உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-51

 


அத்தியாயம்-51

ங்கள் அறைக்கு வந்த பவித்ரா ஆதியின் கையை உதறிவிட்டு அவனை முறைத்தவாறு  ஏற்கனவே அடுக்கி வைத்திருந்த பெட்டியை எடுத்து கொண்டு கீழ வேகமாக இறங்கினாள்..

ஆதியும் மற்றொரு பெட்டியை எடுத்து கொண்டு அவள் பின்னால் வேகமாக இறங்கினான்...

மற்றவர்கள் வரவேற்பறையில் மாடிப்படி முடியும் இடத்தில் நின்று கொண்டிருக்க, இவர்கள் இருவரும் வந்ததும் அனைவரும் அவர்களிடம் மன்னிப்பு கேட்டனர் குற்ற உணர்வுடன்

“இதுல மன்னிக்க என்ன இருக்கு?? ... அவமானம் பட்டது நாங்க தான்... இனிமேலாவது இது மாதிர் வேற யார் வாழ்க்கையோடவும் விளையாடாம இருக்க சொல்லுங்க... நாங்க வர்ரோம்.. “ என்று  வேகமாக வெளியேறினாள் பவித்ரா..

ஆதியும் மீண்டும் ஒரு முறை அவர்களை எல்லாம் ஒரு கோப பார்வை பார்த்து விட்டு எதுவும் பேசாமல் வெளியேறி சென்றான்....

காரை அடைந்ததும் பெட்டிகளை பின்னால் வைத்து விட்டு  ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவன் பவித்ரா முன்னால் அமர்ந்ததும் வேகமாக கரை கிளப்பி சென்றான்...

இருவர் உள்ளேயும் கொதித்து கொண்டிருந்தது...

“சே.. எப்படி பட்ட பழியை சுமத்தியிருக்கிறாள்... எல்லாம் இவனால வந்தது.. அவ கிட்ட முன்னாடியே போய் இளிச்சுகிட்டு நிக்காட்டி என்ன??  “ என்று மனதுக்குள் திட்டி கொண்டிருந்தாள் வெளியில் வெறித்து பார்த்த படி...

ஆதிக்கும் அதே நிலைதான்... எப்படி பட்ட பிசினஸ் தந்திரங்களை எல்லாம் ஈசியா கண்டு பிடிச்சு முறியடித்திருக்கிறான்.. கேவலம் ஒரு பொண்ணுக்கிட்ட போய் அவ சொன்னத நம்பி தலை குனிய வேண்டியதாயிற்றே...

என் வாழ்க்கையிலயே யாரிடமும் மன்னிப்பு கேட்டதில்லை.. அப்படி பட்ட என்னையே மன்னிப்பு வேண்டி தலை குனிய வச்சுட்டாளே  அந்த ராஸ்கல்... “ என்று பல்லை கடித்தான்....

“பவித்ரா மட்டும் இல்லாமல் இருந்திருதால் என்னவாகியிக்கும்??? எல்லாரும் அவள் சொல்வதை தான் நம்பி இருபபார்கள்.. ஏன் அவனே அவள் சொல்வத நம்பி எங்க அவன் அறியாமல் தப்பு நடந்திருக்குமோ என்ற சந்தேகம் இருந்ததால் தான் அவனால் எதையும் அடித்து சொல்ல முடியவில்லை...

ஆனால் அவன் மனைவி.... அவன் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறாள்.. என் கணவன் தப்பு செய்ய மாட்டான் என்று அவள் அடித்து சொல்லியது நினைவு வர, அத்தனை வலி வேதையிலும் கொதித்து கொண்டிருந்த அவன் உள்ளம் கொஞ்சமாக தென்றல் வீசியது....

இபப்டி பட்டவ  எனக்கு பொண்டாட்டியா வர நான் கொடுத்து வச்சிருக்கணும்....

தேங்க் யூ  பேபி... “என்று எண்ணியவன் ஓரக்கண்ணால் அவளை பார்க்க, அவள் இன்னும் சாலையின் வெளியில் வெறித்தபடி இருந்தாள்.. அவள் முகத்திலும் அவ்வளவு வேதனை....

எப்பவும் குறும்புடன் சிரித்து கொண்டிருக்கும்  அவள் முகத்தில் இப்படி இறுகி போய், வெறுத்து வேதனையை கொண்டு வந்த தன்னை நினைத்து மீண்டும் நொந்து கொண்டான்....

