அழகான ராட்சசியே!!!-9

 


அத்தியாயம்-9

றுநாள் காலை சீக்கிரமே அலுவலகம் வந்து விட்டான் மகிழன்..

நேற்று இருந்த கோபம், கொதிப்பு எல்லாம் நேற்று மாலையே தன் அண்ணன் மகளின் மழலை சிரிப்பிலும் அவளுடன் கொஞ்சி விளையாண்டதிலும்  காணாமல் போய் விட, சிறிது நேரத்திலயே இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டான்..

அதன் பின் வழக்கமான உற்சாகத்துடன் தன் குடும்பத்தாருடன் அரட்டை அடிக்க, தன் தங்கையிட்ம வம்பு இழுக்க என நேரம் நல்ல படியாக கடந்து விட்டது..

இன்று காலை எழுந்ததும் வழக்கம் போல தன் உடற்பயிற்சியை முடித்து உற்சாகத்துடனே கிளம்பி அலுவலகம் வந்தான்..

மகிழனின் ஒரு கொள்கை ஈசி கோயிங்..டேக் இட் ஈசி..   முடிந்தவரை எதையும் மனதில் போட்டு அழுத்தி கொள்ளாமல் வாழ்க்கையை இயல்பாக, சந்தோசத்துடன் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் அனுபவிக்க வேண்டும் என்பது..

ஒவ்வொரு நாளையும் புத்தம் புதிதாக, உற்சாகத்துடன் எதிர்கொள்ளவேண்டும் என்று எண்ணுபவன்.. அதன் படியே  முடிந்த வரை அதையே பின்பற்றி வருகிறான்.. அதனாலயே அவனை சுற்றி இருப்பவர்கள் எப்பொழுதும் சிரித்து கொண்டே இருப்பர்..

ஆனால் அவன் கொள்கை, தியரி எல்லாம்  அந்த ஒருத்தியிடம் மட்டும் பலிக்காமல் போய் விடுகிறது.. அவளை  கண்டால் மட்டும் ஏனோ அவன் உள்ளே அவனையும் மீறி கொதிக்க ஆரம்பித்து விடுகிறது...

இன்று காலை எழுந்ததும் மீண்டும் அவள் முகமே கண் முன்னே வர, நேற்றைய அனுபவத்தில் இன்று  அவளுடன் எதுவும் வம்பு வைத்து கொள்ள கூடாது என்ற முடிவுடனே காலையில் கிளம்பி அலுவலகத்துக்கு வந்திருந்தான்..

அலுவலகத்தை அடைந்தவன் முன்னெச்சரிக்கையாக, தன் காரை வேற ஒரு இடத்தில் அதுவும் சுற்றிலும் பார்த்து முன்னே பின்னே வேற வண்டியை நிறுத்தினால் எடுக்க வசதியாக இருக்கிறதா என ஆராய்ந்து பார்த்து ஒரு இடத்தை தேர்வு செய்து , நிறுத்தி விட்டு படியை நோக்கி நடந்தான்..

நேற்று அவன் கார் நிறுத்தி இருந்த இடம் வரவும் அவன் பார்வை தானாக அங்கு சென்றது..கூடவே அவளுடன் சண்டை இட்ட அந்த நினைவும் வர, உடல் இறுகியது.. ஆனாலும் தன்னை கட்டு படுத்தியவன்

“ஒரு வேளை நான் தான் நேற்று தவறாக நோ-பார்க்கிங்(no parking)  இடத்தில் நிறுத்தி விட்டனோ “  என்று எண்ணி பார்வையை அங்கு பதித்து ஆராய, அதே இடத்தில் இன்று மற்றொரு கார் நின்று கொண்டிருந்தது.

“அப்படி என்றால் இது கார் நிறுத்துவதற்கான இடம்தான்.. அப்ப அந்த ராட்சசி  ஏன் அந்த குதி குதிச்சா? “ என்று யோசனையுடன் காரின் முன்னால் நேற்று சந்தியா அவள் வண்டியை நிறுத்தி இருந்த இடத்தை பார்க்க இன்று அந்த இடத்தில் நோ பார்க்கிங் போர்ட் இருந்தது..

“அப்படி என்றால் அவள் தன் வண்டியை நிறுத்தியிருந்த அந்த இடம் தான் வண்டிகளை நிறுத்துவதற்கான இடம் அல்ல என புரிந்தது.. ஆனால் நேற்று அங்கு  அவள் வண்டி இருந்ததே..”  என்று யோசிக்க அவளுடைய ஒரே ஒரு வண்டி மட்டும்தான் நின்றிருந்ததும்  நினைவு வந்தது..

அப்பொழுதுதான் ஏதோ புத்தியில் உரைக்க அருகில் இருந்த கார் நிறுத்த உதவும் உதவியாளரை அழைத்து அந்த இடத்தை சுட்டி காட்டி அது பார்க்கிங் இடமா என்று வினவ அவர் இல்லை என்று தலை அசைத்தார்..

“அப்ப நேற்று மாலை  ஒரு ஸ்கூட்டி நின்றதே? “ என்றான் சந்தேகமாக

“சார்.. இன்னைக்கு மாதிரிதான் நேற்றும் அங்கு நிறுத்த  கூடாதுனு போர்ட் வச்சிருந்தோம்.. வண்டி நிறுத்த இடம் இல்லாததால், யாரோ அந்த போர்டை நகர்த்தி வச்சுட்டு, இந்த கார்க்கு பக்கத்துல ஒரு கார் வெளியில் சென்றிருக்க, அந்த இடைவெளியை பயன்படுத்தி,  முன்னால் சென்று   வண்டியை நிறுத்திட்டாங்க.

