அழகான ராட்சசியே!!!-10

 


அத்தியாயம்-10

ரோகிணி ஒரு சைக்காலஜிஸ்ட்.  சைக்காலஜி யில் இளங்கலை பட்டம்  முடித்து விட்டு அந்த மென்பொருள் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க  கவுன்சிலிங் மெம்பராக வேலைக்கு சேர்ந்து இருந்தாள்..

அந்த நிறுவனத்தில் பணி புரியும் எம்ப்ளாய்ஸ்க்கு மன ரீதியாக ஏதாவது பிரச்சனை வரும் நேரங்களில் அவர்கள் அவளை அணுகலாம்..

அதுவும் இல்லாமல்  அந்த அலுவலகத்தில்  பணி புரிபவர்களுக்கு அப்பப்ப மன அழுத்தம் குறைப்பதற்காகவும், ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் என்று சில செஸ்ஸன் வைத்து மனதை இயல்பாக வைத்து கொள்ள  சில குறிப்புகளையும்  கொடுப்பாள்.

கிட்ட தட்ட ஐந்து வருடங்களாக பணி ஆற்றி வருபவள்..தற்பொழுதுதான் அந்த கவுன்சிலிங் குழுவின் லீட் ஆக பதவி உயர்வு பெற்றிருந்தாள்.. அதனால் மகிழன் அவளை தேடி சென்றிருந்தான் தன் பிரச்சனைக்கு ஒரு தீர்வை தேடி...

தன் முன்னே வந்து நின்ற மகிழனை கண்டதும் ஒரு நொடி அவள் கண்களில் மின்னல் வெட்டியது.. உதட்டில் குறுநகை தவழ அவனை பார்த்து புன்னகைத்தவள் அவனை அழைத்து கொண்டு அருகில் இருந்த டிஸ்கஷன் அறைக்கு சென்றாள் ரோகிணி..

அங்கிருந்த இருக்கையில் அமர்ந்ததும் மகிழனும் அவள் எதிரே அமர்ந்தான்..தனக்கு எதிரில் அமர்ந்திருந்தவனை நேராக பார்த்த ரோகிணி

“ஹ்ம்ம் சொல்லு மகி. நம்ம அலுவலகத்திலயே என்னை வந்து பார்க்காத ஒரே ஆள் நீதான்.. மற்ற எல்லாரும் வாரம் ஒரு முறையாவது என்னை சந்தித்து விட்டு அவங்களை ரீசார்ஜ் பண்ணிகிட்டு போனால்தான் பொழப்பை ஓட்ட முடிகிறது என்று  சொல்லி புலம்பி இருக்கிறாங்க..

ஆனால் நீ மட்டும் என்னிடம் வந்து நின்றதில்லை... ஏனா நீ தான் ஈஸி கோயிங்.. எப்பவுமே உன்னை சுற்றி  இருப்பவர்களை நன்றாக புரிந்து கொண்டு அவர்களை சிரிக்க வைத்து கொண்டே இருப்பாயே.. அதோடு மற்றவர்களுடன் நல்லா  அட்ஜஸ்ட் பண்ணி போவியே...இப்ப என்னாச்சு?? எனி ப்ராப்ளம் ?  “ என்றாள் அவனை ஆழ்ந்து பார்த்தவாறு...

“ஹ்ம்ம்ம் ஐ நீட் கவுன்சிலிங் ரோ.. என்னை எப்படி கன்ட்ரோல் பண்றது னு தெரியலை. சில நேரம் டோட்டலி அவுட் ஆப் கன்ட்ரோல் போய்டறேன்..அதான் எப்படி அந்த  சூழ்நிலையை கையாள்வது என தெரியணும்.. “

ஹ்ம்ம் உன்னையே இந்த அளவுக்கு டென்ஷன் பண்றாங்கனா  பெரிய ஆள்தான்.. ஆமா யார் அது? “ என்றாள் குறும்பாக சிரித்தவாறு..