“சே.. எல்லாம் என்னாலதான்.. என் முட்டாள் தனத்தால... யாரை எங்க எப்படி நிறுத்தி வைக்கணும் னு  தெரிந்தும் கொஞ்சம் கவன குறைவா இருந்ததால இவ்வளவு பெரிய பிரச்சனையில் வந்து மாட்டியிருக்க இருந்தேனே.. நல்ல வேளை என்  பேபி காப்பாத்திட்டா... “  என்று நினைத்துக் கொண்டவன் மெல்ல அவள்புறம் திரும்பி

I’m sorry பேபி... “ என்றான் முகத்தில் வேதனையுடன் குரலில் வருத்தத்துடன்....

அதை கேட்டும் அவள் முகத்தை திருப்பாமல் வெளியில் வெறித்தபடி அமர்ந்து இருந்தாள்... அவளின் அமைதி அவனுக்கு பயத்தை கொடுத்தது...

ஏதாவது அவனை திட்டினால் கூட பரவாயில்லை.. இப்படி எதுவுமே பேசாமல் வருகிறாளே... “ என்று பயந்தவன், மீண்டும் அவள் புறம் திரும்பி

I’m exteremly sorry பேபி.. இப்படி எல்லாம் நடக்கும் னு தெரியாது.... “ என்று குரல் இறங்கி  மீண்டும் வேதனையுடன் முனக ,

அதுவரை வேடிக்கை பார்த்து வந்தவள் வேகமாக அவன் புறம் திரும்பி

“லுக் மிஸ்டர் ஆதித்யா... என் புருசன் யார்கிட்டயும் ஏன்  அவன் பொண்டாட்டி கிட்ட கூட சாரி சொல்றது அவன் பொண்டாட்டிக்கு பிடிக்காது.... மைன்ட் இட்... “ என்று தன்  விரலை நீட்டி மிரட்டியவாறு எச்சரித்தாள்...

அவள் சொன்னதன் அர்த்தம் புரிய சில விநாடிகள் ஆனது அவனுக்கு... அது புரியவும் இதுவரை அழுத்தி வந்த பாரம் குறைவதை போல இருந்தது...

அந்த நந்தினி அவன் மேல் பழி போட்டப்போ கூட அவன் பெரிதாக கண்டு கொள்ளவில்லை... ஆனால் இதை  எல்லாம் கண்டு எங்க பவித்ரா தன்னை விட்டு விலகிடுவாளோ?? ..  தன்னை வெறுத்து விடுவாளோ??  என்று தான் பயந்து கொண்டிருந்தான்...

அதுவும் அவளின் அமைதி அவனை பயமுறுத்த எப்படி அவளை சமாதான படுத்துவது?? என்றுதான் யோசித்து கொண்டிருந்தான்...

ஆனால் அவள் சொன்னதை கேட்டதும் பெரும் பாரம் விலகி மனதுக்குள் ஒரு நிம்மதி வந்து சேர்ந்தது...

காரை அந்த சாலையின் ஓரத்தில் நிறுதிதியவன் பவித்ராவின்பக்கம் திரும்பி

“ஹே... என் மேல உனக்கு கோபம் இல்லையா பேபி?? ..என்னால உனக்கு எவ்வளவு கஷ்டம் “ என்றான் இன்னும் அதே வேதனை கலந்த இறங்கிய குரலில்..

உடனே வேகமாக அவன் புறம் திரும்பியவள்

“யார் சொன்னா உங்க மேல கோபம் இல்லைனு?? பயங்கர கோபத்துல இருக்கேன்...எனக்கு வர்ற கோபத்துக்கு அங்கயே ஓங்கி அறைஞ்சிருப்பேன்... கன்ட்ரோல் பண்ணிகிட்டேன்....

அந்த நந்தினியெல்லாம்  ஒரு இவ னு அவ  சொன்னத நம்பி நீங்களும் அவங்க கிட்ட மன்னிப்பு கேட்டு தல குனிஞ்சு நிக்கறீங்க...அப்படியே பத்திகிட்டு வந்துச்சு எனக்கு...

பல்ல கடிச்சு பொருத்து கிட்டேன்.. அவ பண்ற ட்ராமவ கண்டு பிடிக்க முடியல... நீங்கல்லாம் என்ன பெரிய பிசினஸ் மேனோ?? “ என்று மீண்டும் பல்லை கடித்தாள்...

