அழகான ராட்சசியே!!!-3

 


அத்தியாயம்-3

ரு வழியாக சந்தியா  விடுமுறை எடுத்திருந்த கடந்த ஒரு வாரமாக வந்திருந்த ஈமெயில்களை எல்லாம் பார்வை இட்டு முடித்தவள் கடைசியாக வந்திருந்த Process Changes என்ற தலைப்பில் டெவ் டீம் க்கும் டெஸ்ட் டீம்க்கும் சில மாற்றங்களை தாங்கி வந்திருந்த ஈமெயில் ஐ திறந்தாள்...

அதை திறந்து படித்தவள் அதில் குறிப்பிட்டிருந்த மாற்றங்களை கவனித்தவள் அதை அனுப்பியவன் signature ஐ பார்க்க, அதில் மகிழன் Architect  என்று இருந்தது...

அதை கண்டவள்,

“ஓ.. இவன்தான் அந்த  புதுசா வந்திருக்கிற பெரிய மண்டையா ?? இந்த வம்பு வளச்சு வளச்சு புகழ்ந்தவன்  இவன்தானா??

ஹ்ம்ம்ம் இவன் சொல்லிட்டா இங்க எல்லாரும் அப்படியே பாலோ பண்ணிட்டாலும்?? பார்க்கலாம் எவ்வளவு நாளைக்கு ஆடறானு? " என்று  தன் உதட்டை ஏளனமாக வளைத்தவள் லேப்டாப் ஓரத்தில் இருந்த மணியை பார்க்க அது 1 PM என காட்டியது...

அப்பொழுதுதான் அவளுக்கு பசிப்பது நினைவு வந்தது..

காலையில்   தாமதமாக எழுந்து தன் அன்னையிடம் நன்றாக வாங்கி கட்டி கொண்டு ஆபிஸ்க்கு அவசரமாக கிளம்பி ஓடி வந்ததால் சரியாக சாப்பிடவில்லை என்பது நினைவு  வர இதுவரை  தெரியாமல் இருந்த பசி இப்பொழுது  வயிற்றை  கிள்ளியது...

பக்கத்தில் இருந்த அன்பழகியை பார்த்தவள்

"என்னடி வம்பு.. இன்னுமா உன்  வயிறு மணி அடிக்கல... இன்னேரம் 1 மணி அடித்தால் உன் ஞாபகம் னு சாப்பிட கிளம்பிடுவ... இன்னும் என்னடி கண்டுக்காம இருக்க.." என்று  எட்டி அவள் கையை கிள்ளினள் சந்தியா...

“ஹே.. சும்மா இரு டி சந்தி... நீ சொல்றதெல்லாம் கரெக்ட் தான்... ஆனா செவிக்குணவு இல்லாதபொழுது சிறிது  வயிற்றுக்கும் ஈயப்படும் னு சொல்லி இருக்காங்க இல்ல??

"ஹே...  இரு.. இரு.. இது யார் சொன்னா??  எங்க சொல்லு பார்க்கலாம்... “ என்றாள் சந்தியா குறும்பாக சிரித்தவாறு...

“ஆங்... யார் சொல்லியிருப்பா ?? “ என்று அவசரமாக யோசித்தவள் யார் என்று  சரியாக நினைவு வராததால்

“யாரையாவது தப்பா சொல்லி இவ கிட்ட மாட்டிக்கிறதுக்கு சொல்லாமலயே தப்பிச்சுக்கலாம்.. “ என்று யோசித்தவள்

"யாரோ சொன்னாங்க... . இப்ப அதுவா முக்கியம்?? அந்த பெரிய மனுசன் சொன்ன மாதிரி இப்ப கைக்கு வேலை இல்லாத நேரத்திலதான் சாப்பிடணுமாம்.. நான் இப்ப பிசியா இருக்கேன்.. அத முடிச்சிட்டு வர்ர வரைக்கும் வெய்ட் பண்ணு டி... "

"பார்டா.... இந்த வம்புக்கு  வந்த வாழ்வை... நீயெல்லாம் இப்படி தீயா வேலை செஞ்சிருந்தா லாஸ்ட் க்வார்ட்டர்(quarter)  ரெவென்யூ ரிப்போர்ட்ல நம்ம கம்பெனி ரெவென்யூ எங்கயோ போய்ருக்கும் டி... "  என்றாள் நக்கலாக சிரித்தவாறு....

