உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-61(Final)

 


அத்தியாயம்-61(இறுதி அத்தியாயம்)


நான்கு வருடங்களுக்கு பிறகு

ரவு சமையல் அறையில் நின்று கொண்டு பாலை காய்ச்சி கொண்டிருந்தாள் பவித்ரா....

நான்கு வருடங்கள்  ஓடியிருந்தது அதற்குள்..

இந்த நான்கு வருடங்களில் இருவரின் காதலும் அன்பும் பல மடங்கு கூடியிருந்தது...தன் கணவனின் அன்பை நினைத்து நெகிழ்ந்து போனாள் பவித்ரா...அவளுக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறான்...

நான்கு வருடம் முன்பு அந்த ஸ்வீட்டியை சந்தித்த பிறகு பவித்ரா அவளை மறந்து விட்டாள்.. ஆனால் அடுத்த நாளே பவித்ராவிற்கு போன் பண்ணி ஆதியை தன்னை மன்னித்து விட்டு விடும் படி  கெஞ்ச, பவித்ராவும்  ஆதியிடன் கெஞ்சி கேட்க அவளுக்காக அந்த ஸ்வீட்டியை மன்னித்து விட்டான்..

அதே போல அவளுக்கு கெடுதல் செய்த அந்த ரிஷியை அடுத்த வாரமே அவன் தொழிலை எல்லாம் முடக்கி விட, அதில் கதிகலங்கி போனான் ரிஷி...

அவனுடைய அப்பா வந்து ஆதியிடம் கெஞ்சி தன் மகனை விட்டு விட சொல்ல, ஆதி மறுத்து விட்டான்..

பின் அவரும் ரிஷியும் பவித்ராவை வந்து சந்தித்து அவளிடம் மன்னிப்பு கேட்டி அவளை ஆதியிடம் சொல்ல சொல்லி கெஞ்ச, அவர்களை பார்த்து பாவமாக இருக்க, வேற வழியில்லாமல், மீண்டும் தன் கணவனிடம் கெஞ்சி கொஞ்சி அந்த ரிஷியை  மன்னித்து விட்டு விட வைத்தாள்...

அதன் பிறகு அந்த ரிஷி திருந்தி ஒழுங்காக இருக்கிறான் இன்று வரை..

அவ்வளவு ஏன்... சரண்யாவின் விசயத்தில் அவன் செய்த உதவி இன்னும் அவளுக்கு நம்ப முடியவில்லை....

பவித்ரா, பிரேம் சரண்யா  காதலை பற்றி ஆதியிடம் சொல்லி பிரேம் அப்பாவிடம் பேச சொல்ல அவரோ தங்களை விட கீழ் நிலையில் இருந்த சரண்யாவை ஏற்று கொள்ள மறுத்துவிட்டார்..

“உடனே ஆதி அவன் ஆரம்பித்த அந்த மகளிர் நகை கடை  பிரிவை சரண்யா பேருக்கே எழுதி வைத்து விடுவதாகவும் அதோடு அவளை தன் தங்கையாக ஏற்று கொண்டு அவளுக்கு பிறந்த வீட்டு சீர் எல்லாம் அவனே செய்வதாக கூறினான்...

இப்பொழுது சரண்யாவின் நிலையும் அவர்கள் நிலைக்கு சமமாக வந்துவிடும்.. இனிமேல் தயக்கம் வேண்டாம்.. “ என்று சொல்ல, ஆதியின் பாசத்தை கண்டு பிரேம் அப்பா நெகிழ்ந்து போனார்...

“யாரோ தெரியாத ,இரத்த சம்பந்தம் இல்லாத பொண்ணுக்கு நீ இவ்வளவு தூரம் உதவி செய்யறப்போ என் வீட்டு மருமகளுக்கு நான் கணக்கு பார்க்கலாமா??... நீ எதுவும் செய்ய வேண்டாம் ஆதி..  என் மருமக என் மகனை நல்லா பார்த்து கிட்டா போதும்.. “ என்று சம்மதம் தெரிவித்தார்..

சரண்யா முதலில் திருமணத்திற்கு மறுக்க அவளையும் சம்மதிக்க வைத்து ஆதியே எல்லா செலவையும் ஏற்று அவள் திருமணத்தை நடத்தி வைத்தான்...

அவன் தனக்காகத்தான்  அதை எல்லாம்  செய்தான்  என்று இப்பொழுது நினைக்கையிலும் தன் கணவனை நினைத்து, அவன் தன் மேல் வைத்திருக்கும் காதலை நினைத்து பெருமையக இருந்தது பவித்ராவுக்கு...

அதே  பூரிப்புடன் பாலை காய்ச்சி  மூன்று டம்ளரில் ஊற்றியவள்  அதை ஒரு ட்ரேயில் வைத்து எடுத்து கொண்டு தங்கள் அறைக்குள் சென்றாள்...

கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல, அங்கு ஆதி கட்டிலில் படுத்திருக்க அவன் மார்பில் அமர்ந்து கொண்டு அவன் மீசையை பிடித்து இழுத்து விளையாடிக் கொண்டிருந்தாள்  அவர்களின் மூன்று வயது இளவரசி யாழினி...

