உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-53

 


அத்தியாயம்-53

டுத்த நாள் காலை எழவே மனம் இல்லாமல் புரண்டு படுத்தவள்  பின் மெதுவாக எழுந்து குளித்து விட்டு வள்ளி கொடுத்த காபியை வாங்கி கொண்டு தோட்டத்திற்கு சென்றாள் பவித்ரா...

எப்பவும் மகிழ்ச்சியை தரும்  அந்த தோட்டம் ஏனோ அவளுக்கு இன்று உகந்ததாக இல்லை...அந்த தோட்டக்காரர் தாத்தா அவளை பார்த்து புன்னகைக்க அவளும் பதிலுக்கு ஒரு புன்னகையை உதிர்த்து அவள் விரும்பும்   அந்த ரோஜா செடியிடம் சென்றாள்....

அந்த மலர்ந்து சிரிக்கும் ரோஜாவை காண,அவன் குறும்பாக கண் சிமிட்டி சிரிப்பதை போல  இருந்தது... பின் நீச்சல் குளத்தின் அருகில் செல்ல, அங்கே அவன் அவளை தள்ளிவிட்டதும் அதன் பின் அவளை தூக்கி வந்து அவளை எழுப்ப அவன் கண்ணில் தெரிந்த வலி ஞாபகம் வந்தது...

இப்படி எங்கு சென்றாலும் அவன் நினைவாகவே இருந்தது..  அதற்கு மேல் அங்கு இருக்க முடியாமல் தன் அறைக்கே சென்றாள்....

அறையிலும் எங்கு திரும்பினாலும் அவனின் குரும்பு பார்வையும் அவளை சீண்டி பேசிய பேச்சுகளும் எதிரொலித்தன...சிறிது நேரம் தன்னுடன் போராடியவள் அதற்கு மேல் முடியாமல் கிளம்பி தன் வீட்டிற்கு சென்றாள்...

நீண்ட நாள் கழித்து வரும் தன் மகளை கண்டதும் ஆர்வமாக வரவேற்றார் பார்வதி... அவளும் தன் அன்னையை மகிழ்ச்சியாக கட்டி கொண்டு கொஞ்ச நேரம் கதை அடித்தாள்...

தன் மகள் தன்னுடன் சிரித்து பேசினாலும் அவள் கண்களில் ஒரு ஏக்கம் தேடல் இருப்பதை கண்டு கொண்டார் பார்வதி.. ஆனாலும் அவளிடம் எதுவும் கேட்க வில்லை..

சிறிது நேரம் பேசி கொண்டிருந்தவள் எழுந்து தன் அறைக்கு செல்ல, அங்கு இன்னும் மோசமாகியது...

அவள் படுக்கையை கண்டதும் கடைசியாக அவன் அவள் படுக்கையில் படுத்து கொண்டு அவளை பார்த்து சிரிப்பதை போலவும் அவள் இதழ்களை வருடியது ம் கண்ணாடி முன்னால் அவளை கட்டி அணைத்ததும் நினைவு வந்து அவளை வாட்டியது...

எழுந்து குளியலறைக்குள் சென்றாள் அங்கயும் அவன் முகமே... அவளை அணைத்திருந்த அந்த தருணங்கள் மீண்டும் கண் முன்னே வர, அவள் உள்ளே சிலிர்த்தது...

ஏனோ  இப்பயே அவனை பார்க்க வேண்டும் போல இருந்தது.. அவன் குரலை கேட்க வேண்டும் போல இருக்க, தன் அலைபேசியை எடுத்து பார்த்தாள்... அவன் இன்னும் ஆப் லைன் ல் இருக்க, இன்னும் லேன்ட்  ஆகவில்லை போல  என்று எண்ணி மீண்டும் தன் படுக்கையில் படுத்து கண் மூட, அவள் நினைவிலும் அவனே வந்து நின்றான்..

“சே.. என்ன இந்த திருடன் இப்படி இம்சிக்கறானே..” என்று அவனை மனக்குள் திட்டி கொண்டே மாலை சிற்றுண்டியை முடித்து அவள் மீண்டும் தன் வீட்டிற்கே கிளம்பினாள் பவித்ரா...

அவளை கண்ட பார்வதிக்கு ஆச்சர்யமாக இருந்தது.. தன் வீட்டை விட்டு போக மாட்டேன் திருமணம் வேண்டாம் என்று முரண்டு பண்ணியவள் இன்று அவள் கணவனை பிரிந்து ஒரு நாள் கூட இருக்க முடியாமல் இப்படி அவஸ்தை படுகிறாளே.. என்று ஆச்சர்யபட்டார்...

