உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-59

 


அத்தியாயம்-59

மாலை கான்ப்ரென்ஸ் முடிந்து சென்ற ஆண்டை போல மாலை பார்ட்டி ஆரம்பிக்க, பவித்ராவுக்கு ஏனோ திக் என்றது.. போன முறை இந்த டைம்தான் என்னவோ நடந்து போனது.. அந்த நேரம் ஆக ஆக உள்ளுக்குள் பிசைந்தது...ஏதோ கெட்டது நடக்க போவதை போல உள்ளுணர்வு எச்சரித்தது

அந்த இடத்தை விட்டு செல்ல எண்ணி தன் கணவனை தேட அவனோ அங்கு இல்லை.. கார் பூட்டியிருப்பதால் காருக்கும் செல்ல முடியாது...

வேற வழி  இல்லாமல் பதற்றத்துடன் ஒரமாக நின்று கொண்டிருக்க அப்பொழுது ஒரு சர்வர் கூல் டிரிங்க் இருந்த ட்ரேயை நீட்ட,கொஞ்சம் டென்சனில் அவள் தொண்டை வறண்டு இருக்க, அந்த ட்ரேயில் இருந்த ஒரு பாட்டிலை எடுத்து குடிக்க ஆரம்பித்தாள்....

அதை கண்டதும் அந்த ஜோடி கண்கள் ” சக்ஸஸ்... “ என்று கையை மடக்கி பின்னால் இழுத்து கொண்டு மகிழ்ச்சியாக அவளையே பார்த்து கொண்டிருந்தன...

பார்ட்டி ஆரம்பித்து இருக்கவும் ஆதியும் ஒரு மது கோப்பையை எடுத்து கொண்டு ஒரு முக்கிய பிரமுகருடன் பேசி கொண்டிருந்தான்... அவன் மது அருந்துவதை விட்டிருந்தாலும் இந்த மாதிரி பார்ட்டிக்கு வரும்பொழுது பேருக்காக கையில் வைத்திருப்பது அவன் வழக்கம்..

அவன் பேசி  முடித்து அந்த பிரமுகர் நகரவும்

“டேய்.. மச்சான் எப்படிடா இருக்க..??  “ என்று அவன் பின்னால் தட்டினான் ஒருத்தன்..

ஆதி திரும்பி பார்க்க, அவனுடைய நண்பன் கவின் நின்று சிரித்து கொண்டிருந்தான்..

“ஹே...வாடா கவின்... ஐம்  பைன் டா .. நீ எப்படி இருக்க??... பாரின்ல இருந்து எப்ப வந்த?? “ என்றான் ஆதி சிரித்தவாறு

“ஹ்ம்ம் இன்னைக்கு தான்டா வந்தேன்.. வந்த உடனே எங்கப்பா இந்த கான்ப்ரென்ஸ் ஐ போய் அட்டென்ட் பண்ணுனு துரத்தி விட்டுட்டார்... நானும் சரி.. நம்ம ஊர் பொண்ணுங்கள சைட் அடிச்சி ரொம்ப நாளாச்சா... உடனே கிளம்பி வந்திட்டேன்... “ என்று கண் சிமிட்டி சிரித்தான்... 

பின் இருவரும் சில விநாடிகள் நல  விசாரிப்பு, தொழிலை பற்றி விசாரித்த பின்

“டேய் மச்சான்.. உனக்கு ஒரு குட் நியூஸ் டா.. “ என்றான் கவின் ஆதியை பார்த்து

“என்னடா அது குட் நியூஸ்??.. என்ன நீ திருந்திட்டியா?? “ என்றான் ஆதி  குறும்பாக  சிரித்தவாறு

“ஹா ஹா ஹா திருந்தறதா... அதெல்லம் இந்த ஜென்மத்துல இல்ல மச்சான்.. லைப் ஐ ஜாலியா என்ஜாய்   பண்ணனும் மச்சான்..சரி நான் சொல்ல வந்த குட் நியூஸ் உனக்கான குட் நியூஸ்..

