அழகான ராட்சசியே!!!-7
அத்தியாயம்-7
"நான் ஒன்னும் பயமுறுத்தலை அத்தை..
உங்க ரூம்லயே மெடிக்கல் ரிப்போர்ட் இருக்கு... உங்க மேல அக்கறை இருக்கிறவங்க போய்
எடுத்து பார்த்துக்கலாம்... " என்று சமையல்
அறை உள்ளிருந்து குரலை உயர்த்தினாள் மது..
அதை கேட்டதும் மகிழன் சிவகாமியை பார்த்து
முறைத்து
"ஒழுங்கா சொல்லு மா.. என்னாச்சு னு
" என்று அதட்டினான்..
"டேய்.. ஒன்னும் இல்லடா.. நேற்று
மத்தியானம் சமையல் செய்து கொண்டிருந்தப்ப
லேசா தலை சுத்தற மாதிரி இருந்தது... அப்படியே சுவற்றை பிடித்து சாய்ஞ்சுட்டேன்..
நல்ல வேளை. மது பார்த்துட்டு ஓடி வந்து
தாங்கி புடிச்சிட்டா...
அது பித்தம் மாதிரி அப்பப்ப அப்படித்தான் வரும்.. கொஞ்சம் இஞ்சி தட்டி போட்டு மல்லி காபி
வச்சு குடிச்சா உடனே சரியாய்டும்..
ஆனா இந்த ஒட்டடகுச்சி உடனே அலப்பரை பண்ணி என்னை கிளம்ப சொல்லி பக்கத்துல இருக்கிற பெரிய
ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய்ட்டா..
அவனுங்களும் அந்த டெஸ்ட் இந்த டெஸ்ட் னு எல்லாத்தையும்
எடுக்க வச்சுட்டானுங்க.. அப்புறம் நம்ம உடம்பை ஒரு மெசின்க்குள்ள விட்டு தலைய
ஸ்கேன் எடுப்பாங்களாம் அது பேர் என்ன ? " என்றார் யோசித்தவாறு
“MRI ஸ்கேன்.. " என்றான் மகிழன்..
"ஆங்.. அதையும் எடுக்கணும்.. நாளைக்கு
சாப்பிடாம வாங்கனு சொல்லிட்டாங்க.. லேசா தலை சுத்தினதுக்கு போய் யாராவது இத்தன
டெஸ்ட் எடுப்பாங்களா?அவனுங்களும் காசை
புடுங்கிட்டு ஊர்ல இருக்கிற எல்லா வியாதி பெயரையும் லிஸ்ட் போட்டு எழுதி கொடுத்துட்டானுங்க..
அதை வச்சுகிட்டுத் தான் இவ நேற்றிலிருந்து
என்னை சமையல் ரூம் பக்கம் விட மாட்டேங்கிறா..
நேற்றே கமலம் தான் செஞ்சாங்க.. இன்னைக்கு காலையில இவ என்னை உள்ளயே விடலை..
ரெஸ்ட் எடுங்கனு மூலையில் உட்கார வச்சுட்டா.. நானும் எத்தனை நேரம்
தான் சும்மாவே உட்கார்ந்திருக்குறது.. எல்லாம் அந்த ஒட்டட குச்சியால வந்தது..
" என்றார் மெதுவாக தன் சின்ன மகனிடம்
தன் மருமகளின் காதில் விழாமல்..
"ஹலோ மாமியாரே.. நான் ஒன்னும் ஒட்டட
குச்சி இல்லை.. ஸ்ட்ராங் ஆக்கும்..
அடுத்த வாரத்துல இருந்து நான் ஸ்போர்ட்ஸ் ப்ராக்டிஸ் போக போறேன்.. இந்த வருடம் நேஷனல் கப்
ஐ அடிக்க போறேன்... ஐம் ஹெல்த்தி பாடி.. நீங்கதான் வீக் பாடி.. " என்று கழுத்தை நொடித்தாள் மது...
அதை கேட்ட மகிழனுக்கு ஆச்சர்யம்.. வாயை திறக்காத அந்த மதுவா
இவ்வளவு பேச்சு பேசறா என்று..
“ஹ்ம்ம்ம் எல்லாம் அந்த ஆதி பொண்டாட்டி பாரதி கொடுத்த ட்ரெயினிங் போல..அதை விட முன்பு
தனியாக ஒரு ஆட்டோ புடிச்சு ஒரு இடத்துக்கு போக தெரியாமல் இருந்த மது இன்னை க்கு தன் அன்னைக்கு ஒன்று
என்றதும் எங்களை கூட அழைக்காமல் அவளாகவே தனியாக அழைத்து சென்று எல்லா டெஸ்ட்களையும் எடுத்திருக்கிறாளே...
(மது எப்படி ஆட்டோ வில் முதல் முதலாக தனியாக பயணம் செய்தாள்
என்று மறந்திருப்பவர்களுக்கு காதோடுதான் நான் பாடுவேன் கதையை
புரட்டி
பாருங்கள்.. ஹீ ஹீ நம்ம மதுவின் வரலாறு அதில் இருக்கிறது...)
இந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறளா?. இன்று மூத்த
மருமகளாக இந்த குடும்பத்து பொறுப்பை ஏற்று அவள் தான் பார்த்து கொள்கிறாள்..
