அழகான ராட்சசியே!!!-8

 


அத்தியாயம்-8

காலையில் எழுந்த பொழுது இருந்த ஒரு வித அழுத்தம் தன் குடும்பத்தாருடன் சந்தோசமாக அரட்டை அடித்ததில் மனம் லேசாகி இருக்க, உல்லாசமாக  விசில் அடித்த படி தன் காரை செலுத்தினான்... கூடவே விசில் அடித்த படி தனக்கு பிடித்த பாடலை பாடிக் கொண்டே ஓட்டினான்...

தன் அலுவலகத்தை அடைந்ததும் பார்க்கிங் ல்  காரை  நிறுத்தி விட்டு படிகளின் வழியாக தாவி ஏறி கொண்டிருந்தான். சிறு வயதில் இருந்து அவன் தந்தை கற்று கொடுத்தது இது.. எங்கு சென்றாலும் படிகள் வழியாகத்தான் ஏற வேண்டும் என்று.

 

இந்த டிஜிட்டல் உலகத்தில் எல்லாமே இயந்திர மயமாக மாறி இருக்க, மக்கள் எல்லாத்துக்குமே  இயந்திரங்களை பயன்படுத்தி அவற்றை சுறுசுறுப்பாக்கி அவர்கள் சோம்பேறிகளாகி விட்டனர்...

வீட்டில் வாயிலை விட்டு இறங்கியதும் தயாராக காத்திருக்கும்  காரில் அமர்ந்து கொள்வதும் அலுவலகத்தை அடைந்ததும் அங்கிருக்கும் லிப்ட் வழியாகவே செல்ல வேண்டிய இடத்தை அடைந்த பிறகு சில அடிகள் மட்டும் நடந்து தங்கள் இருக்கைக்கு சென்றுவிட்டால் மாலை வரைக்குமே அதே இடம்தான்..

நடுவில் டீ பிரேக், மதிய உணவு க்காக  மட்டும் எழுந்து நடப்பது மட்டும் தான் நம் உடலுக்கு கொடுக்கும்  வேலையாகும்..

இங்கு நடக்க சோம்பேறித்தனம் பட்டு கொண்டவர்கள்  காலையில் எழுந்து ஜிம் ற்கு செல்கிறேன்  என்று பகட்டாக சென்று அங்கிருக்கும் ட்ரெட் மில் ல் ஒரே இடத்தில் இருந்து கொண்டே பல கிலோ மீட்டர் நடந்து விட்டோம் என்று காலரை தூக்கி விட்டு கொள்கின்றனர்.

அதனாலயே மகிழன் முடிந்த வரை உடலை  வறுத்தி செய்யும்  பிசிக்கல் ஆக்டிவிடிஸ் தினமும் சேர்த்து கொள்வான்.. எப்பொழுதும் படிகளையே பயன்படுத்துவது, வாரம் ஒரு முறை சைக்கிள் லயே அலுவலகம் வருவது என்று பழக்க படுத்தி கொண்டான்..

இன்றும் வழக்கம் போல காரை பார்க்கிங் ல் நிறுத்தியவன் படிகள் வழியாக ஏறி கொண்டிருந்தான்..

அது ஒரு ஆறு தளங்களை கொண்ட வணிக கட்டிடம்.. அனைத்து தளங்களுமே அந்த  புகழ் பெற்ற மென்பொருள் நிறுவனம் லீஸ் க்கு எடுத்திருக்க, ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு துறை வாரியான ப்ராஜெக்ட்கள் உடைய டீம்கள்  இருந்தன..

6 தளத்திற்கும் சேர்த்து கேப்டீரியா முதல் தளத்தில் இருந்தது.. அந்த தளத்தின்  ஒரு பகுதி  உணவு உண்ணும் பகுதியாகவும் அதன் ஓரத்தில் தடுத்து சில டிஸ்கஷன் அறைகளும் இருந்தன..

சந்தியா வேலை செய்யும் ப்ராஜெக்ட் மூன்றாவது தளத்தில் இருந்தது..ஒரு கிளைன்ட் உடைய விற்பனை பிரிவிற்கான அனைத்து சாப்ட்வேர்களும் டெவலப் பண்ண வெவ்வேறு  டீம்கள் இருந்தன.. ஒவ்வொரு மாடுல்க்கும்(module) தனித்தனியான டெவ் டீம் இருந்தன.. அந்த சாப்ட்வேரை டெஸ்ட் பண்ண டெஸ்ட்டிங் டீம் இருந்தன..

ஒவ்வொரு அலுவலகத்திலும் வெவ்வேறு மாதிரியான ஆர்க் சார்ட் (org chart) இருக்கும். சில அலுவலகங்களில் டெவ் டீம் டெஸ்ட் டீம் ஒரே துறையாக இருக்கும்.. இருவருமே ஒரே மேனேஜர் க்கு கீழ வேலை பார்ப்பார்கள்..