போன வருடம் இதே கான்ப்ரென்ஸ் ல ஒரு பொண்ணு பின்னாடியே சுத்தி வந்தியே.. அவ கூட நீ கைய பிடிச்சனு உன்  கன்னத்துல அறைஞ்சிட்டாளே... அவளை பழி வாங்க ஒரு நல்ல சான்ஸ் மச்சான்... “என்றான் வில்லங்கமாக சிரித்தவாறு..

ஆதிக்கு அவன் யாரை சொல்கிறான் என்று புரிய,  கை முஷ்டி இறுக, பல்லை கடித்து கொண்டு அவன் என்ன சொல்ல வருகிறான் என்று தெரிந்து கொள்ள எண்ணி

“என்னடா சொல்ற?? புரியற மாதிரி சொல்லு.. “ என்றான் கொஞ்சம் அவசரமாக

“ஹ்ம்ம்ம் அதான் டா   உன்னை கை நீட்டி அடிச்ச அந்த பொண்ணு... இந்த வருசமும் இங்க வந்திருக்கா.. போன வருசம் பார்த்தத விட இந்த வருடம் இன்னும் தள தள னு சும்மா கும்முனு இருக்கா...

அந்த ரிஷி இருக்கானே... அதான் டா... உன்னுடைய காம்பெடிட்டர்... அந்த பொண்ண மடக்க பிராக்கெட் போட்டிருக்கான் போல.. அவனுக்குத்தான் எந்த ஒரு அழகான பொண்ணை பார்த்தாலும் உடனே கை அரிக்குமே...

அவன் ஒரு கூல் டிரிங்க்  பாட்டில் ல போதை மருந்தை கலக்கி அந்த சர்வர் கிட்ட கொடுத்து அந்த பொண்ணுகிட்ட கொடுத்து குடிக்க வச்சிருக்கான்....நானும் காலையில் இருந்து அந்த பொண்ணையே பார்த்துகிட்டு இருந்தனா.. அப்பதான் அந்த ரிஷியோட பிளான் புரிஞ்சுது... 

உடனே எனக்கு உன் ஞாபகம் வந்தது.. அதான் உடனே உன்னை பார்க்க வந்தேன்..

உன்னை அடிச்ச அவள பழி வாங்க இது நல்ல சந்தர்ப்பம் மச்சான்...

நீ என்ன பண்ற,  அந்த ரிஷி அந்த பொண்ணை தூக்கறதுக்கு முன்னாடி நாம முந்திக்கிட்டு அவள தூக்கிடலாம்...பக்கத்துலயே இருக்கிற ரூம்க்கு கொண்டு போய்டலாம்..

உன்னை அடிச்ச அவ திமிரை அழிச்சு,  அவள அடக்கிடு ... அப்படியே எனக்கும் கொஞ்சம்.. “ என்று ஏதோ உளறும் முன்னே ஆதித்யாவின் கை அவன் கன்னத்தில் இடியென இறங்கியிருந்தது...

அவன் அறைந்த வேகத்தை தாங்க முடியாமல் தடுமாறி கீழ விழுந்தான் கவின்...

அவன் சட்டையை பிடித்து தூக்கியவன்

“யூ இடியட்.. நீ யாரை பத்தி பேசின தெரியுமா?? She is my wife.. இன்னொரு தரம் அவள பத்தி ஏதாவது பேசின, இல்ல தப்பா பார்த்த  தொலச்சுடுவேன்.. ராஸ்கல்..” என்று உருமியவன் அவனை அப்படியே கீழ விட்டுவிட்டு வேகமாக முன்னால் நகர்ந்தான்..

“ஓ.. சாரி டா மச்சான்.. எனக்கு தெரியாது... நான் உன் மேரேஜ் அப்ப இங்க இல்ல.. “என்று கவின் சமாதானம் சொல்லி கொண்டிருக்க அதற்குள் ஆதி புயலென அந்த இடத்தை விட்டு வெளியேறி இருந்தான்...

