உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-56

 


அத்தியாயம்-56

ந்த கான்ப்ரென்ஸ் ஹாலின் உள்ளே சென்றவளை உடனேயே வந்து பிடித்துக் கொண்டான் மேனேஜர் மோகன்...

“என்ன பவித்ரா?? இவ்வளவு லேட் ஆ வா வர்றது?? நல்லவேளை.. இப்பதான் ஆரம்பிக்க போறாங்க.. அதுக்குள்ள வந்துட்ட.. இனிமேல் இப்படி பொறுப்பில்லாம நடந்துக்காத... “ என்று இன்னும் பல அர்ச்சனைகளை வாரி வழங்கினான்...

“சாரி சார்... கொஞ்சம் ட்ராபிக்ல மாட்டிகிட்டேன்...ஆனாலும் வரவேண்டிய நேரத்துக்கு பவித்ரா கரெக்டா வந்திட்டா பார்த்திங்களா...அதான் பவித்ரா...”என்று தன் இல்லாத காலரை தூக்கிவிட எவ்வளவு முயன்றும் அந்த மோகனால் தன் கோபத்தை தக்க வைக்க முடியாமல் சிரித்து விட்டான்....

“அப்பாடா... மோகன் சார் சிரிச்சுட்டார்.... பவித்ரா... இந்த சிடுமூஞ்சி மோகன் சார கூட சிரிக்க வச்ச பெருமை உனக்குத்தான்... “ என்று மீண்டும் கன்னம் குழிய சிரிக்க, அவளை சிறிது முறைத்தாலும்

“சரி.. பிரசென்டேஷனுக்கு நல்லா பிரிப்பேர் பண்ணிட்ட இல்லை.. நீதான் நம்ம கம்பெனிய பத்தி பிரசென்ட் பண்ணனும்.. என்ன புரிஞ்சுதா?? “என்றான் மிரட்டும் குரலில்..

“ஹ்ம்ம் எல்லாம் பக்காவா பண்ணிடுவேன் சார்....கலக்கிடலாம்.. நீங்க கவலை படாதிங்க.. “ என்று சிரித்தாள்....

“ஹ்ம்ம்ம் குட்.. அப்புறம் நேற்று நான் சொன்ன கரெக்சன்ஸ் எல்லாம் பண்ணிட்டியா?? “ என்றான் மிடுக்காக....

“அடப்பாவி....நேற்று நீ பண்ணி வச்சிருந்த அந்த மொக்க  பிரசென்டேஷன பார்த்ததுமே எனக்கு ஹார்ட் அட்டாக் வர, நானே என் மண்டைய போட்டு குடைஞ்சு நிறைய சேஞ்சஸ்  சொன்னா கடைசியில அதெல்லாம் நீ சொன்ன கரெக்சன்ஸ்  னு பிளேட்டை மாத்திட்டியே மோகன்..

இப்ப தெரியுது நீ எப்படி இவ்வளவு சீக்கிரமா இந்த மேனேஜர் பதவிக்கு வந்தனு.. “ என்று மனதுக்குள் புலம்பியவள் அவனை பார்த்து நக்கலாக சிரித்தவாறு

“ஓ.. நீங்க சொன்ன கரெக்சன்ஸ் எல்லாம் அப்பயே பண்ணிட்டேன் சார்... “ என்று நீங்க என்பதை அழுத்தி சொன்னாள் அப்பவாது அவனுக்கு உறைக்கட்டும் என்று...

அந்த மோகனோ இந்த மாதிரி எத்தனை பேர் நக்கலை பார்த்திருப்பேன் என்றவாறு ஒரு அசட்டு சிரிப்பை சிரித்தான் அவள் நக்கலை கண்டு கொள்ளாமல்...

பின் அந்த கான்ப்ரென்ஸ் ஆரம்பிக்க இருக்க முக்கிய பெரிய தொழிலதிபர்கள் முன்னால் வந்திருக்க, அந்த ஒருங்கிணைப்பாளர் அந்த ஹாலின் ஓரத்தில் இருந்த மேடையில் ஏறி அனைவரையும் வரவேற்று அந்த கான்ப்ரென்ஸ் ன்  தொடக்கமாக 5 முக்கிய பிரமுகர்களை குத்து விளக்கை ஏற்றி வைக்க சொல்ல, அதில் நால்வர் பழுத்த பழம் போல தலை நரைத்த வயது முதிர்ந்த முன்னனி தொழிலதிபர்கள்...

அவர்கள் மேடை ஏறி குத்துவிளக்கை நோக்கி செல்ல, ஐந்தாவதாக ஒரு நெடியவன் அந்த மேடையின் படிகளை இரண்டு இரண்டாக தாவி மேல ஏறினான்...

அவன் ஏறும் வேகத்திற்கு ஏற்ப, அவன் முன்னால் இருந்த அடர்ந்த முடி கற்றைகள் காற்றில் அழகாக அசைந்தாடியது...மேடையின் நடுவில் வந்தவன் தன் தலையை முன்னால் குனிந்து அனைவருக்கும் வணக்கம் சொல்லி நிமிர்ந்தவனை   கண்டதும் அதிர்ந்து நின்றாள் பவித்ரா...

