அழகான ராட்சசியே!!!-2
அத்தியாயம்-2
“குட்
மார்னிங் கைஸ்... “ என்றவாறு கை அசைத்து கொண்டே தன் டீம் க்யூபிக்கல் (cubical) இருந்த அந்த பகுதிக்குள் நுழைந்தாள்
சந்தியா...
எல்லாரும் அவள் குரலை கேட்டு திரும்பி
பார்த்து “ஹாய் சந்தியா...” என்று புன்னகைத்து
மீண்டும் தங்கள் லேப்டாப் க்குள் தலையை நுழைத்து கொண்டனர்....
அதை கண்ட சந்தியா ஒரு நொடி அதிசயித்து நின்றாள்..
“என்னடா இது ??..
நிஜமாகவே இது நம்ம டீம் தானா?? இல்ல வேற டீம் மாறி வந்திட்டமா?? “ என்று மீண்டும் ஒரு முறை சுற்றி பார்த்து எல்லாம்
தெரிந்த
முகமாக இருக்க,
“ஹ்ம்ம்ம் இது நம்ம டீம் தான்...” என்று உறுதி செய்து கொண்ட பின் மீண்டும் ஒரு முறை
சுற்றிலும் பார்த்தவாறே முன்னே நடந்தாள்...
அவள் க்யூபிக்கல் இருந்த பகுதியின் ஆரம்பத்தில் அவளுடைய மேனேஜர்
வினித் அதிசயமாக அவன் சீட்டில் இருந்தான்..
அதுவே எட்டாவது அதிசயமாக இருந்தது அவளுக்கு...
“எப்பவும் Dev Lead சுனிதா கூட கடலை போட்டுகிட்டிருப்பான்.. இன்னைக்கு என்ன அதிசயமா வேலை
செய்யறான்...
ஹ்ம்ம்ம் ஏதோ காத்து அடிச்சிருச்சு போல.. எல்லாரும்
திருந்திட்டாங்களா?? இது தப்பாச்சே..” என்று யோசித்தவாறு
வினித் அருகில் சென்றவள்
“குட் மார்னிங் பாஸ்.... “ என்றாள் சிரித்தவாறு..
அவள் குரலை கேட்டு லேப்டாப்பில் புதைத்து கொண்டிருந்த
தன் தலையை தூக்கி அவளை பார்த்தவன் லேசாக
முறைத்து
“ஹோய் சந்தி... இது என்ன மார்னிங் ஆ ?? .. மணியை பார்.... “ என்றான் சிடுசிடுத்தவாறு..
அவளும் அங்கு சுவரில் மாட்டி வைத்திருந்த ஒவ்வொரு நாட்டு கடிகாரங்களையும்
உற்று பார்த்து
“US நேரப்படி
இப்ப நைட்....கனடா நேரப்படியும் இப்ப நைட்
தான்...ஆஸ்திரேலியா நேரப்படி இப்ப ஈவ்னிங்.... ஆங்... இந்திய நேரப்படி இது ஆப்டர்நூன் பாஸ்.....
ஓ !!.. நான் மாத்தி சொல்லிட்டேனு டென்ஷன் ஆய்ட்டீங்களா?? ... சாரி பாஸ்.... குட் ஆப்டர்நூன் பாஸ்.. “ என்றாள் கூலாக...
அதை கேட்டு தலையில் அடித்து கொண்டவன்
“அம்மா தாயே.. எனக்கு உன் குட் மார்னிங் ம் வேண்டாம்.. குட்
ஆப்டர்நூன் ம் வேண்டாம்.. இதுவா நீ ஆபிஸ் வர்ர நேரம்..?? . “ என்றான் மீண்டும் அவளை முறைத்து சிடுசிடுத்தவாறு
“ஹீ ஹீ ஹீ நோ டென்ஷன் பாஸ்..... ஓவரா டென்ஷன்
ஆனா அது உடம்புக்கு ஆகாதாம்...” என்றாள் குறும்பாக சிரித்தவாறு...