“சாரி பேபி... அவ அவ்வளவு தூரம் அடிச்சு சொல்லவும் எனக்கே என் மேல நம்பிக்கை இல்ல... அவ சொல்றது தான் உண்மையோனு நம்ப வச்சுட்டா.. அதோட சரோ அண்ணி வேற சேரவும் I was blank in that situation…நல்ல வேளை நீ மட்டும் இல்லைனா ??

அவ சொன்னது தான் சரி என்று ஆகி எவ்வளவு பெரிய கெட்ட பேர் ஆகியிருக்கும்??“ என்றவன் உடல் விரைக்க கண்களை இறுக மூடினான்..

உள்ளுக்குள் அவன் வேதனை படுவது  அவன் முகத்தில் தெரிந்தது... அதை கண்ட பவித்ராவுக்கு இன்னும் மனதை பிசைந்தது...

மெல்ல கண்ணை திறந்தவன்,

 “உனக்கும் முதல்ல இதை  கேட்டப்போ எப்படிஇருந்திருக்கும்?? எல்லாம் என்னோட கேர்லஸ்னால.. நான் மட்டும் கொஞ்ச்ம கவனமா இருந்திருந்தால்,, அவளை முன்னாடியே அடையாளம் கண்டிருந்தால் இவ்வளவு தூரம் வந்திடுக்காது.. ரியலி சாரி... “ 

என்று மீண்டும் வேதனை கலந்த குரலில் ஏதோ சொல்ல வர,

அவன் முன்னே கையை நீட்டி தடுத்தவள்

“போதும் பாஸ்... நீங்க இவ்வளவு வேதனை படற அளவுக்கு அந்த நந்தினி வொர்த் ஏ இல்ல... அவ உங்க மேல பழி போட்டா அதை தட்டிவிட்டுட்டு போய்கிட்டே இருக்கணும்...இப்படி உட்கார்ந்து வேதனை பட்டு டைம் வேஸ்ட் பண்ணிகிட்டு இருக்க கூடாது..

அதுவுமில்லாமல் உங்க மூஞ்சிக்கு இந்த பீலிங் செட் ஆகல பாஸ்... நீங்க எப்பவும் சொல்லுவீங்களே

“ஆதித்யா நிஷாந்த் தி  கிரேட்... இந்த ஆதித்யா எப்பவும் ஜெயிக்க மட்டும் தான் பிறந்தவன்.. எப்பவும் யார்கிட்டயும் தோத்ததில்லை...தோற்கவும் மாட்டன் “ அப்படினு கெத்தா சொல்லுவீங்களே.. அதுதான் உங்களுக்கு செட் ஆகும்...

சோ இந்த சீனை இதோட கட்  பண்ணுங்க... இதுக்கு மேல எதுவும் பேச வேண்டாம்...

சிங்கம் பேக் மாதிரி ஆதித்யா பேக் னு அந்த கெத்தான லுக் விடுங்க பாஸ்.. “ என்று கண்ணடித்து  சிரித்தாள்....

அவளின் அந்த கன்னம் குழிய சிரிப்பில் அதுவரை அழுத்தி வந்த பாரம் முழுவதும் விலக  அவளை அப்படியே இழுத்து தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்து கொண்டான்...

எந்த ஒரு  காமம் இல்லாத அந்த அணைப்பு இருவருக்கும் தேவையாக இருந்தது... அவன் மனதில்  இருந்த பாரம் மற்றும் கில்ட்டி  எல்லாம் மறைய,புதியதாக பிறந்த மாதிரி இருந்தது...

தாயை தேடும் சேயாக அவளை தன் மார்புக்குள் அடைத்து கொண்டான்....

பவித்ராவுக்கும்  இப்பதான் காடெல்லாம் சுத்தி வீடு வந்த சேர்ந்த மாதிரி இருந்தது.. என்னதான் ஆதியிடம் அவளுக்கு எந்த ஒரு கஷ்டமும் இல்லை என்று சொன்னாலும் நந்தினி சொன்னதை கேட்ட பொழுது அவள் துடித்து தான் போனாள்...

ஒரு வழியாக அவள்  நாடகத்தை  கண்டு பிடித்து  மீண்டதும்,  எல்லாம் முடிந்து நிம்மதியாக, கோடையில் தனியாக நிற்கும் மரத்தின் அடியில் அமர்ந்து இளைப்பாறுவதை போல அவன் மார்பில் அவளும் ஒன்றிக் கொண்டாள்...