அவள் லிப்டில் சந்தித்த, பொறுக்கி.. ராஸ்கல் என்று திட்டிய அதே நெட்டை தான் அங்கு நின்று கொணடிருந்தான்...

“ஒரு வேளை நான் காண்பது பொய்யோ.. லிப்டில் பார்த்தவன் முகமே மீண்டும் தெரிகிறதா?? “என்று தன் கண்களை நன்றாக தேய்த்து கொண்டு அவனை உற்று பார்க்க, சந்தேகமே இல்லாமல் அவனேதான்....

ஆனால் அவன் முகத்தையும் கண்களையும் கூர்ந்து பரத்தவள்

இது அவனில்லை என்று தோன்றியது...

ஆம் அவன் முகத்திலும் கண்களிலும்  அப்படி ஒரு தீவிரம், ஊடுறுவும் பார்வை....கோட் சூட் அணிந்து பக்கா  பிசினஸ் மேனாக நின்றிருந்தான்..

இவன்தான் லிப்டில் தன்னை தாங்கி பிடித்தவன்.. தன் இடையை பற்றியவன் , அதற்கு மேல் தன்னை புகழ்ந்தவன் என்று சொன்னால் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள்..

ஏன் அவளுக்கே அதை நம்ப முடிய வில்லை...ஒரு வேளை அந்த லிப்ட் சம்பவம் மே கனவோ என்றே இருந்தது...

அந்த நெட்டையும் அந்த நால்வருடன் இணைந்து, ஐவரும் ஐந்து முகங்கள் கொண்ட அந்த குத்து விளக்கை ஏற்றி அந்த கான்ப்ரென்ஷை தொடக்கி வைத்தனர்...

அனைவரும் கை தட்டி ஆரவரிக்க, அடுத்து அந்த ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கு நன்றி சொல்லி ஐவரையும் தங்கள் இருக்கைக்கு அனுப்பி வைத்தார்...

பின் தன்  மைக்கை கையில் பிடித்து கொண்டு

“அடுத்து இந்த கான்ப்ரென்ஸ் ஐ பற்றி விளக்க, முன்னனி இளம் தொழிலதிபரான AN Group of companies chairmen மிஸ்டர் ஆதித்யாவை அழைக்கிறேன்.. “ என்க, அந்த நெட்டை ,மீண்டும் தாவி மேடை ஏறி அவரிடம் இருந்த மைக்கை வாங்கினான்...

அதை கண்ட பவித்ரா மயக்கம் போடாத குறைதான்.. AN Group of companies பற்றி கேள்வி பட்டிருக்கிறாள்.. அவர்கள் கால் பதிக்காத துறை இல்லை.. எல்லா பிசினஸ்லயும் நம்பர் ஒன்னாக  வந்து கொண்டிருக்கும் கம்பெனி...

அந்த கம்பெனி பற்றி கேள்வி பட்டவள் அதன் சேர்மன் பற்றி அவ்வளவாக அறிந்திருக்கவில்லை.. யாராவது ஒரு எக்ஸ்பீரியன்ஸ்ட் நபர்தான் நடத்துவதாக இருக்கும் என்று எண்ணி இருந்தவளுக்கு பின் இருபதுகளில் இருக்கும் அதுவும் தன்னிடம் வம்பு இழுத்தவன் தான் அந்த கம்பெனியின் சேர்மன் என தெரிய ஆச்சர்யத்தில் கண்களை அகல விரித்தாள்..

அதோடு மட்டுமில்லாமல் அப்பொழுது அருகில் இருந்த மேனேஜர் மோகன் அவனை பற்றி பெருமையாக எடுத்து சொல்ல இன்னும் அசந்து நின்றாள்...

ஒருங்கிணைப்பாளரிடமிருந்து மைக்கை வாங்கியவன் அதை இலாவகமாக பிடித்து கொண்டு அனைவரையும் மீண்டும் ஒரு தரம் வரவேற்று அந்த கான்ப்ரென்ஸ்ன் முக்கிய நோக்கம், மற்றும் அன்றைய அஜென்டா. எல்லாம் விளக்கினான்..

அவனின் நுனி நாக்கு ஆங்கிலமும், கூரிய பார்வையும் எந்த அலட்டலும் இல்லாமல்  அவனின் திறமையான பேச்சும் அந்த நொடியிலயே அவளை கட்டி இழுத்தது  அவளையும் அறியாமல்....

அவன் பேச்சு திறமையையே வாய் பிளந்து பார்த்து கொண்டிருந்தாள் பவித்ரா...

அவன் முழுவதும் விளக்கி முடித்ததும்   ஒவ்வொரு துறையிலும் தங்கள் கம்பெனியை பற்றியும் அவர்கள் பிசினஸ் பற்றியும் விளக்க என்று தனித்தனியாக கான்ப்ரென்ஸ் அறைகள் அமைத்து எந்தெந்த கம்பெனி ப்ரெசன்ட் பண்ணுகிறார்கள் என்ற விளக்கமும் அடங்கிய கையேடு அனைவருக்கும் வழங்கபட்டது...

அங்கு வந்திருப்பவர்கள் எந்த தொழிலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமோ யாரை அணுக வேண்டும் என்ற குறிப்பும் இருக்க, பின் அனைவரும் கலைந்து மற்ற கான்ப்ரென்ஸ் அறைக்கு சென்றனர்...

