உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-58

 


அத்தியாயம்-58

திகாலை ஜில்லென்ற காற்று சன்னல் வழியாக வந்து தன் முகத்தில் பட்டு சிலிர்க்க, அதில் துயில் கழைந்தவள் இந்த நாள் இனிய நாளாக இருக்கட்டும் என்று மனதுக்குள் சொல்லியவாறு புன்னகையுடன் கண் விழித்தாள் பவித்ரா...

கண் விழித்ததும் வழக்கம் போல எழுந்து குளியலறைக்குள் சென்று ரெப்ரெஸ் ஆகி கையில் பிரஸ் உடன் வெளியில் வந்து அங்கு இருந்த சன்னல் அருகில் நின்று கொண்டு வெளியில் தோட்டத்தை ரசித்தபடியே பல் துலக்கினாள்...

அப்பொழுது தான் நினைவு வந்தது நேற்றைய சம்பவங்கள்... கூடவே  தன் கணவன் தன்னிடம் கோபித்து கொண்டு இருப்பதும் அவள் அத்தனை முறை முயன்றும் அவள்  அழைப்பை ஏற்காததும் தொடர்ந்து அவள் அவனுக்கு மன்னிப்பு வேண்டி மெசேஜ் அனுப்பியதும் நினைவு வந்தது...

“அப்ப நான் நைட் ஹால் ல தான இருந்தேன்... எப்படி இங்க வந்தேன்??  “என்று யோசித்தவளுக்கு தன் கணவன் தான் தூக்கி வந்திருப்பான் என்று புரிய அவள் இதழில் புன்னகை விரிந்தது..

“டேய்.. நெட்டை..அப்ப உன் கோபம் எல்லாம் அவ்வளவுதானா??  சே!!  நான் வேற, எப்படி எல்லாம் புருசனை கன்வின்ஸ் பண்றதுனு கூகுல் ல தேடி ஒரு  லிஸ்ட் பிரிபேர் பண்ணி வச்சிருந்தா அதெல்லாம் வேஸ்ட் போல இருக்கே..   

என்று சிரித்து கொண்டவள் குளியலறைக்குள் சென்று பல் துலக்கி முடித்து வேகமாக வெளியில் வந்தவள் தன் அலைபேசியை ஆர்வமாக எடுத்து பாத்தாள் தான் அனுப்பிய இலட்சம் சாரிக்கு என்ன பதில் அனுப்பி இருக்கான் என்று பார்க்க....

அலைபேசியை எடுத்தவள் பார்வையை ஓட்ட, பெருத்த ஏமாற்றம் அவளுக்கு.. அவன் பதில் எதுவும் அனுப்பியிருக்கவில்லை.. ஆனால் அவன் தன் மெசேஜை படித்ததாக காட்ட

“ஓ.. அப்ப சார் இன்னும் கோபமாதான் இருக்கானா?? “என்று யோசித்து கொண்டிருக்கும் பொழுதே அவளுக்கு மெசேஜ் வந்தது ... ஆவலாக அதை பார்க்க,

Have to go to conference today. Get ready fast”  என்று அனுப்பி இருந்தான்..

வழக்கமாக அவன் செல்லமாக கொஞ்சும் பேபி மிஸ்ஸிங்... அதில் இருந்தே அவன் இன்னும் கோபமாக இருப்பது புரிய, எதுக்கும் செக் பண்ணலாம் என்று அவன் எண்ணிற்கு அழைத்தாள்...

ஆனால் அடுத்த செகண்ட் ஏ அவள் அழைப்பை துண்டித்தான்... மீண்டும் அழைக்க, அவன் மீண்டும் ஏற்கவில்லை...

“டேய் நெட்டை.. ரொம்பத்தான் பண்ற.. ஏதோ தெரியாம பண்ணின தப்புக்கு அவ்வளவு தூரம் சாரி சொல்லியும் நீ இன்னும் இறங்கலையா??  இனிமேல் உனக்கு இந்த வழி  ஒத்து வராது...

வேற ரூட்ல போய்தான் உன்னை மடக்கனும்.. இனிமேல் பார் இந்த பவித்ரா ஆட்டத்தை.. “ என்று மனதுக்குள் சிரித்து கொண்டவள் மீண்டும் எழுந்து வந்து சன்னல் வழியாக தோட்டத்தை பார்க்க, அங்கு ஆதி தன் காலை ஓட்டத்தை முடித்து கொண்டு வீட்டிற்குள்  வந்து கொண்டிருந்தான்...

அதை கண்டவள் அவசரமாக ஏதோ திட்டம் போட்டவள் தன் வார்ட் ரோபை திறந்து அன்று அணிய வேண்டிய ஆடையை எடுத்து வைத்து விட்டு அவசரமாக குளியலறைக்குள் ஓடினாள்...

