உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-55
அத்தியாயம்-55
அன்று வார விடுமுறை என்பதால் பெண்கள்
கூட்டம் அலைமோதியது... இப்பொழுது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று நம்பர்
ஒன் னாக பிரபலமடைந்திருந்தது அந்த கடை ..
அதோடு அக்சைய திருதியை வரவிருப்பதால் சின்ன
நகையாவது வாங்க வேண்டும் அதுவும் அவர்களுக்கு பிடித்த மாடர்ன் டிசைனில் வேண்டும்
என்று பெண்கள் படையெடுத்து இருந்தனர்...
இந்த மாதிரி கூட்டல் நெரிசல் இருக்கும்
காலங்கலில் கடையை சீக்கிரமே திறந்து விடுவர். பவித்ராவும் சரண்யாவும் சீக்கிரமே
வந்து விடுவர்...
இன்று ஆதி திரும்பி வருவதால் இன்று ஒரு நாள்
விடுப்பு சொல்லி விட்டு சரண்யாவை பார்த்து கொள்ள சொல்லியிருந்தாள் பவித்ரா...
விடுப்பு சொல்லி விட்டு சென்றவள் கடைக்கு
வந்திருக்கிறாளே.. என்று ஆச்சர்யமாக பார்த்த சரண்யா கண்ணால் ஜாடை காட்டி என்ன?? ஏன் கடைக்கு வந்த என்று
கேட்டாள்...
பவித்ராவும் ஒன்றும் இல்லை என்று தலையாட்டிம்
மெல்ல புன்னகைத்து அவளை கஸ்டமரை பார்க்க சொல்லி விட்டு தங்கள் அறைக்குள்
சென்றாள்...
அது
சரண்யாவும் பவித்ராவும் உபயோகிக்கும் அறை.. இருவருக்குமே இரண்டு சேர்
போடபட்டு பெரிய மேஜையும் இருந்தது.. அந்த கடையை பொருத்த வரை இருவருமே சமமாக மதிக்கபடுவர்..
சரண்யா வொர்க்கிங் பார்ட்னராக சேர்ந்தாலும் இது
வரை அதில் வந்த இலாபத்தை எடுத்து
கொண்டதில்லை.. அதில் வரும் இலாபத்தை அந்த கடையின் வளர்ச்சிக்கு முதலீடு செய்ய, அந்த கடை பெரிய அளவில் வளர்ந்து
இருந்தது..ஆதி கூட இருவரையும் பாராட்டியிருக்கிறான்
பவித்ரா தான் சரண்யாவை கட்டாய படுத்தி மாதா மாதாம் அவளுக்கு ஒரு
தொகையை அவள் அக்கவுண்டில் போட்டு விடுவாள்...
அந்த அறையின் உள்ளே சென்றதும் தன் சேரில்
அமர்ந்தவள் டேபிலின் மேல் பார்க்க, அங்கு ஆதியும் அவளும் கோவிலில் எடுத்து கொண்ட புகைப்படம்
ப்ரேம் போட்டு மேஜயில் வைத்திருந்தாள்..
அவள் பார்வை அதன் மேல் விழுந்தது... அப்பொழுது
அவன் கண்களில் ஒரு ஒளி தெரிந்தது..அவளையே ஆசையாக பார்த்து இருந்தான்..
ஆனால் இன்றோ அதே கண்ணில் அவளை பார்த்து வெறுப்பை
உமிழ்ந்தது நினைவு வர,
அதோடு இனிமேல் என் மூஞ்சியில முழிக்காத என்று அவன் திட்டியதும் கூட சேர்ந்து நினைவு வர
“சே.. என்னோட
அவசர புத்தியால அவனை இழந்து விடுவேனோ?? “ என்று மனம் கலங்கினாள்....
மீண்டும் ஒருமுறை அவன் எண்ணிற்கு அழைக்க அது ஸ்விட்ச்
ஆப் ஆகியே இருந்தது...
திரும்பவும் எதை எதயோ யோசிக்க, தலை வலிக்க ஆரம்பித்தது..
அதற்கு மேல் அங்கு இருக்க முடியாமல் எழுந்து அந்த அறையை ஒட்டி இருந்த குளியல் அறைக்கு சென்று நன்றாக நீரை அடித்து முகத்தை அழுந்த துடைத்தாள்...
பின் ஒரு முறை கண்ணாடியில் முகத்தை பார்த்து
கொண்டு வரவழைத்த புன்னகையுடன் வெளியில் வந்தாள்...
