உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-54
அத்தியாயம்-54
அன்று சனிக்கிழமை மிக அழகாக விடிந்தது...
தன் கணவனை ரிசீவ் பண்ணி இருவரும் வீட்டிற்கு
வந்து சேர அதிகாலை ஆகியிருந்ததால், அப்பொழுது உறங்க சென்றவள் நன்றாக அசந்து உறங்கி
கொண்டிருந்தாள்பவித்ரா...
மணி 9 அளவில் அவள் அலைபேசி ஒலிக்க, அந்த சத்தத்தில் மெல்ல தன்
இமைகளை பிரித்தாள்....
சுற்றிலும் பார்க்க, இன்னும் விடியாததை போல
இருந்தது...
“ச்சே.. அதுக்குள்ள யார் எழுப்பறது என்று திட்டி
கொண்டே எழுந்து செல்ல மனம் இல்லாமல் சோபாவில் படுத்து கொண்டே அந்த அதிகாலை
சம்பவங்களை அசை போட்டாள்...
தன்
கணவன் தன்னை அணைத்ததும் அவளை காரில் இருந்து அள்ளி கொண்டு வந்ததும்
நினைவில் வர, அவள்
கன்னங்கள் சிவக்க, மீண்டும் அந்த நினைவுகளை ஒரு முறை ஓட்டி
பார்த்து ரசித்து மகிழ்ந்தாள்....
அதற்கு இடையூறாக அவள் அலைபேசி மீண்டும் சிணுங்க, இந்த முறை வேற வழி இல்லாமல்
எழுந்து சென்று அதை எடுக்க, அவள் அம்மா பார்வதி தான் அழைத்திருந்தார்...
“என்னமா இந்நேரத்தில கால் பண்ணியிருக்க?? நிம்மதியா தூங்க விட மாட்டியா?? “ என்றாள் சிணுங்கியவாறு...
“என்னது?? இன்னும் தூங்கறியா?? மணி என்னாவதுனு பார்.. .இப்படி தூங்கினினா மாப்பிள்ளைய எப்படி கவனிச்சு ஆபிஸ்க்கு
அனுப்புவியாம்?? “
என்று அவளுக்கு ஒரு குட்டி லெக்சர் அடித்தார்....
“சரி.. மாப்பிள்ளை வந்திட்டாரா?? அத கேட்கத்தான் போன்
பண்ணினேன்... “ என்றார்...
“ஹ்ம்ம்ம்ம் வந்திட்டார் மா... “ என்றவள்
அப்பொழுது தான் அவன் படுக்கையை பார்க்க, அவன் அங்கு இல்லை...
“எழுந்து ஜாக்கிங்க் போய்ட்டான் போல...
சின்சியர் சிகாமணிதான்... “ என்று மனதுக்குள் திட்டியவள் பின் சிறிது நேரம் தன்
அன்னையிடம் பேசி விட்டு அலைபேசியை வைத்தாள்..
பின் ஜன்னல் அருகில் சென்று திரை சீலையை விலக்க, காலை வெயில் சுளீரென்று
அடித்தது....
அவள் அசந்து தூங்குவதை கண்டு அந்த திரை சீலைகள்
நன்றாக மூடி விட்டிருந்தான் ஆதி... அதை
புரிந்து கொண்டதும்,
“திருடா... இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை...
ஆனா பொண்டாட்டிகிட்ட தோற்கறது,
பிடிவாதத்தை விட்டு கொஞ்சம் இறங்கி வர மட்டும் கசக்குது...
US ல இருந்தப்ப மட்டும் மணிக்கொரு
தரம் போன் பண்ணி மிஸ் யூ பேபி னு கொஞ்சுனான்...இப்ப பார் கண்டுக்கவே
இல்லை...திருடா... “ என்று மனதுக்குள்
செல்லமாக தன் கணவனை திட்டி கொண்டே குளியல்
அறைக்குள் சென்றாள்..
தன் கணவனுக்கு நிகராக தன் பிடிவாதத்தில் இருந்து இறங்காமல் அவனிடம் தோற்க பிடிக்காமல்
அவனை இழுத்தடிப்பது அவளும் தான் என்பதை அறியவில்லை...
அவன் அருகில் இல்லாதப்போ அவனுக்காக ஏங்கிய ,அவன் குரலையாவது கேட்க துடித்து, வெக்கத்தை, ஈகோவை விட்டு பல முறை அவளே அவனை
அழைத்து பேசியதும் அவனுக்காக ஏங்கி
கண்ணீர் விட்டதும் மறந்துவிட, அவன் அருகில் இருந்தால்
அவளுடைய ஈகோ தலை தூக்கி விடுகிறது...