“எல்லாம் இந்த மஞ்சள் கயிறு மேஜிக் ஆக்கும்..” என்று தனக்குள்ளே சிரித்து கொண்டவர் அவரும் கூடவே வருவதாக சொன்னார்..

இப்பொழுது பவித்ராவுக்கு ஆச்சர்யம்.. தன் திருமணம் முடித்து நிறைய தடவை தன் அன்னையை தன்னுடன் வந்து இருக்க சொல்லி வற்புறுத்தியிருக்கிறாள் பவித்ரா.. அப்பல்லாம் மறுத்தவர் இன்று அதிசயமாக அவரே வருவதாக சொல்லவும்

“என்னமா இது அதிசயம்??... நீயே என் வீட்டுக்கு வர்ரேன் னு  சொல்ற?? “ என்று குறும்பாக சிரித்தாள்...

மகள் என் வீடு என்று கூறியதையும் குறித்து கொண்டவர்

“ஹ்ம்ம்ம் என்ன செய்யறது?? மாப்பிள்ளை பேச்சை தட்ட முடியாது இல்லையா??  அதான்.. “ என்றார்..

அதை கேட்டு குழம்பியவள்

“மாப்பிள்ளை பேச்சா?? என்ன மா  சொல்ற?? கொஞ்சம் புரியற மாதிரி சொல்லேன்.. “ என்றாள்...

“ஆமாம் பவி .. மாப்பிள்ளை நேற்று ஏர்போர்ட் போற வழியில எனக்கு போன் பண்ணி அவர் ஒரு வாரம் வெளிநாடு போவதாகவும்  நீ இன்னைக்கு இங்க வீட்டுக்கு வந்திட்டு மாலை சீக்கிரம் கிளம்பினாலும் கிளம்பு வ.. அப்படி தனியா போனா என்னையும் வந்து உன் கூட இருக்க சொன்னார் அவர் வர்ற வரைக்கும்..

நீ  தனியா இருந்தா எதையாவது நினைச்சுகிட்டு கஷ்டபடுவியாம்.. அதனால நான் உனக்கு துணைக்கு வர்றதாம்...

ஊரையே மிரட்டும் என் மகள்...இல்லை இல்லை ஆதித்யா பொண்டாட்டிக்கு நான் எதுக்கு துணை பவி?? அப்படி எத நினைச்சு நீ கஷ்ட படற?? மாப்பிள்ளை பயந்துக்கற அளவுக்கு?? “என்றார் குறும்பாக சிரித்தவாறு...

தன் அன்னை பொடி வச்சு கேட்டாலும் அவர் தான் அவனை நினைத்து கஷ்ட படறதை கண்டு கொண்டு தான் பிட்டை போடுவது தெரிந்து கொண்டவள்

“சே... இப்படி சொதப்பிட்டியே பவித்ரா... இப்படியா உன் அம்மா பார்க்கிற மாதிரி மூஞ்சியில காட்டறது?? பார்.. இந்த பாரு கரெக்டா கண்டுபிடிச்சிருச்சு..

ம்ம்ம் எதையாவது சொல்லி சமாளிக்கலாம்... “ என்று மனதுக்குள் அவசரமாக யோசித்தவள்

“ஹீ ஹீ ஹீ.. அதெல்லாம் ஒன்னுமில்ல மா... சும்மா உன்ன அங்க வர வைக்கிறதற்காக சொல்லியிருப்பான்... என்றவள் நாக்கை கடித்து கொண்டு சொல்லியிருப்பார்... மத்தபடி நான் தனியாஇருக்க எனக்கு என்ன பயம்..??.

ஆனாலும் இத சாக்கா வச்சாவது நீ என்  வீட்டுக்கு வர்றது ரொம்ப சந்தோசம்.. சரி வா போகலாம்.. “என்று சிரித்து கொண்டே தன் அன்னையை அழைத்து கொண்டு அவள் வந்திருந்த காரில் கிளம்பி சென்றாள்...

வீட்டிற்கு சென்றதும் கீழ இருந்த அறையை தன் அன்னைக்கு கொடுத்து இரவு வரை  கதை அடித்து கொண்டே இருந்தவள் இரவு உணவை முடித்து தன் அறைக்கு செல்ல, அவள் கை மீண்டும் அலைபேசியை நாடியது... ஒரு வழியாக அவன் பத்திரமாக சேர்ந்து விட்டதாக செய்தி அனுப்பிய பிறகே ஓரளவுக்கு நிம்மதியாக இருந்தாள் பவித்ரா... 