அதோடு தன் அன்னை மீதும்
அவள் வைத்திருக்கும் பாசம் கண்டும் நெகிழ்ந்து போனான்.. அதே நேரம் இரண்டு
தடியன்கள் இருந்தும் தங்கள் அன்னையின் உடல் நலத்தை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டதை எண்ணி வருத்தமாக
இருந்தது..
பொதுவாக 40 வயதுக்கு மேல் தாண்டினாலே ஒவ்வொருவரும் தங்கள் உடலை
முழு பரிசோதனை செய்து எல்லாம் நார்மலாக இருக்கிறதா என்று பார்த்துக்க சொல்லி எத்தனை விளம்பரங்கள்
வருகின்றன..
ஏன் இவனே கம்யூனிட்டி செர்விஸ் என அலுவலகத்தில் இருந்து சென்று நிறைய முதியோர்களுக்கு இந்த மாதிரி டெஸ்ட்
எடுத்து கொடுத்திருக்கிறான்.. ஆனால் வீட்டில் இருக்கும் தன் அன்னைக்கும் இந்த மாதிரி
ஒரு பரிசோதனை செய்ய வேண்டும் என்று தோன்றவில்லை...
அதுவும் அவர் பின் நாற்பதுகளில் இருப்பவர். இன்னும் ஒரு வருடத்தில் 50 வயதை தொட போகிறார்.. அவருக்கு
உடலை பரிசோதிக்கும் எண்ணமே வராமல் போய்விட்டதே.
இந்த நிகிலன் தடியணும் நமது இல்லத்தில் இருக்கும் அந்த
பெரியவர்களை எல்லாம் விழுந்து விழுந்து கவனிக்கறானே.. வீட்டில் இருக்கும் தன்
அன்னையை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டானே...
நல்ல வேளை.. மது அவரை அழைத்து கொண்டு சென்றுவிட்டாள்... "
என்று பெருமையாகவும் தங்கள் மீது
வெட்கமாகவும் இருந்தது..
“இனிமேல் தன் அன்னையை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும்..” என்று எண்ணியவனுக்கு இன்று காலையில் அவர் ஏன் அந்த
கல்யாண புரோக்கரை வரவழைத்தார் என்ற
காரணமும் புரிந்தது..
அதையேதான்
சிவகாமியும் அவனிடம் சொன்னார்..
“நேற்று கொஞ்சம் தலை சுற்றவும் தான் எனக்கு
வயசாய்டுச்சுனு நினைவு வந்தது மகிழா.. “
என்று அவர் ஆரம்பிக்க, அவரை இடை மறித்தவன்
“மா.. உனக்கு ஒன்னும் வயசாகலை. 40 ப்ளஸ் அழகி போட்டி வச்சா நீதான் பர்ஸ்ட் பிரைஸ்.. அந்த
அளவுக்கு வயசே தெரியாதாக்கும்.. நீ என்னுடன் வர்ரப்ப எல்லாம் எல்லாரும் உன்
அக்காவானு தான் கேட்டிருக்காங்க.. நீ போய் வயசாச்சுனு சொல்லலாமா.. ? “ என்று தன் இடது கையால் அருகில்
அமர்ந்திருந்தவரின் கழுத்தை கட்டி கொண்டான்..
“டேய்.. இன்னைக்கு காலையில் இருந்தே எனக்கு
ரொம்ப ஐஸ் வைக்கிற.. அப்ப நான் கன்பார்ம் அ ஜலதோஷத்துல படுக்க போறேன்.. “ என்று சிரித்தவர்
“நான் சொல்ல வர்ரதை சொல்ல விடு டா.. “ என்று
முறைத்தவர் தொடர்ந்தார்..
“அதான் சின்னவா.. சீக்கிரம் உனக்கு ஒரு
கல்யாணத்தை பண்னி வச்சுட்டா எனக்கு நிம்மதியா இருக்கும்.. பெரியவனுக்கு அமைஞ்ச
மாதிரி உனக்கும் ஒரு குடும்பத்தை அமைச்சு
கொடுத்திட்டனா நிம்மதியா கண்ணை மூடுவேன்..
அகிலாவை மது பார்த்துக்குவா...நீ செட்டில்
ஆய்ட்டனா போதும்.. அதுக்குத் தான் அந்த புரோக்கரை வர சொல்லி இருந்தேன்.. நீ என்னடான்னா
அவரை அடிச்சு துரத்தாத குறையா அவரை துரத்தி
விட்டுட்ட.. “ என்று முறைத்தார்...
“மா...எனக்கு இப்ப கல்யாணம் பண்ணிக்கிற
மனநிலை இல்லை.. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்.. “
“ஹ்ம்ம் இதயே தான் உன் அண்ணனும் அப்ப சொன்னான்..
சரி.. யாரையாவது பிடிச்சிருந்தா
சொல்லுடா.. அந்த பொண்ணையே கட்டி வச்சிடறோம்.. எனக்கும் இந்த புரோக்கர் கமிசன்
மிச்சம்... உன் அண்ணனுக்கு பொண்ணு பார்க்க கொடுத்த காசுல அந்த ஆள் காரே வாங்கிட்டான்..