சில நிறுவனங்களில் டெஸ்ட் டீம் தனியாகவும் டெவ் டீம் தனியாகவும் இருப்பர்.. எந்தெந்த ப்ராஜெக்ட் டெஸ்ட் ரிசோர்ஸ்(resource) தேவையோ டெஸ்ட் மேனேஜர் இடம் கேட்டு அவர் ரிசோர்சை அசைன் பண்ணுவர்..

சந்தியா வேலை செய்யும் அந்த அலுவலகத்தில் இரு டீம் களும் வெவ்வேறு பிரிவாக இருந்தது. அதனால் இருவருக்கும் வேற வேற மேனேஜர்கள்.. டெவ் டீம் இருந்த பகுதியிலயே அவர்களும் அமர்ந்து இருப்பர்..

விற்பனைக்கான ப்ராஜெக்ட் ல் வெவ்வேறு மாடுல்கள் இருக்க டெஸ்ட் டீம் வெவ்வேறாக பிரித்து ஒவ்வொரு மாடுலில் வேலை செய்வர்.. அந்த தளத்துலயெ அவர்களுக்கு  என்று  தனியாக க்யூபிக்கல் கொடுக்க பட்டிருந்தது..

மகிழன் டெவ் டீம் ல் இருந்ததால் அவனுடைய இருக்கையும் சந்தியா வேலை செய்த அதே மூன்றாவது தளத்தில் இருந்தது.

நேற்றைக்கு அந்த ராட்சசியிடம் இருந்து தப்பிக்க அவன் வகுத்த அந்த வ்யூகத்தின் முதல் படியாக, அவனுக்கு இன்று பல மீட்டிங் இருப்பதால் இரண்டாவது தளத்தில் ஒரு கான்ப்ரன்ஸ் அறையை புக் பண்ணி இருந்தான்.. அதனால் மாடி ஏறியவன் நேராக இரண்டாவது தளத்திற்கு சென்று விட்டான்..

“இன்று எப்படியும் அந்த ராட்சசியை பார்க்க கூடாது.. “ என்று திட்டமிட்டு அவள் இருந்த தளத்தை தவிர்த்து அதற்கு கீழ் இருந்த தளத்தில் அவன் புக் பண்ணியிருந்த கான்ப்ரன்ஸ் அறைக்கு சென்று விட்டான்...

“டேய் மகிழா. ஒரு பொம்பளை புள்ளைய பார்த்து இப்படி ஓடி ஒளியறயே.. உனக்கு வெட்கமா இல்லை.. “ என்று அவன் மனசாட்சி காரி துப்பியது.

“ஹலோ மனஸ்.. நான் ஒன்னும் ஒளியலை.. மேல கான்ப்ரன்ஸ் ரூம் எதுவும் காலியா இல்லை.. இங்கதான் காலியா இருந்தது.. அதான் இங்க புக் பண்ணினேன்.. “ என்று  கீழ விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலை என்றவாறு தன் மனசாட்சிக்கு பதில் அழித்தான்

“ம்ம்கூம்.. நம்பிட்டேன்.. பார்க்கலாம் எத்தனை நாளைக்கு நீ இப்படி ஓடி ஒளியறனு.. “ என்று நக்கல் சிரிப்பை சிரித்தது அவன்  மனஸ்..

“சே.. அந்த பிசாசால இந்த மனஸ்   எல்லாம் என்னை  கிண்டல் பண்ற அளவுக்கு வந்திடுச்சு.. “ என்று  மானசீகமாக தலையில்  அடித்து கொண்டவன் அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்து  தன் லேப்டாப் ஐ திறந்து அன்றைய அஜென்டாவை மீண்டும் ஒரு முறை செக் பண்ணினான்..

பின் முன்பே பட்டியலிட்ட வேலையில் கவனம் செலுத்தினான்.. அவன் ஏற்பாடு பண்ணி இருந்த சில மீட்டிங் அட்டென்ட் பண்ண மற்றவர்கள் அந்த அறைக்கு வர, அந்த நாள் காலை முழுவதுமே பரபரப்பாக ஓடியது அவனுக்கு...

சந்தியாவும்  அவள் டெஸ்ட் பண்ண வேண்டிய வேலை இருந்ததால் தன் வால் தனத்தை குறைத்து கொண்டு வேலையில் கவனத்தை செலுத்தினாள்..

திய உணவு இடை வேளையின் பொழுது ஒன்று கூடிய தோழிகள் மூவரும் தங்கள் உணவை சாப்பிட்டு கொண்டிருக்க, சந்தியாவின் கண்கள் அவளையும் அறியாமல் அந்த இடத்தை அலசியது..

அவள்  தேடியவன் கண்ணில் படாமல் இருக்க, அபர்ணாவிடம் திரும்பியவள்

“ஹோய். ஆப்பு.. எங்கடி உங்க ஹீரோ.. காலையில் இருந்து ஆளையே காணோம்.. “ என்றாள் சந்தியா சிரித்தவாறு...

அவளை ஒரு மார்க்கமாக பார்த்த அபர்ணா

“ஹே.. நீ எதுக்கு இப்ப அவரை தேடற?  “ என்றாள்  நமட்டு சிரிப்புடன்..