அதான் இன்னைக்கு ஸ்ட்ரிக்டா கவனிச்சுகிட்டு வர்ரோம் .. அந்த இடத்துல யாரும் டூ வீலரை நிறுத்த கூடாது என்று. “ என்று விளக்கினார்..

மகழனுக்கு இப்பொழுது எல்லாம் தெளிவானது...

“சரியான சண்டைக்காரினு பார்த்தா பயங்கர ப்ராட் ஆவும் இருப்பா போல இருக்கு.. அவ பொறுப்பில்லாம திருட்டு தனமா வண்டியை நிறுத்திட்டு என்னையை பொறுப்பில்லாதவன் னு திட்டி சண்டைக்கு வந்தாளே..!!

ஓ.. சரியான கேடிதான்.. என்னையே ஒரு நிமிடம் நம்ப வச்சுட்டாளே..நான்தான் தப்பு செய்துட்டேனு நேற்று எல்லாம் கில்ட்டியா இருந்தது.. பார்த்தா  இந்த ப்ராட் இவ்வளவு   பண்ணி இருக்கா..  இவ கிட்ட இன்னும் ஜாக்கிரதையாதான் இருக்கணும்.. “ என்று  புலம்பி கொண்டே படி ஏறி தன் தளத்திற்கு சென்றான் மகிழன்..

ன்று அவளுக்கு பயந்து கொண்டு இரண்டாவது  தளத்திற்கு செல்லாமல் எதுவா இருந்தாலும் நேருக்கு நேரே சந்திக்கலாம் என முடிவு செய்து,  சந்தியா இருந்த மூன்றாவது தளத்தில் இருந்த தனக்கான இருக்கையை நோக்கி நடந்தான் மகிழன்...

செல்லும் வழியில் அவன் கண்கள் தானாக டெஸ்ட்டிங் டீம் அமர்ந்து இருக்கும் பகுதிக்கு சென்றது...அவள் இருக்கை எது என்று தெரியாவிட்டாலும் தோராயமாக வினித் அமர்ந்து இருந்த பகுதிக்கு சென்றது..

அப்பொழுதுதான் ஒரு சிலர் வந்திருக்க, நிறைய இருக்கைகள் காலியாக இருந்தன. சில நொடிகள் தேடி அலைந்த கண்கள் அவளை காணாமல் ஒரு நிம்மதி மூச்சு விட்டவாறு தன் இருக்கைக்கு சென்று அமர்ந்தான்..

பின் தன் லேப்டாப் ஐ ஆன் பண்ணி அன்றைய ஈமெயிலை செக் பண்ண, உடனே சந்தியாவை மறந்து தன் வேலையில் மூழ்கி போனான்..  

இடையில் தன்னுடைய டெவ் டீம் ற்கு மட்டும் அவசர மீட்டிங் ஒன்றை ஏற்பாடு பண்ணி அனைவரையும் அழைத்து சில மாற்றங்களை விளக்கி அதை பாலோ பண்ண சொன்னான்..

சந்தியாவும் நேற்றைய சண்டையை மறந்து விட்டு இன்றும் வழக்கம் போல தாமதமாக எழுந்து  தன் அன்னையிடம் வாங்கி கட்டி கொண்டு அவசரமாக காலை உணவை  முடித்து அவரை கொஞ்சிய படி  கிளம்பி அலுவலகம்  வந்திருந்தாள்..

பார்க்கிங் ல் அவளுடைய வண்டியை நிறுத்தி விட்டு படி நோக்கி நடக்க, அவளும் அதே இடத்தை கடக்க, நேற்று அந்த  மங்கியுடன் சண்டையிட்டது நினைவு வர, தானாக அவள் இதழ்களில் புன்னகை தவழ்ந்தது..

“சரியான மக்கு மங்கி... நல்ல வேளை நான் வண்டியை தப்பா நிறுத்திட்டு அவனை திட்டியதை கண்டு பிடிக்கலை.. சரியான லூசுதான்.. “ என்று சிரித்து கொண்டே இன்று சரியான இடத்தில் தன் வண்டியை நிறுத்தி விட்டு வண்டி சாவியை கையில் சுழற்றியவாறு துள்ளலுடன் மாடி படி ஏறி சென்றாள்...

தன் தளத்தை அடைந்ததும் அனைவருக்கும் காலை வணக்கத்தை உற்சாகத்துடன் சொல்லியவாறு சில பேரிடம் வம்பு பேசி நடந்து கொண்டே பார்வையை சுழற்றியவள் சற்று தொலைவில் டெவ் மேனேஜர் மனோ  இருக்கைக்கு அருகில் ஒரு நெடிய  உருவம் தலை மட்டும் தெரிய,  ஆர்வத்துடன்  உற்று கவனித்தாள்...

அங்கு மகிழன் அமர்ந்திருப்பதை கண்டதும் ஒரு நிமிடம் திக் என்றது..பின் அடுத்த நொடி நக்கலுடன்

“சிங்கம் இன்னைக்கு எனக்கு பயந்து கிட்டு கீழ போய் பதுங்காம நேராகவே சந்திக்க வந்திடுச்சு போல..இன்னைக்கு இவன் கிட்ட எந்த வம்பும் வச்சுக்க கூடாது..