வேகமாக குளித்து முடிக்கவும் ஆதி  தன் அறைக்கு திரும்பி வந்த அரவம் கேட்க, உள்ளே இருந்து கொண்டு தலையை மட்டும் வெளியில் நீட்டி,

“பாஸ்... டவல் ஐ மறந்து வந்துட்டேன்.. அத கொஞ்சம் எடுத்து கொடுங்களேன்... “ என்று வேகமாக கத்தினாள்...

அப்பொழுது தான் உள்ளே வந்த ஆதி அவள் குளியல் அறையில் இருந்து டவல் கேட்டு கத்தவும், 

“இவ்வளவு நாளா இது  மாதிரி அவ  கேட்டதில்லையே.. இன்னைக்கு எதுக்கு புதுசா டவல வச்சுட்டு போய் எடுத்து தர சொல்றா?? வேற ஏதாவது பிளான் பண்ணியிருக்காளோ?? ஆதி , எதுக்கும் உசாரா இருந்துக்கோ...

அவ என்ன பண்ணினாலும் அவ கிட்ட சரண்டர் ஆகிடாத.. ஒரு இரண்டு நாளைக்காவது அவள உன் பின்னாடி சுத்த வைக்கனும்... “ என்று  அவனுக்கு கொம்பு சீவியது அவன் மனசாட்சி....

“பாஸ்.. சீக்கிரம் எடுத்து கொடுங்க..எவ்வளவு நேரம் இப்படியே நிக்கறது..  ரொம்ப குளிருது.. சீக்கிரம் வாங்க.. “ என்று மீண்டும் கத்த,

அவனும் அருகில் இருந்த அவள் டவலை எடுத்து கொண்டு சென்று கொஞ்சமாக திறந்திருந்த கதவின் வழியே உள்ளே நீட்டினான்...

அதை  வாங்கியவள் வேண்டுமென்றே அவன் கையில் குறுகுறுப்பை மூட்ட உடனே அவன் கையை இழுத்து கொண்டு அவளை முறைத்தவாறே திரும்பி வந்தான்...

பின் தன்  வார்ட்ரோபிற்கு சென்று  அவன் அணிய வேண்டிய  ஆடையை தேடி கொண்டிருந்தவன் எதேச்சையாக  திரும்ப அப்படியே  பிரீஸ் ஆகி நின்றான்...

அங்கே பவித்ரா வெறும் டவலை மட்டும் கட்டிகொண்டு வெளியில் வந்து அவள் எடுத்து வைத்திருந்த  புடவையை கட்டுவதற்கு கையில் எடுத்து கொண்டிருந்தாள் அவனை ஓரக் கண்ணால் பார்த்தவாறு...

இந்த மாதிரி தோற்றத்தில அவளை பார்த்திராதவன் கிறங்கித்தான் போனான் சில விநாடிகள்...

அவளையே இமைக்க மறந்து பார்த்து கொண்டிருக்க, அதற்குள் விழித்து கொண்ட அவன் மனசாட்சி

“டேய் ஆதி.. இந்த குட்டச்சி என்னவோ பிளான் பண்ணியிருக்கா.. இல்லைனா எப்பவும் குளித்ததும் அங்கு இருக்கிற இன்னொரு அறையிலயே ட்ரெஸ் பண்ணிகிட்டு வர்றவ இன்னைக்கு எதுக்கு இங்க வந்திருக்கா??...அதுவும் இந்த கோலத்துல...

ம்ஹூம்.. இது சரியில்லை.. நீ கவுந்திராத.. “ என்று அவன் மனஸ் அவனுக்கு மீண்டும் அபாய சங்கை ஊத, அதில் விழித்து கொண்டவன்

“ஏய்.. என்னடி பண்ற??   எதுக்கு இப்படி அரை குறையா வந்திருக்க?? அதான் உள்ளயே இடம் இருக்கு இல்ல... அங்கயே மாத்திகிட்டு வர வேண்டியது தான?? இப்படி வந்து நிக்கறியே உனக்கு வெக்கமா இல்ல?? “என்று முறைத்தான்...

ஹீ ஹீ ஹீ.. புடவைய இங்கயே வச்சுட்டு போய்ட்டேன் பாஸ்...

அப்புறம் என்ன கேட்டீங்க?? வெக்கமா இல்லை னா?? என் புருசன் முன்னாடி தான கட்டறேன்.. நான் எதுக்கு வெக்க படணும்... வேணும்னா உங்களுக்கு வெக்கமா இருந்தா கண்ணை மூடிக்கங்க... “ என்று அவன் புறம் திரும்பி கண் சிமிட்டி குறும்பாக சிரித்தாள்...

அவளின் முன்னழகிலும் கன்னம் குழிய சிரித்த குறும்பு சிரிப்பிலும்  இன்னுமாய்  கவிழ்ந்து தான் போனான் ஆதித்யா...கொஞ்சம் கொஞ்சமாக அவள் பக்கம் சாய தொடங்கியது அவன் மனம்..