ந்த குளிர்பானத்தை குடித்த சிறிது நேரத்தில் என்னவோ மாதிரி இருப்பதை போல இருந்தது பவித்ராவுக்கு.. தலையை சுத்த கண்கள் இருட்ட ஆரம்பித்தது  கால்களை நகர்த்த முயல, அது முடியாமல் மெல்ல தள்ளாட ஆரம்பித்து இருந்தாள்...

அதை கண்டதும்  அதுவரை மறைந்து நின்று கொண்டிருந்த ரிஷி வேகமாக அவள் அருகில் வர, அதற்குள் ஆதி அவளை நெருங்கி இருந்தான்..

ஆதியை அங்கு காணவும் திடுக்கிட்ட ரிஷி வேகமாக நகர முயல, அவனையும் ஓங்கி அறைந்திருந்தான் கன்னத்தில்...

“ராஸ்கல்.. இதுவரைக்கும் நீ எனக்கு தொழில் ல செஞ்சு வந்ததை எல்லாம் பொறுத்துகிட்டேன்.. போனா போகுதுனு விட்டு வைத்தால் கடைசியில் என் பொண்டாட்டிகிட்டயே உன் வேலைய காட்டறியா...

ஆழம் தெரியாம கால விட்டுட்ட... என் பவர் தெரியாம நீ கை வச்சுட்ட... You will  pay for it soon.. Be ready… “ என்று கை நீட்டி மிரட்டியவன் தள்ளாட ஆரம்பித்திருந்த பவித்ராவை  தன் தோளில் சாய்த்து கொண்டு மெல்ல அணைத்து கொண்டு வெளியேறினான் ரிஷியை எரித்து விடும் பார்வை பார்த்தவாறு...

வெளியில் வரவும் அவளால் நடக்க முடியாமல் தள்ளாட, அவளை அப்படியே தன் கரங்களில் அள்ளிக்  கொண்டு தன் காரை அடைந்தான் ஆதித்யா...

கார் கதைவை திறந்து அவளை  உள்ளே கிடத்தியவன்,  மறுபக்கம் ஓட்டுனர் கதவை திறந்து கொண்டு இருக்கையில் அமர்ந்தவன் திரும்பி பார்க்க, பவித்ரா  துவண்டு இருக்கையில் சரிந்திருந்தாள்...

காலையில் புத்தம் புது மலராக  சிரித்து கொண்டும்,  தன்னிடம் வம்பு பண்ணிக் கொண்டு  வந்தவள்,  இப்பொழுது தளர்ந்த கொடி போல துவண்டு கிடப்பதை கண்டவனுக்கு மனம் வலித்தது...

ளர்ந்த கொடி போல கார் ன் இருக்கையில் துவண்டு கிடந்தவளை கண்டவனுக்கு மனம் வலித்தது.. அவளை நேராக இருக்கையில் சாய்த்து அமர வைத்தவன்

“சாரி பேபி.. எல்லாம் என்னால் தான்... உன்னை என் பக்கத்துலயே வச்சிருந்திருக்கணும்..

என்னோட வைராக்கியத்தால உன்னை தள்ளி வைக்க, இப்படி ஆயிருச்சே.. இந்த ரிஷி நாய்... அவன் மனசுல இன்னும் வன்மத்தை வச்சிருப்பானு தெரியாம போயிருச்சு... ஐம் சாரி  விது... “ என்றான் கண்ணில் வேதனையுடன்....

“ம்ஹூம்... என் புருஷன் யார்கிட்டயும் எப்பவும் சாரி சொல்லக் கூடாது... அது  அவன் பொண்டாட்டிக்கு பிடிக்காது... “ என்று அந்த நிலையிலும் உளறினாள் பவித்ரா...

அதை கேட்டு அந்த நிலையிலும் மெல்ல சிரித்து கொண்டவன் காரை ஸ்டார்ட் பண்ணி ஓட்ட ஆரம்பித்தான் ஆதி...

