உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-60(pre-final)
அத்தியாயம்-60
கோபமாக வெளியேறி சென்ற ஆதி தோட்டத்தில் இறங்கி நடக்க, அப்பொழுது அவன் அலைபேசிக்கு
மெசேஜ் வந்திருக்க, அதை
எடுத்தவன் எதேச்சையாக அதில் இருந்ததை பார்க்க, அதுவரை
பொங்கி வந்த கோபம் மறைய உதட்டில் புன்னகை அரும்பியது...
அதே புன்னகையுடன் தன் அறைக்கு திரும்பி வந்தவன் பவித்ரா இன்னும்
சோபாவில் கவலையாக அமர்ந்து இருப்பதை கண்டு, அவள் அருகில் சென்றவன்
“என்ன??... இன்னும் உனக்கு என் மேல நம்பிக்கை இல்லைனா இத பார்... “ என்று தன் அலைபேசியை நீட்டினான்..
அதில்
ஆதி ரெகார்ட் பண்ணிய காரில் பவித்ரா போதையில் உளறிய வீடியோ இருந்தது..
அதை
பார்த்தவள் திடுக்கிட்டாள்.. தானா அந்த மாதிரி பேசியது?? என்று வெட்கமாக இருந்தது..
ஆதி அவள் காரில் உளறியதை எல்லாம் ரெகார்ட்
பண்ணியிருந்தான்... காரை விட்டு இறங்கும் பொழுது அதை அணைக்க மறந்து அப்படியே தன் பாக்கெட்டில்
வைத்திருக்க, படுக்கை
அறையில் அவள் அவனிடம் முத்தம் கேட்டு வம்பு பண்ணியது வரை வீடியோ இல்லாமல் ஆடியோ மட்டும்
பதிவாகியிருந்தது...
அதை
முழுவதும் பார்த்தவளுக்கு வெட்கமாகி போனது... அவன் முகத்தை பார்க்க என்னவோ
போல இருக்க, தன் கையால் முகத்தை மூடி கொண்டவள் கீழ
குனிந்து கொண்டாள்..
அவனும் அவளின் வெட்கத்தை கண்டு மீதி இருந்த
கொஞ்ச கோபமும் பறந்து போக,
அவளை ரசித்தவாறு அவளையே பார்த்து கொண்டு
இருக்க ,திடீரென்று தன் தலையை நிமிர்த்தியவள்
"ஐயோ... அப்ப நான் தோத்துட்டேன்... நீங்க
சொன்ன மாதிரியே நான் தான உங்க கிட்ட வந்தேன்.. போச்சு... நான்
தோத்துட்டேன்.. இந்த பவித்ரா முதல் முதலா
தோத்துட்டா... "என்று ஓ என்று ஒப்பாரி வைத்தாள் பவித்ரா ...
அதை கண்டதும் சிரித்து கொண்டே அவள் அருகில் வந்தவன் அவள் அருகில் நெருங்கி அமர்ந்தவன் அவள் கையை எடுத்து தன்
கைகளுக்குள் வைத்துக் கொண்டு
"ஹே விது... நீ ஒன்னும் தோக்கலை...
நான்தான் உன்கிட்ட தோத்துட்டேன்.... நான்
என் தோல்விய ஒத்துக்கறேன்.. நீதான்
ஜெயிச்ச போதுமா?? " என்று அவள் மூக்கை பிடித்து செல்லமாக
ஆட்டினான்...
அதை கண்டவள், உடனே
“ம்ஹூம்.... என் புருசன் யார் கிட்டயும்
எப்பவும் தோற்க கூடாது அவன் பொண்டாட்டிகிட்ட கூடத்தான்... அவன்
எப்பவும் ஜெயிக்க பிறந்தவன்....நான் தான் லூசர்.. " என்று கன்னம் குழிய
சிரித்தாள்...
"ஹா ஹா ஹா...சரி சரி... நீயும் தோற்கலை..