அதற்குள் அவன் மனசாட்சி நங் கென்று ஓங்கி அவன் தலையில் கொட்டு வைக்க, அடுத்த கணம் தன் தலையை உலுக்கி கொண்டவன், சிலிர்த்துக்கொண்டு

ஹ்ம்ம்ம் என்னமோ பண்ணித் தொலை... நான் குளிச்சிட்டு வர்றதுக்குள்ள சீக்கிரம் ரெடியாகி இரு.. டைம் ஆகுது.. “ என்று அவளை முறைப்பதை போல கஷ்ட பட்டு நடித்து,  பின் குளியலறைக்குள் வேகமாக சென்று புகுந்து கொண்டான் ஆதி...

அதை  கண்ட பவித்ரா

“ஓடுங்க பாஸ்.. எவ்வளவு தூரம் ஓடறீங்கனு நானும் பார்க்கறேன்.. “  என்று  உள்ளுக்குள் சிரித்து கொண்டே தயாராக ஆரம்பித்தாள்...

குளியலறைக்குள் புகுந்தவன் ஷவரை திறந்து அடியில் நிக்க, அவளின் சற்று முன் கண்ட தோற்றமே கண் முன்னே வர, அதில் சிலிர்த்தவன் பின் வேகமாக தன் குளியலை முடித்து வெளியில் வந்தான்...

இப்பொழுது இடுப்பில் டவலை கட்டியவாறு ஆதி வெளியில் வர, அவனின் பரந்து விரிந்திருந்த வெற்று மார்பையும், உருண்டு திரண்டிருந்த புஜங்களையும் ஓரக் கண்ணால் கண்டவள், அவன் அழகில், அவன் ஆண்மையில் மயங்கி சொக்கி போனவள், தன்னவனையே இமை தட்டி ரசித்து பார்த்தாள்...

அவன் அவள் புறம் திரும்புகிற மாதிரி இருக்க, உடனே தன் கள்ளப் பார்வையை மாற்றிக் கொண்டவள், அவனை காணாதவளாய், கண்டு கொள்ளாதவளாய்,  தன் வேலையை தொடர்ந்தாள்...

ஆதியும் அவன் எடுத்து வைத்திருந்த ஆடையை அணிந்து கொண்டு தயாராகி வர

அதற்குள் தயாராகி இருந்தவள் வழக்கமாக ஆதி அவளுக்கு பண்ணி விடும் மேக்கப் ஐட்டங்களை எடுத்து கையில் வைத்து கொண்டு அவனுக்காக காத்து கொண்டிருந்தாள்...

அவனோ  அவள் புறமே  திரும்பாமல், அவளை கண்டு கொள்ளாதவனாய் போக்கு காட்டி கொண்டிருக்க,  சிறிது நேரம் பொறுத்தவள், பின்

“பாஸ் ஒரு சின்ன ஹெல்ப்.. இந்த ஐ ஷேட் கரெக்ட் ஆ வே  வர மாட்டேங்குது.. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன்.. “ என்றாள் முகத்தை பாவமாக வைத்து கொண்டு.

“ஏய்.. அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல... இப்படியே வா..டைம் ஆகுது “ என்றான் சிடுசிடுத்தவாறு..

“அதெப்படி பாஸ்.. மல்டி மில்லினர், தி கிரேட் ஆதித்யா நிஷாந்த் ஓட பொண்டாட்டி... மேக்கப் இல்லாம சிம்பிளா வந்தா யார் மதிப்பா??... நீங்க சும்மா பிகு பண்ணாம போட்டு விடுங்க.. “என்று எழுந்து அவன் முன்னே வந்து நின்றாள்...

“ஐயோ.. இப்படி படுத்தறாளே இன்னைக்கு.. நான் கிட்ட வந்தப்ப எட்டி எட்டி போனவ... இப்ப இவளே தானா கிட்ட வர்றாளே.. இவகிட்ட இருந்து என்னை காப்பாத்தறதே பெரும் பாடாயிருக்கும் போல... “ என்று  மனதுக்குள் புலம்பியவன்

“சரி.. கொடுத்து தொலை.. “ என்று அவள் கையில் இருந்த ஐட்டங்களை வாங்கியவன் அவள் முகத்திற்கு ஒப்பனை செய்தான்... அவள் கையில் இருந்த லிப்ஸ்டிக் ஐ எடுத்து அவள் இதழில்  தடவியவன் திரண்டு சிவந்திருந்த  அவள் இதழையே ஏக்கமாக பார்த்தான்...

அவளின் செவ்விதழை வருட துடித்த தன் கரங்களை கஷ்டபட்டு கட்டுபடுத்திக் கொண்டான்...