அடுத்து உனக்கு பொண்ணு பார்க்கறதுக்குள்ள
பெரிய வில்லா வீடே கட்டினாலும்
கட்டிருவான்.. அதனால சட்டு புட்டுனு ஒன்னு நீயா ஒரு பொண்ணை பார்த்துக்கோ.. இல்லையா
நாங்க காட்டற பொண்ணுக்கு தாலி கட்டு..”
“மா.. கல்யாணம் எல்லாம் எடுத்தேன் கவிழ்த்தேனு
இருக்க கூடாது..அதுவும் என் கல்யாணத்துல கொஞ்சம் சிக்கலும் இருக்கு... ” என்று ஏதோ
யோசித்தான் மகிழன்..
அவன் யோசிக்கறத பார்த்து பயந்த சிவகாமி
“ஐயோ.. இந்த பெரியவன் மாதிரி இவனும் எதையாவது கதைய வச்சிருக்க போறான்..
இப்பயே இவன் மனசுல இருக்கிறத தெரிஞ்சுகிட்டாதான் உண்டு..
பெரியவன் கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்கிறப்பயே
தனக்கும் கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி கேலி செய்தவன் இப்ப ஏன் அவன் கல்யாணத்துக்கு இவ்வளவு
தயங்கறான்.. எதுவானாலும் இன்னைக்கு அவன் வாயிலிருந்து வரவச்சிடணும் “ என்று
அவசரமாக யோசித்தவர்
“சரி சொல்லுடா. என்ன சிக்கல் ? உனக்கு எந்த மாதிரி பொண்ணு வேணும் னு சொல்.. அந்த மாதிரி பொண்ணு
பார்க்கலாம்... உன் மனசுல என்ன இருக்குனு மறைக்காம சொல்லுடா.. உன் அண்ணன் மாதிரி மனசுக்குள்ளயே
போட்டு பூட்டி வச்சுக்காத.. “ என்று துருவினார்...
மகிழன் ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவன்
“மா.. எனக்கு வரப் போறவ என்னை
புரிஞ்சுக்கறாளோ இல்லையோ மதுவை நல்லா
புரிஞ்சுக்கணும்.. அவ கூட அனுசரித்து போகணும்.. “ என்றான்.
அதை கேட்ட சிவகாமி மட்டும் அல்லாமல் சமையல்
அறை உள்ளே நின்று இவர்கள் பேசுவதை கேட்டு கொண்டிருந்த
மதுவுமே அதிர்ந்து போனாள்..
“நீ என்ன லூசா டா ... உன் பொண்டாட்டி மதுவை
எதுக்கு அனுசரிச்சு போகணும்.. ஒன்னும் புரியலையே.. “ என்றார் குழப்பமாக
“ஹ்ம்ம் மா உனக்கு தெளிவா சொன்னா தான் புரியும்..
ஏன் னா உனக்குத்தான் உள்ளே ஒன்னும் இல்லையே.. “ என்று அவர் தலையை பிடித்து ஆட்டி சிரித்தவன்
“மா.. எனக்கு நம்ம குடும்பம் இப்ப எப்படி ஒற்றுமையா எவ்வளவு சந்தோசமா இருக்கு. அதே மாதிரி
தான் கடைசி வரைக்கும் ஒரே குடும்பமா கலகலனு சிரிச்சு கிட்டு இருக்கணும்.. நிகிலன்
பசங்க, என் பசங்க அப்புறம் அகிலா என எல்லாம்
ஒன்னா ஜாலியா சிரிச்சு விளையாடிட்டு கூட்டு குடும்பமா இருக்கணும்...
அப்படி ஒரே கூட்டு குடும்பமா இருக்கணும்னா எனக்கு வரப் போறவ உங்களை
எல்லாம் புரிஞ்சுகிட்டு அனுசரிச்சு நடந்துக்கணும்...
அதுவும் குறிப்பா மதுவை.. ஏன் னா ஒரு கூட்டு
குடும்பம் உடையாம இருக்கணும் னா அந்த குடும்பத்துல இருக்கிற பொம்பளைங்க ஒருத்தரை
ஒருத்தர் புரிஞ்சுகிட்டு அட்ஜஸ்ட் பண்ணி போனாலே போதும்..
அந்த குடும்பத்துக்குள்ள விரிசல் வராது . இவங்களுக்குள்ள
முட்டிகிச்சுனா அது நேரா அவங்க ஆம்பளைங்க
காதுக்கு கொண்டு போய் அப்புறம் ஆண்களுக்குள் பிரச்சனை வெடிக்கும்...
அதுவும் இல்லாமல் உனக்கே தெரியும் எனக்கும்
மதுவுக்கும் திருமண ஏற்பாடு நடந்தது.. அது வெறும் ட்ராமானு நமக்கு தெரிஞ்சாலும் புதுசா
வர்ரவளுக்கு அது தெளிவா புரியணும் இல்லையா...
நானும் மதுவும் பழகறத வச்சு எந்த ஒரு நொடியிலும்
எங்களுக்கு முன்பு ஏற்பாடாகி இருந்த திருமணம் நினைவு வந்துவிட்டால் அது பெரும்
சந்தேகத்தை கிளப்பி விடும்..