நேற்றே அப்படி கோபமாக  போனான்..இன்று அவனை எதுவும் சீண்டக் கூடாது.. “ என முடிவு செய்து கொண்டு தன் இருக்கைக்கு சென்றாள்..

ஆனால் அவள் முடிவு விரைவிலயே காற்றில் பறந்து போய் நேற்றை விட மோசமாக அவனுடன் சண்டையிட போகிறாள் என அறிந்திருக்கவில்லை...

சண்டைக் கோழிகள் இருவருமே மற்றவர்க்ளுடன் வம்பு இழுக்க கூடாது என தங்களுக்குள் ரகசிய  ஒப்பந்தம் செய்து கொண்டு தங்கள் வேலையில் கவனம் செலுத்த, மதியம் வரை எந்த பிரச்சனையும் இல்லாமல் தான் போனது..

இடையில் டீ ப்ரேக் ற்கு  செல்லும் வழியில் மகிழனை சந்திக்கும் பொழுதெல்லாம் அவனை முறைத்து கொண்டே சென்றாள் சந்தியா.. அவனும் அவளை கண்டு கொள்ளாமல் உதட்டில் ஒரு ஏளன சிரிப்புடன் நிமிர்ந்த நடையுடன் பாக்கெட்டில்  கையை விட்டு கொண்டு கடந்து சென்றான்..

அவன் சிரிப்பின் அர்த்தம் அவளுக்கு புரியவில்லை.

“எதுக்கு இப்படி சிரிக்கிறான்?  என உள்ளுக்குள் குடைந்து கொண்டவள்

"எதுக்கோ சிரிச்சுட்டு போறான்.. அவன் வாய்.. அவன் சிரிக்கிறான்.. எனக்கு என்ன வந்தது?  என்று தன் தலையை சிலுப்பிக் கொண்டவள்  தன் வேலையை தொடர்ந்தாள்..

திய உணவு இடைவேளைக்கு பிறகு  அந்த அலுவலகமே பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் அவர்களுடைய வேலையை முடிக்க வேண்டும் என்று தங்கள் கணினியில் மூழ்கி இருந்தனர்..

சந்தியா வும் அன்பழகியும் சின்சியராக தங்கள் வேலையை செய்து கொண்டிருக்க, மாலை ஐந்து மணி அளவில் டெஸ்ட் டீம் உடைய அன்றைய டெஸ்ட் ரிசல்ட் ஐ தாங்கிய  ரிப்போர்ட் ஈமெயிலில் வந்திருந்தது...

அந்த  ஈமெயிலை திறந்து பார்த்த அன்பு அலறினாள்..அதை கண்ட சந்தியா

“எதுக்குடி இப்படி அலறர?? “ என்றாள் கடுப்புடன்

“இன்னைக்கு என் பக்கம் இருந்து ஒரு டிபெக்ட்  கூட கண்டு பிடிக்க முடியலை டி.மற்ற எல்லாரும் நிறைய கண்டு புடிச்சிருக்காங்க.. நான்தான் ஜீரோ ” என்றாள் வருத்தமாக  

“ஹ்ம்ம்ம் நீ நிஜமாகவே ஒழுங்கா டெஸ்ட் பண்ணினியா ? “ என்றாள் நக்கலாக சிரித்தவாறு..

அதை கண்ட அன்பு அவளை முறைத்து

“ப்ராமிஸ் ஆ டீ .. கண்ணுல விளக்கெண்ணெய் ஊத்தாத குறையா ஒவ்வொன்னையும் நல்லா டெஸ்ட் பண்ணினேன்.. ஆனால் ஒன்னு கூட கண்டு புடிக்க முடியலை..” என்றாள் சோகமாக

“நோ வே..!! நீ டெஸ்ட் பண்ற பகுதியின் டெவ் டீம் கோட் அடிக்கிற லட்சணம்தான் தெரியுமே.. அவனுங்களால டிபெக்ட்  எதுவும் இல்லாம அடிக்கவே முடியாது ... இது எப்படி சாத்தியம்? என்றாள் சந்தியா யோசனையாக..

ஹ்ம்ம்ம் எனக்கும் அதே சந்தேகம் தான் டீ... எனக்கென்னவோ மகிழன் ஏதோ டீம் ஐ மாத்திட்டார்னு நினைக்கிறேன். இல்லைனா இவ்வளவு பெர்பெக்ட் ஆ இருக்காது..”

“ஹ்ம்ம் சரி.  இரு ஆப்புகிட்டயே கேட்கலாம்.. “  என்ற சந்தியா அபர்ணாவிடம் பிங் பண்ணி அங்கு என்ன நடக்கிறது என விசாரிக்க, அபர்ணா வும் விளக்கினாள்..

“மகிழன் டெவ் டீம் க்கு சில மாற்றங்களை கொண்டு வந்ததாகவும் அதில் அவனே டிசைன் டாகுமென்ட் ரெடி பண்ணி அதை  டெவலப்பர்க்கு விளக்கி இருக்கிறான்.. அதே மாதிரி யூனிட் டெஸ்ட் கம்பல்சரி ஆக்கிட்டான்..

அதனால டெவ் டீம் ஏ டெஸ்ட் பண்ணி இஸ்யூ எதுவும் இருந்தால் அப்பயே எல்லா டிபெக்ட்  ஐயும் பிக்ஸ் பண்ணிடறாங்க.. அதுதான் டெஸ்ட் டீம்க்கு வர்ரப்போ எந்த டிபெக்ட் வரலை.. “ என்றாள் சிரித்தவாறு.

