அழகான ராட்சசியே!!!-12
அத்தியாயம்-12
காலையில் செட்யூல்
பண்ணி இருந்த தன் இன்டர்வ்யூ எல்லாம் முடித்தவன் அவனுடைய டீம் மெம்பர்களுடன் சாப்பிட கேப்டீரியா
வந்திருந்தான்... அமர்வதற்கு இருக்கையை தேட, ஒரே ஒரு
டேபில் மட்டும் காலியாக இருந்தது..
சரி அங்க போகலாம் என்று எண்ணி எட்டு வைக்க, அப்பொழுதுதான் சந்தியா தன் சிக்கன் பிரியாணியை வாங்கி கொண்டு பக்கத்து
டேபிலில் அமர்ந்தாள்.. அவளை கண்டவன் ஒரு நொடி
அதிர்ந்து போனான்..
“ஐயோ.. அவ பக்கத்துலயா ? வேண்டவே வேண்டாம்.. அந்த ஏழரையே நாமலே தேடிப்போன மாதிரி ஆய்டும்.. “ என தயங்கி நிற்க, அதற்குள்
டெவ் லீட் அஜய்,
“தல.. அங்க ஒரு டேபில் இருக்கு பார்.. வாங்க
அங்க போகலாம்.. இல்லைனா வேற யாராவது அங்க துண்ட போட்டு சீட் போட்டிடுவாங்க.. சீக்கிரம் வாங்க..” என மகிழனை இழுத்து கொண்டு அங்கு விரைந்தான்...
சந்தியாவுக்கு பின் பக்கமாக அமர்ந்ததால்
அவளும் தனக்கு பின்னால் அமர்ந்தவனை கண்டு கொள்ளவில்லை.. அவள் பாட்டுக்கு அன்புவிடம்
கதை அடித்து கொண்டிருக்க, அவள் பண்ணிய சீட்டிங்
எல்லாம் அவனுக்கும் கேட்டது..
அதை கேட்டு அவனுமே
“சரியான ப்ராட் இல்ல கொள்ளக்காரியாவும் இருப்பா போல
இருக்கே...” என்று உள்ளுக்குள் திட்டி கொண்டே அவர்கள் கதையை கேட்டு கொண்டிருந்தவன்
இடையில் சந்தியா இந்த காசெல்லாம் தன் பொண்ணுக்காக
என சொல்லவும் ஏனோ திக் என்றது அவனுக்கு..
“அப்படி என்றால் இவள் திருமணம் ஆனவளா? இல்லையே பார்த்தால் அப்படி தெரியலையே? “ என்று
அவசரமாக யோசித்தான்..
அதே நேரம் அங்கு வந்த மயில் ம் சந்தியா
சொன்ன தன் பொண்ணு என்பது காதில் விழுந்திருக்க, அருகில்
வந்தவன்
“அக்கா.. இல்ல.. சந்தியா உங்களுக்கு பொண்ணு இருக்கா? அப்ப கல்யாணம் ஆகிடுச்சா? “என்றான் ஆச்சர்யமாக..
மகிழன் உள்ளே உறுத்திக் கொண்டிருந்த அதே கேள்வி
மயிலும் கேட்டிருந்தான்.. சந்தியா அதுக்கு என்ன சொல்ல போகிறாள் என தெரிந்து கொள்ள ஆர்வமாக காதை தீட்டி வைத்து
கொண்டான்..
அவன் ஆழ் மனமோ அப்படி எதுவும் இருக்க கூடாது என வேண்டி கொண்டது
அவனையும் அறியாமல்..
அவன் கூறியதை கேட்ட அன்பு
“ஹோய் வாகனம்.. நீ ஏன் அவ்வளவு ஆச்சர்யமா கேட்கற? ஏன் சந்தியா வை பார்த்தால் பொண்ணு
இருக்கிற மாதிரி தெரியலையா? அப்ப நீ அவளை சைட் அடிச்சிருக்க? கரெக்ட் ஆ? “ என்று கலாய்த்தாள்..
“ஐயயோ அப்படியெல்லாம் இல்ல அன்பு கா...
சும்மா பார்த்தால் அப்படி தெரியலையேனு கேட்டேன்.. “ என்று அசடு வழிந்தான்..
“ஹ்ம்ம் அது..எங்க கேங்க் ல இருக்கணும்னா இந்த மாதிரி சைட் அடிக்கிறது , யாரையாவது பார்த்து கமெண்ட் அடிக்கிறது, கடலை போடறது இதெல்லாம் இருக்க கூடாது.. ஒழுங்கா கொடுத்த
வேலைய மட்டும் பார்க்கணும் புரிஞ்சுதா? “ என்று மிரட்டினாள்
அன்பு..
அடுத்த டேபிலில் அமர்ந்து அவர்களையே
பார்த்து கொண்டிருந்த அஜய் அருகில் இருந்த
அவன் நண்பன் ப்ரவீன் இடம் திரும்பி
“டேய் மச்சான்.. யார் டா அவன் புதுசா அந்த
ரௌடி சந்தியா கேங் ல இருக்கான்.. இவ்வளவு நாளா பார்த்ததில்லையே.. “ என்றான் யோசனையுடன்..
“நியூ ஜாய்னி டா.. டெஸ்ட்டிங் டீம்ல இன்னைக்குத்தான்
புதுசா ஜாய்ன் பண்ணி இருக்கான்..”
“அடப்பாவமே... பாவம் போயும் போயும் இந்த
ரௌடி கேங்க் ல போய் சேர்ந்துட்டானே.. அந்த சந்தி இன்னும் ஒரு வாரத்துக்கு அவனை வச்சு செய்ய
போறா... நல்லா பலி ஆடாய்ட்டான்.. “ என்று சிரித்தான் அஜய்...
ஏனோ அவனுக்கும் சந்தியாவுக்கும் முதல்
நாளில் இருந்தே முட்டி கொண்டது.. எப்ப பார்த்தாலும் இருவரும் முறைத்து கொண்டே
இருப்பர்.. அஜய் கொஞ்சம் ப்ளே பாய் கேரக்டர்..