அன்பழகி திரும்பி அவளை பார்த்து முறைக்க, 

“சரி.. .சரி..  நீ வேலைய சீக்கிரம்  முடி.. நான் ஆப்பு  என்ன பண்றானு பார்க்கறேன்... " என்றவள் தன் லேப்டாப் ல் இருந்த  Skype ல் அபர்ணா என்ற பெயரை செர்ச் பண்ணி

“ஹாய் டி ஆப்பு... எப்படி இருக்க?? “ என்றாள்...

மறுபக்கம் இருந்து  அவளுக்கு ஒரு முறைக்கும் இமோஜி வர,

“ஹா ஹா ஹா ரொம்ப க்யூட் ஆ இருக்குடி ஆப்பு உன் மூஞ்சி... சீக்கிரம் Cafeteria க்கு வா.. பசிக்குது... “ என்று பதில் அழித்தவள் தன் அலைபேசியை எடுத்து நோண்ட ஆரம்பித்தாள்...

சிறிது நேரம் கழித்து அன்பழகியை திரும்பி பார்க்க, அவள் இன்னும் வேலையை முடிக்காததால் அதற்கு மேல் பொறுக்க முடியாதவள் எழுந்து அன்பழகியின் அருகில் சென்று அவளின் லேப்டாப்பில் பவர் பட்டனை அழுத்தி அதை ஆப் பண்ணி விட்டு அவள் கையை பிடித்து இழுத்து கொண்டு சென்றாள் Cafeteria ஐ நோக்கி ...

“ஹே சந்தி.. வர வர உன் அட்டகாசம் தாங்க முடியலை டி... நான் காலையில் இருந்து மாங்கு மாங்குனு  டைப் பண்ணியதெல்லாம்  சேவ் பண்ணவே இல்ல.. எல்லாம் போயிருக்கும் .. “ என்று  முறைத்தாள் அன்பு...

“ஹீ ஹீ ஹீ.. ரொம்ப அலட்டிக்காத.. அற்பனுக்கு  வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில குடை பிடிப்பானாம். .. அந்த மாதிரி பசியை கூட மறந்துட்டு நீ வேலை செய்யற ?? ஒரே நாள்ல நீ திருந்திட்டேனு சொன்னா நம்பற மாதிரியா இருக்கு..... “ என்று சிரித்தாள் சந்தியா..

“நிஜமாகவே.. நான் டெஸ்ட் கேஸ் அடிச்சேன் டீ.. “ என்றாள் அன்பு அவளை முறைத்தவாறு

“ஹீ ஹீ ஹீ... என்ன காலையில் இருந்து ஒரு நாலு  டெஸ்ட் கேஸ் அடிச்சிருப்பியா?? “ என்றாள் நக்கலாக

“ஆஹா... எப்படி அப்படியே சொல்றா??  ஒரு வேளை நான் வேலை செய்யற  மாதிரி சீன் போட்டதை பார்த்துட்டாளா?? “ என்று அசட்டு சிரிப்புடன் சந்தியாவை பார்க்க

“ஹா ஹா ஹா.. உன்னை பத்தி எனக்கு தெரியதா வம்பு... சரி விடு... உன்னை மாதிரி ஆளுங்களுக்காகத்தான் மைக்ரோசாப்ட் ல இருந்து Autosave ஐ கண்டுபிடிச்சு வச்சிருக்காங்க... நீ மறந்தாலும் அதுவே சேவ் ஆகியிருக்கும்....

Autorecover ஆப்சனை வச்சு அதிலிருந்து எடுத்துக்கோ..

அப்படியும் இல்லைனாலும் நானே அந்த  நாலு லைனை அடிச்சு தர்ரேன்.. என்ன அத அடிக்க ஒரு நிமிசம் தான் ஆகும்.. அதனால ரொம்ப பிலிம் காட்டாம சீக்கிரம் வா டி...

பசியில சிறு குடலை பெருங்குடல் திங்குது... “ என்று முன்னே நடந்தாள் சந்தியா சிரித்தவாறு...