அதனால் தான் அவன் சொல்லிய அவள் தோற்றுவிட்டாள்
என்பதை ஏற்று கொள்ள முடியாமல் அவனை தள்ளி நிறுத்தினாள்... இதை எல்லாம் உணரவில்லை
பவித்ரா...
இதை
உணர்ந்திருந்தால் அடுத்து வரும் பெரும் வலி வேதனைகளை தவிர்த்திருக்கலாமோ???
தன் கணவனை நினைத்த படியே குளியல் அறையில்
இருந்து ரெப்ரெஸ் ஆகி ஒரு பாடலை
முனுமுனுத்தபடியே வெளியில் வந்தாள்.... அப்பொழுது ஆதியின் அலைபேசி ஒலித்தது...
சார்ஜ் போட்ட நிலையில் அவனுடைய பெர்சனல்
அலைபேசியை விட்டு சென்றிருந்தான்...
முதலில் அழைக்கும் பொழுது அவன் அலைபேசியை எப்படி
எடுப்பது என்று யோசித்து எடுக்க வில்லை... மீண்டும் ஒலிக்க, தயங்கியவாறு சென்று அந்த
அலைபேசியை சார்ஜரிலிருந்து விடுவித்து அதன் திரையை பார்க்க,
அதில்
“ஸ்வீட்டி.. “என்ற பெயர் ஒளிர்ந்தது..
அதை கண்டதும் யார் இந்த ஸ்வீட்டி என்ற யோசனையுடன் அதை எடுக்கலாமா வேண்டாமா என்று
யோசித்தவள் பின் துணிந்து அந்த அழைப்பை ஏற்றாள் பவித்ரா...
அதை காதில் வைத்ததும் ஹலோ என்று சொல்லு முன்னே
“ஹாய்
ஆதி டார்லிங்... குட் மார்னிங்.. “
என்று குழைந்தது ஒரு பெண் குரல்....
அந்த குரலை கேட்டதுமே ஏனோ பவித்ராவுக்கு பிடிக்கவில்லை..
பவித்ரா ஏதோ
சொல்லும் முன்னே அந்த குரலுக்கு சொந்தக்காரி தொடர்ந்தாள்...
“சாரி டார்லிங் .. காலையிலயே தொந்தரவு பண்ணிட்டனா?? என்ன பண்றது ப்ளைட்ல
இருந்து இறங்கி இங்கு வந்தும் எனக்கு தூக்கமே வரலை..
உங்க
கூட ஸ்பென்ட் பண்ணின அந்த 3 நைட்ஸ்.... சான்சே இல்ல.. இப்பவும் என்னை
இம்சிக்குது...தூக்கமே வரலை....அதான் உங்க குரலை கேட்கணும் போல இருக்குனு கால்
பண்ணேன்.. சாரி டார்லிங்... “ என்று
இன்னும் ஏதோ உளறிக் கொண்டிருந்தாள்..
அதை கேட்டு கடுப்பான பவித்ரா
“ஹலோ.... கொஞ்சம் நிறுத்தறீங்களா?? மறுபக்கம் யார் லைன்ல
இருக்கறாங்கனு பார்த்துட்டு பேசுங்க... “ என்று பொரிந்தாள் பவித்ரா..
“ஓ.. சாரி... இது ஆதி டார்லிங் ஓட நம்பர் தான?? ... “ என்றாள் அதே குழைந்த குரலில் மீண்டும் ஒரு முறை தான் அழைத்த
எண்ணை சரி பார்த்தபடியே...
“ஹ்ம்ம்ம் நம்பர் அவருடையது தான்... ஆனா
கேட்கறது அவர் இல்லை.. “ என்றாள் பவித்ரா நக்கலாக...
“ஓ... சாரி.. ஆதி டார்லிங் அவர் போன யார் கிட்டயும் கொடுக்க
மாட்டார்.. வேற யாரையும் எடுக்கவும் விட மாட்டார்... அதான் அவர் தான் போன
அட்டென்ட் பண்ணியிருப்பார்னு பேசிட்டேன்... சாரி... ” என்று குழைந்தாள்
மீண்டும்..
