உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-52

 


அத்தியாயம்-52

முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு தன் கணவனின் ஆடைகளை அந்த பெரிய பெட்டியில் அடுக்கி கொண்டிருந்தாள் பவித்ரா..

அவனுடைய வார்ட்ரோபில் அலசி ஆராய்ந்து அவனுக்கு எந்த ட்ரெஸ் பொருத்தமாக இருக்கும் என்று தேடி ஒரு வாரத்திற்கான ஆடைகளை எடுத்து வந்தவள் அதை அந்த மெத்தையில் போட்டு  பின் ஒவ்வொன்றாக அந்த பெட்டிக்குள் அடுக்கிக் கொண்டிருந்தாள்...

அவள் கைகள் என்னவோ அதன் வேலையை செய்தாலும் அவள் மனம் ஏனோ வாடி சுணங்கியது...

“என்னாச்சு??  ஏன் எனக்கு  இப்படி இருக்கு?? “ என்று தனக்குள்ளே கேட்டு கொண்டிருந்தாள்... பின் எப்ப இருந்து இப்படி இருக்கு?? என்று யோசித்தாள்

அன்று மாலை 7 மணி  அளவில் சரண்யாவிடம் கதை அடித்துவிட்டு தன் நகை கடையில் ரவுண்ட்ஸ்  வந்தவள் அங்கு ஒரு வாடிக்கையாளர் எந்த நகையை எடுப்பது என்று தெரியாமல் குழம்பி கொண்டிருப்பதை கண்டு நேராக அங்கு சென்றாள்...

சில நிமிடங்கள் அவருடன் உரையாடியதில் அவருடைய டேஸ்ட்ம் அவர் தேடலும் புரிந்து விட, அதற்கு தகுந்த மாதிரியும் அவர் தோற்றத்திற்கு பொருத்தமாகவும் சில டிசைன்களை சஜெஸ்ட்  பண்ண, அந்த பெண்மணிக்கு வாயெல்லாம் பல்லாகியது...

“சூப்பரா செலக்ட் பண்ணிட்ட மா... இதை  தான் இவ்வளவு நாளா தேடி கிட்டிருந்தேன்...ரொம்ப தேங்க்ஸ் “ என்று அவளை பாராட்ட, பவித்ராவும்

You are welcome ma’am. We are at your service…” என்று சிரித்தவாறு அங்கிருந்து நகர்ந்தாள்..

அப்பொழுது அவள் அலைபேசி ஒலிக்க, அதை எடுத்தவள் அதன் திரையில் ஒளிர்ந்த “ஷா” என்ற பெயரை கண்டதும் அவள் இதழ்களில் புன்னகை தானாக மலர, அதன் அழைப்பை ஏற்று காதில் வைத்தவள்

“ஹ்ம்ம்ம் சொல்லுங்க பாஸ்... என்ன இந்த நேரத்துல கால் பண்ணியிருக்கீங்க... “ என்றாள் ஆர்வத்துடன் சிரித்தவாறு..

அனைவரும் அவனை ஆதித்யா, ஆதி  என்று அழைக்க, அவளுக்கு அவன் அம்மா அழைத்த அவருக்கு பிடித்த நிஷாந்த் என்ற பெயரில் ஷா மட்டும் சுருக்கி செல்ல பெயர் வைத்திருந்தாள் அவனுக்கு...

அவளின் அந்த சிரித்த குரலை கேட்டதும் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவன்

“என்ன பேபி... பிசியா?? “ என்றான் ஆழ்ந்த குரலில்.. ஏனோ  அவன் குரலில் ஒரு மாற்றம் தெரிந்தது.. குரல் கணத்து இருந்ததை போல இருந்தது...

என்னவாக இருக்கும் என்று பவித்ரா யோசித்து கொண்டே

“ஹ்ம்ம்ம் ரொம்பவும் பிசி இல்ல... அதுக்காக வெட்டியாகவும் இல்ல... நீங்க மேட்டர சொல்லுங்க பாஸ்...” என்றாள் குறும்பாக சிரித்தவாறு...

