அழகான ராட்சசியே!!!-13

 


அத்தியாயம்-13

“பேட்மிண்டனில் நின்று விளையாட ஸ்டமினா இஸ் வெரி வெரி இம்பார்ட்டன்ட்... லாஸ்ட் Badminton world championship(BWC) மேட்ச் ல பி.வி சிந்து எப்படி நின்னு விளையாண்டாங்க தெரியுமா?..

35 மினிட்ஸ்.. கொஞ்சம் கூட விட்டு கொடுக்காம, டயர்ட் ஆகாம எதிராளியின் பந்தை  எதிர்கொண்டு விளையாண்டதாலதான் அந்த சேம்பியன்ஷிப் கோல்ட் மெடல் வாங்க முடிந்தது..

அந்த BWC கப் ஐ வாங்கிய முதல் இந்தியன் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது... 

அந்த மாதிரி ஆட்டத்தில் நீண்ட நேரம் தாக்கு பிடிக்க, உன்கிட்ட அந்த  அளவுக்கு உடலில் சக்தியும் உறுதியும் இருக்கணும்.. அதுக்கு முதல்ல பிராக்டிஸ் பண்ணு...

அப்புறம் சீக்கிரம் சோர்ந்து விடாமல் இருக்க சில டிப்ஸ் மற்றும் பயிற்சிகளை   பின்பற்ற வேண்டும்.. “  என தன் மனைவிக்கு விளக்கி கொண்டிருந்தான் நிகிலன்...

மதுவும் அவன் சொல்வதையெல்லாம் கவனத்துடன் கேட்டு கொண்டிருந்தாள்..

அவன் முகத்தில் அப்படி ஒரு சீரியஸ்னஸ்.. அவளை இந்த வருடம் எப்படியாவது நேஷனல் சேம்பியனாக்கி விட வேண்டும் என நினைத்தான் நிகிலன்..

சென்ற வருடமே அவள் நேஷனல் சேம்பியனாகி இருந்தால் இந்த வருடம் இன்டர்நேஷனல் லெவல்   ல ஆடி யிருப்பாள்.. தன்னுடைய அவசரத்தால் முட்டாள் தனத்தால்  அவள் தாயாகி விட, அவள்  விளையாட்டை தொடர முடியாமல் போனது..

அந்த குற்ற உணர்ச்சி அப்பப்ப நிகிலனை அறிக்கும்.. அதனாலயே இந்த வருடம் அவளை ஜெயிக்க வைத்தே ஆக வேண்டும் என்று தீவிரமாக அவளுக்கு பயிற்சியை தொடங்கி விட்டான்..

இன்னும் தன் மகளுக்கு  தாய்ப் பால் கொடுத்து கொண்டிருப்பதால் அவளால் வெளியில் சென்று நீண்ட நேரம் இருக்க முடியாததால் வீட்டிலயே தன் பயிற்சியை ஆரம்பித்து விட்டாள்..

நிகிலன் மதுவிடம் தாய்ப்பால் புகட்டுவதை நிறுத்திவிட்டு  வசந்த் ன் பயிற்சி மையத்துக்கு சென்று முழு கவனத்தையும் அவள் விளையாட்டில் காட்ட சொல்லி வற்புறுத்த அவளோ குழந்தைக்கு குறைந்தது   ஒரு வருடமாவது தாய்ப்பால் அவசியம்..

எனக்கு என் மகள்தான் முக்கியம்.. விளையாட்டு,  என் கனவு எல்லாம் அடுத்தது தான் என சொல்லி வெளியில் செல்ல மறுத்து விட்டாள்..

நிகிலன் அதற்குமேல் அவளை கட்டாய படுத்த முடியாமல் அவள் விருப்பபடியே விட்டு விட்டான்.. ஆனால் அவனுக்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அவளை கட்டாய படுத்தி பயிற்சி அளித்து வருகிறான்...

மதுவும் தன் மகளுடன் செலவிடும் நேரத்தை தவிர பிரியாக இருக்கும் நேரத்தில் பேட்மிண்டன் பற்றிய கட்டுரைகளை வாசித்தும் சிந்து பயிற்சி பெறும் சில வொர்க் அவுட் வீடியோக்களை ஆச்சர்யமாக பார்த்தும்  அவள் அறைக்குள்ளயே சில பயிற்சிகளை பயின்றாள்..

கூடவே தன் ஐ.ஏ.எஸ் பயிற்சியையும் தொடங்கி விட்டாள்.அதுவும் நிகிலன் வற்புறுத்தலால் தான்..

சில பெண்கள் தங்களுக்குள் கனவு லட்சியம் என்று பெரிதாக இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு தங்கள் குடும்பத்தை கவனிப்பதிலயே தங்கள் முழு நேரத்தையும் அடக்கி கொள்கிறார்கள்..

அவர்களுக்கு என்று ஒரு தனி நேரம் ஒதுக்கி அதில் அவர்களுடைய கேரியர் க்கு என்ன செய்யலாம் என்று யோசிக்க மறந்து விடுகிறார்கள்.

முழு நேரமும் தன் கணவன் குழந்தை என அவர்களுக்காக யோசிப்பதிலயே கடந்து விடுகிறது..

அதனாலயே நிகிலன் தன் மனைவியை அந்த மாதிரி விட்டு விடாமல் அவளை வெளி கொண்டு வந்து அவளுடைய திறமையை, ஆசையை,  கனவை நிறைவேற்ற முயற்சி செய்து வருகிறான்..

முதலில் மதுவும் சோம்பேறியாக அதெல்லாம் வேண்டாம் என மறுத்தாள்.. அவளுக்கு தன் மகளை பார்த்து கொள்வதும் கணவனை கவனித்து கொள்வதுமே பிடித்து போய்விட, அவள் கனவு பின்னால் போய் விட்டது.