அங்கு இருக்கும் பெண்களை ஓர கண்ணால் சைட்
அடிப்பதும் கிண்டல் செய்வதும் அவன் பொழுது போக்கு.. அதை பொறுக்காமல் சந்தியா அவனிடம் அடிக்கடி சண்டைக்கு சென்று விடுவாள்..
அதிலிருந்து அஜய் கொஞ்சம் அடக்கி வாசிப்பான்..
அதுவும் அவள் இருக்கும் நேரத்தில் மூச்சு
விட மாட்டான்..இன்று அவளை பற்றி ப்ரவீனிடம் மெதுவாக பேசி திட்டி கொண்டிருந்தான்.
அவர்கள் சந்தியா பற்றி பேசியதையெல்லாம்
இல்லை திட்டியதையெல்லாம் மகிழனும் கேட்டு கொண்டிருந்தான்..
அவர்களும் அவளை ரௌடி, ராட்சசி என்று சொல்லி திட்ட
“அப்ப இந்த ஆபிஸே அவளை பற்றி தெரிஞ்சு வச்சிருக்கு போல..நான்தான்
அவளை பற்றி தெரியாம வாலண்டியரா போய் மாட்டினனா? “ என்று எண்ணி சிரித்து கொண்டான்...
ஆனாலும் அவள் சற்று முன் சொன்ன தன் பொண்ணு என்பது யாரையா இருக்கும் ? என்று யோசித்தவாறே தன் டேபிலில்
இருந்தவர்களின் உரையாடலில் கலந்து கொண்டான்..
சந்தியா கேங் ஏதேதோ அரட்டை அடித்து பேசி சிரித்து கொண்டிருக்க, மயில் மனதில் மட்டும் அவள் சொன்னது ஓடி கொண்டே இருந்தது.. ஒரு வழியாக எல்லாரும்
சாப்பிட்டு முடித்திருக்க, அதுவரை தன் மண்டையை குடைந்து
கொண்டிருந்தவன்
“சந்தியா... வந்து... அந்த பொண்ணு மேட்டர்? நிஜமாகவே உனக்கு பொண்ணு இருக்கா? சொல்லிடேன். இல்லைனா
என தலைல குடைஞ்சு கிட்டே இருக்கும்.. “ என்றான் மயில் அசட்டு சிரிப்புடன்..
“ஹே.. இரு இரு.. அவளுக்கு பொண்ணு இருந்தா உனக்கு
ஏன் மண்டை குடையுது? “ என்றாள் அன்பு அவனை
மேலும் கீழும் பார்த்து முறைத்தவாறு
“ஐயோ சாரி அன்பு.. அவங்களுக்கு பொண்ணு
இருக்குமா? இருக்காதானு?
குடைஞ்சுகிட்டே இருக்கும்.. மத்தபடி ஒன்னும் இல்லை.. அவங்க எனக்கு சீனியர்.. அவங்க கிட்ட போய் வச்சுக்க முடியுமா? “ என்றான் பாவமாக
“ஹ்ம்ம்ம் அது.. “ என்று மிரட்டிய அன்பு
“அது வந்து மயில்வாகனம்.. நம்ம சந்தியா
இருக்கிறாளே அவள் ஒரு அன்னை தெரசா
மாதிரி.. இந்த கம்யூனிட்டி செர்விஸ், சோஸியல்
செர்விஸ் னு சொல்வாங்களே அதில் எல்லாம் கொஞ்சம் ஆர்வ கோளாறு அதிகம்..
அதில ஒன்னுதான் அனாதை ஆசிரமத்தில இருக்கிற ஒரு
பொண்ணை அடாப்ட் பண்ணி அவளுக்கான படிப்பு செலவையெலலாம் அவளே பார்த்து கிட்டு வர்ரா.. வாரா வாரம் அந்த பொண்ணை பார்க்க போய்டுவா..
அதான் நாங்க எல்லாம் அவ பொண்ணுனு ஓட்டி கிட்டிருப்போம்..
அதனால் நான் சொல்ல வர்ரது என்னன்னா நம்ம சந்தி ஒரு கல்யாணம் ஆகாத எலிஜிபில் பேச்சுலர்.. இல்ல
பேச்சுலரி..
அவங்கப்பா அவளுக்கு மாப்பிள்ளை தேடி கிட்டிருக்கார்.. உனக்கு தெரிஞ்ச
இ.வா இல்ல இல்ல நல்லலலல மாப்பிள்ளை யாராவது இருந்தாலும் நீ ரெகமண்ட் பண்ணலாம்.. ஆனா நோ புரோக்கர் கமிசன்.. டீலா? “ என்று சிரித்தாள் அன்பு..
அதை கேட்டு கடுப்பான சந்தியா
“ஹோய் வம்பு.. விட்டால் என்னை கல்யாண சந்தையில
விக்கற மாதிரி ஏலம் விட்டுடுவ போல இருக்கு.. இப்ப எதுக்கு என் கதையெல்லாம் அவன் கிட்ட
சொல்லி கிட்டிருக்க? “ என்று முறைத்தாள் சந்தியா
“ஹீ ஹீ ஹீ இல்லடி நம்ம மயில் ரொம்ப ஆர்வமா
கேட்டானா.. அதான்..கதை சொல்ற எபக்ட் வந்திருச்சு... “
“ஹ்ம்ம்ம் உனக்கு கதை சொல்ல ஆர்வம் னா உன்
கதையை எடுத்து விடு.. நீ ஒன்னும் என்னை
பற்றி சொல்ல வெண்டாம்.. இதோட அடங்கிக்க.. “ என்று
முறைத்தாள் சந்தியா..
