நிலவே என்னிடம் நெருங்காதே!!-4

 


அத்தியாயம்-4

ரளவுக்கு தன் பேரன் தவழ ஆரம்பித்ததுமே நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் அவனை தன் அறைக்கு தூக்கி சென்று விடுவார் தேவநாதன்..

சிறு வயதிலயே திருமணம் முடித்து ஒரு குழந்தைக்கு தாயாகிவிட்டாலும் மனோகரியும் இன்னும் சிறு பெண்ணாக இருந்தாள்.. தன் மகனை பெரிதாக கண்டு கொள்ளவில்லை..

மாறாக அவள் விரும்பிய பகட்டான வாழ்க்கையும் தன் கணவனுடன் பல இடங்களுக்கு சென்று சுற்ற வேண்டும் என்ற அந்த வயதிற்கே உரித்தான ஆசைகள் நிறைந்து நிக்க, அவள் கவனம் எல்லாம் அதிலயே இருந்தது..

அதற்கு ஏற்றார் போல் அதிரதனுக்கு  ஒரு வயது முடிந்ததும் அவனை தேவநாதனிடம் விட்டுவிட்டு தன் கணவனை அழைத்து கொண்டு இரண்டாம் ஹனிமூன்க்கு சென்று விட்டாள்..

அதிரதனும் தாத்தாவிடம் அதிகம் ஒட்டி கொண்டதால் அன்னையை பெரிதாக கண்டு கொள்ளவில்லை..

அதனால் அவன் முழுநேரம் தேவநாதன் பாசத்தில் வளர ஆரம்பித்தான்..

தாத்தா என்றால் கொள்ளை பிரியம் அவனுக்கு.. சிறுவயதில் இருந்தே தேவநாதனை பார்த்து வளரவும் அவர் நடையும் அவர் செய்யும் பாவனையும் எல்லாம் அவன் மனதில் பதிந்து விட்டது..

சில சமயம் அவரைப் போலவே நடந்து காட்டுவான்..  அதைக்கண்டு தேவநாதன் தன் பேரனை அள்ளி அணைத்து கொஞ்சுவார்.  ..

தன் மகன் நெடுமாறனின்  பயந்த சுபாவமும்,  எந்த ஒரு முடிவையும் தைரியமாக தனியாக  எடுக்க முடியாமல் தடுமாறுவதையும் கண்ட தேவநாதன் அடுத்து அந்த ஜமீன் வாரிசாக தன் பேரன் தான் வருவான் என்று முடிவு செய்தவர் தன் பேரனுக்கு ஆரம்பத்திலிருந்தே தைரியத்தையும் வீரத்தையும் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்..

அவருடைய ஜமீனை  பற்றி நிறைய கதை சொல்லுவார்.. அதையெல்லாம் கேட்டு ஒரு வித பூரிப்புடனும் பெருமையுடனும் வளர்ந்தான்  அதிரதன்..

அவனுடைய ஐந்தாவது வயதில் மனோகரி மீண்டும் கருவுற்றிருக்க இந்தமுறை அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தாள்.. அவளுக்கு அமுதினி  என்ற பெயரிட்டு மகிழ்ந்தார் தேவநாதன்..

அமுதினி தேவநாதன் மனைவியை போல முகத்தோற்றமும் ஜாடையிலும்  இருக்க தன் பேத்தியையும் கொண்டாடினார் தேவநாதன்..

ஆனால் அமுதினிக்கு அவள் தாத்தாவின் பெரிய மீசையை கண்டால் பயம்... அவர் அருகில் செல்லவே தயங்குவாள்.. அதனால் அவள் தன் அன்னையிடமே ஒட்டிகொள்வாள்...

வாழ்க்கை சக்கரம் இன்பமாய் சுற்றிக் கொண்டிருக்க நாட்கள் வேகமாக ஓடின..

இந்த நிலையில் மனோகரியின் பிறந்த வீட்டில் முற்றிலுமே நொடித்து விட்டனர்..

பேத்தியை பார்க்கும் சாக்கில் ஜமீனுக்கு வர ஆரம்பித்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அடிக்கடி வர ஆரம்பித்தனர்..   