மற்ற நேரமாக இருந்தால் அவளிடம் வம்பு இழுத்திருப்பான்.. இப்பொழுது நேரம் இல்லாததால்

“ஒகே  பேபி.. நான்  ஒரு புது பிராஜெக்ட் க்காக ஒன் வீக் நியூயார்க் போகணும்...I have meetings till 10. நீ கொஞ்சம் முன்னாடி போய் என்னோட  திங்க்ஸ் எல்லாம் கொஞ்சம் பேக் பண்ணி வைக்கிறியா??...” என்றான் மீண்டும் அதே  அழ்ந்த குரலில்...

அதை கேட்டு உள்ளுக்குள் இலேசாக அர்ந்தாள் பவித்ரா...ஆனாலும் தன்னை கட்டுபடுத்தி கொண்டவள்

“ஸ்யூர் பாஸ்... எத்தனை மணிக்கு  பிளைட்?? “என்றாள் தன் குரலில் எந்த வருத்தத்தையும் காண்பிக்காமல்..

“ஹ்ம்ம்ம் ஏர்லி  மார்னீங்..3 மணிக்கு.. 11 க்கு எல்லாம் கிளம்பனும்.. கொஞ்சம் சீக்கிரம் போய் பேக் பண்ணி வை.. நான் அப்புறம் கால் பண்றேன்..அர்ஜென்ட் மீட்டிங் ஒன்னு.... பை “ என்று அவசரமாக தன் அலைபேசியை அனைத்திருந்தான்....

அதன் பின்னர் பவித்ராவும் சரண்யாவிடம் சொல்லி விட்டு,  சக்தியை அழைத்து தன் காரில் வீட்டிற்கு வந்து விட்டாள்...வந்ததும்  ரெப்ரெஸ் ஆகி கீழ இறங்கி வந்தாள்

பின் நேராக  சமையல் அறைக்கு சென்று அவனுக்கு பிடித்த இரவு உணவை வள்ளியிடம் சொல்லி அவளும் அருகில் இருந்து செய்து வைத்து விட்டு தன் அறைக்கு வந்து அவன் துணிகளை பேக் பண்ணி கொண்டிருந்தாள்...

அவள் மனம் கணத்து இருக்க அதற்கான காரணத்தை ஆராய்ந்தவள் அவன் போன் பண்ணினதுக்கப்புறம் தான் இந்த மாதிரி இருக்கிறது என்று புரிந்தது...அது ஏன் என்று மீண்டும் யோசிக்க, அவளுக்கு இப்பொழுது காரணம் புரிந்தது

திருமணம் ஆகி  கிட்ட தட்ட இந்த 6 மாதத்தில் அவர்கள் இருவரும் ஒரு நாளும் பிரிந்து இருந்ததில்லை..

ஆரம்ப நாட்களில் டாம் அன்ட் செர்ரியாக சண்டை போட்டாலும் அவளுக்கு அவனை பிரியணும் என்று தோன்றியதில்லை..

ஆதித்யாவுமே அவளை பிரித்து வைத்ததில்லை..

இப்பொழுது முதன் முதலாக  அவனை பிரிய வேண்டி இருக்கிறதே என்று எண்ணுகையில் அவள் மனம் சுணங்கியது..

அதுவும் அந்த கிராமத்து நிகழ்ச்சிக்கு பிறகு இருவருக்குள்ளும் நிறைய மாற்றங்கள் வந்திருந்தன... 

ஒருவருக்கொருவர் நெருக்கமாக உணர்ந்தனர்... ஆனாலும் அவர்களுக்குள் இருக்கும் கண்ணாமூச்சி ஆட்டம் மட்டும் அப்படியே இருந்தது...

இருவர் மனமுமே மற்றவர் அறிந்தாலும் பூனைக்கு யார் மணி கட்டுவது என்கிற மாதிரி யார் முதலில் தன்னை வெளிபடுத்துவது என்று தங்களை மறைத்து கொண்டிருந்தனர் இருவரும்...