வழியில் தெரிந்த விற்பனையாளர் பிரிவில் இருந்த
பெண்கள் அவளை பார்த்து புன்னகைக் அவளும் ஒரு வெற்று புன்னகையை உதிர்ந்து அந்த
தளத்தை சுற்றி வந்தாள்...
எப்பவும் பளீரென்று சிரிக்கும் தங்கள் எஜமானி
இன்று பேருக்கு சிரித்ததை கண்டு அதிசயித்தனர்...இந்த மாதிரி எப்பவும் அவள்
இருந்ததில்லை... எப்பவும் கலகலவென்று பேசி சிரித்துக் கொண்டும் அவள் அந்த கடையின்
முதலாளி தொழிலாளி என்ற பாகுபாடின்றி எல்லாருடனும் இனிமையாக பழகுவாள்.. அதனாலயே
பவித்ராவை எல்லாருக்கும் பிடிக்கும்...
ஆனால் இன்று ஏனோ அவள் முகம் வாடியிருப்பதை போல இருக்க, ஒருவருகொருவர் ஜாடை காட்டி என்ன
என்று கேட்க, தெரியாது என்று தோளை குலுக்கினர்...
அப்பொழுது ஒரு வாடிக்கையாளர் விற்பனை பெண்ணிடம் ஏதோ வாக்குவாதம் பண்ணி
கொண்டிருந்தனர்.. அவர்களை கண்டதும் அவள் பிரச்சனையை பின்னுக்கு தள்ளி அங்கே
சென்றாள் பவித்ரா ...
அந்த விற்பனை பெண்ணும் அந்த தளத்தின் சூப்பர்
வைசராக நியமிக்கபட்டிருந்த பெண்ணும் அந்த நடுத்தர வயது பெண்மணியிடம் ஏதோ விளக்கி
கொண்டிருக்க, அவர் அதை
ஏற்று கொள்ளாமல் ஏதோ பேசி கொண்டிருந்தார்..
பவித்ரா அவர்கள் அருகில் சென்றாள்..
அவளை கண்டதும் அந்த சூப்பர் வைசர் அவளுக்கு
வணக்கம் சொல்லி
“மேம்.. இவங்க பொண்ணுக்கு மேரேஜ் க்காக ஜ்வெல்ஸ்
வாங்கினாங்க... அவங்க செலக்ட் பண்ணின
செயின் வெய்ட் அதிகமா இருக்கு.அந்த அளவுக்கு அவங்ககிட்ட பணம் இல்லையாம்...
அதை விட கொஞ்சம் கிராம் கம்மியா இருக்கிற செயின்
எடுத்துக்கோங்கனா அந்த டிசைன் அவங்களுக்கு பிடிக்கல..
அவங்க கேட்கற டிசைன் அவங்க சொல்ற பட்ஜெட்ல
புதுசாவும் செய்ய முடியாது.. அதான் அவங்களுக்கு எக்ஸ்ப்லையின் பண்ணிகிட்டிருக்கேன்
மேம் ..நானும் அதிக பச்ச டிஸ்கவுன்ட் போட்டுட்டேன் மேடம்..அப்பவும் மீதி வர்ற பணத்த
கட்ட முடியாதுங்கறாங்க.. “ என்று
விளக்கினாள்...
பவித்ராவும் அந்த குடும்பத்தை பார்க்க, கொஞ்சம் லோயர் மிடில் கிளாஷை
போல இருந்தது..
அந்த கல்யாண பெண்ணின் கண்கள் அந்த செயின் மேலயே
இருந்தது.. அதையே ஆவலாக பார்த்து கொண்டிருந்தாள்..
அந்த பெண்மணியும் பவித்ராவிடம் வந்து
“பொண்ணு ரொம்ப ஆசை படறா மேடம்.. இதுவரைக்கும்
அவளுக்கு நாங்க நகையே வாங்கி கொடுத்ததில்லை..
முதல் முதலா கல்யாணத்துக்கு தான் வாங்க வந்தோம்... அவளுக்கு பிடிச்சதை வாங்கி கொடுக்க
முடியலைனு இருக்கு... நான் வேணா மாசா
மாசம் மீதி வர பணத்தை கொஞ்சம் கொஞ்சமா திருப்பி கொடுத்திடறேன்.. “ என்றார்
கெஞ்சலுடன்.. ,
சிறிது நேரம் யோசித்தவள்
“மஹா... எவ்வளவு பாக்கி வருது?? “என்றாள் பவித்ரா..