பவித்ரா வேலை செய்யும் கம்பெனியும் அதில் கலந்து கொண்டு தங்கள் தொழிலை பற்றி விளக்க  அனுமதி வாங்கியிருந்தனர்...

மோகன் மற்றும் அவரின் அசிஸ்டன்ட் தான் இந்த பிரசன்டேசனை தயாரித்தது...அவர்கள் இருவரும் தான் கலந்து கொள்வதாக இருந்தது

அதற்குள் அவருடைய அசிஸ்டென்ட்  க்கு வர முடியாத சூழ்நிலை ஆகிப் போக, மோகன் பவித்ராவை பிடித்து கொண்டான்...

பவித்ராவுக்க்கு அந்த கம்பெனி பற்றி ,அவர்கள் தொழில் முறைகளை பற்றி நன்றாக தெரியும் என்பதாலும் எல்லாரிடமும் சகஜமாக பேசுவாள், பழகுவாள் என்பதாலும் மோகன் அவளை செலக்ட் பண்ணினான்..

முதலில் பிசினஸ் பார்ட்டி என்கவும் வர மறுத்தவள் பின் இது ஒரு கான்ப்ரென்ஸ் என்று விளக்கி கூற மேலும் நீ வந்துதான் ஆக வேண்டும் என்று  கன்டிசன் போட வேறு வழியில்லாமல் ஒத்து கொண்டாள்...

அவர்கள் கம்பெனி தொழில் துறைக்காக ஏற்பாடு செய்திருந்த கான்ப்ரென்ஸ் அறைக்கு சென்றவர்கள் முதலில் வேறு இரண்டு கம்பெனிகள் அவர்கள் தொழிலை பற்றி விளக்க, அடுத்து அவர்களுடய முறை..

பவித்ரா அந்த பிரசென்டேசனுக்கு தயாராகி எழுந்து முன்னால் செல்ல, அவள் கண்கள் தானாக யாரையோ தேடியது..

ஒருவேளை அவன்..  அந்த நெட்டை இங்கு வந்திருப்பானோ என்று அவசரமாக தேடியவள் அவன் இல்லாமல் போக உள்ளுக்குள் ஏமாந்து போனாள் அவளையும் மீறி....

ஆனால் அந்த நெட்டைக்கு பதிலாக வேற ஒரு ஜோடி கண்கள் அவளை குறுகுறுவென்று பார்ப்பதை உணரவில்லை...

பின் தன் நிலைக்கு வந்தவள் அவள் பிரசென்ட் பண்ணுவதில் மட்டும் கவனம் செலுத்த அதோடு அவனின் அந்த நெட்டை சற்று முன்னால் பேசிய  ஆக்சனையும் பேசும் ஸ்டைலையும் மனதுக்குள் பதிந்து இருந்ததால் அதே மாதிரி அவளும் பின்பற்றினாள் அவளையும் அறியாமல்..

அங்கு வந்திருந்த மற்ற பார்வையாளர்கள் பல கேள்விகளை கேட்க அவள் எந்த வித தயக்கமுமின்றி அவரக்ளுக்கு விளக்கி கூறினாள்..

அவளின் தயக்கமின்றிய பேச்சும்  நேர்மையான பார்வையும் அவள் மேல் அந்த கம்பெனி மேல் நம்பிக்கை தோன்ற, பல ஆர்டர்கள் அங்கயே அவர்களுக்கு கிடைத்தது,,

மேனேஜர் மோகனோ அசந்து போனார்.. அவளை பார்க்கையில் முதல் முறை இந்த மாதிரி கான்ப்ரென்ஸ்க்கு வந்தவளை போலவே இல்லை... எந்த ஒரு நெர்வஸ்  ம் இல்லாமல் அவ்வளவு சரளமாக எல்லாரிடமும் இனிதாக பழகினாள்...

அவளுக்குமே ஆச்சர்யம்தான்... எப்படி இப்படி ஈசியாக நடந்து கொள்ள முடிந்தது என்று... கொஞ்சம் அவளையே ஆராய்ந்து பார்க்க, உள்ளுக்குள் அவள் அவனை ரோல் மாடலாக வைத்து தான் அந்த பிரசென்டேசனை பண்ணியதே...

ஆனாலும் எல்லாரும் அவளை பாராட்ட, அவளிடமிருந்து ஒரு புன்னகை மட்டுமே பதிலாக...

தியம் உணவு பப்பே முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்... மோகன் அவளை அழைத்து கொண்டு செல்ல, ஒரு தட்டை எடுத்துக் கொண்டு அவளுக்கு பிடித்த சில உணவு வகைகளை எடுத்து வைத்துக் கொண்டு ஓரமாக நின்று கொண்டு சாப்பாட்டை சாப்பிட்டு கொண்டிருந்தாள்..

அவள் கண்களோ அவளை அறியாமலயே யாரையோ தேடியது....

சிறிது நேரம் கழிந்ததும் அவள் ஏக்கத்தை போக்க என்றே அவனின் தரிசனம் கிடைத்தது...

