அழகான ராட்சசியே!!!-4

 


அத்தியாயம்-4

வேகமாக மாடி ஏறி வந்தவள் யார் மீதோ இடித்து கொண்டு கீழ விழப் போவதை உணர்ந்து கண்ணை  இறுக்கி மூடி கொண்டு இருக்க, அவள் கீழ விழாமல் அப்படியே இருப்பதை உணர்ந்து, சில நொடிகளில்  மெல்ல கண்ணை திறந்தாள் சந்தியா....

எதிரில் வெகு அருகில் நின்றிருந்தவனை கண்டதும் அதோடு அவள் அவன் மார்பின் மீது சாய்ந்திருப்பதும் அவன் தன் இடையை  இறுக்கி பிடித்திருப்பதை உணர்ந்ததும் திடுக்கிட்டவள் உடனே அவன் கையில் இருந்து துள்ளி குதித்தாள்....

அதற்குள் சுதாரித்து கொண்டவனும் தீ சுட்டதை போல அவளை விலக்கியவன் ஒரு அடி பின்னால் நகர்ந்து நின்று கொண்டான்....

பின் குனிந்து சிதறியிருந்த தன்  அலைபேசியின் பாகங்களை பொறுக்கி கொண்டு நிமிர்ந்தவன் கண்களில் கோபம் மின்ன அவளை பார்த்து

“இடியட்... கண்ணை பின்னாடி வச்சுகிட்டா வந்த? இல்லை இடிக்கிறதுக்குனே வந்தியா? “ என்றவாறு  ஏளனமாக தன் உதட்டை சுளித்து அவளை பார்த்து முறைத்து விட்டு தன் அலைபேசியை  பொருத்தி கொண்டே படி வழியாக கீழிறங்கி நடந்தான்....

ஒரு நொடி அப்படியே திகைத்து நின்றாள் சந்தியா... பின் சுதாரித்தவள் அவன் தன்னை திட்டியதை அப்பொழுதுதான் உணர்ந்தவள் உடனே கை நீட்டி சொடக்கு போட்டு

“ஹே .. மிஸ்டர்.. ஒரு நிமிசம்... “ என்றாள் அதிகாரமாக...

அதற்குள் கீழ் தளத்திற்கு சென்றிருந்தவன் அங்கிருந்த கதவை திறந்து உள்ளே செல்ல முயன்ற அந்த நெடியவனும்  நின்று திரும்பி தன் புருவத்தை உயர்த்தி என்ன என்று கேள்வியாக பார்த்தான்..

அதற்குள் அவளும் கடகடவென்று படிகளில் தாவி இறங்கி வந்தவள் அவன் முன்னால் வந்து நின்று நேராக அவன் முகத்தை நன்றாக உற்று பார்த்து

“ஆமா... உன் மூஞ்சியை முன்ன பின்ன கண்ணாடியில் பார்த்திருக்கியா?

ஓ.. கண்ணாடி னா என்னானு தெரியாதா? ஒன்னு செய்.. நேரா சரவணா ஸ்டோர்ஸ் போ.. அங்கதான் வீட்டு பொருட்கள் எல்லாம் சீப் ஆ இருக்குமாம்.. ஒரு பெரிய கண்ணாடிய வாங்கி அதுல நல்லா உன் மூஞ்சிய மேலிருந்து கீழாக  இன்ச் பை இன்ச் ஆ உற்றுப் பார்...

அப்ப தெரியும்.. இந்த மூஞ்சி இடிக்கிறதுக்கு லாயக்கான மூஞ்சியா இல்லையானு...

அப்படியே அந்த மங்கி மாதிரி மூஞ்சிய வச்சுகிட்டு நான்  இவனை தேடி வந்து இடிக்கிறனான்.. க்ரேட் ஜோக்...

ஒரு வேளை  நீதான் இடிக்க திட்டம் போட்டு வந்திட்டு, நான் பார்த்திட்டதும் ப்ளேட் ஐ மாத்திட்டியோ?? இப்பல்லாம் இதான் ட்ரென்ட் ஆம்.. ஆம்பளைங்க இடிச்சிட்டு உடனே பொம்பளைங்க இடிச்ச  மாதிரி சீன்  கிரியேட் பண்ணிடறாங்கலாம்... அவனா நீ??

ஆளும் மூஞ்சியும்.... இன்னொரு தரம் உன்ன வந்து இடிச்சேனு சும்மா கதை விட்ட தொலைச்சிடுவேன்.. ஜாக்கிரதை..“ என்று  விரல் நீட்டி மிரட்டி விட்டு தன் தலையை சிலுப்பி கொண்டு மீண்டும் கடகடவென்று மாடி ஏறி மேல் தளத்திற்கு சென்றாள்....