அவர்கள் கிராமத்தில் இருந்து திரும்பி வந்த இந்த ஒரு வாரமும்  பவித்ரா ஷோபாவில் உறங்குவது தவிர்த்து ஆதியின் கட்டிலில் அங்க பண்ணையில் இருந்த மாதிரி ஒன்றாகவே உறங்கினாள்...

இரவு உணவிற்கு பிறகு இப்பல்லாம் ஆதி தன் அலுவலக வேலையை குறைத்துக் கொண்டான்...

படுக்கையில் காலை நீட்டி வைத்து, தலையணையை பின்னால் வைத்து அமர்ந்து கொண்டு கதை பேசுவர்...சிறிது நேரம் ஆனதுமே பவித்ரா அவன் தோளில் சாய்ந்து உறங்கி விடுவாள்..

அவனும் அதை ரசித்து அந்த நேரத்திற்காகவே எதிர்பார்த்திருப்பான்..

இப்பொழுது அவனை பிரிய வேண்டுமே என்று நினைக்கையிலயே அவள் மனம் கணத்து , மனதுக்குள் பாரம் அழுத்தியது....

பவித்ரா அவனை பற்றி  நினைத்து கொண்டே  தன் வேலையை  செய்து கொண்டிருக்க, திடீரென்று

“ஹாய் பேபி.. “என்று அழைத்தவாறு உள்ளே வந்தான் ஆதி..

அவனை கண்டதும் தன்னை மறைத்து கொண்டு

“வாங்க பாஸ்.. எல்லாம் பேக் பண்ணிட்டேன்.... சரியா இருக்கானு பாருங்க.. “என்று சிரித்தாள்..

அவள் அடுக்கியிருந்ததை ஒரு முறை பார்வையிட்டவன் எல்லாம் கரெக்ட்டாக எடுத்து வைத்திருப்பதை கண்டு

“சூப்பர் பேபி... இவ்வளவு பாஸ்ட்டா எல்லாம் கரெக்டா அடுக்கி வச்சுட்ட...அதுவும் உன்னோட ட்ரெஸ் செலக்சன் சூப்பர்.. அப்படியே நானே பார்த்து எடுத்து வைத்த மாதிரி இருக்கு...தேங்க்ஸ்.. “என்று சிரித்தான்...

“இட்ஸ் ஓகே பாஸ்... சரி வாங்க..  சாப்பிட்டிட்டு வந்திடலாம்... “  என்று அழைத்தாள்..

“இல்ல.. நேரம் ஆகுது... சாப்பிடற அளவுக்கு நேரம் இல்லை.. நான் குளிச்சிட்டு கிளம்பனும்.. நான் அங்க பிளைட்லயே சாப்பிட்டுக்கறேன்... “என்றவன் அவசரமாக குளியல் அறைக்குள் சென்றான்...

பவித்ரா கீழ சென்று அவள் அவனுக்காக ஆசையாக செய்து வைத்திருந்த சப்பாத்தியையும் அவனுக்கு பிடித்த சப்ஜியையும் எடுத்து தட்டில் வைத்து மேல எடுத்து வந்தாள்..

அதற்குள் அவன் குளித்து விட்டு வந்து ட்ரெஸ் பண்ணி கொண்டிருந்தான்...

பயணிப்பதற்கு வசதியாக எளிமையான டீ ஷர்ட் ம் ஜீன்ஸ் ம் அணிந்து தன் தலையை வாரிக் கொண்டிருந்தான்... அவனையே சில விநாடிகள் ரசித்து நின்றவள் பின் உள்ளே வந்தாள்... 