ஆனால் நிகிலன் அவளை வற்புறுத்தி, சில நேரம் அவளை திட்டி  மீண்டும் அவள் பயிற்சியை தொடர வைத்தான். முதலில் வேண்டா வெறுப்பாக தன் கணவனுக்காக என தன் பயிற்சியை ஆரம்பித்தவள் நாளடைவில அதில் மீண்டும் ஆர்வம் வந்து விட, இப்பொழுது அவளுமே முழு மனதுடன் ஆர்வத்துடன்  தன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாள்..

ஐ.ஏ.எஸ் சம்பந்தமான பல புத்தகங்களை நிகிலன்  வாங்கி கொடுத்து  அவள் அதை படித்து அவனுக்கு விளக்கம்  சொல்ல சொல்லி கட்டாய படுத்தினான்..   

அவளுக்கு புரியாத சில கான்செப்ட்களை நிகிலனிடம் கேட்க அவனுமே அவளுக்கு புரியுமாறு விளக்கி சொல்வான்..கூடவே ஜெயந்த் இடம் தன் சந்தேகங்களை கேட்டு போக்கி கொள்வாள் மது..

ஜெயந்த் க்குமே மது மீண்டும் பயிற்சியை தொடர்வது மிகவும் மகிழ்ச்சி..

ஜெயந்த்- சென்னையில் புகழ்பெற்ற அரசு பொது தேர்வுகளுக்கான தனியார் பயிற்சி மையத்தை நடத்தி வருபவன்.. திருமணம் ஆன உடன் மது அவன் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயின்று வந்தாள்..

முன்பு ஒரு காலத்தில் மதுவை திருமணம் ஆனவள் என்று தெரியாமல் மனம் நேசித்தாலும் அவள் திருமணம் ஆனவள் என்று தெரிந்த அடுத்த நொடியிலயே தன் நேசத்தை நல்ல ஒரு நட்பாக மாற்றி கொண்டு அவளை ஒரு தோழியாக ஏற்று  கொண்டான் ஜெயந்த்..

அவனுக்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் மதுவை அலைபேசியில் அழைத்து அவளை தன் பயிற்சியை தொடர சொல்வான்..

மதுவும் தன் விருப்பத்தில் இருந்து பின் வாங்காமல் அதில் போகஸ்ட் ஆக இருக்க, ஜெயந்த் ம் ஒரு காரணம்.. அவனுக்காவது ஐ.ஏ.எஸ் க்ளியர் பண்ணனும் என்று எண்ணியவள் அதற்கான முயற்சியையும் ஆரம்பித்து விட்டாள்..

ன்று மாலை சீக்கிரம் வீடு திரும்பிய நிகிலன் மதுவை பயிற்சி செய்ய அழைத்து சென்று அவளுடன் விளையாடியவாறே அவளுக்கு சில அறிவுரைகளையும் டெக்னிக்குகளையும் சொல்லி கொடுத்து கொண்டிருந்தான்...

சில நேரம்  அவள் தவறு செய்யும் இடங்களில் அவளை திட்டி முறைத்தவாறே அவளுக்கு சொல்லி கொடுத்தான்...

மற்ற நேரங்களில் தன் மனைவியின் முந்தானையை பிடித்து கொண்டு சுற்றுபவன் பயிற்சியின் பொழுது படு சின்சியராக ஒரு ஸ்ட்ரிக்ட் ஆபிஸராக அவள் முன்னே நிற்க மதுவுக்கு அப்படியே அந்த பழைய விருமாண்டியை பார்த்த மாதிரி இருந்தது..

உடனே பழைய நியாபங்கள் வர, அவள் அவனை விருமாண்டி என சொல்லி திட்டியதெல்லாம் நினைவு வர தன்னை மறந்து களுக் என்று  சிரித்து விட்டாள்..

அதை கண்டவன் கடுப்பாகி

“ஏய்.... இப்ப எதுக்குடி சிரிச்ச? நான் எவ்வளவு சீரியஸா சொல்லி கொடுத்து கிட்டிருக்கேன்.. அதை  கவனிக்காமல் என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு? “ என்று முறைத்தான் நிகிலன்..

“ஹீ ஹீ ஹீ... அது ஒன்னும் இல்ல மாமா.... “ என்று  இழுத்து குழைய, அவள் மாமா என்றாலே அவன் உருகி விடுவான்.. அதை தெரிந்தே தான் அவள் வேண்டும் என்றே மாமா என்று அழைத்தது..

அவள் எதிர்பார்த்த மாதிரியே அவன் முகம் கனிய ஆரம்பிக்க, அதற்குள் தன்னை கட்டுபடுத்தி கொண்டவன்

“ஏய்.. இது பிராக்டிஸ் நேரம்.. இப்ப நான் ஒரு மாஸ்டர்.. நீ ஸ்டூடன்ட்.. அதுக்கு மேல வேற எதையும் நினைக்க கூடாது.. லெட்ஸ் கான்சென்ட்ரேட் ஆன் யுவர் பிராக்டிஸ்.. “ என்று மீண்டும் முறைத்து அவளுக்கு செர்வ் பண்ண அவளும் அவனை திட்டி கொண்டே அவன் பந்தை எதிர்த்து ஆட ஆரம்பித்தாள்...

பின் ஆட்டத்தில் இன்ட்ரெஸ்ட் வந்துவிட, அவனை எதிர்த்து நன்றாக விளையாட ஆரம்பித்தாள் மது..

அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய மகிழன் செட் டில் தன் பைக் ஐ  நிறுத்தி விட்டு கீழிறங்க, அருகில் இருந்த பேட்மிண்டன் கோர்ட்டில் நிகிலனும் மதுவும் விளையாண்டு கொண்டிருப்பது தெரிந்தது...

அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் விட்டு கொடுக்காமல் பந்தை எதிர்கொண்டு ஆட, அதையே சில நிமிடங்கள் நின்று ரசித்து பார்த்தான் மகிழன்..

“பார்டா.. இந்த சாமியார்க்கு வந்த வாழ்வை..!! கல்யாணமே வேண்டாம்னு சுத்திகிட்டிருந்தவனுக்கு இப்படி அன்பான பாசமான கண்ணுக்கு அழகா பொண்டாட்டி வந்த உடனே எவ்வளவு ஜாலியா பொண்டாட்டி கூட விளையாடறான்...

கொடுத்து வச்சவன்..என் பொண்டாட்டி எப்ப என்னை தேடி வருவா? .. அவளை எப்ப நான் கண்டுபிடித்து  கல்யாணம் பண்ணி அவ கூட நானும்  இப்படி ஜாலியா விளையாடறது?.. ஹ்ம்ம்ம் என் அதிர்ஷ்டம் அவ்வளவுதான்.. “ என்று பெருமூச்சு விட்டவாறு தன் பைக் சாவியை எடுத்து கையில் சுற்றி கொண்டே தனக்கு பிடித்த

எனக்கென ஏற்கனவே பிறந்தவள் எவளோ ? .. “ என்ற பாடலை முனுமுனுத்தவாறு வீட்டை நோக்கி நடந்தான்..

தன் அறைக்கு சென்றவன் ரெப்ரெஸ் ஆகி வேற உடைக்கு மாறியவன் அதே உற்சாகத்துடன் மாடியில் இருந்து தாவி இறங்கி வர, சிவகாமி அவனுக்கு மாலை சிற்றுண்டியை எடுத்து வைத்து  அவனுக்காக காத்திருந்தார்...

அவனும் அவரிடம் கொஞ்ச நேரம் கொஞ்சிய படி சிற்றுண்டியை சாப்பிட்டு கொண்டிருக்க, மாடியில் இருந்து இறங்கி அகிலா வேகமாக ஓடி வந்தாள்..

“ஹாய் டா மங்கி... எப்ப வந்த? “ என்று அவன் முதுகில் அடித்தவாறு அவனுக்கு அருகில் அமர்ந்தாள்..

அவள் மங்கி என்றதும் அவனுக்கு அந்த சண்டக்காரியும் அவனை மங்கி என்று அழைப்பதும் கூடவே அவளின் முகமும் நினைவு வந்தது... உடனே கடுப்பானவன்

“ஏய் பிசாசு.. எத்தனை தரம் சொல்றது என்னை மங்கினு கூப்பிடாதனு.. “ என்று தன் தங்கையை  முறைத்தான் மகிழன்..

“ஹா ஹா ஹா இப்படி மங்கி மாதிரி மூஞ்சியில இந்த தாடியை வச்சுகிட்டிருந்தால் அப்படிதான் கூப்பிடுவேன்.. வேணும்னா இந்த தாடியை முதல்ல எடு.. அப்புறம்  நான் கூப்பிடறதை நிறுத்தறேன் மங்கீ...........” என்று வாயை இருபக்கமும்  இழுத்து மங்கீ என்று வேண்டும் என்றே அழைத்தாள் அவனை சீண்ட  ..

“போடி...  இந்த ஃபிரென்ச் பியர்ட்  ல தான் ஐயா ஹீரோ மாதிரி இருக்கேன்.. இதை  வச்சாதான் ஒரு ஆர்கிடெக்ட் ன்ற லுக் வருது..உனக்காக எல்லாம் இதை எடுக்க முடியாது.. “ என்று தன் குறுந்தாடியை ஸ்டைலாக தடவியவன்  அவள் தலையில் செல்லமாக கொட்டினான்...

“எனக்கென்னப்பா... இந்த மூஞ்சியை பார்த்து எல்லாருமே சீக்கிரம் உன்னை மங்கினு தான் கூப்பிட போறாங்க.. அப்ப நீயா இதை  எடுக்கறியா இல்லையானு பார்..” என்று சிரித்தாள்..

பின் சிறிது நேரம் மகிழன் அவளிடம் வம்பிழுத்து கொண்டிருக்க, சிவகாமியும் அவர்கள் இருவரின் சண்டையை ரசித்த படி அவரும் இணைந்து அவர்களுடன் பேசி கொண்டிருந்தார்..

“அண்ணா.. .வாயேன்.. நாம பேட்மிண்டன் விளையாடலாம்.. ரொம்ப நாள் ஆச்சு உன்கூட விளையாண்டு.. “ என்றாள் அகிலா கொஞ்சியவாறு

“இப்ப வேண்டாம் அகி.. இன்னொரு நாள் விளையாடலாம். “ என்று மறுத்தான் மகிழன்..

“ஏன் வேண்டாம்?

“ஹே..  அங்க நிகிலனும் மதுவும் விளையாடறாங்க.. அவங்களை  டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்.. நாம நாளைக்கு விளையாடலாம்..”

“பெரிய அண்ணா கோர்ட் ல இருக்கானா !!.. ஹே.. அப்ப ஜாலியா இருக்கும்.. ப்ளீஸ் வாடா.. போய் நாலு பேரும் சேர்ந்து விளையாடலாம்..” என்று விடாமல் அவனை வற்புறுத்தினாள் அகிலா..

“அகி.. சொன்னா புரியாதா? அவங்களை  டிஸ்டர்ப் பண்ணவேண்டாம்.. “

“ஆமா.. அவங்க என்ன டூயட் ஆ பாடி ஆடறாங்க ? .. டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு சொல்ற..” என்று முறைத்தாள் அகிலா..