அந்த நெடியவனோ  பேயறைந்த மாதிரி திகைத்து நின்றான்...

சில விநாடி ஆனது அவனுக்கு நடந்ததை கிரகித்து கொள்ள.. இடி இடித்து மழை பெய்தது போல இருந்தது அவனுக்கு...

“ஸ்ஸப்பா.. என்ன பேச்சு பேசறா. நான் ஒரு சென்டென்ஸ் சொன்னதுக்கு ஒரு பக்கம் டயலாக் சொல்லிட்டு போறா..சரியான லம்பாடி, இல்ல பஜாரியா இருப்பா போல இருக்கு... கோயம்பேடுல இருக்கிறதெல்லாம் IT க்கு வந்திடுச்சுங்க....

நல்ல வேளை..  இந்த ராட்சசி என் டீம் ல இல்லை... “ என்றவாறு தன் அலைபேசியில் வந்திருந்த அழைப்பு பாதியில் கட் ஆகி இருந்ததால் மீண்டும் அந்த  எண்ணிற்கு அழைத்தவாறு அந்த தளத்திற்கு உள்ளே சென்றான்...   

தன்னை ஒருத்தன் அவன் மேல் வந்து இடிச்சா  என்று சொன்னதும் பொங்கி எழுந்த  சந்தியா அவனுக்கு நன்றாக டோஸ் விட்ட திருப்தியில் இன்னும் கூட அவள் கோபம் அடங்காமல் உள்ளே கொதித்து கொண்டிருக்க, அவனை திட்டி கொண்டே அந்த  மீட்டிங்  நடக்கும் இடத்திற்கு சென்றாள்...

ஒரு வேளை தவறு அவள் மீது தானோ? அவள்தான் கீழ பார்த்து கொண்டே வேகமாக வந்து  அவன் மீது இடித்து கொண்டாளோ?  அவன் அவளை பிடிக்காமல் இருந்திருந்தால் படியில் உருண்டிருக்க வேண்டியது தான் என்று அவள் அறிவு எடுத்து சொன்னாலும் அவள் ஈகோ அதை ஒத்துக் கொள்ளவில்லை...

மீண்டும் அவனை திட்டி கொண்டே அந்த கான்ப்ரன்ஸ் ஹாலுக்குள் நுழைந்தாள்...

“ஐயோ.. இந்த ஆள் வேற என்ன  கடிக்க போறானோ? ஆல் இஸ் வெல் சந்தியா.. பி கூல்..” என்று தன்னைத்தானே சமாதானபடுத்தி கொண்டு உள்ளே சென்றவள் கண்ணை சுழல விட, எல்லாம் தெரிந்த முகமாகத்தான் இருந்தனர்..

புதிதாக யாரும் இல்லை அந்த அறையில்.. அந்த ஹாலும் அமைதியாக இருந்தது..

பெரிய ஹால் என்பதால் அனைவரும் தாமதமாக வந்த இவளையே பார்க்க, அவளோ அலட்டிக் கொள்ளாமல் உள்ளே சென்று தன் தோழிகள் இருந்த இடத்தில் காலியாக இருந்த இருக்கையில் சென்று  அமர்ந்து கொண்டாள்..

மீண்டும் ஒருமுறை சுற்றி பார்க்க, அங்கு மீட்டிங் நடப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் போக, கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.. எப்படியோ சரியான நேரத்துக்கு வந்திட்டேன் என்று சமாதானம் செய்து கொண்டாள்..

பின் அருகில் இருந்த அபர்ணாவிடம்

“என்னடி ஆப்பு.. என்னவோ இவன் பெரிய பஞ்சுவாலிட்டி மெயின்டெய்ன் பண்றவன் நேரத்துக்கு போயாகணும் னு  சாப்பாட்டை கூட பாதியில விட்டுட்டு ஓடி வந்த.. இதுதான் பஞ்சுவாலிட்டி மெய்ன்டெய்ன் பண்ற  லட்சணமா?? எங்க உங்க ஆர்கிடெக்ட் ?? “ என்று காதை கடித்தாள் உதட்டை ஏளனமாக வளைத்து...

“ஹே அடங்கு டீ.. அவர் எப்பவோ வந்திட்டார்...மீட்டிங் ம் ஸ்டார்ட் ஆய்டுச்சு.. இன்ட்ரோ கொடுத்து பேசிகிட்டுருந்தப்போ ஏதோ இம்பார்ட்டன்ட் கால் வந்ததுனு இப்பதான் execuse கேட்டுட்டு வெளில போனார்..உன் நல்ல நேறம் அவர் வெளில போனப்ப கரெக்ட் ஆ நீ உள்ள வந்திட்ட..  எப்படியோ நீ தப்பிச்சுகிட்ட “ என்றாள் அபர்ணா...