அதுவே பல சிக்கல்களை கொண்டு வந்துவிடும்.. மது
எனக்கு ஒரு அண்ணிங்கிறதை விட, நானும் மதுவும் ஒரு
பிரண்டா இல்ல அண்ணன் தங்கச்சியா ஹ்ம் அதுவும் விட, இது ஒரு
விளக்க முடியாத உறவா பழகறது அவளுக்கு
சரியா புரியணும்.
தள்ளி இருந்தால் பெரிதாக தெரியாது.. ஒரே கூட்டு
குடும்பமா இருக்கிறப்ப இதெல்லாம் அப்பப்ப மண்டைக்குள்ள குடைஞ்சுகிட்டே இருக்கலாம்.
அதனாலதான் எங்க ரிலேசன்ஷிப்பை சரியா புரிந்து நடக்கற பொண்ணா இருக்கணும்.. அது
மாதிரி கிடைக்கிறது கஷ்டம்... அது மாதிரி ஒரு பொண்ணை பாருங்க. இல்லை னா அது மாதிரி
பொண்ணு என் கண்ணுல படற வரைக்கும் வெய்ட்
பண்ணுங்க.. “ என்று முடித்தான்..
அதை கேட்டு சிவகாமி மற்றும் மது இல்லாமல்
ஒரு பைலை எடுக்க திரும்பி வந்திருந்த நிகிலனுக்குமே பெருமையாக இருந்தது..
இவன் இந்த அளவுக்கு யோசிக்கிறானே என்று..
வீட்டிற்கு தலை மகன் என்றாலும் நிகிலன் இந்த
மாதிரி எல்லாம் யோசிச்சதில்லை.. அவனுக்கு எப்பவும் வேலை தான் தெரியும் ஒரு குடும்பத்தில்
எப்படி நடந்து கொள்வது எப்படி அதை உடையாமல் காப்பது என்பதெல்லாம் தெரியாது..
அந்த வேலன் புண்ணியத்தில எப்படியோ அவன் மனைவி நல்லவளாக வந்து விட்டாள்.. மகிழன் சொல்ற மாதிரி
அடுத்து வருகிறவளும் மதுவை போலவே நல்லவளாக இருக்க வேண்டும்.. “ என்று எவ்வளவு யோசிக்கிறான்
என்று பெருமையாக இருந்தது..
தன் தம்பியை மெச்சி கொண்டே மாடி ஏறி தன்
அறைக்கு சென்றான் நிகிலன்..
அதோடு மகிழன் மதுவை அண்ணி என்று அழைத்து
பழகவில்லை.. முதல் நாளே சொல்லி விட்டான்.
அண்ணி என்றால் அது மரியாதை கொடுத்து
பிரித்து வைப்பதாக இருப்பதாகவும் மது தனக்கு ஒரு நல்ல தோழி, சகோதரிக்கும் மேல்.. அதனால் மது என்று பெயர் சொல்லி அழைப்பது இன்னும் ஒரு நெருக்கமான
உறவாக இருப்பதாக சொல்லி விட்டான்..
நிகிலன் ம் சிவகாமியும் சரியென்று விட்டனர்.
அதே போல மது வும் மகிழனை எப்படி அழைப்பது என குழப்பம் வந்தது.. உறவு முறைப்படி அவள் மாமா என்றோ இல்லைனா
கொழுந்தனார் என்று அழைக்க வேண்டும்..
ஆனால் அவள் தன் கணவனை இரவு நேரங்களில் மாமா
என்று செல்லமாக அழைத்து அவனை சீண்டுவதால் அந்த பெயரை சொல்லி மகிழனை அழைக்க விரும்பவில்லை...
அதனால் அனைவரும் ஒத்து கொள்ள, அவளுமே மகிழன் வயதில் பெரியவனாக இருந்தாலும் மகி,
மகிழன் என்றே அழைத்து வருகிறாள்..அவனை சீண்டும் நேரங்களில் மட்டும் கொழுந்தனாரே
என்று இழுத்து அழைத்து அவனை வெறுப்பேத்துவாள்..
அந்த குடும்பத்தில் உள்ளே ஒவ்வொருவருக்கும் நல்ல
புரிதல் இருப்பதால் ஒவ்வொருவரும் மற்றவர்களை கேலி செய்தும் கிண்டல் அடித்தும்
கலகலப்பாக இருக்கும்.
அதுவும் இப்பொழுது மதுவும் நன்றாக பேச
ஆரம்பித்து விட, அவர்கள் ஒன்றாக கூடும் நேரங்களில் அந்த
வீடு களை கட்டும்.. எப்படியோ இருந்த வீடு இப்பொழுது இவ்வளவு கலகலப்பாக மாறி இருக்க, அதை கண்ட சிவகாமிக்கும் மனம் நிறைந்து விடும்..
அதுவும் அவர் பேத்தி வந்ததில் இருந்து நமது
இல்லத்தில் இருந்தும் அடிக்கடி நிறைய பேர் வந்து தங்கி செல்வதால் அந்த குட்டி
தேவதையை கொஞ்சவும் அனைவருக்கும் சேர்த்து சமைத்து பரிமாறி என்று எப்பொழுதும்
கலகலப்பாக இருக்கும்....
அதே சூழல் எப்பொழுதும் நிலைத்து
நிற்கவேண்டும் என்றால் அந்த குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் புரிதல்
புதிதாக வருபவளும் புரிந்து கொள்ள வேண்டும்
என்று யோசித்தார் சிவகாமி..
