நிலவே என்னிடம் நெருங்காதே!!-2
இந்த நாவல் ஆடியோ நாவலாக என்னுடைய சேனலில் வெளிவந்துள்ளது. இந்த கதையை ஆடியோ வடிவில் இனிய குரலில் கேட்டு மகிழ, என்னுடைய சேனலை கிளிக் பண்ணுங்க...அப்படியே மறக்காமல் சப்ஸ்க்ரைப் பண்ணுங்க...! அடுத்த அத்தியாயத்தில் விரைவில் சந்திக்கலாம்...நன்றி!!!
https://www.youtube.com/channel/UCEYI0t-vckRAOhGYxxEf7nQ
அத்தியாயம்-2
அதே நேரம் காரின் முன்னால் டேஸ்போர்டில்
வைத்திருந்த அவனுடைய ஐபோன் அழைத்தது அவனை.. அதை பார்க்காமலயே அழைப்பது யாரென்று
தெரிந்தது..
“சே..
ஸ்பீக் ஆப் தி டெவில் அன்ட் தி டெவில் அப்பியர்ஸ்..” என்ற மாதிரி இந்த டெவிலுக்கு
நூறு ஆயுசு... இல்ல...அவர் இருக்கும் தோரணையை பார்த்தால் இன்னும் 150 வருசத்துக்கு
கூட வாழ்ந்து என் உயிரை எடுப்பாராக்கும்... “ என்று புலம்பியவன் அந்த அழைப்பை
ஏற்காமல் விட்டு விட்டான்..
மீண்டும்
விடாமல் அழைக்க, அதில் எரிச்சலானவன்
“சே,, இந்த சனியன அங்கயே விட்டுட்டு
வந்திருக்கணும்.... மனுசன் எங்க போனாலும் நிம்மதியா இருக்க விடமாட்டேங்குது .. “
என்று தன் அலைபேசியை முறைத்தவன் அதில் இருந்த பட்டனை அழுத்தி
“ஹ்ம்ம்ம்ம்
சொல்லுங்க.. “ என்றான் ஆத்திரம் எரிச்சல் கோபம் என்று எல்லாம் கலந்து அதை எல்லாம் வெளிகாட்டாமல்
அடக்கிய குரலில்.......
“எங்கடா
இருக்க? “ என்று கர்ஜித்தது மறுமுனையில் இருந்தவரின் குரல்..
அந்த
குரலில் இருந்தே அவர்தான் அவனை ஆட்டி வைப்பவர் என்று புரிந்தது..
“நான்
எங்க இருந்தா உங்களுக்கென்ன?
அதான் நீங்க நினைச்சதை சாதிச்சுட்டீங்களே.. நீங்க சொன்னதைத்தான செஞ்சுட்டேனே.
அப்புறம் என்ன? “ என்று சிடுசிடுத்தான்...
“வெறும்
தாலி மட்டும் கட்டிட்டு போய்ட்டா போதுமா?
மற்ற சம்பிரதாயமெல்லாம் இருக்குடா.. கங்கணத்தை கூட கழட்டாம அப்படி என்ன தலை போற அவசரம்..? இன்னும் அரை மணி நேரத்தில நீ என்
முன்னாடி இருக்கோணும்.. சீக்கிரம் வந்து சேரு.. “ என்று கட்டளை இட்டார்..
“இல்ல..
என்னால வரமுடியாது... நீங்க சொல்றதுக் கெல்லாம் என்னால தலை ஆட்ட முடியாது.. “ என்று அவருக்கு இணையாக
குரலை உயர்த்தினான் அந்த நெடியவன்..
“என்னடா
குரலை உசத்தற...?
ஒரு பொண்ணுக்கு தாலி கட்டி புருஷனாகிட்ட உடனேயே பெரிய மனுஷன் ஆகிட்டிங்களோ? இந்த தாத்தாகிட்டயே குரலை உசத்தி பேசற
அளவுக்கு அதுக்குள்ள வளந்துட்டியா...?