ரிஷி கலந்திருந்த போதை மருந்து வேலை செய்ய ஆரம்பிக்க, மெல்ல கண் விழித்தவள் அருகில் அமர்ந்திருந்த தன் கணவனை உற்று பார்த்து

“ஷா.. நான் தான் தப்பு பண்ணினேன்.. அந்த ஸ்வீட்டி பேச்சை கேட்டு உன்னை போய் தப்பா நினைச்சுட்டேனே... நீ எவ்வளவு நல்லவன்.. நீ  அந்த மாதிரி பண்ணியிருக்க மாட்டேனு அவகிட்ட அடிச்சு சொல்லாம விட்டுட்டேன்.. ஐம் சாரி ஷா... “ என்றாள் குழறலுடன்...

“இட்ஸ் ஓகே.. விது.. விடு... அதை பத்தி இனிமேல் பேசாதா...பாஸ்ட் இஸ் பாஸ்ட்.. “ என்றான் அவளை சமாதான படுத்த...

“ம்ஹூம்.. நீ என்னை மன்னிச்சிட்டேனு சொல்லு.. நீ  என்கிட்ட பேசாம எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா?? ..”  என்றவள் கண்ணில் ஈரம் எட்டி பார்க்க, ஆதிக்குமே அவளை அப்படி பார்க்க கஷ்டமாக இருந்தது...

காரை சாலையின் ஓரமாக நிறுத்தி அவள் கண்களில் வழிந்த நீரை துடைத்து விட்டு

“ஹே.. இப்ப எதுக்கு டா இப்படி கண் கலங்கற... இனிமேல் உன்னை கஷ்ட படுத்த மாட்டேன்.. உன் கூட பேசாம இருக்க மாட்டேன்.. “ என்றான் வேதனையுடன்..

“பிராமிஸ்??”  என்று அவள் கை நீட்ட

“ஹ்ம்ம்ம் பிராமிஸ்... “என்று அவள் கையில் தன் கையை வைத்து அவள் தலையில்  தலையில் முட்டினான்...

“அப்பனா எனக்கு ஒரு கிஸ் கொடு..”  என்றாள் தன் கன்னத்தை அவன் முன்னே நீட்டி..

அதை கேட்டு அதிர்ந்தவன்

“ஹே....  இது ரோட் டி.. இங்க எப்படி??  “ என்றான் தயங்கியவாறு..

I don’t mind… அதெல்லாம் எனக்கு தெரியாது...நீ எனக்கு இப்பவே இங்கயே  கிஸ் பண்ற.. அப்பதான் நீ என் கச்சி பழம்.. இல்லனா நீ இன்னும்  என்  கச்சி காய்தான்..” என்றாள் சிறு பிள்ளையாக உதட்டை பிதுக்கி..

அப்பொழுது தான் உரைத்தது ஆதிக்கு.. அந்த ரிஷி கலந்திருந்த போதை மாத்திரை வேலை செய்ய ஆரம்பித்து இருப்பதை...

“ஐயோ.. என்னத்த கொடுத்து தொலைச்சானோ??    என்று அவனை திட்டிகொண்டே வெளியில் சுற்றிலும் தேட, அங்கு எந்த மருத்துவமனையும் அருகில் இல்லை...  அவசரமாக தன் டாக்டர் பிரண்ட் ஒருத்தனுக்கு போன் பண்ணி கேட்க, அவன் போதை மருந்தாக இருந்தால் கொஞ்ச நேரத்துல சரியாகிடும்...

அவங்கள அப்படியே விடு... நல்லா ரெஸ்ட் எடுக்க வை .. “ என்று வைத்து விட, ஆதிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் காரை ஸ்டார்ட் பண்ணி தன் வீட்டை நோக்கி ஓட்ட ஆரம்பித்தான்...

அதற்குள் பவித்ராவுக்கு போதை இன்னும் அதிகமாக, ஆதியின் அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டு பிதற்ற ஆரம்பித்தாள்..