அவள் வார்த்தைக்கு வார்த்தை தன் கணவனை டார்லிங்
என்று அழைப்பதில் இன்னும் கடுப்பானாள் பவித்ரா... உள்ளுக்குள் அவளை திட்டி கொண்டே
“ஹ்ம்ம்ம் அவர் வெளில போயிருக்கார்... அப்புறம்
பண்ணுங்க... “ என்று அழைப்பை துண்டிக்க போக மறுமுனையில் இருந்தவள்
“ஒரு நிமிஷம்.. நீங்க ?? “
என்றாள் சந்தேகமாக
“ஹ்ம்ம்ம்ம் நான் அவர் வைப்.. “ என்றாள் அதே
கடுப்புடன்...
“ஓ.. பவித்ரா வா... உன்னை பத்தி டார்லிங் நிறைய
சொல்லி இருக்கார்... “ என்றாள் சிரித்தவாறு..
அதை கேட்டதும் பவித்ராவுக்கு அவள் பேச்சில்
கொஞ்சம் இன்ட்ரெஸ்ட் ஆனாள்.. என்னை பற்றி சொல்லியிருக்கிறான் என்றால் அவ்வளவு
க்ளோசா இவ?... ஆனால்
இவளை பத்தி என்கிட்ட எதுவுமே சொல்லலையே... சரி
யார்னு கேட்கலாம்.. “ என்று
கொஞ்சம் ஆர்வத்தில்
“ஹ்ம்ம்ம்ம் நீங்க ?? “என்றாள்...
மறுமுனையில் இதற்காகவே காத்து கொண்டிருந்தவளை
போல
“நான்...
ஆதி டார்லிங் ஓட எக்ஸ் கேர்ள்
பிரெண்ட்... “ என்றாள் சிரித்தவாறு அந்த ஸ்வீட்டி...
அதை கேட்டு உள்ளுக்குள் அதிர்ந்தாள் பவித்ரா....
“சே... புருசனோட எக்ஸ் கேர்ள் பிரெண்ட் னு
பெருமையா அவன் பொண்டாட்டிகிட்டயே போன் பண்ணி சொல்றாளே... அந்த அளவுக்கா கலி முத்தி
போச்சு... இவளையெல்லாம் என்ன செய்யலாம்?” என்று கடுகடுப்புடன் அவளை
திட்டிகொண்டு போனை வைக்கப் போக அதற்குள்
அந்த ஸ்வீட்டி மேலும் தொடர்ந்தாள்...
“பவித்ரா... நீ ரொம்ப கொடுத்து வச்சவ.. ஆதி டார்லிங்
மாதிரி ஒரு ஹஸ்பன்ட் கிடைக்க... நான் அவரோட இருந்தப்ப எவ்வளவு என்ஜாய்
பண்ணினேன் தெரியுமா?? ஆனால் உன்னை கல்யாணம் பண்ணின பிறகு டார்லிங் என்னை கண்டுக்கவே இல்ல...
பட் பைவ் டேஸ் முன்னாடி மீண்டும் நியூயார்க் ல
டார்லிங் ஐ பார்த்தப்போ எவ்வளவு ஹேப்பியா இருந்துச்சு...
அவருக்குமே பழச மறக்க முடியல போல... இரண்டு
பேருமே ஒன்னாதான் ஹோட்டல் ல
தங்கியிருந்தோம்...I had wonderful
nights with him.. அந்த மூன்று நாட்களும் மீண்டும் என் வாழ்வில் மறக்க
முடியாத நாட்கள்.. “ என்று அவள் அனுபவித்து சொல்ல, பவித்ரா
அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றாள்...
மீண்டும் ஏதோ
உளறியவள்
“ஒரு
சின்ன ஹெல்ப் பண்ணனும் பவித்ரா... நான் டார்லிங் கூட இருந்துட்டு
கிளம்பறப்போ அவசர அவசரமா பேக் பண்ணினோம்.. அதுல என்னொட ட்ரெஸ் ஒன்னு மிஸ் ஆகுது..
அந்த ட்ரெஸ் பெரிய மேட்டர் இல்ல... ஆனா அது ஆதி டார்லிங்
எனக்கு ஆசையா பிரெசென்ட் பண்ணினது.. அதான் அத மிஸ் பண்ண எனக்கு மனசு வரல...
அது அவரையே மிஸ் பண்ற மாதிரி இருக்கும்...
நீ அவர் பெட்டியில் அந்த ட்ரெஸ் இருக்கானு
பார்த்து சொல்றியா?? “என்றாள் மீண்டும் அதே கொஞ்சலுடன்...
அதை கேட்டு தன்
தலையில் இடி விழுந்ததை போல அதிர்ச்சியில் முழித்தாள் பவித்ரா...