அன்பு மீண்டும் ஒரு அசட்டு சிரிப்பை சிரித்தவள்

“ஹ்ம்ம்ம் உனக்கென்ன மா... நீ லீவ் னு சொல்லி எதுவும் சப்மிட் பண்ணாம எஸ் ஆகிடுவ.. அந்த  வினித் திரும்ப வந்து கேட்க போறான்.. நான் என்ன  சொல்ல ?? “ என்றாள் சிறு கவலையுடன்

“ஹே... சில்(chill) பேபி... நம்ம வினித் பாஸ் தான.. அவன் கேட்டா  டெவ் லீட் சுனிதா கூட காபி சாப்பிட போயிருந்தேனு சொல்லு.. அப்படியே ஆப் ஆகிடுவான்...  அதோட அவன் மூஞ்சுல 1000 வாட்ஸ் பல்ப் எரியும்..” என்று கண் சிமிட்டி சிரித்தாள்...

“இது என்னடி புது கதை?? “ என்றாள் அன்பு ஆச்சர்யமாக  

“என்னது ?? புது கதையா?? நீ தான்டி சொன்ன அவங்க இரண்டு பேர் நடுவுலயும்  ஏதோ ட்ராக் போய் கிட்டிருக்கு னு.. “

“ஹீ ஹீ ஹீ... அது சும்மா நானே பில்டப் பண்ணி சொன்னது டி...நீ கேட்ட அன்னிக்கு வேற கதை எதுவும் இல்ல.. அதனால நானே ஒரு கதையை கிரியேட் பண்ணி சொன்னேன்... அதை  போய் நம்பிட்டியா?? “  என்றாள் நக்கலாக சிரித்தவாறு...

அவளை முறைத்தவள்

“ஹ்ம்ம் நீ எந்த நேரத்துல பில்டப்  பண்ணி  சொன்னியோ உன் வாய் முகூர்த்தம்  அப்படியே பழிச்சிருச்சு போல டி.. அங்க பார்.. இப்ப கூட அந்த  சுனிதா கூட தான் கடலை போட்டுகிட்டிருக்கான்... “ என்று மறுபக்கம் கண்ணால்  ஜாடை காட்டி சிரித்தாள் சந்தியா ..

அன்புவும் அந்த பக்கம் திரும்பி பார்த்தவள் ஆ வென்று  வாயை திறந்து பார்க்க,

“போதும் டி வம்பு.. வாய்க்குள்ள கொசு போய்ட போகுது.. “ என்கவும் அவளை முறைத்தவாறு  நகர்ந்து சென்றனர்...

கேப்டீரியாவை அடைந்ததும் சந்தியா அவளுக்கு பிடித்த சிக்கன் பிரியாணியை வாங்கி கொண்டு வந்தவள் ஓரமாக இருந்த டேபிலில் அமர்ந்தாள்...

அன்பழகியும் அவளுக்கு பிடித்த மசால் தோசையை வாங்கி கொண்டு வந்து  அமர, அதற்குள் அந்த பிரியாணியில் ஒரு வாய் எடுத்து சாப்பிட்ட சந்தியா 

“வாவ்... என்னதான் சொல் வம்பு...  நம்ம ஆபிஸ்  கேன்டின் ல இருக்கிற  சிக்கன் பிரியாணியே தனிதான்... “ என்றாள் ரசித்து சாப்பிட்டவாறு....

“நீ ஒரு பிரியாணி பைத்தியம் டீ.. எப்படிதான் இதை திரும்ப திரும்ப சாப்பிடறியோ ?? “ என்று  முகத்தை சுழித்தாள் அன்பு....

“ஹா ஹா ஹா கழுதைக்கு தெரியுமாம்  கற்பூர வாசனை.. இதோட டேஸ்ட் உனக்கெல்லாம் தெரியாது டி.. “ என்று கண்ணை மூடி ரசித்து உண்டாள்...

அதை கண்டு தலையில் அடித்து கொண்ட அன்பு

“உன்னையெல்லாம் தண்ணி இல்லாத காட்டுக்கு மாற்றுவது மாதிரி பிரியாணி இல்லாத ஊர்ல தூக்கி போடணும் டி... “ என்றாள் சிரித்தவாறு..

“ஐயயோ... அந்த சாபத்தை மட்டும் கொடுத்துடாத டி.. தண்ணி இல்லாம கூட இருந்திடுவேன்.. ஆனா என் டார்லிங் பிரியாணி இல்லாம மட்டும் என்னால் லைப் ஐ ஓட்ட முடியாது...