உன்னை
பெத்த உன் அப்பன் அவனே இன்னும் எனக்கு பயந்து கிட்டு என்னை நிமிர்ந்து பாத்து
பேசமாட்டான்.. நேத்து வந்த பொடிப் பய நீ... நீ எனக்கு எதிரா குரலை
உசத்தறியாக்கும்... !! “ என்றார் நக்கலாக
சிரித்தவாறு
ஆனால்
அந்த சிரிப்பிலும் ஒரு கட்டளை இடும் தொனி இருந்தது.... அதில் இன்னும் எரிச்சலானவன்
“இப்ப
என்னதான் செய்யணும்? “ என்றான்...
“அப்படி
வாடா வழிக்கு !! “ என்று
உள்ளுக்குள் சிரித்து கொண்டவர்
“எந்த
வேகத்தில காரை எடுத்துகிட்டு விரட்டிகிட்டு போனியோ அதே வேகத்தில திரும்ப
வூட்டுக்கு வரோணும்.. அடுத்த அரை மணி நேரத்தில நீ என் முன்னாடி இருக்கணும்..
அம்புட்டுதான்.. போனை வச்சுடறேன்.. “ என்றவர் அவன் பதிலுக்கு கூட காத்திராமல் போனை
அணைத்தார்...
“சே....
“ என்று கை முஷ்டி இறுக ஸ்டியரிங் ல்
ஓங்கி குத்தினான்.. தன் நீண்ட காலை அந்த காரிலயே எட்டி உதைத்தான்.. ஆனாலும் அவன்
கோபம் அடங்குவதாக இல்லை..
“இவர் எப்பதான்
அடங்குவாரோ? மற்றவர்கள் எல்லாம் 85 வயசில்
எழுந்திருக்கவே சிரமபட்டு கொண்டிருக்க,
இவர் மட்டும் இன்னும் நட்டமாக நடமாடிகிட்டு இருக்காரே..!! நடமாடறது மட்டுமா/? இந்த குடும்பத்தையே அவரல்லவா ஆட்டி
வச்சுகிட்டு இருக்கார்...!!
தனக்கு
வயசாகிடுச்சே... தனக்கு அடுத்து தோளுக்கு
மேல வளர்ந்த பேரன்கிட்ட பொறுப்பை எல்லாம் கொடுத்துட்டு விலகிக்கணும்னு கொஞ்சம் கூட உறைக்காம இன்னும்
மைனர் மாதிரி வீட்டுக்குள்ள நாட்டாமை மாதிரி கொடி புடிச்சிகிட்டு இருக்கறாரே..”
என்று எரிச்சலாக வந்தது..
“அவர்
எப்படியோ போய் தொலையட்டும்.. என் லைனில்
குறுக்க வராமல் இருந்திருந்தால் போதுமா இருந்திருக்கும்..
இப்ப
பார்த்தால் என் வழியில் குறுக்க வந்ததோடு பெரிய தடுப்பு அணையையும் அள்ளவா கட்டி விட்டார்.. இனி என் வாழ்க்கை பாதை
எப்படி செல்லும்?
எவ்வளவு
ஜாலியாக காரில் வேகமாக போய்கிட்டிருந்த நெடுஞ்சாலையில் திடீரென்று வந்த தடுப்பை போல நொடியில் தன் வாழ்க்கையையே
மாற்றி விட்டாரே...!
இது
என்னோட வாழ்க்கை மட்டும் அல்ல.. அதில் நிலாவின் வாழ்க்கையும் அல்லவா சேர்ந்து
இருக்கு.. அவளுக்கு நான் என்ன பதில் சொல்வது?
முதலில் அவள் இல்லாமல் நான் வாழ முடியுமா? “
என்று எண்ணும் பொழுதே அவன் ஐபோன் மீண்டும் அழைத்தது..
சற்று
முன் நாராசமாய் அவன் காதில் ஒலித்த அதே அழைப்பு மணி இப்பொழுது இன்பமாய் தேனருவியாய் அவன் காதில் பாய்ந்தது..
மனதுக்குள் சுழன்று கொண்டிருந்த சுனாமி அப்படியே அடங்கி போய் தென்றல் வீச
ஆரம்பித்தது...
