காந்தமடி நான் உனக்கு-42
அத்தியாயம்-42
அன்றிரவு புதுமணத் தம்பதியருக்கான ஸ்பெஷலான, தனிமையான நேரம்...
அமுதனின் பங்களாவில் முதலிரவுக்கு
என்று பிரத்தியேகமாக அலங்கரிக்கப்பட்டிருந்த அவனுடைய அறையில், கையில் பால் சொம்புடன்
நுழைந்தாள் சத்யா.
உள்ளுக்குள் படபடவென்று அடித்துக் கொண்டது.
என்னதான் அமுதன் தெரிந்தவன்...அவளின்
மனம் கவர்ந்தவன்...காலையில் தாலி கட்டிய கணவன் என்றாலும், அவன்
உடனான இந்த தனிமையை எண்ணும் பொழுது கொஞ்சம் படபடப்பாகவும், கொஞ்சம்
பயமாகவும் இருக்கத்தான் செய்தது.
வேகமாக துடிக்கும் இதயத்தை கையில்
பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தவளின் கால்கள் அடுத்த நொடி தரையில் இல்லை.
அவளை அப்படியே தன்னோடு சேர்த்து மேலே தூக்கி
இருந்தான் அமுதன்.
அதில் ஒரு நொடி அதிர்ந்து போனாலும், பின் சமாளித்துக் கொண்டவள், அப்பொழுதுதான் அவள் கையில்
இருந்த பால் சொம்பு நினைவு வர
“ஐயோ அம்மு... பால்... பால்....” என்று
அலற, அப்பொழுதுதான் அவள் கையில் தழும்பிக் கொண்டிருந்த
பால் சொம்பை கண்டவன், மனமே இன்றி மெல்ல அவளை இறக்கி விட்டு,
அவள் கையில் இருந்த பால் சொம்பை வாங்கி
அருகில் இருந்த டேபிலில் வைத்தவன் அடுத்த கணம் தன்னவளை இழுத்து மீண்டும் அவளை தன்னோடு
சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டான்.
இத்தனை நாட்களாய் அவளை பிரிந்து இருந்த
ஏக்கம் எல்லாம் அந்த அணைப்பில் கொட்டிவிடுபவனை போல, அவளை
தன்னுள்ளே புதைத்து கொள்பவனை போல இன்னுமாய் இறுக்கி அணைத்துக் கொண்டான்.
சத்யாவும் அவனின் மனநிலை புரிந்தவளாய், அவனின் இறுகிய அணைப்பில் இன்னுமாய் இலகி, உருகிப்
போய் வாகாக அவன் மஞ்சத்தில் சாய்ந்து கொண்டாள்...
தன் இத்தனை நாள் ஏக்கம் எல்லாம் தீரும்
வரை, அவளை அணைத்து இருந்தவன், பின்
தன் பிடியை தளர்த்தி, இப்பொழுது குனிந்து அவளின் முகத்தை கையில் ஏந்தி, அவளின் கண்களுக்குள் காதலுடன் ஊடுருவி ஆழ்ந்து பார்க்க,
அதற்குள் தன்னை சுதாரித்துக் கொண்ட சத்யா, அந்த நொடி அவனிடமிருந்து நைசாக நழுவி, கட்டிலின்
மறுபக்கம் ஓடிப் போய் நின்று கொண்டாள்.
அவளின் இந்த திடீர் செய்கையைக் கண்டவன்
திகைத்துப் போய்
“ஹே... பேபி... என்னது இது? “ என்று அவளை செல்லமாக முறைக்க, அவளும் மையலுடன் சிரித்தவள்
“எனக்கு முதலில் உண்மை தெரிந்தாகணும் மை
டியர் ஹஸ்பென்ட். என்ன நடந்ததுன்னு
சொல்லுங்க...” என்றாள் தன் கைகளை
மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு அவனையே குறும்பாக பார்த்து சிரித்தபடி.
சத்யாவுக்கு இன்னுமே எல்லாம் கனவு போல
இருந்தது..