அவள் உளறுவது வேடிக்கையாக இருக்க, தன் அலைபேசியை எடுத்து அதை  ரெகார்ட் மோடில் செட் பண்ணி காரின் முன்னால் வைத்துவிட்டு “நாளை இதை  எல்லாம் அவளிடம் காட்டணும்..”  என்று எண்ணி குறும்பாக சிரித்து கொண்டு அவளையே ஓரக் கண்ணால் பார்த்தான்...

சுய நினைவில் இல்லாதவளோ, இன்னும் தன்  மனதில் இருப்பதை எல்லாம் உளற ஆரம்பித்தாள்

“ஷா... நீ எவ்ளோ ஹேண்ட்சம் தெரியுமா?? உன் கண்ணு இருக்கே அது அவ்ளோ அழகா இருக்கு.. அப்புறம் உன் மூக்கு இருக்கே...  “என்று வர்ணித்தவள் அவன் மூக்கை பிடித்து ஆட்ட, அதில் ஆதி  கொஞ்சம் நிலை தடுமாறி காரை சாலையில் இருந்து தவறவிட்டான்...

அதற்குள் சுதாரித்து கொண்டவன் அதை கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்து,  அந்த  ரிஷியை மனதிற்குள்   திட்டி கொண்டே நேராக ஓட்ட, அவன் மனைவியோ இன்னும் பிதற்றிக் கொண்டிருந்தாள்...  

அவனை ஒவ்வொரு பாகமாக வர்ணித்தவள்

“டோட்டலி யூ ஆர் மை மேன்.....மை ஹீரோ....  ஐ லவ் யூ  ஷா... “  என்றாள் சிறிது வெக்கத்துடன்....

அதை கேட்டவன் ஒரு நிமிடம் மனதுக்குள் குத்தாட்டம் போட்டான்..

“ராட்சசி.. உன் வாயிலிருந்து இத சொல்ல வைக்க ஆறு  மாசமா  போராடறேன்... இப்ப என்னடான்னா நான் கேட்காமலயே  சொல்றாளே..!! “ என்று குதூகலித்தவன்   மகிழ்ச்சியுடன் அவளை திரும்பி பார்க்க,  அவளோ

“ஐ லவ் யூ  டூ மச் .... திரீ மச் , போர் மச்.... பைவ் மச்.. என்று விரல் விட்டு எண்ணியவள்

ஐ லவ் யூ   மச்  மச்... “என்று தன் இரு கையையும் விரித்து காட்டி சிரித்தவள், அவனே எதிர்பாராதவாறு அவனை இடையோடு சேர்த்த=து இறுக்கி கட்டி கொண்டாள்...

“அடிப்பாவி....  மப்புலதான் ஐ லவ் யூ  சொன்னியா??  அதான..  நீயாவது இறங்கி வந்து உன் காதல ஒத்துக்கறதாவது? “ என்று மனதிற்குள்  பொருமினாலும் அவள் பிதற்றுவதை எல்லாம் ரசித்து கொண்டே வண்டியை ஓட்டி கொண்டிருந்தான்...

ரு வழியாக தன் வீடடை அடைந்தவன் காரை அதன்  செட்டில் நிறுத்தி கீழ இறங்க, பவித்ரா இன்னும் தள்ளாட,  அவனே அவள் புறம் வந்து அவளை அள்ளி கொண்டான்...

அந்த ரிஷி கலந்த மருந்து உச்சத்தை தொட, தன்னை தூக்கி கொண்டு வரும் தன் கணவனின் கழுத்தில் தன் கைகளை எடுத்து மாலையாக போட்டு கொண்டவள்

மீண்டும் “ஐ லவ் யூ   ஷா.. “ என்று கண் சிமிட்டினாள்..

அவளின் அந்த சிமிட்டலும் வெகு அருகில் பார்த்த அவள் முகமும் அவனை தடுமாற வைத்தது...

தன் அறையை அடைந்தவன் அவளை படுக்கையில் கிடத்தி நகர  முயல, அவளோ அவன் கையை எட்டி பிடித்துக் கொண்டாள்...

“எங்க போற ஷா??...நான் ஐ லவ் யூ சொன்னேன் இல்ல.. எனக்கு  ஒரு  முத்தம் கொடு..”  என்றாள் கண் சிமிட்டி தலையை சரித்தவாறு மையலுடன் அவனை நோக்கி..