எங்கப்பா கிட்ட ஸ்ட்ரிக்ட்  ஆ சொல்லிட்டேன்.. என் புருசனை தேடறப்ப அதாவது எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறப்ப  முதல் கண்டிசனே  என் புருசனுக்கு நல்லா பிரியாணி வித விதமா செய்ய தெரியணும்....

பிரியாணி மாஸ்டரா இருந்தா டபுல் ஓகே னு சொல்லிட்டேன்...” என்று சிரிக்க, அதை கண்டு மீண்டும் தலையில் அடித்து கொண்டாள் அன்பு

அதே நேரம் அபர்ணா அவளை நோக்கி கை அசைத்தவாறு லன்ச்  பாக்ஸ் உடன் அவர்களை நோக்கி வந்தாள் சிரித்தவாறு...

அபர்ணா – ஜூனியர் டெவலப்பர் ஆக வேலை பார்ப்பவள்... சந்தியா, அன்பழகி அபர்ணா மூவரும் ஒரே நாளிம் அந்த அலுவலகத்தில் சேர்ந்தவர்கள்...

பொதுவாக கொஞ்சம் பெரிய IT அலுவலகங்களில் புதிதாக வேலைக்கு சேர்பவர்களுக்கு முதல் நாள்  Induction program இருக்கும்

புதிதாக வந்தவர்களுக்கு அந்த அலுவலகத்தை பற்றியும் அதில் இருக்கும் ஒவ்வொரு துறை மற்றும் ப்ராஜெக்ட்களை பற்றியும் மற்றும் அந்த அலுவலகத்தின் லிப் பாலிசி, அவர்கள் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகள் என ஒரு நாள் program ஆக இருக்கும்...

Induction அன்று மூவரும் அருகருகில் அமர்ந்து இருக்க, பிரேக் ல் தங்களை அறிமுகபடுத்தி கொண்டு பேச ஆரம்பிக்க, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் மூவரும் நண்பிகளாக ஆகி விட்டனர்....

அதில் இருந்து வேலை செய்யும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் மூவரும் ஒன்றாக சுத்துவர்...அதுவும்  சந்தியாவின் துடுக்குத்தனமான பேச்சு மற்ற இரு பெண்களை கவர, அவளையே சுற்றி வருவர்...

அபர்ணா  சிரித்து கொண்டே அருகில் வரவும்

“வாடி ஆப்பு.. என்ன ரொம்ப பிசியா?? என்ன சொல்றார் உங்க ஆர்கிடெக்ட்... எல்லாரையும் போட்டு படுத்துவார் போல..” என்றாள் சந்தியா சிரித்தவாறு....

அவளும் ஒரு நாற்காலியை நகர்த்தி அதில் அமர்ந்தவள்

“ஹ்ம்ம்ம் அத ஏன் டி கேட்கற?? கோட்( code)  அடிக்கும் முன்னாடி டெக்னிக்கல்  டிசைன் (technical design) இருக்கணுமாம் .. டிசைன் டாகுமென்ட் இல்லாம யாரும் கோட் எழுத கூடாது னு  சொல்லிட்டார் புதுசா வந்திருக்கிறவர்...

நான் ஜுனியர் டெவலப்பர் ங்கிறதால தப்பிச்சுட்டேன்.. என் லீட் மாட்டிகிட்டு முழிக்கிறான்.. அவன் டிசைன்  டாகுமென்ட் னா என்னானு கேட்கறான்.. அதை  எப்படி பிரிபேர் பண்றதுனு தெரியாம முழிக்கிறான்.. “ என்று சிரித்தாள் அபர்ணா...

“ஹா ஹா ஹா...  சூப்பர்... என்ஜாய் டெவ் டீம்...ரொம்ப ஆடுனீங்க இல்ல... அதான் ஆப்பு வந்துச்சா...  "என்று சிரித்தாள் சந்தியா...

மற்ற இரு பெண்களும் அவளுடன் இணைந்து நகைத்தனர்....   

“ஹாய் கேர்ள்ஸ்....மே ஐ ஜாய்ன் வித் யூ ??  “    என்றவாறு கதிர்  அங்கு வந்தான் புன்னகைத்தவாறு...

மூன்று பெண்களும் திரும்பி பார்த்து புன்னகைக்க

“வாடா.. காகா.. எப்படி இருக்க?? அது என்ன இங்கிலீஸ்ல யே பொறந்து வளர்ந்த மாதிரி மே ஐ ஜாய்ன் வித் யூ  னு ரொம்ப அலட்டிகிற .. வா அண்ணாத்த.. வந்து இப்படி குந்திக்கோ... “ என்றாள் சந்தியா சிரித்தவாறு....