“ஓ...  இம்பார்ட்டன்ட் கால் ஆ... அப்ப கண்டிப்பா அது அவனோட பொண்டாட்டியோ இல்ல கேர்ள் பிரண்ட் ஓட கால் ஆ தான் இருக்கும்... இந்த நேரத்துல கால் வருதுனா அதுவாதான் இருக்கும்... இவன்  கொஞ்சறதுக்கு நாம இங்க காத்திருக்கணுமா?? “ என்றாள் அதே ஏளன சிரிப்புடன்..

அவர்கள் பேசுவதை  ரகசியமாக ஒட்டு  கேட்ட அன்பு

“டீ சந்தியா.. ஆள் பயங்கர ஸ்மார்ட் ஆ இருக்கார் டீ.. அப்படியே நம்ம அரவிந்த் சாமி, மாதவன்  மாதிரி... சப்பி சிக்ஸ், சிரிக்கிற கண்... மயக்கற சிரிப்பு டி..மொத்தத்துல சாக்லெட் பாய் மாதிரி இருக்கார் டீ..

பாதி பொண்ணுங்க ஏற்கனவே கவுந்திட்டாங்க... நீயும் பார்த்து டி ஜாக்கிரதையா இருந்துக்கோ.. பார்த்த உடனே மயங்கிடாத..” என்று நமட்டு சிரிப்பை சிரித்தாள்....

“நீ கொஞ்சம் அடங்குறியா.. அவன் எவ்வளவு  பெரிய மன்மதனா   இருந்தாலும் என்கிட்ட பப்பு வேகாது... இந்த  சந்தியா யாரையும் பார்த்து மயங்கறவ இல்லை..“ என்று  முறைத்தாள்..

அவர்கள் பேசி கொண்டிருக்கும் பொழுதே அந்த ப்ராஜெக்ட் ன் டெலிவரி மேனேஜர் மனோகர் உள்ளே வந்தான்...அவனை தொடர்ந்து சந்தியா இடிச்ச அந்த நெடியவனும் உள்ளே வந்தான்...

அவனை கண்டதும்  திடுக்கிட்டாள் சந்தியா..

“இந்த மங்கி எதுக்கு இங்க வர்ரான்?.. ஒரு வேளை போன மீட்டிங் ல எதையாவது விட்டுடுட்டு போய்ட்டு  இப்ப எடுக்க வந்திருக்கானா?” என்று  அவசரமாக யோசித்தவள் லேசாக தலையை குனிந்து கொண்டாள்...

அதற்குள் மனோகர் அந்த ஹாலின் ஸ்டேஜில் வந்து நின்று கொண்டு தன் சத்தமான குரலால்

“சாரி கைஸ்.. ஒரு எமர்ஜென்ஸி எஸ்கலேசன்.. அதான் நாங்க அட்டென்ட் பண்ண வேண்டியதா போய்டுச்சு. சாரி பார் தி டிலே..

சரி... உங்களுக்கு புதுசா ஒருத்தரை  அறிமுகபடுத்த போகிறேன்.. நிறைய பேருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்... தெரியாதவங்களுக்கு ஒரு சின்ன அறிமுகம்.. “ என்று சிரித்தவன் அருகில் நின்றிருந்த நெடியவனை சுட்டி காட்டி    

“மீட் மிஸ்டர் மகிழன்.. நம்ம ப்ராஜெக்ட் க்கு புதுசா சேர்ந்திருக்கிற ஆர்கிடெக்ட்.. இவ்வளவு நாளா ஆர்கிடெக்ட் இல்லாம நீங்களே ஓரளவுக்கு சமாளிச்சுட்டீங்க... அதான் இப்ப மகிழன் ஐ  கொண்டு வந்திருக்கோம்...

இந்த ப்ராஜெக்ட் ஓட புல் ரெஸ்பான்சிபிலிட்டியும் அவர் எடுத்துக்க போகிறார்.. அவர் என்ன சேஞ்சஸ்  சொன்னாலும் அதுக்கு நீங்க கோ ஆப்ரேட் பண்ணுங்க... He is very smart and brilliant guy..” என்று புகழ, அந்த நெடியவனோ லேசாக வெட்க பட்டு சிரித்தான்..

அதை கண்டவளுக்கு தலை சுற்றியது..