“ஐயோ.. இப்படியே போனால் அப்ப நம்ம டீம் ஏ  தேவை இல்லை போல டீ.. அவங்களே டெஸ்ட் டீம் வேலையும் சேர்த்து பார்த்து கிட்டா நம்ம பொழப்பு என்னாவது ?” என்றாள் அன்பு சோகமாக...

“ஹீ ஹீ ஹீ.. ஹோய் வம்பு.. நீ என்னமோ விழுந்து விழுந்து டெஸ்ட் பண்ற மாதிரி பீல் பண்ணாத.. இனிமேல் டெஸ்ட் பண்றேன் பேர் வழி னு நீ ஷோ காமிக்க முடியாது.. மாமியார் வீட்டுக்கு போற மாதிரி பைய தூக்கிட்டு தினமும் ஆபிஸ் வந்துட்டு பெஞ்சை தேய்ச்சுட்டு போவ இல்ல..

அதெல்லாம் மாறப் போகுது..ஜாலியா சுத்தி கிட்டிருந்த உங்களுக்கு ஆப்பு வைக்கத்தான் எங்க தல வேற திட்டம் வச்சிருக்கார்.. சீக்கிரம் உங்களுக்கு விளக்குவாராக்கும்..” என்றாள் அபர்ணா நக்கல் சிரிப்புடன்...

அதை கேட்ட அன்பு

“ஐயயோ.. இது வேறயா? அப்படி என்னடி திட்டம்..? “ என்றாள் கொஞ்சம் கலவரத்துடன்

“ஹீ ஹீ ஹீ.. அது சீக்ரெட்.. கான்பிடன்சியல்.. சொல்ல மாட்டேனே.. “ என்றாள் அபர்ணா  சிரித்தவாறு

“ஹோய் ஆப்பு.. ரொம்ப துள்ளாத.. உனக்கு வந்த வாழ்வை பார்... ஒழுங்கா சொல்லுடி முட்ட கண்ணி.. இல்லைனா உன் பின்னாடியே ஒருத்தன் சுத்திகிட்டிருக்கான் இல்ல.. அவன் கிட்ட டிப்ஸ் கொடுத்து உன்னை புரபோஸ் பண்ண வச்சுடுவேன்..ஒழுங்கா பிகு பண்ணாம சொல்லு டீ.. “ என்று மிரட்டினாள் சந்தியா..

“ஐயோ.. அத மட்டும் பண்ணிடாத டீ சந்தி.. நீ சொல்றதையெல்லாம் கேட்கறேன்.. ஏற்கனவே அவன் லவ் டார்ச்சர் தாங்க முடியல.. போற பக்கம் எல்லாம் பின்னாடியே பாலோ பண்றான்..” என்று அலறினாள் அபர்ணா..

“ஹா ஹா ஹா.. அது.. அந்த பயம் இருக்கட்டும்.. சரி சொல்லு..  என்ன அந்த பொல்லாத ராணுவ ரகசியம் அந்த மங்கி போட்டு வச்சிருக்கானாம்... “ என்றாள் முகத்தை நொடித்தவாறு

“வந்து... டெஸ்ட்டிங் எல்லாம் ஆட்டோமேசன் பண்ண போறாங்களாம்..நீங்க எல்லாம் இனிமேல்  டெஸ்ட் ஆட்டோமேசன் ஸ்க்ரிப்ட் எழுதணுமாம்.. இன்னும் என்னென்னவோ எங்க தல மகிழன் உங்க பாஸ் வினித் கிட்ட பேசி கிட்டிருந்தார் டி.. நான் அந்த வழியா போறப்போ எதேச்சையா கேட்டேன்..” என்று முடித்தாள் அபர்ணா..

“ஓ.. அதான் அந்த மங்கியும் அந்த வின்னியும் அப்பப்ப கூடி கூடி பேசிக்கிறாங்களா? ஆமா... அந்த மங்கி எப்ப உங்க தல ஆனான் ? “ என்றாள் உதட்டை ஏளனமாக வளைத்து..

“ஹீ ஹீ ஹீ.. மகிழன் வந்ததில் இருந்தே எங்க டீம் ஏ அவருக்கு பேன் ஆகிட்டோம் தெரியுமில்ல... ஹீ இஸ் வெரி ஆக்டிவ் அன்ட் சார்ம். வெரி டேலன்டட் டீ.. அதனாலதான் இந்த சின்ன வயசுலயே ஆர்கிடெக்ட் ஆகிட்டார்..நீங்களும்  அவர்கிட்ட முட்டிகிட்டு நிக்காம அவர் சொல்றதை எல்லாம் கேளுங்க.. அதான் உங்களுக்கு நல்லது.. “ என்று ஒரு நக்கல் சிரிப்பு ஸ்மைலியை அனுப்பினாள்..

அபர்ணா மகிழனை புகழ்ந்து பேசியதை கண்டதும் சந்தியாவுக்கு பற்றி கொண்டு வந்தது...அதில் கடுப்பானவள்

“ஹே.. போதும் நிறுத்து டீ.. ரொம்பத்தான் பெருமை பீத்திக்காத..அவன் எவ்வளவு பெரிய தலை யா இருந்தாலும் என் கிட்ட பப்பு வேகாது..