தன்னை, தன் காதலை முழுமையாக உணர்ந்ததும், எப்படியாவது தன்னவன்
திருமணத்தை நிறுத்தி விட வேண்டும் என்று பதற்றத்துடன் ஓடி வந்தவள், பின் எப்படி அவளே மணமகளாக ஆகிப் போனாள் என்று இன்னுமே குழப்பமாக
இருந்தது.
அதுவும் அவளை எப்பொழுதும் முறைத்துக் கொண்டு, அவளை
கேவலமாக ஏளனமாக பார்த்து வைக்கும் அவன் அன்னை ரூபாவதி, இன்று
வாய் நிறைய அவளை மருமகள் என்று அழைத்தது இன்னுமே ஆச்சரியமாக இருந்தது.
அதோடு திருமணம் முடிந்து ரிசப்ஷனில் நின்றிருந்த
பொழுது, அந்த அழகி
மேக்னாவும் சிரித்துக் கொண்டே மேடையேறி வந்தவள், அவர்களுக்கு பரிசை கொடுத்துவிட்டு, அமுதன் கன்னதில் பட்டும்
படாமலும் முத்தம் கொடுத்து விட்டுச் சென்றது இன்னும் குழப்பமாக இருந்தது.
அவசரமாய் மேக்னாவின் முகத்தை ஆராய்ந்தாள்
சத்யா. அவள் முகத்தில் அவளின் திருமணம் நின்று போன வருத்தம் எள்ளளவும் இல்லை. எப்படி
இப்படி? என்ன நடந்தது என்று பல குழப்பங்கள் அவள் உள்ளே
முன்டி அடித்தன.
அத்தனை குழப்பங்கள் உடனே தான் இதுவரை
சமாளித்து வளைய வந்தாள். அவளின் குழப்பத்திற்கான விளக்கம் கேட்கலாம் என்று பார்த்தால், யாரும் அவளிடம் தனியாக மாட்டவில்லை.
அமுதன் கூட அவர்களின் ரிஷப்சன் முடிந்ததும்
எங்கயோ நழுவி சென்று விட, அதன் பிறகு இப்பொழுதுதான் அவனை சந்திக்கிறாள்.
இப்பொழுதுதான் தன்னவனை தனிமையில்
சந்திக்க, என்ன
நடந்தது என்று தெரிந்து கொள்ளாமல் மண்டை வெடிப்பதை போல இருந்தது சத்யாவுக்கு.
அதனால்தான் அமுதனிடம் என்ன நடந்தது
என்று இப்பொழுது கேட்டுக்கொண்டிருந்தாள்.
“ஹே பேபி...அதெல்லாம் பொறுமையா நாளைக்கு
சொல்றேன். இப்பொழுது அதெல்லாம் கேட்கும் நேரமா இது? “ என்று அவளை ஒரு மார்க்கமாய் பார்த்தவாறு, கண்சி மிட்டி குறும்பாக
சிரிக்க, அவன்
பார்வையில் இருந்த வித்தியாசத்தை கண்டவளுக்கோ அதுவரை மறைந்து இருந்த படபடப்பு மீண்டும்
எட்டி பார்த்தது.
வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் ஊர்வலம்
வர, ஆனாலும் தன்னை மறைத்துக் கொண்டு
“இல்லை அம்மு...எனக்கு உண்மை தெரியாமல்
மண்டை வெடிக்கும் போல இருக்கு. எனக்கு உண்மையைச் சொல்லுங்கள். அப்பொழுது தான்
வருவேன்...” என்று அடம் பிடிக்க
“ஆஹான்...சரி... நீ வராட்டி உன்னை பிடிக்க
முடியாதா? இப்போ
உன்னை எப்படி பிடிக்கறேன் பார்...” என்றவன், மந்தகாச புன்னகையுடன் அவளை நோக்கி வர, அவளோ இப்பொழுது கட்டிலின் அடுத்த பகுதிக்கு ஓடியிருந்தாள்.