“இவன்தான் அந்த மங்கி மகி யா? நான் பார்த்த இல்லை இடித்த அவனா  இவன் ?.. அப்ப அப்படி முறைச்சான்..  என்ன ஒரு ஏளன பார்வை... இப்ப அப்படியே மூஞ்சை மாத்திட்டானே..என்னவோ ரொம்ப நல்லவன்,  கோபமே வராத மாதிரி சீன் போடறானே..  நல்ல நடிகன் டா நீ.. “ என்று  மனதுக்குள் மெச்சி கொண்டாள்..

பின் ஈமெயிலில் மகிழன் முன்பே அனுப்பி இருந்த சில சேஞ்சஸ்  பற்றி விளக்கினான் மனோகர். பின்

“எனி  கொஸ்டின்ஸ் எபவ்ட் திஸ் சேஞ்சஸ்   ?” என்றான் அங்கிருந்தவர்களை பார்த்து...

அனைவரும் அமைதியாக இருக்க, சில விநாடிகள் அந்த அறை முழுவதும் பார்வை இட்ட மனோகர்  

“இத்தனை பேர் இருக்கீங்க.. ஒருத்தர்க்கு கூட ஒரு கேள்வியும் இல்லையா?” என்றான் ஆச்சர்யமாக...

எக்ஸ்க்யூஸ் மீ மனோ.. ஐ ஹேவ் அ  கொஸ்டின்  என்று கையை உயர்த்தி  எழுந்து நின்றாள் சந்தியா...

அவள் முன்பு இருந்தே கேள்வி கேட்க துடிக்க, அவளின் இருபக்கமும் அமர்ந்து இருந்த  அவள் தோழிகள் இருவரும் அவளை பிடித்து இழுத்து அமர  வைத்து அழுத்தி கொண்டிருந்தனர்...

சிறிது நேரம் பொறுத்தவள் அவர்கள் பிடியிலிருந்து திமிறி இப்பொழுது எழுந்து நின்றிருந்தாள்.

கை உயர்த்தி எழுந்து  நின்றவளை கண்டதும் “ஐயோ இவளா ?? “ என மகிழன் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்... அவன் நரம்புகள் புடைத்தன.. அவள் பேசிய பேச்சுக்கள் கண் முன்னே வந்து அவனை பார்த்து எள்ளி நகையாடின...

அவளை கண்டதும் கை முஷ்டி இருக உள்ளுக்குள் பல்லை  கடித்தான்..ஆனாலும் அதை வெளி காட்டி கொள்ளாமல் அவள் பார்க்கும் பொழுது மட்டும் எரித்து விடும் பார்வை பார்த்தான்.

சந்தியாவோ அவனை பார்த்து ஒரு அலட்சிய பார்வையை செலுத்தி விட்டு தன் தலையை சிலுப்பியவாறு  மனோகர் ஐ பார்த்து நின்றாள்...

“யெஸ் சந்தியா... கோ அஹெட்... “ என்றான் மனோ...

“நம்ம ப்ராஜெக்ட் அல்ரெடி ஸ்டப்லைஸ்(  stabilize)  ஆன ப்ராஜெக்ட்.. இதுல எதுக்கு ஆர்கிடெக்ட் கொண்டு வரணும் மனோ? “ என்றாள்

ஏனோ  அவன் வருவது அவளுக்கு பிடிக்கவில்லை..அதை விட எல்லாரும் அவனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதும் அவனும் வந்த உடனே அந்த சேஞ்சஸ், இந்த சேஞ்சஸ் னு ஸோ காமிக்கறதும் அவளுக்கு எரிச்சலாக இருந்தது...

அவனை மட்டம் தட்டவும் அதோடு அவள் இடித்ததாக சொல்லி அவன் தன்னை ஏளனமாக பார்த்ததற்கு பழி வாங்க வேண்டி அந்த கேள்வியை கேட்டாள்..

“குட் கொஸ்டின்  சந்தியா.. I appreciate your boldness…” என்று பாராட்டியவன்

“நம்ம ப்ராஜெக்ட்    லேட்டஸ்ட் டெக்னாலஜி யூஸ் பண்ணி ரீரைட் பண்ணப் போறோம்.. அதுக்குத் தான் மகிழன் மாதிரி  ஒரு சிறந்த ஆர்கிடெக்ட் தேவையா இருந்தது...

அந்த ரீரைட் பற்றி  மகிழன் வரப்போகும் மீட்டிங் ல் விளக்க போகிறார்.. ஹோப் ஐ ஆன்சர்ட் யுவர்  கொஸ்டின்..”..