“ஹே... நிகிலனே அதிசயமா இன்னைக்குத் தான் வீட்டுக்கு சீக்கிரம் வந்து இருக்கான்.. நாம் இப்ப போனா மது க்கு சங்கடமா இருக்கும் இல்ல.. நாம அப்புறம் போகலாம்.. “ என்று தன் தங்கைக்கு எடுத்து சொல்லி புரிய வைக்க முயன்றான் மகிழன்...

“அதெல்லாம் அண்ணி ஒன்னும் தப்பா  நினைக்க மாட்டாங்க... மது அண்ணி சோ ஸ்வீட்..டேய் மங்கி...பெரிய அண்ணி மாதிரியே என் சின்ன அண்ணியையும் எனக்கு புடிச்ச மாதிரி பார்த்து கட்டிக்க..

அப்பதான் நானும் அவங்க கூட ஜாலியா அரட்டை அடிச்சு,  விளையாட முடியும்.. “ என்று கண் சிமிட்டினாள்..

“ஹோய்.. என் பொண்டாட்டி எனக்கு புடிச்ச மாதிரிதான் பார்ப்பேன்.. அவ எதுக்கு உனக்கு புடிச்ச மாதிரி பார்க்கணும்.. உன் வாயை அடக்கி உன்னை மிரட்டறவளாதான் தேட போறேன்.. “ என்று சிரித்தான்..

“ஹா ஹா ஹா... நல்லா தேடு... அப்படி பட்ட பொண்ணு உனக்கு கிடைக்க மாட்டா.. புள்ளையார் அவர் அம்மா மாதிரி பொண்டாட்டி வேணும்னு தேடி ஆத்தங்கரையில உட்கார்ந்த மாதிரி நீயும் போய் உட்கார்ந்து இருக்க போற பார்... “ என்று சிரித்தாள்..

அதில் எரிச்சலானவன் “உன் வாயை பினாயில் ஊத்தி கழுவு டி... “ என்று முறைத்தவாறு அகிலா தலையில் ஓங்கி  கொட்ட, அதில்

“ஆ.... “ என்று அலறியவள்

“போடா... மங்கி...என்னையவே கொட்டிட்ட இல்ல.. இதுக்குனே உனக்கு நல்லா சண்டை போடற வாயாடி பொண்டாட்டி தான் வரப் போறா.. பார்... இதுதான் என்னுடைய  சாபம்...நீ  நல்ல அனுபவிப்ப பார்..அப்ப இந்த அகிலா கிட்ட ஏன் வச்சுகிட்டோம்னு பீல் பண்ணுவ... “

என்று அவனை திட்டி  முறைத்து கொண்டே எழுந்து  தன் அறைக்கு வேகமாக சென்றாள் அகிலா..

அதை கேட்டவன் மீண்டும் அதிர்ந்து போனான் மகிழன்..

“என்ன டா இது இந்த மகிழனுக்கு வந்த சோதனை.. எல்லாருமே ஒரே மாதிரியே  சாபம் விடறாங்க.. முருகா... உன்னை நம்பிதான் நான் தைர்யமா சுத்திகிட்டு இருக்கேன்..

இவங்க எல்லாம் சாபம் இடற மாதிரி எதுவும் நடந்துடாம  பார்த்து நடந்துக்க.. ஆமா சொல்லிட்டேன்... “ என்று அவசரமாக அந்த வேலனிடம் புலம்பியவன் தன்னிடம் கோபித்து கொண்டு சென்ற தன் தங்கையை சமாதான படுத்த அவள் அறைக்கு சென்றான்..

இவனை கண்டதும் தன் முகத்தை தூக்கி வைத்து கொண்டு உர் என்று உட்கார்ந்து இருந்தாள் அகிலா.. அவளை கெஞ்சி கொஞ்ச, அவளும் கொஞ்சம் இறங்கி வந்தாள்..

பின் இருவரும்  தங்கள் பேட்மிண்டன் ராக்கெட் ஐ எடுத்து கொண்டு விளையாட சென்றனர்...

ங்கு நிகிலன் மதுவை ட்ரில் வாங்கி கொண்டிருந்தான்..

அவளும் எப்படி இவனிடம் இருந்து தப்பிப்பது என்று யோசித்தவாறே விளையாண்டு கொண்டிருக்க, மகிழனும் அகிலாவும் அவர்களை நோக்கி வருவதை கண்டவள்

“அப்பாடா...நல்ல வேளை தப்பிச்சேன்... “ என்ற நிம்மதி அடைந்தாள்...

அகிலாவை கண்டதும் அவள் அருகில் ஓடி வந்தவள்

“ஹே மகி, அகி... வாங்க வாங்க.. நீங்களும் எங்க கூட வந்து ஆடுங்க.. “ என்றாள் உற்சாகமாக

“ஹா ஹா ஹா.. என்ன  மதுகுட்டி.. உன் புருசன் கிட்ட இருந்து தப்பிக்க எங்களை இழுத்து விடறயாக்கும்... சரி வா.. உன்னை காப்பாற்றயாவது ஒரு மேட்ச் விளையாடலாம்.. “ என்று  சிரித்து கொண்டே மகிழன் கோர்ட் அருகில் வந்தான்..

பின் நால்வரும் ஆலோசித்து அணி பிரித்தனர்..

அகிலா வும்  மதுவும் ஒரு பக்கமும், ஆண்கள் மறுபக்கம் என அணி பிரித்தனர்..

தன் அண்ணன்கள் இருவருமே நன்றாக விளையாடுவர் என தெரிந்ததால் அகிலா வெறும் பிரண்ட்லி மேட்ச் தான் என்றாள்.. ஆனால் மகிழன் விடாமல்

“அதெல்லாம் இல்லை.. இது ஒரு டப் காம்பெடிசனாகத்தான் இருக்கணும்.. அதனால பாய்ன்ட்ஸ் வச்சு விளையாடலாம்.. யார் ஜெயிக்கிறார்களோ மற்றவர்களுக்கு ட்ரீட் தரணும்.. என்ன டீலா? “ என்றான் மகிழன்..