அவள் சொல்வதின் அர்த்தம் சில விநாடிகள்
கழித்து புரிய, உள்ளுக்குள் இடிந்து நொருங்கி
போனாள்...
“இல்லை.. இவள் பொய் சொல்றா... என் புருசன் அப்படி எல்லாம் நடந்திருக்க மாட்டார்..
“என்று மனதுக்குள் உருபோட,
அதையே அந்த ஸ்வீட்டியிடம் சொன்னாள்...
“ஏய்.. நீ
பொய் சொல்ற.. அவர் அப்படி எல்லாம் உன் கூட தப்பா நடந்திருக்க மாட்டார்... “
என்றாள் குரல் நடுங்க....
“ஹா ஹா ஹா.. நான் ஏன் பொய் சொல்லணும் பவித்ரா... நான் என்ன உங்கிட்ட
உன் புருசனை கொடு னு பங்குக்கா வர்ரேன்...
சட்டபடி நீ தான் அவருக்கு மனைவி..
என்ன அப்பப்ப டார்லிங் இந்த மாதிரி வெளி
சாப்பாடும் டேஸ்ட் பண்ணுவார்... வீட்டு சாப்பாடே எத்தனை நாளைக்கு சாப்பிட முடியும்?? அதான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆ இருந்தார்..
பெரிய இடத்துல இதெல்லாம் சகஜம் பவித்ரா...
நீயும் இதை எல்லாம் கண்டுக்காம இருக்க பழகிக்க....
அப்படியும் நான் சொல்றதுல நம்பிக்கை இல்லைனா
நான் வேணா நாங்க நெருக்கமா இருக்கிறப்போ எடுத்த போட்டோஸ் இருக்கு.. அனுப்பி வைக்கட்டுமா??
இல்லைனா நீ போய் அவர் பெட்டிய திறந்து பார்..
கண்டிப்பா என் ட்ரெஸ் அதுலதான் இருக்கும்ம்... அப்படியும் நான் சொல்றதில்
நம்பிக்கை இல்லைனா நீ டார்லிங் கிட்டயே
கேட்டுக்கோ...
இப்ப நீ
கொஞ்சம் பெட்டிய செக் பண்ணி சொல்றியா?? “ என்று தன்
காரியத்துலயே கண்ணாக இருந்தாள் ஸ்வீட்டி...
பவித்ராவிற்கு என்ன செய்வது என்று
தெரியவில்லை... அவள் மூளை வேலை நிறுத்தம் செய்ததை போல ப்ளாங்க் ஆ இருந்தது.. ஏதோ
அந்த ஸ்வீட்டியின் வார்த்தைக்கு கட்டு பட்டவளாக ஆதியின் பெரிய பெட்டியை திறந்து
ஆடைகளை செக் பண்ணி பார்க்க,
அந்த ஸ்வீட்டி சொன்ன மாதிரியே ஒரு பெண்ணின் ஆடை
இருந்தது...
அதை
எடுத்து பார்த்தவள்
அது ஒரு
மாடர்ன் ட்ரெஸ்.. கொஞ்சம் ஆபாசமாக அங்கங்களை எடுத்து காட்டும் மேல் நாட்டில்
அணியும் வகையில் இருந்த ட்ரெஸ் அது... அதை
பார்க்கும் பொழுதே அருவருப்பாக இருந்தது...
அதற்குள் மறுமுனையில் லைனில் இருந்த அந்த ஸ்வீட்டி,
“செக் பண்ணினியா பவித்ரா?? இருந்ததா?? “ என்றாள் ஆர்வமாக...
அவளிடம் மாத்தி சொல்ல முடியாமல்
“ஹ்ம்ம்ம்ம்
“என்று மெல்ல முனகினாள் பவித்ரா...
“தேங்க் காட்.. அந்த ட்ரெஸ் தான்... அது டார்லிங் எனக்கு பிரசென்ட் பண்ணினது...
அதை போட்டு கிட்டுதான் ஒரு நாள் இரவு
புல்லா அவரோட நான் நியூயார்க் ஐ சுத்தினோம்.... அதை போட்டப்போ நான் அதுல சூப்பரா இருக்கேனு என்னை
அப்படியே கட்டி பிடிச்சு கிட்டார்..
அதனால தான் அந்த ட்ரெஸ் எனக்கு ஸ்பெஷல்..
அதை மிஸ் பண்ணக் கூடாதுனு மனசு
அடிச்சுகிட்டது...
எனிவே நீ
அதை அவர் பெட்டியிலயே வச்சுடு..