“ஆஹான்... அந்த ரிஷி நாய் பண்ணின வேலைக்கு இப்ப இவளுக்கு போதை உச்சத்துக்கு ஏறிடுச்சு போல இருக்கே.. இப்ப எப்படி சமாளிப்பது??.. “  என்று யோசித்தவன்

“விது... நீ இப்ப சரியில்லை.. நல்லா தூங்கு.. காலையில பேசிக்கலாம்.. “என்று சமாதானம் செய்ய முயன்றான்...

அவளோ அதை ஒத்துக் கொள்ளாமல்

“ம்ஹூம்.. இல்ல எனக்கு  இப்பவே முத்தம் கொடு.. கிஸ் மீ... “ என்று கொஞ்சினாள் அவன் கையை விடாமல்...

அவனும் வேறு வழி இல்லாமல் குனிந்து மெல்ல அவள் நெற்றியில்  இதழ் பதித்தான்....

“ஐய... இதெல்லாம் செல்லாது.. எனக்கு இங்க வேணும்.. “என்று அவள் உதட்டை தொட்டு காட்ட திக் என்றது அவனுக்கு..

“அடிப்பாவி.. மனுசனை இப்படி படுத்தறியே.. எத்தனை நாள் நான் காத்திருந்தேன்.. அப்ப எல்லாம் முறச்சுகிட்டு போனவ, இப்ப நீயே வழிய வர்றியே... இதே  நீ நல்ல நிலையில இருந்து கேட்டிருக்கணும் டி... சே.. இப்படி ஆயிடுச்சே.” என்று மனதுக்குள் புலம்பியவன்

“விது... நீ முதல்ல தூங்கு.... ம்ஹும்.. நீ அடங்க மாட்ட.. போதை நல்லா தலைக்கு ஏறிடுச்சு.. இரு போய் தண்ணிய எடுத்து வந்து கொட்டறேன்.. “என்று நகர முயல, அதற்குள் அவன் கையை விடாமல் பற்றியவள் மெல்ல தள்ளாடிய படி எழுந்து

“போடா ஷா... நீ கொடுக்காட்டி என்ன.. நான் கொடுக்கறேன் உனக்கு... “  என்று அவன் எதிர்பாராத நேரத்தில அவன் கழுத்தை வளைத்து அவன் உதட்டில் அழுந்த முத்தமிட்டாள்...

இதை எதிர்பார்த்திராதவன் திக்குமுக்காடி போனான்.. அதுவரை தன்னை கட்டுபடுத்தி வந்தவன் கட்டுபாடு கொஞ்சம் கொஞ்சமாக தளர ஆரம்பித்தது..

ஏற்கனவே அவளின் சீண்டலில் சூடாகி இருந்தவன்,  இப்பொழுது அவளின் இந்த திடீர் முத்தத்தில் இன்னும் போதை ஏறி போனது ஆதிக்கு... ஆனாலும் அவள் நிலை அறிந்து அவளை விலக்க முயல,  அவளோ மீண்டும் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள்

“ஐ லவ் யூ ஷா....  ஐ நீட் யூ... நீ எனக்கு வேணும்.. “ என்று போதையில் உளறியவள் மையலுடன் அவனை  நோக்கி அவள் மார்பில் சாய்ந்து அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்...

அவளின் முத்தத்தில் ஏற்கனவே தன் கட்டுபாட்டை இழந்திருந்தவன் அவளின் இந்த செய்கையால் முழுவதும் தன்னை மறந்தான்.. அவள் நிலையும் அப்பொழுது மறந்து போக, தன் மார்பில் சாய்ந்திருந்தவளின் முகத்தை கையில் ஏந்தி அவள் முகம் எங்கும் முத்தம் மழை பொழிய ஆரம்பித்தான்...

அவளும் அதில் கிறங்கி நிக்க, அதில் முழுவதும் தன்னை தொலைத்தான்...