“யெஸ் மனோ.. ஒன் மோர் கொஸ்டின்ஒரு ப்ராஜெக்ட்  ரீரைட் பண்ணனும் னா நிறைய செலவாகுமே . கௌ ஆர் வி கோயிங் டு மேனேஜ்? 

அதை கேட்டு மகிழ்ந்த மனோ  அடுத்து வரும் ஆப்பை அறியாமல்

“வெரி குட் கொஸ்டின்..இந்த மாதிரி நிறைய கொஸ்டின்ஸ் எல்லாரும் கேட்கணும்.. “ என்றவன் அந்த  ப்ராஜெக்ட்  ரீரைட் பற்றி விளக்கோ விளக்கென்று விளக்கினான்.. சந்தியாவுக்கு தூக்கம் வந்தது... ஒரு வழியாக விளக்கி முடித்ததும்

“இந்த ஆபிஸ் மேல் உனக்கு இருக்கிற அக்கறையை  நினைச்சு பெருமையா இருக்கு சந்தியா.. உன்னை மாதிரி  எல்லாரும் இருந்தால் சீக்கிரம் முன்னுக்கு வந்திடலாம்.. “ என்று புகழ்ந்து  பாராட்டினான்...

“ஹீ ஹீ ஹீ ... நான் எதுக்கு இதை  கேட்டேன் னா.. லாஸ்ட் குவார்ட்டர் டீம் அவுட்டிங் போறதுக்கு பன்ட் இல்லைனு கேன்சல் பண்ணிட்டீங்களே.. இப்ப இவ்ளோ மில்லியன் டாலர் செலவு பண்ணி நல்லா ஓடிகிட்டிருக்கிற ப்ராஜெக்ட் ஐ திரும்ப  ரீரைட் பண்ண எங்கிருந்து பன்ட் வந்தது மனோ ?? “ என்றாள் சீரியசாக...

அதை கேட்டு அனைவரும் சிரிக்க, அந்த  மனோ  முகத்தில் ஈயாடவில்லை...  அவளை பார்த்து முறைக்க, அதை கண்டு கொள்ளாமல் சிரித்தவாறு அமர்ந்து கொண்டாள்..

ஓரப்பார்வையில் அந்த நெட்டையை பார்க்க அவளோ இவள் மேல்  இன்னும் கடுப்பில் இருந்தான். விட்டால் பார்வையாலயே எரித்து விடுவான் போல இவளை பார்த்து முறைத்து கொண்டிருந்தான்.

ஒரு வழியாக அந்த கான்ப்ரன்ஸ் முடிய மனோகரும் மகிழனும் வெளியேறி சென்றிருக்க,  எல்லாரும் சந்தியாவை பிடித்து கொண்டனர்..

“நீ கரெக்டா கேட்ட சந்தியா... உனக்கு ரொம்பதான் துணிச்சல் டீ. டி.எம் கிட்டயே இப்படி பேசற.. போச்சு. உன் அப்ரைசல் ல கை வைக்க போறார்... உனக்கு நோ ஹைக்.. உன் வேலைக்கு ஆப்பு வைக்க போகிறார்... “ என்று ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்றை சொல்லினர்...

“அட போங்கடி... இந்த வேலைய நம்பி ஒன்னும் நான் இல்லை.. ஜஸ்ட் டைம் பாஸ்க்கு த்தான் வந்துகிட்டிருக்கேன்...அப்படியே தூக்கினாலும் யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்கனு போய்கிட்டே  இருப்பேன்..” என்று சிரித்தாள்..

“நீங்களே சொல்லுங்க... நல்லா  இருக்கிற ப்ராஜெக்ட் ஏன் ரீரைட் பண்ணனும்.. இல்லையா அதுக்கான காரணத்தை  விளக்கி அதுக்கு பிறகு சொல்லி இருக்கலாம்..

சும்மா மொட்டையா ரீரைட் னு சொல்லிட்டா அதுக்கு பின்னாடி இருக்கிற ப்ளஸ்  அன்ட் மைனஸ்  எப்படி நமக்கு தெரியுமாம்... அதான் என் மனசுல பட்டதை கேட்டேன்.. இதுல எனக்கு எதுக்கு பயம் ? “ என்றவாறு தோளை குலுக்கிவிட்டு வெளியில் நடந்தாள்...

எதையோ எடுக்க அந்த அறைக்கு திரும்பி  வந்த மகிழன் காதில் அவள் பேசிய பேச்சுக்கள் விழுந்தன

“சரியான திமிர் பிடிச்சவ போல..இந்த ராட்சசி வந்து என் ப்ராஜெக்ட் ல இருக்காளே.. இவளை எப்படி கேன்டில் பண்ணுவது?”  என்று  யோசிக்க ஆரம்பித்தான்...