சிவகாமிக்கும் மகிழன் சொல்வதும் சரியென பட்டது..
“ஹ்ம்ம்ம் சரிடா.. என் மருமக மாதிரி யே அடுத்தவளும்
வரணும்னா என் மருமகளுக்கு ஒரு தங்கச்சி இருந்தாலாவது அவளையே கட்டி வச்சிடலாம்...
அதுக்கும் வழி இல்லாம மது ஒத்தை புள்ளையா இல்ல நின்னு போய்ட்டா.. “ என்று சிரித்தார் சிவகாமி..
“ஹ்ம்ம் சண்முக மாமாவிற்கு முன் யோசனையே
இல்ல மா.. பெரிய பொண்ணு போற வீட்ல என்ன மாதிரி ஒரு தம்பி இருந்தால் அவனுக்கு கட்டி
கொடுக்க இன்னொரு பொண்ணு வேணும்னு யோசிக்கவே இல்லை பார்...
இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருக்கலாம்.. எப்படியும்
ஒரு ஐந்து ஆறு வருசம் கழிச்சாவது அடுத்த பெண்
பிறந்திருக்காது??
என் அப்பாவை பார். விடா முயற்சியுடன் போராடி
அவர் விரும்பிய அகி குட்டியை பெத்துட்டார் இல்ல.. இந்த முன் யோசனை சண்முக மாமாக்கு
இல்லை.. “ என்று சீரியசாக குறை பட அவன் சொன்னதின் அர்த்தம் புரிய , சிவகாமி கன்னம் சிவந்தார்.
தன் கணவனின் நினைப்பில் கண்கள் கசிய, ஒரு நொடி தன் பழைய நினைவுகளில் முகம்
மலர்ந்து, பின் அடுத்த நொடி முகம் வாடியது... ஆனாலும் உடனே சமாளித்து
தன் கண்ணீரை உள்ளிழுத்து கொண்டவர்
“ஹ்ம்ம் அந்த மனுசன் இருந்தால் அகிலா வை
எப்படி எல்லாம் கொண்டாடி இருப்பார்.. அதுவும் இப்ப பேத்தி வந்த சந்தோசத்துல எப்படி
எல்லாம் தூக்கி வச்சு கொண்டாடி இருப்பார்..
இப்படி வீடே நிறைஞ்சு இருக்கிறதை பார்க்க அவருக்கு கொடுத்து வைக்கலையே.. “ என்று மூக்கை உறிஞ்சியவாறே கண்ணோரம் கரித்த நீரை தன்
புடவை முந்தானையால் துடைத்து கொண்டார்..
“நோ பீலிங்ஸ் சிவகாமி தேவி..அதான் உன் புருசன்
நம்ம வீட்டுக்கு குட்டி இளவரசியா வந்திருக்கார் இல்லை.. அவளை பார்த்தாலே அப்படியே உன் புருசன்
மாதிரிதான் இருக்கா..
நடையெல்லாம் கூட அவர் மாதிரிதான் வருவா பார்..
பேத்தி உருவத்துல தினமும் உனக்கு முத்தமா பொழிய போறார் பார்.. “ என்று கண் சிமிட்டி சிரித்தான் தன் அன்னையை இயல்பாக்க
எண்ணி
“சீ.. போடா போக்கிரி..” என்று வெட்க பட்டு சிரித்தவர்
“சரி.. சரி.. பேச்சை மாத்தாத ஆமா.. நாம எங்க விட்டோம் ?? “ என்று யோசிக்க
“சின்ன பாகுபலிக்கு பொண்ணு பார்க்கறதில விட்டீங்க
அத்தை.. “ என்றவாறு அங்கு வந்தாள் மது..
“ஹே திருடி.. இவ்வளவு நேரம் நாங்க பேசினதையெல்லாம்
ஒட்டு கேட்டுகிட்டு இருந்தியா? “ என்று முறைத்தான் மகிழன்..
“ஆமா.. ஆத்தாவும் மகனும் என்ன ரகசியம் பேசற மாதிரியா
பேசுனீங்க.. அதான் இந்த ஊர் க்கே கேட்குதே.. நல்ல வேளை எங்கப்பா வீடு பக்கத்துல இல்லை.. நீ எங்கப்பாவை
நாற அடிச்சது மட்டும் அவருக்கு கேட்டு இருந்துச்சு ?”
என்று இழுக்க, அதில் இடை மறித்த மகிழன்
“ஆமா.. கேட்டிருந்தால் உடனே ஒரு புள்ளைய
பெத்து இந்த மாப்பிள்ளை கட்டிக்கோனு கொடுத்துடுவாராக்கும்... அவர் மட்டும் உனக்கு
ஒரு தங்கச்சிய பெத்து வச்சிருந்தா நான் ஏன் இப்படி பொண்ணுக்காக அலைய போறனாம்.. “
என்று சிரித்தான்..
“ஐயோ கருமம் கருமம்.. இப்படி எல்லாம பேசுவாங்க..
“ என்று முகத்தை சுளித்து தலையில் அடித்து
கொண்டாள் மது..
“என்னடா ? என்
பொண்டாட்டி கிட்ட காலங்காத்தாலயே வம்பு இழுத்துகிட்டிருக்க?