ப்படியோ 7 நாட்களை ஓட்டியவள் அன்று அவன் திரும்பி வரும் நாள் என்பதால் காலையில் இருந்தே ஒரே பரபரப்பாக இருந்தாள்..

இதற்கு மேல் அங்கு இருக்க முடியாது என்று காலையிலயே கிளம்பி தன் வீட்டிற்கு சென்று விட்டார் பார்வதி

ஆதித்யாவுக்குமே  அந்த ஒரு வாரம் ஓட்டுவது பெரிய கஷ்டமாக இருந்தது..  ஒரு வழியாக தான் சென்ற வேலையை வெற்றிகரமாக முடித்தவன்  திரும்பி வந்தான்...

சென்னை விமான நிலையத்தை அடைந்ததும், பிளைட்டை விட்டு இறங்கியதுமே அவன் மனதுக்குள் ஒரு இனம் புரியாத  பரவசம்.. இன்னும் சில மணி நேரத்தில் அவளை பார்க்கப் போகிறான் என்று..

கடந்த நாட்களில் நேரில் பேசுவதை விட  அவ்வளவு நேரம் பேசியிருந்தனர் தொலைவில் இருந்த பொழுது..

அதே பூரிப்பில் உதட்டில் மின்னும் புன்னகையுடன் அந்த பணிபெண்களுக்கு புன்னகைத்து தன் ஹேன்ட் லக்கேஜை ஸ்டைலாக உருட்டி கொண்டு சென்றான்...

எல்லாம் பார்மாலிட்டிஸ்ம் முடிந்து பேக்கேஜ் கிளைமிங் ல் நிக்க, அவன் பெட்டி வரும் வரை  பொருமையில்லை அவனுக்கு..

பல முறை சாதாரணமாக காத்திருந்தவன் இன்று ஏனோ சில நொடிகள் கூட காத்திருக்க பிடிக்க வில்லை... அவ்வளவு எரிச்சலாக வந்தது அவளை காணும் ஆவலில்...

ஒருவழியாக அதையும் கலெக்ட் பண்ணி கொண்டு வெளியில் வந்தவன் சக்தி அவனுக்காக காத்து கொண்டு இருந்ததை கண்டு கொண்டு கை அசைத்தான்...

அவன் கண்கள் அவசரமாக யாரையோ தேடியது அவனையும் அறியாமல்...தான் தேடியது இல்லாததால் அவன் கண்கள் ஏமாற்றத்தை தழுவின....

“சே.. இந்த குட்டச்சி பார்க்க கூட வரலை பார்... இவளை பார்க்க, இவளுக்காக நான் எப்படி தவிச்சுகிட்டிருக்கேன்.... இவளுக்கு எந்த பீல் ம் இல்ல போல..

போகிறப்ப மட்டும் அப்படி அழுதா... அப்புறம் அப்படியே மறந்துட்டாளே.. ராட்சசி... “ என்று திட்டி கொண்டே சக்தியின் அருகில் வர,  சக்தியும் புன்னகைத்து அவன் பெட்டிகளை வாங்கி கொண்டான்..

பின் இருவரும் பேசிக் கொண்டே காரை அடைந்தனர்...

சக்தி அவன் பெட்டிகளை காரின் பின்னால் டிக்கியில் அடுக்கிக் கொண்டிருக்க, ஆதி பின்னால் அமருவதற்காக கார் கதவை திறந்தான்...

கதவை திறந்தவன் அப்படியே இன்ப அதிர்ச்சியில் உறைந்து நின்றான்...

ஆம்... அவன் கதவை திறந்ததும் உள்ளே இருந்த பவித்ரா வேகமாக இறங்கி அவனை இறுக்கி கட்டிக் கொண்டாள்...

பவித்ரா ஏர்போர்ட் உள்ளே சென்றால் தன்னை மறந்து இப்படி ஏதாவது செய்து விடுவாள் என்றே அவள் உள்ளே செல்லாமல் காரிலயே காத்திருந்தாள்..

அவளை இங்கு எதிர்பார்க்காதவன் ஒரு நிமிடம் திக்கு முக்காடி போனான்... சில நொடிகள் ஆனது அவனுக்கு அதை உணர...