நானும் தோற்கலை.. நமக்குள்ள வெற்றி
தோல்வினு எதுவும் இல்ல விது டார்லிங்.... நீ ஜெயிச்சா நான் ஜெயிச்ச மாதிரி.. நீ தோற்றால் நான் தோற்ற
மாதிரி... "என்று சரண்யா சொன்ன அதே டயலாக்கை
கூற, ஆ வென்று வாயை பிளந்து அதிசயமாக பார்த்தாள்...
பின்
ஏதோ நினைவு வந்தவளாக,
"அப்ப என்னை உங்க பொண்டாட்டியா
ஏத்துகிட்டீங்களா?? " என்று ஆர்வமாக கேட்க ,அதற்குள் அவன் அலைபேசி ஒலித்தது.. அதை எடுத்தவன் அது ஒரு முக்கியமான கால்
என்பதால் எழுந்து சென்று பேசி முடித்தவன்
"விது டார்லிங்.... நான் கொஞ்சம் அவசரமா
ஆபிஸ் கிளம்பனும்... நான் நைட் வந்து உன்
சந்தேகத்தை எல்லாம் தீர்த்து வைக்கிறேன்..
நீ இன்னைக்கு லீவ் போட்டுட்டு நல்லா ரெஸ்ட்
எடு.. நைட் நிறைய பேசணும்.." என்று
குறும்பாக கண் சிமிட்டியவன்
அவசரமாக கிளம்பி சென்றான்..
அந்த நாளை ஓட்டுவது பவித்ராவுக்கு பெரும் பாடாக இருந்தது.. நொடிக்கொருதரம் அவனிடமே சென்று
நின்றது அவள் மனம்.. அதுவும் நேற்று அவள்
நடந்து கொண்டது வேறு அடிக்கடி
நினைவு வர,
கன்னம் வெட்கத்தில் சிவக்க,
அடிக்கடி தனக்குள் சிரித்துகொண்டு மாலை
தன் கணவன் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தாள்...
அவனோ இரவு 9 மணி ஆகியும் வீடு திரும்பியிருக்க
வில்லை...9 மணி அளவில் அவனுக்கு போன் பண்ணியவன்
“அவசரமாக ஒரு
பார்ட்டிக்கு போக வேண்டும்.. நீ ரெடியாகி இரு பேபி.. நான் இப்ப வந்து கூட்டிகிட்டு போறேன்..
" என்றவன் பவித்ராவின் பதிலை கூட கேட்காமல்
அழைப்பை அணைத்திருந்தான்...
பவித்ராவும் அவனை திட்டி கொண்டே தயாராகி
அவனுக்கக காத்து கொண்டிருக்க,
அவன் வந்த பாடில்லை.. அவன் எண்ணிற்கு அழைக்க அது அணைக்க பட்டிருந்தது...
தாமதமாக இரவு மணி 12 ஐ நெருங்க, களைப்புடன் வீடு திரும்பினான் ஆதி.. உள்ளே வந்தவன் அவன் அறைக்கு செல்ல, அங்கு பார்ட்டிக்கு செல்ல தயாராகி அப்படியே சோபாவில் அமர்ந்து உறங்கி கொண்டிருந்த
தன் மனைவியை கண்டதும் அவன் களைப்பெல்லாம்
பறந்து போய் உற்சாகம் வந்து ஒட்டி கொண்டது...
அவள் அருகில் சென்றவன் அவளை எழுப்ப, அவளோ விழித்து எழுந்தாள்...
அவன் தாமதமாக வந்ததை கண்டு அவனை முறைக்க முயல ,அவன் எதுவும் பேச வேண்டாம் என்று சைகை செய்து
“உனக்கு ஒரு சர்ப்ரைஸ் பேபி.. கண்ணை மூடு..
"என்றான்..
அவளும் கண்ணை மூட, அவள் கண்ணை தன் கையால் மூடி அவளை மெல்ல வழி
நடத்தி சென்றான்.. சிறிது நேரம் ஆனதும்.
"எங்க.. இப்ப கண்ணை திற பார்க்கலாம்...
"என்றான் சிரித்தவாறு..