“ என்று சிரித்தவாறு உள்ளே வந்தான் நிகிலன்..தன் அறைக்கு சென்று அவன் தேடி வந்த
பைலை எடுத்து கொண்டு கீழ வர, அங்கிருந்தே தன் மனைவியை
கண்டவன் அவளை காணும் சாக்கில் அங்கு வந்தான்..
“வாடா.. எங்கடா ACP
சார் இன்னும் இங்கு விஜயம் செய்யலையேனு யோசிச்சுகிட்டிருந்தேன்..
கரெக்டா வந்திட்ட.. “
அது எப்படி நிகிலா? கரெக்ட் ஆ இந்த டைம்க்கு என்ட்ரி ஆய்டற?? காலையில்
எழுந்ததும் பெர்பெக்ட் ஆ போய் கமிஷனர் முன்னாடி
ஒரு அட்டென்டன்ஸ் ஐ போட்டுடற.. அப்புறம் ரோந்து வர்ரேன் பேர் வழினு நம்ம வீட்டு
பக்கமே சுத்திகிட்டிருக்க..
பத்தாதற்கு அடிக்கடி பைலை எடுக்கறேனு
வீட்டுக்கு வந்திடற..அதற்கான காரணம் எனக்கு மட்டுமே தெரியும்.. “ என்று கண்
சிமிட்டினான் குறும்பாக சிரித்தவாறு..
“டேய்.. அடக்கி வாசி.. நாம தனியா
பேசிக்கலாம்.. “ என்று மெதுவாக கிசுகிசுத்தவன் தன் தம்பியின் வாயை அடக்க பார்த்தான் நிகிலன்..
அடங்குனா அடங்குற ஆளா நம்ம மங்கி மகி.. அவனுக்கு தெரிந்த
ரகசியத்தை சொல்லலைனா தலை வெடிச்சிறாது... அதுக்கு தகுந்த மாதிரி சிவகாமியும்
“என்னடா அது ரகசியம்? எனக்கு தெரியாத சிதம்பர ரகசியம் ? “ என்றார் ஆர்வமாக...
மதுவோ கன்னம் சிவக்க அவள் சாப்பிட்டு
கொண்டிருந்த தட்டை தூக்கி கொண்டு சமையல்
அறை உள்ளே செல்ல முயல, மகிழன் எட்டி அவள் கையை
பிடித்து இழுத்து அமர வைத்தான்..
“நீயும் இங்கயே இரு மது குட்டி.. அப்பதான்
இந்த ரகசியத்தை சொன்னா எபக்டிவ் ஆ இருக்கும். “ என்று குறும்பாக சிரித்தான்..
“ஓ.. அப்ப என் மருமகளுக்கும் தெரியுமா? நான் மட்டும் தான் ஒன்னும் தெரியாம இருக்கேனா? ஹே
சொல்லுடா மகிழா.. “ என்று மீண்டும் ஆர்வமானார்..
“அது வந்து.. நம்ம ACP சார் அடிக்கடி பைலை வச்சுட்டு திரும்பி வந்து எடுக்கறதும் அப்புறம்
இங்கயே சுத்திக்கிட்டு இருக்கறதும் எதுக்குனா ? “ என்று இழுக்க, நிகிலன் அவன் தன்
கையால் அவன் வாயை பொத்தி கொண்டான்...
அதையும் மீறி திமிறி அவன் கையை விளக்கி,
“எல்லாம் அவன் ஆசை பொண்டாட்டியை
கொஞ்சத்தான். நைட் விட்டுப் போன ரொமான்ஸை எல்லாம் பார்ட் டைம் ல கன்டின்யூ பண்ணத்தான்...
“ என்று கத்தினான்..
அதை கேட்டு மது கன்னம் சிவக்க தலையை குனிந்து
கொண்டாள் .. நிகிலன் அவனை பார்த்து முறைக்க,
சிவகாமியும் நமட்டு சிரிப்பை சிரித்தவாறு
“அடச்சே.. இதுக்குத்தான் இவ்வளவு பில்டப் பண்ணினியா..
இதுதான் எல்லாருக்கும் தெரிஞ்ச கதை ஆச்சே.. “ என்று அந்த மேட்டரை மழையில் நனைந்த
புஸ்வானம் ஆக்கினார் சிவகாமி
அதை கேட்டு திகைத்த மகிழன்
“என்ன மா சொல்ற? என்கிட்ட சொல்லவே இல்லை.. உனக்கு எப்படி தெரிந்தது?
இத கண்டுபுடிக்க ஒரு மாசம் ஆச்சு எனக்கு.. ” என்றான்
சிரித்தவாறு..
“ஹா ஹா ஹா எனக்கு மட்டும் இல்லை.. ரமணி , கமலம் என எல்லாருக்கும் தெரிந்தது தான்.. அதான் இவன் வர்ர நேரம் நாங்க
யாரும் சமையல் அறை பக்கமே வர்ரதில்லை.. “ என்று குறும்பாக சிரித்தார்...
“ஐயோ.. மானம் போச்சு.. “ என்று மது தலையில்
கை வைத்து கொண்டு நிகிலனை பார்த்து முறைக்க, நிகிலனோ
“டேய்.. உனக்கும் கல்யாணம் ஆகும் இல்ல..
இதுக்கெல்லாம் சேர்த்து உன்னை எப்படி பழி வாங்கறேன் பார்... “ என்று முறைத்தான் நிகிலன்..