தனக்கான ஆப்பை அவனே வைத்து கொள்வதை  அறியாமல்..

அகிலாவும்

“இல்லை.. நீங்க இரண்டு பேருமே நல்லா விளையாடுவீங்க...அப்ப நீங்கதான் ஜெயிப்பீங்க.. அதெல்லாம்  முடியாது... “  என மறுக்க, மகிழன் அவளிடம் போராடி அவளை ஒத்துக்க வைத்தான்..

மதுவும்

“வா அகி.. நாமளும் தான் ஸ்டேட் ப்ளேயர்ஸ்.. இவங்க இரண்டு பேரையும்  ஈஸியா ஜெயிச்சுடலாம்... “ என்று  அகிலாவை சமாதான படுத்தி ஆட்டத்திற்கு ஒத்துக்க வைத்தாள்...

ஆண்கள் ஒரு பக்கமும் பெண்கள் மறுபக்கமும்  நின்று கொண்டு ஆட்டத்தை துவக்கினர்..

முதலில் ஆண்கள் பக்கம் வேகமாக ஸ்கோர் உயர, அடுத்ததாக மது செர்வ் பண்ணினாள்..நிகிலன் அதை தவற விட, அதுக்கு அடுத்து வந்த சில பந்துகளிலும் நிகிலன் தவறவிட்டான்..

பெண்கள் பக்கம் ஸ்கோர்  கிடுகிடுவென ஏற ஆரம்பித்தது.. அதை கண்டு அகிலா துள்ளி குதித்து தன் இளைய அண்ணனிடம் பலிப்பு காட்டி சிரித்தாள்..

அதை கண்டு கடுப்பான மகிழன் அப்பொழுதுதான் நிகிலன் ஆடுவதை கண்காணித்தான்..

மது நிகிலனுக்கே வருமாறு அடிக்க, அவள் பந்து வரும்  நேரம் எல்லாம் நிகிலன் அதை தவற விட்டான்..

“டேய்.. ஏன் டா இப்படி விளையாடற? நீயெல்லாம் ஒரு பேட்மிண்டன் சேம்பியன் னு வெளில சொல்லாத... “ என்று தன் அண்ணனை முறைத்தவன்

“இல்ல..  வாஸ்து சரியில்ல.. நீ இந்த பக்கம் வா.. நானே அந்த பக்கம் நிக்கறேன்..  .. “ என்றவன் இருவரும் இடம் மாற்றி நிக்க, இப்பொழுதும் பந்து நிகிலனிடமே சென்றது...

அவனும் அதை மறக்காமல் தவறவிட்டான்..அதை கண்ட மகிழன்

“நல்லா ஆடறவன் ஆச்சே.. இன்னைக்கு ஏன் இப்படி சொதப்பறான்?...என்னாச்சு இவனுக்கு?  “ என யோசித்தவாறு நிகிலன் எப்படி ஆடுகிறான் என்று உற்று பார்க்க,

மது ஒவ்வொரு பந்திலும் தன் கணவனை பார்த்து கண் சிமிட்டி காற்றில் முத்தத்தை பறக்க விட்டு செர்வ் பண்ண, அதை கண்ட நிகிலன் தடுமாறி  அவளின் குறும்பை ரசித்தவாறு காதலுடன் அவளை ரசித்து பார்த்தவாறு அந்த பந்தை எடுக்க அது பேட் ல் படாமல் கீழ விழுந்தது..

“ஓ.. இதுதான் அந்த ரகசியமா? “ என்று  உள்ளுக்குள் சிரித்து கொண்ட மகிழன்

“டேய் நிகிலா...நீ போய் இப்படி பொண்டாட்டி தாசனா மாறுவ னு நான் கனவுல கூட நினைச்சு பார்க்கலைடா.. “ என்று சொல்லி தன் அண்ணனை முறைத்தான் மகிழன்..

“:ஹீ ஹீ ஹீ.. இல்லடா மகி.. மது என் ட்ரெயினிங் ல  நல்லா அடிக்கிறா.. அதான் என்னால எதிர்த்து ஆட முடியல.. “ என்றான் நிகிலன் அசடு வழிந்து  சிரித்தவாறு.

“ஹ்ம்ம்ம் .. நம்பிட்டேன் டா... " என்று முறைத்தவன் மதுவை பார்த்து

"ஹலோ மது.. அது என்ன உன் புருசனுக்கே பந்து வர்ர மாதிரி அடிக்கற.. நாங்களும் இந்த  ஆட்டத்துல தான் இருக்கோம்... எங்களுக்கும்  கொஞ்சம் பந்து வர்ர மாதிரி பார்த்து போடு மா.. “ என்றான் நக்கலாக சிரித்தவாறு

“ஹீ ஹீ ஹீ அது என்னவோ தெரியலை மகி.. இன்னைக்கு பந்து உன் அண்ணா கிட்ட மட்டும் தான் போகுது.. “ என்று கிளுக்கி சிரித்தாள் மது.. அகிலாவும் இணைந்து சிரிக்க

“ஹ்ம்ம் போகும் போகும்.. இப்ப எப்படி போகுது னு பார்க்கறேன்.. “ என்று நிகிலன் பக்கத்தில் வந்து நின்று கொள்ள, இப்பொழுது  மது அடுத்த பக்கம் அடிக்க அங்கு ஆள் இல்லாததால் அதையும் ஆண்கள் அணியினர் தவற விட்டனர்..

ஒரு வழியாக முதல் சுற்று முடிந்திருக்க, அதில் பெண்கள் அணி  ஸ்கோர் அதிகம் எடுத்து வெற்றி பெற்றனர்..