“எல்லாம் அந்த ராட்சசிதான்.. " என்று மனதுக்குள் புலம்பியவன்

"அது கான்பிடென்சியல். நான் எப்படி என்னை கட்டுபாட்டிற்குள் வைத்துக் கொள்வது என்று  நீ டிப்ஸ் மட்டும் சொல்.. “ என்றான் சிரித்தவாறு...

ரோகிணியும் சிரித்து கொண்டே  அவனிடம் இன்னும் சில கேள்விகளை கேட்டு அவன் மனநிலையை அறிந்து கொண்டு அவனுக்கு சில அறிவுரைகளை வழங்கினாள்.. மகிழனுக்கும் ஓரளவுக்கு மனம் லேசாகியது.

"ரோ.. இதையெல்லாம் பாலோ பண்ணினா கன்டிப்பா கோபம் வராது இல்ல? “ என்றான் சந்தேகமாக...

“ஹா ஹா ஹா கோபம் வரும்..  ஆனால் கண்ணை மூடிகிட்டு ஒன் டூ  த்ரீ சொல். இல்லையா உனக்கு பிடித்த கந்த சஷ்டி கவசத்தை  முழுவதும் சொல்லி முடி.. அதற்குள் உன் எதிரில் இருப்பவ்ர் நொந்து போய் தானா ஆப் ஆகிடுவாங்க.. “ என்று சிரித்தாள் ரோகிணி..

அவனும் அசடு வழிந்து சிரித்தவன்

“ஓகே. ரொம்ப தேங்க்ஸ் ரோ.. இப்பதான் கொஞ்சம் ரிலாக்ஸ்ட் ஆ இருக்கு.. “ என்று  புன்னகைத்தான்..

அவன் புன்னகையை ரசித்தவள்

“யூ ஆர் வெல்கம்..  இட்ஸ் மை ட்யூட்டி.. அப்புறம் மகி .. அபீஸியல் விசயம் தாண்டி பெர்சனாலா  ஒன்னு கேட்கலாமா?? “ என்றாள் தயங்கியவாறு

அவள் என்ன கேட்க வருகிறாள் என்று  புரிய

“நோ ரோ.. இது ஆபிஸ்.. இங்க ஆபிஸ் விசயம் மட்டும்தான்.. “ என்றான் சிரித்தவாறு..

“டேய்.. ஆபிஸ் விட்டா உன்னைத்தான் வெளில புடிக்க முடியலையே.. ஆபிஸ் விட்டா நேரா நீ வீட்டுக்குள்ள போய்ட்டா உன் வீட்டை தவிர மற்றவங்க எல்லாம் மறந்து போய்டறாங்களே.. அப்படி என்னதான் இருக்கோ உன் வீட்ல.. “ என்று முகத்தை  நொடித்தாள் ரோகிணி..

“ஹா ஹா ஹா.. வெளில எங்கும் கிடைக்காத சந்தோசம் உற்சாகமும் எனக்கு என் வீட்லயே இருக்கு ரோ.. “ என்றான் அதே வசீகர சிரிப்புடன்..

"ஹ்ம்ம் அப்படி இருக்கிற வீட்ல எனக்கும் ஒரு ஓரமா இடம்  கொடுக்கலாம் இல்லை.. நானும் உன் வீட்ல ஒரு மெம்பரா ஆய்டறனே. ப்ளீஸ் என் ப்ரபோசலை கன்சிடர் பண்ணலாம் இல்லை.. “ என்றாள்  கண்ணில் மின்னும் காதலுடன் அவனை ஏக்கமாக பார்த்தவாறு..

ரோகிணி- வெள்ளை வெளேரென்ற நிறத்துடன் செல்லுலாய்ட் பொம்மை போல குண்டு கண்களுடன் பார்த்த உடன் சுண்டி இழுக்கும் நிறத்தில் இருப்பவள். அவள் பள்ளி, கல்லூரி காலங்களில் இருந்து அவளை பின் தொடராத ஆண்கள் இல்லை..