நான் டார்லிங் கிட்டயிருந்து கலெக்ட் பண்ணிக்கிறேன்.. இத சாக்கா வச்சு அவர
மறுபடியும் சந்திக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமே... ஐ ம் சோ லக்கி... “ என்று குதித்தவள்
“ஓகே பவித்ரா... நான் அப்ப போன வச்சிடறேன்..
டேக் கேர்... “ என்றவாறு போன வைத்தாள் வில்லங்கமான சிரிப்புடன் அந்த ஸ்வீட்டி...
இங்கு பவித்ராவோ பேயறைந்த மாதிரி அப்படியே
தலையில் கை வைத்து அருகில் இருந்த ஷோபாவில் தொப்பென்று அமர்ந்தாள்....
“இவள் சொல்வது உண்மையா?? பொய்யா??
ஆனால் அவளுக்கு பொய் சொல்ல என்ன அவசியம்?? அவளே ஒரு பணக்காரி
தான் போல... பணத்துக்காக என்னிடம் பொய் சொல்ல தேவையில்லை..
அதோடு அவள் பேச்சில் எதுவும் பொய் இருப்பதாக
தோன்றவில்லை..
அப்படி என்றால் அவள் சொல்வது உணமை... என்
கணவன் வேற ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்திருக்கிறான்...”
அதை
நினைக்கையிலயே அருவெருப்பாக இருந்தது அவளுக்கு...
“சே.. இவன போய் நல்லவன் திருந்திட்டான் னு நினைச்சேனே.. கடைசியில அவன் புத்திய
காட்டிட்டானே..
கட்டிய பொண்டாட்டி இருக்க எப்படி அவனுக்கு வேற
ஒரு பொண்ணோட.. சீ.. “ என்று தன் கணவனை
திட்டி கொண்டிருக்கையிலயே
“ஹாய் பேபி.. “
என்றவாறு கதைவை திறந்து கொண்டு
உள்ளே வந்தான் ஆதி..
வந்தவன்
பவித்ராவின் அருகில் சென்று
சோபாவில் அவள் அருகில் நெருங்கி அமர்ந்தவன் ,
”என்ன பேபி .. அதுக்குள்ள
எழுந்திரிச்சுட்ட.. நீ தூங்கறத பார்த்தா நீதான் US லயிருந்து
ரிட்டர்ன் வந்தமாதிரி இருந்தது... எப்படியும் நீ நாளைக்கு தான் எழுந்திருப்பேன் னு
நினைச்சேன்...
ஆனாலும் நீ நைட் அப்படி பண்ணியிருக்க கூடாது.. “
என்று குறும்பாக சிரித்தவாறு அவள் கையை எடுத்து அவன் கைகளுக்குள் வைத்து கொண்டு
குறும்பாக பார்த்தான் பவித்ரா வை அவள் உள்ளுக்குள் கொதித்து கொண்டிருப்பதை
அறியாமல்...
அவன் பார்வைக்கு அவளும் கொஞ்சம் இழகினாலும் அதே நேரம் அந்த ஸ்வீட்டி சொன்னது நினைவு வர, அவர்கள் இருவரும் நெருக்கமாக
இருக்கிற மாதிரி காட்சி தோன்ற, உடனே தன் கையை அவன் பிடியில் இருந்து இழுத்துக் கொண்டு
“சீ... என்னை தொடாதிங்க.. “என்று அருவருப்புடன்
முகத்தை சுழித்து எழுந்து தள்ளி நின்று கொண்டாள்...
அவளின் இந்த செய்கையால் திடுக்கிட்டவன்,
“என்னாச்சு இவளுக்கு... கொஞ்ச நேரம் முன்னாடி
நல்லா தானே இருந்தா?? என்னைக் காணாத ஏக்கம் அப்படியே தெரிந்ததே.. அவளை தூக்கி கொண்டு
வரும்பொழுது அப்படி குழைந்து இருந்தாளே...
அதுவும் கடைசியில் வெறும் ஈகோவிற்காக தான் தன்னை
விலக்கினாள்... அதுவும் அவன் வேற ஒரு திட்டம் வைத்திருந்ததால் அவளை
விட்டுவிட்டான்...
தனக்காக ஏங்கிய அதே கண்கள் தன்னை கண்டதும்
அருவெருப்பாக சுருங்க,
ஒன்றும் புரியாமல் குழம்பி போனான் ஆதி ...
“என்னாச்சு பேபி?? .. ஏன்
இப்படி ரியாக்ட் பண்ற?? “ என்றான் அவள் செயலின்
அர்த்தம் புரியாதவனாய்...