“சும்மாதான்.. அந்த சிங்கம் நேற்று அப்படி கர்ஜித்ததே.. இன்னைக்கு சத்தத்தையே காணோமே னு தான் . “ என்றாள் அசட்டு சிரிப்புடன்

“ஒரு வேளை சிங்கம் பதுங்குவது  பாய்வதற்கா இருக்குமோ ? “ என்றாள் அதுவரை அமைதியாக உண்டு கொண்டிருந்த அன்பு..

அவளை பார்த்து முறைத்த  சந்தியா

“அது சிங்கம் இல்ல டீ.  புலி.. இப்படி பழமொழி எல்லாம் தப்பு தப்பா படிச்சிட்டு வந்து உளறாத.. “  என்றாள்..

“எதுவா இருந்தால் என்ன டீ? நமக்கு சிங்கம்,  புலி எல்லாம் ஒரே மாதிரிதான் தெரியும்..” என்று அசட்டு சிரிப்பை சிரித்தாள் அன்பு..

பின் மூவரும் கதை அடித்து கொண்டே தங்கள் உணவை முடித்து தங்கள் தளத்திற்கு வர, சந்தியா வின் கண்கள்  அந்த தளத்திலயும் அந்த மங்கி எங்காவது இருக்கிறானா என்று தேடியது..

கிழனோ அன்று  வேலை அதிகம் இருந்ததால் மது கட்டி கொடுத்த ப்ரைட் ரைஸ் ஐ தன் கான்ப்ரன்ஸ் அறையிலயே அமர்ந்து சாப்பிட்டு விட்டு  அந்த புது ப்ராஜெக்ட் ற்கான டிசைனில் முழு கவனத்தையும் செலுத்தினான்..

அதோடு மதியம் ஏற்பாடு பண்ணி இருந்த மற்ற மீட்டிங் ம் முடிய, மாலை 4 மணி அளவில்  மனோ வந்து அவனை காபி சாப்பிட அழைத்தான்..  

மகிழனும் தன் கைகளை  நீட்டி நெட்டி முறித்தவாறு எழுந்தவன் தன் லேப்டாப் ஐ மூடி வைத்து விட்டு கேப்டீரியாவை நோக்கி நடந்தான்..

இருவரும் ஆளுக்கொரு காபியை வாங்கி கொண்டு ஒரு டேபிலில்  அமர, டெஸ்ட் மேனேஜர் வினித் ம் அங்கு வர மூவரும் ஒன்றாக பேசி கொண்டே காபியை பருகினர்..

சில நிமிடங்களில்

“ஹா ஹா ஹா”   என்று அதே சிரிப்பொலி காதில் நாராசமாக பாய்ந்தது மகிழனுக்கு.. திரும்பாமலயே தெரிந்தது அது அந்த ராட்சசி தான் என்று ...

அவள் சிரிப்பை கேட்டதுமே அவன் நரம்புகள் புடைத்தன..கை  முஷ்டி இறுக, உடல் விரைக்க, பல்லை அழுந்த கடித்து கொண்டான்..

“ஆஹா.. காலையில் பார்த்த அந்த ராட்சசி முகம் இல்ல அந்த ஏழரை வேலையை காட்ட ஆரம்பிச்சிடுச்சு போல.. இதிலிருந்து எப்படியாவது தப்பிச்சுக்கணும்.. முருகா.. என்னை காப்பாற்று.. “ என்று தன் நண்பனுக்கு ஒரு அவசர வேண்டுதலை வைத்தான்..

தன் கைகளை ஒன்றோடு ஒன்று கோர்த்துக் கொண்டு தன்னை கட்டுபடுத்தியவன்  அவள் புறம் கவனம் செலுத்தாமல் மற்ற இருவரின் பேச்சை கவனித்தான்..

சிறிது நேரத்தில் மனோ அவனுக்கு அழைப்பு வந்திருக்க, அவசர வேலை என்று எழுந்து சென்றான்..சிறிது நேரம் வினித் உடன் உரையாடிய மகிழன்  பொதுவாக விசாரிப்பதை போல வினித் இடம் அவன் டீம் மெம்பர்ஸ் பற்றி  விசாரித்தான்..

வினித் ம் அவன் டீம் மெம்பர்ஸ் பற்றி சொல்லி கொண்டு வந்தவன்  சந்தியா பற்றி சொன்ன விசயங்கள் மகிழனுக்கு ஆச்சர்யமூட்டின..

“அவனுடைய டெஸ்ட் டீம் லயே வெரி டேலன்டட் சந்தியா மட்டும் தான்..”  என்று  எடுத்த உடனேயே வினித் அவளுக்கு நன்னடத்தை சர்ட்டிபிகேட் தர அதை கேட்டு மயங்கி விழாத குறைதான் மகிழனுக்கு..

“அவ போய் டேலன்டட் ஆ? ஆமாமா.. வாயடிப்பதிலயும் சண்டை போடுவதிலயும் டேலன்டட் தான்.. அவளை அடிச்சுக்க ஆளே இல்லதான்.. “   என்று உள்ளுக்குள் நக்கலடித்தவன் அவனையும் மீறி உதட்டோரம் ஒரு ஏளன புன்னகை பரவியது..