.பின் அவனுமே அவளை இறுக்கி அணைத்திருந்தான்...

இருவரும் ஒருவருக்கொருவர் பிரிந்திருந்த ஏக்கத்தை அந்த அணைப்பில் வெளிபடுத்தினர்...இருவருக்குமே ஒரு வித பாரம் விலகி மனதில் நிம்மதி பரவியது..

சிறிது நேரம் மோன  நிலையில் இருந்தவர்கள் , அருகில் இருந்த காரை எடுக்க ஒருவர் வருவது தெரியவும் மனமே இல்லாமல் விலகினர்...

அப்பொழுது தான் சக்தியின் நினைவு வர, ஆதி பின்னால் திரும்பி பார்த்தான்..

சக்தி பெட்டிகளை உள்ளே வைத்து விட்டு இங்கிதம் தெரிந்தவனாக சற்று தூரம் சென்று திரும்பி நின்று கொண்டிருந்தான்...

அதை கண்டு சிரித்துகொண்டவாறு

“சக்தி...” என்று அழைத்தான் ஆதி ...

அவனும் மெல்ல புன்னகைத்து கொண்டே அருகில் வர, அவனை ஆழ்ந்த பார்வை பார்த்தான் ஆதி..

அவன் பார்வையை புரிந்து கொக்ண்டவன்...இந்த நேரத்தில் பவித்ராவை எதற்கு இங்கு அழைத்து வந்தான் என்றே அவனை பார்த்தான் ஆதி ...

அதை உணர்ந்தவன்

“சாரி சார்... நான் எவ்வளவோ சொன்னேன்... மேடம்  தான் கேட்காமல் அடம் பிடித்து கூட வந்திட்டாங்க... “  என்றான்..

  “ஹ்ம்ம்ம்ம் அப்ப அதுக்கு பனிஸ்மென்ட் நீ இங்க இருந்து நடந்தே வீட்டிற்கு வா... நானே ட்ரைவ் பண்ணிக்கறேன்.. “ என்றான் குறும்பாக சிரித்தவாறு....

உடனே அவன் பதறி,

“சார்... நீங்க டையர்டா இருப்பீங்க.. அதுவும் நைட் வேற ஓட்டனும்... நானே ஓட்டறேன் சார்.. வேணா வேற எதாவது பனிஸ்மென்ட் கொடுங்க... “ என்றான் ஆதியின் மேல் உள்ள அக்கறையில்....

“இட்ஸ் ஓகே மேன்.. ஐ கேன் மேனேஜ்... போனா போகுது நீ ஒரு கேப் பிடிச்சு வா... “ என்று கண் சிமிட்டி ஏதோ ஜாடை காட்டினான்...

இன்னும் தன் கணவனின் அருகில் ஒட்டி நின்று கொண்டிருந்த பவித்ராவை கண்ட சக்திக்கு ஏதோ புரிய

“ஓகே சார்... நீங்க என்ஜாய் பண்ணுங்க... பட்  கேர்புல்லா ஓட்டுங்க... “ என்று மீண்டும் தன் அக்கறையை காட்டி தலை அசைத்து சென்றான்...

பின் ஆதி பவித்ராவை பார்க்க, அவளோ சிலையாக மந்திரிச்சு விட்டவளை போல  அப்படியே நின்று கொண்டிருந்தாள்...

அவளின் நிலையை புரிந்து கொண்டவன் அவளை மெல்ல அணைத்தவாறு காரின் முன் இருக்கையின் கதவை திறந்து அவளை உள்ளே அமர  வைத்தான்..

பின் ஓட்டுனர் இருக்கை பக்கம் வந்து ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவன் காரின் கண்ணாடிகளை ஏற்றி விட்டு உள்ளே மெல்லிய விளக்கை ஒளிர விட்டு அவளை பார்க்க, அவள் முகம் அந்த மெல்லிய வெளிச்சத்தில் இன்னும் அழகாக ஒளிர்ந்தது...

அவள் கண்களில் அவனை காணாத அந்த ஏக்கமும் ஏதோ ஒரு புரியாத மொழியும் தெரிந்தது அவனுக்கு..

மொத்ததில் அவன் மனைவி இன்று முற்றிலும் வேறாக மாறியிருந்தாள்...