வினித் அவளை பார்த்து மீண்டும் முறைக்க,
“ஹீ ஹீ ஹீ.... IT
ல இருக்கிற ஒரே ஒரு பெனிபிட் flexible timing தான்
பாஸ் .. அதாவது
எப்பவேணாலும் வரலாம் எப்பவேணாலும் போகலாங்கிறதுதான்... அதை பயன் படுத்தினா
அதுக்கு எதுக்கு பாஸ் இப்படி டென்ஷன் ஆகறீங்க?? “ என்றாள் அதே குறும்பு சிரிப்புடன்...
“ஹ்ம்ம்ம் flexible timing கொடுக்கறது work life
balance க்காக... அதுவும் முக்கியமா கல்யாணம் ஆகி குடும்பஸ்திரிகளாக, குடும்பஸ்தர்களாக இருக்கிறவங்களுக்கு... அவங்கதான் வீட்டையும் பார்த்துகிட்டு வேலைக்கும் வரணுங்கிறதுக்காக கொடுத்த சலுகை ..
அதோடு கிளைன்ட்(client) டைம் மேட்ச் பண்ண, லேட் நைட் வரைக்கும் கான்ப்ரன்ஸ் ல இருக்கிறவங்களுக்கு அடுத்த நாள்
காலையில் லேட் ஆ ஆபிஸ்க்கு வரலாம் னு கொடுத்திருக்கிற சலுகை...
உன்னை மாதிரி வெட்டியா சுத்திட்டு, காலைல 10
மணி வரை தூங்கிட்டு உங்கம்மா சமைச்சு வச்சதை வக்கனையா கொட்டி கிட்டு ஆபிஸ் வரணுமே
னு கிளம்பி வர்ரவங்களுக்கு flexible
timing என்ன வேண்டி கிடக்கு.. “ என்றான் முறைத்தவாறு...
அதை கேட்டு கோபத்தில் மூக்கு விடைக்க,
“அது என்ன பாஸ் பார்சியாலிட்டி..?? ஏன் கல்யாணம் ஆன
இஸ்திரிகளுக்குத்தான் ரெஸ்பான்சிபிலிட்டி
இருக்குமா?? கல்யாணம் ஆகாத பேச்சுலரக்குதான் ரெஸ்பான்சிபிலிட்டி
இன்னும் ஜாஸ்தி பாஸ் ...
பேச்சுலரா தனியா தங்கி இருக்கிறவங்க, வீக் என்ட் இரவு முழுவதும் ஊரை சுத்திட்டு பின் லேட் ஆ படுத்து, ரொம்ப நேரம் தூங்கிட்டு எழுப்ப யாரும் இல்லாம அவசரமா எழுந்து ஆபிஸ்க்கு ஓடி வரணும்...
வீட்ல துடைக்கிறது, பெருக்கறது, துவைக்கிறது னு எத்தனை வேலை....
அப்புறம் எப்ப திடீர்னு வேலை வந்தாலும் பேச்சுலரா பார்த்து தலைல கட்டி
அதை முடிக்கிற வரைக்கும் ஆபிஸ் லயே உட்கார வைக்கிறது... அதுவும் பத்தாதுனு வீக்
என்ட் ல வேற வேலை வைக்கறீங்களே... அதெல்லாம் எதுல சேர்த்துக்கறதாம்??
ஒவ்வொரு நாளைக்கு இரவு 10 மணிக்கு கூட இத டெஸ்ட்
பண்ணு அத டெஸ்ட் பண்ணு, இன்னைக்குள்ள முடிக்கணும் னு கறாரா சொல்றீங்க
இல்ல...
அப்ப மாலை 6 மணிக்கு மேல யாரும் வேலை செய்ய வேண்டாம் னு எந்த
மேனேஜராவது சொல்லி இருக்கீங்களா?? ... அப்பல்லாம் நாங்க
மணி கணக்கா கண் முழிச்சு வேலை செஞ்சது தெரியல... நான் ஒரு அரை மணி நேரம் லேட் ஆ வந்ததுக்கு நிக்க வச்சு கேள்வி கேட்கறீங்க.. ?? “ என்று பொரிந்து தள்ளினாள்
சந்தியா...