ஒரு வழியாக அவளுக்கு மேக்கப் ஐ போட்டு   முடித்ததும், தன் கையில் இருந்த கண்ணாடியில் சரி  பார்த்தவள்

“ம்ஹும்.. என்ன பாஸ்.. லிப்ஸ்டிக் ஐ இப்படி தடவியிருக்கீங்க??.. ஈவனாவே இல்ல.. இப்படி தடவணும்.”  என்று அவன் கையை எடுத்து அவள் உதட்டில் வைத்து அவன் எப்பவும் அவளுக்கு லிப்ஸ்டிக் போட்டபின் அவள் இதழை வருடுவதை போல வருடினாள்....

அவளின் செவ்விதழின்  மென்மையால் இன்னும் போதை ஏறி போக ,

“பாவி.. நான் செஞ்சப்ப எல்லாம் எப்படி முறுக்கி கிட்டு போனா... இப்ப பார்.. நானே என்னை கட்டுபடுத்திகிட்டு இருக்கிறப்ப வேணும்னே என்னை சீண்டறாளே... ராட்சசி... “ என்று உள்ளுக்குள் கருவியவன்

“நீ என்னதான் பண்ணினாலும் இந்த ஆதித்யா மயங்க மாட்டான் டி பூனகுட்டி... “ என்று உள்ளுக்குள் சபதம் எடுத்தவன் அவன் கையை வெடுக் கென்று பிடுங்கி கொண்டு

“எல்லாம் நல்லாதான் இருக்கு... வா போகலாம்.. “ என்றவாறு  முன்னே நடந்தான்...

பவித்ராவும் குறும்பாக சிரித்தவாறு கண்ணாடியில் மீண்டும் ஒரு முறை தன்னை சரி  பார்த்து கொண்டு அவன் பின்னே ஓடினாள்...

காரை அடைந்ததும் அவள் முன் இருக்கையில் ஏறி அமர, ஆதி ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து விறைப்பாக காரை ஸ்டார்ட் பண்ணி கிளப்பி சென்றான்..

மறந்தும் அவள் பக்கம் திரும்பவில்லை...

சிறிது நேரம் அவனையே நேராக பார்த்து வந்தவள் அவன் திரும்புவதற்காக, அவள் பக்கம் பார்ப்பதற்காக என்னென்னவோ செய்ய அவனோ அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் சாலையை மட்டும் பார்த்து காரை செலுத்தி கொண்டிருந்தான் அதே விறைப்புடன்...

கார் சிறிது தூரம் சென்றதும் காரில் இருந்த இளையராஜாவின் பாடலை ஒலிக்க விட்டு அவன் அருகில் நெருங்கி அமர்ந்து அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் பவித்ரா...

அவளின் சேட்டையை மனதுக்குள் ரசித்து வந்தவன் அவளின் செயலை கண்டு இன்னும் அதிசயித்தான்...

“குட்டச்சி... நல்லா அனுபவி.. இப்பயாவது என்கிட்ட வரணும்னு தோணிச்சு இல்ல.. இன்னும் கொஞ்சம் இந்த மாமனுக்காக ஏங்குவியாம்....  “ என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டே அவளை கண்டு கொள்ளாமல் தன் வேலையில் கவனமக இருந்தான்...

கார் அந்த பெரிய அடுக்கு மாடி வணிக கட்டிடத்தை அடைய, அதன் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு கீழ  இறங்கியவன் அவளுக்காக காத்திருக்காமல் நேராக அந்த கட்டிடத்திற்குள் நுழைந்தான்...

அவன் எப்படியும் தனக்காக காத்திருப்பான் என்று எண்ணி மெதுவாக கீழ இறங்கியவள் அவன் நிற்காமல் முன்னே செல்ல, வேகமாக அவன் பின்னே ஓடினாள் வேக நடையுடன்..

சென்ற வருடம் இந்த கான்ப்ரென்ஸ் ஏற்பாடு செய்திருந்த அதே இடம் தான் இந்த வருடமும்...

அதன் உயரத்தை இப்பொழுதும் அண்ணாந்து பார்த்தவாறு வேகமாக நடக்க, அதற்குள் ஆதி லிப்ட் ற்குள் நுழைந்திருந்தான்...

அவனை பிடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் வேகமாக ஓடியவள் முன்பு மாதிரியே கால் இடறி விழ, தவறாமல் ஆதி மீது சாய்ந்திருந்தாள்...

அவனும் அவளின் மெல்லிய இடையை பற்றி அவளை தாங்கி பிடித்திருக்க, இருவருக்குமே சில விநாடிகள் சென்ற வருடம் நடந்த நிகழ்ச்சி கண் முன்னே வந்து சென்றது....

பவித்ரா முதன் முதலில் அவன் மீது விழுந்த பொழுது பொங்கிய அதே உணர்வு இருவருக்குள்ளும் மீண்டும் அச்சு பிசகாமல் எழ, இருவருமே அந்த நொடியை ரசித்து அனுபவித்திருந்தனர்...