அதைக் கண்டவன், அவள் தன்னிடம் விளையாடுகிறாள் என்று புரிந்து
கொண்டவன், இன்னுமாய்
மலர்ந்து சிரித்தவன்
“ரைட்டு... நம்ம ஃபர்ஸ்ட் நைட் அ ஓட்டப்பந்தயத்தில்
இருந்து ஆரம்பிக்க வேண்டும் போல. நான்
ரன்னிங்கில் ஃபர்ஸ்ட் ப்ரைஸ் டார்லிங். என்கிட்ட ஜெயிக்க முடியாது. பேசாம நீயே என்கிட்ட
வந்துரு...” என்று அவளை தன் பக்கம் அழைக்க
“அதெல்லாம் முடியாது...மாட்டேன்...நீங்க
என்ன நடந்ததுனு சொன்னால் தான் வருவேன்...” என்று அவளும் மறுத்தாள் செல்லமாய் சிணுங்கியபடி.
“ஆஹான்... உன்னை எப்படி வர வைக்கிறேன் பார்...”
என்று சிரித்தவன், காலில் இடறிய பட்டு வேஷ்டியை மடித்து தொடைக்கு மேல்
கட்டிக்கொண்டு, மீண்டும் அவளை பிடிக்க முயல, அவளோ அவன் கைக்கு சிக்காமல்
அந்த அறையைச் சுற்றிலும் ஓடிக் கொண்டிருந்தாள்.
அது பெரிய விசாலமான அறை என்பதால் அவளுக்கு
வாகாக ஓடுவதற்கு இடம் கிடைத்து விட, அமுதன் கைக்கு கிடைக்காமல் அந்த அறையை
சுற்றி வந்தாள்.
அமுதனும் எளிதாக அவளை பிடித்து விடலாம்
என்று துரத்த ஆரம்பித்தவனுக்கு, இப்பொழுது மூச்சு வாங்க ஆரம்பித்தது. அந்த அளவுக்கு அவனுக்கு கையில் கிடைக்காமல்
போக்கு காட்டி அவனைப் பார்த்து சிரித்தபடி அறையை சுற்றி வந்தாள் சத்யா.
சற்று நேரம் அவளை பிடிக்க முயன்றவன், பின் குனிந்து மூச்சு
வாங்கியவாறு
“முடியலடி...நீ இவ்வளவு வேகம் ஓடுவனு
தெரியாது. இதோட நம்ம ஆட்டத்தை நிறுத்திக்கலாம். என் எனர்ஜி எல்லாம் இதிலேயே வேஸ்ட்
ஆகிடப் போகிறது..” என்று மீண்டும் அவளை தாபத்துடன்
பார்த்து கண்சிமிட்டி சிரித்தான்.
தன்னை பிடிக்க முடியாமல், அவன் கீழ குனிந்து மூச்சு வாங்குவதை கண்டு கிளுக்கி சிரித்தவள்
“ஹா ஹா ஹா அப்போ சார்க்கு பில்டிங்
ஸ்ட்ராங்...பேஸ்மென்ட் வீக்கா... இதுக்கே இப்படி மூச்சு வாங்கறீங்க..? “ என்று நக்கல் அடித்து சிரிக்க, அடுத்த நொடி அவன் கைகளில்
இருந்தாள் சத்யா.
அவள் ஏமாந்து இருந்த அந்த நொடி நேரம், கட்டிலின் மீது தாவி மறுபக்கம்
வந்தவன், அவள்
இமைக்கும் நேரத்தில் அவளை கைகளில் அள்ளிக் கொண்டிருந்தான்.
பூச்செண்டாய், மென்மையாய்
கனத்தவளை தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டவன்
“ஆங்... இப்ப சொல்லுடி... யார் வீக் ? “ என்று தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி, குறும்பாக சிரித்தவாறு, அவளை
கட்டிலுக்கு அள்ளி வந்தவன், அவளை கட்டிலின் மீது அமர வைத்து, அவளை ஒட்டி நெருங்கி
அமர்ந்து கொண்டான்.
அவளின் வளைகரத்தை எடுத்து தன் கரத்திற்குள்
வைத்து அழுத்தியவாறு,
“ஒ.கே பேபி...இப்ப உனக்கு என்ன தெரியணும்? உனக்கு அரை மணி நேரம் டைம் தர்ரேன். அதுக்குள்ள உன் சந்தேகத்தை, இந்த மண்டைக்குள் குடைவதை எல்லாம்
சீக்கிரம் க்ளியர் பண்ணிக்க.