அந்த நெட்டையும் ஒரு  தட்டில் உணவை எடுத்து கொண்டு சில தொழிலதிபர்களுடன் தீவிரமாக பேசி கொண்டிருந்தான்.. அவன் கண்களில் அந்த தொழில் நடத்தும் தீர்க்கம் மட்டுமே.. அந்த கண்களா அவளிடம் குறும்பாக பேசியதும் குறுகுறுவென்று  பார்த்தது என்று மீண்டும் உள்ளுக்குள்ளே கேட்டு கொண்டாள்..

ஏனோ   அவனிடம் சென்று பேச வேண்டும் என்று அவள் மனம் அடம் பிடித்தது..

இந்த  பப்பே உணவு  பழக்கமே ஒருவருக்கொருவர் கலந்து பேசி அவர்களுக்குள் networking ஐ டெவலப் பண்ண என்று மோகன் சொல்லியிருந்தார்...

யார் வேணும்னாலும் யார் கூட வேணும்னாலும் சென்று பேசலாம்.. அவர்களை அறிமுகபடுத்தி கொள்ளலாம்.. அதனால் நிறைய பேர் பரிச்சயம் ஆகும்.. அதனாலயே இந்த கான்ப்ரென்ஸ் ஒரு நெட்வொர்க்கிங் செஸ்ஸன் மாதிரி என்று மோகன் ஏற்கனவே சொல்லியிருந்தான்...

பவித்ராவுக்கு இதில் அவ்வளவாக ஆர்வம் இருந்ததில்லை.. இந்த கான்ப்ரென்ஸ்க்கே வேண்டா வெறுப்பாக வந்தாள்..

அதனால் அவளாக சென்று யாரிடமும் பேச பிடிக்கவில்லை...அப்படி பேசுவது ஒரு  மாதிரி இருக்க,  ஓரமாக நின்று கொண்டு மற்றவர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்..

மோகன் அவளை அப்படியே விட்டு விட்டு அவனுக்கு ஆதாயம் கிடைக்கும் சில பெரிய புள்ளிகளிடம் சென்று கலந்து கொண்டான்...

உணவை கொறித்து கொண்டிருந்தாலும் பவித்ராவின் கண்கள் அந்த நெடியவனையே சுற்றி வந்தது... அவனை கண்டதும் ஏனோ  அவனிடம் சென்று பேச சொல்ல, அவனை சுற்றிலும் பெரிய தொழிலதிபர்கள் இருந்ததால் தன் எண்ணத்தை கை விட்டாள்...

அவர்களிடம் பேசியவன்  கொஞ்சம் விலகி வரவும் தான் போய் பேசலாம் என்று நினைக்கையில் மற்ற பெண்கள் கூட்டம் அவனை சூழ்ந்து கொண்டனர்...

அந்த பெண்கள் அவனிடம் வழிந்து நிற்பது நன்றாக தெரிந்தது... ஆனால் அவன் அவர்களிடம் எந்த குறும்பு பேச்சும் இல்லாமல் அவன் கண்களில் அதே நேர்மையும் தீட்சண்யம் இருந்தது..

அவனிடம் வழிந்து நிற்கும் பெண்களை எரித்து விடும் பார்வையாலயே தள்ளி நிறுத்தினான்...

இதையெல்லாம் தொலைவில் நின்று பார்த்து கொண்டிருந்த பவித்ராவுக்கு ஏனோ மகிழ்ச்சியாக இருந்தது....

ஏனோ   தன்னிடம் பேசியதை போல மற்ற பெண்களிடம் அவன் வழியவில்லை என்று நினைக்கையில் அவளுள்ளே மகிழ்ச்சியாக இருந்தது...

அவள் அவனையே பார்த்து கொண்டிருக்க, அந்த ஜோடி கண்கள் பவித்ராவையே குறுகுறுவென்று பார்த்து கொண்டிருந்தது...

அவன் நினைவுகளில் உழன்று கொண்டிருந்தவளின் அருகில்

“என்னை மறைந்து நின்று  சைட் அடிச்சது போதும் பேபி....இப்ப நேராகவே வந்திட்டேன்... நீ நேராகவே ஆசை தீர பார்த்துக்கோ... “ என்று அவள் காதருகில் கேட்ட கிசு கிசு குரலில் உள்ளுக்குள் இன்பமாய் அதிர்ந்தாலும் அந்த குரலுக்கு சொந்தக்காரனை நிமிர்ந்து பார்க்காமலயே அறிந்து கொண்டதால் அவள் உள்ளே படபடப்பு...

மீண்டும் அதே பட்டாம் பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன அடி வயிற்றில்..

ஆனாலும் தன்னை முயன்று கட்டுபடுத்தி கொண்டவள் உள்ளே இருந்த படபடப்பை வெளிக்காட்டாமல் மெதுவாக நிமிர்ந்து நேராக அவனை பார்த்தாள்...

“நினைப்பு தான் மிஸ்டர் ஆதித்யா .. “ என்று தன் உதட்டை சுழித்தாள்..

அவளின் அந்த வளைந்த  இதழ்களில் குத்தி நின்றது அவன் பார்வை சில விநாடிகள்..