அவளை பார்க்க இன்னும் சில  மணிநேரம் ஆகுமே என்றும் அவள் தன்னை பார்க்க வர வில்லையே என்று மனதின் ஒரு ஓரத்தில் இருந்த ஏமாற்றம் மறைந்ததாலும் அவனும் அவளை அர்வமாக பார்த்தான்...

அவளும் அவனையே மையலுடன் நோக்க,  அவன் கண்ணில் தெரிந்த ஆர்வமான ஏக்கம் கலந்த கணவன்  பார்வையை கண்டவளுக்கு கன்னங்கள் சிவக்க, தன் தலையை கீழ குனிந்து கொண்டாள்....

அவளின் அந்த சிவந்த உருகிய நிலையை கண்டவன் அவளை அப்படியே இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்திருந்தான்....

“ Thank you so much Baby for your caring….You showed different world to me…I completely felt different feeling which I never felt…I’m the happiest man in this world…” என்று இன்னும் ஏதேதோ உளறியபடி தன் மார்பில் சாய்ந்திருந்தவளின்  முன் உச்சி நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்...

அவன் சொன்னது எல்லாமே பவித்ராவும் அனுபவித்தாள் தான்...அவன் இல்லாத இந்த ஒரு வாரத்தில் அவளுக்குமே அவன் சொன்ன பீலிங்ஸ் + அவஸ்தை எல்லாம் அனுபவித்தாள்.... ஆனால் வாய்விட்டு எதுவும் சொல்லவில்லை...

அதற்கு மாறாக அவள் உடலும் முகமும் அதை வெளிகாட்டியது அவனுக்கு...

அவள் எதுவும் பேசாமல் இன்னும் தன் மார்பில் ஒண்டியிருந்த அவளின் நிலையை கண்டவனுக்கு இன்னும் போதையேற, ஏதோ சொல்ல வர, அந்த நேரம் பார்த்து அவன் அலைபேசி சிணுங்கியது....

முதலில் அதை இக்னோர் பண்ண, மீண்டும் அழைத்தது... வேற வழியில்லாமல் அவளை தன் மார்பில் சாய்த்து கொண்டே காரில் பொருத்தியிருந்த தன் அலைபேசியில் அந்த அழைப்பே ஏற்றான்.. 

அந்த ஸ்பீக்கரில் ஒலித்தது ப்ரேமின் குரல்...

அவன் குரலை கேட்டதும் பவித்ரா வேகமாக ஆதியிடம் இருந்து விலகி தள்ளி அமர்ந்து கொண்டாள்...

“ஹாய் மச்சான்.. லேன்ட் ஆயிட்டியா?? “ என்றான் ப்ரேம் உற்சாகமாக...

ஆதிக்கு வந்த கடுப்பில் ப்ரேம் மட்டும் நேரில் இருந்திருந்தால் பார்வையாலயே எரித்து சாம்பலாக்கி இருப்பான்... தன் ஆத்திரத்தை கட்டுபடுத்திக் கொண்டவன்,

“டேய் கரடி... அதெல்லாம் லேன்ட் ஆயிட்டேன்.. இப்ப ஏர்போர்ட் லதான் இருக்கேன்... ஒரு முக்கியமான வேலையா இருக்கேன்.. நான் அப்புறம் கால் பண்றேன்..”  என்று அவன் அழைப்பை துண்டிக்க போக,

“டேய் இருடா மச்சான்... அதுக்குள்ள என்ன அவசர படற.. உனக்காக நான் எவ்வளவு ஆசையா கண் முழிச்சி காத்திருந்து கால் பண்ணியிருக்கேன்... ஆமா  அது என்ன  ஏர்போர்ட்ல முக்கியமான வேலை மச்சான்.. “என்றான் சந்தேககமாக..

அதை கேட்டு பவித்ரா குறும்பாக சிரித்து கொண்டாள்... அவளின் அந்த சிரிப்பை ரசித்தவன்

“ஹ்ம்ம்ம் அத நாளைக்கு வந்து விளக்கமா கேட்டுக்கோ.. இப்ப போனை வை டா கரடி... “ என்றான் மீண்டும் கடுப்பாக...

“ஹேய்... இரு இரு... ஆங் கண்டுபிடிச்சுட்டேன்... டேய் மச்சான் ... ஏர்போர்ட்க்கு உன்னை ரிசீவ் பண்ண சிஸ்டர் ம் வந்திருக்காங்களா??

நீ என்னை புதுசா கரடி னு சொல்லையிலையே எனக்கு உரைச்சிருக்கணும்... “என்று தன் தலையை தட்டிக் கொண்டவன்..