பின் சில விநாடிகளில் சுதாரித்து கொண்ட ஆதி, தலையை உலுக்கிகொண்டு அவளை வேகமாக விலக்கி, அவள் இடையை பற்றியிருந்த தன் கையை வேகமாக இழுத்து கொண்டான்...

அவளை ஒரு கார பார்வை பார்த்து விட்டு முன்னால் நகர்ந்து லிப்ட் ன் கதவு பக்கம் பார்த்து நின்று கொண்டு அது செல்லும் தளங்களை பார்வையிட்டு கொண்டே வந்தான்...

லிப்ட் 16 ஆவது தளத்தை அடையவும் கதவு திறக்க அவசரமாக வெளியேறி வேகமாக நடந்தான்...

பவித்ராவுக்கோ ஒரு மாதிரி ஆகிவிட்டது...இவ்வளவு நேரம் அவனை கன்வின்ஸ் பண்ண என்று தான் பண்ணின சேட்டைக்கு எதுக்குமே மயங்காமல் விறைத்து கொண்டு போறானே.. அதுவும் அவன் மார்பில் விழுந்தவளை யாரோ போல அவளை விலக்கியது என்னவோ போல இருந்தது..

அதுவும் அவன் மனைவிதானே என்று கூட பார்க்காமல் ஏதோ அந்நியவளாக அவளை விலக்கி நிறுத்தியது தான் அவளுக்கு கஷ்டமாக இருந்தது...

லிப்ட் ஐ விட்டு வெளியில் வந்தவள் முன்னால் பார்க்க, ஆதியோ அவளுக்காக காத்திருக்காமல் வேக நடையுடன் முன்னால் சென்று அந்த கான்ப்ரென்ஸ் ஹாலுக்குள் நுழைந்திருதான்...அதை  கண்டவள் கடுப்பாகி

“ஹ்ம்ம்ம் போடா நெட்டை... நான் எவ்வளவு தூரம் கெஞ்சியும், இறங்கி வந்தும் நீ மாறல இல்லை... இனிமேல் நீயா வந்து இந்த பவித்ரா கிட்ட கெஞ்சினாலும் இந்த பவித்ரா உன் பக்கம் வரமாட்டா...

உனக்கு கிடைத்த வாய்ப்ப மிஸ் பண்ணிட்ட... பார் நீ எப்படி அனுபவிக்க போற னு.. “ என்று  மனதுக்குள் சூளுரைத்தவள் மெல்ல அந்த கான்ப்ரென்ஸ் ஹாலை நோக்கி நடந்தாள்...

உள்ளே சென்றதும், சென்ற வருடம் பார்த்த ஓரளவுக்கு தெரிந்த முகமே.. வழக்கம் போல ஆதி உட்பட மற்றவர்கள் விளக்கேற்றி வைத்து அந்த கருத்தரங்கை ஆரம்பித்து வைக்க, வழக்கம் போல  தன் கணவனை சிறிது நேரம் சைட் அடித்தவள், அதற்கு பிறகு   தன் கணவனை மறந்து போனாள்...

இந்த வருடம் பவித்ரா தங்கள்  நகை கடையை மேனேஜ் பண்ணி வருவதால் அந்த துறையை பற்றி தெரிந்து கொள்ள இவளை அழைத்து வந்திருந்தான் ஆதி...

பவித்ரா சரண்யாவையும் அழைக்க, அன்று அவள் வேற ஒரு கிளையன்ட் ஐ சந்தித்து ஆர்டர் வாங்க வேண்டியிருப்பதால் வர இயலவில்லை..

பவித்ரா தன்  துறையின் கான்ப்ரென்ஸ் நடக்கும் இடத்திற்கு சென்று அங்கு நடை பெரும் பிரசென்டேசனை ஆர்வத்துடன் கவனித்து வந்தாள்..

தனக்கு தேவையான பல தகவல்கள் கிடைக்க அனைத்தையும் குறிப்பு எடுத்து வைத்து கொண்டாள்..

அவள் வந்ததில் இருந்தே மூன்று ஜோடி கண்கள் அவளையே வட்டமிட்டு வந்தன...

தியம் உணவின் பொழுதும் பவித்ரா ஆதியை தேட அவனோ இவள் கண்ணிலே பட வில்லை.. வேண்டும் என்றே மறைந்து கொண்டானோ??..  என்று எண்ணியவாறு ஒரு தட்டில் உணவை எடுத்து வைத்து கொண்டு ஓரமாக நின்று  சாப்பிட்டு கொண்டிருந்தாள்...

அப்பொழுது வெள்ளை வெளேரென்று  மெலுகு சிலையை போல, புடவையை தொப்புளுக்கு கீழ தாராளமாக இறக்கி கட்டி,  விரித்து விட்ட முடியும்,  ஹை ஹீல்ஸ் ம் அணிந்த மாடர்ன் பெண் ஒருத்தி சுற்றிலும் பார்த்தவாறே இவளை நோக்கி ஒயிலாக நடந்து  வந்தாள்...