பின் தன்னை சமாளித்து கொண்டவன்

“பரவாயில்லையே... முதல் அறிமுகத்துலயே என் பெயர் கூட மறக்காமல் நினைவு வச்சிருக்க... ஓ.. மறக்க கூடியதா  நம் அறிமுகம்??.. “என்றான் அவனும் குறும்பாக சிரித்தவாறு...

“ஹா ஹா ஹா ... உங்க பெயர் என்ன அவ்வளவு பாப்புலரா உடனே மனசுல நிக்க.. அதான் இங்க எங்க பார்த்தாலும் AN Group of companies “ பெருசா விளம்பர படுத்தி வச்சிருக்கீங்களே..

பத்தாததற்கு உங்களையே கூப்பிட்டு இன்ரோ கொடுக்க வச்சாங்களே.. அதுக்கப்புறமும் உங்க பெயர் நினைவில் இல்லை என்றால் எப்படி??  ..”  என்றாள் நக்கலாக...

பின் ஏதோ  நினைவு வரவும்

“”சாரி.. நீங்க யார்னு தெரியாமல்... காலையில்.. “என்று இழுத்தாள் பவித்ரா...

“தெரிஞ்சிருந்தால்?? “ என்று தன் புருவங்களை உயர்த்தினான் அதே குறுகுறு பார்வையுடன்....

அவன் என்ன சொல்ல வருகிறான்  என்று தெரிய அவள் முகம் சூடானது

“ஹ்ம்ம்ம் சொல்லு பேபி.. தெரிஞ்சிருந்தால்..  என் கைகளுக்கு கிடைத்த பாக்கியம் பாதியில் பறிபோகாமல் இன்னும் கொஞ்சம் நேரம் அந்த சுகத்தை அனுபவிக்க பாக்கியம் கிடைத்திருக்குமோ?? “ என்றான் விடாமல்..

அவன் சொன்னதின் அர்த்தம் புரிய, அதில் கடுப்பானவள்

“ஹ்ம்ம்ம்ம் கைகளுக்கு மட்டுமில்லை.. உங்கள் கன்னத்திற்கும் அந்த பாக்கியம் கிடைத்திருக்கும்...“ என்று முறைத்தாள்..

“ஹே பேபி.. உனக்கு நக்கலாக பேசக்கூட தெரியுமா?? நான் கூட உனக்கு முறைக்க மட்டும் தான் தெரியும்னு நினைச்சேன்..”  என்று சிரித்தான்

“ஹ்ம்ம்ம் நானும் தான் உங்களுக்கு பொண்ணுங்க கிட்ட வம்பு பண்ணதான் தெரியும்னு நினைச்சேன்.. இப்படி பெரிய பிசினஸ் மேக்னட்ஆ இருப்பீங்கனு தெரியலையே...” என்று  அவனுடன் வார்த்தைக்கு வார்த்தை வாதாடினாள்

அவளுடன் வார்த்தைக்கு வார்த்தை பேசுவதில் இருவருக்குமே பிடித்திருக்க, சிறிது  நேரம் அவளிடம் வம்பு இழுத்தவன்,

“பை தி வே.. நல்லா பிரசன்ட் பண்ணின.. கொஞ்சம் கூட பர்ஸ்ட் டைம் பிரசன்ட் பண்றங்கிற பீலே இல்லாம பிரியா நல்லா பண்ணின.. கீப் இட்  அப்.. “என்று வெண்பற்கள் தெரிய சிரித்தான்..

அதில் ஒரு நிமிடம் அசந்து நின்றாள் பவித்ரா...

இதுவரை எத்தனையோ ஆண்களிடம் பேசி பழகியிருக்கிறாள்... கல்லூரியிலும் முக்கால் வாசி பேர் ஆண் நண்பர்கள் தான்... இதுவரை யாரையும் இவ்வளவு ஆர்வமாக பார்த்ததில்லை.. ஏன் யாருடைய சிரிப்பும் அவளை இந்த அளவுக்கு வசீகரித்தது இல்லை...

அவசரமாக தன்  பார்வையை மாற்றி கொண்டவள் அவன் கடைசியாக சொன்னது நினைவு வர,

“ஆகா  நான் பிரசன்ட் பண்ணினது இவனுக்கு எப்படி தெரிந்தது?? “ என்று யோசனையுடன் பார்க்க அப்பொழுது தான் கவனித்தாள் எல்லா பிரசென்டேசன்களும் அங்கு அங்கு இருந்த டீவியின் திரையில் ஒளி பரப்பாகி கொண்டிருந்தது...

சில பிரசன்டேசனை பார்க்க முடியாதவர்கள் மீண்டும் ஒளிபரப்பாவதை காண  என்று வசதி செய்யபட்டிருந்தது... 

“ஓ..  இத பார்த்துதான் தெரிஞ்சுகிட்டானா?? திருடா “

என்று மனதுக்குள் மெச்சி கொண்டாள்..

அதற்குள் ஆதியை நோக்கி மற்றொரு விஐபி வர

“ஓகே பேபி.. சீ யூ லேட்டர்.. “ என்றவாறு கண்சிமிட்டி அங்கிருந்து நகர்ந்தான்...

நொடியில் அவனிடமிருந்த குறும்பு பார்வை மறைந்து வேற பார்வைக்கு மாறியிருந்தது அவன் கண்கள்...

அவன் சென்றதும் பவித்ராவுக்கு இன்னுமே நம்ப முடியவில்லை... 