“இனிமேல் இந்த ஆட்டம் சரி படாது.. அப்பா நிகிலா.. நீ உன் பொண்டாட்டி அணியிலயே போய் சேர்ந்துக்க... நானும் அகி குட்டியும் ஒரு டீம் ல இருக்கோம். உன்னைய வச்சுகிட்டு நான் ஜெயிச்ச மாதிரி தான்.. “ என ஆட்களை மாற்றினான் மகிழன்..

இப்பொழுது நிகிலனும் மதுவும் ஒரு பக்கம் இருக்க, மகிழன் மற்றும் அகி மறுபக்கம் நின்று ஆட்டத்தை ஆரம்பித்தனர்...

ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்க, அனைவரும் சிரித்து கொண்டே ஆடி கொண்டிருந்தனர்.. 

மகிழன் அடித்த ஒரு பந்தை மது ஓடி வந்து எடுக்க, அதில் தன் கணவன் மீது இடித்து கொள்ள, அவனோ மது  கீழ விழாமல் இருக்க  அவளை இடையோடு தாங்கி பிடித்தவன்  மந்திரத்துக்கு கட்டுண்டவனை போல தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டான்..

மதுவும் தன்  கணவனின் இறுகிய அணைப்பில் உருகி நிற்க

"கட் கட் கட்.. டேய்.. அதுக்குள்ள டூயட்  பாட போய்ட்டீங்களா இரண்டு பேரும்.. நாங்க இன்னும் இங்க தான் இருக்கோம்.. கொஞ்சமாவது இங்கிதம் தெரிஞ்சு  நடந்துக்கங்க.. " என்று  ஒரு சிறிய கல்லை எடுத்து தன் அண்ணனின் மேல் விசிறினான் மகிழன் சிரித்து கொண்டே..

அதில் விழித்து கொண்டவர்கள் நிகிலன் அசட்டு சிரிப்பை சிரிக்க, மதுவோ வேகமாக  தன் கணவனை விட்டு விலகி நின்றவள், வெட்கத்தில் முகம் சிவந்து வேகமாக  வீட்டுக்குள் ஓடி விட்டாள் சிரித்து கொண்டே ..

அகிலாவும் படிக்க வேண்டும் என சென்று விட, அடுத்து அண்ணன் தம்பி இருவரும் ஒரு ஆட்டம் ஆடினர்..

நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் இணைந்து விளையாட, இருவருமே ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்காமல் விளையாட சிறிது நேரத்தில் கலைத்து  விட, இருவருக்கும் மனம் லேசாகி இருந்தது...

பின் அருகில் அருந்த நாற்காலியில் அமர்ந்து தங்கள் மீது வழிந்த வியர்வையை துடைத்த படியே

“ஹ்ம்ம்ம் இப்படி விளையாண்டு எத்தனை நாளாச்சு... “ என்றான் நிகிலன் மகிழனை பார்த்து புன்னகைத்தவாறு..

“ம்ம்ம் கரெக்ட் டா... அட்லீஸ்ட் இனிமேல் வாரம் ஒரு முறையாவது இப்படி ஜாலியா  விளையாட வேண்டும்.. “ என்று சொல்லிய படி மற்ற கதைகளை பேசி கொண்டிருந்தனர் இருவரும் .

சிறிது நேரம் பேசியபின் ஏதோ நினைவு வர மகிழன் நிகிலனை பார்த்து

“டேய்.. நிகிலா... உனக்கு சந்தியா னு யாரையாவது தெரியுமா? “ என்றான் ஆர்வமாக

அதை கேட்ட நிகிலன் சந்தியா வா யார்? என்று  சில நொடிகள் யோசித்தவன்  மதுவின் தோழி சந்தியா நினைவு வர

“ஹ்ம்ம்ம் தெரியும் டா... அதுக்கு என்ன? “ என்றான் நிகிலன் தன் தம்பியை ஆராய்ந்த பார்வை பார்த்தவாறு..

“அவளுக்கு என்ன? யார் எப்ப சண்டைக்கு கிடைப்பாங்கனு காத்துகிட்டிருக்கா.. “ என்று  உள்ளுக்குள் புலம்பியவன்

“ஹீ ஹீ ஹீ  சும்மா தான் டா.. அவ எங்க ஆபிஸ் ல தான் வேலை செய்யறா..சரியான வாயாடி... “ என்று  ஏதோ சொல்லி மழுப்ப

“என்னடா ? வண்டி வேற ரூட்ல போற மாதிரி இருக்கு.. என்ன?  அம்மாகிட்ட சொல்லி அந்த புள்ளையவே முடிச்சிட சொல்லிடவா? “ என்றான் குறும்பு புன்னகையுடன் நிகிலன்..

“ஐயயோ... நீ வேற டா.. சும்மா ஒரு பேச்சுக்கு அவள  தெரியுமானு கேட்டா நீ என்னை  பாதாள குழிக்குள்ள பிடித்து தள்ளி விட்டுடுவ போல இருக்கு.. என்னை ஆள விடுடா சாமி.. அவ கிட்ட மாட்டிகிட்டு முழிக்க என்னால முடியாது... “ என்று கைகளை மேல உயர்த்தி பெரிதாக கும்பிடு போட்டான்..

அதை கண்டு சிரித்த நிகிலன்

“ஹா ஹா ஹா எல்லாரும்  ஆரம்பத்துல இப்படிதான் சொல்வாங்க.. அதுக்கு பிறகு பார்த்தால் தான் தெரியும்.. “ என்று குறும்பாக சிரித்தான் நிகிலன்..