தன் மனையாளை கண்ட நாள் முதல், பிற மனை நோக்காமல்,  கடந்த ஒரு வருடமாக காத்து வந்த பிரம்மச்சர்யத்தை  முடித்து தன் மனைவியின் கோரிக்கையை நிறைவேற்றினான் காதல் கணவனாக....

றுநாள் கண் விழித்த பவித்ரா எழ  முயல அவள் தலை இன்னும் கனத்து பாரமாக இருக்க அப்படியே படுத்திருந்தாள்.... அப்பொழுது தான் நினைவு வந்தது நேற்று அவள் கான்பிரன்ஸ்க்கு சென்றது..

அதன் பிறகு ஒன்றும் நினைவில் இல்லை.. மீண்டும் யோசித்தவாறு எழ முயல, அப்பொழுதுதான் அவள் இருந்த கோலம் கண்ணில் பட்டது...

அவளின் நிலையை கண்டதும் திக் என்றது அவளுக்கு... அவசரமாக சுற்றிலும் பார்வையை சுழற்ற,  அது அவர்கள் அறைதான் என தெரிய கொஞ்சம் நிம்மதியானது...

“ஆனாலும் எப்படி??..”   என்று தன் மூளையை கசக்கி யோசித்தவள் நேற்று மாலை பார்ட்டியில் கடைசியாக அவள் குடித்த குளிர்பானம் நினைவு வந்தது.... அதற்கு பிறகு தலை சுற்ற ஆரம்பித்ததும் நினைவு வர,

“அப்படீனா அந்த குளிர்பானத்தில் ஏதோ கலந்து??.....”  என்று யோசித்தவளுக்கு அப்பொழுதுதான் நினைவு வந்தது

சென்ற வருடம் இதே நாளில் ஆதி  அவளிடம் சவால் விட்டது... அவளை அவன் காலடியில் விழ வைப்பதாக அவன் சொல்லியதும் நேற்று காலையில் கூட  இன்னும்  ஏழு நாளில் அவளை அவன் பக்கம் வரவைப்பதாக அவன் சொல்லியதும் நினைவு வர, சரண்யா சொல்லி கொடுத்த பாடம் மறந்து போக  அவள் உள்ளே தூங்கி கொண்டிருந்த ஜான்சி ராணி விழித்துக் கொண்டாள்...

“அப்படியென்றால் இதெல்லாம்  இவன் வேலைதானா??  எனக்கு ட்ரிங்ஸ் ல் ஏதோ கலந்து கொடுத்து அவன் ஆசையை, அவன் சவாலை நிறைவேற்றிகிட்டானா?? என்று நினைக்கையிலயே  அவளுக்கு கண்ணை கரித்தது...

சிறிது நேரம் அழுதவள், பின் அழுவது கோழைத்தனம் என்று தன்னையே திட்டிகொண்டு மெல்ல எழுந்து குளியல் அறைக்குள் சென்று  குளித்து முடித்தவள் ஒரு சுடிதாரை அணிந்து கொண்டு, சோபாவில் அமர்ந்து கொண்டு  ஏதோ யோசித்து கொண்டிருந்தாள்..

அப்பொழுது கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த ஆதி, பவித்ரா சோபாவில் அமர்ந்திருப்பதை கண்டு

“குட் மார்னிங் பேபி... என்ன அதுக்குள்ள எழுந்திருச்சுட்ட?? ... “ என்று குறும்பாக சிரித்தவாறு அவள் அருகில் சென்று அமர, அவளோ தீச்சுட்டதை போல வேகமாக துள்ளி எழுந்தாள்...

“சீ...  என்கிட்ட வராதிங்க.. “ என்று முறைத்தவாறு தள்ளி நின்று கொண்டாள்...

“ஹேய்... என்னாச்சு டீ?? நேற்று நல்லாதான இருந்த?? “ என்றான் புரியாமல் குழப்பத்துடன்.