அவளும்
மெல்ல கண் விழித்து பார்க்க, அப்பொழுது அங்கு இருந்த வண்ண விளக்குகள் திடீரென்று ஒளிர, மேலிருந்து பலூன்கள் வெடித்து அவள் மேல் பூக்கள் சிதற ,
“Happy Birthday to you…” என்ற பாடல் மெல்லிய இசையில்
திரும்ப திரும்ப ஒலித்தது...
அப்பொழுது தான் நினைவு வந்தது மறுநாள் அவள்
பிறந்த நாள் என்று.. அதை கூட மறக்கடித்து விட்டானே இந்த திருடன்.. என்று
எண்ணியவாறு
அந்த இடத்தை சுற்றி பார்க்க, அது ஒரு பெரிய அறை .. உள்ளே
அனைத்து நவீன வசதிகளும் இருந்தது...
அறையின் நடுவில் பெரிய கேக் வைக்க
பட்டிருந்தது... அதில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருக்க, அந்த அறையும் அதன் அலங்காரம்
எல்லாம் கண்டு ஆச்சர்யத்தில் வியந்து நின்றவளை பின்னால் இருந்து அணைத்து கொண்டவன்
“Many more happy returns of the day my dear
sweet heart விது டார்லிங்...” என்று அவள் கழுத்தில் இதழ்
பதித்தான்...
அதில் அப்படியே திக்குமுக்காடி போனாள்
பவித்ரா... திரும்பி அவன் புறம் பார்த்தவள்,
“Thank you so much ஷா..
“ என்றவள் எக்கி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்...
“ஹே... இதெல்லாம் செல்லாது..எனக்கு இங்க வேணும்
“ என்று அவன் உதட்டை சுட்டிகாட்டி நேற்று
அவள் கொஞ்சியதை போல தலை சரித்து கேட்க, அவளோ வெட்க பட்டு
“ஹ்ம்ம்ம் ஆசைதான்... “ என்று நழுவி ஓடினாள்...
“ஹா ஹா ஹா நேற்று இததான் டி என்கிட்ட கேட்டு வம்பு பண்ணின.... நீ கேட்டத
தான் நான் திருப்பி கேட்டேன்...” என்று குறும்பாக கண் சிமிட்டி சிரித்தவன்
“சரி வா.. கேக் வெட்டலாம்..டைம் ஆகுது... “ என்று அவளை அழைக்க, அவளும் அருகில் வந்து
அங்கிருந்த கேக்கை வெட்டி ஒரு துண்டை எடுத்து அவன் வாயில் வைத்தாள்... அவன் அவள்
கையையும் சேர்த்து கடிக்க
ஆ வென்று அலறி கையை இழுத்துக் கொண்டாள் அவனை
செல்லமாக முறைத்தவாறு.. பின் அவனும் கேக்கை
எடுத்து ஊட்ட அவள் எண்ணம் புரிந்தவன் அவள் கடிக்கும் முன்னே கையை இழுத்து கொண்டவன்
“ஹா ஹா ஹா .. இந்த ஆதித்யா கிட்ட உன் ஆட்டம் செல்லாது டீ.. “ என்று சிரித்தவாறு தன்
பாக்கெட்டில் வைத்திருந்த சின்ன பெட்டியை எடுத்து அதை திறந்தவன் அதில் உள்ளே
இருந்த இரு இதயம் இணைந்த மாதிரி இருந்த பிளாட்டினம் மோதிரத்தை எடுத்தவன்
ஒரு காலை மடக்கி கீழ அமர்ந்து அந்த மோதிரத்தை அவள் முன்னே
நீட்டி
“ I love you விது டார்லிங். Will you love me? Will you be my better half
ever? “ என்று கண் சிமிட்டி காதலுடன் அவள் கையை பற்றி அந்த மோதிரத்தை அணிவித்தான்...
அவளும் மகிழ்ந்து போய் “ஐ லவ் யூ டூ
ஷா... “ என்று மையலுடன் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்..
இருவரும் சிறிது நேரம் மோன நிலையில் இருக்க, பின் தன் தலையை நிமிர்த்தி தன் கணவனை
நோக்கியவள்,
“ஷா... எப்ப இருந்து என்னை லவ் பண்ண
ஆரம்பிச்சீங்க?? “ என்றாள்
ஆர்வமாக...