அவள் தந்தையின் மறைவுக்கு பிறகு, கடந்த பல வருடங்களாக ஏங்கி தவித்த அந்த தந்தையின் நேசத்தை அவன் மார்பில் உணர, அவளும் அவன் உள்ளே அடைக்கலமானாள்...

நீண்ட நேரம் அதே உருகிய நிலையில் இருந்தவர்கள் அவர்களை கடந்து சென்ற ஒரு வாகனம் வேகமாக ஒலி எழுப்ப, பவித்ரா மெல்ல சுதாரித்து கொண்டு அவனிடமிருந்து விலகினாள்...

அவளை விட மனமே இல்லாமல் விட்டவன் மீண்டும் அவளை இழுத்து அணைத்து அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்....

“தேங்க் யூ  விது... தேங்க் யூ  சோ மச்... “ என்று உணர்ச்சி பொங்க நன்றி உரைக்க, அவனின் அந்த முத்தத்தில் இலேசாக கன்னம் சிவந்தவள் தன்னை மறைப்பதற்காக பாடுபட்டு கொண்டிருக்க, அவன் அழைத்த விது என்ற பெயர் அவள் காடில் விழாமல் போனது..

ஒருவாறு சமாளித்து கொண்டு “இட்ஸ் ஓகே  பாஸ்... காரை எடுங்க.. சீக்கிரம் போகலாம்... “  என்று பேச்சை மாற்றினாள்...

“ஹ்ம்ம்ம்ம் அதுக்கு முன்னாடி  எனக்கு சில சந்தேகம் .. அதை தெளிவு படுத்திடு..  கிளம்பலாம்.. “ என்றவன் அவளை மீண்டும் தன் மார்போடு அணைத்து கொண்டு

“உனக்கு எப்படி அந்த நந்தினியோட திட்டம் தெரிந்தது?? என்னாலயே கண்டுபிடிக்க முடியலையே?? “ என்றான் ஆர்வமாக..

அவளும் அவன் மார்பில் வாகாக சாய்ந்து கொண்டு

“ஆமா.. அவ பெரிய ஒசாமா பின்லேடன்.. என்னமோ அமெரிக்காவை அழிக்க திட்டம் தீட்டினா.அதை  கண்டு பிடுச்ச மாதிரி சொல்றீங்க...

நாம  இங்க வந்த முதல் நாள் அவளை கண்டுக்காத நீங்க அடுத்த நாள் திடீர்னு அவ கிட்ட குழையறப்பவே இது நீங்க போடற திட்டம் னு தெரிஞ்சிருச்சு...

அப்புறம் அன்னைக்கு நம்ம பெட்ரூம்ல அப்படி ஒரு பெர்மான்ஸ் கொடுத்தா பாருங்க.. நானும் கொஞ்ச நேரம் நம்பிட்டேன்.. அப்புறம் தான் அதுவும் அவள் நடிப்புனு தெரிஞ்சது.. இதுதான் முதல் தடவை  இந்த மாதிரி கேம் ஆடறா போல இருக்கு.. அவளுக்கு சரியாவே நடிக்க வரலை...

அவ தோட்டத்துல வச்சு என்கிட்ட பேசறப்போ உங்க இரண்டு பேர் கண்ணையும் பார்த்தேண்... அதுவும் அவ கண்ணுல கொஞ்சம் கூட காதலோ குற்ற உணர்வோ தப்பு செய்தததுக்கான  அடையாளமோ தெரியலை.. அப்பயே தெரிஞ்சிருச்சு.அவ ஏதோ கோல்மால் பண்ணறானு...

சரி என்னதான் செய்யறானு பார்க்கலாம் னு தான் விட்டு பிடிச்சேன்... இன்னைக்கு அவ கோவிலுக்கு வரலைனு சொல்றப்பயே எனக்கு புரிஞ்சிருச்சு ஏதோ ப்ளான் பண்ணி இருக்கானு..

அதோட நேற்று இரவு நான் கிச்சனுக்கு வரயில அவ அத்தை ரூம்ல இருந்து தூக்க மாத்திரை பாட்டிலை எடுத்து அதில் இருந்த மாத்திரை எடுத்ததை பர்த்தேன்.. அப்பயே நினைச்சேன் இவளுக்கு எதுக்கு தூக்க மாத்திரை என்று??