அதுக்கு மேல ஒரு செகண்ட் கூட நான் வேஸ்ட்
பண்ண மாட்டேன்...டீல்? “ என்று அவளை மையலுடன் பார்த்து கண் சிமிட்ட, அவனின் பார்வை வீச்சை தாங்காதவளாய், கன்னம்
சிவந்தாலும் அதை மறைத்துக் கொண்டு புன்னகைத்தவள்
“எப்படி உங்கள் திருமணம் நின்று போனது? ஐ மீன் உங்களுக்கும் மேக்னாவுக்குமான
திருமணம் எப்படி நின்று போனது? “ என்று தன் கேள்விகளை ஆரம்பித்தாள் சத்யா.
“ஹா ஹா ஹா நீ கேட்ட கேள்வியில் ஒரு
சின்ன திருத்தம் பேபி...எனக்கும் மேக்னாவிற்கும் திருமண ஏற்பாடே செய்யவில்லை.
அப்புறம் எப்படி அது நின்று போவதற்கு? “ என்று கண்சிமிட்டி குறும்பாக சிரிக்க, அதைக் கேட்டு அதிர்ந்து
போனவள்
“என்னது? என்ன சொல்றீங்க அம்மு? அப்படினா
இந்த திருமண ஏற்பாடு எல்லாம்? “ என்று புரியாமல் அவனை பார்த்து மலங்க விழித்தாள்
சத்யா.
“ஹா ஹா ஹா அது நம்முடைய மேரேஜ் அரேன்ஜ்மென்ட்ஸ்
பேபி....” என்றான் அவன் பிடித்திருந்த அவளின் கையை எடுத்து அதில் அழுத்தமாய் இதழ்
பதித்தவாறு.
சத்யாவோ அவனின் முத்தத்தை உணரும்
நிலையில் இல்லை. அவளுக்கு இன்னும் மண்டைக்குள் குடைந்து கொண்டிருந்தது. அவன் சொன்னதை
கேட்டு இன்னுமாய் குழம்பியவள்,
“ஐயோ அம்மு...எனக்கு ஒன்னும் புரியல.
ஒழுங்கா உண்மையைச் சொல்லுங்க. உங்களுக்கும் மேக்னாவிற்கும் மேரேஜ் என்றுதானே சொன்னிங்க.
இன்விடேசன் எல்லாம் கொடுத்திங்களே... அதில்
கூட ஆரம் வெட்ஸ் மேக்னா என்று தானே இருந்தது...” என்றாள் இன்னும் பெரிய சந்தேகத்துடன் முகம் எல்லாம்
குழப்ப ரேகைகள் அப்பியவாறு...
அவளின் குழப்பமான முகத்தை கண்டு இன்னுமாய்
பொங்கி சிரித்தவன்
“ஹா ஹா ஹா அது உனக்கே உனக்கு மட்டுமாய்
அடித்த ஸ்பெஷல் இன்விடேசன் ஹனி. இங்கே
பாரு உண்மையான இன்விடேசனை...” என்றவன்,
எட்டி டீப்பாயின் மேல் இருந்து மற்றொரு
அழைப்பிதழை எடுத்து காண்பிக்க, அதில் அமுதன் வெட்ஸ் சத்யா
என்று பளபளப்பாக மின்னிக் கொண்டிருந்தது...
அதை பார்த்தவளின் கண்கள் அதிர்ச்சி மற்றும்
ஆச்சர்யத்தில் பெரிதாக விரிந்தன
“இதற்கு என்ன அர்த்தம் என்றால், இந்த இன்விடேசன் தான்
எல்லாருக்கும் கொடுக்கப்பட்டது. இந்த திருமண ஏற்பாடு எல்லாம் நம்முடையதுதான்..” என்று கண் சிமிட்டி இன்னுமாய் உல்லாசத்துடன் சிரித்தான்
அமுதன்.
“வாட்? அது
எப்படி? நான்
தான் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லையே? பிறகு எப்படி திருமண ஏற்பாட்டை செய்யலாம்? “ என்று இன்னுமாய் குழப்பத்துடன் மெதுவாக கேட்டு வைக்க,
“நம்பிக்கை...உன் மீது எனக்கு இருக்கும்
நம்பிக்கை செல்லம்மா...உன்னை, உன் மனதை பற்றி அறிந்ததால் வந்த நம்பிக்கை
கண்மணி. நீ எப்படியும் சம்மதித்து
விடுவாய் என்று எனக்கு தெரியும்.