இறுகிய
உதடுகள் தளர்ந்து போய் மெல்லிய குறுநகை தவழ ஆரம்பித்தது..கை தானாக நீண்டு அந்த அலைபேசியின் பட்டனை தட்ட
அடுத்த நொடி
“ஹாய்
பேபி.... ஹௌவ் ஆர் யூ..? “ என்று குழைந்து ஒலித்தது அவளின் குரல்.. அந்த குரலை
கேட்டதுமே அதுவரை முறுக்கி கொண்டிருந்த அவன் தசைகள் இலகிட, செவி வழி சென்று அவன் உயிரையும்
தீண்டியது அந்த குரல்...
உதட்டில்
புன்னகை இழையோட
“ஹாய்
ஹனி... ஐம் ஓகே... ஹௌவ் ஆர் யூ டார்லிங்..? “ என்று உருகினான்..
“ஹ்ம்ம்
ஐம் நாட் பைன்... உன்னை பார்க்காமல் ரொம்ப போர் அடிக்குது டா...எங்க பார்த்தாலும்
உன் மூஞ்சே தெரியுது.. ஐ மிஸ் யூ..ஐ மிஸ் யூ லாட்... ஐ வான்ட் டு ஹக் அன்ட் கிஸ்
யூ...” என்று செல்லமாக சிணுங்கினாள்...
“ஹே...
இது ரொம்ப மோசம். நான் எத்தன தரம் கிஸ் பண்ண சொல்லி கெஞ்சியிருக்கேன்.. அப்பல்லாம்
மறுத்துட்டு இப்ப கிஸ் பண்றியாக்கும்? “
என்று உல்லாசமாக சிரித்தான்...
“ஹ்ம்ம்ம் அப்பல்லாம் உன் அருமை எனக்கு
தெரியல பேபி... நீ இல்லாத இந்த இரண்டு நாளில்தான் புரிஞ்சுது நான் உன்னை எவ்ளோ லவ்
பண்றேனு...
ஐ
மிஸ்ட் யு லாட்... ஐ லவ் யூ சோ மச்... உம்மா.............. “ என்று அந்த அலைபேசிக்கு அழுத்தமாக முத்தமிட்டாள்
மறுமுனையில் இருந்தவள்..
அவள்
முத்தத்தின் சத்தம் அப்படியே இங்கு கேட்க,
அவன் உடல் சிலிர்த்து போனது.. அவன் பளிங்கு கன்னத்தில் அவள் இதழ் பதித்த அந்த
உணர்வு அப்படியே அவனுள் பரவியது..
கண்
மூடி அந்த சுகத்தை அனுபவித்தான்..
“ஹே
பேபி... லைன்ல இருக்கியா..?
“ என்று அவள் கத்தவும்
“ஹ்ம்ம்ம்
இருக்கேன் ஹனி.. உன் கிஸ் இஸ் சோ நைஸ்.. ஐ பெல்ட் தட் இன் மை சிக் பேபி.. “
என்றான் உணர்வுகள் பொங்க...
“ஹ்ம்ம்ம்
எனக்கும் தான் டா... உன் சிக் சோ சாப்ட்... ஐ வான்னா பைட் யூ... “ என்று இன்னும் காதலருக்கே உரித்தான கொஞ்சல்ஸ் எல்லாம்
சேர்த்து கொஞ்சினாள் அந்த பைங்கிளி..
அதை
எல்லாம் கேட்டு அப்படியே உருகி போனான் அந்த நெடியவன்... சிறிது நேரம் அவனை கொஞ்சி
முடித்தவள்
“பேபி....
நாம இப்பவே மேரேஜ் பண்ணிக்கலாமா?
என்னால இனிமேல் உன்னை விட்டு இருக்க முடியாது பேபி.. ஐ நீட் யூ இம்மீடியட்லி....
இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம்.... “ என்று
சிரிப்போடு வெட்கமும் கலந்து ஒலிக்க,
அதை கேட்டதும் திடுக்கிட்டு போனான்...
ஒரு
மணி நேரம் முன்பு அந்த மங்கள நாணை எடுத்து தன் கரங்களால் மற்றொருத்தியின்
கழுத்தில் கட்டியது கண் முன்னே நினைவு வந்தது...
அப்பொழுதுதான்
அவன் நிலையும் அவன் மண்டையில் உறைத்தது..
இப்பொழுது
அவன் வேற ஒருத்தியின் கணவன்....!