“ஹலோ ப்ரதர்.. நான் எல்லாம் உன்னை மாதிரி
திருட்டுதனமா ஏதோ காரணத்தை சொல்லி வீட்டுக்கு வந்திட்டு ஒளிஞ்சு எல்லாம் என்
பொண்டாட்டியை கொஞ்ச மாட்டேன்..
டேரக்டா ஹோட்டல் கதவுல தொங்க விடுவாங்களே நோ டிஸ்டர்பன்ஸ்
கார்ட். அந்த மாதிரி ஒரு கார்டை என் அறைக்கு வெளில தொங்க விட்டுட்டு ஆசை தீர என் பொண்டாட்டிய
கொஞ்சு வேணாக்கும்.. “ என்று சிரித்தான்..
“ஐயோ.. நல்ல குடும்பம்.. இப்படியா பப்ளிக்
ஓபனா ஆ பேசுவாங்க.. மகி.. முதல்ல உன்
பொண்டாட்டியை தேடி கண்டு புடிக்கிற வழியை பார்.. அதுக்கப்புறம் நீ எப்படி ரொமான்ஸ்
பண்றதுனு ப்ளான் பண்ணலாம்.. “ என்று உதட்டை
சுளித்தாள் மது அவனை செல்லமாக முறைத்தவாறு..
நிகிலனோ அவளின் சுளித்த இதழ்களையே ஆசையாக
பார்த்து கொண்டிருந்தான் அங்கிருப்பவர்களையும் மறந்து..
“ஹா ஹா ஹா... அதெல்லாம் என் டார்லிங்
எங்கயாவது இருப்பா.. என்னை தேடி தானா வந்திடுவா..யூ டோன்ட் வொர்ரி மது குட்டி.. நீ
போய் உன் ஆசை புருசனை நல்லா கவனி.. அதுக்குள்ள என் பிரின்ஸஸ் எழுந்து பங்குக்கு
வந்திட போறா... “ என்று கண் சிமிட்டியவன் மது எழுந்து அடிக்க வர, அவ கைக்கு சிக்காமல் எழுந்து வளைந்து நழுவியவன் கையை கழுவி கொண்டு
எனக்கென ஏற்கனவே பிறந்தவள் எவளோ ??
இதயத்தை கயிறு கட்டி இழுப்பவள் எவளோ?
ஒளி சிந்தும் இரு கண்கள்
உயிர் வாங்கும் சிறு இதழ்கள்
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே…
அது என்னென்று அறியேனடி...
என்று பாடலை கொஞ்சம் மாற்றி உல்லாசமாக பாடி
கொண்டு தன் லேப்டாப் பேக்கை எடுத்து தோளில் மாட்டி கொண்டு கார் சாவியை சுழற்றியபடி
துள்ளலுடன் வாயிலை நோக்கி நடந்தான் மகிழன்..
அதே நேரம்
அலுவலகத்துக்கு கிளம்பி அவசரமாக சாப்பிட்டு கொண்டிருந்த சந்தியாவுக்கு புரை ஏறியது
.
அருகில் இருந்த அவள் அன்னை ருக்மணி ஓங்கி
அவள் தலையை தட்டி
"ஏன் டி .. எடுமை மாடு மாதிரி வளர்ந்திருக்கியே..
பார்த்து மெதுவா சாப்பிடறதில்லை.. 10 மணி வரைக்கும் இழுத்து போர்த்தி தூங்கிட்டு
இப்படி அவசர அவசரமா அள்ளி கொட்டிகிட்டு ஓடாட்டி கொஞ்சம் சீக்கிரம் எழுந்து மெதுவா கிளம்பி
போகலாம் இல்லை.. " என்று முறைத்தார்..
"ஹலோ.. ருக்கு.. இது ஒன்னும் நான்
அவசரமா சாப்பிடறதால புரை ஏறலை.. உன் மருமகன் என்னை நினைச்சிருக்கான்.. அதான்
எனக்கு இங்க தலைல ஏறுது.." என்று கண்
சிமிட்டினாள் குறும்பாக சிரித்தவாறு..
"என்னது மருமகனா? அது யார் டி எனக்கு தெரியாம ? " என்று மோவாயில் கை வைத்து
அதிசயித்தார்..
"ஹீ ஹீ ஹீ யார்க்கு தெரியும்.. உன்
புருசன் கிட்ட சொல்லி சீக்கிரம் உன் மருமகனை கண்டுபிடிக்க சொல்.. இல்லைனா நானே
யாரையாவது கூட்டிகிட்டு வந்து அறிமுக படுத்திடுவேன்.. சொல்லிட்டேன்.. "
என்றவாறு தன் சாப்பாட்டை முடித்து தட்டிலயே கையை கழுவினாள்..
"ஏய்.. எத்தனை தரம் சொல்றேன்.. சாப்பிட்ட
தட்டில கையை கழுவாதனு.. எழுந்து போய் வாஸ்பேஷனில் கை கழுவறதுக்குள்ள உனக்கு என்ன
கேடு... " என்று இன்னும் நிறைய
வார்த்தைகள் சேர்த்து திட்ட
"நீ கோபத்துலதான் ரொம்ப அழகா இருக்க ருக்கு.. ஐ லவ் யூ.. உம்மா..