அதை கண்டு கொண்ட வினித்

“நீங்க நினைக்கிறது  புரியுது மகிழன்.. சந்தியா வேலையில் பெர்பெக்ட் ஆ  இருப்பா.. ஆனா கொஞ்சம் வாய்தான் ஜாஸ்தி.. நாம அவளை சரியா கையாண்டம்னா நல்லா கோ ஆப்ரேட் பண்ணுவா..

போன ரிலீஸ் ல புரடக்சன்ல ஜீரோ டிபெக்ட் வந்ததுனா அது அவளாலதான்.. அத்தனை இஸ்யூம் முன்னாடியே  கண்டு புடிச்சா.. ஆனால் எங்க டீம் ஐ யாருமே பாராட்டலை.. அவளுக்கு கொஞ்சம் வருத்தம் .. என்கிட்டயும் கம்ப்ளெய்ன்ட் பண்ணினா.. நான் என் மேனேஜர் கிட்ட இதை பற்றி சொல்லி இருக்கேன்..

அவ சொல்ற மாதிர் டெஸ்ட் டீம் ன ஒரு இளக்காரமா தான் பார்க்கிறாங்க. “ என்று  தன் மனதில் இருக்கும் ஆதங்கத்தை கொட்டினான் வினித்.

அதை கேட்டதும் மகிழனுக்கு ஏதோ புரிந்த மாதிரி இருந்தது.. வினித் சொன்னதை யெல்லாம்  குறித்து கொண்டவன் காபியை முடித்து பின் வினித் உடன் எழுந்து சென்றான்..

வாயிலை  கடக்கையில் அவனுடைய மனஸ் அவள் புறம் திரும்பி பார்க்காதே என்று அவனை எச்சரிக்க, அவளை பார்க்க தூண்டிய ஆர்வத்தை மறைத்து கொண்டு ஒரு பாக்கெட்டில் கையை  விட்டு கொண்டே நிமிர்ந்த நடையுடன் வெளியேறி சென்றான்..

தோழிகளுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தாலும் அந்த கேப்டீரியாவுக்குள் நுழைந்த உடனே மகிழன் அங்கு அமர்ந்து இருந்ததை கண்டு கொண்டாள் சந்தியா..அவள் சத்தமாக சிரிக்கும் பொழுதெல்லாம் அவனிடம் ஏதாவது ரியாக்சன் தெரிகிறதா என்று ஆர்வமாக பார்த்தாள்..

வேண்டும் என்றே சில சமயங்களில் சாதாரண மொக்க ஜோக்குக்கு கூடசந்தியா  அதிக சத்தமாக சிரிக்க, அதை கண்ட மற்ற இரு பெண்களும் புரியாமல் ஒருவருக்கொருவர் கண்ணால் ஜாடை சொல்லி பேசிக் கொண்டனர்..

சந்தியாவின் பார்வை அடிக்கடி  ஒரு பக்கம் சென்று வருவதை கண்டு கொண்ட அன்பு ஓரக் கண்ணால் அவள் பார்வை சென்ற இடத்தை பின் தொடர, அங்கு அமர்ந்திருந்தவனை கண்டதும் ஷாக் ஆகி போனாள்..

மகிழன் தான் அவள் மேனேஜர் வினித் உடன் பேசிக் கொண்டிருந்தான்..உடனே நேற்று அவன் சந்தியாவிடம் கத்திவிட்டு சென்றது நினைவு வர, உள்ளுக்குள் திக் என்றது..அதிலிருந்து அன்பு  எதுவும் சிரிக்காமல் அடக்கி வாசிக்க, சில நிமிடங்களில் அவர்கள் இருவரும் எழுந்து சென்றிருந்தனர்..

மகிழன் எழுந்து செல்வதையே பார்த்திருந்த சந்தியாவுக்கு இன்னும் ஆச்சர்யம்.

“நான் இன்று  இவ்வளவு தூரம் சிரித்தும் அவன் எதுவுமே கண்டு கொள்ளவில்லையே.. ஒரு வேளை திருந்திட்டனா? அது தப்பாச்சே.. அப்புறம் எப்படி நான்  இன்ட்ரெஸ்ட் ஆ அவன் கூட சண்டை போடறது? “ என்று அவசரமாக யோசித்தவள் அருகில் இருந்த அன்புவை கிள்ளினாள்.

அன்பு ஆ  வென்று அலர

“பிசாசு எதுக்கு டி இப்படி கிள்ளற? “ என்று முறைத்தாள்..

“இல்லடி..  நிஜமாகவே நான் காண்பது கனவா இல்லை  நினைவானு தெரிஞ்சுக்கத்தான்.. நேற்று என்னவோ அந்த மங்கி அவ்வளவு  எகிறு எகிறினான்.. இன்னைக்கு  ரொம்ப சைலன்ட ஆ  போறான்...