அம்மி
மிதித்து அருந்ததி பார்த்து அவள் கை பிடித்து அக்னியை வலம் வந்து வேற
ஒருத்திக்கு கணவனாகியவன்.. இல்லை... இல்லை...
கணவனாக்கப்பட்டவன்... அவன் விருப்பத்தை கேளாமலயே அவனை கட்டாயபடுத்தி
அவளுக்கு கணவனாக்க பட்டவன்...
அவனும்
சூழ்நிலை கைதியாகி விட, மூளை வேலை நிறுத்தம் செய்து விட, மற்றவர்கள் மகுடி கொண்டு ஆட்டி
வைக்கும் மட பாம்பாக மலுங்கிப் போய் அவளின் கழுத்தில் தாலியை கட்டி விட்டான்...
ஆனால்
இப்பொழுது அறிவு விழித்து கொண்டது... சினம் கொண்டு எழுந்த அந்த நல்ல பாம்பை போல
இப்பொழுது உள்ளுக்குள் சீறி கொண்டு இருந்தான்...
“ஹாய்
பேபி..... என்னடா சத்தத்தையே காணோம்...? நான் மேரேஜ் பண்ணிக்கலாம்னு சொன்னதும் உடனே
ட்ரீம்க்கு போய்ட்டியாக்கும்?
என்ன கனவுலயே நமக்கு கல்யாணம் ஆகிடுச்சா?
கல்யாணம்
மட்டும்தானா? இல்ல அதுக்கும் மேல பர்ஸ்ட் நைட் ம்
முடிஞ்சிடுச்சா..? ஹே பேபி... நான் எப்படி வந்தேன் உன்
பர்ஸ்ட் நைட் ரூம்க்க்கு?
என்ன ட்ரெஸ் போட்டிருந்தேன்?,,, “
என்று வெட்கம் கலந்து சிரித்தவாறு வழவழத்தாள்...
அதை
கேட்டவனுக்கோ எரியற நெருப்பில் நெய்யை ஊற்றியதை போல, அவன் உள்ளே எரிந்து கொண்டிருந்த தனல் இன்னும் காட்டுத் தீ போல
வேகமாக சுழற்றி அடித்தது அவன் உள்ளே....
“இவளை
எப்படி மறந்தேன்? அத்தனை பேர் என் காலில் விழுந்தாலும்
இவளை நினைத்து அவர்களை எல்லாம் உதறி இருக்க வேண்டாமா?.”
அப்படி
உதறித்தான் இருந்தான் ஆரம்பத்தில்.. யாருக்கும் அடங்காமல் யார் கெஞ்சியும்
கேட்காமல் சிங்கமாக கர்ஜித்து கொண்டுதான் இருந்தான்..
அவன்
கர்ஜனை எல்லாம் அந்த கிழட்டு சிங்கம் வரும் வரைக்கும் தான்.... அந்த கிழட்டு
சிங்கம் வந்து என்னடா?
என்ற ஒரு வார்த்தையில் சிங்கமாக கர்ஜித்தவன் பூனையாக அடங்கி விட்டான்...
படம்
எடுத்து பாம்பாக சீறியவன் பல் போன பொட்டி பாம்பாக அடங்கிவிட்டான்.. அடுத்து அவர்
சொன்னதுக் கெல்லாம் ஆடி விட்டான்..
ஆனால்
அதன் விளைவு இப்பொழுது மண்டையில் உறைத்தது.....
“ஹே
பேபி... என்ன இன்னைக்கு ஓவர் சைலன்ட் ஆ இருக்க....? சாரி டா... நீ ரொம்ப பிசியா
இருக்கியா? நடுவுல டிஸ்டர்ப் பண்ணிட்டனா? மேரேஜ் எல்லாம் நல்ல படியா முடிஞ்சுதா?
சீக்கிரம்
வந்திடுடா.. உன்னை பார்க்காமல் என்னால இருக்கவே முடியல. மிஸ் யூ.... லவ் யூ சோ
மச்... உம்மா.... சரி நான் வச்சுடறேன்.. நீ நேரம் இருக்கறப்ப எனக்கு போன்
பண்ணு.... லவ் யூ புருஷா..... “ என்று கிளுக்கி சிரித்தவள் மீண்டும் முத்த மழை
பொழிந்து அலைபேசியை அணைத்தாள்....
