காந்தமடி நான் உனக்கு!!!-44
அத்தியாயம்-44
“இதுதான் பேபி நடந்தது... எப்படி உன்னை என்னிடம் கொண்டுவந்தேன் என்று பார்த்தாயா? “ என்று கண் சிமிட்டி குறும்பாக சிரித்தவன் தன் மீசையை நீவி விட்டுக்கொண்டு, தான் அணிந்திருந்த பட்டு சட்டையின் காலரையும் தூக்கி விட்டுக் கொண்டான் அமுதன்.
அதைக் கேட்ட சத்யாவும் மலைத்துப் போனாள்.
தன் சம்மதம் இல்லாமலே அவ்வளவு பேரை அழைத்து
திருமண ஏற்பாட்டை செய்திருக்கிறானே... எவ்வளவு தைர்யம்..! என்று மலைத்தவள் அவனை ஆச்சர்யமாக
பார்த்து
“இது எவ்வளவு பெரிய ரிஸ்க் அம்மு. ஒருவேளை
நான் கடைசிவரை சம்மதிக்காமல் இருந்திருந்தால்? அப்பொழுது என்ன செய்திருப்பீர்கள்
இவ்வளவு பேரை, அதுவும் பெரிய பெரிய வி.ஐ.பிக்களை எல்லாம் அழைத்து
விட்டு, திருமணம் நடக்காமல் போனால் என்ன ஆகும்? எப்படி சமாளித்திருப்பிங்க? “ என்று ஆச்சரியத்துடன் கேட்க,
“ஹா ஹா ஹா ரிஸ்க் எல்லாம் எனக்கு ரஸ்க்
சாப்பிடுவது போல பேபி... இல்லை என்றால் ஆரம்பத்தில் என் அப்பாவிடம் அந்த சேலஞ்சிற்கு
ஒத்துக் கொண்டிருக்க மாட்டேன்.
கையில் எந்த காசு இல்லாமலும் சர்வைவ் பண்ணி
காட்ட வேண்டுமென்ற ரிஸ்கில் ஆரம்பித்தது தானே என்னுடைய இந்த பயணம்.
அதனால் ரிஸ்க் எடுப்பது ஒன்றும் எனக்கு
புதிதில்லை. அதேபோல உன்னை பற்றி நன்றாக அறிந்தவன் நான். உன்னால் என்னை விட்டுக் கொடுக்க முடியாது
என்று எனக்குத் தெரியும்.
ஏனென்றால் என் காதலடி நீ... அதே போல காந்தமடி
நானுனக்கு. இந்த காந்தம், இந்த இரும்பை விட்டு எப்பொழுதும்
விலகாது. எப்பவும் இப்படி ஒட்டிக் கொண்டே தான் இருக்கும்...” என்று தன் அருகில், தன் கை வளைவில் இருந்தவளை தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டான்
அமுதன்.
அவளுக்குமே அவனின் அந்த இறுகிய அணைப்பு
தேவையாக இருக்க, இன்னுமே வாகாக அவனை ஒட்டி அமர்ந்து கொண்டு
அவனின் வலிய தோள்களில் சாய்ந்து கொண்டாள்...
“அப்புறம் சொல்லுங்க அம்மு...ஒருவேளை நான்
ஒத்துக்கொள்ளவில்லை என்றால்? அப்ப என்ன செஞ்சிருப்பிங்க? “ என்று மீண்டும் ஆர்வமாக கதை
கேட்டாள்...
ஒருவேளை அவன் அந்த மேனா மினுக்கி மேக்னாவை
பேக்கப் ப்ளானாக வச்சிருந்திருப்பானோ? தான் வராவிட்டால்
அந்த மேக்னா கழுத்தில் தாலி கட்டி இருப்பானோ என்று ஒரு சிறு தவிப்பு அவள் உள்ளே.
அதனால் மேலும் அவனை நோண்டினாள் அவன் மனதை
அறிந்து கொள்ள...
“ஹ்ம்ம்ம் அப்படியும் நீ ஒத்துக்
கொள்ளவில்லை என்றால், உன் கையை காலை கட்டி, தூக்கி வரவும் ஆளை தயாராகத்தான் வைத்திருந்தேன் டார்லிங்...”
என்று குறும்பாக கண் சிமிட்ட, அதைக்கேட்டவளோ அதிர்ந்து போனாள்.
“வாட்? இது
எப்ப? எப்படி...” என்று மீண்டுமாய் கண்களை விரிக்க, அவளின் விர்ந்த கண்களையும், அந்த கண்கள் வீற்றிருந்த
அவளின் அழகு முகத்தையும் தாபத்துடன்
பார்த்தவாறு
“பின்ன என்னடி ? நான்
எவ்வளவுதான் ஹீரோ பெர்பார்மன்ஸ் கொடுத்தாலும் நீ மலை இறங்கவில்லை என்றால், அடுத்து என்னுடைய வில்லன் பெர்பார்மன்ஸ்
ஐயும் காட்டவும் தயாராக இருந்தேன்.