எத்தனையோ பேர் அவளை காதலிப்பதாக உருகி உருகி பின் தொடர்ந்தாலும் ஒரு சின்ன சிரிப்பில் அவர்களை கண்டு கொள்ளாமல் தவிர்த்து விடுவாள்.. அப்படி யாரிடமும் மாட்டாமல் தப்பி வந்தவள் தன் கல்லூரி படிப்பை முடித்ததும் இந்த அலுவலகத்தில் சேர்ந்த முதல் நாளே மகிழனை கண்டாள்...

ஆறடிக்கும் மேலான அவன் உயரமும், கட்டுக்கோப்பான ஆளுமையான  தோற்றமும் குறிப்பாக பெண்கள்  யாரிடமும் சென்று வழியாமல் ஒரு ஒதுக்கத்துடன் அவன் பழகிய விதமும் அவள் மனதை கவர, அன்றே அவனிடம் மயங்கி விட்டாள்..

அன்றிலிருந்து அவனையே மறைமுகமாக ரசித்து வந்தாள்.. ஆனால் அவனிடம் சென்று  தன் காதலை சொல்ல தைர்யம் வரவில்லை.. இப்படியே மூன்று வருடங்கள் ஓடி இருக்க, இடையில் ஒரு கவுன்சிலராக மகிழன் முன்பு வேலை பார்த்த டீம் ற்கு கவுன்சிலிங் செஸ்ஸன் எடுத்தாள்.

அதில் மகிழன் சில கேள்விகளை கேட்க, அவனை மெச்சியவாறு அவன் வினாக்களுக்கு பதில் அழித்தாள்.. அதிலிருந்து அவர்களின் நட்பு ஆரம்பமானது.

மகிழன் நட்புடன் பழக, ரோகிணியோ அவன் அறியாமல் காதலை உள்ளே வைத்து பழகி வந்தாள்..மகிழன் அவளுடன் நன்றாக பழக ஆரம்பித்ததும் ஒரு நாள் தைர்யத்தை வரவழைத்து கொண்டு அவனிடம் தன் காதலை சொல்லி அவள் ப்ரபோஸ் பண்ண மகிழனோ சிரித்து கொண்டே அதை மறுத்து விட்டான்..

அதிலிருந்து அவளுடன் பேசுவதையும் குறைக்க, அதை தாங்க முடியாத ரோகிணி மீண்டும் அவனிடம் சென்று  அட்லீஸ்ட் நட்புடன் இருக்கலாம் என்று  கெஞ்சி அவன் நட்பை தக்க வைத்து கொண்டாள்..

ஆனாலும் சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் அவள் அவனுக்காக காத்திருப்பதை மறை முகமாக உணர்த்துவாள்..இந்த நிலையில் தான் மகிழன் தன்  அண்ணன் நிகிலன் மற்றும் மதுவந்தினி கல்யாணத்தை நடத்துவதற்காக நாடகம் ஆடி கனடா சென்று இரண்டு வருடம் தலைமறைவாகி விட்டான்...

மீண்டும் திரும்பி வந்தவன் அதே நிறுவனத்திலயே வேலையை தொடர்ந்தான். இந்த இடைபட்ட காலத்தில் ரோகிணியிடம் இருந்து எந்த தொல்லையும் இல்லாததால் அவள் தன்னை மறந்து விட்டாள் என்ற நிம்மதியுடன் இருந்தான்..

அதனால் தான் தன் பிரச்சனைக்கு தீர்வு தேடி அவளை அணுகினான்.. ஆனால் அவள் மறுபடியும் பழைய பல்லவியை ஆரம்பிக்க,  அதில் அரண்டவன்,

“ஆஹா  .. மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா.. உன் தொல்லை தாங்காம தான் நான் முன்பு கனடா க்கு ஓடினது.. சரி.. நீ அந்த பைத்தியக்கார எண்ணத்தையெல்லாம் விட்டிருப்ப னு நினைச்சேன்.. இன்னும்  அதையேதான் புடிச்சு தொங்கி கிட்டிருக்கியா...