தட்டுடன் உள்ளே வந்த பவித்ரா, ஆதியின் முன்னே நீட்டி,

“பாஸ்... கொஞ்சமாவது சாப்பிடுங்க.. அங்க பிளைட்ல சாப்பிட இன்னும் நான்கு மணி நேரமாவது ஆகும்.. அதுவரைக்கும் பசியோட எப்படி இருப்பீங்க.. அதோடு இன்னைக்கு புல்லா மீட்டிங் னு  சொன்னீங்க இல்ல.. டயர்டா இருக்கும்... கொஞ்சம் சாப்பிட்டுட்டு போங்க.. “ என்று நீட்டினாள்...

“இல்ல பேபி.. இன்னும் என்னுடைய ஆபிஸ் பைல்ஸ் கொஞ்சம் எடுத்து வைக்கணும்.. நோ டைம்..” என்றவாறு  அவன் அலுவலக அறைக்குள் சென்று அலுவலகம் சம்பந்தமான சில பைல்களை எடுத்து சரி பார்த்து கொண்டிருந்தான்..

அவன் பின்னால் தட்டுடன் சென்ற பவித்ரா

“சரி .. ஆ காட்டுங்க.. நான் ஊட்டி விடறேன்... “ என்றாள் சிரித்தவாறு..

அதை கேட்டு ஆச்சர்யமாகி அதற்கு மேல் மறுக்க முடியாமல் அவள் ஊட்டியதை வாங்கி கொண்டான்...

முதல் வாய் சாப்பிட்டதும்  அவன் எவ்வளவு கட்டுபடுத்தி  தனக்குள்ளே அடைத்து வைத்திருந்தாலும் அவன் மனம் தானாக தன் அன்னையை நினைத்தது..

அவன் ஸ்கூலுக்கு போகும் பொழுதெல்லம் இப்படி தான் அவன் அன்னை அவனுக்கு ஊட்டி விடுவார்... நேரம் இருந்தாலும் அவன் அம்மா கையில் வாங்கி சாப்பிடுவது அவ்வளவு சுகமாக இருக்கும் அவனுக்கு..

அவரின் மறைவுக்கு பிறகு அந்த சுகத்தையெல்லாம் இழந்திருந்தான்.. இன்று மீண்டும் பவித்ரா அந்த மாதிரி ஊட்டி விடவும் அவன் உள்ளே மெல்லிய சுகம் பரவியது...

அவள் ஊட்டவும் அதுவரை தெரியாதிருந்த அவன் பசி இப்பொழுது வெகுண்டு எழ, அவள் கொண்டு வந்திருந்த அனைத்து சப்பாத்தியையும் காலி பண்ணினான்... 

அவன் ரசித்து சாப்பிடுவதை கண்டு அவளும் ஆசையாக ஊட்டினாள்...

சாப்பிட்டு முடிக்க அவள் கொண்டு வந்திருந்த தண்ணீர் டம்ளரை எடுத்து கொடுக்க அதை  அருந்தியவன்,

“வாவ்.. சூப்பர் டின்னர் பேபி... பைவ் ஸ்டார் ஹோட்டல்ல கூட இப்படி டேஸ்ட் இருந்திருகாது.. அதோட உன் கை டேஸ்ட் ஏ தனிதான் போல... இன்னைக்கு அதிகமாகவே சாப்டிட்டேன்... தேங்க்ஸ்..  “ என்று அவள் கையை பிடித்து முத்தமிட்டான்...

அதில் குறுகுறுக்க, மெல்ல புன்னகைத்தாள்...

அதன் பின் தனக்கு வேண்டிய பைல்களை எல்லாம் தேடி எடுத்துக் கொண்டு தன் அறைக்கு வந்து அவனுடைய ஹேண்ட் சூட்கேஸில் ல் வைத்தான்...

ஒரு வழியாக எல்லாம் எடுத்து முடிக்கவும் மணியை பார்க்க, நேரம் ஆவதை உணர்ந்து

“ஓகே பேபி.. இப்ப கிளம்பினாதான் சரியா இருக்கும்... நீ  ஜாக்கிரதையா இரு.. வேணா நீ போய் உன் அம்மா விட்ல இருந்துட்டு வா... “ என்றான்....