What is the matter? “ என்றாள் தன் புருவங்களை உயர்த்தி

“ஹ்ம்ம் அதை  நீயே போய் அவர்கிட்ட கேள்.. நானே அவர் வேற நம்ம பாஸ் கூட உட்கார்ந்து பேசி கிட்டிருந்ததை பார்த்து உதறல் எடுக்க உட்கார்ந்திருக்கேன்..எனக்கு என்னவோ நேற்று அவர் சொன்ன மாதிரி நம்மளை பற்றி வினித் கிட்ட கம்ப்ளெய்ன்ட் பண்ணிட்டார் னு நினைக்கிறேன்..

போச்சு.. என் ஹைக் போச்சு.. அத வச்சு நான் என்னவெல்லாம் வாங்கறது னு ஒரு பெரிய லிஸ்ட் ஏ போட்டு வச்சிருக்கேன் டி.. எல்லாத்துலயும் இப்ப மண்ணுதான்..எல்லாம் உன்னாலதான்..  “ என்று புலம்பியவாறு சந்தியாவை முறைத்தாள் அன்பு..

“சில் வம்பு பேபி...அப்படி எல்லாம் அந்த மங்கி அவ்வளவு சீக்கிரம் போட்டு கொடுக்க மாட்டான்.. அப்படியே போட்டு கொடுத்தாலும் நம்ம வின்னி(வினித் ஓட நிக் நேம் ஹீ ஹீ )  பாஸ்தான.. சமாளிச்சுக்கலாம்.. “ என்று சிரித்தாள்..

“ஹ்ம்ம்ம் என்னவோ போ..அப்புறம் உனக்கு சந்தேகம்னா உன்னை கிள்ளி பார்த்துக்கணும் டி. இப்படி அடுத்தவ  கையை புடிச்சு கிள்ள கூடாது..எருமை.. எப்படி வலிக்குது பார்..  “என்று  முறைத்தவாறு தன் கையை தேய்த்துக் கொண்டாள் அன்பு..

“சரி.. சரி..  புலம்பாத டி. நாளைக்கு டீ நான் வாங்கி தர்ரேன்.. “ என்றாள் சந்தியா சிரித்தவாறு

அதை  கேட்டதும் அன்பு முகம் மலர,

“அப்ப நீ இன்னும் இரண்டு கிள்ளு கூட சேர்த்து கிள்ளிக்கோ டி. ஆனால் தினமும் டீ நீ ஸ்பான்சர் பண்ணிடு.. “ என்று அசட்டு சிரிப்பை சிரித்தாள் அன்பு..

மற்ற இரண்டு பெண்களும் அவளை  கலாய்த்து சிரித்தனர்.. பின் சிறிது நேரம் அரட்டை அடித்தவர்கள் எழுந்து தங்கள் தளத்திற்கு செல்ல  மற்ற இருவரும் லிப்ட் வழியாக செல்ல சந்தியா மட்டும் படி வழியாக சென்றாள்..

அவளுக்கும் எப்பவும் இந்த  படிகளில் குதித்து ஏறுவதும் இறங்குவதும் ரொம்ப  பிடிக்கும்.. அதனால் எந்த தளத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும் படிகள் வழியேதான் குதித்தபடி செல்வாள்..

மேல ஏறி வந்தவள் இரண்டாவது தளத்தை அடையவும் நேற்றை போலவே அந்த தளத்தில் இருந்த நுழைவாயிலின்  கதவை திறந்து மகிழன் வேகமாக வெளிவர, இந்த முறை படி ஏறி வரும் சந்தியாவை கண்டதும் உள்ளுக்குள் அபாய சங்கு அலறியது..

உடனே சமாளித்தவன் வேகமாக மீண்டும் உள்ளே சென்று கதவை மூடிக் கொண்டான்..

“ஐயோ முருகா.. ஜஸ்ட் மிஸ்.. இல்லைனா நேற்றைக்கு மாதிரியே இன்றும் அவள் மீது இடித்திருந்தால் அவ்வளவுதான்.. இந்த ஊரையே கூட்டியிருப்பா... எப்படியோ இது வரை இந்த ஏழரைகிட்ட இருந்து தப்பிச்சுட்டேன்..

இன்னும் ஒரு இரண்டு மணி நேரம்..அவ கண்ணுலயே படாம ஓடிட்டா இன்றைக்கு மிசன் சக்சஸ்.. “ என்று உள்ளுக்குள் புலம்பியவாறு  உள்ளேயே நின்று கொண்டான்..

சந்தியா ஏதோ ஒரு பாடலை (என்ன பாடல் னு தெரியுதா பிரண்ட்ஸ்? செந்தூரப்பூவே.. செந்தூரப்பூவே.. என் மன்னன் எங்கே பாட்டுதான்..:) )  ஹம் பண்ணியவாறு  மேல ஏறி மூன்றாவது தளத்திற்கு சென்றதும் நிம்மதி மூச்சு விட்டவன் மீண்டும் கதவை  திறந்து கொண்டு சுற்றிலும் ஒரு முறை பார்த்து கொண்டு அவள் இல்லை என உறுதி செய்து கொண்டு தான் செல்ல வேண்டிய தளத்திற்கு சென்றான்..