“ஹீ ஹீ ஹீ எல்லாரையும் உன்னை மாதிரி அந்தர்  பல்ட்டி அடிப்பாங்கனு நினைக்காத டா.. சரி.. எப்படி அவளை உனக்கு தெரியும்? “ என்றான் மகிழன் மீண்டும் ஆர்வமாக

“அது வந்து.... மதுவோட.. “ என்று  ஏதோ சொல்ல வந்தவன் மது வீட்டிற்குள் இருந்து நிகிலனை அழைக்க,

“டேய்.. மது எதுக்கோ கூப்பிடறா.. இரு நான் போய் என்னானு கேட்டுட்டு வந்திடறேன்.. “ என்று வேகமாக எழுந்தான் நிகிலன்..

:அடப்பாவி.. எப்படி  இருந்த நீ இப்படி மாறிட்டியே டா... 

உன் பொண்டாட்டி என்னங்க னு ஒரு வார்த்தை சொன்னா இப்படி சிட்டா பறக்கிற.. கமிஷ்னர் க்கு கூட நீ இந்த அளவுக்கு பயந்ததில்லை... எப்படி டா இப்படி ? “ என்றான் மகிழன்  நக்கலாக சிரித்தவாறு

“ஹா ஹா ஹா.. அதெல்லாம் உனக்கும் கல்யாணம் ஆகும் இல்ல..  அப்ப தானா தெரியும்.. “ என்று கண் சிமிட்டி குறும்பாக சிரித்து கொண்டே வீட்டை நோக்கி சென்றான் நிகிலன்..

மகிழனும் தன் அண்ணனிடம் வந்த மாற்றத்தை கண்டு உள்ளுக்குள் மகிழ்ந்து சிரித்து கொண்டான்..

ரவு மது அனைவருக்கும் பாலை கொடுத்து விட்டு தங்கள் அறைக்கு வந்தாள்..

நிகிலன் அவன் மகளுடன் விளையாடி கொண்டிருந்தான்..

கீழ யானை போல மண்டி இட்டு அமர்ந்து இருந்தவன் தன் மகளை அவன் மீது முதுகில் அமர வைத்து கொண்டு நான்கு காலில்  நடந்து வர அவளும் பயம் இல்லாமல் தன் தந்தையின் முதுகில் ஒட்டி கொண்டு சிரித்து கொண்டிருந்தாள்..

உள்ளே வந்த மது அந்த  காட்சியை கண்டு ரசித்து நின்று  கொண்டிருந்தாள்..

மதுவை கண்டவன் தன் மகளை தூக்கி கொண்டு கட்டிலில் அமர, மது நிகிலன் கையில் பால் டம்ளரை கொடுத்து விட்டு தன் மகளை அள்ளி கொண்டாள்..

பின் ஓரமாக சென்றவள் தன் மகளுக்கு பால் ஊட்ட, அந்த தாய்மையின் அழகில் ஜொலித்த  தன் மனைவியை ரசித்த படி பாலை பருகினான்..

பால் குடித்ததும் தன் மடியிலயே உறங்கி இருந்த தன் மகளை அவளுக்கென்று இருந்த தூளியில் இட்டவள் அவள் மீது போர்த்தி விட்டு தன் படுக்கைக்கு வர, அவளுக்காகவே காத்து கொண்டிருந்தவன் தன் மனைவியை அள்ளி அணைத்து கொண்டான் நிகிலன்..

இன்று மாலை விளையாடும் பொழுது தெரிந்த  அவளின் வனப்பான  அழகிலும்  சேட்டையிலும் தன்னை தொலைத்திருந்தவன் இந்த நேரத்திற்காக காத்து கொண்டிருக்க, அவன் தாபத்தை எல்லாம் சேர்த்து அவளுக்கு முத்த மழையாக  பொழிந்தான்.

தன் கணவனின் அன்பில் திழைத்தவள் உருகி மையலுடன்  அவன் மார்பின் மீது சாய்ந்திருந்தாள்..

அப்பொழுது நிகிலனுக்கு தன் தம்பி சந்தியாவை பற்றி கேட்டது நினைவு வர தன் மனைவியின் பட்டு இதழ்களை கையால் வருடிய படியே அதை பற்றி யோசித்து கொண்டிருந்தான் நிகிலன்...

தன் கணவனின் மார்பில் உல்லாசமாக சாய்ந்து கொண்டிருந்தவள் விழி உயர்த்தி தன் கணவன் முகம் நோக்க, அவன்  புருவ சுழிப்பை கண்டவள் அவன் ஏதோ தீவிரமாக யோசித்து கொண்டிருக்கிறான் என புரிய

“என்னாச்சு மாமா ? .. என்ன யோசிச்சுகிட்டிருக்கீங்க? “ என்றாள் ஆர்வமாக

அவளின் மாமா என்ற அழைப்பில் இன்னும் தொலைந்தவன் அவளை இன்னும் கொஞ்சம் சீண்டி பார்க்க எண்ணி

“எங்க?.. நான் என்ன யோசிக்கறேனு கரெக்ட் ஆ  சொல் பார்க்கலாம். “ என்றான் குறும்பாக கண் சிமிட்டி..

“ஐயோ.. இந்த விளையாட்டுக்கு நான் வரலை.. எனக்கெல்லாம் உங்க மனசுக்குள்ள இருக்கிறத  கண்டு பிடிக்க தெரியாது.. “ என்று சிணுங்கினாள் மது..

“ஏய் ஹனி.. சும்மா ட்ரை பண்ணு.. எந்த அளவுக்கு நமக்குள்ள ஒரு அன்டர்ஸ்டாண்டிங்  இருக்குனு பார்க்கலாம்... “ என்று  அவளை மீண்டும் தூண்ட அவளும் சில நொடிகள் அவனையே ஆழ்ந்து பார்த்தவள்

“ஹ்ம்ம்ம் நீங்க மகி கல்யாணத்தை  பற்றிதான் யோசிச்சுகிட்டிருந்தீங்க ?  கரெக்ட் ஆ ? “  என்றாள் அவள் புருவத்தை உயர்த்தி..