அன்பு சொன்னது எல்லாம் தவறாமல் மகிழன் காதிலயும் விழுந்தது..முதலில்
அவள் திருமணம் ஆகாதவள் என்ற நல்ல செய்தியை கேட்டதும் ஒரு மூலையில் நிம்மதி பரவியது
மகிழனுக்கு. அதன் பிறகு அன்பு அவளை பற்றி
சொன்னதும் அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது..
“பார்ப்பதற்கு விளையாட்டு பிள்ளையாக
சண்டக்காரியாக, வாயாடியாக தெரிபவள் உள்ளே இப்படி ஒரு
நல்ல குணமா? “ என்று ஆச்சர்யமாக இருந்தது..
அதே ஆச்சர்யத்துடன் மதிய உணவை முடித்து தன்
இருக்கைக்கு திரும்பியவன் தன் வேலையை தொடர்ந்தான்
கிட்ட தட்ட 6 மணி
அளவில் அன்றைய இரண்டாம் சுற்று நேர்காணலை முடித்த
மகிழன் அதனுடைய முடிவுகளை மனோகரிடம்
கொடுக்க சென்று கொண்டிருந்தான்..
அப்பொழுது வேகமாக ஓடி வந்த ப்ரவீன்
“தல.... ஒரு நிமிசம்.. “ என்று மகிழனை நிறுத்தினான்..
“என்ன ப்ரவீன்? “ என்றவாறு மகிழனும் நின்று அவனை பார்க்க
“வந்து... யாரையெல்லாம் செலக்ட் பண்ணி
இருக்கீங்கனு தெரிஞ்சுக்கலாமா? “ என்றான் ப்ரவீன் தலையை சொரிந்த படி
“அது நான் மனோகர்கிட்ட கொடுக்கறேன்.. நீ ஏன்
தெரிஞ்சுக்கணும்? “ என்றான் சந்தேகமாக
“ஹீ ஹீ ஹீ .. வந்து... செலக்டட் கேன்டிடேட்ஸ்
ல அனுஷ்கா இருக்காளா? “ என்றான் ஆர்வமாக..
அதை கேட்ட மகிழன் அவன் கையில் இருந்த பெயர் பட்டியலை ஒரு முறை பார்த்து விட்டு
“நோ.. அந்த கேன்டிடேட் சரியா பெர்பாம்
பண்ணலை... சோ ரிஜக்டட்.. “
“ஐயயோ.. தல.. அப்படி எல்லாம் டக்குனு கை கழுவி விட்டுடாதிங்க.. என்
எதிர்காலமே உங்க கையில்தான் இருக்கு.. “ என்று மகிழன் கையை பிடித்து கொண்டான் ப்ரவீன்..
அதை கண்டு குழம்பிய மகிழன்
“டேய்... அந்த பொண்ண
ரிஜக்ட் பண்ணினா உனக்கு ஏன்டா கஷ்டம்? ஆமா.. உனக்கு தெரிஞ்ச பொண்ணா? “
“ம்ஹூம்..
“ என்று தலையை இரண்டு பக்கமும் ஆட்டினான் ப்ரவீன்..
“அப்புறம் ? “
“வந்து...
தெரிஞ்ச பொண்ணா ஆக்கிக்கலாம் னு தான் தல... “ என்று அசட்டு சிரிப்பை சிரித்தான்..
“டேய்
ப்ரவீன்.. எனக்கு நிறைய வேலை இருக்கு.. இன்னைக்கு புல்லா இந்த இன்டர்வ்யூ லயே நேரம் போய்டுச்சு.. நான்
முடிக்க வேண்டிய வேலை பெண்டிங்.. நீ வழ வழனு இழுக்காம டக்குனு மேட்டரை சொல். “ என்று
முறைத்தான் மகிழன்..
“அது
வந்து தல... நான் சொல்றது நமக்குள்ளயே
இருக்கட்டும்.. பிக் பாஸ் கிட்ட எதுவும் எடுத்துட்டு போய்டாதிங்க.. அப்புறம் என்னை இந்த ஆபிஸ் ல
இருந்தே துரத்தி விட்டுடுவார்.. ப்ராமிஸ்? “ என்று ஒரு வார்னிங் கொடுத்து
வாக்குறுதியையும் வாங்கி கொண்டவன்
“தல..
நான்தான் பர்ஸ்ட் ரவுண்ட்க்கு புரபைல்ஸ் சார்ட்
லிஸ்ட் பண்ணினேன்.. அப்ப இந்த அனுஷ்கா புரபைலை பார்த்தப்போ அப்படியே என் புரபைல்க்கு
மேட்ச் ஆச்சு... “
“டேய்..
இரு இரு... இன்டர்வ்யூக்காக புரபைல் ஐ சார்ட் லிஸ்ட் பண்றதுக்கு உன் புரபைல் கூட
எதுக்கு மேட்ச் பண்ணி பார்த்த? “ என்றான் மகிழன் குழப்பமாக..
“ஐயோ..
தல.. இப்படி விவரமே தெரியாம இருக்கீங்களே..அதான் இன்னும் கல்யாணம் ஆகாம சாமியாரா
சுத்திகிட்டு இருக்கீங்க... “ என்று நக்கல் சிரிப்பை சிரித்தான் ப்ரவீன்.. அதை
கேட்டு மகிழன் அவனை பார்த்து முறைக்க
“ஹீ
ஹீ ஹீ... நோ டென்ஷன்.. பீ கூல் தல... அது வந்து, வேலைக்கு வந்தமா, இரண்டு வருசத்துல வீட்டு லோன் போட்டு ஒரு வீட்டை வாங்கினமா? அடுத்த வருசத்துல ஒரு பொண்ணை பார்த்தமா, கல்யாணம்
பண்ணினமா 25 இல்லைனா 26 வயசுலயே செட்டில் ஆனாமா
னு இருக்கிறது தான் ஐ.டி கைஸ் ஓட ட்ரென்ட் தல..
சோ..
இதுல நான் லாஸ்ட் ஸ்டேஜ் ல இருக்கேன்.. அதாவது வீடு ரெடி..பொண்ணு மட்டும்
மிஸ்ஸிங்.. அதான் எனக்கான பொண்ணை தேடி கிட்டிருக்கேன்..