ன்று  மாலை 4 மணி அளவில் தன் டெவலப்மென்ட் லீட்ஸ்  உடன் சீரியசாக டிஸ்கஸ்  பண்ணி கொண்டிருந்தான் மகிழன்...

ஹா ஹா ஹா... என்ற சிரிப்பொலி அவன் காதை அடைத்தது.... இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணி கொண்டு மீண்டும் தன் டிஸ்கஷனை ஆரம்பிக்க, மீண்டும் அதே சிரிப்பொலி முன்பை விட இன்னும் காதை  கிழித்தது.....

சே... என்று  பல்லை கடித்தவன் அந்த டிஸ்கஷன்  அறையில் இருந்து   திரும்பி பார்க்க,

“ஹா ஹா ஹா செம காமெடி டீ... அப்புறம் என்னாச்சு??  “ என்று மீண்டும் வேகமாக சிரித்தாள் சந்தியா....

அந்த  cafeteria ல் இருந்த டேபிலில் சந்தியா, அன்பழகி, அபர்ணா மூவரும் அமர்ந்து எதையோ பேசி சிரித்து கொண்டிருந்தனர்....

மற்ற இரு பெண்களும் அமைதியாக சிரித்து கொண்டிருக்க சந்தியா மட்டும் அந்த தளமே அலறும் அளவுக்கு வாய் விட்டு சிரித்தாள்..

அந்த கேப்டீரியாவின் ஓரத்தில் சில டிஸ்கஷன் அறைகள் இருந்தன..ஒவ்வொரு தளத்திலும் சில அறைகள் இருக்க அது பிரியாக இல்லாத நேரங்களில் இங்கு இருக்கும் இந்த டிஸ்கஷன் அறைகளை பயன்படுத்துவர்.

அதோடு டீ டைம் டிஸ்கஷன் என்று பிரேக் டைம் ல் காபி அல்லது டீ குடித்தவாறே ஏதாவது விவாதிக்கவும் இந்த அறைகளை பயன்படுத்தி கொள்வர்..

மற்ற தளங்களில் அறைகள் காலியாக இல்லாததால் தன் மீட்டிங் ஐ இங்கு வைத்திருந்தான் மகிழன்... அவன் விளக்கி கொண்டிருக்கும் பொழுது தான் சந்தியாவின் சிரிப்பொலி அவன் காதை அடைத்தது..

யாரென்று திரும்பி பார்த்தவன் அங்கு சந்தியாவை கண்டதும் உள்ளுக்குள் அலறியவன்

ஐயோ..இந்த சண்டக்காரியா?” என்று உள்ளுக்குள் முறைத்தவாறே மீண்டும் தன் விளக்கத்தை தொடர, மீண்டும் அதே சிரிப்பொலி...

சிறிது நேரம் கன்ட்ரோல் பண்ணியவன் அதற்கு மேல் பொறுக்க  முடியாமல் நேராக அவர்கள் அமர்ந்திருக்கும் அந்த டேபிலுக்கு சென்றான்....

அருகில் சென்றதும்

Will you please keep quite?? “ என்று கர்ஜித்தான் எரிச்சலுடன் ச்நதியாவை பார்த்து....

திடீரென்று கேட்ட கர்ஜனை குரலில் மற்ற இரு பெண்களும் வேகமாக எழுந்து அட்டென்சன் பொசிசனில் நிற்க, அவனுக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்த சந்தியா மட்டும்

“ எவன் அவன்?? “ என்று திரும்பி பார்த்தாள் இருக்கையில் அமர்ந்தவாறே....

அங்கு அந்த நெட்டை கண்ணில் கோபத்துடன் இவளை பார்த்து முறைத்து கொண்டு நின்றான்.. அவனை கண்டவள்

“ஓ... இந்த மங்கியா? “ என்று மனதுக்குள் சிரித்து கொண்டவள் அவனை  திமிராக பார்த்து

“ஹ்ம்ம்ம் சொல்லுங்க மிஸ்டர் மங்கி.... இப்ப என்ன பிரச்சனை உங்களுக்கு?? “ என்றாள் மிடுக்காக

“ஏய்... ஒரு பொம்பளை புள்ளை இப்படிதான் சிரிப்பியா?? அடக்க ஒடுக்கமா சிரிக்க மாட்ட?? அங்க இருகிற எங்களுக்கு டிஸ்டர்ப் ஆ இருக்கு...”  என்றான் முறைத்தவாறு....