அருகில் வந்ததும்

“ஹாய் பவித்ரா.. ஹவ்  ஆர் யூ?? “ என்றாள் கொஞ்சும் குரலில்..

திடீரென்டு கேட்ட குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தவள், அனிச்சையாய்

“ஐம்  பைன் அன்ட் யூ?? “ என்றவள் அப்பொழுது தான் அருகில் நின்றவளை உற்று பார்த்தாள்.

“யார் இந்த வெள்ளச்சி??  செமயா இருக்கா... என்னை தெரிந்த மாதிரி வேற வந்து பேசறாளே.. “ என்று மனதுக்குள் அவசரமாக யோசித்தவறு அவளை கேள்வியாக பார்த்தாள் பவித்ரா...

“சாரி..நான் யார் னு தெரியாது இல்ல.. நான் தான் ஸ்வீட்டி... “ என்று கையை நீட்டினாள் சிரித்தவாறு..

ஸ்வீட்டி என்ற பெயரை கேட்டதும் பவித்ராவின் முகம் மாறியது..

“பாவி.. இவளாலதான் எல்லா பிரச்சனையும் வந்தது.... இப்ப எதுக்கு மறுபடியும் என்னை  பார்க்க வந்திருக்கா??  “ என்று மனதுக்குள் திட்டியவாறு அவள் நீட்டிய கையை குலுக்காமல்  அவளை பார்த்து முறைத்தாள் கோபமாக...

அதை  புரிந்து கொண்டவள்

“ஓ.. ஐம் சாரி..பவித்ரா... உன்  கோபம் புரியுது... அதுக்கு மன்னிப்பு கேட்கத்தான் இப்ப வந்தேன்... அன்னைக்கு நான் சொன்னது எல்லாம் பொய்....ஆதி  டார்லிங்.. “ என்று ஆரம்பித்தவள் பவித்ரா அவளை திரும்பவும் கோபமாக முறைப்பதை கண்டு

“ஓ.. சாரி சாரி..  மிஸ்டர் ஆதித்யா ரொம்ப நல்லவர்.. அன்னைக்கு எந்த தப்பும் நடக்கல.. நான் தான் சும்மா அவர பழி வாங்க என்று மாத்தி உன்கிட்ட பொய் சொன்னேன்...

அந்த ட்ரெஸ் கூட  நான் தான் அவர் பெட்டியில தெரியாம வச்சேன் உன்னை நம்ப வைக்கிறதுக்காக...  என்னை மன்னிச்சிடு பவித்ரா.. “ என்றாள் பாவமாக கெஞ்சும் குரலில்...

ஹ்ம்ம் அதான் எனக்கு தெரியுமே... ஆனா உன்னால  அவன் இன்னும் என் மேல கோபமா இல்ல இருக்கான்... எல்லாம் உன்னால வந்தது டீ.. நீ மட்டும் நேற்று என்  கையில கிடைச்சிருந்த தொலச்சிருப்பேன்.. .. “ என்று மனதுக்குள் அவளை திட்டியவள்

“இட்ஸ் ஓகே... “ என்றாள் வெற்று பார்வையுடன்....

“பவித்ரா... if you don’t mind, எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்ணனும்.. “ என்று ஆரம்பித்தாள் ஸ்வீட்டி..

இந்த முறை பவித்ரா முன்னெச்சரிக்கையாக விழித்து கொண்டாள்..

“ஹ்ம்ம்ம் என்ன ஹெல்ப்.. அதுவும் நான் போய்..?? “ என்றாள் புரியாதவளாக...

அந்த ஸ்வீட்டி மீண்டும் ஒரு முறை சுற்றி பார்த்து விட்டு

“பவித்ரா  நேற்று நான் உன்கிட்ட ட்ராமா பண்ணினதுக்கு  மிஸ்டர் ஆதித்யா என்மேல கோபமாகி என்னோட பிசினஸ் ஐ எல்லாம் முடக்கிட்டார்...என்னோட ப்ரெண்ட்ஸ் சர்க்கிளையும் முடக்கிட்டார்...

என்னால எதுவுமே பண்ண முடியல....நானும் அவர்கிட்ட பல முறை சாரி கேட்டுட்டேன்... ஆனா அவர் நான் சொல்றது எதுவும் கண்டுக்கல.... காதிலயே வாங்கலை

நீதான் அவர்கிட்ட சொல்லி என்னை மன்னிச்சு விட்டுட சொல்லனும்.. நீதான் பெரிய மனசு பண்ணி அவர் கிட்ட ரெகமண்ட் பண்ணி என்னை மன்னிச்சு பழைய படி  நான் என் தொழிலை பார்க்கணும்.. ப்ளீஸ் பவித்ரா... “  என்று  அவள் கையை பிடித்து கொண்டாள்..