ஒவ்வொரு
மெட்ரிமோனியலுக்கும் போய் அதுல பெய்ட் செர்விஸ் ல ஏதோ ஒரு தெரியாத பொண்ணை பார்க்கறதுக்கு நம்ம ஆபிஸ்க்கு
இன்டர்வ்யூக்கு வர பொண்ணுங்களையே சார்ட் லிஸ்ட் பண்ணி அப்ளிகேசன் போட்டுட
வேண்டியதுதான்...
அதுக்குத்
தான் சார்ட் லிஸ்ட் பண்றப்பயே நம்ம புரபைல்க்கு மேட்ச் ஆவுதானும்
பார்த்துக்கணும்.. “ என்று குறும்பாக சிரித்தான் ப்ரவீன்..
அதை
கேட்டு வாயை பிளந்து பார்த்தான் மகிழன்..
“அடப்பாவி..
இப்படி எல்லாமா பண்றிங்க... ஆமா.. அந்த ரெஸ்யூமை வைத்து எப்படிடா மேட்ச் பார்ப்ப ? “ என்றான் ஆர்வமாக...
“ஹீ
ஹீ ஹீ . அதுல எப்படியும் பிறந்த இடம் கொடுத்திருப்பாளுங்க. சோ எந்த ஊர் னு தெரிஞ்சு
போய்டும் அப்புறம் பிறந்த தேதிய வச்சு இப்பதான் இன்ஸ்டன்ட் ஜாதகம் ரெடி பண்ணலாமே..
அதை
விட பையன் பொண்ணு இரண்டு பேரோட பிறந்த தேதிய மட்டும் கொடுத்தா போதும் .. எத்தனை பொறுத்தம்
இருக்குனு பார்த்து சொல்ல ஆப் வந்திடுச்சு தல.. அத வச்சு தான் இண்ஸ்டன்ட் ஆ நமக்கு
செட் ஆகுமா ஆகாதானு பார்த்துடலாம்..”
என்று விளக்கினான்
(ஹீ
ஹீ ஹீ உடனே இந்த ஆப் ஐ தேடாதிங்க பிரண்ட்ஸ்.. இப்படி ஒன்னு இருக்கானு தெரியலை..
இல்லைனாலும் சீக்கிரம் வந்திடும்.... )
“ஓ..
இப்படி எல்லாம் இருக்கா என்ன? “ என்றான் ஆச்சர்யமாக
“ஹீ
ஹீ ஹீ நீங்க எல்லாம் அந்த ஸ்டேஜை எப்பயோ தாண்டி
இருக்கணும் தல. பேசாம எங்க கூட சேர்ந்துடுங்க.. உங்களுக்கும் சேர்த்து பொண்ணு தேட ஆரம்பிச்சுடலாம்.. “ என்று
சிரித்தான் ப்ரவீன்...
அதை
கேட்டு மகிழன் முறைக்க
“ஹீ
ஹீ ஹீ.. அகெய்ன் நோ டென்ஷன் தல..சரி என் கதையை எங்க விட்டேன்? “ என்று யோசித்தவன்
“ஆங்..அப்படி
அலசி ஆராய்ந்து பார்த்ததுல இந்த அனுஷ்கா
ஓட புரபைல் எனக்கு பக்காவா மேட்ச் ஆகுது.. அதோட எங்க பக்கத்து ஊர் வேற.. அதனால் அவ
அப்பன் எப்படியும் பக்கத்து ஊர் பையனா இருந்தா
ரொம்ப யோசிக்காம பொண்ணை கொடுத்துடுவான்..
அதனாலயே
அந்த பொண்ணை பர்ஸ்ட் ரவுண்ட்ல செலக்ட் பண்ணிட்டேன் தல..நீங்கதான் மனசு வச்சி
செகண்ட் ரவுண்ட்ல தூக்கி விடணும்..இங்கயே
வேலைக்கு சேர்ந்துட்டானா ஈசியா மடக்கிடலாம்... என் எதிர்காலமே உங்க கையில தான் தல. என்னை கை
விட்டுடாதிங்க..”
“டேய்...
அந்த பொண்ணு அவ்வளவா டேலன்டட் இல்லை.. அத வச்சு எப்படி குப்ப கொட்டறது?
“அதெல்லாம்
நான் பார்த்துக்கறேன் தல.. ஒரு நாள் உட்கார்ந்து சொல்லி கொடுத்தா எல்லாம் கப்புனு புடிச்சுக்கும்..
எங்க ஊர் மண்ணோட மகிமை அப்படிதான்..
அப்படியும் தேறலையா.. அவ வேலையும் நானே சேர்த்து செஞ்சுட்டு போறேன்.. ஒரு இரண்டு
மணி நேரம் எக்ஸ்ட்ரா செய்யணும்... செஞ்சுடலாம்.
இந்த
பொண்ணு தேடறது அதை விட கொடுமையா இருக்கு தல.. பேசாமா இதையே ஓகே பண்ணிடலாம்னு
முடிவு பண்ணி ட்டேன்.. ப்ளீஸ். கொஞ்சம் கருணை காட்டுங்க. என் கல்யாண ஜோதியை ஏற்றி
வைங்க... என் புள்ளைக்கு உங்க பெயரையே வச்சுடறேன்...” என்றான் கெஞ்சலாக
“ம்ஹூம்..
இதெல்லாம் சரி வராது.. நீ சொல்றதுக்காக எல்லாம் அந்த பொண்ணை செல்க்ட் பண்ண முடியாது..
வேணா நீ போய் ட்ரெயினிங் கொடுத்து அடுத்த முறை இன்டர்வ்யூ கிளியர் பண்ண சொல். அப்ப
எடுத்துக்கறேன்..