அதனால் தான் துணிந்து இந்த மேரேஜ் ஏற்பாட்டை
செய்தேன். அதோடு உனக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும் என்றுதான்
எல்லோரும் சேர்ந்து ஒரு சின்ன டிராமா பண்ணினோம்...” என்று மீண்டும்
சிரிக்க,
“என்னது? டிராமா வா? “ என்று அதிர்ச்சியோடு தன் கண்களை இன்னுமாய் அகல விரித்தாள்
சத்யா...
“எஸ் எஸ் பேபி...எனக்கும் மேக்னாவுக்கும்
திருமணம் என்று சும்மா ட்ராமா பண்ணினோம்.. இந்த ட்ராமாவில் நான் மட்டும்
நடிக்கவில்லை. பாவம் வளர் ஆன்ட்டி...அப்புறம் என்னுடைய மச்சினிச்சிஸ் திவ்யா அன்ட்
நித்யா வுக்கு தான் மெய்ன் ரோல்.
அவ்வளவு ஏன்... என் பேரண்ட்ஸ் கூட இந்த ட்ராமாவில் கெஸ்ட் ரோல்...”
என்று மலர்ந்து சிரிக்க, அதைக்கேட்டு இன்னுமாய் ஆடிப்போனாள் சத்யா.
“என்னது? இத்தனை
பேரும் சேர்ந்து என்னை ஏமாற்றி இருக்கிங்களா? “ என்று மீண்டும் ஆச்சரியத்தில் தன் பெரிய கண்களை இன்னுமாய் பெரியதாக விரித்து இருக்க,
அவளின் ஆழமான விழிகளில் தொலைந்தவன், இன்னுமாய் தலைசுற்றி போனவன், அடுத்த கணம் அவளின் குடை போன்று விரிந்திருந்த இமைகளில் அழுத்தமாய்
முத்தமிட்டான்...
அதில் பெண்ணவளும் உடல் சிலிர்த்து போனாலும், தன் பிடிவாதத்தை விடாமல், அவனை பிடித்து பின்னுக்கு தள்ளி
விலக்கியவள், அவனிடம் இருந்து கொஞ்சம் தள்ளி அமர்ந்து கொண்டவள்
“ப்ளீஸ் அம்மு... எனக்கு இன்னும் பிபி ஏறுது.
இப்படி பிட்டு பிட்டா சொன்னது போதும். நடந்தது என்னன்னு முழுசாவே சொல்லிடுங்க...” என்று அவனை பார்த்து முறைத்தாள்.
அதைக்கேட்டு புன்னகைத்தவன்
“ஏன் டி...இப்படி ஃபர்ஸ்ட் நைட் ல, அதுவும் இந்த கெட்டப் ல சும்மா
கும்முன்னு இருக்குற உன்னை பக்கத்தில் உட்கார வச்சுட்டு பேச சொல்றியே... இதெல்லாம்
நியாயமா? தர்மமா? உனக்கே அடுக்குமா? “ என்று பொய்யான கோபத்துடன் அவளை முறைக்க,
அவளும் மீண்டுமாய் கிளுக்கி சிரித்தவள்
“அதனால் தான் பாஸ் சொல்றேன்... சட்டு புட்டுனு நடந்ததை சொல்லிட்டு உங்க வேலையை
ஆரம்பிங்க...” என்று கண்சிமிட்டி
குறும்பாக சிரிக்க, அதில் அவனும் மலர்ந்து சிரித்தவன்
“சரி சரி... என் கை அணைப்பிலேயே இப்படி வந்து உட்காரு...எல்லாம் சொல்றேன்...”
என்று புன்னகைத்தவாறு எட்டி அவள் இடையோடு
பற்றி தன்னருகில் இழுத்து அமர்த்தி
கொண்டவன், அவளை தன் கைவளைவுக்குள்ளேயே வைத்துக் கொண்டு, நடந்ததை விளக்க ஆரம்பித்தான்
அமுதன்...!
Apppadi enna surprise mam
ReplyDeletewait and see pa! :)
Delete