அவளின்
சத்தமான குரலை கேட்டு எல்லாரும் திரும்பி பார்க்க, வினித் வாயடைத்து நின்றான்...பின் மெல்ல சுதாரித்தவன்
“அம்மா தாயே.. இனிமேல் உன்னை நான் எதுவும் கேட்கலை.. நீ ஆபிஸ் வா.. இல்ல வராம இரு... உனக்கு கொடுக்கற வேலையை செஞ்சுடு .. அது போதும் எனக்கு... “ என்றான்
பவ்யமாக....
“ஹ்ம்ம் அது... அந்த பயம் இருக்கட்டும் பாஸ்.... “ என்று கை நீட்டி
மிரட்டியவள் தன் பின்னால் மாட்டியிருந்த லேப்டாப் பேக்கை ஸ்டைலாக இழுத்து விட்டு
கொண்டு உள்ளுக்குள் சிரித்தவாறு அவனை தாண்டி உள்ளே சென்றாள்....
பின் தன் இருக்கையை அடைந்தவள் அதை இழுத்து அமர்ந்து
தன் லேப்டாப் ஐ எடுத்து ஆன் பண்ண அவள் பக்கத்து சீட்டில் இருந்த அன்பழகி
இவளை பார்த்து கை அசைத்து புன்னகைத்து மீண்டும் தன் வேலையை கவனிக்க,
அதை கண்டதும் இன்னும் ஆச்சர்யமாக இருந்தது
சந்தியாவுக்கு...
எப்பவும் சந்தியா வந்த உடனே அவள் செய்து
கொண்டிருக்கும் வேலையை அப்படியே விட்டு விட்டு இந்நேரம் கதை அடிக்க ஆரம்பித்து இருப்பாள்
அன்பழகி.. டீம் ல் நடக்கும் எல்லா மேட்டரும் அவள் வழியாகத்தான் சந்தியாவுக்கு தெரிய
வரும்...
சந்தியா வந்த உடனே ஊர்கதை யெல்லாம் ஆரம்பித்து
விடுவாள்... அப்படிபட்டவள் இன்று அமைதியாக இருக்கவும் மீண்டும் அதிசயித்தவள்
“ஹோய்.. வம்பு... என்னடி இது அதிசயமா நீயெல்லாம்
வேலை பார்க்கற ?? அதுவும் இல்லாம நம்ம டீமே எல்லாரும் விழுந்து விழுந்து வேலை செய்யறாங்க...
என்னடி நடக்குது இங்க ?? “ என்றாள் சந்தியா ஆச்சர்யமாக கண்களை விரித்து ...
அவளை பார்த்து முறைத்தவள்
“ஆங்... நீ உன் ஈமெயிலை ஓபன் பண்ணி பார்...
அப்ப புரியும் என்ன நடக்குதுனு..”
“அது இருக்கட்டும் டி.. நான் ஒரு வாரம்
இல்லாததுக்கு ஏகப்பட்ட மெயில் வந்திருக்கும்.. அதை படிக்கவே இன்னும் இரண்டு நாளாகும்.. சரி... நீ மேட்டர்
மட்டும் என்னனு சொல்லு...
டெஸ்ட்டிங் டீமில் இவ்வளவு சின்சியரா வேலை செய்து நான் பார்த்ததில்லையே... “ என்றாள்
சந்தியா ஆர்வத்துடன்
“ஹ்ம்ம்ம் எல்லாம் அந்த புதுசா
வந்திருக்கிறவன்.. இல்ல வந்திருக்கிறவர் “ என்று திருத்தியவள்
“புதுசா வந்திருக்கிறவரால வந்தது டி... போன sprint
ல டெஸ்ட் பண்ண டெஸ்ட் கேசஸ் (test cases)
எல்லாம் வேணுமாம்… “
என்றாள் அன்பழகி சோகமாக..
“என்னது?? டெஸ்ட் கேஸா?? அப்படினா?? நாம எப்ப டி டெஸ்ட் கேஸ் எழுதி டெஸ்ட் பண்ணி இருக்கோம்...”
“ஹ்ம்ம் இதையேதான் எல்லாரும் வினித் கிட்ட
கேட்டோம்.. அதெல்லாம் எனக்கு தெரியாது.... எதையாவது பிரிப்பேர் பண்ணி கொடுங்க.. னு
சொல்லிட்டார் டி.. அதான் எல்லாரும் டெஸ்ட் கேஸ் பிரிப்பேர் பண்ணிகிட்டிருக்கோம்..