மனோகரியின் உடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணன் சுந்தர் மற்றும் ஒரு தங்கை சுதாகரி..  அவளுடைய அண்ணன் வளர்ந்து நின்றாலும் பொருப்பில்லாமல் ஊரை சுற்றிக் கொண்டு இருந்தான்.. 

அதை கண்டு மனோகரியின் பெற்றோர்கள் அவனை திட்ட, தன் அண்ணன் நிலை கண்டு மனம் இறங்கிய  மனோகரி தன் கணவனிடம் கேட்டு ஒரு தொகையை வாங்கி கொடுத்து அவனை சொந்தமாக தொழில் தொடங்க சொன்னாள்..

அவனும் ஒரு  தொழிலை சொந்தமாக ஆரம்பிக்க ஆரம்பித்த சில மாதங்களிலேயே இழுத்து மூடிவிட்டான்..

மனோகரி தன் மகனுக்கு உதவியதை கண்ட அவள் பெற்றோருக்கு மனம் குளிர்ந்து போனது.. உடனே இவளை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக தங்களுக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு தன் மகளை அடிக்கடி வந்து பார்த்தனர்..

அவர்கள் குடும்ப நிலையை சொல்லி புலம்ப  மனோகரியும் அவர்களுக்கு அரிசி பருப்பு என்று ஸ்டோர் ரூம் ல் இருக்கும் பொருட்களையும் கூடவே செலவுக்கு பணமும் கொடுத்து அனுப்புவாள்..  

ஆரம்பத்தில் தன் மகளிடம் புலம்பி அவளாக கொடுத்ததை வாங்கி சென்றவர்கள் நாளாக நாளாக அவர்களாகவே ஸ்டோர் ரூம்க்கு சென்று தங்களுக்கு வேண்டியதை எடுத்து செல்ல ஆரம்பித்தனர்..

அந்த ஜமீனின் சம்பந்தி என்ற முறையில் வேலைக்காரர்களும் அவர்களை தடுக்கவில்லை... அவர்கள் சுரண்ட ஆரம்பித்தது அரிசி பருப்போடு இருந்திருந்தால் பிரச்சனை வந்திருக்காது...

கொஞ்சம் கொஞ்சமாக தன் மகளிடம் நயமாக பேசி அவளுடைய நகைகளையும் அபகரிக்க ஆரம்பித்தனர்...

மனோகரி அணிந்திருக்கும் நகையை கண்டதும்

“மனோ..  இந்த செயின் உனக்கு சூப்பரா இருக்கு.. இதுவே சுதா போட்டாள் இன்னும் நல்லா இருக்கும்.. ஆனால் அவளுக்கு வாங்கி போட்டு அழகு பார்க்க எங்களுக்குத்தான் வக்கு  இல்லை..”  என்று அவள் அன்னை பாரிஜாதம் மூக்கை உறிஞ்ச  அதில் மனம் இலகியவள் உடனேயே தன் கழுத்தில் கிடந்ததை கழற்றி தன் தங்கைக்கு என கொடுத்து விடுவாள்..

அன்றிரவே தன் கணவனிடம் கொஞ்சி வேற ஒன்றை அடுத்த நாளே வாங்கி கொள்வாள்..

இப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக மனோகரியின் நகைகள் அவள் பிறந்த வீட்டில் அடைக்கலம் ஆக ஆரம்பித்தன..

இந்த நிலையில் அவள் தங்கை சுதாகரி திருமணமும் வந்தது.. தன் மூத்த மகளிடம் இருந்து அடித்த நகைகளையும் பணத்தையும் வைத்தே  இளைய மகளின் திருமணத்தை முடித்து விட்டனர்..  

தேவநாதன் அங்கு நடப்பது எல்லாம் தெரிந்திருந்தாலும் சம்பந்தி என்ற முறையில் கண்டிக்காமல் விட்டுவிட்டார்.. அங்கேதான் தவறு செய்தார் அந்த பெரியவர்..

மளிகை பொருட்கள் தான் என்று ஆரம்பத்தில் விட்டவர் அதன் பிறகு கொஞ்சம் நகை தானே போகிறது போகட்டும் நொடித்தவர்கள் இதை வைத்து பிழைத்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டார்..  