இப்ப
என் டைம் ஐ வேஸ்ட் பண்ணாத..நான் என் வேலையில சின்சியர் ஆக்கும்.. தகுதியில்லாத
எந்த கேன்டிடேட்டையும் செலக்ட் பண்ண மாட்டான் இந்த மகிழன்.. பெட்டர் லக் நெக்ஸ்ட்
டைம்... “ என்றவன் சிரித்தவாறு நகர்ந்து சென்றான்..
அதை
கண்டு கடுப்பான ப்ரவீன்
“ஹோய்
தல.. என் எதிர்காலத்தையே கொளுத்திட்ட
இல்ல.. இதுக்குனே உனக்கு இன்னும் அஞ்சு வருசத்துக்கு கல்யாணமே ஆகாது.. அப்படியே
ஆனாலும் உன்னை பாடா படுத்தற வாயாடி இல்ல சண்டக்காரி பொண்டாட்டிதான் வந்து வாய்ப்பா
பார்.. என் சாபம் உன்னை சும்மா விடாது.. “என்று ஓடி வந்து சொல்லி விட்டு அவனை முறைத்து விட்டு
சென்றான் ப்ரவீன்..
மகிழனும்
சிரித்து கொண்டே
“போடா...
போடா.. உன்னை மாதிரி எத்தனை பேரோட சாபத்தை பார்த்திருக்கேன். “ என்று சிரித்து கொண்டே தன் தலையை
பின்னால் ஸ்டைலாக தடவியவாறு சிரித்து கொண்டே சென்றான்..
ஆனாலும்
உள்ளுக்குள் சிறு பயம்..
"என்னடா
இது? எல்லாரும் ஒரே மாதிரியே சாபம் விடறாங்களே.. ஒன்னு இல்ல ஒன்னு உண்மையிலயே பலித்து
விட போகுது..
அப்பா
முருகா.. நீதான் எனக்கு துணை.. அப்படி மட்டும் ஒரு பொண்ணு கிட்ட என்னை சிக்க
வச்சுடாத.. உனக்கு மாசம் ஒரு முறை வேண்டும்னாலும் நான் கவடி எடுக்கறேன்.. பழநிக்கு
பாத யாத்திரை கூட வந்திடறேன்.. “ என்று சிரித்து கொண்டே திரும்ப அங்கே
இடுப்பில் கை வைத்து முறைத்த படி நின்றிருந்தாள்
சந்தியா...
"ஐயோ..
எப்ப என் பொண்டாட்டியை பற்றி நினைச்சாலும் அபசகுணம் மாதிரி இந்த ராட்சசியே
முன்னாடி வர்ராளே..இப்ப என்ன பிரச்சனையாம்? " என்று உற்று பார்த்தான்..
சற்று
தொலைவில் இடுப்பில் கை வைத்து நின்றிருந்தவள் எதுக்காகவோ அந்த அஜய் கிட்ட சண்டை போட்டு கொண்டிருந்தாள்..
முகம்
சிவக்க, காது மடல் விரைத்திருக்க மூக்கு விடைக்க அஜய் ஐ திட்டி கொண்டிருந்தவளை கண்டதும் அந்த காளியே
நேரில் வந்து நின்ற மாதிரி இருந்தது மகிழனுக்கு..
"ஆஹா..
மகிழா.. இன்னைக்கு நீ தப்பிச்ச.. பாவம் அந்த
அஜய் மாட்டிகிட்டான் போல.. டேய் அஜய்.. என்ஜாய். “ என்று உள்ளுக்குள் சிரித்து
கொண்டே தன் ரிப்போர்ட் ஐ மனோகரிடம் கொடுத்து விட்டு தன் வீட்டிற்கு கிளம்பினான்...
அலுவலகத்தில் இருந்து தன்
பைக்கில் அமர்ந்து வீட்டை நோக்கி சென்று
கொண்டிருந்தான் மகிழன்..
காதில் இயர்போனை சொருகி கொண்டு அவனுக்கு பிடித்த
பாடல்களின் கலெக்சனில் இருந்து ஒலித்த
பாடலை கேட்டு கொண்டே தன் பைக்கில் பறந்து
கொண்டிருந்தான் மகிழன்..
இன்று காலையில் இருந்தே அவனுக்கு உற்சாகமாக இருக்க அதுவும் இல்லாமல் இன்று அந்த
சண்டக்காரியிடம் இருந்து தப்பித்து விட்டதால் இன்னும் உற்சாகமாக இருக்க அதே
உற்சாகத்தில் உல்லாசமாக அவன் கேட்டு கொண்டிருக்கும் பாடலுக்கு தகுந்த மாதிரி
விசில் அடுத்துக் கொண்டே வீட்டை நோக்கி பறந்து கொண்டிருந்தான் மகிழன்...
திடீரென்று சாலையின் ஓரத்தில் அதுவரை மறைந்து இருந்த ஒரு
ட்ராபிக் போலிஸ் இவன் வண்டியின் பாதையில் முன்னே வந்து நின்று கையை காட்டி வண்டியை நிறுத்த சொன்னார்...
திடீர் என்று தன் முன்னே என்ட்ரி ஆன அந்த காவலரை கண்டதும்
“இவர் எதற்கு என்கிட்ட லிப்ட் கேட்கறார்..
போலிஸ் ஜீப் என்னாச்சு? “ என்றவாறு வண்டியை
மெதுவாக்கி நிறுத்த வேகமாக அவன் அருகில் ஓடி வந்தவர் உடனே அவன் பைக்கின் சாவியை
எடுத்து கொண்டார்.
அதை கண்டவன் அதிர்ந்து போய்
“எதுக்கு சார் என் பைக் சாவியை எடுக்கறீங்க? “ என்றான்
முறைத்தவாறு..
“ஹ்ம்ம்ம் காதுல இந்த ஒயரை மாட்டிகிட்டு
பாட்டு கேட்டுகிட்டே உல்லாசமா ஓடிபாபா ஒடிபாபா னு பாட்டுல வர்ர ஹீரோ மாதிரி ஸ்டைலாக வந்த இல்ல.. எங்க? நான் எதுக்கு இந்த சாவியை எடுத்தேனு கண்டு புடி பார்க்கலாம்.. “
என்று நக்கலாக சிரித்தார் டேவிட்...