அவன் மனசாட்சியோ மீண்டும் ஒரு நக்கல் சிரிப்பை சிரித்தது அவனை பார்த்து... அதை கண்டு முறைத்தவாறு தாவி ஏறி சென்றான்..

மாலை மணி ஆறு ஆனதும் அன்று திட்டமிட்டிருந்த வேலையும் முடிந்திருக்க, தன் லேப்டாப் ஐ மூடியவன் வீட்டிற்கு செல்ல ஆயத்தமானான்..

இன்று எப்படியோ அந்த ராட்சசியிடம் இருந்து தப்பித்து விட்ட நிம்மதி சேர முகத்தில் தானாக புன்னகை அரும்பியது..

“எப்படியோ இவளுக்காக நேற்று இரவு என் மண்டைய போட்டு குடைந்து நான் வகுத்த வ்யூகம் வென்று விட்டது..இன்று முழுவதுமே எந்த பிரச்சனையும் இல்லாமல் கடந்து விட்டேன்..

அந்த ஏழரையிடம் இருந்து எனக்கு விடுதலை.. என் திட்டம் சக்சஸ்... “ என்று தன் காலரை தூக்கி விட்டுக் கொண்டான்...

அதை கண்டு கடுப்பான அவனுடைய மனஸ்

"போடாங்....இப்படி ஒரு பொம்பள புள்ளைக்கு பயந்து கிட்டு தனியா ஒரு ரூம்ல வந்து உட்கார்ந்து கிட்டு தப்பிச்சுக்கிறது தான் உன்னுடைய வ்யூகமா? தூ.. இதை வெளில சொல்லிடாத.." என்று காரி துப்பியது..

"ஹலோ மிஸ்டர் மனஸ்.. உனக்கு என்ன தெரியும் அந்த ரௌடியை பற்றி.. நேற்று ஒன்று இல்ல, இரண்டு இல்ல , மூன்று  தரம் அவ கிட்ட மாட்டி கதி கலங்கிய எனக்குத்தான் தெரியும் அதோட கஷ்டம்..

அதான் இன்னைக்கு எப்படி எல்லாம் அவ கிட்ட இருந்து தப்பிச்சுக்கிறது னு ஒரு பெரிய செக் லிஸ்ட் போட்டு அதன் படி பாலோ பண்ணினேன்.. சீ.. மை ப்ளான் வொர்க்ட்..

அதோடு துஷ்டனை கண்டால் தூர விலகுனு நம்ம முன்னோர்கள் சொல்லி வச்சிருக்காங்க இல்ல.. அவங்க எல்லாம் அனுபவஸ்தர்கள். இந்த மாதிரி எத்தனை ராட்சசியை பார்த்தாங்களோ.. அதனால் அவங்க சொன்னது ப்ரூப்  பண்ணின தியரி.. அதை நாம அப்படியே பாலோ பண்ணனும்..

சோ... நான் என்ன சொல்ல வர்ரேனா.... “  என்று இழுக்க, அதற்குள் பொறுமை இழந்த அவன் மனஸ்

“ஐயா.. சாமி போதும் உன் விளக்கம்..எனக்கு தலை சுத்துது.. சரி.. அப்படியே உன் உலக மகா திட்டத்தை செயல் படுத்தினாலும் அதுக்குள்ள சக்சஸ் னு செலபரேட் பண்ணாத.. “ என்று எச்சரித்தது

“வை நாட்? அதான் ஆபிஸ் முடிஞ்சிருச்சு இல்லை..நான்தான் வீட்டிற்கு கிளம்பிட்டேனே..  இனிமேல் எப்படி நான் தோற்க முடியும்? “ என்றான் நக்கலாக சிரித்தவாறு

“ஹா ஹா ஹா.. இந்த நாள் இன்னும் முடியலை நண்பா.. அப்புறம் வெற்றி பெறுமுன்னே அதை செலபரேட் பண்ண கூடாதுனு  வாட்ஸ்அப்பில கூட ஒரு பார்வார்ட் வந்ததே.. அது மாதிரி எதையும் முன்னாடியே முடிவு செய்து ஓவரா குதிக்காத.. கொஞ்சம் அடக்கி வாசி.. “ என்று நல்ல நண்பனாக எச்சரித்தது..

ஆனால் மகிழனோ அவனுக்கு இருந்த உற்சாகத்தில் அந்த மன்ஸ் சொன்னதை காதில் போட்டு கொள்ளாமல் லேப்டாப் பேக் ஐ  எடுத்து மாட்டி கொண்டு கார் சாவியை  எடுத்து சுழற்றியபடி மாடி படி இருந்த பகுதிக்கு சென்றான்..

இந்த முறை அந்த எக்சிட் கதவை மெதுவாக திறந்து அவள் எதுவும் வருகிறாளா என்று ஒரு முறை சரி பார்த்து விட்டு படிகளில் இறங்கினான்..

நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான் ..

 துணிச்சலை மனத்திலே வளர்த்தவன் நான் நான்..

 

என்று பழைய பாடலை உல்லாசமாக பாடி கொண்டே துள்ளலுடன் தாவி படிகளில் இறங்கி சென்றான்..