அவள் அலைபேசியை அணைத்து சில நிமிடங்களுக்கு பிறகும்
அவளின் கொஞ்சல்ஸ் ம் அவள் கொடுத்த முத்தமும் அவன் உள்ளே சுழன்று கொண்டுதான்
இருந்தன....
அவளின்
அந்த சிரித்த முகம், கண்களில் காதலுடன் அவனுக்காக ஏங்கி
தவிக்கும் காதல் முகம் கண் முன்னே வர,
“ஓ
காட்.... இவளை எப்படி நான் இழப்பது?
இவள் என் மனைவி இல்லையா? “ என்று எண்ணும் பொழுதே அவன் உடலில்
ஒவ்வொரு செல்லும் வலிக்க, கூடவே அந்த கிழவரின் முகமும் அவனை
பார்த்து கெக்கலி கொட்டி சிரிப்பதை போல இருக்க,
‘டேமிட்... எல்லாம் இவரால் வந்தது....
எப்படியோ சதி பண்ணி என்னை ஜெயித்து
விட்டதா மார் தட்டி கொள்கிறார்..
இல்லை....
அவரை ஜெயிக்க விடமாட்டேன்.. சதி செய்து என்னை வலையில் தள்ளிய அந்த கிழ சிங்கத்தை
விட மாட்டேன்.. அவர் எண்ணம் எப்பொழுதும் ஈடேறாது.. நான் ஜெயிக்க பிறந்தவன்....
இந்த
ஜென்மத்தில் என் நிலா தான் எனக்கு பொண்டாட்டி.... தாலி கட்டிவிட்டால் அவள் எனக்கு
மனைவியாக முடியாது.. ஆம்.. அவர் செய்த இந்த சதியை முறியடித்து என் நிலாவை என்
மனைவியாக்கி காட்டுகிறேன்....
ஷி
இஸ் மை வைப்.. மை பெட்டர் ஹாப்...மை ஸ்வீட் ஹார்ட்... மை லவ்.... “ என்று உதட்டில்
குறுநகை மின்ன காரை ஒரு திருப்பத்தில் திருப்ப,
திடீரென்று எதிர்ப்புறம் வந்த பெரிய கண்டெய்னர் லாரியின் மீது மோத வந்தது...
ஒரு
நானோ செகண்ட் ல் சுதாரித்து அனிச்சையாக கால்கள் ப்ரேக் ஐ மிதிக்க, அந்த லாரி ஓட்டுனர் ம் அனுபவம்
மிக்கவர் போல.. நொடியில் சுதாரித்து ப்ரேக் போட்டிருக்க, ஒரு நானோ புள்ளி இடைவெளியில் இரண்டு
வாகனமும் ஒன்றுக்கு ஒன்று மோதாமல் தப்பித்தது...
வெளியில்
இருந்து பார்ப்பவர்களுக்கு இரண்டு வாகனமும் மோதி நின்றதை போல ஒன்றை ஒன்று முத்த
மிட்டு கொண்டுதான் இருந்தது.. ஆனால் நல்ல வேளையாக அதற்கு மேல் முன்னேறாமல்
நின்றுவிட்டது..
அதை
கண்டு அதிர்ந்து போய் அந்த லாரி ஓட்டுனர் தன் லாரியை அணைத்து விட்டு வேகமாக
கீழறங்கி வந்தவர் காரின் பக்கவாட்டு கண்ணாடியை தட்டினார்....
அந்த
நெடியவனுமே அதிர்ச்சியில் உறைந்து நிக்க,
அவர் தொடர்ந்து கண்ணாடியை தட்டி கொண்டிருக்க,
மெல்ல சுதாரித்து கொண்டவன் பக்கவாட்டு கண்ணாடியை கீழ இறக்க ,
“என்ன
அண்ணாத்த? வூட்ல சொல்லிட்டு வந்திட்டியா? நீ பெரிய ஆடி கார் வச்சிருந்தா அதை
டெஸ்ட் பண்ண என் லாரிதான் கிடச்சுதா?