அவள் ஒரு தொகையை சொல்ல,
“சரி மஹா... அத என் அக்கவுண்ட் லயிருந்து
கழிச்சுக்கோ.. இவங்க கிட்ட இருக்கிற பணத்தை வாங்கி கிட்டு இவங்களுக்கு அந்த
நகையையே கொடுத்திடு.. “ என்றாள்..
அதை கேட்டு அந்த பெண்மணி மகிழ்ந்தாலும்
“மேடம்.. எங்களுக்காக நீங்க கையில இருந்து
கொடுக்க வேண்டாம்.. நான் மாசா மாசம் திருப்பிக் கொடுத்திடறேன்.. . “ என்றாள்
தயங்கியவாறு...
“இருக்கட்டும் மா... குரிப்பிட்ட தொகைக்கு மேல
நாங்க தள்ளுபடி கொடுக்க முடியாது.. அதான் நானே மீதி தொகையை கொடுத்திடறேன்..
இது உங்க பொண்ணு கல்யாணத்துக்கு எங்களோட
கல்யாண பரிசா இருக்கட்டும்... எந்த குறையும் இல்லாம உங்க பொண்ணை அவ புகுந்த
வீட்டுக்கு அனுப்பி வைங்க.. “ என்றாள் சிரித்தவாறு..
அதை கேட்டு அந்த அம்மா உச்சி குளிர்ந்து
போனாள்..
“நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் மா... உன்
புருசனோட ரொம்ப நாள் சந்தோசமா இருக்கணும்.. “ என்று வாழ்த்தி மனநிறைவோடு சென்றனர் அந்த
குடும்பத்தினர்...
பவித்ராவுக்கும் ஏதோ மன பாரம் கொஞ்சம் இறங்கியதை
போல இருந்தது..
பின் மற்ற தளங்களையும் சுத்தி வந்தவள் மதிய உணவு
இடவேளையின் பொழுது தங்கள் அறைக்கு திரும்பினாள்..
பவித்ரா வந்ததில் இருந்தே அவளை கவனித்து வந்த
சரண்யா அவளிடம் ஏதோ மாற்றம் இருப்பதை கண்டு கொண்டு அவளுக்காக காத்து
கொண்டிருந்தாள் சரண்யா...
பவித்ரா அறைக்கு திரும்பவும் சரண்யாவும்
அறைக்குள் வந்தாள்..
“ஹே ஜான்சி ராணி... என்னமோ என் ஹீரோ வர்ரார்..
அவரை ரிசீவ் பண்ணி அவரோட டைம் ஸ்பென்ட் பண்ணனும் னு
லீவ் சொல்லிட்டு போன.. இப்ப என்ன அதுக்குள்ள வந்துட்ட??
என்னாச்சு?? “ என்றாள் அக்கறையாக
அதேநேரம் அவள் கண்டு பிடித்ததை வெளி காட்டி கொள்ளாமல்...
“ம்ச்... “ என்று பெருமூச்சுவிட்டாள் பவித்ரா
“என்னாச்சு பவி??.. ஏன் இவ்வளவு டல்லா இருக்க?? எனி ப்ராப்ளம்?? “என்றாள் அக்கறையாக.
அவள் பவித்ராவை இந்த மாதிரி இதுவரை
பார்த்ததில்லை.. அதனால் அவள் உள்ளுக்குள் ஏதோ வேதனை படுகிறாள் அது தான் முகத்தில்
தெரிகிறது.. என்னவாக இருக்கும்.. “என்று
யோசித்தவாறே பவித்ராவை பார்த்தாள்...
“ஒன்னும் இல்லடி.. “என்று மழுப்பினாள் பவித்ரா
“ஹே.. என்கிட்டயே மறைக்காத.. நீ ஒன்னும் இல்லைனு
சொல்றதிலயே ஏதோ விசயம் உன் மண்டைக்குள்ள புகுந்து உன்னை குழப்பி கிட்டிருக்குனு
தெரியுது...
என்கிட்ட சொல்ல பிடிக்கலைனா இட்ஸ் ஓகே.. “ என்று
பிட்டைபோட்டாள் சரண்யா...
“ஹே உன்கிட்ட சொல்லக் கூடாதுனு எல்லாம் இல்லை...