“ஹ்ம்ம்ம் நீ நடத்துடா மச்சான்... கொடுத்து வச்சவன் அனுபவி...

ஹ்ம்ம்ம் எனக்கும் தான் ஒன்னு இருக்கே.. எவ்வளவு தான் முயறிசி பண்ணினாலும் கண்டுக்கவே மாட்டேங்குறா... “ என்று வாய்க்குள் முனகி பெருமூச்சு விட்டவன்

“ஹாய் சிஸ்டர்... ஒரு வாரமா காய்ஞ்சு போய் வந்திருக்கான் மச்சான்....அவனை நல்லா ஸ்பெஷலா கவனிச்சுக்கங்க... பை..

டேய் மச்சான் என்ஜாய் டா... “ என்று சிரித்தவாறு தன்  அலைபேசியை அனைத்தான் ப்ரேம்...

ஆதியும் பவித்ராவை கண்டு ஒரு அசட்டு சிரிப்பை சிரித்து

“சரியான கரடிதான்...”என்று  சிரித்தவாறு தன் காரை ஸ்டார்ட் பண்ணினான்..

ஏர்போர்ட் பார்க்கிங் ஐ விட்டு வெளியில் வந்து கார் மெயின் ரோடில் பயணிக்க, அதுவரை தள்ளி அமர்ந்திருந்த பவித்ரா அவன் அருகில் நெருங்கி வந்து அவன் இடது கையை தூக்கி விளாவில் வழியாக தன் கையை விடடு அவன் கையை சுற்றி பிடித்து கொண்டவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்...

அதை கண்டு அவனுக்கு இன்னும் ஆச்சர்யம்... இதுவரை பவித்ரா தானாக அவன் அருகில் வந்ததில்லை..

ஒன்று அவன் அவளை இழுத்து தன் அருகில் அமர்த்தி கொள்வான்.. இல்லையென்றால் இளையராஜாவின் பாடலை கேட்டால் தானாக அவன் அருகில் வந்து விடுவாள்..

இன்று இரண்டுமே இல்லாமல் அவளாக தன்னருகில் வரவும் அவனுக்கு எதையோ வென்று விட்டதை போல மனம் துள்ளி குதித்தது...

பல மில்லியன் டாலர் டீலை முடித்து விட்டு வந்திருக்கிறான்.. அப்பொழுது கூட இந்த அளவுக்கு சந்தோஷ பட்டது இல்லை.... தன் மனைவியின் இந்த நெருக்கம் அவனுக்கு விண்ணில் பறப்பதை போல இருந்தது...

இருவருக்குள்ளேயும் ஒருவித புது உணர்ச்சி உடல் மற்றும் மனம் முழுவதும் ஆக்கிரமித்து இருந்ததை இருவருமே உணர்ந்தாலும் பாவம் அந்த பீலிங்க்ஸ்க்கு என்ன பெயர் என்று தான் இருவரும் அறிந்திருக்க வில்லை...

மனம் நிறைய பூரிப்புடன் ஆதி இளையராஜாவின் பாடல்களை ஒலிக்க வைக்க, அது  ஐஸ் கேக்கில் ஆட் பண்ணின டாப்பிங்ஸ் மாதிரி அவர்கள் மனதிற்க்கு இன்னும் தூபம் இட்டது...

அந்த இரவு பயணம் இருவருக்குமே மிகவும் பிடித்திருந்தது..

கார் வீட்டை அடைந்ததும் அதன் என்ஜினை அணைத்தவன் அவளை திரும்பி பார்க்க, எப்பொழுதுமே அவன் அருகில் அமர்ந்து வந்தால் கொஞ்ச நேரத்துலயே உறங்கியிருப்பாள் பவித்ரா..

ஆனால் இன்று ஏனோ  உறங்காமல் அவன் கையை இன்னும் இறுக்கி பிடித்து கொண்டு அவன் தோளில் சாய்ந்தவாறே  இருந்தாள் பவித்ரா...

இருவருக்குமே அப்படியே அமர்ந்து இருக்க வேண்டும் போல இருந்தது....

ஆனால் அதற்குள் வள்ளி தன்  சின்னய்யாவின் காரின் ஓசையை கேட்டு வீட்டின் கதவை திறந்து வைத்திருக்க, அதற்கு மேல் கார் உள்ளேயே இருக்க முடியாது என்பதை உணர்ந்து அவளை மெல்ல விலக்கி இருக்கையின் பின்னால் அமர வைத்தவன் இறங்கி மறுபக்கம் வந்து தன் மனைவியை கையில்  அள்ளி கொண்டான்...