பேஸ்மென்ட் ஐ அடைந்ததும் கதவை திறந்து கொண்டு பார்க்கிங் ஏரியாவை அடைந்தவன் குனிந்த படியே தன் கார் சாவியால் காரை ஆன் பண்ணியவாறு தன் கார் நிறுத்தியிருந்த பகுதிக்கு சென்றவன் அப்படியே ஷாக் ஆகி நின்றான்..

அங்கு அவன் கார் அருகில் இடுப்பில் கையை வைத்து அவனை பார்த்து எரித்து விடும் பார்வை பார்த்தவாறு நின்றிருந்தாள் சந்தியா...

அவளை கண்டதும் அதிர்ந்து போனவன் அவள் நின்றிருந்த கோலம் கண்டதும்  இன்று காலையில் தன் கண் முன்னே வந்த அதே தோற்றத்தில் நின்றிருந்தாள்...

“ஆஹா... இந்த மனஸ் சொன்னது உண்மையாயிருச்சு போலவே.. இவ்வளவு நேரம் இவ கிட்ட இருந்து தப்பிச்சுட்டேனு ஹேப்பியா இருந்தா இப்ப எதுக்கு இப்படி கண்ணகி மாதிரி அவதாரம் எடுத்து நிக்கறானு தெரியலையே.. “ என்று  உள்ளுக்குள் புலம்பியவாறு  தன்னை மறைத்து கொண்டு கெத்தாக தன் காரை நோக்கி நடந்தான்..

அவள் அவனையே பார்ப்பது தெரிந்தும் இவனும் அலட்டி கொள்ளாமல் அவளை யாரோ என்ற ஒரு பார்வை பார்த்தவாறு கார் அருகில் சென்றான்.. அவளை கண்டு கொள்ளாமல் தன் கார் கதவை திறக்க போக,

“ஹலோ மிஸ்டர் மங்கி.. உங்களுக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? “ என்றாள் மொட்டையாக..

அவள் தன்னை மங்கி என்றதில் கடுப்பானவன் அதுவரை அவன் போட்டு வைத்திருந்த திட்டம் (அதாங்க துஷ்டனை கண்டால் தூர விலகு.. )  எல்லாம் காற்றில் பறக்க, திரும்பி அவள் அருகில் சென்றவன்

“சொல்லுங்க மேடம்.. நான் என்ன பொறுப்பா நடந்துக்கலை.. அப்புறம் என் பெயர் மங்கி இல்லை.. கால் மீ மகிழன்.. “ என்றான் அவளை முறைத்தவாறு..

“ஆமா அது ஒன்னுதான் குறைச்சல்.. “ என்று முனகியவள்

“ஒரு பொது இடத்தில கார் ஐ பார்க் பண்றப்போ இப்படிதான் பொறுப்பில்லாமல் நிறுத்துவீங்களா? உங்களுக்கு முன்னால் டூ வீலர்ஸ் இருக்கு இல்ல. இப்படி காரை கொண்டு வந்து குறுக்க நிறுத்திட்டா முன்னாடி இருக்கிற வண்டிய எப்படி எடுக்கறதாம்..

கொஞ்சமாவது யோசிச்சீங்களா? உங்களால நான் என் வண்டியை எடுக்க முடியாம அரை மணி நேரமா காத்துகிட்டிருக்கேன்.. இந்த செக்யூரிட்டி வேற இது யார் கார்னு தெரியாதுனு சொல்லிட்டார்.. எவ்வளவு நேரம் இந்த டப்பா காரை எடுப்பதற்காக  நான் நின்னுகிட்டிருக்கேன்.. “ என்று  முறைத்தாள்..

அப்பொழுது தான் அவன் கார் நிறுத்தி இருந்த இடத்தை பார்த்தான்.. அது கொஞ்சம் குறுகிய இடம் என்பதால் முன்னால் நிறுத்தி இருந்த வண்டியை எடுக்க வழி இல்லை.. அவன் காரை எடுத்தால் மட்டுமே முன்னால் இருந்த வண்டியை எடுக்க முடியும்..

“அவள் சொன்னது  போல அங்கு நிறுத்தி  இருக்க கூடாதோ? ஆனால் அங்கு கார்  பார்க்கிங் சைன் இருந்ததே.. அப்புறம் எப்படி? என்று அவசரமாக யோசித்தாலும் தன் தப்பை ஒத்துக் கொள்ள மனம் வராமல்

“லுக் ஹியர்.. பார்க்கிங் சைன் இருக்கு . சோ ஐ பார்க்ட் ஹியர்.. வேணும்னா நீ போய் பெசிலிட்டி கிட்ட கம்ப்ளெய்ன் பண்ணு.. “ என்றான் அதிகாரமாக

“அதெல்லாம் எனக்கும்  தெரியும்.. நீங்க ஒன்னும் எனக்கு க்ளாஸ் எடுக்க வேண்டாம்.. முதல்ல காரை எடுங்க.. எனக்கு லேட் ஆகுது..எப்ப பார் என் கூடவே சண்டை போட வந்திடறது.. “ என்று தலையை  சிலுப்பி கொண்டாள்..