“
“அடப்பாவிங்களா..!! செத்த பொணத்தை போஸ்ட்
மார்ட்டம் பண்ற மாதிரி ஏற்கனவே டெஸ்ட்
பண்ணி முடிச்சதுக்கு இனிமேல் டெஸ்ட் கேஸ் எழுதி என்ன பண்ண போறாங்களாம்...?? “ என்றாள் சந்தியா முகத்தை நொடித்தவாறு...
“ஹ்ம்ம் உனக்கு புரியுது... எனக்கு புரியுது .. அவன் இல்ல அவருக்கு புரியலையே...நாம டெஸ்ட் பண்ண எல்லா டெஸ்ட்
ஸ்க்ரிப்ட் ம் அவருக்கு மெயில் அனுப்ப சொல்லிட்டார்... “
“அட கொடுமையே... நாம எப்ப டெஸ்ட் கேஸ் எழுதி
டாகுமென்ட் பண்ணி இருக்கோம்?? நம்ம மண்டைலயே எழுதி நேரா டெஸ்ட் பண்றது தான பழக்கம்...”
“அதே.. அதே ... நம்ப மண்டைல இருக்கிறதையெல்லாம்
கம்ப்யூட்டர் மண்டைல ஏத்தனுமாம்... அப்பதான் டீம்க்கு புதுசா வேற யார் வந்தாலும்
அவங்களுக்கு புரியுமாம்... இனிமேல் டெஸ்ட்
கேஸ் இல்லாமல் யாரும் டெஸ்ட் பண்ண கூடாதாம்...
இது புதுசா வந்திருக்கிற ரூல்ஸ் ல ஒன்னு....”
“எவன் டி அவன்?? சுத்த கூறு கெட்ட கூமட்டையா இருக்கான்.. அவன் சொல்றானு நீயும் மாங்கு
மாங்கு னு அடிச்சுகிட்டு இருக்க...”
“ஹ்ம்ம்ம் வேற என்ன செய்ய ?? ...
எல்லாரும் போற வழியில நாமும் போகத்தான் வேண்டும்...
உனக்கென்னடி??
நீ போன sprint ல எஸ்கேப்
ஆகிட்ட... உன் வேலையும் சேர்த்து நான் தான் பார்க்க வேண்டியதாயிடுச்சு...
ஆமா உனக்கு உடம்புக்கு என்ன டி ஆச்சு ??.. போன வாரம் உன் மொபைலுக்கு ட்ரை பண்ணினா ஸ்விட்ச் ஆப் னு வந்துச்சு....”
“வேற என்ன ?? எங்க அத்தை பொண்ணுக்கு கல்யாணம்.. அதான் ஊருக்கு
போய்ட்டேன்..” என்றாள் சந்தியா மெல்லிய குரலில்
“என்னது ?? ஊருக்கு போய்ட்டியா?? வினித் நீ சிக் லீவ் எடுத்திருக்கனு தான சொன்னார்...” என்றாள் அன்பழகி குழப்பமாக...
அதை கேட்ட சந்தியா சுற்றிலும் கண்ணை சுழற்றி பார்த்தவள் அன்பழகியின் அருகில்
தன் சுழல் நாற்காலியை தள்ளி அருகில் வந்தவள்
“யார் கிட்டயும் சொல்லிடாத டி வம்பு.....இது
planned
sick leave.. “ என்றாள்
ரகசியமாக கண் சிமிட்டி சிரித்தவாறு ...
அதை கேட்டு அதிர்ந்தவள்
“அடிப்பாவி... எப்படி டி நீ மட்டும் கல்யாணத்துக்கு போய்ட்டு தைர்யமா சிக் லீவ் போட்ட..?? “ என்றாள் ஆச்சர்யமாக
“பின்ன என்ன செய்யறதாம் ?? என் அத்தை பொண்ணுக்கு கல்யாணம்..