“அவனா தன்னிடம் அப்படி பேசியது?? “ என்று தன்னையே கிள்ளி பார்த்துக் கொண்டாள்..

இவர்கள் இருவரும் பேசுவதை தொலைவில் நின்று குரோதத்துடன் பார்த்து கொண்டிருந்த அந்த ஜோடி கண்கள் இப்பொழுது பவித்ராவை நோக்கி வர,  அதற்குள் பவித்ரா சாப்பிட்டு கொண்டிருந்த தட்டை வைத்து விட்டு கை கழுவி மீண்டும் அந்த கான்ப்ரென்ஸ் அறைக்குள் நுழைந்தாள்...

அந்த கண்களோ ஏமாற்றத்தை தழுவியது... மீண்டும் ஒரு  நல்ல சந்தர்பத்திற்காக காத்திருக்க ஆரம்பித்தது...

தியம் செஸ்ஸனும் ரொம்ப இன்டெரெஸ்டிங்காக இருக்க, ஒவ்வொன்றையும் பார்த்து சில குறிப்புகளை எடுத்து வைத்து கொண்டாள்..

ஒரு வழியாக எல்லாம் முடிந்து மாலை பார்ட்டி ஆரம்பிக்க, அவள் மோகனிடம் வீட்டிற்கு போவதாக சொல்ல மோகனோ

“10  நிமிசம் தான்.. சும்மா தலைய காமிச்சுட்டு பார்ட்டி ஆரம்பிச்சதும் போய்டலாம்.. “என்று அவளை இருக்க வைத்தான்..

அது ஒரு ட்ரிங்க்ஸ் பார்ட்டி... எல்லாரும் மது கோப்பைகளை கையில் வைத்துக் கொண்டு மீண்டும் ஒருவருகொருவர்  உரையாடி கொண்டிருந்தனர்..

அப்பொழுது ஒலித்த மேற்கத்திய இசைக்கு தகுந்த மாதிரி சில பேர் தங்கள் இணையுடன் ஆட ஆரம்பித்து இருந்தனர்...

பவித்ரா விற்கு இதெல்லாம் புதிதாக இருந்தது... அவர்கள் ஆபிஸ் ஆண்டு விழாவில் வெறும் பப்பே  இருக்கும்....ஆபிஸ் ஸ்டாப் கள் பங்கு பெறும் கலை நிகழ்ச்சிகள் இருக்கும்.. 

ஆனால் அவள் MD இந்த மாதிரி ட்ரிங்க்ஸ் பார்ட்டியெல்லாம் அனுமதித்ததில்லை...அவள் தந்தை வேலை செய்த கம்பெனி அது... அவர் மறைவுக்கு வந்திருந்த MD அப்பொழுதே அவளுக்கு அப்பாயின்ட்மெண்ட் ஆர்டரை கொடுத்து நீ டிகிரி முடித்த உடனே வந்து வேலையில் சேர்ந்து கொள்ளலாம் என்று சொல்லியிருந்தார்...

அந்த  பிறகு பவித்ராவும் அதே மாதிரி அங்கயே வேலையில் சேர ,அவளுக்கு தன் தந்தையின் பதவியே கொடுத்திருந்தார் அந்த MD.. அதனாலயே அது ஒரு அலுவலகம் போல் இல்லாமல் தன் குடும்பமாக நினைத்து பவித்ரா தன் துறையை தவிர மற்ற துறையையும் நன்றாக தெரிந்து வைத்திருந்தாள்...

யாருக்காவது உதவி என்றால் தயங்காமல் செய்வாள்.. அவளின் துறுதுறுவென்ற குணமும் யாரிடமும் வழிந்து நிக்காத,யாரையும் ஒரு எல்லையில் தள்ளி நிக்க வைக்கும்   நேர்மையும் அவளை கண்டாலே அவள் அலுவலகத்தில் நல்ல மதிப்பு..

அதனாலயே மோகன் அவன் அசிஸ்டென்ட் வர முடியாமல் போக  உடனே பவித்ராவை அழைத்து இந்த பிரசன்டேசனை பண்ண வைத்தது...

 அந்த பார்ட்டி ஆரம்பிக்கவும் மோகன் அங்கு இருக்கும் விதவிதமான சரக்குகளை கண்டதும் அவளை தனியே விட்டுவிட்டு ஜோதியில் ஐக்கியமாக ஆரம்பித்து இருந்தான்...

ஓரமாக நின்றிருந்த பவித்ரா இதையெல்லாம் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தாள்...

அப்பொழுது ஒரு சர்வர் வந்து அவள் முன்னே ட்ரிங்க்ஸ் இருந்த ட்ரேயை நீட்ட , அவள் சிறு புன்னகையுடன் மறுத்து விட்டாள்...

சிறிது நேரம் வேடிக்கை பார்த்தவள் கண்கள் மீண்டும் துடிக்க ஆரம்பித்தன... திரும்பி மணியை பார்க்க, நேரம் ஆவதை உணர்ந்து மோகனை தேடினாள்..

ஆனால் அவனோ அவள் கண்ணிலயே படவில்லை..