ஆமா.. அந்த மங்கி இல்ல உங்க தல சொன்ன உடனே இந்த வின்னியும் மண்டைய மண்டைய ஆட்டினானாக்கும்... எங்களையெல்லாம் ஒரு வார்த்தை கேட்காம எப்படி எல்லாத்தையும் மாற்றலாம்?... எல்லாம் அந்த மங்கியால வந்தது.. சீக்கிரமே அவனுக்கு இருக்கு..  பார்க்கலாம் என்னெல்லாம் கொண்டு வர்ரானு.. “ என்று  பல்லை கடித்தாள் சந்தியா..

அதன் பின் எந்த பிரச்சனையும் இல்லாமல் அந்த நாள் கடந்து சென்றது..

டுத்த நாள் அலுவலகத்துக்கு வழக்கம் போல துள்ளலுடன் வந்தாள் சந்தியா..அவள் பகுதியை அடைய, அங்கு அன்பழகி முன்னதாகவே வந்தவள் தன் லேப்டாப் ஐ யே பார்த்த படி கன்னத்தில் கை வைத்த படி அமர்ந்து இருந்ததை கண்டவள்

“குட் மார்னிங் டீ வம்பு... ஆமா.. ஏன்டி இப்படி காலங்காத்தாலயே கன்னத்துல கை வச்சு கிட்டு உட்கார்ந்து இருக்க.. எனக்கு தெரிந்து நீ கப்பல் எதுவும் வாங்கலையே..

அப்படியே வாங்கி இருந்தாலும், அத நீ கடல்ல விட்டு அது கவுந்து போனாகூடா நீ இப்படி உட்கார மாட்டியே.. வாட் இஸ் தி மேட்டர்.?  “ என்று அன்புவின் முதுகில் அடித்தவள் தன் இருக்கையை இழுத்து அமர்ந்தாள் சிரித்தவாறு..

“ஹ்ம்ம் நானே நேற்று நைட் வரைக்கும் கஷ்டபட்டு டெஸ்ட் பண்ணி ஒரே ஒரு டிபெக்ட் ரைஸ் பண்ணினேன் டி.. அதையும் அந்த டெவ் டீம் ரிஜெக்ட் பண்ணிட்டாங்க..அதான் கவலையா இருக்கு..  “ என்றாள் சோகமாக...

“ஆங்.. எவஅவன்.. உன் டிபெக்ட் ஐ ரிஜெக்ட் பண்ணினது? எங்க காமி..”  என்றாள்..

அன்புவும் அதன் உடைய டீடெயிலை காமிக்க, அதை பார்வை இட்ட சந்தியா  

“ஹே..  இது கண்டிப்பா டிபெக்ட் தான்... ஆமா..  நீ டெவ் டீம் கிட்ட சண்டை போட்டியா? எதுக்கு ரிஜெக்ட் பண்ணினாங்கனு?

“ஹ்ம்ம்ம் அவங்க கிட்ட சண்டை போட்டு திரும்பவும் ரீஓபன் பண்ணிட்டேன் டீ.. ஆனால் அவங்க அந்த ஆர்கிடெக்ட் மகிழன் கிட்ட நேரா போய்ட்டானுங்க.. அவனும் இல்ல இல்ல அவரும் அதை பார்த்துட்டு அது சரியாதான்  இருக்குனு ரிஜெக்ட் பண்ணிட்டார்.. எனக்கு கிடைச்சது ஒரே ஒரு டிபெக்ட். அதுவும் போச்சே... “ என்று ஒப்பாரி வைக்காத குறையாக புலம்பினாள் அன்பு..

“ஹ்ம்ம் சரி சரி.. நீ ஒப்பாரி வைக்காத டீ.. நான் இதை  டீல் பண்ணிக்கறேன்.. ஆமா எங்க இருக்கிறான் அந்த நெட்டை மங்கி இப்ப? “ என்றாள் கடுப்புடன்

“ஐ திங் உனக்கு பயந்து கிட்டு இன்னைக்கு இந்த ப்ளோர்க்கு  வரலை போல டி.. முந்தா நாள் மாதிரி, செகண்ட் ப்ளோர்லயே ஒரு கான்ப்ரன்ஸ் ரூம் ஐ குத்தகைக்கு எடுத்துகிட்டு அங்கயே டேரா போட்டுட்டார் போல..

இந்த டெவ் டீம் தான் கீழ போய் அப்பப்ப அவரை   பார்த்துட்டு வர்ராங்க..உன்னை பார்த்தா அவ்வளவு பயம் போல.. “ என்று சிரித்தாள் அன்பு..

“ஓ.. கதை அப்படி போகுதா?  என்னை கண்டு ஓடறவனை இன்னும் கொஞ்சம் ஓட வச்சு இந்த ப்ராஜெக்ட் ஐ விட்டே இல்லை இல்லை இந்த ஆபிஸ் ஐ விட்டே ஓட வைக்கிறேன் பார்.. “ என்று  சிரித்தவள் தன் லேப்டாப் ஐ எடுத்து கொண்டு  நேராக மாடிப் படியை நோக்கி நடந்தாள் சந்தியா..

“ஆல் தி பெஸ்ட் சந்தி.. இந்த டிபெக்ட் ஐ மட்டும் எப்படியாவது அக்செப்ட் பண்ண வச்சுடு.. உனக்கு ரொம்ப புண்ணியமா போகும்.. “ என்று  பின்னால் இருந்து அன்பு சொல்லி சிரித்க சந்தியாவும் சிரித்தவாறு கடகடவென்று படிகளில் இறங்கி கீழ் தளத்திற்கு சென்றாள்..