ஒரு வாரம் லீவ் கொடுங்கனு கேட்டா, ஆகா... நீ இந்த கம்பெனிக்காக ரொம்ப உழைச்சு இருக்க.. தாராளமா போய்ட்டு
வா னு இவங்க அப்படியே தூக்கி கொடுத்திட்டாலும்..
உன் கல்யாணத்துக்கே இரண்டு நாள் தான் லீவ்
தருவோம்... உன் அத்தை பொண்ணு கல்யாணத்துக்கு ஒரு நாள் லீவ் போதும் னு லீவ் கொடுக்க மாட்டாங்க...
அதான்...நாமளா ஏன் போய் அவங்க கிட்ட
கெஞ்சணும்.. லீவ் எடுத்துட்டு சொல்லிக்கலாம் னு விட்டுட்டேன்.. “ என்றாள் மீண்டும்
கண் சிமிட்டி சிரித்தவாறு ...
“ஹ்ம்ம் ரொம்பவும் தைர்யம் தான் டி உனக்கு...
“ என்றாள் அன்பு இன்னும் ஆச்சர்யம் விலகாமல்..
“அது சரி.. நான் லீவ் போட்ட அந்த வீக் என்ட்
deployment
இருந்ததே?? எப்படி போச்சு ?? .. இஸ்யூ எதுவும் இல்லையா?? “என்றாள் ஆர்வமாக
“அந்த கொடுமையை ஏன் டி கேட்கற.. அது ஒரு பெரிய கதை டி.. “ என்றாள் அன்பு..
கதை என்றதும் மேலும் ஆர்வமான சந்தியா,
தன் நாற்காலியை இன்னும் நன்றாக இழுத்து தன் தோழியின் அருகில் நெருங்கி அமர்ந்தவள்
“சொல்லு... சொல்லு... என்னாச்சு?? .”
என்றாள் ஆர்வத்துடன்
“போடி.. நீ வந்ததே லேட்.. உன் வேலையை முதல்ல
பாரு... நான் அப்புறமா கதை சொல்றேன்.. “ என்றாள் அன்பு..
“வேலை தான.. அது எங்க போய்ட போகுது... அதெல்லாம்
அப்புறம் செஞ்சுக்கலாம் டி.. நீ ஓவரா வேலை
செய்யற மாதிரி சீன் போடாம முதல்ல கதைய
சொல்.... இல்லைனா என் மண்டை வெடிச்சிடும்... “ என்றாள் சந்தியா மீண்டும் ஆர்வமாக..
அவளை முறைத்தவள்
“சொல்லாட்டி நீதான் விட மாட்டியே...
டீம்ல நீயும் பாதியில போய்ட்டியா ?? நீ டெஸ்ட் பண்ணாததெல்லாம் அப்படியே நின்னு போச்சு.. அப்புறம் டெவ் டீம்
வினித் கிட்ட எஸ்கலேட் பண்ணிட்டாங்க இன்னும் டெஸ்ட் பண்ணி முடியலைனு ..
உடனே அவரும் உன் நம்பருக்கு ட்ரை பண்ணினார் நீ எழுதின டெஸ்ட் கேஸை வாங்கி
யார்கிட்டயாவது கொடுத்து டெஸ்ட் பண்ண வைக்கலாம்னு....
கள்ளி.... நீ அவர் எப்படியும் கால்
பண்ணுவார் னு தெரிஞ்சுதான் ஸ்விட்ச் ஆப் பண்ணி வச்சுட்டனு நினைக்கிறேன்...
அப்புறம் என்னையும் கதிரேசனையும் புடிச்சுகிட்டார்...
டெஸ்ட் பண்ணி சைன் ஆப் பண்ணினாதான் புரடக்சனுக்கு மூவ் பண்ண முடியும் னு உட்கார
வச்சுட்டார்....
நாங்களும் மாங்கு மாங்குனு எதையோ பேருக்கு
டெஸ்ட் பண்ணி ஓரளவுக்கு கவர் பண்ணி சைன் ஆப்(sign off) பண்ணிட்டோம்... அப்புறம் deploy பண்ணினா புரடக்சன்ல ஊத்திகிச்சு....