“என்று இழுத்தாள்
“அப்புறம் என்ன?? .. இந்த குட்டியூண்டு மன்டைக்குள்ள
இருந்து என்ன செய்துனு சொல்லுடி...என்னால முடிஞ்சா உதவி செய்யறேன்.. “என்றாள்...
“ஹ்ம்ம்ம் அவர் என்னை திட்டிட்டார் டி..
மூஞ்சியிலயே முழிக்காதனு கோபமா திட்டிட்டார்... போன வேற ஸ்விட்ச்
ஆப் பண்ணிட்டார்... “ எந்றாள் கண்கள் கலங்க..
“அவர் அந்த அளவுக்கு கோபப்படற மாதிரி நீ என்ன
செஞ்ச??
“ஹ்ம்ம்ம் அப்ப உனக்கு எல்லாம் முதல்ல இருந்து
சொன்னதான் புரியும்.. “என்றவள் சிறிது நேரம் கண்ணை மூடி பின் ஆழ்ந்த முச்சை
இழுத்து விட்டவள்
“எனக்கு அவரை எங்க கல்யாணத்துக்கு முன்னாடியே
தெரியும் சரண்.. “என்றாள் பவித்ரா..
“யாரை?? “ என்றாள் சரண்யாவும் தெரியாதவளாக
“ஹ்ம்ம்ம் உன் ஹீரோ னு கொஞ்சுறியே... அவரைத்தான்.. “ என்றாள்
பவித்ரா..
அதை கேட்டு இலேசாக வியந்தாள் சரண்யா..
“அப்புறம் ஏன் டி அவரை தெரியாத மாதிரி கலயாணத்தப்போ நடந்துகிட்ட?? “என்றாள் குழப்பமாக...
அது பெரிய இல்லை குட்டி கதை என்றவள் முதல் முதலாக அவள் ஆதியை பார்த்தது
நினைவு கூர்ந்தாள்..
அந்த பிரமாண்ட ஸ்டார் ஹோட்டலின் முன் தன்
கேப் ல் இருந்து இறங்கினாள் பவித்ரா..
கடிகாரத்தில் மணியை பார்த்தவள் ஏற்கனவே
நேரமாயிருக்க,
“ஐயோ... லேட் ஆகியிருச்சே.. அந்த சிடுமூஞ்சி
மேனேஜர் இன்னைக்கு என்ன வறுத்து எடுக்க போறார்...
அப்பயே சொன்னார் நானே வந்து பிக்கப்
பண்ணிக்கறேன் ன்.. பெரிய இதுவாட்டாம் வேணாம்னு சொல்லிட்டு இந்த கேப் ஐ புடுச்சி வர்றதுகுள்ள
கொஞ்சம் லேட் ஆகியிடுச்சே... சீக்கிரம் போகணும்.. “ என்று மனதுக்குள் எண்ணியவாறு
அந்த கட்டடத்தை நிமிர்ந்து பார்த்தாள்...
அதன் உயரத்தை பார்த்து வியந்து கொண்டிருக்கையில்
அவள் வலது கண் துடித்தது... காலையில்
இருந்தே இது மாதிரி தான் துடித்து கொண்டேஇருக்கிறது...
தன் அன்னையிடம் சொல்லியதற்கு ஏதாவது கெட்டது
நடக்க போகுது.. ஜாக்கிரதை யா போய்ட்டு வா.. “என்று அவர் புலம்பியது நினைவு வர, சிரித்துக் கொண்டே வேகமாக உள்ளே சென்றாள்...
உள்ளே சென்று ரிசப்சனில் அவள் போக வேண்டிய
இடத்தை சொல்ல, அது 16
ஆவது மாடியில் இருப்பதாக செஒன்னாள் அந்த ரிசப்னிஸ்ட்...
“”என்னது 16 ஆவது மாடியா?? ஐயோ இதுக்கு வேற நேரம்
ஆகுமே..” என்று நொந்தவாறு லிட் இருந்த
பக்கம் திரும்பி பார்க்க,அப்பொழுது தான் அந்த லிப்ட் கீழ
வந்து நிற்கவும் அதில் உள்ளே இருந்தவர்கள் வெளியில் வந்து கொண்டிருந்தனர்...
உடனே அத தவற விடாக்கூடாது என்று வேகமாக அங்கு
விரைந்தவள் அதே வேகத்தில் உள்ளே நுழைய, கால் இடறி அப்படியே
உள்ளே சரிந்தாள்...