என்னை விட்டுட்டு வேற யார்க்காவது அப்ளிகேசன் போடு ரோ.. உன் டைம் வேஸ்ட் ம் ஆகாது.. “ என்று  சிரித்த்தான் மகிழன்..

“மகி .. 1% கூடசான்ஸ் இல்லையா? என்கிட்ட அப்படி என்ன குறை?.. எத்தனை பேர் என் பின்னாடி சுத்தறாங்க தெரியுமா? ஆனால் எனக்கு என்னவோ உன்னை மட்டுமே பிடிச்சு தொலையுது... யாரை  பார்த்தாலும் உன் முகம் தான் தெரியுது..

உன்னை பார்க்காத இந்த  இரண்டு வருடத்தில எத்தனை முறை உன் போட்டோவை எடுத்து  பார்த்திருக்கேன் தெரியுமா.. ப்ளீஸ் மகி . எப்படியாவது என் காதலை எற்று கொள்..

என் மீதி  நாட்களை  உன்னுடன் கை கோர்த்து இணைந்து வர, ஒரு வாய்ப்பு கொடு.. “ என்றாள் கெஞ்சலாக

“ஐயோ முருகா.. கொடுமை கொடுமை னு கோவில்க்கு போனா அங்க ஒரு கொடுமை  நமக்கு முன்னாடி வந்து குத்தாட்டம் ஆடுச்சாம்.. அந்த மாதிரி அந்த ராட்சசி கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்காக  இந்த மோகிணி கிட்ட வந்து மாட்டிகிட்ட கதையா ஆய்டுச்சே...

சற்று முன்  வரைக்கும் நல்லாதான் பேசிகிட்டிருந்தா.. இப்படி திடீர்னு லவ் டார்ச்சர் மோட் க்கு மாறிட்டாளே.. மகிழா.. சீக்கிரம் எஸ் ஆகிடு.. “ என்று அவன் மனஸ்  எச்சரிக்க

ரோகிணியை பார்த்தவன்

“சாரி ரோ... உனக்கானவன் நான் இல்லை... ஹ்ம்ம் இல்லை எனக்கானவள் நீ இல்லை.. உன்னை பார்த்தால் எனக்கு அப்படி எந்த ஒரு பீல் ம் வரலை.. லவ் எல்லாம் தானா வரணும்.. இப்படி அடம் புடிச்சோ கெஞ்சியோ வரவைப்பதில்லை..

சோ.. நீ உன் டைம் அ  வேஸ்ட் பண்ணாம உன் வீட்ல பார்க்கிற மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிக்கோ.. எனக்காக காத்திருக்கிறேன் னு சொல்லி உன் லைப் ஐ வேஸ்ட் பண்ணிக்காத.. அப்புறம் அதுக்கு நான் பொறுப்பாக மாட்டேன்..

ப்ளீஸ் புரிஞ்சுக்கோ.. என்னால உன்னை லவ் பண்ண முடியாது..டேக் கேர். பை.. “ என்று  சொல்லி எழுந்தவன் வேகமாக அந்த அறையை விட்டு வெளியேறினான்..

“டேய்... இப்படி உருகி உருகி உன்னை  காதலிக்கிற என்னை வேண்டாங்கிற இல்ல.. இதுக்குனே உனக்கு நல்லா உன் சின்டை புடிச்சு ஆட்டி சண்டை போடற சண்டைக்காரிதான் பொண்டாட்டியா வருவா..

இதான் என்னோட சாபம்.. நல்லா குறிச்சு வச்சுக்கோ.. “ என்று ரோகிணி பின்னால் இருந்து கத்தினாள். அதை கேட்டவன் சிரித்து கொண்டே சண்டைக்காரினா என்று நினைக்க அடுத்த நொடி சந்தியா  கண் முன்னே வர

“ஐயோ முருகா.. இவளா? வேண்டவே வேண்டாம்... அதுக்கு நான் சாமியாராகவே இருந்திடறேன்.. “ என்று அலறி பின் சிரித்து கொண்டே வெளியேறினான்..