அதை கேட்டதும் இதுவரை தன்னை கட்டு படுத்தி வந்தவள் கண்கள் தானாக கரிக்க ஆரம்பித்தது.. 

அவள் முகத்தில் வந்து போன ஏக்கத்தை கண்டு கொண்டான்...

அவனுக்குமே அவளை பிரிவது  கஷ்டமாகத்தான் இருந்தது...

இந்த  பிராஜெக்ட்டிற்காக அவனுடைய அசிஸ்டன்ட் போவதாக இருந்தது.. திடீரென்று அவர் அன்னை இறந்து விட, அவர் போக முடியாத சூழ்நிலையில் வேற யாரும் இல்லாததால் ஆதித்யா போக வேண்டியதாயிற்று...

அதை உணர்ந்ததும் அவன் மனம் உள்ளேயும் பாரம் அழுத்தியது..

முன்பெல்லாம் மாதம் ஒரு முறையாவது வெளிநாட்டு பயணம் போக வேண்டி இருக்கும்.. அப்பல்லாம் அவனுக்கு அது  சர்வ சாதாரணம்.. ஆனால் இப்பொழுது என்னவோ மனதை பிசைந்தது அவனுக்கு,..

ஏன் என்று யோசித்த பொழுதுதான் புரிந்தது திருமணம் ஆகி இத்தனை நாட்களில் அவன் அவளை பிரிந்து இருந்ததில்லை என்று..

அப்பொழுது தான் இன்னொன்றும் புரிந்தது..

அவனை அறியாமலயே அவன் போக வேண்டி இருந்த பல பயணங்களை அவன் தவிர்த்து அவனுடைய் அசிஸ்டன்ட் ஐ அனுப்பி வைத்ததற்கான காரணம்..

தன் மனைவியை பிரிய வேண்டி இருக்குமே என்று தான்..

இன்று அவளையும் அழைத்து செல்ல ஆசை அவனுக்கு.. ஆனால் அவளிடம் US விசா இல்லை... விசா அப்ளை பண்ணா எப்படியும் சில நாட்கள் ஆகும்.. இது திடீர் பயணம் என்பதால் அவனால் அழைத்து செல்ல முடியவில்லை....

வன் தன் பெட்டியை எடுத்து கொண்டு முன்னே நகர, அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் அவளையும் அறியாமல் உருண்டோடி வந்து, அவள் கன்னத்தில் வழிந்தது...

 அவன் தன்னை பார்த்து விடக்கூடாது என்று தன் தலையை குனிந்து கொண்டள் பவித்ரா...

எதேச்சையாக திரும்பியவன் அவளை கண்டு கொண்டு உடனே  திரும்பி அவளை நெருங்கி அவளை இழுத்து அணைத்திருந்தான்...

அதை  எதிர்பார்க்காத பவித்ரா அவன் மார்பில் புதைந்து கொண்டு விசும்பினாள்....அவனும் அவளை அணைத்தவாறு அவள் முதுகை ஆதரவாக தடவி கொடுத்தான்...

“ஹேய்... என்னது இது பேபி?? .. குழந்தை மாதிரி அழற...ஒன் வீக் தான.. சீக்கிரம் போய்டும்..நான் சீக்கிரம் வந்திடறேன் “ என்று சமாதான படுத்தினான்...

பின் சிறிது நேரம் அப்படியே இருந்தவர்கள் தங்கள்  மனம் பாரம் தீர, அவளை விலக்கியவன்

“சாரி பேபி.. உன்னையும் என்னோடு கூட்டிகிட்டு போக ஆசைதான்... ஆனால் விசா இல்லை.. அதான்.. “ என்றான் குரல் கம்ம...

அதுக்குள் தன்னை சமாளித்து கொண்டவள், அவளும் சிரித்தவாறு

“இட்ஸ் ஓகே பாஸ்.. நான் சமாளிச்சுக்குவேன்.. நீங்க பீல் பண்ணாம போய் உங்க பிராஜக்ட்க்கான டீலை வெற்றிகரமா முடிங்க... “என்று கன்னம் குழிய சிரித்தாள்...