ஒரு நொடி நான் கண் அசந்து இருந்தாலும் நீ மேல போய்ருப்ப....
நான்
தான் ஹார்ன் அடிச்சிட்டே வந்தேனே அத கூட கவனிக்கல? அப்படி எந்த கோட்டைய
புடிக்கற யோசனையில வந்த? “ என்று திட்டி கொண்டே அவனை உற்று
பார்க்க, அவன் தோற்றம் கல்யாண மாப்பிள்ளை போல
இருக்க, உடனே கோபத்தை குறைத்து கொண்டவன்
“என்ன
அண்ணாத்த? புதுசா கண்ணாலம் கட்டி இருக்கியா? ஓ பொண்டாட்டி நினைப்புலதான் இப்படி
சுத்தி நடக்கறது மறந்து போச்சாக்கும்.... “ என்று காவி பற்கள் தெரிய
சிரித்தான்....
அதை
கேட்டு அதுவரை இருந்த அதிர்ச்சி மறைந்து போய் மீண்டும் அவன் முகம் இறுக
ஆரம்பித்தது..
அவன்
மனநிலை புரியாத அந்த ஓட்டுனரோ
“பாத்து
அண்ணாத்தே.. இவ்வளவு வேகம் போகாத... அப்புறம் புதுப் பொண்டாட்டி கூட முதல் இரவுல
சொர்க்கத்தை பார்க்கறதுக்கு பதிலா நேராவே
சொர்க்கத்துக்கு போய்டுவ... நல்ல வேளை.. உன் பொண்டாட்டி தாலி பாக்கியம்
தான் உன்னை காப்பாத்தி இருக்கு...
உன்
பொண்டாட்டி வந்த நேரம் தான் தலைக்கு வந்தது தலைப்பாவோட போச்சு.. இம்மாம் பெரிய ஆபத்துல இருந்து காப்பாத்தி
இருக்கு..
போனவாரம்
தான் உன்ன மாதிரியே வந்து ஒருத்தன் இதே இடத்துல வந்து வேற லாரியில மோதி அடிபட்டு
செத்தான்... நல்ல வேளை நீ தப்பிச்சுகிட்ட..
போய்
உன் பொண்டாட்டி தாலிக்கு பூ போட்டு கும்பிடு..... சீக்கிரம் வீடு போய் சேர்
அண்ணாத்த.. வரட்டா... “ என்று சிரித்தவாறு தன் லாரியை நோக்கி சென்றான்...
அவன்
பொண்டாட்டி என்று சொன்னதும் அவனையும்
அறியாமல் சற்று முன் தாலி கட்டியவளின் ஒரே ஒரு நொடி மட்டுமே பார்த்த அந்த முகம்
நினைவு வந்தது.. அதற்குள் உடனே அவன் முகத்தை அப்பொழுது வேறு பக்கம் திருப்பி
கொண்டான்....
அவள்
முகம் நினைவு வந்த அடுத்த நொடி அவனின் நிலா கண் சிமிட்டலோடு வந்து குதித்தாள் அவன்
கண் முன்னே....
தன்
நிலாவை கண்டவன்
“அவள்
ஒன்னும் என் பொண்டாட்டி இல்லை... என் நிலாதான் என் பொண்டாட்டி.. இப்பவும் எப்பவும்
என் நிலா மட்டும் தான் எனக்கு பொண்டாட்டி.. இப்ப நடந்த இந்த பொம்ம கல்யாணத்தை பொய்யாக்கி
என் நிலாவை என் பொண்டாட்டி ஆக்கி காட்டறேன்.... “
என்று
உள்ளுக்குள் சபதம் செய்தவன்
ஸ்டியரிங் ஐ கையால் ஓங்கி குத்தினான்..
அதற்குள் அந்த லாரி ஓட்டுனர் காரை பின்னால் எடுக்க சொல்லி ஹார்ன் பண்ண, அதில் சுதாரித்தவன் தன் காரை கொஞ்சம் பின்னால் நகர்த்தி அவன் திரும்ப வேண்டிய பாதைக்கு வந்ததும் மீண்டும் தன் ஆத்திரத்தை எல்லாம் திரட்டி முறுக்கினான் தன் வீட்டை நோக்கி.......
Comments
Post a Comment