அதை கேட்டதும் அவளை இன்னும் இறுக்கி கொண்டவன்

“வாவ்.. சூப்பர் டீ பொண்டாட்டி... எப்படி டீ.. என் மனசுல இருக்கிறதை  அப்படியே சொல்ற? “ என்றான் ஆச்சர்யமாக..

“ஹீ ஹீ ஹீ அதெல்லாம் அப்படித் தான் “  என்று  கிளுக்கி சிரித்தாள் மது..

“ஹே சொல்லு டீ  அந்த ரகசியத்தை. “ என்றான் அவளை விடாமல்...

“ஹ்ம்ம்ம் அது என்ன ரகசியம் னா...

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்.....  “ என்று பாட ஆரம்பித்தவள் தன் நாக்கை கடித்து கொண்டு பாதியில் நிறுத்தி கொண்டாள் முகம் சிவக்க..

அதை கண்டு கொண்டவன்

“ஹே ஹனி... அந்த பாட்டு எனக்கு ரொம்பவும் பிடித்த பாட்டு.. ஏன் பாதியில நிறுத்திட்ட.. பாடேன்... “ என்றான் ஆர்வமாக...

“ம்ஹூம்.. எனக்கு வெட்கமாக இருக்கு... “ என்று தன் முகத்தை கைகளால் மூடி கொண்டு சிணுங்கினாள் மது சிரித்தவாறு..

“ஹா ஹா ஹா.. இன்னும் என்னடி வெட்கம் உனக்கு.. சரி.. வா.. இரண்டு பேரும் சேர்ந்தே கரோக்கே(Karaoke) ட்ரை பண்ணலாம்.. “  என்றவன் தன் அலைபேசியை எடுத்து அதில் அந்த பாடலை தேடி அதற்கான Karaoke மியூசிக் ஐ ஓட விட்டான்...

மதுவும் தன் தேன் கலந்த குரலில் அந்த பாடலின் இசைக்கு தகுந்த மாதிரி பாட ஆரம்பித்தாள்...

நான் பேச நினைப்பதெல்லாம்

நீ பேச வேண்டும்..

நாளோடும் பொழுதோடும்

உறவாட வேண்டும்...  உறவாட வேண்டும்...

 

என பாடி நிறுத்த நிகிலன் அவன் மார்பின் மீது சாய்ந்திருந்தவளை மெல்ல அணைத்து கொண்டே அடுத்த வரிகளை அவன் பாடினான்..

 

நான் காணும் உலகங்கள்

நீ காண வேண்டும் நீ காண வேண்டும்

நீ காணும் பொருள் யாவும்

நானாக வேண்டும் நானாக வேண்டும்

 

பாலோடு பழம் யாவும்

உனக்காக வேண்டும்

உனக்காக வேண்டும்

பாவை உன் முகம் பார்த்துப்

பசியாற வேண்டும்

பசியாற வேண்டும்

 

மனதாலும் நினைவாலும்

தாயாக வேண்டும் நானாக வேண்டும்

மடி மீது விளையாடும்

சேயாக வேண்டும் நீயாக வேண்டும்

 

என இருவரும் உருகி அந்த பாடலை ரசித்து பாடி முடித்தனர்... 

இருவருமே கண் மூடி அந்த பாடலின் இனிமையில் ரசித்திருக்க, பின் மது அவன் முகம் பார்த்து

“நம் மனம் ஒன்று பட்டால் அதை ஆழ்ந்து பார்த்தால் அதில் என்ன இருக்குனு னு நமக்கு தெரியுமாம்..நீங்க என மனசுல இருக்கிறதால, நீங்க என்ன நினைக்கறீங்கனு எனக்கு தெரியும் மாமா... “ என்றாள் அவன் கன்னத்தை  பிடித்து செல்லமாக கிள்ளியவாறு..

“ஹ்ம்ம் சூப்பர் டீ.. உன்னை மாதிரி இப்படி ஒரு பொண்டாட்டி கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்.. ஐம் சோ லக்கி... உன்னை மாதிரியே மகிழனுக்கு வரப் போறவளும் அமைந்துட்டா  ரொம்ப  ஹேப்பி... “ என்றான் இலகிய கனிவான குரலில்..

“ஹ்ம்ம்ம் கவலை படாதிங்க சிவி.. அத்தை மற்றும் மகியோட மனசுக்கு நம்ம குடும்பத்தை அனுசரிச்சு போறவளா தான் அமைவா.. “ என்றாள் மது..

அதில் மகிழ்ந்தவன் கூடவே அவள் அவனை  சிவி என்கவும்

“ஹோய்.. என்னை பார்த்தால் விருமாண்டி மாதிரியா இருக்கு ?.. இன்னும் நீ அந்த பெயரை விட வில்லையா? “   என்று முறைத்தான் நிகிலன்..

“ஹா ஹா ஹா இதோ இப்படி முறைச்சா விருமாண்டினு கூப்பிடாம என்னானு கூப்பிடுவாங்களாம் என் க்யூட் விருமாண்டி.. “ என்று  மீண்டும் அவன் மீசையை பிடித்து செல்லமாக இழுத்தாள் சிணுங்கியவாறு

“ஓ.. அப்படியா ? . அப்ப இந்த விருமாண்டி என்ன பண்ண போறான் பார்.. “ என்றவன் தன் மனைவியை இறுக்க அணைத்து தன் தண்டனையை தொடர்ந்தான் நிகிலன்...

அவன் மனைவியும் உள்ளம் பூரிக்க, தன் கணவன் கொடுத்த தண்டனையை காதலுடன் ஏற்று கொண்டாள்...! 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!