நல்ல வேளை...என் பொண்டாட்டி எனக்கு வில்லன் ரோல் கொடுக்காமல் என்றும் உன்
நாயகனாய் ஹீரோவாய் நிறுத்திவிட்டாய். தேங்க்ஸ் டா செல்லம்மா...” என்றவன் அவளின் குண்டு கன்னத்தில் அழுத்தமாய்
முத்தமிட்டான்.
அவன் சொல்லியதை கேட்டதும் இன்னுமே ஆடிப்போனாள்
சத்யா.
“அவன் மனதில் எள்ளளவும் அந்த மேக்னா இல்லை.
அவன் மனம் எப்பொழுதும் என்னைத்தான் சுற்றிக் கொண்டிருந்திருக்கிறது.
அதை புரிந்து கொள்ளாமல் நான் தான் அவனை
தவிக்க விட்டுவிட்டேன். எனக்காக எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறான். அந்த அளவுக்கு அவன் என்னை காதலிக்கிறான்...”
என்று மனம் பூரித்து போனவள்
“ஐ லவ் யூ அம்மு..ஐ லவ் யூ சோ மச்...இனிமேல்
உன்னை விட்டு ஒருநாளும் இல்லை ஒரு நொடியும் நான் பிரிந்திருக்க மாட்டேன். ஐ லவ் யூ
டா...”
என்று தழுதழுத்தவள் அவன் எதிர்பாராத
விதமாய் அவன் இதழ்களோடு தன் இதழ்களை ஜோடி சேர்த்து, ஆழமாய், அழுத்தமாய், வன்மையாய் அணைத்திருந்தாள் சத்யா.
தன்னவளின் இந்த எதிர்பாராத செய்கையை கண்டு
இன்பமாய் அதிர்ந்தவன் அவள் இடையோடு பற்றி இன்னுமாய்
இறுக்க அணைத்துக் கொண்டவன் தாபகத்தோடு அவள் கொடுத்ததை திருப்பி கொடுத்தான்.
அவளைப் போல அவளின் அதரங்களோடு மட்டும்
நின்று விடாமல் அவளின் முகம் எங்கும் ஊர்வலம் சென்றன. பின் அவனின் அழுத்தமான இதழ்கள்
இன்னுமாய் மோகம் கொண்டு, பெண்ணவளின் முகம் என்ற எல்லையை தாண்டி அவளின் சங்கு
கழுத்திற்கு இறங்கியது.
தன்னவனின் மோகத்தில், அவன் வேகத்தில் பெண்ணவளும் இலகி கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டே
இருக்க, அவனின் தீண்டலுக்கு அவளிடம் இருந்து வந்திருந்த
சம்மதத்தை உணர்ந்து கொண்டவன், இன்னுமாய் தாபத்துடன் தாம்பத்திய ஆட்டத்தில் முன்னேறினான்.
அந்த ஆட்டத்தில் பெண்ணவளும் மொத்தமாக
தன் வசம் இழந்திருக்க, அவளின் ஆடையை முழுவதுமாக கலைந்தவன் தன்னவளுடன்
ஒன்றர கலக்க முயல, அடுத்த நொடி அதுவரை இலகியிருந்த சத்யாவின் உடல் விறைக்க
ஆரம்பித்தது.
தன்னவனின் மெய் தீண்டலில், உருகி கரைந்து குழைந்து கிறங்கி போய் இருந்தவளுக்கு அந்த நொடி வந்து
தொலைத்தது அந்த சிறு வயது சம்பவத்தின் நினைவு சுவடுகள்.
இதே போல அன்றும் அவள் கட்டிலில் கிடக்க, அவளருகே அந்த மூர்த்தி
கோணலாக சிரித்தபடி அமர்ந்திருந்தது நினைவு வர, அதன்
அருவருப்பில் சுருங்கியது அவள் முகம்.
அவ்வளவுதான்...அடுத்த நொடி இப்பொழுது அவள்
இருக்கும் கோலம் மண்டையில் உறைக்க, அடுத்த நொடி தாடை இறுக, உடல் விறைக்க, நோஓஓஓஓஓஓஓஓஓஓஓ என்று அலறியபடி, தன்மீது படர்ந்திருந்தவனை பலம் கொண்ட மட்டும் பிடித்து தள்ளினாள் சத்யா.
பின் படுக்கையில் மறுபுறமாக உருண்டவள், அங்கே கலைந்து கிடந்த தனது
ஆடைகளை அள்ளிக்கொண்டு அருகிலிருந்த குளியலறைக்கு ஓடிவிட்டாள்...
அதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனான் அமுதன்...!
Comments
Post a Comment