“இதோட... அது என்ன மங்கி சார்... பொண்ணுங்கனா அடக்கமா சிரிக்கணும் னு ரூல்ஸ் இருக்கா என்ன?? வாய் விட்டு சிரிச்சா நோய்  விட்டு போகும் னு.... “என்று இழுத்தவள் அருகில் இருந்த அபர்ணா விடம்

“யார் டி சொன்னா?? “ என்றாள் ரகசியமாக...

அபர்ணா அவளை  பார்த்து முறைக்க,

“ஹ்ம்ம் யார் சொன்னா என்ன??  வாய் விட்டு சிரிக்கிறது ரொம்ப நல்லது சார். அதனாலதான் சிரிப்பாசனம் னு  ஒன்னு கொண்டு வந்திருக்காங்க. நீங்க அதை ட்ரை பண்ணினதில்லை... “ என்றாள் சீரியசாக.....

“ஹலோ... நீ அந்த சிரிப்பாசனம் பயிற்சியெல்லாம் உன் வீட்ல வச்சுக்க.. .இது ஆபிஸ்... இங்க நீ இப்படி பேய் மாதிரி சிரிச்சா மத்தவங்களுக்கு டிஸ்டர்ப் ஆகுது இல்ல?? “ என்றான் அதே எரித்து விடும் பார்வையில்...

உடனே அவள் சுற்றிலும் கண்களை உருட்டி பார்த்தவள்

“நல்ல வேளை ... இது IT ஆபிஸ் தான் ..நான் கூட ஹாஸ்பிட்டல் ல தான் சத்தமா சிரிச்சுட்டேன் .. அதுக்குத்தான் நீங்க குதிக்கறீங்களோ னு நினைச்சுட்டேன்....

ஏன் மங்கி சார்... ஆபிஸ் ல அதுவும் கேப்டீரியா ல சிரிக்க கூடாதுனு எதுவும் ரூல்ஸ்  கொண்டு வந்திருக்கீங்களா?? இந்த ரூல்ஸ் நீங்க அனுப்பின மெயில் ல இல்லையே.. Silence Please… அப்படீனு எங்கயும் போர்டையும் காணோமே??  என்றாள் குறும்பாக சிரித்தவாறு தன் புருவங்களை உயர்த்தி.....

அதை கேட்டதும் இன்னும் உள்ளுக்குள் கொதித்தான் மகிழன்...

“எவ்வளவு திமிரா பேசறா பார்.... அடங்கா பிடாரி..இவளை எல்லாம் எப்படி வீட்ல வச்சு சமாளிக்கறாங்களோ..அதான் இங்க துரத்தி விட்டுடறாங்க போல.. அதான் சொன்னாளே சும்மா  டைம் பாஸ்க்கு ஆபீஸ் வருவதாக. என்று மனதுக்குள் திட்டியவன்

“ஏய்... நீ என்னவோ பண்ணி தொலை.. ஆனா அது எங்களுக்கு டிஸ்டர்ப் ஆ இருக்கு இல்ல..”  என்றான் கொஞ்சம் இறங்கிய குரலில் அவளுடன் மல்லு கட்ட முடியாமல் ...

“பாஸ்.. இது கேப்டீரியா.. நாங்க ரிலாக்ஸ் ஆ  இருக்கத்தான் இங்க வந்திருக்கோம்.. உங்களை யார் இங்க வந்து டிஸ்கஸ் பண்ண சொன்னா? வேணும்னா டிஸ்டர்ப் இல்லாத இடமா போய் உங்க டிஸ்கஷனை வச்சுக்கங்க... எங்களை டிஸ்டர்ப் பண்ணாதிங்க... “ என்றாள் மிடுக்குடன்..

அதை கேட்டவன் இன்னும் கடுப்பாகி,

“ஆமா... உங்களுக்கெல்லாம் வேலை இல்லையா?? இங்க உட்கார்ந்து என்ன அரட்டை அடிச்சுகிட்டிருக்கீங்க?? “ என்றான் மற்ற பெண்களை  பார்த்து முறைத்தவாறு...

அன்பு பயந்து போய்

“இப்ப டீ பிரேக் சார்..அதான் டீ குடிக்க வந்தோம்.. “ என்றாள் அன்பு பயந்தவாறு...

அதற்குள் சந்தியா முந்திகொண்டு

“பாஸ்.. அதை எல்லாம் நீங்க கேட்க தேவையில்லை.. நீங்க ஒன்னும் எங்க மேனேஜர் கிடையாது.. எங்க மேனேஜர் கேட்டா நாங்க சொல்லிக்கிறோம்... நீங்க உங்க வேலையை பாருங்க...” என்றாள் தலையை சிலுப்பியவாறு..