“ஹ்ம்ம்ம் தட்ஸ் குட்... “ என்று புன்னகைத்து அவள் கன்னம் தட்டி தன்  பெட்டியை எடுத்துக் கொண்டு கீழ சென்றான்...

பவித்ராவும் அவனை தொடர்ந்து பின்னால் சென்றாள்..

கீழ சக்தி அவனுக்காக காத்து கொண்டிருக்க   அவனை கண்டதும் முன்னே வந்து பெட்டியை வாங்கி கொண்டான்..

பவித்ராவுக்கு அவனோடு அட்லீஸ்ட் ஏர்போர்ட் வரைக்குமாவது  போக ஆசை.. ஆனால் அவனிடம் எப்படி சொல்வது??..

அவனே கூப்பிடாமல் தான் எப்படி போவது என்று அவளுடைய ஈகோ தடுத்தது...

அவளுடைய எண்ணத்தை பரிந்து கொண்டவன் அவளையும் அழைத்து செல்ல ஆசை தான்.. ஆனால் திரும்ப  வரும்பொழுது அவள் மட்டும் தனியாக வர வேண்டும்.. என்னதான் சக்தி இருக்கிறான் என்றாலும் அவளை தனியாக திருப்பி அனுப்ப மனம் வரவில்லை...

அதனால் அவளிடம் எதையும் சொல்லாமல் காரை நோக்கி நடந்தான்....

வள்ளியை கூப்பிட்டு பவித்ராவை பார்த்து கொள்ள சொல்லி விட்டு நகர்ந்தான்...

கார் வரை கூடவே வந்தவள் அவன் காரில் ஏறி  அமர்ந்ததும் தன்னையே ஏக்கமாக பார்த்துகொண்டு நிற்பவளை மனம் முழுவதும் நிரப்பி கொண்டுஅவளுக்கு கை அசைத்து விடை பெற்று சென்றான்..

ன் கணவனை அனுப்பி விட்டு திரும்ப தங்கள் அறைக்கு வந்தவள் மீண்டும் கண்ணை கரித்து கொண்டு வர, அப்படியே படுக்கையில் பொத்தென்று  விழுந்து குலுங்கி குலுங்கி அழுதாள் பவித்ரா...

 

அவள் இன்னும் அழுது கொண்டிருக்க, அடுத்த ஐந்தாவது நிமிடம் அவள் அலைபேசி ஒலித்தது... அதை எடுக்க மனம் இல்லாமல் தவிர்க்க, மீண்டும் மீண்டும் அடித்தது.. பின் சோம்பலுடன் சென்று எடுக்க, ஆதிதான் அழைத்திருந்தான்...

“ஆர்  யூ ஓகே  பேபி?? “என்றான் பதற்றத்துடன்...

அவன் குரலை கேட்டதும் ஓவென்று அழ ஆரம்பித்தாள் அவளையும் அறியாமல்..

அவள் அழுவதை கண்டு அவனுக்குமே கஷ்டமாகி போனது...

ரொம்பவும் தைர்யமானவள்.. தன் பிரிவு அவளை ஒன்னும் பாதிக்காது என்று எண்ணி இருந்தவனுக்கு அவளின் இந்த அழுகை புதியதாக இருந்தது..

அவனுக்கு இது ஒரு வித பீலாக பிடித்திருந்தது....

தன் பிரிவை தாங்காமல் ஏங்கும் அவளின் அன்பு அவனுக்கு கிடைத்ததில் மனம் கொள்ளா மகிழ்ச்சி அவன் உள்ளே

அவளை ஒரு வழியாக சமாதான படுத்தியவன் பின் காரில் செல்லும் பொழுது ஏர்போர்ட்டை அடையும் வரையுமே அவளுடன் பேசி கொண்டே சென்றான்....