கீழதான் விழப்போகிறோம் என்று உணர்ந்து கண்ணை
இறுக்க மூடிக் கொள்ள,
அவள் விழுந்ததோ அங்கு நின்று கொண்டிருந்த ஒரு இளைஞன் மார்பில்...
“என்னது?? கீழ விழலையே “ என்று கண்களை திறந்து பரத்தவள் தான் ஒருவன்
மார்பில் சாய்ந்து கொண்டு நிற்பதை உணர்ந்தாள்...
அவனும் அவள் மேலும் கீழ விழுந்து விடாமல் இருக்க
அவள் இடையை இறுக்கி பற்றியிருந்தான் தன்
வலிய கரங்களால்....
சில விநாடிகள் பவித்ராவுக்கு என்ன நடந்தது என்று
புரியவில்லை..
ஆனால் ஏனோ
அவன் மார்பில் சாய்ந்திருந்த அந்த சில விநாடிகள் நிம்மதியாக, ஏனொ அது தனக்கே உரிய இடம் போல தோன்ற
அவனை விட்டு விலகாமல் அப்படியே நின்றிருந்தாள்....
அந்த இளைஞனுக்கும் அதே உணர்வுகள் தான் போல...
அவனுமே கண் மூடி அந்த நொடிகளை ரசித்து கொண்டிருந்தான்..
பின் சில விநாடிகள் கழிய, பாதுகாப்பிற்காக அவள் இடையை
பிடித்திருந்த அவன் வலிய கரங்கள் மெல்ல அவள் இடையில் ஊர ஆரம்பித்து அடுத்த
கட்டத்திற்கு செல்ல..
அப்பொழுதுதான் தன் மயக்கத்தில் இருந்து விழித்து
கொண்டாள் பவித்ரா...
அவள் நின்றிருந்த கோலம் புரிய, உடனே வேகமாக அவனை விட்டு விலகி
தள்ளி நின்று கொண்டாள்...
“ஐயோ.. இப்படி போய் கட்டிகிட்டு நின்னுட்டனே..
வேற யாராவது இருக்கிறார்களா?? என்று கண்களால் தேடினாள் அவசரமாக...
அத புரிந்து கொண்டவன்
“டோன்ட் வொர்ரி பேபி... வேற யாரும்
இல்லை..” என்றான் குறும்பாக சிரித்தவாறு
குறுகுறு பார்வையுடன்...
“பை தி வே ஐ ம் ஆதித்யா.... “ என்று தன் கைகளை
அவள் முன்னே நீட்டினான் கை குலுக்கும் விதமாக..
ஆனால் பவித்ராவோ அவனை பார்த்து முறைத்து விட்டு
லிப்ட் ன் கதவின் பக்கம் பார்த்து
திரும்பி நின்று கொண்டு ஒவ்வொரு தளமாக செல்ல அதை பார்த்து வந்தாள்...
அவன் அவளையே குறுகுறுவென்று பார்ப்பது தெரிந்தது
உள்ளுக்குள் ஏநோ படபடப்பாக இருந்தது...
மறந்தும் அவன் பக்கம் திரும்ப வில்லை..
லிப்ட்16 ஆவது தளத்தில் நிக்க, வேகமாக கதவின் அருகில் வந்து
நின்று கொண்டாள் இறங்குவதற்கு வசதியாக...
அதே நேரம்
“You are looking gorgeous Baby… ஹ்ம்ம்ம் வேற மாதிரி
சொல்லணும்னா செமயா இருக்க... “ என்று அவன் காதருகில் குனிந்து கிசுகிசுத்தான் ஒரு
மாதிரி குரலில்...
அந்த குரலில் என்ன இருந்ததோ?? பவித்ராவின் வயிற்றில் பட்டாம்
பூச்சிகள் பறக்க படபடப்பாக இருந்தது..
அவள் கன்னங்கள் முதல் முதலாக வெக்க பூக்களை பூக்க ஆரம்பிக்க,
அதற்குள் தன்னை முயன்று கட்டுபடித்தி
கொண்டவள்
கஷ்டபட்டு அவனை பார்த்து முறைத்து விட்டு
“பொறுக்கி... ராஸ்கல்.. “ என்று திட்டியவாறு
ஒரு உஷ்ண பார்வையை அவன் மேல் வீசி விட்டு
லிப்ட் ல் இருந்து வெளியில் வந்து வேகமாக
முன்னே நடந்தாள்...