ஆனால் அவர் கண்டுக்காமல் விட்ட அந்த விஷச்செடி வேகமாக வளர்ந்து அவர் குடும்பத்தையே தாக்கப் போவதை அறிந்திருக்கவில்லை அவர்..

ன் இளைய மகளின் திருமணத்தை முடித்தும் தன் மூத்த மகளிடமிருந்து சுரண்டுவதை நிறுத்த வில்லை மனோகரியின் பெற்றோர்கள்..  

மீண்டும் தன் மூத்த மகளை காண வரும் பொழுது எல்லாம் எதையாவது காரணத்தைச் சொல்லி ஏதாவது பிடிங்கி சென்று விடுவார் பாரிஜாதம்...

அதுமாதிரி ஒரு முறை பாரிஜாதம்  தன் மகளை காண வந்திருக்க அப்பொழுது அவர் கழுத்தில் ஒரு அட்டிகையை போட்டுக் கொண்டு வந்திருந்தார்..

அது மனோகரி உடையது.. மனோகரி முன்பு ஒருமுறை தான் அணிந்திருந்த அந்த அட்டிகையை கழற்றி வைத்திருக்க, அதை தன் மகளுக்கே தெரியாமல் அடித்து சென்று விட்டார் பாரிஜாதம்..

அடுத்த நாள் மனோகரி அதை காணாமல் ரகளை செய்து அந்த வீட்டு வேலைக்காரர்களை எல்லாம் விசாரித்தது அதிரதனுக்கு நினைவு இருந்தது..    

அந்த அட்டிகை இப்பொழுது தன் பாட்டியின் கழுத்தில் இருப்பதை கண்ட அதிரதன் அது தன் அன்னை உடையது என்று கண்டு கொண்டவன் தன் பாட்டியிடம் இருந்து  அதை பிடுங்க முயன்றான்..  

மனோகரியின்  அன்னை பாரிஜாதத்திற்கு அதிரதனை ஆரம்பத்தில் இருந்தே பிடிக்காது.. தங்களுக்கும் பேரன்தான் என்ற பாசம் சிறிதும் இல்லை..

அதுவும் அவன் அவனுடையை தந்தை வழி தாத்தாவையே உரித்து வைத்து பிறந்ததும் அவர்கள் வரும் பொழுதெல்லாம் அவர்களை நிக்க வைத்து ஏதாவது கேள்வி கேட்டு நக்கலாக சிரிப்பதும் அவர்கள் எடுத்து செல்லும் பைகளை எல்லாம் ஆராய்ந்து அவன்  வீட்டு பொருட்களை எதற்கு எடுத்து செல்கிறார்கள் என்று கேள்வி கேட்டு முறைப்பதும் கண்டு அவர்களுக்கு அவனை பிடிக்காமல் போனது..

அன்று பாரிஜாதம் தன் அன்னையின் அட்டிகையை  போட்டிருப்பதை கண்டு கொண்டவன் நேராக சென்று தன் தாத்தாவிடம் சொல்லி விட்டான்..

அவருக்கும் இதெல்லாம் முன்பே தெரியும் என்றாலும் தன் பேரன் அவர்கள் செய்யும் தவறை கண்டு கொண்டு திருத்த முயற்சிக்கிறான்..  அவன் முன்னால் அவர்களை கண்டிக்க வேண்டும்.. இல்லை என்றால் அவன்  மனதில் இந்த மாதிரி தப்பு செய்வதும் சரிதான் என்று படிந்துவிடும் என்று எண்ணியவர்  

“ரதன்..  நீ போய் அவர்களை வரச்சொல்..  என்று மிடுக்குடன் சொல்ல,  உடனே அதிரதன் துள்ளலுடன் சென்றவன் தன்  பாட்டியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வந்து தேவநாதன் முன்பு நிறுத்தினான்...

தன் சம்பந்தியை பார்த்தவர்

“இனிமேல் இப்படி செய்யாதீர்கள்..எதுவாக இருந்தாலும் என்னிடம் கேளுங்கள் தெரியாமல் எடுப்பது தவறு.. “  என்று அவர்களை திட்டி அனுப்பி வைக்க அதிரதனுக்கு பெரும் மகிழ்ச்சி...