அவளை சீண்டி பேச ஆரம்பிக்க, அவளும் சிலிர்த்து கொண்டு அவனுடன் வம்பு இழுத்து கொண்டே இருக்க, ஏர்போர்ட்டை அடைந்தவன்

”ஓகே பேபி..  இப்படியே நல்ல பொண்ணா சிரிச்சுகிட்டே இருப்பியாம்.. நான் போய் செக்கின் முடிச்சிட்டு உனக்கு திரும்ப மெசேஜ் பண்றேன்.. அல்ரெடி உனக்கு  லேட் ஆகியிருச்சு..  சீக்கிரம் தூங்கு.. குட் நைட்.. மிஸ் யூ...” என்று சொல்லி அனைத்தான்..

பவித்ராவும் அவள் மனம் பாரம் கொஞ்சம் விலகிருக்க, படுக்கையில் படுத்து அவனுடைய தலையணையை எடுத்து கட்டி கொண்டு கண்ணை மூடினாள்..

ஆனால் உறக்கம் தான் வர மறுத்தது..

நினைவுகள் எல்லாம் அவனை  சுற்றியே வந்தது...

ஆதி அவன் பார்மாலிட்டிஸ் முடித்து வாட்ஸ்அப்பில் அவளுக்கு மெசேஜ் அனுப்ப, முழித்துக் கொண்டிருந்த அவளுமே  பதில் அனுப்பினாள்...  அதன் பின் பிளைட் கிளம்பும் வரைக்குமே அவளுடன் வாட்ஸ்அப்பில் உரையாடி கொண்டிருந்தான்..

பின் ப்ளைட் கிளம்பி செல்ல, பவித்ராவும் தன்  அலைபேசியை அனைத்து விட்டு கண் மூடி உறங்க முயன்றாள்..

ஆதி  பிளைட் உள்ளே சென்று பிசினஸ் கிளாஸ்  ல்  அமர்ந்ததும் விமானப் பணிபெண்கள் அவனை பார்த்து புன்னகைத்தனர்...அவன் வழக்கமாக செல்லும் ஏர்லைன் என்பதால் அவனை பற்றி அனைவருக்குமே தெரியும்... 

சில  பேர் அவன் அருகில் வந்து ஏன் அவன் இவ்வளவு நாள் வரவில்லை என்று விசாரித்தனர் அவனை ரசித்துகொண்டே....

அனைவருக்கும் ஒரு புன்முறுவலை காட்டி விட்டு தன் இருக்கையில் அமர்ந்தவன் தன் அலைபேசியை எடுத்து கை தானாக வாட்ஸ்அப்பை ஓபன் பண்ணி பவித்ராவின் ஸ்டேட்டஸ் ஐ பார்த்தான்..

அது  ஆப்லைன் காட்ட,அவளை நினைத்தவன்  மெல்ல புன்னகைத்தவாறு இருக்கையின் பின்னால் சய்ந்தான்....

வழக்கமாக இந்த மாதிரி பயணம் செய்யும்பொழுது அவன் பார்வை ஆவலாக அங்குள்ள கேபின் குரூஸ்  மேல் படியும்.. அவர்களின் அழகை ரசிப்பான்..

சில  பேர் அவன் பார்வையை கண்டு கொண்டு அவனிடத்தில் வழிந்து நிற்பார்கள்...

ஆனால் இன்று அது எல்லாம் காணாமல் போயிருந்தது.. அவன் எண்ணம் முழுவதும் பவித்ரா மட்டுமே ஆக்ரமித்திருந்தாள்... அவனுக்கு குடிக்க, உண்ண என்று அந்த பெண்கள் வந்து சென்றது எல்லாம் அவன் கண்ணிலும் கருத்திலும் படியவில்லை...

அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது  அவனா இப்படி மாறிப்போனான் என்று..  

கிட்டதட்ட மூன்றரை மணி நேரம் பயணத்திற்கு பிறகு அவன் சென்ற Emirates ப்ளைட் ட்ரான்சிட்  க்காக துபாயில் லேன்ட் ஆனது..