“ஹோய் சந்தியா... என் இமேஜை டேமேஜ் பண்ணாத... “ என்றான் அவள் காதருகில் குனிந்து எதிரில் இருந்த அபர்ணாவை பார்த்தவாறு....

“ஹீ ஹீ ஹீ.. உனக்கெல்லாம் என்னடா இமேஜ் வேண்டி கிடக்கு.....ஆபிஸ் ல சேர்ந்தப்போ உனக்கு ஒரு ஹாய் கூட ஒலுங்கா சொல்ல வராது.... அப்புறம் நான் ரெகமன்ட் பண்ணிதான் 30 நாட்களில் ஆங்கிலம் சரளமாக பேசலாம் என்ற யூட்யூப் வீடியோ வை பார்த்து பிராக்டிஸ்  பண்ணின..

ஒரு நாலு சென்டென்ஸ்  ஒலுங்கா  பேச கத்துக்க, அந்த யூட்யூப் வீடியோவை ஒரு லட்சம் டைம் ஆவது பார்த்து இருப்ப.. உன்னாலயே அந்த வீடியோ மில்லியன் வியூஸ்(views) தாண்டிடுச்சாம் தெரியுமா ??

அதை அப்லோட் பண்ணியவருக்கு இப்ப காசு கொட்டோ கொட்டுனு கொட்டுதாம்...ஏதோ உன்னால முடிஞ்சு  ஒரு நல்ல காரியம் பண்ணியிருக்க...

அதனால சும்மா இங்க சீன் போடாத.. ஆபிஸ் கேட் ஐ தாண்டி அந்தப்பக்கம்  போனதும் அப்படியே சென்னை தமிழ் ல பிச்சு உதறுவ.. நீ என்கிட்டயே  ஷோ காமிக்கறீயா காகா.... “ என்று  அவனை முறைத்தவாறு சிரித்தாள்....

“அடிப்பாவி.. நான் தெரியாம ஒரு சென்டென்ஸ் பேசினது குத்தமா?? அதுக்கு போய் மதுரையை எரித்த கண்ணகி மாதிரி எதுக்கு இந்த அவதாரம் எடுக்கற.. அம்மா தாயே இனிமேல் நீ இருக்கிறப்ப நான் இங்கிலீஸ்ல யே பேசலை.. போதுமா?? “ என்று கைகளை மேலே குவித்து அவளுக்கு கும்பிடு போட்டான் கதிர்....

“ஹீ ஹீ ஹீ... இது நல்லா இருக்கு காகா.. நீ உன் க்ளைன்ட்( client)  கிட்ட பேசறப்ப உன் ஆங்கில புலமையெல்லாம் காட்டு.. நம்ம கேங்கில் நீ உன் தாய்மொழியிலயே பேசு காகா.. அதுதான் கேட்க நல்லா இருக்கும்.... “என்றாள் சந்தியா மீண்டும் சிரித்தவாறு..

“ஹ்ம்ம் அது சரி... ஆமா.. .எத்தனை  தரம் நான் சொல்லி இருக்கேன் என்னை  காகா னு கூப்பிடாத னு.. நான் என்ன பார்க்க காக்கா மாதிரியா இருக்கேன் ?? "என்று  சிலிர்த்து கொண்டான் கதிர் அவளை முறைத்தவாறு...

“இதோ பாருடா.. காகா வை காகானு கூப்பிடாம சோகா னா கூப்பிடறது " என்க, அதை கேட்டு  ஹைபை கொடுத்தாள்  அன்பு அவளுக்கு சிரித்தவாறு ...

அதை கண்டவன் டென்ஷன் ஆகி

“போடி வம்பு... நீயும் அவ கூட சேர்ந்துகிட்டியா?? ... சந்தியா இல்லாதப்ப என்கிட்ட வந்து டெஸ்ட் பண்ண ஹெல்ப் பண்ணு கதிர் னு  நீதான மூக்கால அழுத..

உனக்கு நான்  சப்போர்ட் பண்ணி வீக் என்ட் எனக்கு வேஸ்ட் ஆ போனதுதான் மிச்சம்.. இனிமேல் எதுக்காகவும் என்கிட்ட வா.. அப்ப இருக்கு உனக்கு .." என்று முறைத்தான் கதிர்..