முன்பு மீசை இல்லாமல் கொழுகொழு கன்னத்துடன் இருந்தவன் தன் செல்ல மகள் பிறந்ததும்  ஒரு முறை இலேசாக வந்திருந்த மீசையை அவள் பிடித்து இழுத்து சிரித்து விளையாட, அதிலிருந்து தன் மகளுக்காக மீசை வளர்க்க ஆரம்பித்து இருந்தான்..

அப்பாவும் பொண்ணும் செல்லம் கொஞ்சி கொண்டிருந்ததை  கண்டு ரசித்தவாறு உள்ளே நுழைய, அவள் கையில் இருந்த பாலை கண்டதும் அதுவரை தன் தந்தையிடம் கொஞ்சி கொண்டிருந்த அந்த குட்டி வேகமாக எழுந்து கட்டிலில் இருந்து சறுக்கி கீழ இறங்கி அவசரமாக கட்டிலின் மறைவில்  போய் ஒளிந்து கொண்டாள்...

அதை கண்ட பவித்ரா கடுப்பாகி

“ஹே..  குட்டி பிசாசு.. இவ்வளவு நேரம் இங்கதான விளையாண்டு கிட்டு இருந்த.. அதுக்குள்ள எங்க எஸ்கேப் ஆகிட்ட..” என்று செல்லமாக திட்டினாள்

“ஹே விது.. எத்தனை தரம் சொல்றது அவள குட்டி பிசாசுனு கூப்பிடாதனு.. She is my angel..என்று சிரித்தான் ஆதி  அவளை பார்த்தவாறு திரும்பி படுத்து கொண்டே...

“ஆமா.. உங்க தேவதையை நீங்கதான் மெச்சிக்கணும்... இந்த மூனு வயசுலயே என்னை படுத்தி எடுக்கறா... உங்களுக்கென்ன காலையில் கிளம்பி போயிட்டா, பொண்டாட்டி, புள்ளை எல்லாம் மறந்து போய்டும்..

அப்புறம் நைட் வீட்டுக்கு வந்தாதான் திரும்பவும் எlல்லாம் நினைவு வரும்... அவளோடு மாரடிக்கிற  எனக்குதான அவ படுத்தற கஷ்டம் தெரியும்..

இப்ப பார்.. இந்த பாலை குடிக்க வைக்கிறதுக்குள்ள  போதும் போதும் னு ஆயிடும் ..” என்று புலம்பினாள் பவித்ரா..

“ஹா ஹா ஹா...  ஹே பேபி.... நீ  இந்த பாலை குடிக்க எப்படி அடம்பிடிச்ச?? ... நான் எப்படி உன்னை மிரட்டி இத குடிக்க வச்சேனு நியாபகம் இருக்கா??  “ என்று கண் சிமிட்டினான் மந்தகாச புன்னகையுடன்....

அவள் நினைவுகளும் அதை தொட, பழைய நியாபகத்தில் கன்னம் சிவந்தாள் பவித்ரா...

“போங்க ஷா... புள்ளைய வச்சுகிட்டு பேசற பேச்சா இது??  “ என்று செல்லமாக முறைக்க, அவளின் சிவந்த முகத்தையே ரசனையுடன் பார்த்து கொண்டிருந்தான் அவள் கணவன்...

அதற்குள் தான் ஒளிந்தும் தன்னை யாரும் தேடாமல்  அமைதியாக இருந்ததை கண்டும் மெல்ல தலையை நீட்டி எட்டி பார்த்தாள் அந்த குட்டி தேவதை.. அதை  கண்டு கொண்ட பவித்ரா

“ஹேய்.. இருடி..வர்ரேன்.. அங்க தான் இருக்கியா??  என்று  அவள் அருகில் வர, அவள் கைக்கு கிடைக்காமல் அந்த அறையின் மறுமூலைக்கு ஓடினாள் அந்த குட்டி..

பவித்ரா அவளை துரத்த,  சிறிது நேரம் ஓடி பிடித்து விளையாட, அவர்களையே ரசித்து கொண்டிருந்தான் ஆதி...

சிறிது நேரம் கழித்து அவளை பிடித்தவள் அவள் காதை செல்லமாக திருகிய படியே

“குட்டி பிசாசு... இப்படி என்னை ஓட வச்சுட்டியே.. உனக்கு இருக்கு.. “என்று தூக்கி கொண்டு வர,அவள் தன் தந்தையிடம் வந்ததும் அழுவதை போல ஆக்சன் பண்ணி ஆதியிடம் தாவி சென்றாள்...

கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தவன் தன்னிடம் தாவி வந்த தன் மகளை பிடித்துக்கொள்ள அவன் கழுத்தை கட்டி கொண்டவள்

“டாட்.. இந்த மம்மி ரொம்ப மோசம்.. பேட் மம்மி.. I don’t like her..”  என்று தன்  மழலை குரலில் குற்ற பத்திரிக்கை வாசித்தாள் அந்த குட்டி..