“ஹ்ம்ம்ம் லவ் அட் பர்ஸ்ட் சைட் ங்கிற மாதிரி லவ் அட் பர்ஸ்ட் டச்... “ என்றான்
கண்களை சிமிட்டி குறும்பாக சிரித்தவாறு...
அதை கேட்டு ஆச்சர்யபட்டவள்
“நிஜமாகவா?? “என்றாள் தன் கண்களை
அகல விரித்து....
அவளின் அகன்ற விழிகளையே மையலுடன் நோக்கியவன், குனிந்து அதை மென்மையாக தன் இதழால் முத்தமிட்டான்… அவளும் அதில் கிறங்கி நிற்க, பின் நிமிர்ந்தவன்
“யெஸ்... விது டார்லிங்... பட் எனக்கு அப்போ
அதுதான் காதல் என்று புரியல...
நீ
லிப்ட் ல என்மேல வந்து விழுந்தப்போ உன் முகத்தை கூட பார்க்கல நான்.. ஆனால் என்
மீது விழுந்தப்போ என் உள்ளே அப்படி ஒரு பரவசம்.. இனம் புரியாத ஒரு பீலிங்...
அதுவரை எந்த பெண்ணிடம் ஏற்படாத ஒரு ஈர்ப்பு உன்
முகத்தை கூட பார்க்காமல் உன்னிடம்
தோன்றியது...அதுவரைக்கும் எந்த பொண்ணையும் தேடிப் போகாத நான் உன்னை உணர்ந்ததும்
ஏனோ என் மனம் முழுவதும் உன்னையே சுத்தி
வந்தது.. அதனால் தான் உன்னை அடிக்கடி தேடிவந்து சீண்ட வைத்தது..
ஆனால் நீ என்னை விலக்கி வைத்ததும் என்னை
அடித்ததும் எனக்குள்ளே இருந்த ஈகோ
விழித்து கொள்ள,
உன்னை பழி வாங்க துடித்தது என் மனம்.. அப்பதான் பிளான் பண்ணி உன்னை என் அருகில்
கொண்டு வந்தேன்...
ஆனால் பழி வாங்க என்று உன்னை மணந்தாலும் ஏனோ
உன்னை ஹர்ட் பண்ண எனக்கு மனசு வரல.. மாறாக உன்னை பார்க்கும் பொழுதெல்லாம் என் மனம்
என்னை அறியாமலயே உன்னிடம் சென்று சரணடைந்தது..
அப்பதான் எனக்கே புரிந்தது... இதற்கு பெயர்தான்
காதல் என்று...
ஆனாலும் உடனே அதை உன்னிடம் சொல்லாமல் உன்னிடம்
கொஞ்சம விளையாண்டு பார்க்க தோன்ற,
என் காதலை மறைத்து உன்னிடம் விளையாட ஆரம்பிச்சேன்....
நியூயார்க் போனப்போ தான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன்னு
புரிஞ்சுது.. பார்க்கிற இடமெல்லாம உன் முகமே.. Perhaps அந்த முக்கியமான க்ளைன்ட் மீட்டிங்கில்
கூட நடுவுல உன் முகம் வந்து நிக்கும்..
அப்பயே உன்னிடம் ஓடி வந்துடனும் போல இருந்தது...
அப்பதான் முடிவு பண்ணினேன்.. இனிமேலும் என்னால
என்னை மறைக்க முடியாது என்று...உன்னிடம் காதலை சொல்ல நினைக்கையில் தான் உன் பர்த்டே இரண்டு நாள் ல வர, உனக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கலாம் னு தான் சொல்லாம
மறச்சேன்...
அதுக்குள்ள என்னென்னவோ நடந்திருச்சு... “ என்று
நிறுத்தினான்...
அதை கேட்டு வியந்தவள்,
“சரி.. அது என்ன விது னு பெயர் வச்சிருக்கீங்க?? எல்லாரும் என்னை பவி னு தான கூப்பிடறாங்க...” என்றாள் தலையை சரித்து
சிரித்தவாறு...