“இது என்னடி புது கதை?? என்னடி வம்பு.. காகா எப்ப உனக்கு ஹெல்ப் பண்ணினான்..  இதை சொல்லவே இல்லை..." என்றாள்  சந்தியா அன்பழகியை சந்தேகமாக பார்த்தவாறு..  

"ஹீ ஹீ ஹீ ..... எனக்கு ஒரு இது எப்படி டெஸ்ட் பண்றதுனு தெரியலை டி.. நீ இருந்திருந்தால் உன்கிட்ட கேட்டிருப்பேன்.. அதான் கதிர் கிட்ட கேட்டு டெஸ்ட் பண்ணினேன்... " என்றாள் அன்பு மெல்ல இழுத்தவாறு...

“என்னது ??  நீ டெஸ்ட் பண்ணினியா?? எங்க உன் நெஞ்சுல கை வைச்சு சொல்லு.. நீதான் அத டெஸ்ட் பண்ணி முடிச்சேனு....

இத எப்படி டெஸ்ட் பண்றது னு  சொல்லிக்  கொடு கதிர் னு ஆரம்பிச்ச.. ஆனா  கடைசியில நீயே இதை டெஸ்ட் பண்ணிடு கதிர் னு என் தலையில கட்டலை ??.... " என்று  முறைத்தான்...

“ஹா ஹா ஹா.. சரி விடு காகா... ஏதோ சின்ன புள்ள .. டெஸ்ட் பண்ண பயந்துகிட்டா போல.. மறுபடியும் எதுவும் பிரச்சனை வந்தா அவ பதில் சொல்லணும் னு உன்னை புடிச்சுகிட்டா போல... " என்று திடீர் நாட்டாமையாகி பஞ்சாயத்தை முடித்து வைத்தாள் சந்தியா......

“ஹ்ம்ம்ம் உனக்காக அவளை விடறேன்... “ என்று முறைத்து  சிரித்தவன்

“சரி சந்தி ... அத விடு...நீ ஏன் என்னை காகா னு  கூப்பிடற?  நான் ஒன்னும் கருப்பா இல்லையே “ என்றான் நீண்ட நாட்களாக தன்னை உறுத்தி  வந்த சந்தேகத்தை தெளிவு படுத்த...

“ஓ அதுவா?? நீ தான்டா வேலைக்கு சேர்ந்தப்ப  உன்னை இன்ட்ரோ (intro)   பண்றப்போ உன் பேரை கா. கதிரேசன் அப்படீனு சொன்ன....அதான் அதை சுருக்கி காகா னு வச்சுட்டேன் ... “ என்று  சிரித்தாள் சந்தியா..

“ஹீ ஹீ ஹீ... அது அப்ப IT க்குள்ள வந்த புதுசு.. பெயர் கேட்டா நான் படிச்ச காலேஜ்ல சொல்ற மாதிரி தமிழ் ல சொல்லிட்டேன்... இப்ப தான் நானே அழகா என் பெயரை கேகே னு சுருக்கிட்டேன் இல்ல...எல்லாரும் அப்படிதான் கூப்பிடறாங்க...  அது மாதிரி  கூப்பிடலாம் இல்ல...” என்றான் லேசாக முறைத்தவாறு...

“ஹீ ஹீ ஹீ எல்லாரும் போற  வழியில நாமளும்  போக கூடாது காகா... ஏன்னா என் வழி தனி வழி ...” என்று  தன் முடியை இடது கையால்  ஸ்டைலாக கோதி கையை  அசைத்து தலைவர் ரஜினி மாதிரி ஆக்சன் பண்ண மற்ற பெண்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்...

அதை கண்டவன் இன்னும் கடுப்பாகி

“போங்க டீ...உங்க கூட போய் சாப்பிட வந்தேன் பார்... என்னை அடிச்சுக்கணும்..  ஹோய் சந்தி... உன்னை  அடக்க ஒருத்தன் பொறந்திருப்பான்.. அவன் வந்து உன்னை எப்படி அடக்கறான் பார்...” என்று முறைத்து கொண்டே அவன் சாப்பிட்டு கொண்டிருந்த தட்டை தூக்கி கொண்டு மறுபக்கம் இருந்த டேபிலுக்கு சென்றான்...