நேராக கேப்டீயாவிற்கு சென்று  ஒரு ஸ்ட்ராங்கான காபியை வாங்கி கொண்டு  அங்கிருந்த காரிடரில் சென்று நின்று கொண்டு வெளியில் வேடிக்கை பார்த்தான்..ரோகிணி கடைசியாக பேசியதை பிண்ணுக்கு தள்ளியவன் அவன் பிரச்சனைக்கு அவள் சொல்லிய டிப்ஸ் எல்லாம் மனதில் ரிவைன்ட் பண்ணி பார்த்தான்..

அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க அந்த நேரம் மனோகர் அங்கு வந்தான்..

ஒரு பாக்கெட்டில் கை விட்டு கொண்டு  மற்றொரு கையில் காபி கோப்பையுடன் காபியை உறிஞ்சியவாறு  வெளியில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த  மகிழனை கண்டதும் அவனிடம் சென்றவன்

“ஹாய் மகி... என்ன தீவிர யோசனை ?  “ என்று  முதுகில் தட்டியவாறு ஒரு சிக்ரெட் ஐ எடுத்து பற்ற வைத்தான் மனோகர்.

மகிழனும் அவனை பார்த்து நட்புடன் புன்னகைத்தவாறு

“நத்திங் மனோ.. ஆமா.. நீ எப்படி மனோ இத்தனை பேரை சமாளிக்கிற? ..ஒரு மேனேஜரா இருக்கறது ரொம்ப கஷ்டம் இல்லை.. “ என்றான் மனோகரை ஆச்சர்யமாக பார்த்து..

மகிழன் இத்தனை வருடங்கள் இந்த துறையில் இருந்தாலும், இது  நாள் வரை ஒரு  மேனேஜரின் கஷ்டம் அவனுக்கு அவ்வளவாக தெரியாமல் இருந்தது.. ஆனால் சந்தியாவை ஹேண்டில் பண்ண முடியாமல் அவன் திணறும் பொழுதுதான் அவனுக்கு உண்மையிலயே ஒரு மேனேஜராக இருப்பது எவ்வளவு கஷ்டம் என விளங்கியது...

அதனாலயே கிட்ட தட்ட ஐந்து வருடங்களாக மேனேஜராக இருக்கும் மனோகரை இன்று புதிதாக பார்ப்பவனை போல ஆச்சர்யத்துடன் பார்த்தான் மகிழன்..

“ஹா ஹா ஹா .. நீ சொல்றது உண்மைதான் மகி.. ரொம்பவும் கஷ்டமானது தான் இந்த  மேனேஜர் வேலை.. அதுவும் ஐ.டி ல ஒரு  டீம் ஐ மேனேஜ் பண்ணுவது ரொம்பவுமே கஷ்டமானது..

ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி மன நிலையில் இருப்பாங்க. அவங்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து வேலை செய்ய வைக்கணும்.. அவங்களுக்குள்ள ஈகோ எதுவும் குறுக்க வரக்கூடாது...

அப்புறம்  டீம் கொடுத்த ப்ராஜெக்ட் ஐ  சரியா டெலிவரி பண்ணலைனாலும் பண்ணினதில் எதாவது ப்ராப்ளம் ஆச்சுனாலும் க்ளைன்ட்ல இருந்து மேல இருக்கிற மேனேஜ்மென்ட் வரை  முதல்ல மேனேஜரைத்தான் புடிச்சுக்குவாங்க..

எல்லார்கிட்டயும் பதில் சொல்லங்கேட்டி முழி பிதுங்கிடும்.. “ என்றவன் தன் சிகரெட்டில் இருந்து ஒரு தம் ஐ இழுத்து விட்டு..  