“ஹா ஹா ஹா....உன் கேள்வியிலயே அதற்கான பதிலும்
இருக்கு..
நான் உனக்கு ஸ்பெசல் இல்லையா...மத்தவங்க
கூப்பிடற மாதிரி நான் எப்படி உன்னை அழைப்பதாம்...
அதான் ஸ்பெஷலா விது னு வச்சேன்...
என்ன பிடிச்சிருக்கா..??“ என்றான் கண் சிமிட்டி..
“ஹ்ம்ம்ம்ம் ரொம்ப பிடிச்சிருக்கு...பெயரையும், பெயர் வச்ச ஆளையும் “ என்று
அவளும் பதிலுக்கு கண் சிமிட்டி
சிரித்தாள்...
“ஆமா.. எதுக்கு இந்த ரூம்?? “என்றாள் அந்த அறையை சுற்றி
பார்த்து வியந்தவாறு...
“ஹா ஹா ஹா.. இதுதான் என் பொண்டாட்டி என்கிட்ட
முதல் முதல் லா கேட்டது....” என்றான்...
பவித்ராவுக்கு இப்பொழுது நினைவு வந்தது..
கல்யாணம் முடிந்த அன்று அவளுக்கு தனி அறை வேண்டும் என்று அவனிடம் சென்று நிக்க, அவன் அதை மறுத்து விட்டான்....
“ஹ்ம்ம்ம் அப்ப உனக்கு தனியா ஒரு ரூம்
கொடுக்கத்தான் ரெடி பண்ணிகிட்டிருந்தேன்.. ஆனா நீ வந்து கேட்கவும் உடனே என்
ஈகோ நீ கேட்டு கொடுப்பதா என்று
தடுத்திருச்சு.. அதோட உன்னை என் பக்கத்துலயே வச்சுக்க தோணுச்சு.. அதான் அப்ப மறுத்திட்டேன்...
உனக்கு பர்த்டே கிப்ட் ஆ இதுவும் இனிமேல்
உனக்குதான்.. நீ இங்க பிரியா இருக்கலாம்.. அப்புறம் இதுதான் இனிமேல் நம்ம அந்தப்புரம்..” என்று சிரித்தவன்
“சரி.. நீ சொல் இப்ப.. எப்பயிருந்து நீ என்னை
லவ் பண்ண ஆரம்பிச்ச?? “என்றான் ஆர்வமாக...
“ஹீ ஹீ ஹீ இங்கயும் அதே கதைதான்..
“ என்று அவளும் கண் சிமிட்டி சிரித்தாள்..
“அதே கதைனா?? ஓ லவ் அட் பர்ஸ்ட் டச்?? “ என்றான் ஆச்சர்யமாக....
“ஹ்ம்ம்ம்ம்.. எனக்கும் அதே பீல்தான்.. உங்க மேல
மோதினலதிலிருந்து... “ என்றாள் வெட்கத்துடன்
“அடிப்பாவி.. அப்ப ஏன் அப்படி முறச்ச என்னை
பார்த்து ?? .. நான் கிட்ட வர்றப்ப எல்லாம் என்னவோ
வேண்டாதவன பார்க்கிற மாதிரி தள்ளி வச்ச?? “ என்றான் குறும்பாக..
“ஹீ ஹீ ஹீ..
முதல்லயே விழுந்திட்டேனு சொன்னா என்
பிரஸ்டீஜ் என்னாவறது ?? அதான்....ஆனால் எனக்கும் அதுதான்
காதல் என்று தெரியல... கடைசியா சரண்யாதான் புரிய வச்சா... ” என்று சிரித்தாள்...
“வாட்?? சிஸ்டரா?? அவங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?? “என்றான் ஆச்சர்யமாக...
“சாரி.... நீங்க என் கூட சண்டை போட்டப்போ ரொம்ப பீலிங் ஆ இருந்தது..
அதே பீலிங் ஓட கடைக்கு போக, இந்த சரண் கண்டுபிடிச்சிட்டா ஏதோ
பிராப்ளம்னு... நோண்டி நோண்டி கேட்க, நானும் நம்ம கதையை சொல்ல வேண்டியதா போச்சு...