டெவ் டீம் க்கு என்ன இஸ்யூ னு கண்டு பிடிக்கவே முடியலை... அவனுங்களும் ஒரு நாள்
புல்லா எதை எதையோ ட்ரை பண்ணி பார்த்தாங்க..
ஒன்னும் பிக்ஸ் பண்ண முடியலை...”
“ஓ... டெஸ்ட் என்விரான்ட்மென்ட் ல வொர்க்
ஆச்சா?? “ என்றாள் யோசனையாக
“இல்லையே .. அங்கயும் வொர்க் ஆகலை.. இந்த சினாரியோவ யாரும் டெஸ்ட் பண்ணலை... அதான் அடி
வாங்கிடுச்சு... டெவ் டீமும் மண்டைய போட்டு உடைச்சுகிட்டாங்க... பத்தாதற்கு எங்களையும்
புடிச்சு உட்கார வச்சுட்டாங்க..
அவனுங்க கோட் ஐ பிக்ஸ் பண்ணின உடனே நாங்க டெஸ்ட் பண்ணனும் னு.. நானும்
லேப்டாப்பையே பார்த்துட்டு உட்கார்ந்திருக்கேன்... கடைசி வரைக்கும் அவனுங்களால பிக்ஸ்
பண்ணவே முடியலை...
அப்புறம் நம்ம டெவ் மேனெஜர் மனோ இல்ல.. அவர் தான் நம்ம ப்ராஜெக்ட் க்கு புதுசா வந்திருக்கார்னு
சென்னேனே அவர புடிச்சு இஸ்யு வ காமிச்சா, அந்த மனுசன் அடுத்த 5
நிமிசத்துலயே பிக்ஸ் பண்ணிட்டார்...
சரியான மண்டை போல டி... அப்புறம் ஒரு வழியா டெஸ்ட்
பண்ணி அதை டெப்லாய் பண்ணி முடிச்சாங்க.... Saturday , Sunday இரண்டு நாளும் இதுலயே போயிருச்சு டீ.. “ என்றாள் அன்பு சோகமாக....
“ஹா ஹா ஹா... நல்லா மாட்டினியா !! “ என்றாள் சந்தியா சிரித்தவாறு...
“ஏன் டி.. என் நிலையை பார்த்தா உனக்கு
சிரிப்பா இருக்கா ?? “ என்று முறைத்தவள்
“ஹ்ம்ம்ம் ஒரு வேளை நீ டெஸ்ட் பண்ணி இருந்திருந்தால் இத முன்னயே கண்டு பிடிச்சிருப்ப... நீ இல்லாமதான் இப்படி ஆயிருச்சுனு
நினைக்கிறேன்..
அப்புறம் lessons learned மீட்டிங் னு ஒன்ன வச்சு அதுல டெவ் டீம் நம்மள கை காமிச்சுட்டாங்க..
நாம சரியா டெஸ்ட் பண்ணாதனாலதான் புரடக்சன்ல
பெயில் ஆச்சுனு.. அந்த புது மண்டையும் உடனே எல்லாரும் டெஸ்ட் பண்ணின டெஸ்ட் கேஸ் எல்லாம் ரெவ்யூ பண்ண காமிங்கனு சொல்லிட்டார்...
அதான் எல்லாரும் இப்ப அவசர அவசரமா அடிச்சுகிட்டு
இருக்கோம்..
ஆமாம் நீ எப்பவுமே deployment
அப்ப லீவ் எடுக்க மாட்டியே டி...அதுவும் முக்கியமான சினாரியோ
எல்லாம் ஆரம்பத்துலயே டெஸ்ட்
பண்ணிடுவியே... இப்ப எப்படி இதை டெஸ்ட்
பண்ணாம விட்டுட்டு போன?? “ என்றாள் அன்பு சந்தேகமாக..
“ஹ்ம்ம்ம் எல்லாம் காரணமாதான் டி. போன ரிலீஸ்க்கு
மாங்கு மாங்குனு டெஸ்ட் பண்ணி எத்தனை bug கண்டுபிச்சு
டெப்லாய்மென்ட் முன்னாடியே பிக்ஸ் பண்ண
வச்சோம்...