தாத்தாவைப் போலவே தவறு நடப்பதை கண்டிக்க வேண்டும் என்று அவன்  மனதில் பதிந்து கொண்டான்..  

ஆனால் அந்த நிகழ்ச்சி பாரிஜாதம் மனதில் வஞ்சத்தை விதைத்தது.. தன்னை அந்த கிழவனிடம் மாட்டிவிட்ட தன் பேரனை கண்டு உள்ளே  கொதித்தது..

கூடவே இந்த கிழவன் இருப்பதால் தானே தன் சொந்த மகளின்  வீட்டிலயே யாருக்கும் தெரியாமல் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது.. இதுவே தன் மகளுடைய வீடாக இருந்தால்  யாரும் கேள்வி கேட்காமல் எடுத்துச் செல்ல முடியும்..    என்று யோசித்தவர் அடுத்து இந்த கிழவனை எப்படி இந்த ஜமீனில் இருந்து அகற்றுவது என்று யோசிக்க ஆரம்பித்தார்...

அப்பொழுதுதான் அவர் தன் பேரன் மீது உயிராக இருப்பதும் பேரன்தான் ஜமீனின் அடுத்த வாரிசு என்று அவர் சொல்லிக் கொண்டிருப்பதும் நினைவு வர உடனே அந்த பேரனை அவரிடமிருந்து பிரிக்க வேண்டும் என்று திட்டமிட்டார்..

அதன் படி அடுத்த முறை தன் மகள் வீட்டிற்கு வந்த பொழுது தன் பேரனுக்கு பிடித்த சாக்லேட் மற்றும் தின்பண்டங்கள் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்து தன் பேரனிடம் கொடுத்து அவனை தூக்கி கொஞ்சினார் பாரிஜாதம்..  

அதிரதனுக்கு ஆச்சர்யமாக இருந்தது..

என்றும் தன்னை கொஞ்சாத பாட்டி தன் தங்கையை மட்டுமே தூக்கி வைத்து கொஞ்சுபவர் தன்னையும் கொஞ்சவும் திகைப்பாக இருந்தது அவனுக்கு..

அதுவும் பாட்டியின் அன்பை அறிந்திராத அந்த பாலகனுக்கு பாரிஜாதம் அவனை தூக்கி பேராண்டி என கொஞ்சவும் உள்ளுக்குள் பூரித்து போனான் அதிரதன்..

கொஞ்சம் கொஞ்சமாக பாரிஜாதம் இடமும் ஒட்ட ஆரம்பித்தான்.. அதை பயன்படுத்தி கொண்டு பாரிஜாதம் தன் பேரன் மனதில் அவன் தாத்தாவை பற்றி தவறான கருத்துக்களை  விதைக்க ஆரம்பித்தார்..

ஆனால் அதிரதன் ஆரம்பத்தில் அதை எல்லாம் நம்பவில்லை.. அவனுக்கு அவனுடைய தாத்தா தான் ஹீரோ.. அப்படியிருக்க தாத்தாவை பற்றி தவறாக சொல்வதை எல்லாம் நம்பாமல் அதை எல்லாம் அப்படியே சென்று அவன் தாத்தாவிடம் சொல்லி விட்டான்..  

அப்பொழுதுதான் விழித்துக் கொண்டார் தேவநாதன்.. பாரிஜாதத்தின்   வில்லத்தனமும் தன் பேரனை வைத்து அவர் செய்யும் சகுனி வேலையும்    புரிய ஆரம்பித்தது அவருக்கு..

இதை வளர விடக் கூடாது என்று முடிவு செய்தவர் பாரிஜாதத்தை தனியாக கூப்பிட்டு கண்டித்தார். அடிக்கடி ஜமீனுக்கு வரக் கூடாது என்று கட்டளையிட்டார். அதில் கொதித்துப் போன பாரிஜாதம் சமயம் பார்த்து காத்திருந்தார் தேவநாதனை அடிக்க..

அதற்கு வாய்ப்பும் விரைவில் கிடைத்தது..! 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!