அப்பதான் அவ உடனே சொன்னா நான் உங்களை லவ்
பண்றதா... எனக்கே அப்பதான் புரிந்தது.. அதோட நீங்க என்னை லவ் பண்றதாகவும் கூட
சொன்னா... அவ சொன்ன மாதிரியே தான் நடந்திருக்கு... “
“பரவாயில்லையே... அட்லீஸ்ட் உனக்கு வாய்ச்ச
பிரண்ட் ஆவது ஸ்மார்ட் ஆ இருந்திருக்காங்க.. இல்லைனா என் மக்கு பொண்டாட்டிக்கு
அவள் காதலும் புரிஞ்சிருக்காது.. அவ புருஷன் அவள லவ் பண்றதும் தெரிஞ்சிருக்காது...
“ என்று அவள் தலையில் முட்டி சிரித்தான்....
“ஹலோ பாஸ்...
நானும் ஸ்மார்ட்தான்...என்ன இந்த விசயத்துல கொஞ்சம் தூங்கிட்டேன்.. “ என்று அவனை
செல்லமாக முறைக்க
“சரி....சரி... நீ ஸ்மார்ட் பொண்டாட்டிதான்...
ஆமா அது என்ன ஷா னு பெயர்?? “ என்றான் தந்+ புருவங்களை
உயர்த்தி கேள்வியாக சிரித்தவாறு..
“ஹ்ம்ம்ம்ம் என் மாமியார் ஆசையா வச்ச பேர்
நிஷாந்த் தான.. அதில நி ய கட் பண்ணிட்டு ஷா னு எனக்கு ஸ்பெஷலா சுருக்கிட்டேன்.. “
“ஹா ஹா ஹா .. “ என்று சிரித்தவன்
“சரி..விது டார்லிங்... எனக்கு ஸ்பெஷலா பேர் வச்ச உன்ன ஸ்பெஷலா கவனிச்சிடலாமா??.. “ என்றான் ஒரு மாதிரி
பார்த்தவாறு...
“ஸ்பெஷலா கவனிக்கறதா?? அப்படீனா??“ என்றாள் புரியாதவாறு
“ஹீ ஹீ ஹீ அத சொல்லி கொடுக்கத்தான நான்
இருக்கேன்... என்ன பாடத்தை ஆரம்பிக்கலமா?? நான் ரெடி.. நீ ரெடியா?? “என்றான் கண்
சிமிட்டி குறும்பாக
“ஓ யெஸ்.. நான் எப்பவோ ரெடி... “ என்று சிரித்தாள்
அவன் சொல்வதின் அர்த்தம் புரியாமல்....
“சூப்பர் விது டார்லிங்.. என் பொண்டாட்டி என்னை
விட பாஸ்ட் ஆ இருக்கா.. இனிமேலும் லேட் பண்ணலாமா?? ..” என்று மந்தகாச புன்னகையுடன்
சிரித்தவன் அவள் எதிர்பாராவண்ணம் அவளை அப்படியே தன் கையில் அள்ளி கொண்டு அந்த
அறையில் அலங்காரம் செய்யபட்டிருந்த படுக்கைக்கு சென்றான்....
பவித்ராவுக்கு அப்பதான் அவன் சொன்ன ‘ஸ்பெஷல்’
கவனிப்பின் அர்த்தம் புரிய கன்னம் சிவக்க, தன் முகத்தை இரு கையால் மூடிக் கொண்டாள்....
அதில் இன்னும் கிறங்கியவன், நேற்று தன் மனைவி சுயநினைவில்லாமல் இருந்த பொழுது அரங்கேற்றிய தாம்பத்திய நாடகத்தை மீண்டும் ஒரு முறை அவள் சுய நினைவுடன் இருக்க அவளுக்கு திகட்ட திகட்ட கற்று கொடுத்தான்...
அடுத்த அத்தியாயத்துடன் இந்த பயணம் நிறைவு பெறும்...
Comments
Post a Comment