அவனுக்கு வந்த ஆத்திரத்திற்கு அவளை நாலு அறை அறைய வேண்டும் போல இருந்தது... ஆனாலும் ஆபிஸ் எதிக்ஸ் நினைவு வந்தது.

IT அலுவலகங்களில் வேலை செய்யும்பொழுது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று  சில விதிமுறைகள் இருக்கும்..

பொதுவாக IT அலுவலகங்களில் பலதரப்பட்ட எம்ப்ளாய்ஸ் இருப்பார்கள்.. வெவ்வேறு மாநிலம், மொழி, இனம் என கலந்து ஒரு ப்ராஜெக்ட் ல் பணிபுரிவார்கள்...

அப்படி இருக்கும் அந்த டீம் ல்  ஒவ்வொரு எம்ப்ளாய் ம் மற்றவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கான விதிமுறைகள் விதிக்கபட்டு அதை அனைவரும் பின்பற்ற வேண்டும்..

ஒருவருக்குடன் சண்டை போடக் கூடாது, இனம், மொழி, நிறம் பற்றி பேசி கேலி செய்யக்கூடாது. பேசும் பொழுதோ , ஈமெயிலிலும்  கூட ஹார்ஸ் ஆன  வார்த்தைகளை உபயோகிக்க கூடாது.. அதே போல பெண்களுக்கு  Sexual Harassment என்ற எந்த தொல்லையும் தரக் கூடாது. என்று பல விதிகள் இருக்கும்..

அதை மீறினால் Workplace Harassment என்று அழைத்து தகுந்த நடவடிக்கை எடுக்கபடும்.

அந்த விதிகளை மீறுவோர் மீது நேரடியாக HR இடம்  புகார் செய்யலாம்.. உடனே விசாரணை கமிசன் வச்சு விளாசிவிடுவர்.. அதுவுமில்லாமல் சில நேரம் மோசமான பாதிப்பு என்றால் பேட் ரிமார்க்ஸ் உடன்  சீட்டை கிழித்து கொடுத்து விடுவர்... ஒவ்வொருவரும் இந்த விதிமுறைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும்...

மகிழனுக்கு அதெல்லாம் நினைவு வர, அவன் இவளை கை நீட்டினால் அடுத்த நொடி அவன் HR முன்னாடி நிற்க வேண்டி இருக்கும்..

இவள் திமிருக்கு கன்டிப்பா அதோடு விட மாட்டாள்.. மனித உரிமை ஆணையம், பெண்கள் அமைப்பு எல்லாவற்றிலும் அவனை இழுத்து விட்டு நார அடித்து விடுவாள்... என்று  அவசரமாக பின் விளைவுகளை பட்டியலிட்டவன் அந்த பின் விளைவுகள் எல்லாம் அவனை  பார்த்து கேலி சிரிப்பு சிரிப்பதை போல இருக்க,  உடனே தன் பல்லை கடித்து பொறுத்து கொண்டவன்

“சே.. உன் மேனேஜர் கிட்டயே பேசிக்கிறேன்... டாமிட்.. “ என்றவாறு காலை தரையில்  வேகமாக உதைத்து மீண்டும் ஒரு எரித்து விடும் பார்வை பார்த்து விட்டு  நகர்ந்து சென்றான்....

அவன் சென்றதும் மற்ற இரு பெண்களும் பயந்து நடுங்க ஆரம்பித்தனர்..

“ஏய் சந்தியா... உனக்கு எதுக்குடி இவ்வளவு வாய்..நீ இன்னைக்கு கொஞ்சம் ஓவராதான் போற.. எதுக்குடி இப்படி வீண் பிரச்சனையை  இழுத்து விட்டுக்கற..

மகிழன் டி.எம் க்கும் நம்ம மேனேஜர்க்கும் ரொம்ப குளோஸ் போல டி.. அவர பகைச்சுக்காத... “ என்றாள் அன்பு..

“அடிப் போடி.... கடிக்கிற நாய் குரைக்காது... சும்மா என்னவோ இந்த ஆபிஸே  இவன் தலையில ஓடற மாதிரி பெருசா பில்டப் பண்ணிக்கிறான்.. இவனையெல்லாம் இப்படி நாலு குட்டு வச்சாதான் அடங்குவான்... சரி வாங்க டி.. போய் கொஞ்சமாவது வேலையை பார்க்கலாம்.... “  என்று  எழுந்து சென்றனர்....


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!