“போதும்.. நீங்க நடிச்சது... அதான் என்னை ஏமாற்றி உங்க ஆசையை தீர்த்துகிட்டீங்க இல்ல.. நீங்க சொன்ன மாதிரியே உங்க சவால் ல ஜெயிச்சுட்டீஙக...இப்ப சந்தோஷமா? ” என்றாள் வெறுப்பான பார்வையுடன்...

“ஏய்.. நீ என்ன சொல்ற?? எனக்கு ஒன்னும் புரியல...” என்று யோசித்தவன்

“ஓ.. நேத்து நைட் நடந்தத சொல்றியா.?? .. நான் எவ்வளவோ தடுத்தேன்.. நீதான் போதையில்.... “ என்று குறும்பாக சிரித்தான்...

அவனின் சிரிப்பை கண்டவளுக்கு இன்னும் கொதித்தது..

“சீ.. போதும் நிறுத்துங்க... உங்க ஆசைய தீர்த்துக்க   கூல்டிரிங்க்ல ஏதோ கலக்கிற அளவுக்கு போயிருக்க வேண்டாம்... “  என்று அவள் சொல்லி முடிக்கு முன்னே  அவள் என்ன சொல்கிறாள் என்று புரியவர, கோபத்தில் அவளை அடிக்க கையை ஓங்கி இருந்தான் ஆதித்யா...

பின் என்ன நினைத்தானோ, ஓங்கிய கையை அதே வேகத்தில் கீழ இறக்கி கொண்டவன்

“சீ.. உன்னை எல்லாம் அடிக்கிறது கூட எனக்கு பாவம் டி.. நீயெல்லாம் திருந்தவே மாட்டியா... எப்ப பார் என்னை சீப்பா நினைக்கிறதே வேலையா போச்சு.. நீ சொல்ற கேவலமான வேலை செய்யற அவசியம் எனக்கு இல்ல டீ...

அப்படி பட்ட சீப்பானவன் நான் இல்லை.. உனக்கு மாத்திரையை கலந்து கொடுத்தது அந்த ரிஷி.. உனக்கு இன்னும் சந்தேகம் னா  அவன்கிட்டயே போய் கேள்...

சே.. உன்னை போய் நான் தேடி பிடிச்சேன் பார்... எனக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும்.. “  என்றவாறு தன் காலை தரையில் அழுந்த உதைத்து விட்டு, வேகமாக வெளியேறி  அறைக்கதவை அறைந்து சாத்தி விட்டு சென்றான் கோபமாக...

அப்பொழுது தான் பவித்ராவுக்கு ஞாபகம் வந்தது.. கான்பிரென்ஸ் ல்  யாரோ தன்னை உற்று பார்ப்பதை போலவே இருந்தது.. ஒரு முறை எதேச்சையாக திரும்பி பார்க்க அந்த ரிஷி மாதிரியே இருந்தது..

ஆனால் அதை அப்பொழுது அவள் கண்டு கொள்ளவில்லை... இப்பொழுது புரிந்தது எல்லாம்...

“ஐயோ.. மறுபடியும் அவசரபட்டுட்டேனா?? சே ஏன்தான் இப்படி இருக்கேன் நான்?? முன்னாடி எல்லாம் எதுனாலும் ஆராய்ந்து பார்த்து முடிவு எடுக்கும் நான் இப்ப ஏன் இவ்வளவு அவசராமா முடிவு பண்றேன்??  என்று யோசித்தவளுக்கு சரண்யா சொன்ன காதல் பாடம் நினைவு வந்தது...

உன் கணவன் மேல் அதிகம் காதல் இருப்பதால் உன் அறிவு வேலை செய்ய மறந்துவிடுகிறது.. “ என்று சொன்னது புரிய, மெல்ல தெளிவானாள்...

“ஆனாலும் அவன் எப்படி நான் சுய நினைவில் இல்லாதப்போ அப்படி நடந்துக்கலாம்?? .. “என்று தன் கோபத்தை மீண்டும் தன் கணவன் பக்கம் முயன்று திருப்பினாள் பவித்ரா...

(இன்னும் இரண்டு அத்தியாயங்கள் பென்டிங்...) 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!