மகிழன் இருந்த அறையை அடைய நல்ல வேளையாக மற்றவர்கள் யாரும் அங்கு இல்லை அப்பொழுது.. உடனே கதவை திறந்து கொண்டு வேகமாக உள்ளே சென்றாள் சந்தியா..

மகிழன் அப்பொழுது தான் ஒரு ப்ராப்ளத்திற்கு டெவ் டீம் சொல்யூசன் கண்டு பிடிக்க முடியாமல் அவனிடம் கொடுத்து இருந்தனர்.. முன்றைய மீட்டிங் முடிந்ததால் அந்த  அறையிலயே அமர்ந்து மண்டையை போட்டு கசக்கி அதை டீபக் பண்ணி கொண்டிருந்தான்...

ஓரளவுக்கு நூல் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் இன்னும் கொஞ்சம் நோண்ட, அதே நேரம் அறை கதவை திறந்து கொண்டு புயல் என உள்ளே வந்தாள் சந்தியா..

இந்த புயல், படி வழியாக இறங்கி வரும்பொழுது வேகம் இல்லை..ஜாலியாக அவளுடைய பேவரைட் பாடலை பாடி கொண்டே தாவி தாவி இறங்கி வந்தவள் மகிழன் அமர்ந்து இருந்த  அந்த அறையை அடைந்ததும் தன் கோபத்தை  காட்டவேண்டும் என்று எண்ணி வேகமாக கதவை திறந்து உள்ளே சென்றாள்..

திடீரென்று தன் முன்னே வந்து நின்றவளை கண்டதும் திடுக்கிட்ட மகிழன்

“ஐயோ முருகா... நேற்று ஒரு நாள் இவ தொல்லை இல்லாமல் நிம்மதியா என் வேலையை செய்தேன்.. அதுக்குள்ள உனக்கு அது பொறுக்கலையா.. இப்படி காலங்காத்தாலயே இந்த ராட்சசியை ஏவி விட்டிட்டியே..

அப்படி என்ன என்மேல் வயிற்றெரிச்சல் உனக்கு? ஏதோ கனடா போய்ட்டதால, போன வருசம் உனக்கு காவெடி எடுக்க முடியலை.. அத மனசுல வச்சுகிட்டு என்ன வச்சு செய்யற போல இருக்கே.. இது உனக்கே அடுக்குமா? “ என்று அவசரமாக உள்ளுக்குள் புலம்பியவன் இருந்தாலும் தன்னை வெளிக் காட்டாமல் தலையை நிமிர்ந்து பார்த்து  விட்டு மீண்டும் தன் லேப்டாப்பில் கவனம் செலுத்தினான்..

ஆனால் உள்ளுக்குள் மட்டும் “ஆல் இஸ் வெல்.. “ என்று  சொல்லி தன்னை அந்த சந்தி புயலை எதிர் கொள்ள தயார் படுத்தி கொண்டிருந்தான்..

தன்னை கண்டும் அவன் அவளிடம் என்னவென்று கேட்காமல் தன் லேப்டாப்பில் தலையை நுழைத்து கொண்டவனை கண்டதும் இப்பொழுது நிஜமாகவே கோபம் கரை புரண்டு ஓடி வந்தது சந்தியாவுக்கு..

“என்ன ஒரு திமிர்? .. எப்படி ஒரு இளக்காரமான லுக்.. “ என்று மனதில் பொரிந்தவள்

“ம்கூம்.. “ என்று தொண்டையை செருமினாள்..அவன் இப்பொழுதும் தலையை நிமிர்த்தாமல் இருக்க

“ஹலோ மிஸ்டர் மங்கி .. “ என்றாள் அதிகாரமாக.

அவன் இப்பொழுதும் தலையை நிமிர்த்தவில்லை.. பின் அவன் அருகில் சென்றவள்

“ஹலோ மிஸ்டர்... உங்களைத்தான்.. “  என்றாள் அவன் முன்னே சொடக்கு போட்டு..

அதில் தலையை நிமிர்த்தியவன்

“யெஸ் மிஸ்.. நீங்க என்னையவா கூப்டிங்க?.. என் பெயர் மகிழன்.. நீங்க மங்கினு உங்க பிரண்ட் யாரையோ இங்க வந்து தேடறீங்கனு நினைச்சிட்டேன்...

சரி சொல்லுங்க என்ன விசயம்? “ என்றான் மிடுக்காக..

அவனுடைய மிடுக்கான பதிலும் அவன் தன்னை மங்கிக்கு பிரண்ட் என கூறவும் அதை கேட்ட சந்தியா இன்னும் கொதிக்க ஆரம்பித்தாள்..

“நான் யாரை தேடறேன் னு உங்களுக்கு எப்படி தெரியுமாம் மங்கி சார்.. சரி நான் வந்த வேலையை பார்க்கறேன்.. யார்  மங்கி மாதிரியோ, கொரில்லா மாதிரியோ  எப்படியோ  இருந்தா எனக்கு என்ன?  என்று முகத்தை நொடித்து தலையை சிலுப்பியவள் தன் லேப்டாப் ஐ அவன் முன்னே வைத்து அன்பு ரைஸ் பண்ணி  இருந்த டிபெக்ட் ஐ சுட்டி காட்டி

“இது எப்படி டிபெக்ட் இல்லை என்று  சொல்வீர்கள்

இது  சரியாக வொர்க் ஆகலை.. அதனால் இது டிபெக்ட் தான்..”  என்று  கோர்ட்டில் வாதாடுவதை போல குரலை  உயர்த்தி பேசி ஆர்க்யூ பண்ணினாள்..