“ஹ்ம்ம்ம் இனிமேலும் நீங்க நடிக்க வேண்டாம்..
நீங்க போட்ட நல்லவன் வேசம் எல்லாம் கலஞ்சு போச்சு.. “ என்றாள் முகத்தில் வெறுப்புடன்..
“வேசமா?? என்ன வேசம்?? யார் வேசம் போடறா?? “ என்றான் புரியாதவறு..
“ஹ்ம்ம்ம் தூங்கறவங்கள எழுப்பிடலாம்.. தூங்கற
மாதிரி நடிக்கிறவங்கள எழுப்ப முடியாதாம்...
அது மாதிரி நீங்க நடிச்சதெல்லாம் போதும்..
எனக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சு.. “என்றாள் கண்கள் இடுங்க...
“ஏய்... குழப்பாத.. புரியறமாதிரி நேரடியாவே
சொல்லு.. இப்படி சுத்தி வளச்சு சொல்லாம
நேராவே சொல்..” என்றான் சற்று
கோபத்துடன்....
“ஹ்ம்ம்ம் சரி நேராவே கேட்கறேன்.. நீங்க
நியூயார்க் ல உங்க பிரெண்ட் ஐ பார்த்தீங்களா?? “ என்றாள்..
“எந்த பிரெண்ட்.?? எனக்கு அங்க நிறைய பிரெண்ட்ஸ்
இருக்காங்க..அதுல யாரை சொல்ற ?? “
“ஓ.. இதுல வேற நிறைய பிரெண்ட்ஸ் ஆ?? “ என்று மனதுக்குள் பொருமியவள்
“சரி
கேர்ள் பிரெண்ட் யாரையாவது
பார்த்திங்களா?? “என்றாள்
“அப்படி யாரும் இல்லையே.. “ என்றான் யோசித்தவாறு..
“பொய் சொல்லாதிங்க..பார்க்காம எப்படி அவளை
செல்லமா ஸ்வீட்டி னு சேவ் பண்ணி
வச்சிருக்கீங்க “ என்றாள் தலையை சரித்து...
“ஓ.. அவளா?... அவ ஒரு காலத்துல என்
பின்னாடி சுத்தினா..அவளுக்கும் நீ இப்படி கேள்வி கேட்கறதுக்கும் என்ன
சம்பந்தம்?? “
“ஒரு
காலத்துல சுத்தினவளைத்தான் ஸ்வீட்டி னு ஆசையா சேவ் பண்ணி
வச்சிருக்கீங்களா?? “ என்றாள் நக்கலாக
“ஹேய்... அவ
பேரே ஸ்வீட்டி டி ... ஸ்வீட்டிய ஸ்வீட்டினு சேவ் பண்ணாம வேற என்ன சேவ்
பண்றதாம்.. “என்றான் குறும்பாக சிரித்தவாறு..
அதில் இன்னும் கடுப்பானவள்
“நீங்க எப்படி வேணா சேவ் பண்ணிட்டு போங்க... அவ
கூட ஒரே ஹோட்டல் ல தங்கினீங்களா?? “ என்றாள் மீண்டும் அடிபட்டவளாக...
“ஆமாம்.... அதுக்கு என்ன இப்ப?? “ என்றான் இன்னும் கடுப்பாகி..
அவன் இல்லை என்று மறுப்பான் என்று
எதிர்பார்த்தவளுக்கு அவன் ஒத்துக்கொண்டதும் தரையே நழுவினது போல இருந்தது...அதில்
கொதித்தவள் அவன் முடிக்கு முன்னே பொரிய ஆரம்பித்திருந்தாள் பவித்ரா...
“சீ... நீங்க திருந்தவே இல்ல... அப்படியே தான்
இருக்கீங்க.. சரியான வுமனிஸ்ட்.. கட்டின பொண்டாட்டி இருக்க, இன்னொருத்தி கூட ஆட்டம் போட்டு
இருக்கீங்களே .. எங்க போய் சொல்ல...
என் புருசன் மத்த பொண்ணுங்களை பார்க்க
மாட்டார்.. பழசை எல்லாம் விட்டுட்டார்
னு எவ்வளவு நம்பிக்கையா
இருந்தேன்.. சே.. அதுல மண்ண அள்ளி போட்டுட்டீங்களே...பழைய புத்திய காட்டிட்டீங்களே..
சரியான வுமனிஸ்ட் “ என்று பொரிய ஆரம்பித்து பின் அழுகையில் முடித்தாள்...