அதை கேட்டு பவித்ராவின் முகம் சுருங்கியது...

அதை ஓரக்கண்ணால் கண்டவன் அவளை மேலும் சீண்ட எண்ணி

“யாழி குட்டி.. அப்ப இந்த அம்மாவை அனுப்பிட்டு வேற அம்மா கூட்டிகிட்டு வந்திடலாமா?? “ என்றான் பவித்ராவை ஓரக்கண்ணால் பார்த்து குறும்பாக கண் சிமிட்டி சிரித்தவாறு

“யெஸ்... யெஸ்..... வேற மம்மி வேணும்.. இந்த மம்மி வேண்டாம்... “ என்று குதித்தாள் தன் கைகளை தட்டியவாறு...

அதை கண்டதும் பவித்ராவுக்கு சுர்ரென்று கோபம் ஏற

“ஹ்ம்ம்ம் போடி.. நீயும் உன் அப்பனும் போய் வேற ஒருத்திய கூட்டிகிட்டு வந்து வச்சுக்கங்க.. நான் எதுக்கு இனிமேல் உங்களுக்கு.. நான் போறேன்.. “ என்று கையில் இருந்த பாலை டங்கென்று மேஜை மீது வைத்து விட்டு அறை  வாயிலை நோக்கி நடந்தாள்...

அவளின் கோபத்தை கண்டவன்,  தன் மகளை கீழ இறக்கிவிட்டு எழுந்து எட்டி   அவள் கையை பிடித்து நிறுத்தி

“எங்க டி  போற?? “ என்றான் சிரித்தவாறு

“நான் எங்கயோ  போறேன்.. உங்களுக்கு என்ன... நான் தான் உங்க இரண்டு பேருக்கும் இப்ப வேண்டாதவளாயிட்டேன் இல்ல.. “என்று மூக்கை உறிஞ்சினாள் பவித்ரா....

“ஹா ஹா ஹா.. சும்மா விளையாண்டதுக்கு போய் கோபமா?? .. ஆங்க்ரி  பேர்ட்... “ என்று அவள் மூக்கை பிடித்து ஆட்டி சிரித்தான் ஆதி...

“இல்ல... உங்க மனசுல இருக்கிறது தான் வாயில்ல வந்திருக்கு.. என்ன விடுங்க நான் போறேன்.. “ என்று அவன் கையை விடுவிக்க முயல, அவனோ அவளை விடாமல் இன்னும் இறுக்கி பிடித்தவன்

“என்னை விட்டு எங்கயும் போக முடியாது பேபி...You are my life… my soul... நீதான் என் உயிர்..நீ வந்த பிறகுதான் எப்படியோ இருந்த என் லைப் கலர்புல் ஆ ஆச்சு ....  என்றும், எப்பொழுதும் உன்னை விட மாட்டேன்... என்னுயிரே... “ என்று பின்னால் இருந்து அவளை அணைத்துக்  கொண்டு அவள் கழுத்தில் மெல்ல முத்தமிட்டான்....

தன் அன்னையின் கோபத்தை கண்ட அந்த குட்டி தேவதையும் வேகமாக ஓடி வந்து அவள் காலை  கட்டி கொண்டு

“நானும் உன்னை விட மாட்டேன்...மம்மி “ என்று குதித்தாள்...

தன் கணவனின் அன்பில் சிலிர்த்தவள் அடுத்து தன் மகளின் செயலை கண்ட பவித்ரா கோபம் மறைந்து இதழில் புன்னகை தவழ, குனிந்து தன் மகளை அள்ளி கொண்டு

“நானும் உங்களை விட்டு போக மாட்டேன்....குட்டி பிசாசே.. “ என்று அவள் பட்டு கன்னத்தில் முத்தமிட்டு பின்னால் நின்றிருந்த தன் கணவனின் மார்பில் வாகாக சாய்ந்து கொண்டாள்...

அவள் மார்பில் சாய்ந்த அந்த நொடி இருவருக்கும் உலகம் மறந்து போனது...

எத்தனை வருடங்கள் ஆனாலும் அந்த ஃபர்ஸ்ட் டச்  இருவர் மனதிலும் ஆழ  பதிந்திருக்க, இருவருமே அந்த நொடியை நினைத்து கொண்டு கண்ணை மூடி ரசித்திருந்தனர்...

இரண்டு பேரும் இதே காதலுடனும் அன்புடனும் என்றும் மகிழ்ச்சியாக,  இந்த பிறவி மட்டும் இல்லாமல்,  இனி வரும் பிறவிகளிலும் இணைந்து  இருக்கட்டும்....” என்று   வாழ்த்தி விடை பெறுவோம்....நன்றி!!!  

******சுபம்******

இந்த கதையை  இதுவரை பொறுமையாக வாசித்து ரசித்த அனைத்து வாசகர்  தோழமைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..!  மீண்டும் வேற ஒரு கதையில் விரைவில் சந்திக்கலாம்... நன்றி!! - அன்புடன் பத்மினி செல்வராஜ்

Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!