மகிழன் அதை பார்த்து விட்டு அவன் பக்கம் இருக்கும்  விளக்கத்தை சொல்ல, இரண்டு பேருமே ஒத்து கொள்ளாமல் சில நிமிடங்கள் ஆர்க்யூ பண்ணினர்..

மற்றவர்களாக இருந்திருந்தால் சந்தியாவிடம் ஆர்க்யூ பண்ண முடியாமல் ஜகா வாங்கி அவள் சொல்லுவதற்கு மண்டையை ஆட்டி இருப்பர் இந்நேரம்.. ஆனால் மகிழன் அசையாமல் நின்று  அவளை எதிர்க்க, சந்தியாவுக்கு  இன்னும் கோபம் கொதித்து கொண்டு  வந்தது..

மீண்டும் அவனிடம் தன் பக்கம் தான்  சரி என்று வாதாட, அதில் தன் பொறுமை காற்றில் பறக்க, கண்ணில் கோபம் மின்ன அவளையே முறைத்து பார்த்தவன்

“ஏய்...உனக்கு வேற வேலையே இல்லையா? ஆமா.. இது நீ டெஸ்ட் பண்ணினதே இல்லையே.. அப்புறம் எதுக்கு நீ விளக்க வந்திருக்க. போய் அன்பழகியை வரச் சொல்”  என்றான்.. எப்படியாவது அவளிடம் இருந்து தப்பித்து கொள்ள.

நம்ம சந்தியா அவ்வளவு சீக்கிரம் விட்டுடுவாளா என்ன ? அவளும் சளைக்காமல் தொடர்ந்தாள்..

“ஹலோ.. இது மட்டும் என்ன நீங்க அடிச்ச கோடா? நீங்க எதுக்கு இதை ரிஜெக்ட் பண்ணினிங்க.. நீங்க எப்படி உங்க டீம் க்கு சப்போர்ட் பண்றீங்களோ அதே மாதிரி நான் என் டீம் க்கு சப்போர்ட் பண்றேன்..

ஐ வான்ட் ஜஸ்டிஸ்.. இன்டியா வான்ட்ஸ்  டு நோ... “ என்றாள் தன் கையை அந்த டேபிலில் தட்டி ஒலி எழுப்பியவாறு.. அதில் இன்னும் கடுப்பானவன்

“ஆமா.. நீயே ஒரு ப்ராட்.. உன்னை பற்றி  எனக்கு தெரியாதா ? நேற்று முன்தினம் ராங்க் ப்ளேசில் நீ பொறுப்பில்லாம உன் ஓட்ட ஸ்கூட்டியை பார்க் பண்ணிட்டு என்னவோ  நான் பொறுப்பில்லாம பார்க் பண்ணிட்டேனு என்கிட்ட சண்டைக்கு வந்தவ இல்லை நீ... “ என்றான் நக்கலாக சிரித்தவாறு..

அதை கேட்டு திடுக்கிட்டவள்

“ஆஹா.. நம்ம வண்டவாளம் எப்படி தெரிந்தது இவனுக்கு? அதான் நேற்று நக்கலா சிரிச்சானா ?  ஹ்ம்ம் சமாளிப்போம்.. “ என்று அவசரமாக யோசித்தவள்

“ஆங்.. அது ராங்க் பார்க்கிங் னு  நீங்க முன்னாடியே கண்டு புடிச்சிட்டு என்கிட்ட ஆர்க்யூ பண்ணி இருக்கணும்.. அது தெரியாம நீங்க தோத்து போய்ட்டா அதுக்கு நான் எப்படி பொறுப்பாவேன்.. “ என்றாள் தன்  தோளை குலுக்கியவாறு..

“ஆமாம்... நீ இப்படி ப்ராட் பண்ணுவனு தெரிஞ்சிருந்தால் ஒரு டிடெக்டிவ் வச்சாவது உண்மையை கண்டு புடிச்சிருப்பேன்.. நீதான் சண்டைக்குனு அலையறவ ஆச்சே.. “

“ஹலோ.. மிஸ்டர் மங்கி.. மைன்ட் யுவர் வோர்ட்ஸ்.. யார் சண்டைக்காக அலையறா? என் பிரண்ட்க்கு ஒரு நியாயம் கேட்டு வந்தா நான் சண்டைக்காரியா? நீதான் சண்டக்காரன்..”

“ஆமாம். நான்தான் சண்டக்காரன்.. இப்ப உன் கூட சண்டை போட எனக்கு நேரமில்லை.. எனக்கு நேரம் இருக்கிறப்ப சொல்லி அனுப்பறேன்.. அப்ப வா சண்டை போடலாம்..இப்ப நீ இடத்தை காலி பண்றியா?  “ என்றான் மீண்டும் நக்கலாக சிரித்தவாறு..

“ஆமாம்..இவர் பெரிய பில் கேட்ஸ் இல்ல  சுந்தர் பிச்சை..எவ்ரி மினிட் கவுண்ட்ஸ் னு டயலாக் விட.. எப்ப பார் சும்மா நான்தான் பெரிய ஆள் மற்றவங்க எல்லாம் முட்டாள் னு திமிரா சுத்தறது.. நான் சொல்றதை எல்லாம் அப்படியே எல்லாரும்  கேட்டுக்கணும்னு ஹிட்லர் மாதிரி ஒரு தெனாவெட்டு.. “ என்று இன்னும் அவனை திட்டி அடுக்கி கொண்டே போனாள்..