“ஹா ஹா  ஹா அப்படி ஒருத்தன் வந்தா உன்கிட்ட சொல்லி விடறேன் காகா....வந்து ஆசை தீர பார்த்துட்டு போ.... “ என்று  கத்தினாள்.. அவனோ திரும்பி பார்த்து முறைத்து அவன்  தலையில் அடித்துகொண்டே  சென்றான்..

“பாவம் டி... அவனை ரொம்பத்தான் ஓட்டற.. “ என்றாள் அபர்ணா பாவமாக ..

“இதோ பாருடா... அவனுக்கு நீ என்ன  வக்காலத்து வாங்கற ?? .. அவன் நம்ம பொண்ணுங்களை எல்லாம் எப்படி ஓட்டிகிட்டிருக்கான் தெரியுமா?? பார்க்கத்தான் பாவமா இருக்கான்.. பக்கத்து ப்ராஜெக்ட் டீம் ல  இருக்கிற அந்த அஜய் கூட சேர்ந்துகிட்டு நம்மள கலாய்க்கறான் டீ..

அதான் இன்னைக்கு தனியா மாட்டினானா ..  பலி வாங்கியாச்சு.. இது எப்புடி ?? ... “ என்றாள் தன் இல்லாத காலரை தூக்கிவிட்டு கொண்டு....

“ஹ்ம்ம்ம் சூப்பர் டி... பின்னிட்ட.. இனிமேல் யாரை எப்படி பலி வாங்கணும்னாலும் உன்கிட்ட ஐடியா கேட்கலாம் போல... பேசாம பலி வாங்கறது எப்படீனு சொல்லி கொடுக்க, ஒரு கன்சல்டன்சி ஆரம்பிச்சிடேன்...அது லேட்டாகும் னா ஒரு வெப்சைட் ஸ்டார்ட்  பண்ணிடு... இன்னும் எங்கயோ போய்டலாம்... “ என்றாள் அன்பு நக்கலாக சிரித்தவாறு...

“ஹ்ம்ம்ம் நக்கலு... உனக்கு போய் அந்த காகா கிட்ட நான் சப்போர்ட் பண்ணினேன்  பார்... “ என்று சந்தியா  முறைக்க

“ஹீ ஹீ ஹீ.. சும்மா  fun க்காக டி.. நீ என் செல்லம் இல்ல... நான் ஏதோ உளறினதை வச்சு என்னை போட்டு தாக்கிடாத டீ.. மீ  பாவம்... “  என்று  அவள் மோவாயை பிடித்து ஆட்டி செல்லம் கொஞ்சினாள் அன்பு....

அதை கண்டு சிரித்தவள்

“பேசாம உனக்கு காகா னு பேர் வச்சிருக்கணும் டீ. நல்லா காக்கா பிடிக்கிற.. “ என்றாள் சந்தியா  அவள் முதுகை மொத்தியவாறு....

அதற்குள் தன் வாட்ச் ஐ பார்த்த அபர்ணா அலறினாள்...

“என்னடி ஆச்சு ஆப்பு?? இதுவரைக்கும் நல்லாதான சிரிச்சுகிட்டு இருந்த ?? திடீர்னு ஏன் உன் மூஞ்சி இப்படி மாறிடுச்சு?? உன் அம்மா சாப்பாட்டுல மிளகாயை கிள்ளி போடாம அப்படியே போட்டுட்டாங்களா??  “ 

“அதெல்லாம் இல்ல... மணி இரண்டாச்சு டி “ என்றாள் பதற்றமாக...

“அதுக்கு என்ன ?? “ என்றாள் சந்தியா தன் புருவத்தை சுருக்கி....  

“இரண்டு மணிக்கு மீட்டிங்  இருக்கு டி .. மறந்தே போய்ட்டேன்...” என்றாள் அபர்ணா...

“நம்ம மீட்டிங் தான...  அது எங்க போய்ட போகுது ?? மெதுவா போய்க்கலாம் டி. அதுக்கு ஏன் இப்படி அலறர ?? “  என்று  முறைத்தாள் சந்தியா..

“ஹ்ம்ம்ம் உனக்கு தெரியாது டி.. இந்த  புதுசா வந்திருக்கிற ஆள் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்  ஆபிசர் மாதிரி டி ...