ஆனா யாராவது நம்மள பாராட்டி ஒரு மெயில்
அனுப்பினாங்களா?? பேருக்காவது ஒரு அவார்ட் கொடுத்தாங்களா
?? ... ஆன டெவ் டீம் ஐ மட்டும் 0 defect ரிலீஸ் னு தலைல தூக்கி வச்சு கொண்டாடினாங்க..அவனுங்களுக்கு
மட்டும் பெஸ்ட் டீம் னு அவார்ட் வேற...
அவனுங்க அடிச்ச கோட் ல எத்தன டிபெக்ட்னு எனக்கு
தான் தெரியும்.. அதான் இந்த ரிலீஸ்
வேணும்னே ப்ளான் பண்ணி டெவ் டீம் ஐ மாட்ட வச்சேன்...
இப்ப தெரிஞ்சிருக்குமே அவனுங்க லட்சணம்... “ என்றாள் கண் சிமிட்டி
சிரித்தவாறு ..
“அடிப்பாவி.. உனக்குள்ள இப்படி ஒரு வில்லியா?? “ என்றாள் அன்பு ஆச்சர்யமாகி
“ஹீ ஹீ ஹீ வில்லி னு இல்ல.. அவங்களுக்கு ஒரு பாடம் கத்து
கொடுக்கணும்னு தான்... “ என்று மீண்டும்
சிரித்தாள்..
“ம்ம்ம்ம் நீ கத்து கொடுத்த பாடத்தால டெவ் டீம் க்கும் ஏதோ நிறைய ரூல்ஸ் போட்டுட்டாங்களாம்..
நமக்கும் நிறைய சேஞ்சஸ் வருதாம்.. அதுல
ஒன்னுதான் இந்த டெஸ்ட் கேஸ் கம்பல்சரி ன்றது...
ஹ்ம்ம்ம் எப்படியோ.. ஜாலியா போய்கிட்டிருந்த
லைப் ஐ இப்படி கும்மியடிச்சு குழப்பிட்டியேடி...இன்னும் என்னெல்லாம் மாற போகுதோ..?? ” என்று பெருமூச்சு விட்டவள்
“சரி டி.. வாங்கற சம்பளத்துக்கு கொஞ்சமாவது நீ
உன் வேலையை பார்... என் பங்குக்கு நான் கொஞ்சமாவது ரைட் பண்ணி மேக்கப் பண்றேன்...
“ என்று தன் லேப்டாப் பக்கம் திரும்பினாள் அன்பு...
சந்தியாவும் சிரித்து கொண்டே தன் இருக்கைக்கு நாற்காலியை சுழற்றியபடி வந்தவள், தன் லேப்டாப் ஐ மீண்டும் ஆன் பண்ணி ஈமெயில் செக் பண்ண, நிறைய மெயில் ஸ் குவிந்திருந்தன...
அந்த டெப்லாய்மென்ட் ல் நடந்த குழறுபடிகளை
பற்றி இது டெவ் டீம் தவறு எனவும், இல்லை இது டெஸ்ட் டீம் தவறுதான் என ஆர்க்யூமென்ட் ஆக குவிந்து கிடந்தன...
அதை எல்லாம் சுவராஸ்யமாக படித்தவள்
“கடைசியில் நாட்டாமை என்ன தீர்ப்பை சொன்னார்...?? “ என்று ஆர்வமாக கடைசி மெயிலுக்கு போனவள் அதில் சொல்லி இருந்த மாற்றங்களை பார்த்து சாக் ஆகி அமர்ந்தாள்....
பின் அதை யார் அனுப்பியது என்று அவசரமாக அந்த மெயில் சிக்னேச்சரை பார்க்க , அதில் மகிழன் Architect என்று இருந்தது..
“ஓ.. இவன்தான் அந்த புதுசா வந்திருக்கிற பெரிய மண்டையா ?? இந்த வம்பு வளச்சு வளச்சு புகழ்ந்தவன் இவன்தானா??
பேரை பார்... மகிழன்... மங்கி மகிழன் !!! இல்ல மங்கி மகி!!
... இதுதான் அவனுக்கு பெர்பெக்ட் மேட்ச் ஆ
இருக்கு... ஹா ஹா ஹா ... “ என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டாள் சந்தியா....
👌
ReplyDelete