“ஹலோ.. எனக்கும் தான் லேட் ஆகுது.. நீ இப்படி சண்டை போடாமல்  இருந்திருந்தால் இன்னேரம் நான் என் வீட்டுக்கு பாதி தூரம் போயிருப்பேன்.. எனக்கு ஒன்னும்  உன் கூட நின்னு சண்டை போட ஆசை இல்லை..மைன்ட் இட்.. சரியான  பஜாரி.. “ என்றான்

“ஹலோ.. யார் பஜாரி? நீதான் சண்டைக்காரன் ரௌடி. முட்டாள்.. எங்க எப்படி பார்க் பண்ணனும் னு கூட தெரியாம காரை ஓட்டிகிட்டு வந்திடறது.. உனக்கெல்லாம் யார் கார் ஓட்ட  லைசென்ஸ் கொடுத்தா?

“ஹ்ம்ம் உனக்கு யார் லைசென்ஸ் கொடுத்தாங்களோ  அவங்களேதான் எனக்கும் கொடுத்தாங்க..நீ கொஞ்சம் வாயை மூடிகிட்டு போ.. “ என்றான் கடுப்பாகி

அதை கேட்டவள் இன்னும் கோபம் கொப்புளிக்க

“யாரை பார்த்து வாயை மூட சொல்ற.. மங்கி மங்கி கொரில்லா.. “ என்று திட்ட அவன் கோபம் தலைக்கேறியது...

அதற்கு மேல் அங்கு இருந்தால் அவன் தன்னை மீறி அவளை அடித்து விடுவோம் என தெரிய  பல்லை கடித்தவன் காலை தரையில் ஓங்கி உதைத்தவாறு கார் கதவை திறந்து ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவன் கார் கதவை வேகமாக அறைந்து சாத்தியவன் காரை கிளப்பி வேகமாக வெளியேறினான்..

அவன் செல்லும் வேகத்தை கண்டு ஒரு நொடி சந்தியாவுக்கு பயமாக இருந்தது..

“ஐயோ இவ்வளவு வேகமாக போறானே.. முருகா. பத்திரமா போய் சேரணும். “ என்று  தன்னையும் மறந்து  அவனுக்காக வேண்டியவள் அதற்குள் அவன்  திட்டியது நினைவு வர

“ரௌடி.. ஹிட்லர்.. மங்கி .. “ என்று திட்டி கொண்டே தன் தலையை சிலுப்பி கொண்டவள் தன் ஸ்கூட்டியை எடுத்து கிளப்பி சென்றாள்.. செல்லும் வழியில் எல்லாம் பொருமி கொண்டே சென்றாள்..

காரை ஓட்டிக் கொண்டிருந்த  மகிழனுக்கு உள்ளே கொதித்து கொண்டிருந்தது..

“சே.. எவ்வளவு திட்டமிட்டாலும் கடைசியில் போய் அந்த ராட்சசியிடம் மாட்டிகிட்டனே.. வாயாடி.. பஜாரி.. “ என்று திட்டியவாறே காரை வேகமாக ஓட்டினான்..

இன்றும் கோபத்துடன் வீட்டிற்கு திரும்பிய தன் இளைய மகனை கண்ட சிவகாமி “என்னடா.. இன்னைக்கும்  அந்த புள்ளைகிட்ட சண்டை போட்ட போல இருக்கு.. முகமெல்லாம் இப்படி இறுகி போய் இருக்கு.? “ என்று சிரித்து கொண்டே விசாரித்தார்..

“மா.. தயவு செய்து அவளை புள்ளைனு மட்டும் சொல்லாத.. சரியான ராட்சசி..பஜாரி.. பொம்பளை ரௌடி.. சண்டைக்குனே அலையறா.. இவளையெல்லாம் எதுக்கு பெத்து விட்டிருக்காங்கனே தெரியலை.. “ என்று இன்னும் ஏதேதோ சொல்லி திட்டி கொண்டிருந்தான்...

சிவகாமியும் அவனுக்கு சமாதானம் சொல்ல முயல, அவன் மனம் இன்னும் கொதித்து  கொண்டு இருந்தது...

மகிழனை கண்டதும் அருகில் தன் மகளை வைத்து கொண்டு விளையாட்டு காட்டி கொண்டிருந்த மதுவும் தன் மகளை தூக்கி கொண்டு அங்கு தோட்டத்திற்கு வர, மது கையில் இருந்த அந்த குட்டி நித்திலா மகிழனை கண்டதும் அவனிடம் தாவினாள்..

அந்த குட்டி தேவதையின் மலர்ந்த சிரிப்பை கண்டதும் அவன் கோபம் எல்லாம் வடிந்து போனது... மெல்ல புன் சிரிப்புடன் அவளை அள்ளி கொண்டு செல்லம் கொஞ்ச, மதுவும் சிவகாமியும் ஒருவரை ஒருவர் பார்த்து நமட்டு சிரிப்பை சிரித்துக் கொண்டனர்....  


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!