" என்றவாறு தன் அன்னையின் கன்னத்தில் முத்தமிட்டு தன் லேப்டாப் பேக்கை எடுத்து கொண்டு தன்
ஸ்கூட்டியின் சாவியை எடுத்து கையில் சுழற்றியவாறு துள்ளலுடன் வாசலுக்கு ஓடினாள்..
கூடவே
செந்தூர பூவே... செந்தூர பூவே...
ஜில்லென்ற காற்றே... என் மன்னன் எங்கே ?
என் மன்னன் எங்கே ?
நீ கொஞ்சம் சொல்லாயோ !!!
என்று பாடி கொண்டே ஓடியவள் தன் ஸ்கூட்டியை
ஸ்டார்ட் பண்ணி விரைந்தாள்..
"சீ.. கழுத ..” என்று கன்னம் சிவந்தாலும் புள்ளிமானாக துள்ளி ஓடிய தன்
மகளையே ரசித்து பார்த்தார் ருக்மணி...
"முருகா.. இவ வயதுதான் மது குட்டிக்கு..
மூத்த மருமகளா ஒரு குடும்பத்தை எவ்வளவு பொறுப்பா பார்த்துக்கறா.. இப்ப ஒரு
புள்ளைக்கு தாயாவும் ஆயிட்டா... இவ இன்னும்
சின்ன புள்ளையாவே இருக்காளே.
இந்த மனுசன் வேற இவளுக்கு ஒரு மாப்பிள்ளைய பார்த்து
காலகாலத்துல கல்யாணம் பண்ணி வைக்கலாம் னா பொண்ணுக்கு இன்னும் விவரம் வரணும் பொறுப்பு வரணும்னு நாளை கடத்திகிட்டே
இருக்கார்...
இவ சேட்டைக்கு இவளை வச்சு சமாளிக்கிற மாதிரி
ஒரு நல்ல மாப்பிள்ளையை சீக்கிரம் கண்ணுல காமி முருகா... " என்று அந்த
வேலனிடம் வேண்டி கொண்டார் ருக்மணி..
தன் இளைய மகன்
கிளம்பி சென்றதும் மது கொடுத்த ராகி கலியை கஷ்டபட்டு உள்ளே தள்ளி சாப்பிட்டு
முடித்து, வரவேற்பறையில் வந்து அமர்ந்த சிவகாமியும் மகிழன் சொன்னதையெல்லாம்
நினைத்து பார்த்தார்..
அவன் விளையாட்டுக்கு சொன்னாலும் அவன் சொன்னதில்
இருந்த உண்மை புரிந்தது..
ஒரு பையன் மட்டும் இருக்கும் வீடுகளில்
மாமியார் மருமகள் பிரச்சனை என்றால், இரண்டு
பையன்கள் இருக்கும் வீடுகளில் வேற ஒரு தொல்லை.. இரண்டு மருமகளும் ஒருவரோடு ஒருவர்
ஒத்து போக வேண்டும்... அந்த இரண்டு மருமகள்களும் அனுசரித்து நடந்து கொண்டாளெ அந்த குடும்பம்
உடையாமல் இருக்கும்..
“அப்படி பார்த்தால் மதுவை பற்றி கவலை இல்லை. யார் வந்தாலும் அனுசரித்து போய் விடுவாள்..
ஆனால் வரப்போற சின்ன மருமகள் இந்த வீட்டை அனுசரித்து போகணும்னா அது மதுவுக்கு தெரிந்தவளா
இருந்தா இன்னும் வசதியா இருக்கும்..
மதுவுக்கு தெரிந்த பொண்ணுனா என்று யோசித்தவருக்கு முன்பு ஒருநாள்
“என்னைக்கு இருந்தாலும் நான் தான் உங்க
சின்ன மருமகள் மாமியாரே.. எழுதி வச்சுக்கங்க..” என்று குறும்பாக சவால் விட்ட
மதுவின் தோழி சந்தியா நினைவு வந்தாள்..
உடனே அவர் முகத்தில் புன்னகை பூத்தது..
“என்னதான் வாயடித்தாலும் குணத்தில் தங்கமானவள்
தான்.. இந்த குடும்பத்தையும் அனுசரித்து போவாதான். மகிழனுக்கும் அவள மாதிரி வாயடிக்கிறவ
வந்தாதான் அவனை அடக்க முடியும்...
“ஹ்ம்ம் முருகா.. எப்படியாவது அந்த பொண்ணையே
எனக்கு சின்ன மருமகளாக்கிடேன்.. உனக்கு இன்னொரு முறை காவடி எடுக்கறேன்.. “ என்று
அந்த வேலனிடம் அடுத்த அப்ளிகேசனை போட்டார்
சிவகாமி..
பாவம்.. சிவகாமி அறியவில்லை.. அவர் பையனும் சின்ன மருமகளாக
வர வேண்டும் என்று அவர் ஆசை படுபவளும் ஏற்கனவே முட்டி கொண்டு நிற்கின்றனர் என்று..
எதிர் எதிர் துருவமாக இல்லை இல்லை டாம்
அன்ட் செர்ரியாக முறுக்கி கொண்டு இருக்கும்
இருவரும் இணைவார்களா? பார்க்கலாம்..
Comments
Post a Comment