ஆதியோ அசந்து நின்றான் அவளின் செயலை கண்டு...
இதுவரை யாரும் இப்படி “பொறுக்கி... ராஸ்கல்.. “
என்று அழைத்ததில்லை அவனை.. அதோடு யாரிடமும் இந்த மாதிரி தானாக சென்று அவர்களை வர்ணித்து பேசியதில்லை... அதற்கு அவசியமும்
இருந்ததில்லை...
ஏனென்றால் இவனை கண்டாலே பெண்கள் கூட்டம் அவன்
மேல் பாயும்.. இவன் கடைக்கண் பார்வை படாதா என்று ஏங்கியவர்கள் அதிகம்... அவர்களை
எல்லாம் துச்சமாக மதித்திருக்கிறான்...
அப்படியும் இவன் இம்ரெஸ் ஆகும் ஒரு சில
பெண்களிடம் மட்டும் அதுவும் அவர்களே வழிய வந்து அவனை வரவேற்க, அவர்களுடன் மட்டும் உல்லாசமாக
இருந்திருக்கிறான்.. அதுவும் அந்த நேரத்தில் மட்டும் தான்..
அதன் பிறகு அவர்களை திரும்பி கூட
பார்த்ததில்லை...
அப்படியிருக்க, முதல் முதலாக தானாக சென்று ஒரு பெண்ணிடம்
அவளை புகழ்ந்து பேசவும் அவனை நினைத்தே ஆச்சர்யமாக இருந்தது...
அடுத்த ஆச்சர்யம்.. அவள் தன்னை நிராகரித்து “பொறுக்கி... ராஸ்கல்.. “ என்று திட்டி கோபமாக
பார்த்தது...
தான் தான் அழகன், மன்மதன் தனக்கு மயங்காத பெண்கள் இல்லை என்ற
கர்வத்தில் இருந்தவனுக்கு இந்தபெண்ணின் அலட்சியம், தன்னை
கண்டு கொள்ளாத , தன் மேல் விழாத பார்வை மேலும் அவளின் அந்த
சிவந்த முகம் என்று எல்லாமே அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது...
அதோடு அவன் மார்பில் சாய்ந்திருந்த அந்த ஒரு சில
விநாடிகள் அவனுள்ளே அவன் இதுவரை அனுபவித்திராத விளக்க முடியாத உணர்ச்சியையும்
பரவசத்தையும் அவன் உடலில் உருவாக்கியிருக்க, முன்னால் வேகமாக செல்பவளையே மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து
பார்த்தான்....
அப்படி ஒன்றும் அழகியும் இல்லைதான்.. அவன்
உயரத்தில் பாதி கூட இல்லை..
ஆனால் மற்ற பெண்களை போல புடவையை வயிறு தெரியுமாறு கட்டாமல் நேர்த்தியாக கட்டி
புரபஷனலாக இருந்தாள்..அவள் முறைத்த பொழுது அவள் கண்ணில் ஒரு நேர்மை, கர்வம்,
திமிர் இருந்த மாதிரி இருந்தது..
முன்னால் சென்றவளின் வேகத்திற்கு ஏற்ப அவளின்
இடையை தாண்டி தொங்கிய ஜடையும் அசைந்தாட, அந்த ஜடையில் மேல் ஒரு ஒற்றை ரோஜாவை சொருகி, பார்ப்பதற்கு மற்ற பெண்களை விட வித்தியாசமாக இருந்தாள்...
அதோடு அவளின் இடையை தடவிய அவன் கரங்கள் மீண்டும் அதை
நினைக்க அவன் உள்ளே புது வெள்ளம் பாய்ந்தோடியது... இந்த பீலிங்க்ஸ்
வித்தியாசமாக இருக்க,
தன் உள்ளே சிலிர்த்து போனான்....
லிப்டில் இருந்து வெளியில் வந்தவன் அதே இடத்தில்
நின்று கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அவளோ வேக நடையுடன்
சென்று அங்கு இருந்த
“Welcome to South India Business Conference!!! ‘ என்ற பெயர் பலகை வீற்றிருந்த அந்த
ஹாலின் உள்ளே சென்றாள்....
அதை கண்டவன் குறும்பாக சிரித்துக் கொண்டே
“Interesting girl… “ என்று மெல்ல புன்னகைத்தவாறு நகர்ந்தான்.....
Flash back super
ReplyDeleteThanks pa!
Delete