அதை  கேட்ட பவித்ராவுக்கு ஆச்சர்யமாக இருந்தது..

“பரவாயில்லையே!!  ஒரே நாள் ல இந்த வெள்ளச்சிய அலர அடிச்சுட்டானே.. “ என்று மெச்சி கொண்டவள்,

“சாரி ஸ்வீட்டி... இதுல என்னால  எதுவும் செய்ய முடியாது.. அவர் ஒரு முடிவு பண்ணிட்டா யாரும் மாத்த முடியாது...நான் சொன்னாலும் அவர் கேட்க மாட்டார் “ என்று மறுத்தாள்

“ஐயோ... இல்ல பவித்ரா.. அப்படி சொல்லாத... எனக்கு உன்னை விட்டா வேற வழியில்ல..  நீ ... நீங்க... எடுத்து சொன்னா கண்டிப்பா மிஸ்டர் ஆதித்யா கேட்பார்... “ என்றாள் மீண்டும் கெஞ்சலுடன் ஒருமையும் பன்மையும் கலந்து....

“ம்ம்ம்ஹூம்... நானே அவன்கிட்ட மன்னிப்பு கேட்டு நேற்றிலிருந்து போராடிகிட்டிருக்கேன்... இதுல உனக்காக நான் போய் நின்னா  இன்னும் தூங்கற சிங்கத்தை  எழுப்பி விட்ட மாதிரி தான்...எல்லாம் உன்னால வந்தது டீ  “ என்று மனதுக்குள் மீண்டும்  திட்டியவள்

“அது எப்படி.?? நான் சொன்னா மட்டும் கேட்பார்..அதெல்லாம் மாட்டார்,..நீ வேற வழி  எதுவும் இருந்தால் யோசி..  “ என்றாள் சற்று நக்கலாக

“இல்ல பவித்ரா.. எனக்கு மிஸ்டர் ஆதித்யா வ பத்தி நல்லா தெரியும்.. அவர் உன்னை ரொம்ப லவ் பண்றார்.. உன் மேல உயிரையே வச்சிருக்கார்..

போன வருடமே பார்த்தேனே.. அவர் வந்ததில் இருந்தே உன்னையே தான் சுற்றி சுற்றி வந்தார்.. அப்பயே எனக்கு ஆச்சர்யம்.. ஏனா  ஆதித்யா யாரையும் தானா தேடி போக மாட்டார்...

முதல் முதலா ஒரு  பொண்ணு பின்னாடி போனார்னா அது நீதான்... அப்பயே தெரிஞ்சிடுச்சு அவர் உன்னை லவ் பண்றார்னு...ஏன்   அவர சுத்தற பொண்ணுங்க எல்லாருக்குமே அப்பயே தெரிஞ்சிடுச்சு...

உன்னை  பார்த்ததிலிருந்தே அவர் எங்கள யாரையுமே ஏறெடுத்தும் பார்க்கலை... அப்படியே டக்குனு  மாறி எல்லாத்தையும் நிறுத்திட்டார்..

நாங்களும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தோம்... ம்ஹூம்..  அசையவே இல்ல... அந்த அளவுக்கு உன்னை லவ் பண்றார் னு அப்பயே தெரிஞ்சிடுச்சு... 

அதனால் உன் மேல இருக்கிற லவ்  ல கண்டிப்பா நீ எது கேட்டாலும் செய்வார்... ப்ளீஸ் பவித்ரா.. முடியாதுனு மட்டும் சொல்லாத... “என்று மீண்டும் அவள் கையை பிடித்து கொண்டாள்....

அதை கேட்டதும் அன்று சரண்யாவும் ஆதி  அவளை முன்னால் இருந்து காதலிப்பதாக சொன்னதும் நினைவு வந்தது....

“ஆஹா... பவித்ரா.. உன் புருசன் உன்னை காதலிக்கிறது இந்த ஊருக்கே தெரிஞ்சிருக்கு.. ஆனா உனக்கு மட்டும் தெரியவே இல்லயே.. இந்த விசயத்துல இப்படி  மக்கா இருந்திட்டியே.. டூ  பேட்.. “ என்று அவளை இடித்து காட்டியது அவள் மனசாட்சி...

அப்பொழுதுதான் இன்னொன்றும் நினைவு வந்தது..

அவள் கிராமத்தில் மரகதத்திடம் சண்டை போட்டு வந்த உடன் அடுத்த நாளே மரகதம் பவித்ராவிடம் போன் பண்ணி மன்னிக்க வேண்டி புலம்ப, பவித்ராவும் தன் கோபத்தை அதற்கு மேல் இழுத்து வைத்திருக்காமல் அவரை மன்னித்து அவருடன் சகஜமாக பேச ஆரம்பித்தாள்..