“ஐயோ முருகா.. என் வண்டி, என் காது.. நான் பாட்டு கேட்டுகிட்டே ஓட்டினா இவருக்கு என்ன வந்தது?.. அதை பொறுக்காம இப்படி வண்டியை நிறுத்தி சாவியை புடுங்கிட்டாரே .. நல்ல
போலீஸ்தான்.. “ என்று உள்ளுக்குள் புலம்பியவன்
“சார்.. வண்டி ஓட்டும் பொழுது பாட்டு கேட்க
கூடாதுனு எதுவும் புதுசா ரூல்ஸ் போட்டிருக்காங்களா? “
என்றான் ஆச்சர்யமாக
“புது ரூல்ஸ் எல்லாம் இல்ல தம்பி.. பழைய
ரூல்ஸ் தான்...ஆமா உன் ஹெல்மெட் எங்க? “ என்று அவன் தலையை பார்த்து
நக்கலாக சிரித்தார்..
அப்பொழுது தான் ஞாபகம் வந்தது..அவன் ஹெல்மெட்
ஐ காலையில் கையுடன் எடுத்து சென்று அவன் இருக்கையில் வைத்தது. மாலை வரும் பொழுது
அதை எடுக்க மறந்து அப்படியே வந்ததும்..
“ஆஹா.. இவர் ஹெல்மெட் புடிக்கிற திருடனா?? நல்லா மாட்டிகிட்டியே மகிழா.. இன்னைக்கு உன் பாக்கெட் ஐ காலி பண்ணாம விட மாட்டார்..
“ என்று புலம்பியவன்
“சாரி.. சார்... ஹெல்பெட் ஐ ஆபிஸ்லயே வச்சுட்டு
வந்திட்டேன் சார்.. கொஞ்சம் பெரிய மனசு
பண்ணி இந்த முறை என்னை விட்டுடுங்க சார்.. “ என்றான் கெஞ்சலாக
“ஹா ஹா ஹா எங்க கிட்ட மாட்டற எல்லாரும்
சொல்ற முதல் டயலாக் இதுதான் தம்பி.. அதனால அதெல்லாம் கதைக்கு ஆகாது.. நீ பைனை கட்டிட்டு
போய்கிட்டே இரு... “ என்று விரைத்து கொண்டே நின்றார்..
“சார். ஒரு சின்ன சந்தேகம்.. இப்படி பைனை
கட்டிட்டு ஹெல்பெட் போடாம வண்டி ஓட்டி போய் அப்ப எதுவும் ஆக்ஸிடென்ட் ஆனா பரவாயில்லையா? உங்க நோக்கம் நாங்க கீழ விழுந்து ஆக்ஸிடென்ட் ஆகக் கூடாதுனு தான?
அப்படி நல்ல எண்ணம் இருக்கிறவர் பைனை வாங்கி கிட்டு ஒரு ஹெல்மெட் ஐயும் கொடுத்து அனுப்பிச்சா நல்லா இருக்கும் இல்ல.. “ என்றான் அவரை பார்த்து
நக்கலாக சிரித்தவாறு
“ஆங்... குட் பாய்ன்ட் தம்பி.. நான் எங்க ACP
சார் கிட்ட உங்க கருத்தை சொல்றேன்.. இப்ப பைனை கட்டிட்டு உங்க பைக்கை
உருட்டுங்க..” என்றார் அவரும் சிரித்தவாறு..
ACP என்றதும் அப்பொழுது தான் அவன் அண்ணன்
நிகிலன் நினைவுக்கு வந்தான்..
“சார்.. உங்க ACP பெயர் என்ன? “ என்றான் ஆர்வமாக
“ACP நிகிலன்
IPS..” என்றார் பெருமையாக..
“சார் சார் சார்.. அந்த ACP நிகிலன் IPS என் அண்ணன் தான் சார்.. நான் அவர்
தம்பிதான் சார்.. இங்க பாருங்க எங்க பேமிலி போட்டோ கூட வச்சிருக்கேன்.. “ என்றவன்
அவசரமாக தன் அலைபேசியை எடுத்து அதில் இருந்த குடும்ப புகைப்படத்தை காண்பித்தான்...
அதை கண்டவர் வியந்து உடனே மரியாதை கூட,
“ஓ.. நீங்க நிகிலன் சாரோட தம்பியா? ஏன் சார் உங்க அண்ணன் எவ்வளவு நல்லவர்.. எல்லாரையும் ரூல்ஸ் பாலோ பண்ண
வைக்க எவ்வளவு கஷ்ட படறார்.. ஆனால் அவர் வீட்லயே இருந்து கிட்டு அவர் சொல்ற ரூல்ஸ்
ஐ பாலோ பண்ணலைனா நல்லாவா இருக்கு? “என்றார் வருத்தமாக
“ஆஹா.. இதெல்லாம் அந்த தடியனோடது தானா ?..நல்லா ரூல்ஸ் போட்ட டா.. “ என்று
மனதுக்குள் திட்டியவன்
“ஹீ ஹீ ஹீ.. இல்ல சார்.. சாலை விதிகளை பற்றி
அவன் என்கிட்டயும் க்ளாஸ் எடுத்தான் தான்.. நான் எப்பவும் கார்ல வருவனா.. அதனால்
இன்னிக்கு பைக் ல வரவும் கொண்டு வந்த ஹெல்மெட் ஐ எடுக்க மறந்திட்டேன்.. நான் என் அண்ணன் கிட்டயே சொல்லிக்கிறேன்.. இப்ப விட்டுடுங்க சார்.. “
என்றான் கெஞ்சலாக...