“இந்த சிகரெட் இருக்கே... நான் காலேஜ் ல படிக்கிறப்போ எத்தனையோ பிரண்ட்ஸ்  என்னை கம்பெல் பண்ணி இதை புகைக்க வைக்க முயன்றாங்க.. ஆனால் அப்பல்லாம் ஒரு கட்டுப்பாட்டுடன் இருந்து  இதை தொடவே இல்லை...

ஆனால் இந்த வேலைக்கு வந்த பிறகு அதுவும் மேனேஜரா ஆன பிறகு இவனுங்க கொடுக்கிற டார்ச்சர் ல மண்டை காயும் பார்... அதை கூலாக்க, ரிலாக்ஸ்  பண்ண என்று ஆரம்பித்தது இந்த பழக்கம்.. இப்பல்லாம் மணிக்கு ஒன்னு அடிக்கலைனா வேலையே செய்ய முடியலை..

வீட்ல என் பொண்டாட்டி திட்டறா இந்த சனியனை விட்டு தொலைனு.. ஆனால் அவளுக்கு எப்படி தெரியும் நான் படற கஷ்டம்.. இந்த வேலைக்கு பேசாம நாலு எருமை மாடு வாங்கி மேச்சு பால் ஊத்தியாவது பொழச்சுக்கலாம்னு இருக்கும்..

ஆனால் மாசம் ஒன்னாம் தேதியான வீட்டு லோன் இ.எம்.ஐ, கார் லோன் இ.எம்.மை, பத்தாதுக்கு என் தங்கச்சி கல்யாணத்துக்கு வாங்கின பெர்சனல் லோன் இ.எம்.மை னு எல்லாம் வந்து கை கொட்டி சிரிக்கும்... அதுக்காகவாது இந்த பாழாப்போன வேலையை தொடர்ந்துதான் ஆகணும்..  “ என்றான் மனோகர் நொந்து போய்..

அவன் புலம்பலை கேட்ட மகழனும் சிரித்து கொண்டே

“சில் மனோ... டேக் இட் ஈஸி.. நீ  எப்பவுமே கூலாகத்தான் டீம் ஐ  ஹேண்டில் பண்ணுவ.. ஐ அட்மைர் யுவர் மேனேஜிங் ஸ்கில்..கீப் இட் அப்.. எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்..  “ என்று இன்னும் கொஞ்சம் அவனை புகழ்ந்து பின் சிறிது நேரம் மற்ற கதைகளை பேச இருவரும் இயல்பாகினர்..

மனோகரிடம் இருந்து விடை பெற்றவன் அவன் லேப்டாப் வைத்திருந்த இரண்டாவது தளத்தில் இருந்த  அந்த அறைக்கு சென்று இருக்கையில் அமர்ந்தவன் அந்த சாய்வு நாற்காலியில் பின்னால் சாய்ந்து , தன் தலைக்கு பின்னால் கையை வைத்து கொண்டு எதையோ  யோசித்தான்..

ரோகிணி சொன்ன அறிவுரைகளையும் நினைவு கூர்ந்தவனுக்கு ஏதோ புரிந்த மாதிரி இருந்தது...

தான படியாத மாடு  தடி எடுத்து அடித்தாலும் அது படியாது என புரிய, யாரையும் ஸ்ட்ரிக்ட் ஆன விதிகளால் மட்டும் மாற்றி விட முடியாது.. அவர்களையே அதை உண்ர வைக்க வேண்டும் என்று எண்ணி அதுக்கு தகுந்த மாதிரி தன் ஸ்ட்ராடஜியை  மாற்ற எண்ணி திட்டமிட்டான்...

அவன் டெவலப்பராக இருந்த பொழுது ஒரு டீம் எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தானோ  அதையெல்லாம் ரிவைன்ட் பண்ணி பார்த்தான்..

ஓரளவுக்கு அவனுடைய தவறு புரிந்தது.. அனுபவம் ஆக ஆக  இந்த மாதிரி குணங்களும் தானா வந்திடும் போல.. “ என்று  சிரித்து கொண்டவன் அடுத்து தான் செய்ய வேண்டியதை பட்டியலிட்டான்...

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!