அதை கேட்டவன் ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் 

“வில் யூ ப்ளீஸ் ஷட் அப் ?... உன்னையெல்லாம் எதுக்கு இப்படி பெத்து விட்டிருக்காங்கனே தெரியலை? நீயே இப்படி இருக்கனா உன் வீட்ல இருக்கிறவங்க உன்னை விட மோசமாத்தான் இருப்பாங்க .. “ என்றான் கடுப்புடன்

“ஹலோ மங்கி..மைன்ட் யுவர் வோர்ட்ஸ்.. என்  குடும்பத்தை பற்றி பேச உனக்கு எந்த தகுதியும் இல்லை.. ஒரு பொம்பளை மாதிரி இவ்வளவு தூரம் நின்னு சண்டை போடறனா  உன்னைத்தான் எதுக்கு பெத்து விட்டிருக்காங்கனே தெரியலை... நீயே இப்படி சண்டைபோடறனா  உன்னை பெத்தவளும் பயங்கர சண்டைக் காரியாதான் இருப்பாங்க... “ என்று சொல்லி முடிக்கும் முன்னே  

“ஏய்.......” என்று அவள் கன்னத்தை நோக்கி கையை இறக்கி இருந்தான் மகிழன்.. ஒரு மில்லி மீட்டர் இடைவெளிதான் அவள் கன்னத்துக்கும் அவன் உள்ளங்கை க்கும்..

அவன் தீடீரென்று கை ஓங்கவும் அதை கண்டவள் ஒரு நொடி திகைத்து, அதிர்ந்து, பயந்து  கண்ணை இறுக்க மூடி கொண்டாள்..

யாராவது அடிக்க வரும் பொழுது கண்ணை இறுக்கி மூடிகொண்டு பயந்து நடுங்கும் குழந்தையை போல கண்களை  இறுக்கி மூடி கொண்டு சிறு நடுக்கத்துடன் நின்றவளை கண்டதும் அவன் கை  தானாக நின்று போனது..

தன் அன்னையை பற்றி அவள் பேசியதும் அவனுக்கு வந்த கட்டு கடங்காத  கோபத்தில் கை ஓங்கி இருக்க, அவள் கன்னத்தில் அறையும் முன்னே அவளின் அந்த பயந்த தோற்றத்தை கண்டவன் என்ன அவனை கட்டு படுத்தியதோ நொடியில் தன்னை கன்ட்ரோல் பண்ணியவன் அவன் கை அவள் கன்னத்தை தொடுமுன்னே நிறுத்தியவன் உடனே தன் கையை பின்னால் இழுத்து கொண்டான்..

கோபம், திகைப்பு, அதிர்ச்சி, பயம் என்று  பலவகையான உணர்ச்சிகளையும் காட்டி வாயடைத்து நின்றாள் சந்தியா..பின் சில நொடிகளில் சுதாரித்து கொண்டவள் அவன் கை ஓங்கியது நினைவு வர, மரியாதை எல்லாம் காற்றில் பறக்க

“டேய்.. நான் என்ன உன்  பொண்டாட்டியா ? ..பேசி கிட்டு இருக்கிறப்பவே கையை ஓங்கற..பொம்பளைங்கனா அவ்வளவு இளக்காராமா போச்சா?.. நீயும் ஆர்க்யூ பண்ண வேண்டியது தான..

அதை விட்டு கையை ஓங்கற... இரு நான் உன்னை HR கிட்டயே கம்ப்ளெய்ன்ட் பண்றேன்.. “ என்று ஒரு எரித்து விடும் பார்வை பார்த்து காலை தரையில் உதைத்து அங்கிருந்து கோபத்துடன்  வேகமாக வெளியேறி சென்றாள் சந்தியா...

அவள் சென்ற பிறகுதான் புரிந்தது அவன் செய்ய இருந்த தவறு...

பெண்களை எப்பவும் மதிப்பவன் மகிழன்.. அவன் வீட்டில் பெண்கள்தான் அதிகம்.. யாரிடமும் இது மாதிரி நோக பேசியதில்லை.. அதுவும் கையை ஓங்கும் பழக்கம் எல்லாம் இல்லவே இல்லை..

அவன் கை ஓங்கியது மட்டும் அவன் அன்னை  சிவகாமிக்கு தெரிந்தது என்றால் நன்றாக மொத்திவிடுவார் அவனை.. அதை உணர்ந்ததும் அவனை நினைத்தே அவனுக்கு வெறுப்பாக இருந்தது..

“சே.. நான் ஏன் இவகிட்ட மட்டும் என் கன்ட்ரோலை இழந்து விடுகிறேன்.? என்னுடைய இயல்பான குணமே இவள் முன்னால் தொலைந்து விடுகிறது...இவ கிட்ட வம்பு வச்சுக்க கூடாதுனு ஒதுங்கி போனாலும் இந்த ஏழரை தானா தேடி வந்து வம்பு இழுக்கறாளே...

இவ கிட்ட மட்டும் நான் போட்டு வைக்கிற எந்த திட்டமும் பலிக்காமல் போய் விடுகிறது... அவள் முன்னால்  வேற ஒருவனாக மாறி விடுகிறேனோ??

இல்லை..  இது தப்பு.. இந்த குணத்தை வளர்க்க கூடாது.. “ என்று  உறுதி செய்தவன் அடுத்து எம்ப்ளாய்ஸ் கவுன்சிலிங் லீட் ரோகிணி முன் போய் நின்றான்...


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!