“ஹா ஹா ஹா.. இல்ல சார்.. நிகிலன் சார் எங்க கிட்ட
ஸ்ட்ரிக்ட் ஆ சொல்லி இருக்கார்.. அவர் பெயரை யாராவது சொல்லி தப்பிக்க பார்த்தால்
பைனை டபுல் ஆக்க சொல்லி இருக்கார்...என்ன டபுல் ஆக்கிடலாமா? “ என்று நக்கலாக சிரித்தார்
டேவிட்..
“பாவி.. படுபாவி.. இப்படியாடா இருப்ப..
அவனவன் கூட பொறந்தவன் னு ரெகமண்டேசன் பண்ணினா பைன் வாங்காம ஏன் லைசென்சே இல்லாம கூட விட்டுட சொல்லுவானுங்க..
இந்த வீணாப் போனவன் பைனை டபுல் ஆக்க சொல்லி இருக்கானே. நல்லா வருவான்.. “ என்று திட்டி கொண்டே
“வேற வழி எதுவும் இல்லையா சார்.. “ என்றான்
பாவமாக
“ம்ஹூம்.. வேற வழியே இல்லை.. பேசி நேரத்தை வேஸ்ட் பண்ணாம பைனை கட்டிட்டு நல்ல படியா சீக்கிரம்
வீடு போய் சேருங்க..இனிமேலாவது எங்க
போனாலும் இந்த போனை மறக்காம தூக்கி கிட்டு போற மாதிரி ஹெல்மெட் ஐயும் எடுத்துட்டு
போங்க.. “ என்று சிரித்தார்..
அவனும் மனதுக்குள் கருவி கொண்டே தன் வாலட் ஐ
திறந்து அதில் இருந்த பணத்தை எடுக்க அப்பொழுது அவன் அருகே வேகமாக ஒரு ஸ்கூட்டி வந்து நின்றது...
அதில் இருந்தவள் தன் ஹெல்மெட்டை கழற்றி
தலைமுடியை ஸ்டைலாக ஒரு கையால் ஒதுக்கியவள்
“என்ன டேவிட் சார்.. இன்னைக்கு நல்ல வேட்டை
போல இருக்கு உங்களுக்கு...இங்க நிக்கிறானே.. இவன் எனக்கு தெரிஞ்சவன் தான் சார்..
நேற்று என் ஆபிஸ்ல என்னையவே கையை ஓங்கிட்டான் சார்..
அதனால் அவனுக்கு போடப் போற பைன என் பெயரை
சொல்லி டபுல் ஆக்கிடுங்க சார் .. “ என்று சிரித்தாள்
சந்தியா..
அவளை கண்டதும் திடுக்கிட்டவன்
“ஐயோ இவளா.. இன்னைக்கு ஒரு நாளாவது இவ கிட்ட
வம்பு வச்சுக்காம கிளம்பிட்டோம் னு நிம்மதியா இருந்தா இங்கயும் தேடி வந்து வம்பு
வளர்க்கிறாளே.. “ என்று அவளை பார்த்து முறைத்தான் மகிழன்..
“ஹலோ.. என்ன மங்கி முறைக்கிற? .. நேற்று என்னை அடிக்க வந்த இல்லை..
அதான் என் பிரண்ட் வேல்ஸ் உன்னை இன்னைக்கு டேவிட் சார் கிட்ட புடிச்சு கொடுத்து பழி வாங்கிட்டான்.. இனிமேலாவது இந்த
சந்தியாகிட்ட வச்சுக்காத... “ என்று விரல்
நீட்டி மிரட்டினாள் அவனை முறைத்தவாறு..
மகிழன் உள்ளே கொதிக்க ஆரம்பிக்க அதற்குள் ரோ
சொல்லி கொடுத்த டிப்ஸ் நினைவு வர, கண்ணை மூடி கொண்டு கந்த
சஷ்டி கவசம் சொல்ல ஆரம்பித்தான்...
அதற்குள் டேவிட் சந்தியாவை பார்த்தவர்
“என்னமா? இப்ப எல்லாம்
ஒழுங்கா ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டற போல இருக்கு..” என்று சிரித்தவாரே அவள் வண்டியின் முன்புறம் உற்று பார்த்தவர்
“ஆமா.. உன் நம்பர் பிளேட் ஏன் நசுங்கி இருக்கு? .. அதில் இருக்கிற நம்பரே
தெரியலையே.. நம்பர் பிளேட் சரியா இல்லைனா அதுக்கும் பைன் தெரியும் இல்ல..
சரி வா.. நீ அதுக்கான பைனை கட்டு வா.. “ என்று அவள் வண்டியின் அருகில் வர, அதில் அதிர்ந்தவள்
“ஐயயோ.. அந்த மங்கியை பழி வாங்க எண்ணி, நானா போய் அவர் வலையில மாட்டிகிட்டனா? “ என்று அதிர்ந்தவள்
“ஹீ ஹீ ஹீ டேவிட்.. சார்.. நான் சொன்னதையெல்லாம்
மறந்திடுங்க..டைம் மெசின்ல போய் கடைசி இரண்டு நிமிசத்தை டெலிட் பண்ணிடுங்க.. நான்
உங்களை பார்க்கலை .. நீங்களும் என்னை பார்க்கலை.
என் நம்பர் பிளேட்ம் உடையல...
டீல்... “ என்று சொல்லி தன் கட்டை விரலை
உயர்த்தி காட்டி சிரித்தவள்
மகிழனை பார்த்து நாக்கை துருத்தி “பை
மங்கி...All
the best.. “ என்று ஒலுங்கு காட்டி கண் சிமிட்டி சிரித்தவள் டேவிட்
அவள் வண்டியை அடையும் முன்னே அதை ஸ்டார்ட் பண்ணி சிட்டாக பறந்து விட்டாள்..
டேவிட் ம் அவள் செய்கைக்கு சிரித்து கொண்டே
“சரியான விளையாட்டு புள்ள.. “ என்று சிரித்து கொண்டார்..