அப்புரம் கோயில்ல சரோஜா அக்கா ரொம்ப பத்ட்டமா இருந்தாங்க.. அவங்களும் இந்த டிரமாவுக்கு புதுசு போல.. நடிக்கவே தெரியல... அவங்களோட டென்சன்லயே கண்டு பிடிச்சுட்டேன் ஏதோ ப்ளான் பண்ணியிருக்காங்கனு...

நான் நினைச்ச மாதிரியே தன்  ஆட்டத்தில காயை நகர்த்தி கிட்டிருந்தா நந்தினி... ஆனா பாவம் இந்த பவித்ராவை பத்தி அவளுக்கு தெரியலை..

நான் நடந்தது என்னன்னு சொன்னதும் அப்படியே ஆடி போய்ட்டா,, “ என்று சிரித்தாள்..

“ஹ்ம்ம்ம் ஆமா  எப்படி நடந்ததை அபபடியே சொன்ன??  “ என்றான் இன்னும் ஆச்சர்யமாகி

“ப்ளான் போட்டா சரியா போடனும்.. அவ சொன்ன நீங்க போதியிலதான் அவ கிட்ட தப்பா நடந்துகிட்டீங்கனு... அங்கயே  தப்பு பண்ணினா...

நம்ம  கல்யாணம் முடிஞ்ச இரண்டாவது நாளே  நீங்க குடிச்சிட்டு  வந்தீங்க இல்ல.. நான் கூட  உங்க  ஷூவை எல்லாம் கழட்டி வச்சேன்.. அப்ப என்னை நீங்க கண்டுக்கவே  இல்லை... ஸ்ட்ராங்கான  பாரின் சரக்கை அடிச்சிட்டு வந்து போதையில கூட கட்டின பொண்டாட்டிகிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணல...

அப்படி பட்ட உத்தமர் ஆப்ட்ரால் இந்த நாட்டு சரக்கு அதுவும் கல்லு குடிச்ச போதையில உங்களை அறியாமல் நடக்கிற அளவுக்கு போனீங்கனு சொன்னா யார் நம்புவா??  இந்த கல்லை பத்தி நானும் கூகுல் ல படிச்சேன்.. அதெல்லாம் அப்படி எல்லாம் மோசமான அளவுக்கு போதை வராதுனு தெரிஞ்சுகிட்டேன்...

அதோட இந்த 6 மாசமா உங்க கூடதான் இருக்கேன்.. அப்படி அலையாறவரா இருந்தா எப்பயே என்னை கட்டாயப்டுத்தி உங்க ஆசையை தீர்த்திருக்கலாம்... இவ்வளவு கன்னியமா நான் ஒத்துகிட்டாதானு பொருமையா இருக்கிற நல்லவர் வல்லவர்.. உங்கள போய் தப்பா சொன்னா?? அதை நம்ப நான் என்ன கேணையா?? 

“சும்மா... ஒரு ப்ளோல ஒரு சின்ன கால்குலேசன் போட்டு இப்படிதான் நடந்திருக்கும்னு  கெஸ்  ல சொன்னது பாஸ்...அவ ரேஞ்சுக்கு எப்படி கேம் ஆடுவானு அவ சைட்ல இருந்து  ப்ளான் பண்ணி பார்த்தேன்..

அப்ப இப்படித்தான் நடந்திருக்கும்.. “என்று ஒருகெஸ்ல சொன்னது தான்... அந்த லூசு அத அப்படியே நம்பிட்டா... உண்மையெல்லாம் அவ வாயாலயே வர வச்சுட்டேன் இல்ல.. “ என்று தன் காலரை தூக்கி விட்டு கொண்டாள்...

“ஹே .. நீ பயங்கர கேடி தாண்டி... நீயெல்லாம் எங்கயோ இருக்க வேண்டிய ஆள்.. “ என்று அவள் மூக்கை பிடிச்சு செல்லமாக ஆட்டினான்....

“ஹீ ஹீ ஹீ  இப்பயாவது ஒத்துக்கறீங்களா?? இந்த பவித்ரா யாருனு?? “ என்று கண் சிமிட்டி சிரித்தாள்...

அவளின் சிரிப்பை ரசித்தவன்,

ஆமா நம்ம விசயம் எப்படி அவளுக்கு தெரிஞ்சது?? “என்றான் இன்னும் சந்தேகம் விலகாமல்

“என்ன மாதிரியே அந்த நந்தினிக்கும் கொஞ்சூண்டு மூளை வேலை செஞ்சிருக்கு பாஸ்... நாம நடுவுல தலையணை வைத்து தூங்கிநோம் இல்ல.. அன்னைக்கு காலையில் நீங்க சீக்கிரம் எழுந்து போயிருந்தப்போ கதவு திறந்திருக்கும்..