வெளியில் வந்தவன் விஐபி லான்ச் ல் உள்ளே சென்று  ஒரு இருக்கையில் அமர்ந்தவன் கை மீண்டும் தானாக தன் அலைபேசியை எடுத்தான் அவளை அழைக்க...

முன்பு பயணத்தின் பொழுது இப்படி ட்ரான்சிட்  ல்  காத்திருக்கும் பொழுது மற்றவர்கள் இங்கு வந்த உடனே வீட்டிற்கு அழைத்து பேச அவனுக்கு சிரிப்பாக வரும்..

வீட்டை விட்டு வந்த மூன்று மணி நேரத்தில் அப்படி என்னதான் பேசுவாங்களோ?? என்று சிரித்து கொள்வான்.....அவனுக்கு அது மாதிரி அழைத்து பேச  யாரும்இருந்ததில்லை..

ஏன் அவன் செல்லும் பிளைட் க்கு ஏதாவது ஆகியிருந்தால் கூட தன்னை தேட யாரும் இல்லை என்று நினைத்து கொள்வான் சில நேரங்களில்...

இன்று இங்கு வந்ததும் அதே மூன்று மணி நேரத்திற்குள் மீண்டும் தன்  மனைவியின் குரலை கேட்க துடித்த தன்னை நினைத்து  அவனுக்கு சிரிப்பாக வந்தது...

“ராட்சசி.. எப்படி என்னை மாற்றி வைத்திருக்கிறாள்.. அவளையே நினைத்து கொண்டிருக்குமாறு பண்ணிட்டாளே.. குட்டச்சி... “ என்று செல்லமாக திட்டி கொண்டே

“ரீச்சுடு துபாய்.. “என்று மெசேஜ் பண்ண, அடுத்த நொடி அவனை அழைத்திருந்தாள் பவித்ரா..

அவளுமே உறக்கம் இல்லாமல் சிறிது நேரம் புரண்டு படுத்தவள் அதற்கு மேல் முடியாமல் போக, எழுந்து தன் அலைபேசியை  எடுத்து அவன் என்ணையே தான் பார்த்து கொண்டிருந்தாள் எப்ப அவன் மெசேஜ் பண்ணுவான் என்று...

அவளின் அழைப்பை ஏற்றவன் 

அவள் இன்னும் உறங்காமல் இருப்பதை கண்டு அவளை கடிந்து கொண்டவன் அவள் மீண்டும் மறுபக்கம் கலங்குவதை கண்டு வருந்தி,

“விது.. நான் வேணா இப்படியே திரும்பி விடவா.. நீ  இவ்வளவு கஷ்டபடுவேனு தெருஞ்சிருந்தால் நான் இந்த பயணத்துக்கே ஒத்து கொண்டிருக்க மாட்டேன்.. வேற யாரையாவது ஏற்பாடு செய்திருப்பேன்... “ என்றான் அவளின் கஷ்டத்தை கண்டு வேதனையுடன்..

அதற்குள் தன்னை சுதாரித்துக் கொண்டவள்

”ஹீ ஹீ ஹீ.. சும்மா பாஸ்.. ஆனந்த கண்ணிர் இது .. நீங்க உங்க வேலைய பாருங்க..இந்த ப்ராஜெக்ட் உங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று எனக்கு தெரியும்.. “ என்று சொல்லி சமாளித்தாள்..

“உன்னை விட எனக்கு இந்த ப்ராஜெக்ட் , இந்த டீல் எதுவும் முக்கியமில்லை பேபி...” என்க, அதைகேட்டு மறுமுனையில் உருகி நின்றாள் பவித்ரா.. 

பின் இருவரும் தொடர்ந்து பேசி கொண்டிருக்க, அந்த மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை இருவருக்கும்..

மீண்டும் அடுத்த பிளைட் க்கு போர்டிங்  க்கு அழைப்பு வர, மனமே இல்லாமல் எழுந்து அவளிடம் விடை பெற்று சென்றான்.. அவளும் அவனுக்கு பை சொல்லி தன் அலைபேசியை அனைத்தாள்..

Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!