காலையில் நடந்த மீட்டிங்  ல இரண்டு நிமிசம் லேட் ஆ போனதுக்கே பயங்கர டோஸ்  விட்டார்... நான் போறேன்... "  என்றவள் ஏதோ நினைவு வர

"ஹே.. ஐ திங் டெஸ்ட்டிங்  டீம் முக்கும் கூட அந்த மீட்டிங்  இருக்கும் னு நினைக்கிறேன் டி.. எதுக்கும் உன் காலண்டரை செக் பண்ணு.. “ என்றாள்..

அதற்குள் கலவரமான  அன்பு அவசரமாக அவள் அலைபேசியில் இருந்த outlook  காலண்டரை பார்க்க,

"ஐயயோ..!! ஆமாம் டி...நாங்களும் இருக்கோம் அந்த மீட்டிங் ல...  இரு நாங்களும்   வர்ரோம்.. ஹே வாடி சந்தியா..” என்று சாப்பாட்டில் பாதியில் எழுந்தாள் அன்பு...  

"நீங்க போங்கடி.. நான் இன்னும் சாப்பிட்டே முடிக்கலை... சொந்த காசு கொடுத்து வாங்கின பிரியாணி.. இதை பாதியில் விட்டுட்டு வர முடியாது...

மீட்டிங் தான...  நான் வந்து அப்புறம் கலந்துக்கறேன்.. நீங்க போய் அட்டென்டன்ஸ் ஐ  போடுங்க.. “ என்றவள் அந்த சிக்கன் காலை ருசித்து சாப்பிட ஆரம்பித்தாள்...

"என்னமோ பண்ணு.. " என்றவாறு மற்ற இரண்டு பெண்களும் வேகமாக அந்த மீட்டிங் ஹாலை நோக்கி ஓடினர்....

மெதுவாக அந்த பிரியாணியை ரசித்து  ருசித்து சாப்பிட்டு முடித்தவள் திரும்பி பார்க்க அந்த கேப்டீரியாவே காலியாக இருந்தது.. எல்லாரும் கிளம்பி சென்றிருந்தனர்...

அங்கு யாரும் இல்லாததை கண்டு

"ஓ... எல்லாரும் ஓடிட்டாங்களா?? நாம கொஞ்சம் ஓவராதான் போறமோ?? " என்றவள் தன் கை கடிகாரத்தில் நேரத்தை பார்க்க,  இன்னும் கொஞ்சம் லேட் ஆகியிருக்க இப்பொழுது அவசரமாக அந்த டேபிலில் இருந்து எழுந்தாள்...

தன் தட்டை அதற்கான இடத்தில் வைத்து விட்டு கையை கழுவி கொண்டு வேகமாக நடந்தாள் அந்த ஹால் ஐ நோக்கி .......

லிப்ட் க்கு நின்று கொண்டிருந்தவள் அது வருவதாக தெரியாததால் அருகில் இருந்த Fire Exit என்று போட்டிருந்த கதவை திறந்து கொண்டு படி வழியாக தடதடவென்று மாடியில் ஏற ஆரம்பித்தாள்...

அவளுடைய தளம் கேப்டீரியாவில் இருந்த மேல இரண்டாவது தளம்...

இரண்டு மாடி மூச்சிரைக்க வேகமாக ஏறியவள், அந்த கடைசி படியும் முடிய வேகமாக உள்ளே செல்ல முயன்றாள்... 

அதே நேரம் உள்ளே இருந்து ஒரு கையில் அலைபேசியை காதில் வைத்து யார் உடனோ பேசி கொண்டே கீழ் தளத்திற்கு படிகள் வழியாக செல்ல வேகமாக வெளிவந்த ஒரு நெடியவன் மீது மோதி கொண்டாள்...

அவள் மோதிய வேகத்தில் அவன் கையிலிருந்த அலைபேசி எகிறி கீழ விழுந்து அதன் பாகங்கள் சிதறியது...

அவளோ மாடிப் படியில் இருந்து கீழ நழுவ ஆரம்பிக்க, நொடியில் தாமதிக்காமல் அந்த  நெடியவன் தன் வலிய கரங்களால்  எட்டி அவள் இடையோடு சேர்த்து பிடித்து முன்னே இழுத்து  நிறுத்தினான்....

அவன் முன்னே இழுத்த வேகத்தில் இன்னும் தடுமாறியவள் அவன் மார்பின் மீது விழுந்திருந்தாள்..... 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!