அது வழியா கட்டிலை பார்த்து அவளா ஒரு கெஸ் ல சொன்னது தான்... தோட்டத்துல என்கிட்ட பேசறப்பயே போட்டு வாங்க ட்ரை பண்ணினா  நான் எதுவும் காட்டிக்காததால் மேல அவளால கதைய டெவலப் பண்ண முடியல.. “ என்று சிரித்தாள்...

“அடேங்கப்பா... இவ்வளவு பெரிய CID வேலை எல்லாம் பண்ணியிருக்க.. ஏன் என்கிட்டஒரு வார்த்தை கூட சொல்லல?? “ என்று புருவங்களை உயர்த்தினான்...

“என்ன பாஸ்.. நீங்க எவ்வளவு பெரிய ஆள்... இந்த கொசுவ கண்டுபிடிக்க  முடியாதானு தான் நான் சொல்லலை... “

“ஹ்ம்ம்ம் நீ சொல்றது கரெக்ட் தான்.. யானைக்கும் அடி சறுக்கும் ங்கிற மாதிரி இந்த கொசுவ கூட என்னால கண்டு பிடிக்க முடியல.. இனிமேல் கேர்புல்லா இருக்கேன்... “

“டீல் பாஸ்.. சரி இப்பவாது கிளம்பலாமா??  “என்று அவன் மார்பில் இருந்து விலகி தள்ளி அமர்ந்துக்ஒண்டாள்..

 “ஹ்ம்ம்ம்  கிளம்பலாம்... ஆனா ஒரு கன்டிசன்.. நீ என்  பக்கத்துல கிட்ட வந்து உட்கார் .. “என்று கையை நீட்டி அவள் இடையை பிடித்து இழுத்து அவன் அருகில் அமர்த்தி கொண்டு அவன் கையைவிடாமல் அவள் இடையிலயே இருக்க மறுகையால் காரை ச்டார்ட் பண்ணி நகர்த்தினான்..

பவித்ராவும் முதலில் அவனை முறைத்தவள் பின் சிரித்து கொண்டே அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்......

சிறிது தூரம் சென்றதும் அவன் வழக்கம் போல இளையராஜாவின் பாடல்களை ஒலிக்க விட்டான்...

மதியம் நடந்த கலாட்டா எல்லாம் மறந்து, அந்த மாலை நேரத்தில் தன்னவள் தன் அருகில் நெருங்கி அமர்ந்து அதுவும் அவளாகவே அவன் தோளில் சாய்ந்திருக்க, ராஜாவின் பாடல்களை ரசித்து கொண்டே ஸ்டியரிங் ல்  தாளம் போட்ட படியே காரை செலுத்தி கொண்டிருந்தான் அந்த நிமிடங்களை ரசித்தபடி...

கார் வீட்டை அடைய இரவு ஆகியிருந்தது...  காரை நிறுத்தியவன் திரும்பி பார்க்க வழக்கம் போல அவன்தோளில் சாய்ந்து நன்றாக உறங்கியிருந்தாள் பவித்ரா... அசந்து உறங்கும் அவளையே ரசித்தவன்  பின் இறங்கி மறுபக்கம் வந்து அவளை கையில் அள்ளி கொண்டான்...

வள்ளியும் அவனை கண்டு வெக்க பட்டு சிரித்து கொண்டே கதவை திறந்து விட, அவனும் ஒரு வெக்க சிரிப்பை உதிர்த்து மாடி ஏறி சென்று அவன் அறையை அடைந்தவன் வழக்கமாக அவள் உறங்கும் சோபாவில் இல்லாமல் தன் கட்டிலில் கிடத்தினான் அவளை..

இரவு உடைக்கு மாறியவன் கட்டிலின் அருகில் வர, தூக்கத்தில் பவித்ரா எதற்கோ சிரிக்க, அவளின் அந்த சிரித்த முகத்தையே ரசித்துக் கொண்டிருந்தான்..

Thank you so much darling for coming in my life…இனி என் வாழ்வில் என்றும் உன்னை விட மாட்டேன் பேபி... “ 

என்று குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு அவள் அருகில் படுத்துகொண்டவன் அவளை ரசித்து கொண்டே  விரைவில் கண்ணயர்ந்தான்....


Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!