டு வேகமாக தங்கள் அறைக்குள்
சென்றாள் பவித்ரா...
அங்கு இருந்த
அனைவரும் நந்தினியை சரோஜாவையும் திட்டி
கொண்டிருந்தனர்..
சரவணன் சரோஜாவை
வெறித்து பார்த்தான்..சரோஜாவின் அருகில்வந்தவன்
“என்னதான் பவித்ரா
உன்னை காட்டி கொடுக்கலைனாலும் எனக்கும் ஓரளவு யோசிக்க தெரியும் சரோஜா....
இதுக்கெல்லாம் நீயும் காரணம்னு நல்லாவே தெரியுது... கேவலம் பணத்துக்காக இப்படி ஒரு
கீழ்தரமான காரியத்தை பண்ண எப்படி மனசு வந்தது??...
“சீ... உன்னை
போய் நான் காதலிச்சேன் பார்.. இனி ஒரு நிமிடம் உன் தங்கச்சி இங்க இருக்க கூடாது.... சொல்லிட்டேன்..
“ என்று உறுமிவிட்டு வேகமாக வெளியேறினான்..
அதை கண்ட
சரோஜாவுக்கு கிலி பரவியது...
“சீ... எல்லாம் உன்னால தான்.. நான் வேண்டாம் வேண்டாம்னு சொல்ல சொல்ல என்னை சம்மதிக்க வைச்சு, இப்ப என் வாழ்க்கையையும் கேள்வி குறியா ஆக்கிட்டியே.. இனிமேல் என் மூஞ்சியில முழிக்காத... போடி.. “ என்று தன் தங்கையை பிடித்து வெளியில் இழுத்து விட்டாள் சரோஜா...
Super mam. Sema
ReplyDeleteThanks pa!
Delete