இதுவும் முதல் முறை அவள் விழித்து கொண்டிருக்கும் பொழுதே  அவளை அள்ளி கொள்வது...

பவித்ராவும் எந்த எதிர்ப்பும்  காட்டாமல்  அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாக போட்டு கொண்டவள் மெல்ல புன்னகைத்தாள்...

நல்ல வேளை... இங்கிதம் தெரிந்த வள்ளி கதவை திறந்து வைத்து விட்டு தன் அறைக்குள் சென்று விட்டாள்...

பூச்சென்டாக கனத்த தன் மனைவியை தன் அறைக்கு அள்ளி வந்தவன் அவன் கட்டிலில் கிடத்த, அவளோ நாணத்தில் கண்ணை மூடிகொண்டாள்..

அவளின் அந்த நிலை அவனுக்கு இன்னும் போதை ஏற்ற அவள் அருகில் அமர்ந்தவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து மெல்ல வெக்கத்தில் சிவந்திருந்த அவளின் செவ்விதழ்களை வருடினான் ஆசையாக...

அவளும் சிலிர்த்து இன்னும் கண்ணை இறுக்கி மூடி கொண்டாள் உதட்டில் மெல்லிய புன்னகையுடன்...

எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்க, தவளை தன் வாயால் கெடும் என்ற  பழமொழியை திரும்பவும் நிரூபிக்கற மாதிரி,

“என்ன பேபி??.. இப்பயாவது ஒத்துக்கறியா?? நீ என்கிட்ட தோத்துட்ட னு ... உன்னை எப்படி எனக்காக ஏங்க வச்சேன் பார்த்தியா??  எனக்காக ஏங்கி நீயே என்கிட்ட வந்திட்ட இல்ல.... இப்ப ஒத்துக்கறியா இந்த ஆதித்யா தான் ஜெயிச்சான் என்று.... “ என்று கூறி குறும்பாக கண் சிமிட்டினான் ஆதித்யா...

அவ்வளவுதான்... அவன் சொன்னதை கேட்டதும் அதுவரை ஏதோ மந்திரிச்சு விட்ட மாதிரி மாய உலகில் சுற்றி வந்தவள் தன்னை பிடித்து யாரோ பூலோகத்தில் தள்ளி விட்ட மாதிரி விழித்து கொண்டாள் பவித்ரா...

அடுத்த நொடி அந்த சூழ்நிலை புரிய, அவசரமாக கட்டிலின் மறுபுறம்  உருண்டவள் துள்ளி குதித்து வெகுண்டு எழுந்தாள்...

பின் வேகமாக ஒரு போர்வையை எடுத்து கொண்டு தன் பழைய இடமான சோபாவிற்கு விரைந்து சென்று அதில் படுத்து கொண்டவள் போர்வையால் மூடி கொண்டு முகத்தை மட்டும் வெளியில் காட்டியவள்

“ஹீ ஹீ ஹீ... பாஸ்.. இந்த பவித்ராவை நீங்க எப்பவும் ஜெயிக்க முடியாது... பாவம் என்னை பார்க்காமல் ஏங்கி வந்திருப்பீங்களே....உங்கள ஏமாற்ற வேண்டாம் னு தான் கொஞ்சம் ஆக்ட் பண்ணினேன்....

மத்தபடி யெல்லாம் ஒன்னும் இல்ல.. நீங்க தான் தோத்து போய்ட்டீங்க.. என்னை காணாமல் ஏங்கி நின்றது எனக்கு தெரிஞ்சது... நீங்க தான் லூசர்... “ என்று தன் கட்டை விரலை தலைகீழாக (thumbs down) காட்டி கண் சிமிட்டி சிரித்தாள்...

ஆதியோ உறைந்து நின்றான் அவளின் செய்கையை கண்டு... சில விநாடிகள் ஆனது அவனுக்கு நடந்தது புரிய

“சே... நான் பாட்டுக்கு சும்மா இல்லாமல் இப்படி வாயை விட்டு ஏமாந்துட்டனே... கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போச்சே...