அவனுக்கு இன்னுமே ஒன்றும் புரிய வில்லை...
“என்னாச்சு? எதை பத்தி சொல்றா?? “
என்று குழம்பியவன் அவள் ஒப்பாரி வைக்கவும்
“வில் யூ ப்ளீஸ் ஷட் அப்?? “ என்று கத்தியவன்
“என்ன சொன்ன?? திருப்பி சொல்.. “
என்றான் இடுங்கிய கண்களுடன்.
“ஹ்ம்ம்ம் நீங்க ஒரு சரியான வுமனிஸ்ட்.. உங்கள போய் நல்லவன் னு
நினைச்சு ஏமாந்திட்டனே .. “என்று அவள்
முடிக்கு முன்னே ஓங்கி அறைந்திருந்தான் அவள் கன்னத்தில்..
“என்னடி சொன்ன?? நான் வுமனிஸ்ட் ஆ?? வுமனிஸ்ட் னா
அர்த்தம் தெரியுமா உனக்கு??
கண்ட பொண்ணுங்க பின்னாடி அலையறவன்... ஏன் நான் அப்படியா அலையறேன்..??
ஒரு காலத்துல நான் கொஞ்சம் தடம் மாறி உல்லாசமாக
இருந்திருக்கலாம்... ஆனா உன்னை
பார்த்ததில் இருந்தே இந்த ஒரு வருடமா அது எல்லாம் விட்டு போச்சு...
அப்படி பொம்பளைங்க மே லபாயறவனா இருந்தா கட்டின
பொண்டாட்டி கிட்ட உன் சம்மதம் வரைக்கும் நான் ஏன் வெய்ட் பண்ணி கிட்டிருக்கேன்...
உன் விருப்பம் இல்லாமல் நான் எல்லை மீறி
இருக்கேனா?? இன்னை
வரைக்கும் உன் சம்மதுக்காக காத்துகிட்டிருக்கேனே... நான் வுமனிஸ்ட் ஆ?? “ என்று உருமினான்..
“ஹ்ம்ம்ம்ம் நீங்க சொல்ற கதையெல்லாம் நம்ப
நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்ல... அப்படியே
நீங்க சொல்றது உண்மையா இருந்தா இதுக்கு என்ன அர்த்தம்?? இது எப்படி வந்தது உங்க பெட்டியில்?? “ என்று அவன் பெட்டியில் இருந்த
அந்த ட்ரெஸ்ஷை எடுத்து காட்டி அவளும் கோபமாக முறைத்தாள்....
அதை கண்டவன் அவளை ஒரு வெறித்த பார்வை பார்த்து
“சோ.... நீ
என் பெட்டியில் இருக்கிற இந்த ட்ரெஸ் ஐ நம்பற... ஆனா என்னை நம்ப மாட்ட?? அப்படிதான..”
என்றான் இடுங்கிய கண்களுடன்..
“சீ.... இவ்வளவு கேவலமா என்னை எடை போடற உன்னை
போய்... “என்று ஏதோ சொல்ல வந்தவன் பாதியில் நிறுத்திக் கொண்டான்..
“பண்ணையில அந்த நந்தினி அப்படி ஒரு பழி போட்டப்ப
கூடஅதை நம்பாமல் என்னை நம்பினியேனு எவ்வளவு சந்தோசப் பட்டேன் தெரியுமா?? அதை எல்லாம் பொய்யாக்கிட்டியே டி பாவி..
கேவலம்
ஒரு பெண்ணோட ட்ரெஸ் என் பெட்டியில
இருந்தா நான் அவ கூட இருந்திட்டு
வந்திருக்கேன் நம்பற அளவுக்கா நீ சீப் ஆ போய்ட்ட?? இல்ல நான்தான் அந்த அளவுக்கு சீப்
ஆயிட்டேனா??
“லுக் பவித்ரா.. இப்ப சொல்றேன் கேடுக்கோ.. அந்த ஸ்வீவிட்டி
யோட முன்னால் சுத்துனது உண்மைதான்.. ஆனால் நம்ம கல்யாணத்துக்கு பிறகு அத எல்லாம்
விட்டுடேன்.. இப்ப கூட நியூயார்க் ல நான் தங்கின ஹோட்டல் ல தான் அவளும் இருந்தா..
ஆனா வேற வேற ரூம்...
நீ காமிச்சியே.. இந்த ட்ரெச்ஷை போட்டு கிட்டு
வந்து என்னை மயக்க ப்ளான் பண்ணினா.. ஓங்கி அறைஞ்சுட்டு ஜாக்கிரதயா இருக்க
சொன்னேன்.. அவ அப்பயும் அடங்கலை போல இருக்கு... அதுதான் இப்படி ஒரு ட்ராமா பண்ணியிருக்கா.. அவளுக்கு இருக்கு...