ஆனால் ஆதி அவரிடம் பேச மறுத்து விட்டான்.. இதே போல அவரும் இவளிடம் முறையிட, இவள் தான் அவனிடம் கெஞ்சி கொஞ்சி அவனை இறங்க வைத்து அவனையும் தன்  பெரியம்மாவை மன்னித்து அவருடன் பேச வைத்தாள்...

அந்த நந்தினிக்கும் உடனடியாக மாப்பிள்ளை பார்க்க அடுத்த வாரத்துலயே அவளுக்கு திருமணம் நிச்சயமாகி இருந்தது..

அதற்கும் தன் கணவனிடம் கெஞ்சி நந்தினி திருமணத்திற்கான செல்வு முழுவதையும் அவனே ஏற்று கொள்வதாக சொல்ல வைத்தாள்..

பணத்துக்காக தானே அவள் அப்படி ஒரு காரியம் செய்ய துணிந்தாள்.. அந்த பணம் இருந்தால் அவள் மீண்டும் அந்த மாதிரி தப்பு பண்ணாமல்   இருப்பாள் என்று எடுத்து கூறி திருமண செலவும் மேலும் நகை, பெண் வீட்டு சீர் என்று அத்தனையும் ஆதியையே ஏற்று கொள்ள வைத்தாள்..

முதலில் நந்தினி பேரை கேட்டதுமே எரிமலையானவன் அவள் கெஞ்சி கேட்க பின் ஒத்து கொண்டான்...

நந்தினி, சரோஜா  என அனைவரும் ஆதியிடமும் பவித்ராவிடமும் வருந்தி குற்ற உணர்வுடன் மன்னிப்பு கேட்க, அவனும் அவர்களை மன்னித்து இருந்தான்... 

“இப்பொழுது இந்த வெள்ளச்சி சொல்லுவதை போல என் மேல் அன்பு இருக்கிறதால தான்  அன்று நான் சொன்னதை கேட்டானோ?? 

சே அத கூட புரிஞ்சுக்காம, அவன நம்பாமல இவ பேச்ச கேட்டு இப்படி ஒரு பழி போட்டுட்டனே..   எல்லாம் இந்த வெள்ளச்சியால வந்தது..” என்று மீண்டும் அவளை முறைக்க, அவளோ பாவமாக இவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்...

அதற்குள் ஆதி அந்த பக்கம் வருவது தெரியவும்

“பவித்ரா..  உன் ஹச்பன்ட் வர்ரார்.. நான் உன்கிட்ட பேசியது தெரிந்தால் இன்னும் கோபமாயிடுவார்.. அதான் அவருக்கு தெரியாம உன்னை கவனிச்சுகிட்டே இருந்து நீ தனியா இருக்கிறப்போ உன்கிட்ட பேச வந்தேன்...

ப்ளீஸ்.. எனக்காக அவர் கிட்ட பேசு... இனிமேல் அவர் இருக்கிற பக்கம் கூட  திரும்ப மாட்டேன்... நானும் கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்... ப்ளீஸ்.. எனக்காக எடுத்து சொல்லேன்..  “ என்றவாறு அவள் கையை அழுத்தி விட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்து மறைந்தாள்...

அவள் சொன்ன திசையை பார்க்க, ஆதி யாரோ இருவருடன் பேசியவாறு அந்த உணவு அறைக்கு வந்து கொண்டிருந்தான்...

அதை கண்டவள் வேகமாக நகர்ந்து ஒரு தூணின் பின்னால் அவனுக்கு தெரியாமல்   மறைந்து நின்று கொண்டாள்...

அந்த ஹாலுக்குள் உள்ளே வந்தவன் வாய் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாலும் கண்கள் தன் மனைவியையே தேடின... அந்த அறை முழுவதும் தேடியவன்  அவளை காணாமல் யோசனையாக இருந்தான்.. அதை  கண்டு கொண்ட பவித்ரா

“திருடா... இப்ப தெரியுதா இந்த பவித்ரா வோட அருமை... என்னை எப்படி சுத்த வச்ச... இப்படியே கொஞ்ச நேரம் என்னை காணாமல் சுத்து.. “ என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டவள் அவன் கண்ணுக்கு தென்படாமல் மறைந்து கண்ணாமூச்சி ஆடினாள்..

ஆதியும் சிறிது நேரம் தேடியவன் அவள் மறைந்திருப்பதை கண்டு கொண்டு மனதுக்குள் சிரித்தவாறு உணவை உண்டு கொண்டிருந்தான்..

இவர்களின் கண்ணாமூச்சி ஆட்டத்தை கண்டு ஒரு ஜோடி கண்கள் பொறாமையில் வெந்தது... இவர்கள் நிம்மதியை சந்தோசத்தை எப்படியாவது அழிக்க வேண்டும்  என்று அவசரமாக திட்டதை தீட்டியதை பாவம் இருவரும் அறியவில்லை...


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!