இந்த ராட்சசி எப்ப, எப்படி மாறுவானே தெரிய மாட்டேங்குது.. “ என்று மனதுக்குள் புலம்பினான் அவளை ஏக்கமாக பார்த்து கொண்டே

ஏனோ  இன்று அவள் தன்னை விலக்கியதை கண்டு எப்பவும் வரும் கோபம் இன்று காணாமல் போயிருந்தது.. மாறாக அவளின் அந்த சிறு பிள்ளை தனத்தை கண்டு சிரித்து கொண்டான் உள்ளுக்குள்.... 

ஆனாலும் தன்னை மறைத்து கொண்டு      

“ஹா ஹா ஹா நான் உனக்காக ஏங்கினேனா?? குட்  ஜோக்.. நீ தான் என்னை காணாம மூக்கை உறிஞ்சறியேனு கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஆக்ட் பண்ணினேன்...

சரி.. இப்ப சொல்றேன் கேட்டுக்கோ...  இன்னும் ஒரு வாரம்.. ஏழே நாட்களில் உன்னை என்கிட்ட வர வைக்கிறேன் பார்....” என்று அவனும் சிரித்தான்...

“ஹ்ம்ம்ம்ம் இந்த 6 மாசமா நீங்களும் ட்ரை பண்றீங்க... அப்ப முடியாதது இந்த 7 நாட்களில் முடிக்க போறீங்களா?? குட் ஜோக் தான்..

எனிவே ஆல் தி பெஸ்ட் பாஸ்... குட் நைட்... “என்று தன் நாக்கை நீட்டி அவனுக்கு ஒழுங்கு காட்டி தன் போர்வையை மூடி கொண்டாள்...

“ராட்சசி... நல்லாதானே இருந்தா... கடைசியில இப்படி கவுத்திட்டாளே... “ என்று திட்டி கொண்டே அவனும் தன் படுக்கையில் விழுந்தான்...

இருவருக்குமே அந்த ஒரு வாரம் மனதை அழுத்தி வந்த பாரம் நீங்கி தொலைந்திருந்த உறக்கம் தானாக கண்களை தழுவியது...

இருவருமே ஒருவருக்கொருவர் தங்களை மறைத்து நடிப்பது தெரிந்தாலும் அதை ரசித்து கொண்டே உதட்டில் புன்னகை பூக்க அந்த ஒரு வாரத்தை திருப்பி பார்த்தவாறு நிம்மதியாக உறங்கினான் ஆதி...

பவித்ராவும் அவன் செய்கையையும் கடைசியாக தன்  மேல் படிந்த அவனின் ஏக்க பார்வையையும் நினைவு கூர்ந்து

“திருடா... கொஞ்சமாவது இறங்கி வர்ரானா பார்... தோத்துட்டேன் னு  ஒத்துக்கறதுக்கு இவ்வளவு முரண்டு பண்றான்.. இருக்கட்டும்.. இன்னும் கொஞ்சம் சுத்த விடறேன்..”. என்று சிரித்து கொண்டாள்....

“ஆமா...  இந்த ஏழு நாள் ல அப்படி என்ன செய்ய போறான்??  “ என்று யோசித்தவள், அவள் அறிவுக்கு எதுவும் தோன்றாமல் போக

“ஹ்ம்ம்ம் என்னதான் பண்றானு பார்க்கலாம்.. Let’s wait and see.”  என்று மீண்டும் சிரித்தவள் தன் போர்வையை விலக்கி அசந்து உறங்கும் அவனை மீண்டும் ஒரு முறை ஆசை தீர பார்த்து விட்டு கண்ணை மூடி நிம்மதியாக உறங்கினாள்...

பாவம்.. நாளை வரப்போகும் பெரிய அதிர்ச்சியை அறியாமல் இன்று சந்தோஷமாக+நிம்மதியாக உறங்கினாள் பவித்ரா...

 

என்னது மறுபடியுமா?? எப்பதான் இவங்க கண்ணா மூச்சி ஆட்டம் முடியும்??  அப்படீனு நீங்க புலம்பறது தெரியுது...

ஹீ ஹீ ஹீ... இன்னும் மூன்று அத்தியாயத்தில் நம்ம ஆதி + பவி குட்டியின் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திடலாம்....

யார் முதலில் பூனைக்கு மணி கட்டி இந்த கண்ணா மூச்சி ஆட்டத்தை முடிக்க  போகிறார்கள் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.. 

Comments

  1. Mam mudiyala evanga erandu peroda alappara

    ReplyDelete
    Replies
    1. ha ha ha sikkiram mudivukku kondu vanthidalam.. another 5 epis :)

      Delete

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!