போதுமா இந்த விள்க்கம்??
என்னோட வளர்ச்சிய புடிக்காம நிறைய பேர் இந்த
மாதிரி நிறைய கதை சொல்லுவாங்க.. அதை
எல்லாம் நம்பிகிட்டு நீ வந்தா
ஒவ்வொன்னுக்கும் என்னால விளக்கம் சொல்லிகிட்டிருக்க முடியாது.. அப்படி சொல்லவும்
எனக்கு பிடிக்காது...
மைன்ட் இட்...
இப்படி அடிப்படை நம்பிக்கையே இல்லாத உன்னோட
வாழறது வேஸ்ட்.... இனிமேல் என் மூஞ்சியிலயே முழிக்காத... கெட் லாஸ்ட் “ என்றவாறு காலை வேகமாக தரையில் உதைத்து கதவை
திறந்தவன் அதை வேகமாக அறைந்து சாத்திவிட்டு வெளியேறினான்...
பவித்ராவோ இன்னும் அtதிர்ந்து அமர்ந்தாள்...
கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு நடந்தது புரிந்தது... அந்த ஸ்வீட்டியின் நாடகமும்
புரிந்தது
“சே .. இப்படி அவசரபட்டுட்டேனே...பெண் புத்தி
பின் புத்தி என்று சொல்வது நானும்
உதாரணமாயிட்டனே...
எப்படி இதை
வேற கோணத்துல இருந்து யோசிக்காம போனேன்?? .. எவ்வளவு பெரிய பழி சுமத்தினப்போ, ஏன் அந்த நந்தினியின் ஆட்டத்தை, அவள் தன் கணவனுடன்
நெருக்கமாக இருப்பதை போல நடித்ததை நேரில் பார்த்தப்ப கூட எவ்வளவு நம்பிக்கையா
இருந்தென் என் புருசன் தப்பு பண்ணி இருக்க மாட்டான் என்று...
ஆனால் இப்ப எப்படி இப்படி அவசரபட்டேன்??? எல்லாம் அந்த ஸ்வீட்டி.. பேர
பார் ஸ்வீட்டியாம் ஸ்வீட்டி..
அவளால வந்தது..என்னமா மாத்தி பேசி அவமேல
சந்தேகம் வராத மாதிரி பேசி அவ சொன்னதை என்னை நம்ப வச்சுட்டாளே...
படுபாவி... இப்ப நான் எப்படி இவனை சமாதான
படுத்துவது?? ஒரு
நாளும் என் மேல கோவிச்சுகிட்டு போனதில்லையே... எல்லாம் என்னால... என் அவசர புத்தியால... “ என்று தன்னையே
நொந்தவாறு...
பின் சிறிது நேரம் கழித்து தன் அலைபேசியை
எடுத்து அவன் பெர்சனல் எண்ணுக்கு அழைக்க, அது முழுவதுமாக அடித்து ஓய்ந்தது.. அவள் அழைப்பை ஏற்க
வில்லை...
வாட்ஸ்அப்பில் சென்று ”சாரி.... “ என்று பலமுறை
மெசேஜ் பண்ணியும் அவன் பதில் எதுவும் அனுப்பவில்லை... இன்னும் தன்மேல் கோபமா
இருக்கான் போல..
“என்ன செய்யலாம்?? “ என்று மீண்டும் அவன் எண்ணிற்கு அழைக்க
அது இப்பொழுது ஸ்விட்ச் ஆப்
ஆகியிருந்தது...
“என் கூட பேச பிடிக்காமல் ஆப் பண்ணிட்டானே...
சே.. எவ்வளவு ஆசையா வந்திருப்பான்..
எல்லாத்தையும் சொதப்பிட்டியே பவித்ரா...” என்று திட்டி கொண்டே தோட்டத்தில் சிறிது
நேரம் உலாவினாள்... பின் திரும்ப ஆறைக்கு வர, இன்னும் அவள் தலை வெடிக்கும் போல இருந்தது..
அவனின் அந்த கோப பார்வையும் வெறுத்த பார்வையும்
மாறி மாறி வந்து அவளை கொன்றது.... அதற்கு மேல் தாங்க முடியாமல் கிளம்பி தங்கள் நகை கடைக்கு சென்றாள் பவித்ரா...
Comments
Post a Comment