“சே.. இந்த ஆள் இங்க போய் தொலஞ்சான்.. இவன நம்பி கூட வர்ரேனு சொன்னது தப்பா போச்சே.. “ என்று மனதுக்குள் புலம்பி கொண்டிருக்கையிலயே

“ஹாய்.. பேபி... என்ன என்னை ரொம்ப நேரமா தேடற போல இருக்கு... “ என்றவாறு அவள் அருகில் வந்து நின்றான் ஆதி..

அவன் குரலை கேட்டதும் அவளையும் அறியாமல் அவள் மனம் துள்ளி குதித்தது... கண்கள் விரிய அவனை நிமிர்ந்து பார்த்தாள்..

அவளின் அந்த விரிந்த விழிகளில் ஏதோ சில விநாடிகள் தொலைந்து போனதை போல இருந்தது அவனுக்கு...

ஆனாலும் தன்னை சமாளித்தவன்

“ஹ்ம்ம்ம் சொல்லு பேபி.. என்னைத் தானே தேடின??  “ என்றான் அதே குறும்பு பார்வையுடன்..

அப்பொழுதுதான் அவன் கையில் இருந்த அந்த மது கோப்பையை கண்டவள் முகத்தை சுழித்து

“ஹலோ   மிஸ்டர் ஆதித்யா... இங்க யாரையாவது தேடினா அது உங்களைத்தான் னு  நினைச்சுக்குவிங்களோ.??.. . நான் தேடியது என் மேனேஜர் மோகனை... “ என்று அவனை பார்த்து முறைத்தாள்...

“ஹா ஹா ஹா அழகா சமாளிக்கிற பேபி... நீ இப்ப தேடினது  அந்த மோகனையா இருக்கலாம்.. இதுக்கும் முன்னால் தேடினது என்னைத்தான்... “ என்றான் அதே குறுகுறு பார்வையுடன்...

“சே.. திருடன் கண்டு பிடிச்சுட்டானே... “ என்று மனதுக்குள் திட்டி கொண்டவள்

“குட்... நீங்க பேசாம அடுத்தவங்க மனச படிக்க்கிற பிசினஸ் ஐ யும் ஆரம்பிக்கலாம்.. பிச்சுகிட்டு போகும்.. “ என்று சமாளித்து சிரித்தாள்...

அவளின் கன்னம் குழிய சிரித்த சிரிப்பில் மீண்டும் தொலைந்தவன்

“அடுத்தவங்க மனச பத்தி தெரியுதோ இல்லையோ.. உன்னோட மனசு எனக்கு நல்லாவே தெரியுது பேபி...  அது  ஏன்  என்று தான் எனக்கு தெரியலை.. “ என்று மீண்டும் கண் சிமிட்டினான்....

அவன் கண் சிமிட்டலில் கவிழ்ந்தவள் கன்னங்கள் இலேசாக சிவந்தது...

“I think you are something special to me.. “ என்று மீண்டும் கண் சிமிட்ட, அவளோ தன் உள்ளுக்குள் இருந்த படபடப்பை மறைத்து கொண்டு அவனை பார்த்து முறைத்தாள்..

அப்பொழுது அருகில் வந்த சர்விஸ் பாயிடம் தன் கையில் இருந்த மது கோப்பையை வைத்தவன் திரும்பி

“இப்படி முறைக்கிறப்போ நீ  இன்னும் செமயா இருக்க பேபி.. if you don’t mind, shall I dance with you.. ??   என்றான் அதே கண்ணில் மின்னும் ஏதோ ஒரு வித  போதையுடன்...

அதை  கேட்டு பேந்த விழித்தாள் பவித்ரா..

சில நொடிகள் ஆனது அவன் என்ன கேட்கிறான் என்று புரிய...

நிமிர்ந்து சற்று தொலைவில் பார்க்க, இப்பொழுது அந்த பார்ட்டியில் இருந்த அனைவருமே தன் இணையின் இடையை பிடித்து கொண்டு ரொமான்டிக் ஆக நடன ஆடுவது தெரிந்தது...

சினிமாவில் பார்ப்பதை  போல இங்கு யார் வேண்டுமானாலும் யார் கூட வேண்டுமானாலும் ஆடி கொண்டிருந்தார்கள்.. அது எப்பொழுதும் வழக்கம் என்பது போல..

ஏன் மோகன் கூட யாரோ ஒரு பெண்ணின் இடையை பிடித்து ஸ்டைலாக ஆடி கொண்டிருந்தான்..

அதை கண்டதும் முகம் சுளித்தவள் அவனை மீண்டும் கோபமாக பார்த்து முறைக்க

“என்ன பேபி?? ஆர் யூ ரெடி ?? நீ ரொம்பவும் யோசிக்க வேண்டாம்.. என் கூட ஆடுவதற்கு உனக்கு எவ்வளவு பணம் வேணும் சொல்.. நான் கொடுக்கறேன்.. come on.. Let’s have a dance.. “ என்று அவளை நெருங்கி ஒரு அடி முன்னால் வைக்க, அதற்குள் விழித்துக் கொண்ட பவித்ராவோ ஒரு  அடி பின்னால் நகர்ந்தாள்...பின் அவனை நேராக பார்த்து

“லுக் மிஸ்டர் ஆதித்யா... நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு நான் இல்லை... நீங்க காசை தூக்கி போட்டா உங்க பின்னால் வர்றதுக்கு.. உங்க கூட ஆடறதுக்கு அதோ உங்க பின்னாடியே சுத்திகிட்டிருக்காளுங்களே அவளுங்கள்ள யாரையாவது கூட்டிக்கோங்க.. “ என்று பொரிந்து தள்ளினாள் முகத்தில் கோபம் பொங்க...