“டேவிட் சார்.. இந்த ராட்சசியை முன்னாடியே
உங்களுக்கு தெரியுமா? “ என்றான் மகிழன் ஆச்சர்யமாக
“ஹா ஹா ஹா தெரியும் தம்பி.. உங்கள மாதிரி தான்
ஒரு நாள் ஹெல்மெட் போடாம வந்து என்கிட்ட மாட்டிகிச்சு.. ஆனா காசு தர முடியாதுனு என்னெல்லாம் ட்ராமா பண்ணுச்சு... நானும்
விடலையே.. கடைசி வரைக்கும் பைன் கட்டினாதான் விடுவேன் சொல்லிட்டேன்.. “ என்று அன்று நடந்த கதையை விவரித்தார்...
(சந்தியா எப்படி ஹெல்மெட் போடாம வந்து
மாட்டினானு நியாபகம் இல்லாதவர்கள் காதோடுதான் நான் பாடுவேன் கதையை புரட்டி
பாருங்கள்..)
அதை கேட்டவன் ஆச்சர்யமாக
“ஹ்ம்ம் அப்புறம் என்னாச்சு சார்? அப்பயே அவள புடிச்சு ஜெயில்ல போட்டிருக்கலாம் இல்லை..அட்லீஸ்ட் அவ
வண்டியை கொண்டு போய் கோர்ட்ல விட்டு இரண்டு நாளைக்கு அவளை அலைய விட்டிருக்கலாம் இல்லை... “ என்றான் கடுப்புடன்
“ஹா ஹா ஹா அதுக்குள்ள நம்ம நிகிலன் சார்
வந்திட்டார்... என்ன சண்டைனு விசாரிச்சுட்டு அப்புறம் அந்த பைனை அவரே கட்டிட்டார்..
இந்த பொண்ணு உங்க அண்ணன் நிகிலன் சார்க்கு தெரிஞ்ச பொண்ணுதான் தம்பி..
அதிலிருந்து இந்த பொண்ணு என்னை எங்க
பார்த்தாலும் நின்னு நாலு வார்த்தை பேசிட்டு போகும்.. காலையில் இருந்து இந்த வேகாத
வெய்யில் ல நிக்கற எங்களுக்கும் இது மாதிரி சின்ன சின்ன என்டர்டெய்ன்மென்ட்
இருந்தா தான் பொழப்பை ஓட்ட முடியும் தம்பி... “ என்றார் பெருமூச்சு விட்டு..
அப்பொழுது தான் அந்த காவலர்களுடைய வலி
மகிழனுக்கு புரிந்தது..
அவர்களை பார்த்தாலே ஒரு திருடனை பார்க்கிற
மாதிரி காசு புடுங்க வந்திட்டாங்க என்று அவர்களை திட்டி கொண்டே செல்பவர்கள் தான்
அதிகம்..
காலையில் இருந்து கால் கடுக்க நின்று கொண்டே
சாலையில் போகும் வாகனங்களை கண்காணித்துக் கொண்டிருக்கும் அவர்களின் கஷ்டம்
யாருக்கும் தெரிவதில்லை...
“மக்கள் எல்லாரும் சொன்ன விதிகளை
பின்பற்றினால் இந்த மாதிரி காவலர்களுக்கும் வேலை இல்லை.. ஒவ்வொரு சந்திப்பிலும்
அவர்கள் கால் கடுக்க நிற்கவும் தேவையில்லை.. இல்லை என்றால் வெளி நாடுகளில்
இருப்பதை போல எல்லாம் டிஜிட்டல் ஆக்கிடணும்..
யார் விதியை மீறினாலும் உடனே அவர்கள்
வாகங்களின் என்னை பதிவு செய்து அவர்கள் சில தடவைக்கு மேல் மீறுபவர்களின் ஓட்டுனர்
உரிமத்தை பறித்து விட்டால் மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்களா இருக்கும்...
ஹ்ம்ம் நம்ம நாட்டுக்கு அதெல்லாம் எப்ப
வருமோ ? . “ என்று பெருமூச்சு விட்டு
யோசித்தவன் தன் சிந்தனையை நிறுத்தி மீண்டும் டேவிட் சந்தியா பற்றி சொன்ன
மேட்டர்க்கு வந்தான்..
சந்தியா நிகிலனுக்கு தெரிந்தவள் என்று அவர்
சொன்னதை நினைவு கூர்ந்தவன்
“இந்த வாயாடி,
ராட்சசி, ப்ராட் எப்படி
அந்த சாமியார்க்கு தெரிஞ்சவளா இருப்பா? அவன் வாயே திறக்க மாட்டான்..யார் கிட்டயும் அவ்வளவா பேச மாட்டான்..
பயங்கர ரூல்ஸ் பேர்வழி..
இவ வாய திறந்தா மூடவே மாட்டா..ரூல்ஸ்க்கும்
இவளுக்கும் ராக்கெட் வச்சாலும் எட்டாது. நோ-பார்க்கிங் போர்டையே நகர்த்தி
வச்சுட்டு வண்டியை நிறுத்தியவள்.. . இரண்டுக்கும் ஒத்தே வரலையே..!! அப்ப எப்படி இருவருக்கும் தெரிஞ்சிருக்கும்? “ என்று யோசித்தான்..
அவன் யோசிக்கும் வேளையில் டேவிட் சொன்ன உங்க
அண்ணியோட பிரண்ட்தான் இந்த பொண்ணு என்ற
செய்தி அவன் மூளையை அடையவில்லை..
அவன் அவனுடைய சிந்தனையிலயே இருந்ததால் அவர்
சொன்னதை கவனிக்காமல், அவரிடம் பணத்தை கொடுத்து ரசீது வாங்கி பாக்கெட்டில்
போட்டு கொண்டு அவரிடம் விடை பெற்று தன் வண்டியை ஸ்டார்ட் பண்ணினான்..
வழியெல்லாம் நிகிலனுக்கு எப்படி இந்த ராட்சசியை தெரியும்? என்று யோசித்தவாறே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான் மகிழன்.....!
Comments
Post a Comment