அதை  கேட்டதும் ஆதியின் முகம் கறுத்தது.. மெல்ல திரும்பி பார்க்க, அங்கு இருந்தவர்கள் எல்லாம் இவனை நக்கலாக பார்ப்பதை போல இருந்தது..

இதுவரை எந்த பெண்ணும் அவனை மறுத்தது இல்லை.. யாரிடமும் ஆட சொல்லி அவனாக கேட்டதில்லை... எத்தனை பேர் தன் மேல் வந்து விழ ரெடியாக இருக்க, அவர்களை எல்லாம் ஒரு கண் பார்வையில் விலக்கி இருந்தான் இன்று...

ஆனால் இந்த குட்டச்சி நானே வழிய வந்து கூப்பிட்டும் என்னை மறுத்து விட்டாளே.. “என்ற கோபம் தலைக்கேற அதோடு உள்ளே சென்றிருந்த அந்த மதுவும் அதன் வேலையை காட்ட அந்த சூழ்நிலையை  மறந்தான்..

எப்பவும்  தன் கட்டுபாட்டில் இருப்பவன், எப்பவும் வெற்றியை மட்டுமே பார்த்து வந்தவன் முதன் முதலாக  ஒரு பெண் தன்னை வேண்டாம் என்று தள்ளி வைக்க, அதில் தன் கட்டுபாட்டை இழந்தவன் வெகுண்டு எழுந்தான் உள்ளுக்குள் பொங்கும் கோபத்துடன்...

அதுவே அவன் முகத்தில் பிரதிபலிக்க, 

அவன் முகத்தில் ஜொலித்த கோபத்தை கண்டு கொஞ்சம் பயந்தவள் அந்த இடத்தில்  இருந்து நகர முயல, அவனோ எட்டி அவள் கையை பிடித்தான்....

“என்னடி ?? பெரிய கண்ணகி மாதிரி பேசற... லிப்ட் ல என் மேல வந்து விழுந்தப்போ என்  சுகத்தை நீ அனுபவிக்கல?? நான் இடையை பிடித்த பொழுது அதையும் நீ ரசிக்கல??  அவ்வளவு ஏன் காலையில் இருந்து எத்தனை முறை எனக்காக ஏங்கி என்னை தேடியிருப்ப...

இதெல்லாம் நீ திருட்டு தனமா பண்ணலாம்...ஆனால் நான் வந்து டேரக்டா கூட ஆட கூப்பிட்டா என்னமோ பிகு  பண்ற.. இதெல்லாம் கூட நீ என்னை இம்ப்ரெஸ் பண்ண ஆடற நாடகமோ என்னவோ ?? “ என்றான் ஏலனமாக தன் உதட்டை வளைத்து...

அதை கேட்டு கொதித்து எழுந்தவள்

“ஏய் மிஸ்டர்.. வார்த்தையை அளந்து பேசுங்க.. நீங்க லிப்ட் ல நடந்து கிட்டதுக்கு அப்பயே என் கையால அறஞ்சிருக்கணும்.. ஏதோ என்னை கீழ விழாம காப்பாத்தினீங்கனு காரணத்துக்காக தான் சும்மா விட்டேன்.. 

உங்க சேட்டையெல்லாம் என்கிட்ட வச்சுக்காதிங்க.. ஜாக்கிரதை... “என்று விரல் நீட்டி மிரட்ட, அவன் கோபம் இன்னும் உச்சத்தை தொட்டது..

“என்னடி சொன்ன?? நீ என்ன அறைஞ்சிருப்பியா?? லுக்..  இந்த ஆதித்யா எப்பவும் யார்கிட்டயும் தோத்ததில்லை.. அவன் நினைச்சு எதுவும் நடக்காம இருந்ததில்லை.. அவன் கேட்டு, ஆசைபட்டு எந்த பொருளும் கிடைக்காமல் போனதில்லை...

இப்ப பார் உன்னை எப்படி என் கூட ஆட வைக்கிறேன் னு.. “ என்றவன் அவன் பிடித்திருந்த அவள் கையை சுண்டி இழுக்க, இதை எதிர்பார்த்திராத பவித்ரா தடுமாறி அவன் மார்பில் விழுந்தாள்....

தன் மார்பில் விழுந்தவளை அப்படியே இறுக்கி அணைத்தவன் அவளை இடையோடு சேர்த்து பிடித்து ஆட முயல, அதற்குள் விழித்து கொண்ட பவித்ரா பெண்களுக்கே உரிய பாதுகாப்பு உணர்வு தலை தூக்க,  

தான் கற்றிருந்த தற்காப்பு கலையை பயன்படுத்தி அவனிடமிருந்து திமிறி  விடுபட முயன்று,  அது முடியாமல் போக மெல்ல, தன் கையை உயர்த்தி ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்திருந்தாள் பவித்ரா...


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!